Friday, September 30, 2011

காதல்னா என்ன: ஒரு விவகாரமான மொக்க டவுட்டு

பெண்களுக்கான அறிவிப்பு: "தலைப்புலேயே விவகாரம்னு சொல்லிட்டோம், அதனால இந்த பதிவ பெண்கள் தவிர்ப்பது நலம்" அப்பிடின்னெல்லாம் போட்டு விளம்பரம் தேடிக்க விருப்பமில்லீங்க, இது ஆண்களின் பார்வையில் எழுதப்பட்ட ஒரு பதிவு. படிக்கறதும் படிக்காததும் உங்க இஷ்டம்.

சும்மா ஒரு விளம்பரத்துக்கு: நண்பன் பத்தி பதிவுன்னு நினச்சி நாலு பேரு வருவாங்கல்ல, அதுக்குத்தான்.
"எங்கப்பாரு இந்த காதலர்கள் தொல்ல தாங்கமுடியலடா சாமி" நண்பர்கள் கூடினா இந்த டாபிக்ல ரெண்டுமணி நேரமாவது பேசுவாங்க. பேசி முடிஞ்சு ரெண்டு நிமிஷம் போறதுக்குள்ள மறுபடியும் ஆரம்பிப்பாங்க, மச்சி, இன்னிக்கி ஒரு சூப்பர் பிகர் மாட்டிச்சிடா, நம்பர் வாங்குறதுக்குள்ள எஸ் ஆகிடிச்சி. நமக்கு மண்டைய பிச்சிக்கனும்னு தோணும். இன்னொருத்தன் சொல்லுவான், மச்சான் நான் அவள உசிருக்கு உசிரா காதலிக்கிறண்டா, அவ இல்லைன்னா எனக்கு வாழ்க்கையே இல்ல. அது எப்புடி வாழ்க்கையே இல்லாம போகும்? சில பேரு பகல் எல்லாம் நல்லா இருப்பானுக, ராத்திரி ஆனா போதும், அற்பனுக்கு காதல் வந்தா அர்த்த ராத்திரில சிப்ப தொறப்பானாம் கணக்கா புலம்ப ஆரம்பச்சிருவாணுக. இவனுங்க லவ் பண்றத கூட தாங்கிக்கலாம். ஆனா வெட்கப்படுவானுக பாருங்க, கால் விரலாலயே மண்ணுல குழி தோன்டுறது, பக்கத்துல கெடக்குற துணில சடை பின்னுறது, முடிச்சி போடுறது, முக்கியமா பேப்பர்ஸ கிழிச்சிபோடுறதுன்னு வெட்கபட்டுகிட்டே குடுபானுக பாருங்க ஒரு எக்ஸ்பிரஷன்!!! நம்ம தலைவர் சந்தானம் மாதிரி "நீ என்ன கருமத்த வேணும்னாலும் பண்ணி தொலைடா, ஆனா இப்புடி வெட்கம் மட்டும் படாத, பயமா இருக்கு"ன்னுதான் சொல்ல தோணும்.

ரோட்டுல நடந்துபோற ஒரு பொண்ண பாத்தா காதல் வருது, கூடவே பழகுற பொண்ணு மேலயும் காதல் வருது, அட, ஹன்சிகா மேலயும் காதல் வருது. பத்து வயசிலையும் வருது, பதினாறுலயும் வருது, இருபத்தஞ்சிலயும் வருது, முப்பதுலயும் வருது, அத விடுங்க, அருபதுலயும் வருது. திருமணம் ஆக முதலும் வருது, ஆன பிறகும் வருது.. என்ன காதல்டா இது. யாருக்கு வேணும்னாலும் யாருமேல வேணும்னாலும் வாற ஒண்ணுதான் இந்த பாழாப்போன காதல். இதுக்காக வீட்டவிட்டு ஓடுறாணுக, கைய அறுத்தக்கறாணுக, தற்கொல பண்ணிக்கறாணுக, சமயத்துல கொலை கூட பண்ணுறானுக. அம்புட்டு முக்கியமான விசயமா இது, ஒரு எழவும் புரிய மாட்டேங்குது.  உசிர குடுத்து பொண்ணுக பின்னாடி சுத்துறானுக, கேட்டா பிகரு இல்லனா ஒரு பய மதிக்க மாட்டேன்குறாண்டான்னு அலுத்துக்கறானுக, அட அத விடுங்க, நடிகைய லவ்வலன்னா பதிவுலகத்துலையே மதிக்க மாட்டாங்களாமே, அப்ப பாருங்களே!!
இந்தாளு என்ன பேன் பாக்குறாரா?
காதல்ல வகை வேற, கண்டதும் காதல், காணாம காதல், பேசி பழகி வாற காதல், ஆர்வகோளாறு காதல், அப்புறம் அனுபவக் காதல். இன்னும் சொல்லுவாங்க தெய்வீக காதல், புனிதமான காதல், நமக்கு ஒரு டவுட்டு புனிதமான காதல்னா புனிதம் கெட்ட காதல் வேற இருக்கா? மகாகவி, கவிப்பேரரசு, நவீன உலகின் பழமைப் புலவன், உலக நாயகன் கமல்ஹாசன் என்னடான்னா இந்த எளவு எல்லாம் ஹார்மோன் செய்யற கெரகம்ங்குறாரு, போதும் போதாததுக்கு மறைந்த எழுத்தாளர் சுஜாதா எக்ஸ் க்ரோமோசோம், வை க்ரோமோசோம், எக்ஸ் எக்ஸ் வை வை அம்புட்டுதான் மேட்டர் அப்புடிங்குறாரு. அப்புடின்னா இந்த காதல் என்ன அறிவியலா? காதல் கடவுள் மாதிரி, உணர்ந்துக்கறவங்களுக்கு அது தெய்வீகம், உணராதவங்களுக்கு அது வெறும் கல்லு, காதல் ஒரு மதம் சார், அப்புடின்னெல்லாம்  யாரோ அறிவாளிகள் சொல்லியிருக்காங்களாம், அப்ப காதல் என்ன ஆண்மீகமா? இதயெல்லாம் விடுங்க சார், நம்ம டாகுடர் என்னடான்னா, காதல் ஒரு தனிக்கட்சி கொடி ஏத்துங்கராறு ... அட அப்ப இது அரசியலா? 

எத்தனையோ விவஸ்தகெட்ட ஆராய்ச்சி பண்ணிட்டோமே, இந்த காதல் பத்தியும்தான் ஒன்னு பண்ணிப்பார்போமேன்னு சும்மா தமாசா ஆரம்பிச்சோம். டவுட்டு தான் மிஞ்சிச்சு. எதனால இந்த காதல் வருது? ஆணுக்கு பொண்ணு மேல தான் காதல் வரும், பொண்ணுக்கு ஆணுமேலதான் வரும் (என்ன ஒரு கண்டுபிடிப்பு...). உண்மையான அன்புதான் காதல், அது புநிதமானதுங்குறாங்களே அப்புறம் யாரும் ஏன் நான் என்னோட அம்மாவ காதலிக்கிறேன், சகோதரிய காதலிக்கிறேன்னு சொல்லறதில்ல? அத விடுங்க பெண் நண்பிக்கும் காதலிக்கும் என்ன சார் வித்தியாசம், காதலிகூட ஜல்சா பண்ணலாம், நண்பி கூட பண்ணமுடியாது, அதுதானே? காதலிச்சா கலியாணம் பண்ணிக்கனும்னு தானே காதலிக்கறாங்க? அப்புடி இல்லனா இடயிலையே கிளைமாக்ஸ வச்சிட்டு கழட்டி விட்டுடராங்க. அப்புடின்னா காதலுக்கு அடிப்படையே காமம், பால் கவர்ச்சி (டீசெண்டா சொன்னா ரொமான்ஸ்) தானே, அப்புறம் என்ன பெரிய இவுனாட்டம் புனிதமான காதல்னு ஒரு பந்தா?

மிகப்பெரிய மொக்க டவுட்டு: காதலுக்கும் கிட்டாருக்கும் என்ன சம்பந்தம்?
இதுல வேற இன்னொரு டவுட்டு, காமம் மட்டுமே இருந்தா அது காதலாகுமா? அப்பிடின்னா என்னென்ன கண்றாவி எல்லாமோ இந்த கடகரில வருது. ஆக ரொமான்ஸ் தவிரவும் வேற எதுவும் தேவைப்படுதோ? அன்பு, நட்பு, புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு அது இதுன்னு நெறைய இருக்கே, இது எல்லாமே சேர்ந்து இருந்திச்சின்னாதான் அது காதல் போலிருக்கு, ஒன்னு குறைஞ்சாலும் அதுக்கு வேற பெயர்தான் வருது. அப்புடின்னா காதல் ஒரு சேர்வையோ? அதுனாலதான் கெமிஸ்ட்ரின்னு சொல்றாங்களா? ரொம்பத்தான் டவுட்டு டவுட்டா இருக்கு. எத்தின சினிமா, எத்தின கவித, எத்தின ஆராய்ச்சி கட்டுர, எதப் படிச்சும் இதுக்கு விடை கிடக்கல. உலகத்துல எத்தனையோ விஷயம் இருக்கு, ஆனா நம்மளுக்கு இப்பிடி ஒரு சந்தேகம், காதல்னா என்ன?

பெரிய மனுஷங்களா, இந்த சின்னப்பசங்களுக்கு காதல்னா என்னன்னு ஒரு விளக்கம் குடுங்கப்பா, உங்களுக்கு புண்ணியமா போகும்.

கொஞ்ச நாளாவே ஸ்ருதி படமா இருக்கேன்னு பாக்குறீங்களா, போங்க சார் வெக்கம் வெக்கமா வருது...

சுய புலம்பல்: அடுத்த பதிவு எங்களது ஐம்பதாவது பதிவு, "தமிழ் சினிமாவையே புரட்டிப்போடும் ஒரு பதிவு. எப்பவரும்ன்னு தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வரும்", அப்புடியெல்லாம் சொல்லி மொக்க பில்டப் குடுக்க விரும்பல. வழக்கம் போல அது ஒரு சினிமா பதிவு. தலைவர் பத்திய ஒரு பதிவு. திங்கள் காலையில வரும். வந்து ஓட்டு கமெண்டு போட்டு வாழ்த்திட்டு போங்க சார். வாழ்த்து எல்லாம் கேட்டு வாங்கவேண்டி இருக்குப்பா.

நன்றி: ட்ராப்டுல பதிவ படிச்சிட்டு, அதுக்கு ஒரு இடைச்செருகல காமென்ட்டா போடாம தனி பதிவாவே போட்டு பல்பு வாங்கவச்ச மொக்க ராசு மாமாவுக்கு.

Monday, September 26, 2011

பதிவுலக ரவுண்டப் 4 - புஸ்வானமாய்ப்போன ஒரு பதிவு

இந்த பதிவுலக ரவுண்டப் - ஒரு அட்டகாசமான பதிவின்  மூன்று பாகங்களை படிக்காதவர்களுக்கு இதைப் படிக்க கண்டிப்பாக அனுமதியில்லை.

கண்டிப்பாக பதிவர்களுக்கு மட்டும்:  இது யார் மனதையும் காயப்படுத்துவதற்காக அல்ல. 


சந்தானம் ரசிகர்களாக, ஒரு ரசிகர் மன்றமாக ஆரம்பித்து பதிவர்களாக மாறி நிற்கும் ஒரு பயணத்தில் நமது அனுபவத்தினை கடந்த மூன்று பதிவுகளில் கூறியிருந்தோம். ஒரு பதிவர் என்கிற வகையில் சினிமாவினையும் தாண்டி பல பொறுப்புகள் இருப்பதாக உணர்ந்தமையே எங்களை முழு பதிவர்களாக மாற்றியது. ஒரு பதிவரின் பதிவு மற்றும் அவர் இடும் பின்னூட்டங்கள் பதிவை மட்டுமல்ல பதிவரையும், அவரது ஆற்றல், ஆளுமை போன்றவற்றையும் புரியவைக்கிறது, தமது பதிவுகளுக்கும், பின்னூட்டங்களுக்கும் தாமே பொறுப்புதாரி என்பதனையே நமது இரண்டாம் மற்றும் மூன்றாம் பகுதிகளில் சொல்ல முயற்சித்திருந்தோம்.  எமது பதிவுலக அனுபவம் மிகச்சிறிதே. அதனால் எமது கருத்துக்கள் ஒரு பதிவரின் கருத்துக்களாக அல்லாது ஒரு வாசகன் கருத்துக்களாகவே எதிரொலிக்கிறது. 

ஒருவர் தனது அனுபவத்தை, எண்ண ஓட்டத்தை, எதிரொலியை, கருத்துக்களை கூறும், பகிர்ந்து கொள்ளும் ஓரிடமாகவே பதிவுலகத்தை பார்த்து வந்தோம். அங்கு பதிவருக்கும் வாசகருக்கும் பூரண சுதந்திரம் இருந்தமையே எங்களை கவர்ந்தது. பதிவர் எதனை பகிர்வது என்பதனை தீர்மானிக்கிறார், வாசகர் எதனை படிப்பது என்பதனை தீர்மானிக்கிறார். இதுவே பதிவுலகம் தொடர்பான எமது புரிந்துகொள்ளல். பின்னூட்டங்கள் அல்லது கருத்துரைகள் என்பது ஒரு ஆரோக்கியமான விவாதத்தை அல்லது கலந்துரையாடலை நிகழ்த்தும் ஒரு களமாகவே கருதி வந்தோம்.  ஆரோக்கியமான கருத்து பரிமாறல்களும், கருத்து சுதந்திரமுமே பதிவுலகத்தின் அடி நாதமாக தோன்றியது. கடந்த சில வாரங்களாக பல வலைப்பூக்களை படிக்கும்போது ஒரு சந்தேகம் எழுகிறது, பதிவுகள் யாருக்காக எழுதப்படுகிறது? பரந்துபட்ட வாசகர்களுக்காகவா இல்லை சக பதிவர்களுக்காகவா? சில வாரங்களிற்கு முன்பு வரை தமிழ்மணம் பற்றி அறிந்திருக்கவில்லை, அது ஒரு திரட்டி என்கிற அபிப்பிராயமே இருந்தது, இந்த வாரம் அது ஒரு திரட்டி என்பதையும் தாண்டி அது ஒரு அரசியல் என்பதை புரிந்து கொண்டோம். அரசியல் என்று வந்ததுமே, குழாயடி சண்டைகள் சகஜம் தானே, பதிவுலகம் மட்டும் என்ன விதி விலக்கா?  இதற்க்கு முதல் முக்கிய காரணம் இந்த நம்பர் போட்டி. 

ஹிட்ஸ் அடிப்படையாக வைத்து நடத்தப்படும் இந்த போட்டியே பல மனக்கசப்புகளுக்கும், உள்கட்சி வெளிக்காட்சி அரசியலுக்கும், உள்குத்து வெளிக்குத்து பதிவுகளுக்கும் காரணாமாய் அமைகிறது. இதனால் சுய கருத்துக்களை நேரிடையாக கூறமுடியாது, ஹிட்ஸ் பாதிக்கப்படுமோ என்கிற அச்சம் தோன்றுகிறது. பதிவரின் முதல் சுதந்திரம் அங்கேயே பறிக்கப்படுகிறது. இது சாதாரண ஒரு சினிமா விமர்சனத்தில் கூட கைவைக்கும் அளவுக்கு வந்துவிடும். எந்த நடிகர் அல்லது இயக்குனர் சார்ந்த வாசகர்கள் நமக்கு வருகிறார்கள் என்று பார்த்து அவர்களை திருப்திப்படுத்தும் வண்ணமே நமது விமர்சனத்தை அமைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம். அரசியலாக இருக்கட்டும், விளையாட்டாக இருக்கட்டும், நாட்டு நடப்பாக இருக்கட்டும், இது நாம் இடும் எல்லா பதிவுகளுக்கும் பொருந்திப்போகிறது. காலப்போக்கில் இந்த ஹிட்ஸ் அடிப்படையாக வைத்து பதிவு எழுதுவது மூலம் நமது பதிவின் தரம் பாதிக்கப்பட்டு விடுகிறது என்பதே நிஜம். ஓர் இரு ஆண்டுகள் கழித்து நமது பழைய இடுகைகளை மீட்டிப் பார்த்தால் அங்கு நாம் பெருமைப்படக்கூடிய இடுகைகள் எதனையும் காணமுடியாத நிலைமைதான் தோன்றும். இதுவே அடுத்த பிரச்சினையை கிளருகிறது. ஒரு சிறந்த பதிவர் என்பவர் யார் என்கிற கருத்து வேறுபாடே அது.ஒரு சிறந்த பதிவர் என்பவர், அரசியல் பதிவரோ, படைப்புகளை வழங்குபவரோ, சினிமா பதிவரோ அல்லது அதிக ஹிட்ஸ் வாங்குபவரோ அல்ல. ஒரு சிறந்த பதிவர் என்பவர் தனது கருத்துக்களை வாசகன் மீது திணிக்க நினைக்காது, கருத்தை கூறிவிட்டு தீர்மானிக்கும் உரிமையை வாசகனின் கையில் விடுபவரே. கூற வந்த கருத்துக்களை எந்த வகையிலும் கூறும் சுதந்திரம் பதிவருக்கு உண்டு, அது காத்திரமான பதிவாக இருக்கலாம் அல்லது மொக்கை பதிவாக இருக்கலாம் அல்லது காபி பேஸ்ட் பதிவாக இருக்கலாம்.  பதிவர் தனது சுய கருத்தை அதனூடு எவ்வாறு சொல்கிறார் என்பதும் வாசகனின் சிந்தனையை எவ்வாறு தூண்டுகிறார் என்பதுமே அவரது ஆளுமையை தீர்மானிக்கிறது. இதற்க்கு அண்மையில் நாம் கண்ட இரு உதாரங்களை கூறுகிறோம் கேளுங்கள்.

ஒரு பேட்டியில் சேரனிடம் முரண் ஆங்கிலப்படத்தின் தழுவல் என்கிறார்களே என்கிற கேள்விக்கு, பதிலுடன் ஒரு ஜோக் போடப்பட்டிருந்தது

"அந்தப்பெண்ணை கையைபுடிச்சு இழுத்தியா?"
"அப்டி சொல்ல முடியாது, இங்கே வான்னு கூப்டப்ப லேசா கை பட்டிருக்கலாம்"

இந்த ஜோக், சிரிப்பவர்களுக்கு சிரிப்பு மட்டும், சிந்திப்பவர்களுக்கு எத்தனையோ கருத்துக்களை  ரெண்டே வரியில் கூறுகிறது, நாம் போட இருந்த ஒரு முளுப்பதிவே இந்த இரு வரிகளுக்குள்  அடங்கிவிட்டது. அது அந்த பதிவரின் ஆளுமையை எடுத்துக்காட்டுகிறது. 

இன்னுமொரு கில்மா பதிவில் இப்படி ஒரு வாசகம் 

"அதுக என்னைய கவனிக்கவே இல்லை! ஏன், வேற யாருமே அதுகளப் பார்க்கவே இல்லை! அவன் அவன் தன்னோட வேலைல ரொம்ப பிசியா இருந்தான்! இங்க இம்புட்டு அக்கப்போர் நடந்துக்கிட்டு இருக்கு, பக்கத்துல ஒருத்தன் புக்கு படிச்சுட்டு இருந்தான்!"

இது மேலைத்தேய மக்களின் அடுத்தவர் அந்தரங்கத்துள் புகாது இருக்கும் நாகரீகத்தையும்,  நமக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டையும் பிரதிபலிக்கிறது. வாசகர்களின் சிந்தனையை இப்படியும் தூண்டலாம் என்பதற்கு இந்த வரிகள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சோனா-சரண் விவகாரம் தொடர்பான நமது ஆதங்கத்தின் சுருக்கமாக அமைகிறது. 


இவற்றை புரிந்துகொள்ள பதிவர்கள் பற்றிய புரிதல் அவசியமாகிறது. அதனை உருவாக்கும் கடமை உரிய பதிவர்களுக்கு மாத்திரமே இருக்கிறது. பதிவுகளுக்கு நாம் வைக்கும் தலைப்பில் இருந்து நமது பதிவுகளுக்கு வரும் கருத்துரைகளுக்கு நாம் இடும் பதில்கள், சக பதிவர்களின் தளங்களில் நாம் கூறும் கருத்துக்கள் வரை ஒரு வாசகனுக்கு பதிவரைப் பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்துவதற்கு கருவிகளாய் அமைகிறன, அப்புரிதல் நிச்சயம் நமது பதிவுகளையும் அதில் கூற விளையும் கருத்துக்களையும் வாசகன் புரிந்து கொள்ள அடிப்படையாக இருக்கிறது.  இப்புரிதலை உரிய பதிவர் தோற்றுவிக்க வேண்டுமே தவிர, இன்னொருவர் அந்த பதிவரை பற்றி தனது புரிதலை தனது வாசகர் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ திணிப்பது ஒரு சர்வாதிகாரம். கடந்த சில நாட்களாக இதுவே நடந்து வருவது ஒரு கவலைக்குரிய விடயம்.

ஒரு பதிவர் தான் என்ன பதிவு போடுவது என்பதை அவரேதான் தீர்மானிக்கவேண்டும். நீ இந்த பதிவு போடாதே, அந்த பதிவு போடாதேன்னு சொல்லும் உரிமை நமக்கு இல்லை. அவர் போடும் பதிவுகளை வாசிப்பதும் வாசிக்காது போவதும் மட்டும்தான் நமது உரிமை. அவரவர் பதிவுகளுக்கு அவரவரே பொறுப்புதாரி. அந்த வகையில் இந்த நம்பர் போட்டியில் மூழ்கி நமது திறமையை வீணடிக்காது நல்ல பதிவுகள் போடுவதில் கவனம் செலுத்தலாமே? இறுதியாக செங்கோவி அண்ணனின் ஒரு பதிவுக்கு நாங்கள் இட்ட பின்னூட்டத்துடன் நமது பதிவினை முடிக்கிறோம் 

"என்னங்க இது யோக்கியம் அயோக்கியம் எல்லாம், ஒண்ணுமே புரியல, நாம எந்த வகையோ..பதிவுலகத்துல இம்புட்டு உள்கட்சி பூசல் இருக்குன்னு இப்பதான் தெரியுது. ஒருத்தன் அவன் விரும்புறத எழுதுறான், அவன போலவே இருக்கற நாலு பேரு அத படிக்கறான், இதுல நாலு பேரா நாலாயிரம் பேரான்னு சண்ட போட்டு யாருக்கு என்ன லாபம்? தீவிர பதிவர்களுக்கு வாசகர் கம்மின்னு சொல்றதெல்லாம் டூப்பு. ஒருத்தன் வெறுமனே நடிகைகள் படம் போட்டு ஹிட்டு ஆகிடமுடியாது, அப்பிடின்னா கூகிள் இமேஜ் சர்ச்சுக்கு மட்டும்தான் வாசகர்கள் இருப்பாங்க. மேல்மாடில மேட்டர் காலின்னா கடையில கூட்டமும் காலியாயிடும். தலைவர் சொல்லியிருக்காரு சிந்திக்க வக்கிறத விட சிரிக்க வக்கிறதுதான் கஷ்டம்னு, அப்பிடின்னா மொக்க பதிவு போடுறவங்களும் ரொம்ப கஷ்டப்பட்டுதான் குப்ப கொட்டுறாங்க. என்ன இருந்தாலும் நம்ம கடப்பக்கம் வாறத நிறுத்திடாதீங்க, அடிக்கடி வாங்க டீ காப்பி எல்லாம் நல்ல சூடா இருக்கும்.."டிஸ்கி 0: முக்கியமான மேட்டர், இன்றைய பதிவுடன் இந்த பதிவுலக ரவுண்டப் முடிவுக்கு வருகிறது. இனிமேல் இது தொடராது என்பதை வருத்ததுடனும் அதே நேரம் மகிழ்ச்சியுடனும் தெரிவித்துக்கொள்கிறோம். வழமைபோல நம்மை கவர்ந்த, பிரமிக்க வைத்த பதிவர்களையும், பதிவுகளையும் நமதுபாணியில் தொகுப்போம். அது நேற்று ஆரம்பிக்கப்பட்ட "கும்பளிங் கும்பளிங்" பதிவின் ஒரு பகுதியாக வரும். கண்டிப்பாக அரசியல் கிடையாது.

டிஸ்கி 1: தமிழ்மணத்துக்கும் நமக்கும் ஏற்கனவே வாய்கால் தகராருங்க, நம்ம பதிவுகள் எதையும் அங்க இணைக்க முடியல. இந்த இன்ட்லியும் சூனியம் வச்சுட்டாங்க. இருந்தாலும் பல பெரிய மனுஷங்க ஏற்கனவே செஞ்சிட்டதால அவங்க பாணிலையே சொல்றோம். நமக்கு இந்த தமிழ்மணமே வேண்டாம்டா சாமி, நம்ம மானம் ஒன்னே போதும்.

டிஸ்கி 2: அப்புறம் படிச்சு பாத்தவங்க இதுல ஏதாச்சும் நல்லது இருக்குன்னு நினைச்சிங்கன்னா நாலு பேருகிட்ட சேத்துடுங்கப்பா புண்ணியமா போகும். 

ஏழாம் அறிவு, அஞ்சலி, காஜல், பவர் ஸ்டார்: கும்ப்ளிங் கும்ப்ளிங் - 25/09/2011

வெல்கம் டு கும்பளிங் கும்பளிங். இதென்ன டூரா? ஆமா சார், உருப்படியா ஏதாச்சும் பதிவு போடுங்கன்னு ஆளாளுக்கு மெயில்ல மெரட்றாங்க (நாங்க என்ன வச்சுகிட்டா வஞ்சகம் பண்றோம்) அதனால இனிமே வாரா வாரம் நாங்க பார்த்த, ரசிச்ச விடயங்கள தொகுக்குறதா முடிவு பண்ணிட்டோம். ஆளாளுக்கு கொத்துபராட்டா போடறாங்க, அவுங்களா யோசிச்சுக்கிறாங்க, நாங்களும் போடுவோம்ல, அதுதான் இந்த கும்பளிங் கும்பளிங்.

இது தேறாதுன்னு முடிவு பண்ணிட்டாங்களாமே உண்மையா? 
தலைவர் படம் வந்தான் வென்றான் அப்புறம் எங்கேயும் எப்போதும்ன்னு ஒரு படம்  வந்திருக்கே, இந்த சுகாசினி அம்மா என்ன சொல்றாங்கன்னு பாப்போமேன்னு ஹாசினி பேசும் படத்த தேடினா, ஜெயா டிவில இருந்தே அவுங்கள தூக்கிட்டாங்களாமே, இப்போ நம்ம மதன் சார்தான்  அந்த புரோகிராம செய்றாராம், விசாரிச்சு பாத்ததுல அவுங்க விமர்சனத்துக்கு நாங்க எழுதின எதிர் விமர்சனத்த பாத்துட்டுத்தான் அப்புடி பண்ணினதா மீடியா வட்டாரத்துல பேசிக்கறதா சொல்றாங்களே உண்மையாவா? பச்சத்தண்ணிய குடிச்சுட்டு பாயசம் சாப்பிட்டதா பில்டப் குடுக்குறதும்பாங்களே ஒரு வேள அது  இதுதானா?

ஏழாம் அறிவு ஆடியோ வெளியீட்டு விழால இயக்குனர் விஜய் பேசறப்போ, “இதுவரை ஆங்கிலப் படங்களைத்தான் ரெஃபரன்ஸுக்கு வைத்துக் கொள்வார்கள் தமிழ் இயக்குனர்கள். இனி ஏழாம் அறிவை அந்த லெவலில் வைக்கலாம். தமிழ்ப் படங்களை உலகமே பார்க்கிறது. அந்த வகையில் இனி ஹாலிவுட் காரர்களும் இந்தப் படத்தை ரெபரன்ஸுக்கு வைக்கும் அளவுக்கு படம் உள்ளது” அப்புடின்னு சொல்லி இருக்காராம். ஒரு வேள இந்த 7ம் அறிவு படத்த இன்ஸ்பிரேஷனா வச்சுகிட்டு ஒரு படம் இயக்குறது இவரோட அடுத்த கட்ட திட்டமா இருக்குமோ? பட் இந்தாளு நேர்ம நமக்கு புடிச்சி இருக்கு. இதுக்கே எத்தன நாளக்கிடா செத்த பாம்பையே அடிப்பீங்கன்னு கடுப்பாகுரீங்களே, அப்புடின்னா அல்கா அஜித் பாடிய சிறகெங்கு என்கிற மலையாள பாடலை டவுன்லோட்பண்ணி சீக்கிரம் சுடனும்ன்னு  வெள்ளிகிழமை  இரவு நடந்த எயார்டெல் சூப்பர் சிங்கர் கிராண்ட் பினாலேவில் தனுஷ், ஜி.வி.பிரகாஷ் தோள்ல கைய போட்டுகிட்டே சொன்னாரே அத என்ன சொல்றது? அது உள்குத்தா, வெளிகுத்தா இல்ல கும்மாங்குத்தா? ஆனா ஒன்னு, பல பேரோட ஃபேவரிட்டான சத்தியபிரகாஷ்க்கு தன்னோட "3" படத்துல வாய்ப்புகுடுக்கறதா ட்வீட் பண்ணியிருக்கறத கண்டிப்பா பாராட்டனும்.எங்களோட ஏழாம் அறிவு பாடல் விமர்சனத்த படிச்சிட்டு இலங்கையில இருந்து வாசக நண்பர் ஒருவர் நமக்கு ஒரு மெயில் தட்டியிருந்தாரு, அதுல இந்த வீடியோ இணைப்பு இருந்திச்சி(பிண்ணனில போறது அவுங்க நாட்டு ஒவ்வொரு பிரண்டும் தேவ மச்சான்). அப்புடியே ரிங்கா ரிங்கா பாட்ட ஓடவிட்டா ஏழாம் அறிவு ஹீரோ இன்றடக்சன் சாங் பாக்க தேவயில்ல, அதேதான் எடுத்திருக்காங்க, வீடியோவையும் கூடவே ரிலேடட் வீடியோக்களையும் பாருங்க, முருகதாஸ் காப்பி அடிச்சுட்டர்ன்னு ஒரே பந்தா, நிச்சயமா படம் வந்ததுக்கப்புறம் சுட்டுட்டாங்கன்னு நெறையபேர் கூச்சல் போட போறாங்க, அந்த அளவுக்கு வேற வேற வீடியோக்கள் இருக்கு. அதனால இப்பவே  சொல்லிக்கறோம், இது ப்ளாஷ்மெப் அப்பிடின்குற வகை. இதுக்கு காபி ரைட்ஸ் எல்லாம் தேவையில்ல, யாரு வேணும்னாலும் பண்ணலாம். மேலதிக விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

நம்ம சிவகார்த்திகேயன் தம்பி அது இது எது ப்ரோக்ராமுக்கு வந்திருந்த ஜெய்கிட்ட உங்களுக்கு எப்படிப்பட்ட பொண்ணு பொண்டாட்டியா வரணும்ன்னு கேட்டதுக்கு அவரு அந்த எங்கேயும் எப்போதும் மணிமேகல மாதிரி பொண்ணுதான் வேணும்ன்னு  சொல்லிட்டு, ப்ளூ ஜீன்ஸ் வைட் டீஷர்ட்  போட்ட பொண்ணா இருந்தாகூட ஓகேன்னு அஞ்சலிய பாத்துகிட்டே சொன்னாரு.  மேட்டர் என்னான்னா அன்னிக்கு அஞ்சலி பாப்பா ப்ளூ ஜீன்ஸ் வைட் டீஷர்ட்ல வந்திருந்தது மட்டுமில்ல,  நான் ரியல் லஃப்லையும் எங்கேயும் எப்போதும் மணிமேகல மாதிரி பொண்ணுதான்னு ஸ்டேட்மென்ட் வேற குடுத்திருந்திச்சு. அப்புடின்னா  நாங்க கேள்விப்பட்ட கிசு கிசு எல்லாமே உண்மையா? இந்த நியூஸ வாசிச்சிட்டு எத்தின பதிவர்கள் ஹார்ட்அட்டாக் வந்து சோனா அட்மிட் ஆன அதே ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகப்போராங்களோ?

நல்லாதானே இருந்தாங்க, ஏன் மறுபடியும் இப்புடி ஆகிட்டாங்க?
ஹாஸ்பிட்டல்னதும் தான் ஞாபகத்துக்கு வருது, சமீபத்துல பவர் ஸ்டார்  பேட்டி ஒன்னு பார்க்கக் கெடச்சிச்சு. பவர் ஸ்டார் அவர நம்பி இருக்கற அஞ்சு லட்சம் ரசிகர்களுக்காக கான்சசன் ரேட்டுல பைத்தியம் சாரி வைத்தியம் பாக்குற திட்டம் பத்தி சொன்னாரு, அப்புறம்தான்யா வெளங்கிச்சு அவரு ஏன் நடிக்க வந்தாருன்னு, ரெண்டு ஹாஸ்பிட்டல் கட்டி வச்சிருக்கருல்ல, கூட்டம் வர வேணா, எல்லாம் ஒரு விளம்பரம்தான். அதுசரி, கேள்வி கேக்குறவன் எதுக்கு கில்மா பட போஸ்டர் மாதிரியே போஸ்டர் ஒட்டுரீங்கன்னு சுத்தி வளச்சி கேக்குறதுகூட புரியாம சீரியஸா பதில் சொல்ற ஆளு இம்புட்டு யோசிச்சிருப்பாருங்குறீங்க, டீல்ல விடுங்கப்பா.

ஒருவேள நிஜமாவே இந்த காஜல் பொண்ணுக்கு மர கழண்டுருச்சான்னு நமக்கு ஒரு கன்பூஷன். கொஞ்ச நாளா எந்த மேகசீன பாத்தாலும் டிரெஸ்ஸ கழட்டிட்டு போஸ் குடுக்குது, அப்புறமா அது நான் இல்லன்னு பேட்டி குடுக்குது. FHM மேகசீனுக்கு குடுத்த போடோவோட சலசலப்பே இன்னும் அடங்கல இந்த மாத பிலிம்பேர் மேகசினோட அட்டைப்படமும் அம்மணிதான், ஆனா என்ன பயத்துல புறமுதுகு காட்டி நிக்குது.   பாலிவூட் பட ஆசைதான் இந்த பொண்ண இம்புட்டு பாடுபடுத்துதின்னு வெளில பேசிக்கறாங்க. பாலிவூட் பட வாய்ப்பு கெடைக்குதோ இல்லையோ நெறைய பிட்டுப்பட வாய்ப்பு கெடைக்குதாம். ஏம்மா, ப்ளே பாய்ன்னு ஒரு மேகசீன் இருக்காமே, அதுல போட்டோ வந்தா டைரெக்டா ஹாலிவூடுக்கே போயிடலாமே, அத விட்டுட்டு எதுக்கு வீணா லோகல்ல ட்ரை பண்ணிக்கிட்டு. இது கிக்கான பிகருதான் ஆனா கன்போமா மக்கு பிகரு. நமக்கு ஒன்னு மட்டும் புரியல, ஏன் இந்த கலாசார காவலர்கள் இன்னும் போராட்டம் நடத்தல?
பண்ணறதையும் பண்ணிட்டு என்ன கோபமா லுக்கு வேண்டி கெடக்கு.

ஆங், ஒரு முக்கியமான மேட்டர், நல்ல வேள போராட்டம்னதும்  ஞாபகம் வந்திரிச்சு, ஐ போன், ஐ பாட், ஐ போட், ஆப்பிள் மெக்ன்னு என்னமோ எல்லாம் இருக்காமே, அதுல எல்லாம் தலைவரோட பெயர டைப் பண்ணினா அது என்னமோ "lanthanam" அப்பிடின்னு திருத்துது. அதனால அதுகளுக்கு எதிரா ஒரு போராட்டம் பண்ணலாம்னு இருக்கோம். இந்த ஆப்பிள் கம்பனிக்கு முன்னால உண்ணாவிரதம் இருக்க யாரெல்லாம் வாறீங்க? (தமிழேன்டா!!!)

வர்ற அக்டோபேர்ல நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்ல அம்மா, தாத்தான்னு ஆளாளுக்கு சிங்கம் சிங்கிளா வரும்னு ஸ்டேட்மென்ட் குடுகுறாங்க  (தேர்தலா இல்ல இது என்ன வண்டலூர்  Zoo வா). அம்மாவே சரணம்னு இருந்த கேப்டன் இப்ப என்னா பண்றதுனே  தெரியாம முழிச்சிக்கிட்டு இருக்காரு. நம்ம டவுட் என்னன்னா இந்த வாட்டி உள்ளாட்சி தேர்தல்ல அம்மா கட்சில நிக்கிறதுக்கு சீட் வாங்கி தர்றேன்னு நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுக்கு உறுதிமொழி வழங்குனாரே நம்ம டாக்குட்டர் அப்பா, அம்மா ரிலீஸ் பண்ண வேட்பாளர் லிஸ்ட்ல  அவுங்க பேர் எல்லாம் இருக்கா? அப்புடி இல்லன்னா அவுரு மூஞ்சிய எங்க கொண்டு  போய் வச்சுப்பாரு?

சரிப்பா இன்னிக்கி நாங்க போட்ட மொக்கையில ரொம்ப கடுப்பாகி இருப்பீங்க, உங்கள ஆசுவாசப்படுத்தறதுக்காக இந்த வீடியோவ பாருங்க, இதுல உள்ள தொப்பி போட்ட ஆசாமிகள் யார்ன்னு புரியுதா? என்னமா யோசிக்கராங்கய்யா..டிஸ்கி 1: சில பல அரசியல் காரணங்களால் இந்த வார பதிவுலக ரவுண்டப் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.  அது என்ன அரசியல் காரணம்னு யோசிக்கறீங்களா? ஒன்னும் இல்லங்க, இந்த வாரம் கொஞ்சம் பிசி ஆகிட்டதால நிறைய வலைப்பூக்கள படிக்க முடியல, அம்புட்டுதேன்.

Saturday, September 24, 2011

ஏழாம் அறிவு - பாடல்கள் ஒரு பார்வை

டிஸ்கி 0: எல்லாம் இசை விமர்சனம்தானே பண்ணுவாங்க, இது என்ன தலைப்பே படு மொக்கையா இருக்கேன்னு யோசிக்காதீங்க, இசை விமர்சனம் பண்ணற அளவுக்கு எங்களுக்கு ஞானம் கெடயாதுங்க, அதனாலதான் பாடல்கள் ஒரு  பார்வை. 

இவரு என்னத்த பாக்குறாரு?
ஏழாம் அறிவு பாடல்கள் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியாகியது. "கோ"வுக்கப்புறம் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் வரும் பாடல்கள் என்பதாலும், பலத்த எதிர்பார்ப்புள்ள படம் ஆதலாலும், இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு எமக்கு அழைப்பிதழ் வராதபோதிலும் நாங்க அது பத்தி பதிவு எழுதறோம் (ஆமா இவுங்க பெரிய டோகாமா கம்பெனி ஓனர்ஸ், இவுங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்போறாங்க)

"கோ"வுக்கு அப்புறமா ரொம்ப எதிர்பார்த்த பாடல்கள் வானம், தெய்வதிருமகள், மங்காத்தா, வேலாயுதம் (இது இன்னும் கேக்கலீங்க ஏன்னா அந்த அளவுக்கு இன்னும் மனசுல தைரியம் வரல) எல்லாமே சற்று ஏமாற்றாமாதான் முடிஞ்சது, (ஒன்னு ரெண்டு பாடல்கள் ரசிக்கவைத்தாலும் விண்ணை தாண்டி வருவாயா, கோ(?) போன்று அனைத்து பாடல்களும் தாளம்போட வைக்கும் வகை இல்லை). ஆரம்பிக்க முதல்லையே சொல்லிடறேங்க, இதுவும் அதே நிலைமைதான். ஒரு வேள கஜினி எபெக்டா இருக்குமோ, ஓவரா எதிர்பார்த்து ஏமாந்துட்டோமோ?  

இம்புட்டு சந்தோசப்படுற மாதிரி பாட்டு இல்லியே
எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும் இதுல ஆறு பாடல்கள் இருக்கு. அவை பற்றிய ஒரு சிறு குறிப்புடன் விமர்சனம். 

1. ரிங்கா ரிங்கா : இது ஹீரோ அறிமுகப்பாடலாம், தாம் தூம், கோ எபக்ட்ல இருக்கு பாட்டு. அயன் ஹனி ஹனி சாயலும் இருக்கு, அப்புடியே டாக்ஸி டாக்ஸி பாட்டையும் நினவு படுத்துது. (ஒரு வேள ஹிப் ஹப் அப்புடிங்குரதால இருக்குமோ?). பாடல் வரிகளில் பயன்படுத்தப்பட்டுள அய்லே, ஓய்லே போன்ற வார்த்தைகள் இன்னும் நெறைய பாடல்களையும் நினைவு படுத்தி தொலைக்குது.  ஆனா ஹீரோ பெரிய அப்பாடக்கர்ன்னு சொல்லும் இன்ட்ரோ பாடல்களின் மத்தியில் இது மாதிரி இன்ட்ரோ பாடல்கள் ஒரு சின்ன ஆறுதல். பாடல் படமாக்கப்பட்ட விதம்தான் பாடலுக்குரிய அந்தஸ்த கூட்டனும், இல்லினா பெரிசா சொல்லிக்க ஒண்ணுமே இல்ல இந்த பாட்டுல.

2. முன் அந்திச் சாரல்: இதுதான் இந்த ஆல்பத்துலையே ஹைலைட். வழக்கமான ஹாரிஸ் ஜெயராஜ் மெலோடிதான் ஆனாலும் கார்த்திக்கோட குரல் பாடலுக்கான அந்தஸ்த ரொம்பவே கூட்டுது. அதுக்கு கொஞ்சமும் குறைவில்லாத ஒளிப்பதிவு (மேக்கிங் ஆப் சாங்ஸ்ல பார்த்தோம்ங்க). வழமையான கார்த்திக்-சூரியா-ஹாரிஸ் மேஜிக்தான் இந்த பாடலோட அடி நாதம். கேட்டதும் பிடிக்கும் ஒரு வகை. பல பேரோட மொபைல் ப்ளே லிஸ்டில் இந்த பாடலும் இடம் பிடிக்கும்.

3. எல்லேலாமா: இந்த அல்பத்தோட பெப்பி பீட் இதுதான், கேட்கவைக்கும் பாடல். இடையிடே வரும் சில மெட்டுக்கள் மற்றும் வரிகள், வா காதல் பெராரி வரிகளை நினைவு படுத்துகிறது. ஸ்ருதி ஹாசனின் குரல் கவர்கிறது.  எடுத்ததும் பிடிக்கும் பாடல் அல்ல, ஆனா ஒரு வேள கேட்க கேட்க பிடிக்கலாம் (வேறு வழியில்லாமல்). 
முகத்த மட்டும் பாருங்கப்பா.
4. யெம்மா யெம்மா: சூப்பர், எப்பவுமே காதல் தோல்வி பாடல்கள SPB வாய்ஸ்ல கேக்குற சுகமே தனி. அதுக்கு ஏற்றாற்போல மெல்லிய இசையும் அழுத்தமான வரிகளும் இன்னுமே சிறப்பாயிருக்கு.  இடையில் வரும் சில வரிகள் "கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சி" வரியையும் "என் தெய்வத்துக்கே மாறு வேசமா" வரிகளையும் நினைவு படுத்தி தொலைகிறதுதான் ஒரே ஒரு குறை. "ஆணோட காதல் கைரேக போல, பெண்ணோட காதல் கைக்குட்ட போல" இந்த வரிகள் நிச்சயமா இன்னும் கொஞ்ச நாளைக்கு ட்வீட்டர், முகப்புத்தகத்த நிறைக்கும். 

5. இன்னும் என்ன தோழா: ஈழ மக்களுக்காக சமர்பிக்கப்பட்ட பாடல். உணர்ச்சி பூர்வமான பாடல் வரிகள்,  இடையில் வரும் டெக்னோ இசை சற்றே ஒட்டாமல் போகிறது. (ஆயுத எழுத்து "ஜன கன மன" வின் தாக்கமா இருக்கலாம்). "வெள்ளைப் பூக்கள்", "விடை கொடு எங்கள் நாடே" பாடல்களின் இசையமைப்பில் இருந்த உணர்ச்சி இல்லை,  ஆயினும் பால்ராம், நரேஷ் அய்யரின் குரல்கள் ஈர்ப்பினை ஏற்படுத்துகிறன.   "விதை விதைத்தால் நெல்லை விதை விதைத்தால் அதில் கள்ளிப்பூ முளைக்குமா, நம் தலைமுறைகள் நூறு கடந்தாலும் தந்த வீரங்கள் மறக்குமா" மற்றும் "எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை எங்கள் மொழியினில் சுவைக்கிறோம்"  கவரும் வரிகள். 

6. ரைஸ் ஒப் தாமோ: சீன மொழி பாடல். கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் உதவியுடன் மதன்கார்கி எழுதி இருக்காரு. இசையும் குரலும் மனதை வருடுது. வரிகள் இப்போதைக்கு புரியல (சைனீஸ்ல இருக்குரதால எப்பவுமே புரியபோறதில்ல).  படத்துக்கு முக்கியமான பாட்டாம், வரட்டுமே பாக்கலாம். 

பெயர் சொல்லும் பிள்ளைங்குறாங்களே அது இதுதான். 
நிறைய இடங்களில் பாடல் வரி பெரிதாக கைகொடுக்க வில்லை. பாடல் வரிகளும் மெட்டும் பல பாடல்களை நினைவு படுத்துவதாலும், . வழக்கமான ஹாரிஸ் ஜெயாராஜ் இசை வடிவமாதலாலும் ஏழாம் அறிவு பாடல்கள் பெரிதாக கவரவில்லை, ஆயினும் கேட்கக் கூடிய ரகம், ஒளிப்பதிவு, காட்சியமைப்பு, பெர்போமான்ஸ் மூணும் சரியாக அமைந்தால் பாடல்கள் பெரிய வரவேற்பை பெறும், இல்லைன்னா கொஞ்சம் கஷ்டம்தான்.

ஹாரிஸ் ஜெயராஜ் அவரது பழைய பாடல்களை டெம்ப்ளேட்டா வச்சு இந்த பாடல்களை இயற்றியிருப்பார் போல. மொத்தமா ஒரு பத்து வெரைட்டி வெச்சிருக்காரு, அந்த பத்த வச்சிட்டு எத்தன பாட்டுதான் போடலாம். ஒவ்வொன்னும் இது இந்த வகை இது இந்த வகைன்னு கேட்டதுமே சொல்லிட கூடியதா இருக்கு. கொஞ்சம் சலிப்பு தட்டுது தலிவா, புதுசா ட்ரை பண்ணுங்க (அவரு என்ன வச்சிகிட்டா வஞ்சகம் பண்றாரு).

முடிவா இதுக்கு மூணு ஸ்டார் குடுக்கறம் நம்ம ரேடிங்ல. என்னோட மியூசிக் கலக்க்ஷன்ல கோவுக்கு அப்புறம் வந்த லேட்டஸ்ட் அடிசன் இந்த எழாம் அறிவு பாடல்கள்தான். 

எல்லாரும் பாத்திருப்பீங்க, பார்க்கலைனா பாத்துக்கோங்க, Making of 7 am Arivu songs.


Monday, September 19, 2011

வந்தான் வென்றான் -சந்தானத்தால் கொஞ்சம் தப்பிச்சுது


எல்லாருக்கும் நன்றியுடன் கலந்த வணக்கம்ங்க!! என்னடா இவிங்க திரும்பவும் வணக்கம் சொல்லி கூடவே நன்றியும் சொல்றானேன்னு பார்க்குறீங்களா? இல்லீங்க இந்த பதிவ எழுதுற நானு வழக்கமான , உங்களுக்கு பழக்கமான பதிவர் Dr. Butti Paul இல்லீங்க. அவருதான் இதுநாள் வரைக்கும் Real Santhanam Fanz ங்குற பொதுவான பேர்ல எழுதிகிட்டு வந்தாரு. மொக்கராசு மாமா  ஆன நானு கடைசியா மங்காத்தா போஸ்ட் எழுதுன அப்புறம் ஒரு விபத்துல சிக்கி இப்பதான் கொஞ்சம் சகஜ நிலைக்கு வந்துருக்கேன். இன்னும் ஒடம்பு வலி குறையாமலிருந்தாலும் நம்ம தலைவர் சந்தானம் நடிச்ச வந்தான் வென்றான் படத்த போய் பார்த்துட்டு விமர்சனத்துடன் திரும்பவும் மொக்க போட ஆரம்பிக்கிறேன்.  காயமடைந்து இருக்கும் போது பேஸ்புக், ட்விட்டர் மற்றும் பிளாக் வாயிலாக என்னிடம் நலம் விசாரிச்ச எல்லா நண்பர்களுக்கும் என்னோட நன்றியதான் மொத வரில சொன்னேன். அப்புறம் இனிமே நம்ம பதிவுகள், கமெண்ட்கள் எல்லாமே Dr. Butti Paul அண்ட் மொக்கராசு மாமா ன்னு ரெண்டு வெவ்வேறு பேர்லதான் இருக்கும்னு பப்ளிக்கா அறிவிச்சிறோங்க. இப்ப  படத்தோட விமர்சனம்....
இந்த போஸ்டர்லயே வெளங்குது, எத நம்பி படத்த எடுத்து இருக்காங்கன்னு.
படம் ஆரம்பிச்சி ஒரு அரை மணி நேரம் ஹீரோவ திரைல காட்டவே இல்லேங்க. ஏதேதோ மொக்கையா சில காட்சிகள். ஏன்டா இந்த படத்துக்கு வந்தோம்னு செம காண்டுல ஒக்காந்து இருந்தேன். அப்புறம்தான் ஹீரோ இன்ட்ரோடக்சன் வந்துச்சு. நம்ம ஹீரோ ஒரு டான் மாதிரி அறிமுகமாகுறாரு, இந்தி பில்லா பட பிண்ணனி இசை அவருக்கு செமையா மேட்ச் ஆகுது அந்த காட்சில. அவரு வர்ற வரைக்கும் அடிபொடி அல்லைகைகள் எல்லாம் சாப்பிடாமா இருக்காங்க. அப்டியே வெளில வந்தா ஹீரோவுக்கு ஒரு புது பிரெண்டு (யாரோ ஜீவாவாம்) அறிமுகமாகுறாரு. அந்த பிரெண்டு தமிழ்நாட்டுல எதோ  ஒரு ஊர்ல இருந்து அவுங்க அண்ணன தேடி மும்பை வந்தவராம் (அவரு கதை நமக்கு எதுக்குங்க). அந்த பிரெண்டுகிட்ட ஹீரோ ஹிந்தில பேசுறாரு. ஆனா ஹீரோ பேசுற ஸ்டைல வச்சே அவரு பிரெண்டு "நீங்க தமிழ்தானே ?" ன்னு கேட்டுறாரு. அதுக்கான காரணத்தை நீங்க திரைல பாருங்க. அப்புறம் ஹீரோ தன்ன பத்தி சொல்ல ஆரம்பிக்கிறாரு. உண்மைலேயே அவரு டான் இல்லையாம், ஒரு டான் க்ரூப்ல அடிமை சமையல்காரரா இருக்காராம், நம்ம ஹீரோ சாப்பிட்ட பிறகு அடிபொடி அல்லைகைகள் சாப்பிடுவதற்கான காரணம் நம்ம ஹீரோ விஷம் கிஷம் கலக்கலன்னு உறுதி செஞ்சிக்கிறதுக்காகவாம். அப்டின்னா ஹீரோ எப்புடி இந்த டான் க்ரூப்ல சேர்ந்தாரு? இந்த எடத்துலதான் ஒரு பிளாஷ்பேக்.

பாணிபூரி விக்கிற ஹீரோ..
 நம்ம ஹீரோ ஒரு ஆறு வருசத்துக்கு முன்னாடி பாம்பைல  பாணிபூரி  கடை வச்சிருக்காரு. அவருக்கு போட்டியா பக்கத்துல இன்னொரு ஆள் பாணிபூரி விக்க வர்றாரு.  அவர விரட்டுரதுக்காக நம்ம ஹீரோ இந்த டான் க்ரூப்கிட்ட வர்றாரு. பிறகு நடந்த சில கலவரங்களால நம்ம ஹீரோவுக்கு அந்த டான் க்ரூப்லையே இருக்க வேண்டிய கட்டாயம். இவருக்கு சமையல் குறிப்பு குடுக்குறதுக்காக தராசு மணி ன்னு ஒருத்தர் மார்கெட்ல கட வச்சிருக்காரு.

அப்புறம் நம்ம ஹீரோ அவரு பிரெண்டுக்கு உதவுரதுக்கு வேறு சில கட்டாயங்களினால் கமிட் ஆகுராறு. அப்புறம் தன்னால் ஆனா எல்லா ஹெல்பையும் அந்த பிரெண்டுக்கு செய்றாரு. நடுவுல ஒரு சீன்ல அவருக்கு போட்டியா வந்த அந்த பாணிபூரி விக்கிறவனுக்கு ஒரு போலீஸ் காரர் மூலமா வைக்கிறாரு பாருங்க ஒரு ஆப்பு , தியேட்டர்ல செம அப்ளாஸ். அது மட்டும் இல்ல இந்த படத்துலேயே நம்ம ஹீரோ வர்ற காட்சிகள்ல மட்டும்தான் மக்கள் கொஞ்சம் உற்சாகமா பார்க்குறாங்க. அப்புறம் திரும்பவும் தூங்கிறாங்க.அப்டியே பிரெண்டுக்கு உதவி செஞ்சிகிட்டு இருக்கும்போது  ஒரு மொக்க சீன்ல நம்ம ஹீரோவுக்கு ஒரு பாட்டும் வருது, "முடிவில்லா மழையோடு விளையாடும் நம்ம கூட்டம்னு " ஒரு குத்து பாட்டு. ஹீரோவோட நடன திறமைகள அந்த பாட்டுல ஒரளவுக்கு காட்டி இருக்காங்க. அந்த பாட்டுக்கு அப்புறம் வர்ற கிளைமாக்ஸ் காட்சில அந்த பிரெண்டும் அவுங்க அண்ணனும் சண்ட போட்டு அண்ணன் தம்பிய குத்திர்றாரு. அப்ப அந்த எடத்துக்கு வந்து சேரும் நம்ம ஹீரோ படத்துல இருக்குற முக்கியமான ட்விஸ்ட அண்ணன்கிட்ட சொல்லி அவுங்க அண்ணனையும் தம்பியையும்   சேர்த்து வச்சிட்டு போயிறாரு (ஷாஜஹான் படத்துல ஹீரோ லவ்வர்ஸ சேர்த்து வைப்பாரே, அந்த மாதிரி இல்ல). அந்த காட்சில நம்ம ஹீரோ  நகைச்சுவைல மட்டும் இல்ல, குணசித்திரத்துலயும் தன்னால வெளுத்து வாங்க முடியும்னு நிருபிக்கிராரு. (அப்புறம் நா வெளிநடப்பு செஞ்சிடேங்க).

என்னடா இவன்? படத்துக்கு சம்பந்தமே இல்லாம என்னென்னமோ சொல்றான்னு பார்க்குறீங்களா? இல்லேங்க. இந்த படத்த நான் பார்க்க போனதே தல சந்தானதிற்காக. அவரு வர்ற காட்சிகள மட்டும் பார்த்தேன்.

ஏன்னா  முன்னாடி, நமக்கு கெடச்ச ரிப்போர்ட்படி  படம் சுமார்  ரகம். சூப்பரா வந்திருக்க வேண்டிய ஒரு படம் திரைக்கதை சொதப்பலால் சுமார் ரகம் ஆயிடிச்சு. ஜீவாவும் நந்தாவும் அவங்க அவங்க பங்க சிறப்பாவே செஞ்சிருந்தாலும், நம்ம தலைவர் வழக்கம் போலவே அவரால முடிஞ்சவரை படத்த தூக்கி நிறுத்த முயர்ச்சித்திருந்தாலும் திரைக்கதை சொதப்பலின் நிலவரம் ரொம்பவே சீரியஸ், அதாவது ICU ல வச்சி பாத்துக்கிட்டாலும் பொளக்கிறது  கஷ்டம். தலைவருக்காக இந்த படம் ஓடிச்சுன்னானும் அது கூட 'இட் இஸ் எ மிராக்கில்" வகையறாதான். இப்ப படத்தில் தலைவர் நடிப்பு பத்தி பிரபல விமர்சகர்களும், விமர்சக பிரபலங்களும் என்ன சொல்றாங்கன்னு பார்போம். 

டைட்டில் கார்ட இவங்க பேருதான் ஹீரோ - ஹீரோயின் அப்புடின்னு போட்டிருக்காம் 

அட்ராசக்க சி.பி 

"வந்தான் வென்றான்  - சந்தானம் பகிடி + தப்சியின் ஜகிடி"

தலைப்புலேயே அமர்களப்படுத்தறாரே, அதுவே சொல்லுது தலைவரோட பவர, இதுக்கு மேல என்னையா வேணும், தலைவர் ரசிகர்கள் எல்லாரும் ஒரு வாட்டி படம் பாக்கலாம். 

"படத்தில் சிக்சர் அடிப்பது சந்தானம் தான். கேப் கிடைக்கும் இடம் எல்லாம் கிடாதான்..."


தலைவர் நிச்சயமா புகுந்து விளையாடியிருக்கார். அப்புறம் என்ன காமெடி நிகழ்சிகளுக்கும், யுட்டுயூப் பிரியர்களுக்கும் செம விருந்து ரெடி.

"சி.பி கமெண்ட்: வந்தான் வென்றான் - நொந்தான் சென்றான் என்று சொல்ல வழியில்லாமல் சந்தானம் காப்பாற்றுகிறார்"


இதுக்கும் மேல உங்களுக்கு ஏதாச்சும் சொல்லனுமா? இப்ப சொல்லுங்க இந்த படத்தோட ஹீரோ யாரு?


கேபிள் ஷங்கர் 

"படத்தில் இருக்கும் ஒரே ஒரு ரிலாக்ஷேஷன் சந்தானம் தான் ஆனால் அவரும் எதோ ஓட்ட வைத்த காமெடியாய் அங்காங்கே கிச்சு கிச்சு மூட்டுகிறார் அவ்வளவே"  

ஒன்னும் தப்பா நினச்சுக்கதீங்கப்பா, திரைக்கதை அமைப்புல உள்ள சொதப்பலதான் அப்புடி சொல்றாரு. நாமெல்லாம் யாரு, சந்தானம் போஸ்டரையே மூணு மணி நேரம் பாக்குறவங்க, இந்த படத்துல நிச்சயம் தலைவர் நம்மள ஏமாத்த மாட்டாரு. 
 

செங்கோவி

"சந்தானம் சில நேரங்களில் சிரிக்கவைக்கிறார். பலநேரங்களில் மொக்கை தான். அவ்வப்போது வந்துவிழும் ஒன்லைனர் மட்டுமே ரசிக்க வைக்கிறது"


விடுங்க சார், இவரு இப்புடித்தான் சொல்லுவாரு, ஒன்லைனர் ரசிக்கவக்குதுங்குறாரே அது போதாதா? 

ஹீரோவும் வில்லனும் இவங்களாம், டைட்டில் கார்ட்ல 


லோஷன்
இதுதான் மாஸ்டர் பீஸ், இவரு  இந்தப்படம் பாத்துட்டு ஒரு தீவிர சந்தானம் ரசிகராகவே மாறிட்டாருன்னா பாத்துக்கேங்களேன். அவரே இம்புட்டு சிலாகிச்சு எழுதியிருக்கார்னா நம்ம தலைவர் நிச்சயம் நம்மள கைவிடல்ல. தைரியமா ஒரு சந்தானம் ரசிகனா தலைவரோட எந்த படத்துக்கும் போகலாம்...

சந்தானம் - கண்டேன் படம் போலவே இங்கேயும் இந்தக் குருவி தான் பனங்காயை என்ன, பனை மரத்தையே தாங்குகிறது. சிரிக்க வைப்பதுடன் படத்தில் திருப்பம் ஏற்படுத்தவும் பயன்படுகிறார்"


அட அட அட, தலைவர் தலைவர்தான்யா...


"சந்தானம் தான் படத்தின் ஹீரோ என்று சொன்னாலும் நல்லாவே இருக்கும்"


தலைவருக்கு உண்மையான அங்கீகாரம், லோஷன் சார் உங்களுக்கு ஒரு பெரிய நன்றி. தலைவர் வாழ்க, நாளைய முதல்வர் வாழ்க.... 


அப்புடீன்னா இவங்க ரெண்டுபேருமே டம்மி தானா?


அண்ணன் இந்த படத்துக்கு ஒரு வெர்டிக்ட் குடுக்கறாரு பாருங்க, அதயே நாங்களும் குடுக்கறோம்.

"  சந்தானத்தால் கொஞ்சம் தப்பிச்சுது"  இவருதான் நிஜ வில்லன், அட படத்தோட டைரக்டர் ...
தலதளபதி ரசிகன்னு சொல்லிக்கறதுல நாங்க என்னைக்குமே பெரும படுறோம் சார். தலைவர் ரசிகர்கள்னா நிச்சயமா இந்த படத்த ஒரு தடவன்னாலும் தியேட்டர்ல பாக்கணும் சார். படத்துக்கு எவ்வளவு நெகடிவா விமர்சனம் வந்தாலும் சோர்ந்துடாதீங்க, தலைவர் ஒருவருக்காகவே இந்த படம் கல்லா கட்டணும். பாஸ் என்கிற பாஸ்கரன், சிறுத்தை ரேஞ்ஜ்ல சிக்சர் அடிக்க முடியாட்டியும் தலைவர் அடிக்கிற ஃபோர்க்காக ஒரு வாட்டி பார்கலாம்.

இன்ட்லி இணைப்பு
தமிழ் 10:

Saturday, September 17, 2011

பதிவுலக ரவுண்டப் : ஒரு அட்டகாசமான பதிவு 3

நம்ம பதிவுலக ரவுண்டப்  பதிவின் மூணாவது பகுதி இது. நம்மள பீல் பண்ண வச்ச பதிவர்கள் வரிசை இங்க தொடருது... 

கெட்டப்பே ஒரு கெத்தா இருக்கே...
பதிவுக்கு போக முதல்ல இதையும் கொஞ்சம் கேளுங்கப்பு. நாங்க ப்ளாகோட பெயர மாத்திட்டோம், அதுக்காக தலைவருக்கு என்ன ஆச்சின்னு கேக்காதீங்க, அவருதான் சப்-டைட்டில்ல இருக்காரே, இது எப்பவும் போல தலைவர் ரசிகர் மன்றம்தான். எல்லாருக்கும் தெரியுமே தலைவருக்கு நாக்குல சனின்னு, நாங்களும் ஏதாவது வம்பளக்கபோய் அது தலைவருக்கு பிரச்சினையா முடியக்கூடாதில்ல, அதனாலதான் ஒரு சேப்டிக்கு (யாருய்யா அது, இத காண்டம்னு வாசிக்கறது). 


அது என்ன "அகாதுகா அப்பாடாகர்ஸ்" அப்பிடின்னு ஆராச்சி கட்டுற எழுதவைக்கிற அளவுக்கு கெளப்பி விட்டீங்கன்னா மூஞ்சில பூரான் வுட்ருவோம் ஆமா... இதெல்லாம் சும்மா அனுபவிக்கனும், ஆராயக்கூடாது. 

அப்புறம் கூடங்குளம் போராட்டத்தில் நேரடியாகவும், பதிவுகள் வாயிலாகவும் இணைந்து கொண்டுள்ள நண்பர்களுக்கு ஆதரவினை வழங்கிக்கொண்டு இன்றைய பதிவினை ஆரம்பிக்கிறோம். நண்பர் ராஜேஷ் அவரது மாய உலகத்தில் தொகுத்தளித்துள்ள பதிவுகளை நீங்களும் ஒருவாட்டி வாசிச்சுத்தான் பாருங்களேன். நம்மால் முடிஞ்ச ஆதரவை நாமும் வழங்குவோம்...

இதன் முதல் இரு பதிவுகளை [பதிவு 1 மற்றும் பதிவு 2] படிக்காதவர்களுக்கு இதற்குமேல் படிக்க அனுமதியில்லை.
யார்கூட சண்டை போடப்போறாரு?
நமக்கு அறிமுகமான பிரபலபதிவர்கள் வரிசையில்........

கவிதை வீதி சௌந்தர்: நம்மளையும் ஒரு மனுஷனா மதிச்சு முதல் பின்னூட்டம் இட்டது சார்தான், தெய்வத்திருமகள் ஒரு சந்தானம் ரசிகனின் மாற்றுப்பார்வை அப்பிடின்குற பதிவுக்கு, உங்கள் பார்வையில் ரசித்தேன்னு போட்டிருந்தாரு, கவித, கவித அப்போ அது இந்த மரமண்டைகளுக்கு புரியல. அரசியல், கிரிகெட், சினிமான்னு கலந்து கட்டி அடிச்சாலும் சாரோட கவிதைகள் எப்பவுமே சூப்பர், ஒரு சமுதாய அக்கறை இவரோட கவிதைகள்ல பொதிஞ்சிருக்கும். சுயமரியாதை விட்டு வாழ்வதா? ரொம்பவே ரசிக்கவைத்த ஒரு கவிதை. 

வெட்டும்போதும் கூட 
எதிர்ப்பு காட்டாமலிருக்கும்
மரத்தினைப்போல

நாளை துளிர் விடலாம் 
என்ற நம்பிக்கையில்  

பின்னிட்டீங்க சார்.


தமிழ்வாசி பிரகாஷ்: சார் ஒரு கணணிப்பிரியர். நமக்கெல்லாம் ப்ளாக் எப்புடி மெயின்டைன் பன்னனும்குறதில இருந்து கிருமி அடிச்சா (வைரசுன்னா கிருமிதானுங்களே?) எப்பிடி மருந்து தெளிக்கலாங்குற  வரைக்கும் நெறயவே சொல்லிக்குடுத்திருக்காரு. CNC PROGRAMING & OPERATION மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக சார் எழுதும் ஒரு தொடர். தமிழில் இது ஒரு புது முயற்சி. துறை சார் வாசகர்களுக்கு நிறைய பயனுள்ள தகல்களையும் விளக்கங்களையும் அளிக்கிறது இந்தத் தொடர். சமுதாய அக்கறைதான் சாரின் உயிர் நாடி, சார் பத்தி எல்லாருக்கும் புரியற மாதிரி சொல்லனும்னா இவரு மௌனம் பேசியதே சூரியா காரக்டர், அதுக்காக ஜீன்ஸ் போட்ட சகுனியான்னு கேக்காதீங்க... "பஸ்ஸில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துக்கள்" வாசிச்சு பாருங்க உங்களுக்கே புரியும், யப்பா லவ்வர்ஸ் பெருமக்களே, இனிமே இந்தாள பக்கத்துல பாத்தீங்கன்னா உஷாராகிக்காங்க அப்புறம் உங்க குடும்பத்துலயும் கொழம்பு ஊத்திடுவாரு. சார் ஒரு சிறுகதை பிரியன், நல்ல நல்ல சிறுகதைகளா அள்ளி விட்டுகிட்டே இருப்பாரு. சமீபத்துல ஆளு அஞ்சலி பொண்ண ஜொள்ளுறதா  பேசிக்கறாங்க, அப்புடீன்னா ஷீனா ஷகாபடிக்கு என்ன ஆச்சி? விடுங்கப்பா, நமக்கு எதுக்கு ஊர் வம்பு...


இந்தப்பொண்ணு அறிமுகமாக முதல்லையே திருமணமானவங்களாமே, உண்மையா தமிழ்வாசி?

சி.பி. செந்தில் குமார்: ஒரு தமிழ் படம் ரிலீசாச்சின்னா கூகுளில் மூலமா நாம முதல்ல வந்து சேர்ற இடம் அட்ராசக்க, அப்பெல்லாம் தெரியாது அண்ணாத்ததான் அங்க அப்படாகர்னு. நாம பாட்டுக்கு விமர்சனத்த படிச்சிட்டு அப்பீட்டாகிடுவம். படம் மொக்கன்னா இவரு கலாய்ப்பாரு பாரு, ப்ரடுசெர்ல இருந்து டீ பாய் வரைக்கும் யாரும் தப்பிக்க முடியாது. வெங்காயம் இயக்குனருக்கு பல்பு குடுக்க போயி அண்ணன் பல்பு வாங்கினது தனி கத. இப்பெல்லாம் வருஷத்துக்கு நூத்தம்பது படம் வருது, அதுல ஒரு பத்து பதினச்சுதான் தேறுது, மிச்ச மீதிக்கிட்டருந்தெல்லாம்  நம்மள காப்பாத்தறதுக்காகவே அவரோட உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்பணிச்சு, தியேட்டர்ல போயி ப்ளேடு வாங்குறாரே, அண்ணனுக்கு ரொம்ப பெரிய மனசுய்யா... ஆனா அதுக்கு பழிவாங்கனும்னு அப்பப்ப சீரியஸா தலைப்பு வச்சி துணுக்குகள தொகுத்து நமெக்கெல்லாம் பல்பு குடுப்பாரு பாரு, அதுல அவருக்கு ஒரு ஆத்ம திருப்தி.  காமெடி கும்மின்னு கும்மினாருன்னா, பேட்டி குடுத்தவனுக்கும், எடுத்தவனுக்கும் எதுக்குய்யா இப்பிடி பண்ணினோம்னு ஒரே பீலிங் ஆகிடும். சீரியஸ் மேட்டர்னாலும் மொக்கன்னாலும் ஒரே நக்கல் ஒரே குசும்புதான், அதுதான் அண்ணனோட ஸ்ட்ரெந்து. இவர பதிவுலக டாகுடர்னு சொல்லலாம், அம்புட்டு விமர்சனத்த சந்திச்சிருக்காரு மனுஷன். "மணிரத்னம் ஒரு சகாப்தமா? ஒரு அழகிய ஆரய்ச்சி" (பாகம் மூணு எங்க சார்?), "பெண் எழுத்து ஒரு பாசிடிவ் பார்வை", ரெண்டும் அண்ணனோட சீரியஸ் பதிவுகள். சாரோட லிஸ்டுல இத தேடுறது கஷ்டம்தான், ட்ரை பண்ணிதான் பாருங்களேன்.

இதுதானுங் ப்ரனீதா, முதல் பதிவுல போட மறந்துட்டமா  அதானுங்  . 
--

ஒருமுக்கியமான விஷயம், உலகம் பூரா சாலை விபத்துக்களால ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிச்சிட்டே வருது. இன்னைக்கு காலைல கேள்வி பட்ட ஒரு மனச கரைய வைக்கும் செய்தி: நம்ம பழைய கேப்டன் அசாருதீனின் 19 வயது மகன் அதிக வேகத்துடன் பைக் ஓட்டி ஒரு காரை முந்த முயன்றபோது திடீரென விபத்துக்குள்ளாகி  உயிரிழந்துள்ளார். அப்புறம் நம்ம  மொக்கராசு மாமாவும் சமீபத்தில் ஒரு கார் ஆக்சிடண்டில சிக்கி தெய்வாதீனமா உரிர் தப்பினது உங்க எல்லாருக்கும் தெரியும். ஒரு சிலரின் கவனக்குறைவுகளால், அதிமிஞ்சிய  வேகத்தினால், விளையாட்டுதனங்களால் பலர் பாதிக்கப்படும் இது போன்ற சோகங்களை விரிவாக பேசும் படமாக சமீபத்தில் வெளிவந்த எங்கேயும் எப்போதும் இருக்கு. அந்த படத்தை வெற்றி பெற செய்து நாலு பேருக்கு விழிப்புணர்வூட்டலாமே. 


கெளம்புறதுக்கு முன்னாடி ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் டிராவிடுக்கு எல்லாரும் ஜோரா ஒரு தடவ விசில் போடுங்க, அந்தாளும் ஒத்தையா நின்னு நம்ம ஆளுங்கள வெள்ளயங்க கிட்ட இருந்து மீட்க எவ்வளவு போராடினாரு. சீக்கிரமா ஒரு சிலை வைக்க ஏற்பாடு செய்யணும்பா. 


அப்டேட்: தமிழ்வாசியின் மெக்கானிகல் துறையினருக்கான தொடர் பற்றிய தகவல் இணைக்கப்பட்டுள்ளது. சுட்டிக்காட்டிய செங்கோவி அண்ணனுக்கு நன்றிகள்.

டிஸ்கி 1: இன்னும் சில பிரபல பதிவர்கள் பற்றிய குறிப்புக்களுடனும், சுவையான சம்பவங்களுடனும் ஒரு புதுப்பொலிவில் பதிவு தொடரும்.... 

டிஸ்கி 0: வழக்கமா நூறு பதிவு, ஒரு லட்சம் ஹிட்ஸ் எடுத்ததுக்கப்புறம்தான் இப்புடி திரும்பி பார்த்து பதிவு போடுவாங்களாமே, நாங்க இப்பவே போடுறோமேன்னு தப்பா நெனச்சிடாதீங்க, நன்றி சொல்றதுக்கு நூறு பதிவெல்லாம் எதுக்கு, மனசு இருந்தா போதாதான்னு அண்ணன் ஜீ யே சொல்லிட்டாரு, அப்புறம் என்ன. 

டிஸ்கி -1: தலைவர் படம் வந்திருக்கு, வந்தான் வென்றான்னு பேரு. தலைவருக்காக எல்லாரும் ஒரு தடவ தேட்டர்ல போய் பாருங்க, அப்புறமா யூடுபி தலைவர் காமெடி மட்டும் பாத்துக்கங்க. 

டிஸ்கி -2: அது என்ன டிஸ்கி -2 , டிஸ்கி -1, டிஸ்கி  0... எல்லாம்னு பாக்குறீங்களா, மூணு நாலு டிஸ்கி எல்லாம் போடக்கூடாதாமே, அதுதான், நாங்க கணக்குல கரெக்டா இருப்போம்ல.   


Friday, September 16, 2011

சோனாவும் சரணும் - கிழியும் முகத்திரைகள்


இன்னிக்கி சூடான விஷயம் என்னனா, சரண் சோனாவ மேட்டர் பண்ண ட்ரை பண்ணினதுதான். இந்த சம்பவத்த சோனா வாயாலேயே கேட்டு தெரிஞ்சுக்க விடியோவை பார்க்கவும்.

இது ஒன்னும் நமக்கு புதுசில்லையே, வழக்கமா நாம பாத்துட்டு வாறதுதானே, இந்தமாதிரி சமாச்சாரங்கள் வாறதும், அப்புறமா வந்த வேகத்துல செட்டில் ஆகிடறதும் நடந்துக்கிட்டுதானே இருக்கு. சினிமா நடிகர்கள் நடிகைகள் பத்தி இது ஒன்னும் புதுசில்ல, நிகிதா விவகாரம் இன்னம் அடங்கவே இல்ல அதுக்குள்ள இன்னொன்னு. கொஞ்ச நாள் முன்னாடி பிரபுதேவா , அதுக்கும் முன்னாடி சிம்பு, கமல்ஹாசன்னு சர்ச்சைகள் ஏராளம். இந்தப்போக்கு கொஞ்ச நாளா இலக்கிய வட்டத்தையும் ஆட்டிகிட்டு இருக்கு. கொஞ்ச நாள் முன்னாடி சாரு சாட்டிங் விவகாரம், அதுக்கும் முன்னாடி சோபா சக்தி விவகாரம் இதெல்லாம் நீங்க யாரும் மறந்திருக்க மாட்டீங்கன்னு தெரியும். இந்த விவகாரங்கள் சரியான முறையில் தான் டீல் பண்ணப்படுதான்னு யோசிச்சா அது கொஞ்சம் குழப்பமாவேதான் இருக்கு. குழம்பின குட்டைய குழப்புறதுதானே நம்ம வழக்கம். முதல்ல இந்த விவகாரம் பத்தி பார்போம்.


ஏன் ஒருமாதிரி பாக்குறீங்க?
நமக்கு இப்புடி ஒன்னு நடந்தா நாம என்ன பண்ணுவோம்? அந்த பப்ளிக் ஆறுபேரையும்(?) கூப்பிட்டு வச்சி இந்தாள நிறுத்திவச்சி தெரிஞ்ச கெட்டவார்த்தை எல்லாம் சொல்லி திட்டி மன்னிப்பு கேக்க வைப்போம், அதுக்கும் மேல இன்னும் நாலுபேருக்கு இது நடக்ககூடதுன்னு நெனைச்சோம்னா தனியா போலீஸ் ஸ்டேஷன் போயி கம்ப்ளைன்ட் குடுப்போம்.  யாராச்சி பிரஸ் மீட் வச்சி என்ன எங்க தொட்டான் என்ன செஞ்சான்னு சொல்லுவமா? இல்ல அப்புடி சொல்றதால பொதுமக்களுக்கு ஏதாச்சும் பிரயோசனம் கெடைக்குமா? வேணும்னா அந்த ஆளோட இமேஜே டேமேஜ் பண்ணலாம், நம்ம இன்னும் நாலுபேர்கிட்ட போய் சேரலாம், பத்திரிகைகளுக்கும், பதிவர்களுக்கும், டீ-கட அரட்டைகளுக்கும் ஒரு கில்மா சமாச்சாரம் குடுக்கலாம். அவ்வளவுதான். ஒரு பிரைவேட் பார்ட்டில, நடந்த ஒரு விசயத்த(!) இப்புடி அம்பலப்படுத்த வேண்டிய தேவை என்ன?  இதுல எதாச்சும் சமுதாய அக்கறை இருக்கானு தெரியல. அது மட்டுமே நம்ம ஆதங்கம். அதுக்காக சரண் நல்லவரு இந்தம்மா கெட்டவங்கன்னு நாங்க சொல்ல வரல, நடந்த சம்பவம் உண்மை சம்பவமாவே இருக்கலாம், ஆனா அது கையாளப்பட்ட விதம் பொருத்தமானதா இல்லைன்னு மட்டும் தெரியுது. 

அலேர்ட்: 18+ மட்டும் சரண் படத்துக்கு அருகிலுள்ள  இடைவெளியை சிலெக்ட் செய்யவும்.
-->
எப்புடி இருந்த நான்... இப்புடி ஆயிட்டேன்...
இந்தம்மா மட்டும் யோக்கியமா, சினிமாவுல கவர்ச்சி காட்டி ரசிகனோட பாலியல் வேட்கைய தூண்டித்தானே பிரபலமாகுனாங்க, அதனால அவ ஒரு தே$$$$யா, அப்பிடின்குற ரேஞ்சுல கண்டிப்பா சில பேர் பேசுவாங்க, இதுவும் நியாயம்னு படல, அவுங்க தொழில் கவர்ச்சி நடிகையா இருக்கலாம், ஆனா அவங்களும் ஒரு பெண்தான். கவர்ச்சி நடிகைன்னாலே பாலியல் தொழிலாளின்னு பாக்குறது சரிப்பட்டு வராது, அப்புடின்னா கோடைகாலத்துல ஐரோப்பிய நாடுகள்லயும், அமெரிக்க நாடுகள்லயும் நடமாடற எல்லா பெண்களையும் அப்புடித்தான் சொல்லணும். ஆடைக் குறைப்பு நம்ம பாலியல் வேட்கைய தூண்டுதுன்னா நம்மகிட்டதான் எதோ குறை இருக்கு, இல்லனா நம்ம கலாசாரத்துல எதோ குறை இருக்கு, அதுக்காக இந்த ஆடை குறைப்பு சரின்னு சொல்லல, நம்மகிட்ட இருக்கற தப்புதான் அவங்களையும் அந்த தப்ப பண்ண வக்கிதுன்னு சொல்றோம்.  ஒரு நிஜமான பாலியல் தொழிலாளிகிட்ட கூட அவங்க விருப்பமில்லாம நடந்துகிட்டா அது ரேப் தான். சரண் இந்தம்மா கிட்ட அப்புடி நடந்திருந்தார்னா அது நிச்சயமா ரேப் அட்டெம்ட் தான். 
<--


இது பப்ளிசிடிக்காக செய்யப்பட ஒன்றா, அல்லது உண்மையிலேயே சரண் ஒரு காமுகனா என்ற கேள்விக்கு பதில் தெரிய வேண்டுமென்றால் வேறு எங்காவாது போய்த் தேடுங்கள், இந்தப் பதிவின் நோக்கம் அவை பற்றி ஆராய்வதில்லை. யாரு சரி யாரு பிழை, இவர்களது யோக்கியம் என்ன, என்பதை அலசுவது நமது நோக்கமில்லை. அது தேவையும் இல்லை. பொதுமக்களுக்கு இந்த விடயங்களை எடுத்துச்செல்லும் புண்ணிய காரியங்களில்(!) இணைந்துகொண்டுள்ள  நாம் இது பற்றிய சரியான புரிந்துணர்வோடு செயல்படுகிறோமா என்பதே நமது கவலை. ஊர் கோடியில் ஒரு பெண் மூன்று நபர்களால் கற்பழிக்கப்பட்டால் அது துண்டுச் செய்தி, ஆனால் இது தலைப்புச்செய்தி, ஏன் இந்த பாகுபாடு?

ஒரு நடிகனையோ, இலக்கியவாதியையோ, தொழில் மட்டத்தில் அல்லது படைப்பு மட்டத்தில் விமர்சிக்காது அவர்களை வழிகாட்டிகளாக, கடவுளர்களாக கொண்டாடுவதுதான் இந்த பிரச்சினைகளுக்கு மூல காரணமே. பிரபலங்கள் என்பவர்களும் தனி மனிதர்கள்தான், தனி மனித பலகீனம் நிச்சயம் அவர்களையும் ஆட்டுவிக்கும். பிரபலங்கள் என்றால் ராமனாகவோ சீதையாகவோ இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பது நமது மடமை. இவங்க ஒன்னும் கடவுள் இல்லியே. தனி மனித பலகீனங்களுடன் போராடி தோற்றுப்போன பிரபலங்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை நமக்கு கில்மா மேட்டர் ஆனதுதான் கொடுமை.

நம்மள பத்தியும் எதுவும் சொல்றாங்களோ?
தனிமனித சுதந்திரத்தில் தலையிடக் கூடாதென்று பக்கம் பக்கமாக பேசுபவர்கள்தான் இது பற்றியும் பக்கம் பக்கமாக எழுதுவார்கள். அந்தரங்கங்களுக்குள் நுழைந்து சுகம் காணுவது அபத்தமில்லையா? இரு தனி மனிதர்களுக்கிடைப்பட்ட சம்பவங்களை வெளிச்சமிட்டுக்காட்டுவது முறையாகுமா? ஒவ்வொரு மனிதனும் அவனது செயல்பாட்டிற்கு யாதேனும் நியாயம் காணவே செய்கிறான். அந்தரங்கம் புனிதமானதகாகவே இருக்கிறது அம்பலப்படுத்தும் வரை. அப்பிடியெனில் சரண் போன்றவர்கள் இவ்வாறு நடந்துகொண்டால் அது முறையாகுமா? இதை நாம் கண்டுகொள்ளாது விட்டுவிட வேண்டுமா? தட்டிக்கேட்கவே கூடாதா? இந்த முரண்பாடு இருந்து கொண்டேதான் இருக்கும் பிரபலங்கள் மீதுள்ள கடவுள் விம்பம் விட்டொழிக்கப்படும் வரை. இந்த விடயங்களை விமர்சிக்ககூடாது என்று சொல்லவில்லை, அம்பலப்படுத்தக்கூடாது என்று சொல்லவும் இல்லை, ஆயினும் உலகமே அழிந்து விட்டது, என்கிற அளவில் பில்ட்-அப் தேவையில்லை என்பதுதான் எமது தாழ்மையான கருத்து. தனி மனிதர்களையும், கருத்துக்களையும், செயல்பாடுகளையும் பிரித்துப்பார்க்கும் பக்குவம் நமக்கு இன்னும் வரவில்லையோ என்கிற ஆதங்கம்தான் இந்த பதிவு.

டிஸ்கி: எதோ மனசுல பட்டத சொல்லிட்டோம். எங்களுக்கே ஒன்னும் புரியல, யாராச்சி புரியவச்சிங்கன்னா கோடி புண்ணியமா போகும்.


Thursday, September 15, 2011

சந்தானம் பேட்டி: அவரையே கலாய்க்கிறோம்!! பகுதி -2

தலைவர் பேட்டியின் இரண்டாம் பாகம். காலதாமதத்துக்கு வருந்துகிறோம்(அதுக்கான காரணம் உங்களுக்கு தெரியும்). முதல் பாகத்தை காண இங்கு அழுத்தவும். இப்ப பேட்டிக்கு போலாமா?

கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரின்றாங்களே அது இதுதான்...  
01. ஹீரோக்களில் யாருடைய டைமிங் உங்களை பிரமிக்க வைத்தது?
 - ஜேப்பியார், போளூர். 
(RSF : ஜொள்ளு பிரியர், சாரி ஜேப்பியார் நீங்க எந்த டைமிங் பத்தி கேக்குறீங்க???)
பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒரு விதம்.... ஹீரோக்களும் பலவிதம். முதல் ஹீரோ சிம்பு முதல் இப்போது சேர்ந்துள்ள உதயநிதி ஸ்டாலின் வரை எல்லோருக்குமே டைமிங் இருக்கு. என் டைம் சரியா இருந்தா எல்லா ஹீரோக்களுக்கும் டைமிங் ரொம்ப நல்லா வரும். சூப்பர் ஸ்டாரின் டைமிங் காமெடி மட்டுமல்ல, ஷூட்டிங்கில் வரும் டைமிங் இன்னும் பிரமிப்பு.
(RSF: ஹீரோக்கள பத்தி கேட்டா பழைய பாட்டு பாடுறாரே இவரு ,ஒரு வேளை இதனால்தான் கெமிஸ்ட்ரி வோர்கவுட்டாகுதோ? #டவுட்டு)
 
02. வடிவேலு - விவேக் ஆகியோரை அடுத்து நீங்கள்தான் என பேசிக் கொள்கிறார்களே?
- சையது முகமது, சென்னை 93.
( RSF: கவுண்டருக்கப்புறம்னு சொல்லுங்க) 
நல்ல விஷயம்தானே? பேசட்டும்... பேசட்டும்... நான் வல்லவன் என்று பேசிக் கொள்பவர்களில் நீங்கள் இருந்தால் எனக்கு நல்லது.
(RSF: என்னாது நீங்க வல்லவனா?? பார்த்து சார் சிம்பு கோவிச்சுக்க போறாரு)
 
03. உங்கள் காமெடியில் அதிகமாக காமநெடி இருக்கிறதே?
- விஜய், கும்பகோணம்.
(RSF: இருந்துட்டு போகுது....)
 அப்ப மசாலாவை கம்மி பண்ணிக்கிறேன். 
(RSF: இவரு என்ன சக்தி மசாலா சமையலா பண்ணப்போறாரு, பஞ்சா பதில் சொல்வாருன்னு பாத்தா மொக்கையா பதில் சொல்றாரே)

04. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பற்றி?
- குணா, திருக்குன்றம்.
(RSF: எத்தன பேர்கிட்டதான்டா இதயே கேப்பீங்க? இப்ப பாரு இவரும் கடமைக்கு ஒரு பதில சொல்வாரு)
எம்.ஜி.ஆரின் சினிமாக்களை டி.டி. சேனலில் பார்க்கத் தொடங்கியது முதல் இப்போது டி.வி.டி.க்களில் பார்க்கும் காலம் வரையிலும், அவர் பிரமிக்க வைத்துக் கொண்டே இருக்கிறார். "எங்கள் வீட்டு பிள்ளை' படத்தைப் பார்த்து "நான் ஆணையிட்டால்... ன்னு பாடி மாடிப் படிகளில் விழுந்திருக்கேன்.
"உலகம் சுற்றும் வாலிபன்' பார்த்து அவர் மாதிரியே கோட் சூட் வேணும்ன்னு அழுது அடம் பிடிச்சிருக்கேன். அப்ப நான் சின்ன பையன்தானே? கருத்து சொல்லும் பக்குவம் என்னிடம் இல்லை. மனிதன் தெய்வமானால் அது எம்.ஜி.ஆர். ஒ.கே.,வா?
(RSF: அப்ப தெய்வம் மனிதனானால் அது சூப்பர் ஸ்டாரா? என்னய்யா பதில் இது? ) 
காத தொளக்குறமாதிரி கேள்வி கேட்டுபுட்டன்களோ  
05. திரை காட்சிகளுடன் சொந்த வாழ்க்கையை ஒப்பிட்டு பார்ப்பது உண்டா?
- வளையாபதி, தோட்டக்குறிச்சி.
(RSF: ஆமா காட்டுபூச்சி ஸ்டைல்ல ஒங்க வூடு பூந்து திருட போறாராம் ஓகேவா ?) 
உன் வாழ்க்கை, என் வாழ்க்கை, பக்கத்து வீட்டுக்காரன் வாழ்க்கைன்னு எல்லாமும் சேர்ந்ததுதான் இந்த உலக வாழ்க்கை. ஆனால் அதையெல்லாம் சினிமாவுடன் ஒப்பிட்டு பார்க்க முடியாது. அது வேறு. இது வேறு. 
(RSF: என்ன ஒரு புரிந்துணர்வு,ஒடம்பு புல்லரிக்குது தலிவா)

06. நீங்களும் அரசியலுக்கு வந்து விடுவீர்களா?
- ரகு, குடவாசல்.
(RSF: ஏன், போராட்ட பந்தலில நின்னு நான் அடிச்சா தாங்கமாட்டன்னு பாடனும்னு எதிர்பார்கிறீங்களா?)
சினிமாவே அரசியல்தானே? எல்லோருமே அரசியலுக்குள்தான் இயங்கிட்டு இருக்கோம்.
(RSF:நீங்க இந்த நடிகர் சங்க அரசியல், தயாரிப்பாளர் சங்க அரசியல பத்தி சொல்லலயே?)

07. தங்களுக்கு வந்த வாய்ப்பை வேறு யாராவது தட்டிப் பறித்து இருக்கிறார்களா?
- பார்வதி, மயிலாடுதுறை.
(RSF: ஏன் வருஷத்துக்கு முப்பது படம் நடிக்கறாரே பத்தாதா?)
நிறைய பேர். ஆனால் தெய்வம் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது. 
(RSF:  விடுங்க பாஸ் பொழச்சி போகட்டும், நம்ம கையில படமா இல்ல)
  
08. வாழ வைத்த தெய்வம் என நம்புவது யாரை?
- ராஜசேகரன், மதுரை 10.
(RSF: முருகன், பிள்ளையார் ,அல்லா , ஜீசஸ்னு பதில் வராதுன்னு தெரியும், இருந்தாலும் சும்மா ஒரு இதுக்கு கேக்குறது இதெல்லாம்!! )
உங்களைத்தான். 
(RSF: இது டாக்குடர் ப்ரேன்ட் பதிலு, இது எதுக்கு நமக்கு )
சாருக்கு ரொம்ப கூச்ச சுபாபம். 

09. தங்களுக்கு மரம் நடுவதில் எந்த அளவுக்கு ஆர்வம் இருக்கிறது?
- ஆரோக்கியம், வடுகப்பட்டி.
(RSF: யோவ் காமெடி நடிகன்கிட்ட கேக்குறதுக்கு ஒங்களுக்கு வேற கேள்வியே இல்லையாய்யா?)
மரம் நடுவதை விட, இருக்கும் மரங்களை பாதுகாப்பதில் ஆர்வம் உண்டு. 
(RSF: இப்ப யாரச்சொல்றீங்க?? )

10. நீங்கள் நடித்ததில் "தெய்வத்திருமகள்' மிகவும் பிடித்திருந்தது? அதற்கான காரணத்தை கண்டுபிடியுங்களேன்?
- தீபன் சக்கரவர்த்தி, இராமநாதபுரம்.
(RSF: அந்த படத்துல இவரு மட்டும்தான் ஒரிஜினல், மத்த எல்லாமே திருட்டு அதுதானே?)
கொஞ்சம் நடித்திருந்தேன். 
(RSF: நல்லாத்தான் சமாளிக்கறாரு)

11. சந்தானத்துக்கு சமூகத்தில் தற்போது கிடைத்துள்ள அந்தஸ்து பற்றி?
- சத்ரபதி, சென்னை.
(RSF: இப்புடி உசுப்பேத்தி உசுப்பேத்தியேதான் நெறைய பேர அழிசீங்க)
ரொம்ப மரியாதை கொடுத்திருக்காங்க. சுதந்திர தினத்துக்கெல்லாம் என் பேட்டியை போடுறாங்க. பள்ளிக்கூடம், காலேஜ்ன்னு கூப்பிட்டு பேச சொல்றாங்க. அதுக்கெல்லாம் உண்மையா நடந்துக்கணும்ன்னு உண்மையா உழைக்கிறேன்.
(RSF: அப்புறம் நம்ம அடுத்தகட்ட திட்டம் என்ன பாசு?) 


என்ன கேட்டீங்க, அடுத்தகட்ட திட்டமா? கெட்-அப்ப பாத்தா தெரியல?
12. இரட்டை அர்த்த வசனங்களை தவிர்த்தால் எல்லோரும் ரசிப்பார்களே?
- பிரபு, தஞ்சாவூர்.
(RSF: ஒரே கேள்விய எத்தன தடவய்யா கேப்பீங்க?) 
டைரக்டர்களிடம் சொல்லி குறைத்து விடலாம்.
(RSF: நிஜமாவா, அப்பிடின்னா அதுக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லையா?) 

13. உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நகைச்சுவை எது?
- ரமேஷ்குமார், நாகப்பட்டிணம்.
ஆதித்யா சேனலில் வரும் எல்லாமும்.
(RSF: ஏன் நீங்க இந்த சிரிப்பொலி எல்லாம் பார்க்குறது இல்லையா, கலிஞ்சரோட எதுனாச்சும் கோவமா?)

14. பரபரப்பான சூழலில் "லொள்ளு சபா' வாழ்க்கையை நினைத்து பார்ப்பதுண்டா?
- பாக்யராஜ், கீழ்வேளூர்.
(RSF: பழச மறந்துட்டாரான்னு பாக்க பொடி வக்கிறத பாரு..)
பார்ப்பேன். நினைக்கும் சந்தர்ப்பத்தை அதைச் சார்ந்த மனிதர்கள் உருவாக்கித் தரும் நேரங்களில்.
(RSF: ஏன் இப்பிடி சொல்றாரு, ஒருவேள நெறைய அடி வாங்கியிருப்பாரோ?)
ஐ ஆம் பொதுஜனம் ஸ்பீகிங்.... 
15. என்.எஸ்.கே., சுருளிராஜன், சந்திரபாபு, நாகேஷ் ஆகியோரது காமெடிகளில் யாருடையதை ரசிப்பீர்கள்?
- கருப்பன், கரூர்.
எல்லாவற்றையும் ரசிப்பேன்.
(RSF: கிரேட் எஸ்கேப்)

16. நடிகர்கள் சூர்யா - ஆர்யா பற்றி இரண்டு வரிகளில்?
- புவனா, காரைக்குடி.
(RSF: ஏன் விஜய், அஜித், சிம்பு, தனுஷ் பத்தியெல்லாம் கேக்க மாட்டீங்களா?)
சூர்யா அண்ணன். ஆர்யா நண்பன்.
(RSF: நடிப்ப பத்தி கேட்டா வயசப்பத்தி சொல்லுது பாரு)

17. பட உலகில் ஒவ்வொரு காமெடி நடிகருக்கும் ஒரு கால கட்டம் இருக்கும். அது முடிந்ததும் காணமல் போய் விடுவார்கள். அப்படியில்லாமல் நெடு நாள் புகழோடு நீடித்து இருக்க ஏதேனும்  புதிய யுக்தி வைத்துள்ளீர்களா?
-சுப்பிரமணியன், ஆழியூர்
(RSF: என்னாது காணமால் போய் விடுவார்களா? ஒஹ் நீங்க அவர சொல்றீங்களா? ஆமா அவரு இப்ப எங்க இருக்காராம் சென்னைலயா இல்ல மதுரலயா)
ஆமா சார், புலியூர் பூசாரியிடம் மந்திரிச்சு தாயத்து கட்டியிருக்கேன்.... நீங்க வேற.... தலையில் இருக்கும் முடி, புகழ் இரண்டும் நிரந்தரமானதல்ல. இன்னொருவர் வந்தாலும் ரசிக்க காத்திருக்கேன்.
(RSF: நீங்க கவலபடாதீங்க பாஸ், கவுண்டர் எப்புடி இன்னைக்கும் மக்கள் மனசுல இருக்காரோ அதேமாதிரி நீங்களும் இருப்பீங்க)


கனவெல்லாம் தொலைநோக்கு பார்வையோட இருக்கனும்ன்னு சிம்போலிக்கா சொல்லறாரு போல.   
18. நீங்கள் அடிக்கடி காணும் லட்சிய கனவு எது?
-கார்த்திக், காரைக்கால்.
(RSF: பெருசா என்ன, அடுத்த CM, முடிஞ்சா பிரதமர் அப்புடியே ஜனாதிபதி அதுதானே?)
தூக்கமே இல்லாதபோது கனவு எப்புடி வரும்?
(RSF: அதுதான் ஒரு நாளைக்கு அஞ்சு பத்து லட்சம்னு கொட்டி குடுக்குறாங்களே அப்புறம் எதுக்கு பாஸ் கனவெல்லாம்)

19. பிடித்த அரசியல் தலைவர் யார்?
-மணிகண்டன், சன்னாநல்லூர்
(RSF: நாட்டுல ஒன்னு ரெண்டு தலைவர்களா இருக்காங்க? பட்டுன்னு பதில் சொல்ல)
நெல்சன் மண்டேலா.
(RSF: என்ன ஒரு சமயோசிதம், கூட நடிக்கற ஹீரோக்கள் கோவிச்சுக்க கூடாதில்ல)

20. சிந்திக்க வைக்கும் காமெடி, சிரிக்க வைக்கும் காமடி. எது பெஸ்ட்?
-ஜாக்கி, நெய்வேலி.
(RSF: நீங்கதான்யா டிசைட் பண்ணனும்)
நிறைய பேரை சிரிக்க வைக்கணும். ஒரு சிலரை சிந்திக்க வைக்கணும். சிந்திக்க வைப்பதை விட சிரிக்க வைப்பதுதான் கஷ்டம்.
(RSF:  கேப்பு கெடக்கிறப்போவெல்லாம் ஆப்பு வக்கிறியே சந்தானம்)ஓகே, கெளம்பலாமா?
டிஸ்கி: யப்பா, இது வெறும் என்டேர்டைன்மென்ட்டுக்கு, அப்புறம் கோத்துவிடுறோம், கொலபண்ணுறோம்ன்னு சொன்னீங்க மூஞ்சில பூரா விட்டுருவோம் ஆமா.