ஒரு காமெடியான உண்மை என்னன்னா, எந்த ஒரு நடிகருக்கும் 50வது 100வது படங்கள் ரொம்ப முக்கியம். அதுலயும் மாஸ் ஹீரோன்னா சொல்லவே வேணாம். ரஜினி, கமலுக்கே சறுக்குனது இங்கதான். அடுத்தடுத்த வருடங்களில் சூர்யா, ஆர்யா, பூரியான்னு எல்லாருக்கும் 50வது படம் வரும். அவுங்க எல்லாத்துக்கும் நம்ம தலையும் தளபதியும் சேர்ந்து கிளாஸ் எடுத்து இருக்காங்க. ஆமாங்க ஒரு மாஸ் ஹீரோவின் 50வது படம் எப்புடி இருக்கனும், எப்புடி இருக்கவே கூடாது ரெண்டுக்கும் நம்ம தலையும் தளபதியுமே உதாரணங்கள் ஆகிட்டாங்க, முறையே.
பர்ஸ்ட்ல தலக்கும் வெங்கட் பிரபுக்கும் ஒரு நன்றிய தெரிவிச்சிகிறேன். ஏன்னா, படத்துல ஒரு சீன்!. வைபவ், பிரேம்ஜி, மஹாத் அப்புறம் அந்த SI போலீஸ் நாலு பேரும் சேர்ந்து 500 கோடிய அமுக்க ப்ளான் பண்றாங்க. அப்ப அந்த விசயத்த எப்புடியோ தெரிஞ்சிகிட்ட தல அந்த எடத்துக்கு வர்றாரு, என்ன நடக்குதுன்னு கேக்குறாரு. ஒவ்வொருத்தரும் ஏதேதோ பொய் சொல்றாங்க. அப்ப தல கேக்குறாரு பாருங்க ஒரு கேள்வி , மரண மாஸ் கேள்வி. தியேட்டர்ல எல்லாரும் விசிலடிச்சு கைதட்டுனாங்க. அப்புடி என்ன கேள்வின்னா;
காமெடி பண்றதுக்கு நா என்னா சந்தானமா?
ன்னு அதாவது இன்னிக்கு டேட்ல காமெடின்னா சந்தானம்தான்னு இவுங்களே ஒத்துகிட்டாங்க.அப்புறம் இன்னொரு சீன்ல மொக்க காமெடி பண்ற பிரேம்ஜிய சாம் அண்டர்சனுக்கு ஒப்பிடுறாங்க.இன்னொரு சீன், லட்சுமி ராய் தேடிவந்தது நா இல்ல அது சஞ்சய் ராமசாமின்னு சொல்லி சூர்யாவையும் அஜித் கலாய்கிறாரு. படத்துல விஜயும் இருக்காரு. ஆமா பொதுவா தமிழ் சினிமால்ல எதாவது தியேட்டர் காட்சி இருந்தா ஒன்னு எம்.ஜி.ஆர் இல்ல சூப்பர் ஸ்டார் படம்தான் ஓடும. ஆனா இதுல வர்ற தியேட்டர் காட்சில காவலன் படத்தின் "மண்ணை காப்பான் " பாட்டு ஓடுது. இன்னொரு சீன்ல தண்ணி அடிச்சிட்டு ஆடும்போது எல்லாரும் எதோ ஒரு பாட்ட பாடிகிட்டு இருக்குறாங்க, திடீர்ன்னு தல "ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் எனக்கு ஒரு கவலை இல்ல" ன்னு படிக்கிறாரு, எல்லாரும் கேக்குறாங்க இப்ப ஏன் இந்த பாட்ட படிச்சீங்கன்னு , அதுக்கு தல " அது என்னமோ தெரியல மப்பாகும்போது இசைஞானி பாட்டுதான் கிக்கா இருக்கு"ன்னு சொல்றாரு. இன்னொரு சீன்ல அஜித் நா ஒரு பன்ச் டயலாக சொல்லவான்னு கேட்டுட்டு ஒரு டயலாக விடுறாரு ஆனா என்ன சொல்றாருன்னா " லைட்ட போட்டுட்டு வண்டி ஓட்டலாம் ஆனா லைட்டா போட்டுட்டு வண்டி ஒட்ட கூடாது, டைட்டா போட்டுட்டுத்தான் வண்டி ஓட்டனும்" ன்னு ஒரு மொக்க பன்ச் டயலாக். ஆக மொத்ததுல சந்தானம், தமிழ்படம் சிவா ரேஞ்சுக்கு எறங்கி அதகளம் பண்ணி இருக்காரு தல.
என்னடா ஒரு ஆக்ஷன் படத்த போயி இவனுங்க காமெடி படம் ரேஞ்சுக்கு சொல்றாங்கன்னு நெனைக்கிறீங்களா? இல்லீங்க படத்துல அஜித்தும் ஆக்ஷன் கிங் அர்ஜுனும் இருக்காங்கன்னு உங்களுக்கு தெரியும், சோ ஆக்சன் சீகுவன்ஸ் நல்லா இருக்குன்னு சொல்றது சூரியனுக்கே டார்ச் அடிக்கிற மாதிரிங்க. அதுதான் எப்பவுமே அஜித்க்கு ஒரு வீக் பாயிண்டா இருக்குற காமெடிலயும், துள்ளல் கலந்த உற்சாகமான நடிப்புலையும் இந்த வாட்டி வெங்கட் பிரபு புண்ணியத்துல பூந்து வெளயாடி இருக்காருன்னு சொல்றோம்.
- தலையோட அம்பது பட கேரியர்ல இதுலதான் சும்மா அடிச்சி ஆடி இருக்காருன்னு சொல்லலாம். இது வரைக்கும் இப்புடி ஒரு பிரஷ் தலய நான் பார்த்ததே இல்ல. அக்ஷன், காமெடி, வில்லத்தனம் , (டுபாக்கூர்) ரொமான்ஸ், குள்ளநரித்தனம், நட்புன்னு எல்லா ஏரியாலயும் ஈஸியா பாஸ் மார்க் வாங்கிட்டாரு சொல்றத விட டிச்டின்க்ஷன்ல பர்ஸ்ட் கிளாஸ் எடுத்துட்டாருன்னே சொல்லலாம். 40 வயசு சஸ்பென்ட் ஆர்டர் வாங்குன போலீஸ்க்கு ஓரளவுக்கு பெப்பர் அண்ட் சால்ட் முடிதான் இருக்கும், லேசா தொப்பையும் இருக்கும். சோ இது எல்லாம் ஒரு குறையா சொல்லி விமர்சனம் எழுதுறவுங்கள நெனைச்சாதான் எங்களுக்கு பாவமா இருக்கு.
- தலையோட ஒப்பிடும்போது அர்ஜூன்க்கு screen presence கொஞ்சம் கம்மிதான்னாலும், வர்ற ஒவ்வொரு சீன்லையும் இவரு தான் ஒரு ரியல் அக்சன் கிங்ன்னு நிருபிக்கிறாரு. க்ளைமாக்ஸ்ல நீ பெரியனா, நா பெரியவனாங்கிற கேள்விக்கு செமையா ஒரு பதில் சொல்லி இருக்காரு வெங்கட் பிரபு.
- அப்புறம் திரிஷா: இந்த படத்துல அஜித்துக்கு ஜோடி நீங்கதான், ஆனா காட்சிகளும், முக்கியத்துவமும் கம்மின்னு சொல்லியே புக் பண்ணி இருப்பாரு போல வெங்கட் பிரபு. திரிஷாக்கு பெருசா ஒன்னும் இல்ல.
- வைபவ்,பிரேம்ஜி, மஹாத் அப்புறம் அந்த SI தம்பி, அரவிந்த் ஆகாஷ் .எல்லாருக்கும் அவுங்கவுங்களுக்கான முக்கியத்துவம் இருக்கு படத்துல. வைபவ், SI தம்பி, அரவிந்த் ஆகாஷ் போன்றோர் ஆக்சன்லயும் கலக்கி இருக்காங்க. பிரேம்ஜி கொஞ்சம் மொக்கதனமான காமெடின்னாலும் ஓரளவுக்கு சிரிக்க வைக்கிறாரு. அதுவும் அந்த எந்திரன் spoof கலக்கலா இருந்துச்சு, தியேட்டரே அதிருது.
- அடுத்ததா சொல்ல வேண்டியது நம்ம லக்ஷ்மி ராய். அக்காக்குதான் படத்துல நிறைய இருக்கு.கொஞ்சம் வில்லத்தனமான ரோல். மொத பாட்டு, கடைசி பாட்டு ரெண்டுமே இவுங்களுக்குதான். அவுங்களால முடிஞ்ச அளவுக்கு நல்லாவே காட்டி இருக்காங்க.
- அஞ்சலி-ஆண்ட்ரியா ரெண்டு பேருமே சும்மா பேருக்குதான். ரெண்டு பேருக்கும் ஒவ்வொரு பாட்டுன்னு சொல்லி நடிக்க வர சொல்லிட்டு ஒரே பாட்ட ரெண்டு பேருக்கும் பிரிச்சு குடுத்து சமாளிச்சிட்டாரு வெங்கட். ஆனா அஞ்சலிதான் அதுலயும் லீட்ல வர்றாங்க.
- அப்புறம் ஜெயபிரகாஷ் ஒரு அண்டர்பிளே ரோல்ல வர்றாரு. இன்னொரு ரொம்ப முக்கியமான ரோல்ல நம்ம பாஸ் என்கிறபாஸ்கரன் சரவணா அண்ணன் (அதாங்க பஞ்சு சுப்பு), கிட்டத்தட்ட படத்துல நடிச்ச ஆண் கேரக்டர்களிலேயே இவரு மட்டும்தான் நல்லவன்(ஐயய்யய்யூ முடிச்ச அவுத்துட்டோமா?)
- யுவன் மியூசிக் சுமார்தான். எதிர்பார்த்த அளவுக்கு இல்லன்னாலும் ஸ்பீட் பீட் பாட்டுகளில் தலயின் வெக்கம் கலந்த கூச்சத்துடனான ஆட்டம் ரசிக்க வைக்குது. வாடா பின்லேடா பாட்டுலயும் தெய்வதிருமகள் "விழிகளில்"பாட்ட விட கொஞ்சம் அசத்தலான CG அண்ட் ஒளிப்பதிவு. ஒளிபதிவுக்கு நம்ம சரவணனுக்கு தனியா ஒரு சல்யூட். இவரும் நம்ம பார்ட்டிதான்(பாஸ் என்கிற பாஸ்கரன்).
- அடுத்து வெங்கட் பிரபு. இவருக்கு இது ஒரு முக்கியமான மைல்கல்லுன்னே சொல்லலாம். அவரோட திரைகதை உத்திகள் சும்மா அசரடிக்குது. எல்லாருமே சொல்ற மாதிரி பர்ஸ்ட் ஹாப்f கொஞ்சம் தொய்வுதான். ஆனா எல்லா கேரக்டருமே முக்கியமான கேரக்டர்ஸ் என்பதால் அந்த அறிமுக படுத்தல் படலங்களுக்கு அவ்வளவு நேரம் தேவைதான்னு படுத்து.அப்புறம் செகண்ட் ஹாப்f லகொஞ்சம் கொஞ்சமா வேகம் எடுத்து கிளைமாக்ஸ்ல அவரு ஆடுற ஆட்டம் உங்காத்தா எங்காத்தா ஆட்டமில்ல, மங்காத்தாடான்னு ப்ரூவ் பண்ணுது. ஆனா இவருகிட்ட இருக்குற ஒரே கெட்ட பழக்கம் அவரு தம்பி பிரேம்ஜிக்கு கொஞ்சம் அதிகமாகவே எடம் குடுக்குராறு. அதையும் கம்மி பண்ணி இருந்தா இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பா இருந்துருக்கும்( இதுக்கு மேலயுமா? விறுவிறுப்புன்னு கேட்காதீங்க,சும்மானாச்சும் எல்லாரும் சொல்றாங்களேன்னு சொன்னேன்.)
ஆனா இவ்வளவு விஷயங்கள் இருந்தாலும் இது ஒரு 200% தல படம். வெங்கட் பிரபுவின் செமையான கோச்சிங்கில் தல அடித்த 200m சிக்ஸர்தான் மங்காத்தா.
அசல் படத்துல அஜித்த எல்லாருமே தல தலன்னு சொல்லும்போது கடுப்பா இருக்கும்.
ஆனா இந்த படத்துல "தல"ங்கிற வார்த்த டைமிங்கா இருக்கு. தியேட்டர்ல
அட்டகாசமான வரவேற்ப்பு. அப்புறம் நம்ம தலயே அர்ஜூன "என்னா சொல்றான்ஆக்சன் கிங்கு"ன்னு
பன்ச்சா கேக்கும்ம்போது தியேட்டர் ரெஸ்பான்ஸ் செம. இது எல்லாம் இந்த எடத்துல
இப்புடி ரெஸ்பான்ஸ் வரும்னு பிளான் பண்ணி வைக்கப்பட்ட காட்சி/வசன
அமைப்புக்கள்.
இந்த படம் முடிஞ்சாப்புறம், எழுத்தோட்டம் வரும்போது ஷூட்டிங் கலாட்டாகளை தொகுத்து போட்டு இருப்பாங்க. அத மிஸ் பண்ணிராதீங்க. முழு படத்த விட அஜித் செமத்தியா கலக்கி இருக்காரு. அதுலயும் அந்த ஹைதராபாத் போலீஸ் அகெடமில மார்ச்ல நின்னு ஒரு ஆட்டம் போடுவாரு பாருங்க., அம்மோ!!!
இந்த படம் முடிஞ்சாப்புறம், எழுத்தோட்டம் வரும்போது ஷூட்டிங் கலாட்டாகளை தொகுத்து போட்டு இருப்பாங்க. அத மிஸ் பண்ணிராதீங்க. முழு படத்த விட அஜித் செமத்தியா கலக்கி இருக்காரு. அதுலயும் அந்த ஹைதராபாத் போலீஸ் அகெடமில மார்ச்ல நின்னு ஒரு ஆட்டம் போடுவாரு பாருங்க., அம்மோ!!!
மங்காத்தா: மரண மாஸ். கண்டிப்பா 500 கோடிய அடிச்சிரும், வசூல்ல.
mankatha marana mass super maanam first half mass second half hehe
ReplyDeleteporuthar boomi alwar(thala alwar vendam sema flop)
sema sanjay ramasamki ytha mathiri iruku top comment :)
ReplyDeleteஅலசல் அருமை அசத்துக்குங்க நண்பா
ReplyDelete//ஒரு மாஸ் ஹீரோவின் 50வது படம் எப்புடி இருக்கனும், எப்புடி இருக்கவே கூடாது ரெண்டுக்கும் நம்ம தலையும் தளபதியுமே உதாரணங்கள் ஆகிட்டாங்க, முறையே.//
ReplyDeleteசூப்பரா சொன்னீங்க. மங்காத்தா டா..!
அசத்தலா இருக்கு! :-)
ReplyDeleteதிரிஷாக்கு பெருசா ஒன்னும் இல்ல.///அது "அன்னிக்கே" தெரிஞ்ச விஷயமாச்சே?
ReplyDeleteமாப்ள பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteவணக்கம் நண்பர்களே,
ReplyDeleteஉங்களை இன்றைய தினம் என் பதிவில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.
வணக்கம் பாஸ்
ReplyDeleteநல்ல அலசல் ... துணிய இல்லை .. மங்காத்தா படத்த ...
ReplyDeleteஎன்று என் வலையில்
ReplyDeleteவிஜய் vs அஜித் யார் புத்திசாலி?
ஹா..ஹா...செமையா கலாய்க்கிறீங்க பாஸ்,
ReplyDeleteஅதெப்படி பாஸ், லைட்டைப் போட்டிட்டு வண்டி ஓட்டலாம்,
லைட்டா போட்டிட்டு வண்டி ஓட்டலாமா?
அவ்..............
ஹா..ஹா...செமையா கலாய்க்கிறீங்க பாஸ்,..காமெடி பண்றதுக்கு நா என்னா சந்தானமா?..ஹா ஹா ..ஹா ..மங்காத்தா டா..!
ReplyDeleteமங்காத்தா தல தல தல..
ReplyDelete@பாசமுள்ள துருவி ஆமாங்க, தளபதி முளுச்சிகிட்டா நல்லம்.
ReplyDelete@ஜீ...
ReplyDeleteஅசத்தலா இருக்கு! :-)
என்ன ஜீ நீங்களும் டெம்ப்ளேட் பின்னூட்டமா?
@Yoga.s.FR
ReplyDelete//திரிஷாக்கு பெருசா ஒன்னும் இல்ல.///அது "அன்னிக்கே" தெரிஞ்ச விஷயமாச்சே?//
இதுல எதோ உள்குத்து இருக்கமாதிரி தெரியுதே!
@விக்கியுலகம்
ReplyDeleteமாமா, வரவுக்கு நன்றி...
@நிரூபன்
ReplyDeleteஅறிமுகத்துக்கு நன்றி. அண்ணே உங்களுக்கு நாங்க கடன் பட்டிருக்கம்.. அதுக்காக வட்டியோட செத்து திரும்ப கேக்க கூடாது.
@"என் ராஜபாட்டை"- ராஜா வணக்கம். நன்றி பாஸ், உங்க பதிவ படிச்சிட்டு சொல்றோம்..
ReplyDeleteReal Santhanam Fanz said.இதுல எதோ உள்குத்து இருக்க மாதிரி தெரியுதே!////அப்புடி "ஒண்ணுமே" இல்ல!
ReplyDeleteநன்றாகவே எழுதுகிறீர்கள்!ஆனாலும் ஒரு குறை:எழுத்துப் பிழைகள் அதிகமாக இருக்கின்றன.கவனித்து ஒன்றுக்கு இரண்டு தடவை சரி பாத்து பதிவேற்றவும்,கமெண்டுகளுக்கு நீங்கள் கொடுக்கும் பதிலிலும்!நிரூபனுக்கு நீங்கள் அளித்த பதிலைப் பாருங்கள்,புரியும்!தமிழில் ஓர் எழுத்து தவறினாலும் பொருளே மாறி விடும்!
ReplyDelete@Yoga.s.FR
ReplyDelete//நன்றாகவே எழுதுகிறீர்கள்!ஆனாலும் ஒரு குறை:எழுத்துப் பிழைகள் அதிகமாக இருக்கின்றன.கவனித்து ஒன்றுக்கு இரண்டு தடவை சரி பாத்து பதிவேற்றவும்,கமெண்டுகளுக்கு நீங்கள் கொடுக்கும் பதிலிலும்!நிரூபனுக்கு நீங்கள் அளித்த பதிலைப் பாருங்கள்,புரியும்!தமிழில் ஓர் எழுத்து தவறினாலும் பொருளே மாறி விடும்!//
அண்ணே, குறைகளை சுட்டிக்கடினதுக்கு நன்றி. இனிமே கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருக்கோம்.
போடா வெண்ண நீ மோதல சந்தானத்துக்கு ஓவரா ஜால்ரா அடிகுரத நிறுத்து, அப்புறமா நீ தல அஜித் பத்தி பேசலாம்.
ReplyDelete@சி.கிருபா கரன்
ReplyDeleteஅண்ணே மன்னிச்சிடுங்க, சந்தானம் ரசிகர்கள் தல சூப்பரா நடிச்சிருக்காருன்னு சொல்றது உலக மகா தப்பாண்ணே, தெரியாம போச்சே,
arumaiyaana vimarsama irukku vaalththukkal
ReplyDeleteஐம்பதாவது படம் எப்படி இருக்கனும்கறதுக்கு உதாரணம், 'தலையின் மங்காத்தா'. எப்படி இருக்கக்கூடாதுங்கறத்துக்கு உதாரணம், 'தளபதியின் சுறா'.
ReplyDelete//N.H.பிரசாத் said...
ReplyDeleteஐம்பதாவது படம் எப்படி இருக்கனும்கறதுக்கு உதாரணம், 'தலையின் மங்காத்தா'. எப்படி இருக்கக்கூடாதுங்கறத்துக்கு உதாரணம், 'தளபதியின் சுறா'.///
அதேதாங்க...
mangathada, thala mass da
ReplyDelete