இந்த பதிவுலக ரவுண்டப் - ஒரு அட்டகாசமான பதிவின் மூன்று பாகங்களை படிக்காதவர்களுக்கு இதைப் படிக்க கண்டிப்பாக அனுமதியில்லை.
கண்டிப்பாக பதிவர்களுக்கு மட்டும்: இது யார் மனதையும் காயப்படுத்துவதற்காக அல்ல.
சந்தானம் ரசிகர்களாக, ஒரு ரசிகர் மன்றமாக ஆரம்பித்து பதிவர்களாக மாறி நிற்கும் ஒரு பயணத்தில் நமது அனுபவத்தினை கடந்த மூன்று பதிவுகளில் கூறியிருந்தோம். ஒரு பதிவர் என்கிற வகையில் சினிமாவினையும் தாண்டி பல பொறுப்புகள் இருப்பதாக உணர்ந்தமையே எங்களை முழு பதிவர்களாக மாற்றியது. ஒரு பதிவரின் பதிவு மற்றும் அவர் இடும் பின்னூட்டங்கள் பதிவை மட்டுமல்ல பதிவரையும், அவரது ஆற்றல், ஆளுமை போன்றவற்றையும் புரியவைக்கிறது, தமது பதிவுகளுக்கும், பின்னூட்டங்களுக்கும் தாமே பொறுப்புதாரி என்பதனையே நமது இரண்டாம் மற்றும் மூன்றாம் பகுதிகளில் சொல்ல முயற்சித்திருந்தோம். எமது பதிவுலக அனுபவம் மிகச்சிறிதே. அதனால் எமது கருத்துக்கள் ஒரு பதிவரின் கருத்துக்களாக அல்லாது ஒரு வாசகன் கருத்துக்களாகவே எதிரொலிக்கிறது.
ஒருவர் தனது அனுபவத்தை, எண்ண ஓட்டத்தை, எதிரொலியை, கருத்துக்களை கூறும், பகிர்ந்து கொள்ளும் ஓரிடமாகவே பதிவுலகத்தை பார்த்து வந்தோம். அங்கு பதிவருக்கும் வாசகருக்கும் பூரண சுதந்திரம் இருந்தமையே எங்களை கவர்ந்தது. பதிவர் எதனை பகிர்வது என்பதனை தீர்மானிக்கிறார், வாசகர் எதனை படிப்பது என்பதனை தீர்மானிக்கிறார். இதுவே பதிவுலகம் தொடர்பான எமது புரிந்துகொள்ளல். பின்னூட்டங்கள் அல்லது கருத்துரைகள் என்பது ஒரு ஆரோக்கியமான விவாதத்தை அல்லது கலந்துரையாடலை நிகழ்த்தும் ஒரு களமாகவே கருதி வந்தோம். ஆரோக்கியமான கருத்து பரிமாறல்களும், கருத்து சுதந்திரமுமே பதிவுலகத்தின் அடி நாதமாக தோன்றியது.
கடந்த சில வாரங்களாக பல வலைப்பூக்களை படிக்கும்போது ஒரு சந்தேகம் எழுகிறது, பதிவுகள் யாருக்காக எழுதப்படுகிறது? பரந்துபட்ட வாசகர்களுக்காகவா இல்லை சக பதிவர்களுக்காகவா? சில வாரங்களிற்கு முன்பு வரை தமிழ்மணம் பற்றி அறிந்திருக்கவில்லை, அது ஒரு திரட்டி என்கிற அபிப்பிராயமே இருந்தது, இந்த வாரம் அது ஒரு திரட்டி என்பதையும் தாண்டி அது ஒரு அரசியல் என்பதை புரிந்து கொண்டோம். அரசியல் என்று வந்ததுமே, குழாயடி சண்டைகள் சகஜம் தானே, பதிவுலகம் மட்டும் என்ன விதி விலக்கா? இதற்க்கு முதல் முக்கிய காரணம் இந்த நம்பர் போட்டி.
ஹிட்ஸ் அடிப்படையாக வைத்து நடத்தப்படும் இந்த போட்டியே பல மனக்கசப்புகளுக்கும், உள்கட்சி வெளிக்காட்சி அரசியலுக்கும், உள்குத்து வெளிக்குத்து பதிவுகளுக்கும் காரணாமாய் அமைகிறது. இதனால் சுய கருத்துக்களை நேரிடையாக கூறமுடியாது, ஹிட்ஸ் பாதிக்கப்படுமோ என்கிற அச்சம் தோன்றுகிறது. பதிவரின் முதல் சுதந்திரம் அங்கேயே பறிக்கப்படுகிறது. இது சாதாரண ஒரு சினிமா விமர்சனத்தில் கூட கைவைக்கும் அளவுக்கு வந்துவிடும். எந்த நடிகர் அல்லது இயக்குனர் சார்ந்த வாசகர்கள் நமக்கு வருகிறார்கள் என்று பார்த்து அவர்களை திருப்திப்படுத்தும் வண்ணமே நமது விமர்சனத்தை அமைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம். அரசியலாக இருக்கட்டும், விளையாட்டாக இருக்கட்டும், நாட்டு நடப்பாக இருக்கட்டும், இது நாம் இடும் எல்லா பதிவுகளுக்கும் பொருந்திப்போகிறது. காலப்போக்கில் இந்த ஹிட்ஸ் அடிப்படையாக வைத்து பதிவு எழுதுவது மூலம் நமது பதிவின் தரம் பாதிக்கப்பட்டு விடுகிறது என்பதே நிஜம். ஓர் இரு ஆண்டுகள் கழித்து நமது பழைய இடுகைகளை மீட்டிப் பார்த்தால் அங்கு நாம் பெருமைப்படக்கூடிய இடுகைகள் எதனையும் காணமுடியாத நிலைமைதான் தோன்றும். இதுவே அடுத்த பிரச்சினையை கிளருகிறது. ஒரு சிறந்த பதிவர் என்பவர் யார் என்கிற கருத்து வேறுபாடே அது.
ஒரு சிறந்த பதிவர் என்பவர், அரசியல் பதிவரோ, படைப்புகளை வழங்குபவரோ, சினிமா பதிவரோ அல்லது அதிக ஹிட்ஸ் வாங்குபவரோ அல்ல. ஒரு சிறந்த பதிவர் என்பவர் தனது கருத்துக்களை வாசகன் மீது திணிக்க நினைக்காது, கருத்தை கூறிவிட்டு தீர்மானிக்கும் உரிமையை வாசகனின் கையில் விடுபவரே. கூற வந்த கருத்துக்களை எந்த வகையிலும் கூறும் சுதந்திரம் பதிவருக்கு உண்டு, அது காத்திரமான பதிவாக இருக்கலாம் அல்லது மொக்கை பதிவாக இருக்கலாம் அல்லது காபி பேஸ்ட் பதிவாக இருக்கலாம். பதிவர் தனது சுய கருத்தை அதனூடு எவ்வாறு சொல்கிறார் என்பதும் வாசகனின் சிந்தனையை எவ்வாறு தூண்டுகிறார் என்பதுமே அவரது ஆளுமையை தீர்மானிக்கிறது. இதற்க்கு அண்மையில் நாம் கண்ட இரு உதாரங்களை கூறுகிறோம் கேளுங்கள்.
ஒரு பேட்டியில் சேரனிடம் முரண் ஆங்கிலப்படத்தின் தழுவல் என்கிறார்களே என்கிற கேள்விக்கு, பதிலுடன் ஒரு ஜோக் போடப்பட்டிருந்தது
"அந்தப்பெண்ணை கையைபுடிச்சு இழுத்தியா?"
"அப்டி சொல்ல முடியாது, இங்கே வான்னு கூப்டப்ப லேசா கை பட்டிருக்கலாம்"
இந்த ஜோக், சிரிப்பவர்களுக்கு சிரிப்பு மட்டும், சிந்திப்பவர்களுக்கு எத்தனையோ கருத்துக்களை ரெண்டே வரியில் கூறுகிறது, நாம் போட இருந்த ஒரு முளுப்பதிவே இந்த இரு வரிகளுக்குள் அடங்கிவிட்டது. அது அந்த பதிவரின் ஆளுமையை எடுத்துக்காட்டுகிறது.
இன்னுமொரு கில்மா பதிவில் இப்படி ஒரு வாசகம்
"அதுக என்னைய கவனிக்கவே இல்லை! ஏன், வேற யாருமே அதுகளப் பார்க்கவே இல்லை! அவன் அவன் தன்னோட வேலைல ரொம்ப பிசியா இருந்தான்! இங்க இம்புட்டு அக்கப்போர் நடந்துக்கிட்டு இருக்கு, பக்கத்துல ஒருத்தன் புக்கு படிச்சுட்டு இருந்தான்!"
இது மேலைத்தேய மக்களின் அடுத்தவர் அந்தரங்கத்துள் புகாது இருக்கும் நாகரீகத்தையும், நமக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டையும் பிரதிபலிக்கிறது. வாசகர்களின் சிந்தனையை இப்படியும் தூண்டலாம் என்பதற்கு இந்த வரிகள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சோனா-சரண் விவகாரம் தொடர்பான நமது ஆதங்கத்தின் சுருக்கமாக அமைகிறது.
இவற்றை புரிந்துகொள்ள பதிவர்கள் பற்றிய புரிதல் அவசியமாகிறது. அதனை உருவாக்கும் கடமை உரிய பதிவர்களுக்கு மாத்திரமே இருக்கிறது. பதிவுகளுக்கு நாம் வைக்கும் தலைப்பில் இருந்து நமது பதிவுகளுக்கு வரும் கருத்துரைகளுக்கு நாம் இடும் பதில்கள், சக பதிவர்களின் தளங்களில் நாம் கூறும் கருத்துக்கள் வரை ஒரு வாசகனுக்கு பதிவரைப் பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்துவதற்கு கருவிகளாய் அமைகிறன, அப்புரிதல் நிச்சயம் நமது பதிவுகளையும் அதில் கூற விளையும் கருத்துக்களையும் வாசகன் புரிந்து கொள்ள அடிப்படையாக இருக்கிறது. இப்புரிதலை உரிய பதிவர் தோற்றுவிக்க வேண்டுமே தவிர, இன்னொருவர் அந்த பதிவரை பற்றி தனது புரிதலை தனது வாசகர் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ திணிப்பது ஒரு சர்வாதிகாரம். கடந்த சில நாட்களாக இதுவே நடந்து வருவது ஒரு கவலைக்குரிய விடயம்.
ஒரு பதிவர் தான் என்ன பதிவு போடுவது என்பதை அவரேதான் தீர்மானிக்கவேண்டும். நீ இந்த பதிவு போடாதே, அந்த பதிவு போடாதேன்னு சொல்லும் உரிமை நமக்கு இல்லை. அவர் போடும் பதிவுகளை வாசிப்பதும் வாசிக்காது போவதும் மட்டும்தான் நமது உரிமை. அவரவர் பதிவுகளுக்கு அவரவரே பொறுப்புதாரி. அந்த வகையில் இந்த நம்பர் போட்டியில் மூழ்கி நமது திறமையை வீணடிக்காது நல்ல பதிவுகள் போடுவதில் கவனம் செலுத்தலாமே? இறுதியாக செங்கோவி அண்ணனின் ஒரு பதிவுக்கு நாங்கள் இட்ட பின்னூட்டத்துடன் நமது பதிவினை முடிக்கிறோம்
"என்னங்க இது யோக்கியம் அயோக்கியம் எல்லாம், ஒண்ணுமே புரியல, நாம எந்த வகையோ..பதிவுலகத்துல இம்புட்டு உள்கட்சி பூசல் இருக்குன்னு இப்பதான் தெரியுது. ஒருத்தன் அவன் விரும்புறத எழுதுறான், அவன போலவே இருக்கற நாலு பேரு அத படிக்கறான், இதுல நாலு பேரா நாலாயிரம் பேரான்னு சண்ட போட்டு யாருக்கு என்ன லாபம்? தீவிர பதிவர்களுக்கு வாசகர் கம்மின்னு சொல்றதெல்லாம் டூப்பு. ஒருத்தன் வெறுமனே நடிகைகள் படம் போட்டு ஹிட்டு ஆகிடமுடியாது, அப்பிடின்னா கூகிள் இமேஜ் சர்ச்சுக்கு மட்டும்தான் வாசகர்கள் இருப்பாங்க. மேல்மாடில மேட்டர் காலின்னா கடையில கூட்டமும் காலியாயிடும். தலைவர் சொல்லியிருக்காரு சிந்திக்க வக்கிறத விட சிரிக்க வக்கிறதுதான் கஷ்டம்னு, அப்பிடின்னா மொக்க பதிவு போடுறவங்களும் ரொம்ப கஷ்டப்பட்டுதான் குப்ப கொட்டுறாங்க. என்ன இருந்தாலும் நம்ம கடப்பக்கம் வாறத நிறுத்திடாதீங்க, அடிக்கடி வாங்க டீ காப்பி எல்லாம் நல்ல சூடா இருக்கும்.."
டிஸ்கி 0: முக்கியமான மேட்டர், இன்றைய பதிவுடன் இந்த பதிவுலக ரவுண்டப் முடிவுக்கு வருகிறது. இனிமேல் இது தொடராது என்பதை வருத்ததுடனும் அதே நேரம் மகிழ்ச்சியுடனும் தெரிவித்துக்கொள்கிறோம். வழமைபோல நம்மை கவர்ந்த, பிரமிக்க வைத்த பதிவர்களையும், பதிவுகளையும் நமதுபாணியில் தொகுப்போம். அது நேற்று ஆரம்பிக்கப்பட்ட "கும்பளிங் கும்பளிங்" பதிவின் ஒரு பகுதியாக வரும். கண்டிப்பாக அரசியல் கிடையாது.
டிஸ்கி 1: தமிழ்மணத்துக்கும் நமக்கும் ஏற்கனவே வாய்கால் தகராருங்க, நம்ம பதிவுகள் எதையும் அங்க இணைக்க முடியல. இந்த இன்ட்லியும் சூனியம் வச்சுட்டாங்க. இருந்தாலும் பல பெரிய மனுஷங்க ஏற்கனவே செஞ்சிட்டதால அவங்க பாணிலையே சொல்றோம். நமக்கு இந்த தமிழ்மணமே வேண்டாம்டா சாமி, நம்ம மானம் ஒன்னே போதும்.
டிஸ்கி 2: அப்புறம் படிச்சு பாத்தவங்க இதுல ஏதாச்சும் நல்லது இருக்குன்னு நினைச்சிங்கன்னா நாலு பேருகிட்ட சேத்துடுங்கப்பா புண்ணியமா போகும்.
ஆங்....என்னவோ சொல்ல வறீங்கன்னு மட்டும் புரியுது .ஆனா என்னான்னுதான் புரியல ....அவ்வ்வ்வ் :-)))
ReplyDeleteஜெய்லானி said...
ReplyDelete//ஆங்....என்னவோ சொல்ல வறீங்கன்னு மட்டும் புரியுது .ஆனா என்னான்னுதான் புரியல ....அவ்வ்வ்வ் :-)))//
சாதா தமிழ் தானே எழுதியிருக்கோம், அதுகூட தகராறு படுத்துதா?
அரசியல் இல்லாத இடமில்லை! நமக்கு பிடித்ததை படித்துவிட்டு, முடிந்ததை எழுதிவிட்டு போய்ட்டே இருக்க வேண்டியதுதான்........
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//அரசியல் இல்லாத இடமில்லை! நமக்கு பிடித்ததை படித்துவிட்டு, முடிந்ததை எழுதிவிட்டு போய்ட்டே இருக்க வேண்டியதுதான்........//
முழுசா ஒரு பதிவு போட்டு புலம்பினத அண்ணன் ஒரு வார்த்தையில முடிச்சிட்டு போய்டாரே...
இங்கே ஓட்டுக்கு ஓட்டு, கமெண்டுக்கு கமெண்ட்டு என்று எண்ணி வரும் பதிவர்களே அதிகம்..... ஆனால் நீங்கள் நாலு பேருக்கு ஓட்டும் கமெண்ட்டும் போடவில்லை என்றால் நீங்கள் ஒருவர் இருப்பதே மற்றவர்களுக்கு ஞாபகம் வராது. ஏனென்றால் இங்கு ஒரு பதிவர் சராசரியாக 30-50 பதிவுகளுக்காவது தினமும் சென்று வாக்குகளும், கமெண்ட்டும் போட வேண்டிய சூழல் இருக்கிறது.....
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//இங்கே ஓட்டுக்கு ஓட்டு, கமெண்டுக்கு கமெண்ட்டு என்று எண்ணி வரும் பதிவர்களே அதிகம்..... ஆனால் நீங்கள் நாலு பேருக்கு ஓட்டும் கமெண்ட்டும் போடவில்லை என்றால் நீங்கள் ஒருவர் இருப்பதே மற்றவர்களுக்கு ஞாபகம் வராது. ஏனென்றால் இங்கு ஒரு பதிவர் சராசரியாக 30-50 பதிவுகளுக்காவது தினமும் சென்று வாக்குகளும், கமெண்ட்டும் போட வேண்டிய சூழல் இருக்கிறது.....//
உண்மைதான், ஆனா அதுவே முழு நோக்கமும் ஆகிடக்கூடடாதே
கமெண்ட் வராட்டி யாரும் படிகக் வில்லைன்னு நினைக்க வேண்டாம் .நிறைய பேர் ரீடரில் படித்துவிட்டு போய்விடுவார்கள் .கிட்டதட்ட 200 பிளாக் ஃபாலோ செய்வதால் ஓட்டும் கமெண்டும் எல்லா இடங்களிலும் போடமுடிவதில்லை ((இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள் )):-)
ReplyDeleteஇன்னு சிலர் ஃபேஸ்புக் , கூகிள் பிளசில் படித்துவிட்டு போய்விடுவார்கள் .
உங்களுக்கு தோன்றுவதை எழுதுங்கள். :-)
//////Dr. Butti Paul said...
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
//இங்கே ஓட்டுக்கு ஓட்டு, கமெண்டுக்கு கமெண்ட்டு என்று எண்ணி வரும் பதிவர்களே அதிகம்..... ஆனால் நீங்கள் நாலு பேருக்கு ஓட்டும் கமெண்ட்டும் போடவில்லை என்றால் நீங்கள் ஒருவர் இருப்பதே மற்றவர்களுக்கு ஞாபகம் வராது. ஏனென்றால் இங்கு ஒரு பதிவர் சராசரியாக 30-50 பதிவுகளுக்காவது தினமும் சென்று வாக்குகளும், கமெண்ட்டும் போட வேண்டிய சூழல் இருக்கிறது.....//
உண்மைதான், ஆனா அதுவே முழு நோக்கமும் ஆகிடக்கூடடாதே//////
அதுக்குத்தான்..... என்னோட முதல் கமென்ட்டை பாருங்க...
ஜெய்லானி said...
ReplyDelete//கமெண்ட் வராட்டி யாரும் படிகக் வில்லைன்னு நினைக்க வேண்டாம் .நிறைய பேர் ரீடரில் படித்துவிட்டு போய்விடுவார்கள் .கிட்டதட்ட 200 பிளாக் ஃபாலோ செய்வதால் ஓட்டும் கமெண்டும் எல்லா இடங்களிலும் போடமுடிவதில்லை ((இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள் )):-)
இன்னு சிலர் ஃபேஸ்புக் , கூகிள் பிளசில் படித்துவிட்டு போய்விடுவார்கள் .
உங்களுக்கு தோன்றுவதை எழுதுங்கள். :-)//
இதேதான் எல்லாரோட நிலையும்.... அப்புறம் எதுக்கு இந்த சண்டன்னுதான் புரியல... நாம எழுதுனது ஒருத்தருக்கு புடிச்சிருந்தா நிச்சயமா ஓட்டும் கமெண்டும் போடத்தான் செய்வாங்க, ஆனா அதுக்காகவே எழுத்தலாமா?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////Dr. Butti Paul said...
உண்மைதான், ஆனா அதுவே முழு நோக்கமும் ஆகிடக்கூடடாதே//////
அதுக்குத்தான்..... என்னோட முதல் கமென்ட்டை பாருங்க...///
நாம நம்ம வழில போகவேண்டியதுதான்,
ஒரு வாசகனின் மனநிலையில் இருந்து எழுதப்பட்ட பதிவு இது மிக நன்றாக இருக்கின்றது பல விடயங்களை அலசி இருக்கிறீங்க பாஸ் வாழ்த்துக்கள்..
ReplyDeleteGOOD!
ReplyDelete>>எந்த நடிகர் அல்லது இயக்குனர் சார்ந்த வாசகர்கள் நமக்கு வருகிறார்கள் என்று பார்த்து அவர்களை திருப்திப்படுத்தும் வண்ணமே நமது விமர்சனத்தை அமைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம்.
ReplyDeletehaa haa ஹா ஹா விஜய், அஜித் படங்களூக்கு விமர்சனம் எழுதும்போது எனக்கும் இந்த பிரச்ச்னை வந்தது.. ஆனால் நான் நடு நிலை தவற வில்லை.. மங்காத்தாவை எல்லோரும் ஆஹா ஓஹோ என்றார்கள், நான் ஆவரேஜ் என்று சொன்னதால் எனது ஃபாலோயர்ஸ் 18 பேர் அன்ஃபாலோ.. நான் கவலைப்படவில்லை... விஜய் காமெடி கும்மிய போது பல ஆபாச ஃபோன் மிரட்டல்கள் வந்தன, காவலன் விமர்சனத்தில் அந்த கோபத்தை நான் காட்டவே இல்லை
தமிழ்மனம் டாப் 20 யில் வந்தால் பெரிய சாதனை என்று பலர் நினைக்கிறார்கள். 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை அதனால்..
ReplyDeleteஹா ஹா ஹா ஹா சொம்பு பலமா நசுங்கிரிச்சோ...
ReplyDeleteK.s.s.Rajh said...
ReplyDelete//ஒரு வாசகனின் மனநிலையில் இருந்து எழுதப்பட்ட பதிவு இது மிக நன்றாக இருக்கின்றது பல விடயங்களை அலசி இருக்கிறீங்க பாஸ் வாழ்த்துக்கள்..//
நன்றி பாஸ். எத்தின நாளக்கிதான் வதிவர்கள குரிவச்சே பதிவு போடுவாங்க, அதுதான் சின்னதா டென்சன் ஆகிட்டோம்.
செங்கோவி said...
ReplyDelete//GOOD!//
அண்ணன் என்ன ஒருசொல் கமென்ட் போட்டிருக்காரு, அதுவும் இங்கிலீசுல?
Dr. Butti Paul said...
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said...
//haa haa ஹா ஹா விஜய், அஜித் படங்களூக்கு விமர்சனம் எழுதும்போது எனக்கும் இந்த பிரச்ச்னை வந்தது.. ஆனால் நான் நடு நிலை தவற வில்லை.. மங்காத்தாவை எல்லோரும் ஆஹா ஓஹோ என்றார்கள், நான் ஆவரேஜ் என்று சொன்னதால் எனது ஃபாலோயர்ஸ் 18 பேர் அன்ஃபாலோ.. நான் கவலைப்படவில்லை... விஜய் காமெடி கும்மிய போது பல ஆபாச ஃபோன் மிரட்டல்கள் வந்தன, காவலன் விமர்சனத்தில் அந்த கோபத்தை நான் காட்டவே இல்லை//
அவுங்கள திருப்பித்திப்படுத்த பதிவு எழுதனும்னா நாம எதுக்கு ப்ளாக் நடத்தணும், அவுங்களே நடத்திக்கலாமே, யாரு தடுத்தா?
//மங்காத்தாவை எல்லோரும் ஆஹா ஓஹோ என்றார்கள், நான் ஆவரேஜ் என்று சொன்னதால் எனது ஃபாலோயர்ஸ் 18 பேர் அன்ஃபாலோ.. //
இது என்ன சார் பெரிய விஷயம், நம்ம ப்ளாகுக்கு உள்ளேயே ரெண்டு விமர்சனம் போடுற அளவுக்கு சண்ட வந்திச்சே...
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete//தமிழ்மனம் டாப் 20 யில் வந்தால் பெரிய சாதனை என்று பலர் நினைக்கிறார்கள். 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை அதனால்..//
அதானே...
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete//ஹா ஹா ஹா ஹா சொம்பு பலமா நசுங்கிரிச்சோ...//
யாரு செம்பு சார்???
மாப்ள கலக்கலான அலசல் நன்றி!
ReplyDeleteவிக்கியுலகம் said...
ReplyDelete//மாப்ள கலக்கலான அலசல் நன்றி!//
நன்றி மாம்ஸ்..
பதிவுலகை ரொம்ப நல்லாவே புரிஞ்சு வச்சிருகிங்க....
ReplyDeleteதமிழ்வாசி - Prakash said...
ReplyDelete//பதிவுலகை ரொம்ப நல்லாவே புரிஞ்சு வச்சிருகிங்க....//
நன்றி தமிழ்வாசி, புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம், அவ்வளவுதான்.
வணக்கம் அண்ணன்களா..
ReplyDeleteநலமா..
காத்திரமான பதிவுலகிற்கு எத்தகைய பதிவுகள் அவசியம் என்பதனை அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.
எனக்கும் இந்த டாப் 20 ஆசையெல்லாம் இல்லைங்க. அதனால் தான் இன்று வரை எவ் வலைக்கு ட்ரேங் ஏதும் இல்லாமல் எனக்கு எப்போது டைம் கிடைக்குதோ அப்போதெல்லாம் பதிவு போட்டு வாரேன்.
நல்ல பதிவு பாஸ்...
////இந்த ஜோக், சிரிப்பவர்களுக்கு சிரிப்பு மட்டும், சிந்திப்பவர்களுக்கு எத்தனையோ கருத்துக்களை ரெண்டே வரியில் கூறுகிறது////
ReplyDeleteஅடடா இதைத் தான் தசாவதாரம் தொடக்க பாடலில் சொன்னாங்களோ..
(கல்லை மட்டும் கண்டால்)
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
7 ம் அறிவு பாடலில் ஹரிஷ் ஜெயராஜ் அரைத்தமாவும், சுட்ட வடையும்
சரியா சொல்லியிருக்கீங்க...நண்பரே..
ReplyDeleteபின்குறிப்பு:
இப்படி சொல்லியே இது மாதிரி நிறைய பதிவு வருவதைப்பற்றி உங்கள் கருத்து என்ன...?
அதான் முற்றும் போட்டுட்டனே மடயான்னு சொல்றது கேட்குது...-:)
//Dr. Butti Paul said...
ReplyDeleteசெங்கோவி said...
//GOOD!//
அண்ணன் என்ன ஒருசொல் கமென்ட் போட்டிருக்காரு, அதுவும் இங்கிலீசுல?//
ஹி..ஹி..ஆஃபீஸ்ல இருந்தேன்...
மேலும், எனக்கு அரசியல்னா அலர்ஜி. அதான்.
வந்த கொஞ்சநாள்லயே ஞானம் அடைந்ததிற்கு வாழ்த்துகள்.
என் ப்ளாக் சப் டைட்டில்(ஆமா ஹாலிவுட் படப் எடுத்துட்டாரு சப்-டைட்டிலாம்)
ReplyDeleteதோன்றத எழுதுவோம் பிடிக்கறத படிப்போம்'ங்கறரதுதான்!
என்னோட மூளைக்கு(?)எட்டியவரை பதிவுலகில் இருக்கற பெரும்பாலோனோர் எண்ணமும் இதுதான்னு நினைக்கிறேன்!
இதுல நேரம் இருக்கறவங்க கருத்து சொல்றாங்க ஒட்டு போடறாங்க!இல்லாதப்பட்டவங்க படிச்சுட்டு கமுக்கமா போயிடுறாங்க!
இதுல கமன்ட் வாங்கரதுக்காகவோ,ஒட்டு வாங்கி டாப்புக்கு போகனும்னு நினைசாலோ நீங்க சொன்ன மாதுரி ச்சே மாதிரி
" "ஓர் இரு ஆண்டுகள் கழித்து நமது பழைய இடுகைகளை மீட்டிப் பார்த்தால் அங்கு நாம் பெருமைப்படக்கூடிய இடுகைகள் எதனையும் காணமுடியாத நிலைமைதான் தோன்றும். ""
/////ஒரு சிறந்த பதிவர் என்பவர், அரசியல் பதிவரோ, படைப்புகளை வழங்குபவரோ, சினிமா பதிவரோ அல்லது அதிக ஹிட்ஸ் வாங்குபவரோ அல்ல. ஒரு சிறந்த பதிவர் என்பவர் தனது கருத்துக்களை வாசகன் மீது திணிக்க நினைக்காது, கருத்தை கூறிவிட்டு தீர்மானிக்கும் உரிமையை வாசகனின் கையில் விடுபவரே. /// சரியாக சொன்னீங்க தலைவா ... கருத்து திணிப்பும் வாசகர்களை குறைக்க வழிவகுக்கும்..
ReplyDeleteஉங்க பிளாக்கருக்கு முதல் வருகையை பதிவு செய்து கொள்கிறேன் ....
நிரூபன் said...
ReplyDelete//வணக்கம் அண்ணன்களா..
நலமா..
காத்திரமான பதிவுலகிற்கு எத்தகைய பதிவுகள் அவசியம் என்பதனை அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.
எனக்கும் இந்த டாப் 20 ஆசையெல்லாம் இல்லைங்க. அதனால் தான் இன்று வரை எவ் வலைக்கு ட்ரேங் ஏதும் இல்லாமல் எனக்கு எப்போது டைம் கிடைக்குதோ அப்போதெல்லாம் பதிவு போட்டு வாரேன்.
நல்ல பதிவு பாஸ்...//
காலையிலேயே வந்து ஓட்டு போட்டுட்டு கமெண்டு போடாம போன நிருபன் சாருக்கு கண்டனங்கள்.
♔ம.தி.சுதா♔ said...
ReplyDelete//அடடா இதைத் தான் தசாவதாரம் தொடக்க பாடலில் சொன்னாங்களோ..
(கல்லை மட்டும் கண்டால்)//
ஆமா சகோதரம், அத மறந்துட்டோம்னு சொல்லல, நினைவு வச்சிருந்தா நல்லாயிருக்குமேன்னு சொன்னோம்.
ரெவெரி said...
ReplyDelete//சரியா சொல்லியிருக்கீங்க...நண்பரே..
பின்குறிப்பு:
இப்படி சொல்லியே இது மாதிரி நிறைய பதிவு வருவதைப்பற்றி உங்கள் கருத்து என்ன...?
அதான் முற்றும் போட்டுட்டனே மடயான்னு சொல்றது கேட்குது...-:)//
இனிமே இந்த அரசியலே வேணாம்டா சாமி...
செங்கோவி said...
ReplyDelete//ஹி..ஹி..ஆஃபீஸ்ல இருந்தேன்...
மேலும், எனக்கு அரசியல்னா அலர்ஜி. அதான்.
வந்த கொஞ்சநாள்லயே ஞானம் அடைந்ததிற்கு வாழ்த்துகள்.//
நமக்கும்தான் சார், அதனாலதானே கலகலப்பா போயிருக்கவேண்டிய ஒரு பதிவுக்கே முற்றும் போட்டிருக்கோம்,
ஞானம் எல்லாம் அடையல, அடைய முயற்சிக்கறோம்
கோகுல் said...
ReplyDelete//என் ப்ளாக் சப் டைட்டில்(ஆமா ஹாலிவுட் படப் எடுத்துட்டாரு சப்-டைட்டிலாம்)
தோன்றத எழுதுவோம் பிடிக்கறத படிப்போம்'ங்கறரதுதான்!
என்னோட மூளைக்கு(?)எட்டியவரை பதிவுலகில் இருக்கற பெரும்பாலோனோர் எண்ணமும் இதுதான்னு நினைக்கிறேன்!
இதுல நேரம் இருக்கறவங்க கருத்து சொல்றாங்க ஒட்டு போடறாங்க!இல்லாதப்பட்டவங்க படிச்சுட்டு கமுக்கமா போயிடுறாங்க!
இதுல கமன்ட் வாங்கரதுக்காகவோ,ஒட்டு வாங்கி டாப்புக்கு போகனும்னு நினைசாலோ நீங்க சொன்ன மாதுரி ச்சே மாதிரி
" "ஓர் இரு ஆண்டுகள் கழித்து நமது பழைய இடுகைகளை மீட்டிப் பார்த்தால் அங்கு நாம் பெருமைப்படக்கூடிய இடுகைகள் எதனையும் காணமுடியாத நிலைமைதான் தோன்றும். ""//
உங்க சப் டைட்டில் அருமை, கடனா கெடைக்குமா?
கந்தசாமி. said...
ReplyDelete/////ஒரு சிறந்த பதிவர் என்பவர், அரசியல் பதிவரோ, படைப்புகளை வழங்குபவரோ, சினிமா பதிவரோ அல்லது அதிக ஹிட்ஸ் வாங்குபவரோ அல்ல. ஒரு சிறந்த பதிவர் என்பவர் தனது கருத்துக்களை வாசகன் மீது திணிக்க நினைக்காது, கருத்தை கூறிவிட்டு தீர்மானிக்கும் உரிமையை வாசகனின் கையில் விடுபவரே. /// சரியாக சொன்னீங்க தலைவா ... கருத்து திணிப்பும் வாசகர்களை குறைக்க வழிவகுக்கும்..
உங்க பிளாக்கருக்கு முதல் வருகையை பதிவு செய்து கொள்கிறேன் ....////
நன்றி தலைவா, நாங்களும் பதிவு செய்துகிட்டோம்..
தமிழ் மணத்தில் இவ்வளவு அரசியலா உங்க அரசியல் எல்லாம் எனக்கு புரியல. .
ReplyDeleteஆனா நீங்க சொன்ன விஷயம் பிடிச்சு இருக்கு
ReplyDelete///kobiraj said...
ReplyDeleteதமிழ் மணத்தில் இவ்வளவு அரசியலா உங்க அரசியல் எல்லாம் எனக்கு புரியல. .///
ஐயே நாங்க எங்கங்க அரசியல் பண்ணோம்... எங்க கறுத்த சொன்னோம் அவ்வளவுதான்...
//ஆனா நீங்க சொன்ன விஷயம் பிடிச்சு இருக்கு///
நன்றிங்க!!
யோவ் என்னய்யா ஒரு இன்டரஸ்டிங் தலைப்பை பார்த்துட்டு உள்ள வந்தா பதிவைக் காணோம்...
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!
ReplyDeleteஎன்னுடைய பதிவொன்றிலிருந்து, சில வாக்கியங்களை மேற்கோள் காட்டியமைக்கு நன்றி!
மிக அழகாக அலசப்பட்டுள்ள பதிவு!வாழ்த்துக்கள்!
Philosophy Prabhakaran said...
ReplyDelete//யோவ் என்னய்யா ஒரு இன்டரஸ்டிங் தலைப்பை பார்த்துட்டு உள்ள வந்தா பதிவைக் காணோம்...//
சாரி சார், அது ஒரு டெக்னிகல் ப்ராப்லம் ஆகிடிச்சு.. பதிவு எப்புடியும் இன்னிக்கி ரிலீஸ் ஆகிடும். ஆனா வேற தலைப்பு..
Powder Star - Dr. ஐடியாமணி said...
ReplyDelete//வணக்கம் நண்பர்களே!
என்னுடைய பதிவொன்றிலிருந்து, சில வாக்கியங்களை மேற்கோள் காட்டியமைக்கு நன்றி!
மிக அழகாக அலசப்பட்டுள்ள பதிவு!வாழ்த்துக்கள்!//
நன்றி சார்.. சாதாரண பதிவா அது... பின்னிட்டீங்க சார்...
//ஒரு சிறந்த பதிவர் என்பவர் தனது கருத்துக்களை வாசகன் மீது திணிக்க நினைக்காது, கருத்தை கூறிவிட்டு தீர்மானிக்கும் உரிமையை வாசகனின் கையில் விடுபவரே//
ReplyDeleteசரியான கூற்று
இப்படி எழுதுனா தான் ஹிட்ஸ் வரும் அப்படிங்குற மனநிலைய விட்டுட்டு நம்மை திருப்திபடுத்தும்படியான பதிவுகளை எழுதுனா ரொம்ப காலம் கழிச்சு வந்து பார்த்தாலும் மனநிறைவா இருக்கும்
பதிவுலகை நல்லா புரிஞ்சு வச்சுருக்கீங்க
வாழ்த்துக்கள்
மென்மேலும் வளர்க
ஆமினா said...
ReplyDelete//ஒரு சிறந்த பதிவர் என்பவர் தனது கருத்துக்களை வாசகன் மீது திணிக்க நினைக்காது, கருத்தை கூறிவிட்டு தீர்மானிக்கும் உரிமையை வாசகனின் கையில் விடுபவரே//
சரியான கூற்று
இப்படி எழுதுனா தான் ஹிட்ஸ் வரும் அப்படிங்குற மனநிலைய விட்டுட்டு நம்மை திருப்திபடுத்தும்படியான பதிவுகளை எழுதுனா ரொம்ப காலம் கழிச்சு வந்து பார்த்தாலும் மனநிறைவா இருக்கும்
பதிவுலகை நல்லா புரிஞ்சு வச்சுருக்கீங்க
வாழ்த்துக்கள்
மென்மேலும் வளர்க///
வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ.. புரிஞ்சு வச்சிக்கிட்டதெல்லாம் ஒன்னும் கெடயாது. புரிஞ்சுக்க ட்ரை பண்ணினோம், நமக்கு எதுக்கு வேண்டாத வேலையின்னு ஒதிங்கிக்கிட்டோம்.. அம்புட்டுதான்.