Saturday, September 24, 2011

ஏழாம் அறிவு - பாடல்கள் ஒரு பார்வை

டிஸ்கி 0: எல்லாம் இசை விமர்சனம்தானே பண்ணுவாங்க, இது என்ன தலைப்பே படு மொக்கையா இருக்கேன்னு யோசிக்காதீங்க, இசை விமர்சனம் பண்ணற அளவுக்கு எங்களுக்கு ஞானம் கெடயாதுங்க, அதனாலதான் பாடல்கள் ஒரு  பார்வை. 

இவரு என்னத்த பாக்குறாரு?
ஏழாம் அறிவு பாடல்கள் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியாகியது. "கோ"வுக்கப்புறம் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் வரும் பாடல்கள் என்பதாலும், பலத்த எதிர்பார்ப்புள்ள படம் ஆதலாலும், இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு எமக்கு அழைப்பிதழ் வராதபோதிலும் நாங்க அது பத்தி பதிவு எழுதறோம் (ஆமா இவுங்க பெரிய டோகாமா கம்பெனி ஓனர்ஸ், இவுங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்போறாங்க)

"கோ"வுக்கு அப்புறமா ரொம்ப எதிர்பார்த்த பாடல்கள் வானம், தெய்வதிருமகள், மங்காத்தா, வேலாயுதம் (இது இன்னும் கேக்கலீங்க ஏன்னா அந்த அளவுக்கு இன்னும் மனசுல தைரியம் வரல) எல்லாமே சற்று ஏமாற்றாமாதான் முடிஞ்சது, (ஒன்னு ரெண்டு பாடல்கள் ரசிக்கவைத்தாலும் விண்ணை தாண்டி வருவாயா, கோ(?) போன்று அனைத்து பாடல்களும் தாளம்போட வைக்கும் வகை இல்லை). ஆரம்பிக்க முதல்லையே சொல்லிடறேங்க, இதுவும் அதே நிலைமைதான். ஒரு வேள கஜினி எபெக்டா இருக்குமோ, ஓவரா எதிர்பார்த்து ஏமாந்துட்டோமோ?  

இம்புட்டு சந்தோசப்படுற மாதிரி பாட்டு இல்லியே
எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும் இதுல ஆறு பாடல்கள் இருக்கு. அவை பற்றிய ஒரு சிறு குறிப்புடன் விமர்சனம். 

1. ரிங்கா ரிங்கா : இது ஹீரோ அறிமுகப்பாடலாம், தாம் தூம், கோ எபக்ட்ல இருக்கு பாட்டு. அயன் ஹனி ஹனி சாயலும் இருக்கு, அப்புடியே டாக்ஸி டாக்ஸி பாட்டையும் நினவு படுத்துது. (ஒரு வேள ஹிப் ஹப் அப்புடிங்குரதால இருக்குமோ?). பாடல் வரிகளில் பயன்படுத்தப்பட்டுள அய்லே, ஓய்லே போன்ற வார்த்தைகள் இன்னும் நெறைய பாடல்களையும் நினைவு படுத்தி தொலைக்குது.  ஆனா ஹீரோ பெரிய அப்பாடக்கர்ன்னு சொல்லும் இன்ட்ரோ பாடல்களின் மத்தியில் இது மாதிரி இன்ட்ரோ பாடல்கள் ஒரு சின்ன ஆறுதல். பாடல் படமாக்கப்பட்ட விதம்தான் பாடலுக்குரிய அந்தஸ்த கூட்டனும், இல்லினா பெரிசா சொல்லிக்க ஒண்ணுமே இல்ல இந்த பாட்டுல.

2. முன் அந்திச் சாரல்: இதுதான் இந்த ஆல்பத்துலையே ஹைலைட். வழக்கமான ஹாரிஸ் ஜெயராஜ் மெலோடிதான் ஆனாலும் கார்த்திக்கோட குரல் பாடலுக்கான அந்தஸ்த ரொம்பவே கூட்டுது. அதுக்கு கொஞ்சமும் குறைவில்லாத ஒளிப்பதிவு (மேக்கிங் ஆப் சாங்ஸ்ல பார்த்தோம்ங்க). வழமையான கார்த்திக்-சூரியா-ஹாரிஸ் மேஜிக்தான் இந்த பாடலோட அடி நாதம். கேட்டதும் பிடிக்கும் ஒரு வகை. பல பேரோட மொபைல் ப்ளே லிஸ்டில் இந்த பாடலும் இடம் பிடிக்கும்.

3. எல்லேலாமா: இந்த அல்பத்தோட பெப்பி பீட் இதுதான், கேட்கவைக்கும் பாடல். இடையிடே வரும் சில மெட்டுக்கள் மற்றும் வரிகள், வா காதல் பெராரி வரிகளை நினைவு படுத்துகிறது. ஸ்ருதி ஹாசனின் குரல் கவர்கிறது.  எடுத்ததும் பிடிக்கும் பாடல் அல்ல, ஆனா ஒரு வேள கேட்க கேட்க பிடிக்கலாம் (வேறு வழியில்லாமல்). 
முகத்த மட்டும் பாருங்கப்பா.
4. யெம்மா யெம்மா: சூப்பர், எப்பவுமே காதல் தோல்வி பாடல்கள SPB வாய்ஸ்ல கேக்குற சுகமே தனி. அதுக்கு ஏற்றாற்போல மெல்லிய இசையும் அழுத்தமான வரிகளும் இன்னுமே சிறப்பாயிருக்கு.  இடையில் வரும் சில வரிகள் "கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சி" வரியையும் "என் தெய்வத்துக்கே மாறு வேசமா" வரிகளையும் நினைவு படுத்தி தொலைகிறதுதான் ஒரே ஒரு குறை. "ஆணோட காதல் கைரேக போல, பெண்ணோட காதல் கைக்குட்ட போல" இந்த வரிகள் நிச்சயமா இன்னும் கொஞ்ச நாளைக்கு ட்வீட்டர், முகப்புத்தகத்த நிறைக்கும். 

5. இன்னும் என்ன தோழா: ஈழ மக்களுக்காக சமர்பிக்கப்பட்ட பாடல். உணர்ச்சி பூர்வமான பாடல் வரிகள்,  இடையில் வரும் டெக்னோ இசை சற்றே ஒட்டாமல் போகிறது. (ஆயுத எழுத்து "ஜன கன மன" வின் தாக்கமா இருக்கலாம்). "வெள்ளைப் பூக்கள்", "விடை கொடு எங்கள் நாடே" பாடல்களின் இசையமைப்பில் இருந்த உணர்ச்சி இல்லை,  ஆயினும் பால்ராம், நரேஷ் அய்யரின் குரல்கள் ஈர்ப்பினை ஏற்படுத்துகிறன.   "விதை விதைத்தால் நெல்லை விதை விதைத்தால் அதில் கள்ளிப்பூ முளைக்குமா, நம் தலைமுறைகள் நூறு கடந்தாலும் தந்த வீரங்கள் மறக்குமா" மற்றும் "எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை எங்கள் மொழியினில் சுவைக்கிறோம்"  கவரும் வரிகள். 

6. ரைஸ் ஒப் தாமோ: சீன மொழி பாடல். கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் உதவியுடன் மதன்கார்கி எழுதி இருக்காரு. இசையும் குரலும் மனதை வருடுது. வரிகள் இப்போதைக்கு புரியல (சைனீஸ்ல இருக்குரதால எப்பவுமே புரியபோறதில்ல).  படத்துக்கு முக்கியமான பாட்டாம், வரட்டுமே பாக்கலாம். 

பெயர் சொல்லும் பிள்ளைங்குறாங்களே அது இதுதான். 
நிறைய இடங்களில் பாடல் வரி பெரிதாக கைகொடுக்க வில்லை. பாடல் வரிகளும் மெட்டும் பல பாடல்களை நினைவு படுத்துவதாலும், . வழக்கமான ஹாரிஸ் ஜெயாராஜ் இசை வடிவமாதலாலும் ஏழாம் அறிவு பாடல்கள் பெரிதாக கவரவில்லை, ஆயினும் கேட்கக் கூடிய ரகம், ஒளிப்பதிவு, காட்சியமைப்பு, பெர்போமான்ஸ் மூணும் சரியாக அமைந்தால் பாடல்கள் பெரிய வரவேற்பை பெறும், இல்லைன்னா கொஞ்சம் கஷ்டம்தான்.

ஹாரிஸ் ஜெயராஜ் அவரது பழைய பாடல்களை டெம்ப்ளேட்டா வச்சு இந்த பாடல்களை இயற்றியிருப்பார் போல. மொத்தமா ஒரு பத்து வெரைட்டி வெச்சிருக்காரு, அந்த பத்த வச்சிட்டு எத்தன பாட்டுதான் போடலாம். ஒவ்வொன்னும் இது இந்த வகை இது இந்த வகைன்னு கேட்டதுமே சொல்லிட கூடியதா இருக்கு. கொஞ்சம் சலிப்பு தட்டுது தலிவா, புதுசா ட்ரை பண்ணுங்க (அவரு என்ன வச்சிகிட்டா வஞ்சகம் பண்றாரு).

முடிவா இதுக்கு மூணு ஸ்டார் குடுக்கறம் நம்ம ரேடிங்ல. என்னோட மியூசிக் கலக்க்ஷன்ல கோவுக்கு அப்புறம் வந்த லேட்டஸ்ட் அடிசன் இந்த எழாம் அறிவு பாடல்கள்தான். 

எல்லாரும் பாத்திருப்பீங்க, பார்க்கலைனா பாத்துக்கோங்க, Making of 7 am Arivu songs.


20 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. எனக்கு எல்லாப் பாட்டுமே பிடிக்கும்க! என்னோட ஐ பாட் அலறுது! 7 ம் அறிவால்!

    ReplyDelete
  3. சிகப்பு மனிதன் said...
    //ok,//

    ரைட்டு

    ReplyDelete
  4. Powder Star - Dr. ஐடியாமணி said...
    //எனக்கு எல்லாப் பாட்டுமே பிடிக்கும்க! என்னோட ஐ பாட் அலறுது! 7 ம் அறிவால்!//

    ஐ பாட்!!! ஆப்பில் இன் இயர் இயர்போன் போட்டு பாருங்க, இன்னும் அதிரும்.

    ReplyDelete
  5. நமக்கு பாட்டாய்யா முக்கியம் பாருய்யா அந்த புள்ள ஸ்ருதி எப்புடி போஸ் கொடுக்குதுனு..ஹி.ஹி.ஹி.ஹி

    ReplyDelete
  6. அருமை அலசல் அன்பரே!

    ReplyDelete
  7. , வேலாயுதம் (இது இன்னும் கேக்கலீங்க ஏன்னா அந்த அளவுக்கு இன்னும் மனசுல தைரியம் வரல)

    இன்னும் வரலையா?இனிமேலும் வர்றது டவுட்டுதான்!

    ReplyDelete
  8. பாடல்களை நல்லா பார்த்திருக்கிங்க

    ReplyDelete
  9. கரெக்ட்டா சொல்லிருக்கிங்க .எனக்கு இன்னும் ஒரு பாட்டு கூட மனசுல நிக்கல . இருந்ததாலும் நமக்கு பாட்டு முக்கியம் இல்ல . ஸ்ருதி ஹாசன் தான் முக்கியம் .என்ன அழகு .........

    ReplyDelete
  10. தந்தை பேரை காப்பாற்றும் பிள்ளையின் நடிப்பில்(!) படம் பணால் ஆகாம இருந்தா சரி ஹிஹி............பாடல்கள் ஓகே மாப்ள!

    ReplyDelete
  11. K.s.s.Rajh said...
    //நமக்கு பாட்டாய்யா முக்கியம் பாருய்யா அந்த புள்ள ஸ்ருதி எப்புடி போஸ் கொடுக்குதுனு..ஹி.ஹி.ஹி.ஹி//

    அதுவும் சரிதான், இதே போஸ் எல்லாம் பாட்டுலயும் இருக்குமா?

    ReplyDelete
  12. மாய உலகம் said...
    //அருமை அலசல் அன்பரே!//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  13. கோகுல் said...
    //வேலாயுதம் (இது இன்னும் கேக்கலீங்க ஏன்னா அந்த அளவுக்கு இன்னும் மனசுல தைரியம் வரல)

    இன்னும் வரலையா?இனிமேலும் வர்றது டவுட்டுதான்!//

    என்ன சார் இப்பிடி சொல்லிட்டீங்க, படம் பாக்குற தைரியம் வந்திரிச்சு சார், பாட்டுதான்......

    ReplyDelete
  14. தமிழ்வாசி - Prakash said...
    //பாடல்களை நல்லா பார்த்திருக்கிங்க//

    பாக்கல சார், கேட்டோம்

    ReplyDelete
  15. உதவாக்கரை said...
    //கரெக்ட்டா சொல்லிருக்கிங்க .எனக்கு இன்னும் ஒரு பாட்டு கூட மனசுல நிக்கல . இருந்ததாலும் நமக்கு பாட்டு முக்கியம் இல்ல . ஸ்ருதி ஹாசன் தான் முக்கியம் .என்ன அழகு .........//

    என்னமா ஜொள்றாரு!!

    ReplyDelete
  16. விக்கியுலகம் said...
    //தந்தை பேரை காப்பாற்றும் பிள்ளையின் நடிப்பில்(!) படம் பணால் ஆகாம இருந்தா சரி ஹிஹி............பாடல்கள் ஓகே மாப்ள!//

    ஆமா மாம்ஸ் ஓகே தான், அட்டகாசம் இல்ல, அப்புறம் நீங்க எந்த பிள்ளைய சொல்றீங்க?

    ReplyDelete
  17. இனிய காலை வணக்கம் பாஸ்,

    வீக்கெண்ட் கொஞ்சம் பிசியாகிட்டேன்.
    ரெஸ்ட் எடுத்தேன்.
    நலமா?

    ReplyDelete
  18. ஏழாம் அறிவு பாடல்கள் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி.

    நான் இன்னமும் இப் பாடல்களைக் கேட்கவில்லை.
    வெகு விரைவில் கேட்ட பின்னர் என் கருத்துக்களைச் சொல்கிறேன்.

    ReplyDelete
  19. நிரூபன் said...
    //இனிய காலை வணக்கம் பாஸ்,

    வீக்கெண்ட் கொஞ்சம் பிசியாகிட்டேன்.
    ரெஸ்ட் எடுத்தேன்.
    நலமா?//

    வணக்கம் பாஸ், நீங்க தாராளமா ரெஸ்ட் எடுக்கலாம்.

    //ஏழாம் அறிவு பாடல்கள் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி.

    நான் இன்னமும் இப் பாடல்களைக் கேட்கவில்லை.
    வெகு விரைவில் கேட்ட பின்னர் என் கருத்துக்களைச் சொல்கிறேன்.//

    இன்னும் கேக்கலியா? எங்க கருத்து?

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்!!