Thursday, May 10, 2012

Marvel's The Avengers



ஆங்கில சுப்பர் ஹீரோ படங்கள்ன்னா நமக்கு சின்ன வயசுல இருந்தே அலர்ஜி. இதுவரை பார்த்த படங்கள்லேயே பிடிச்சிருந்தது ஸ்பைடர் மேன் மட்டும்தான். அதுல வேற ஒரு கூட்டமா நாலு அஞ்சு சுப்பர் ஹீரோக்கள் ஒண்ணா சேர்ந்து ஒரு படம் வருதுன்னு சொன்னதுமே செம கடியா இருக்கும்ன்னு நெனைச்சிட்டு இருந்தேன். இருந்தாலும் நம்ம நண்பர் ஒருத்தர் படத்துக்கு போயே ஆகணும்ன்னு அடம்புடிச்சதுனால வேற வழியே இல்லாம போயிட்டோம். ஹாலிவூட் படங்கள் இந்தியா மற்றும் இதர நாடுகள்ள வெளியாகி சக்கைபோடு போட்டு ஓடினதுக்கு அப்புறமாதான் அமெரிக்காவுல வெளியாகும். அதனால படம் போன வெள்ளி கிழமைதான் இங்க வெளியாச்சு. வியாழன் நடுராத்திரி(or வெள்ளி விடியல் காலை) 12.01 க்கு முதல் ஷோ. FDFS பாக்க நானும் நண்பரும் போய்ட்டோம். 

சேப் ஹவுஸ் படத்துக்கு இருந்த அளவு கூட்டம் இருந்தது படத்துக்கு. ஒரே காம்ப்லெக்ஸ்ல சுமார் ஆறு தியேட்டர்ல படம் போட்டிருந்தாங்க, ஆறு தியட்டரும் ஹவுஸ் புல் காட்சி. அதுல வேற சுப்பர் ஹீரோக்கள் மாதிரி டிரஸ் பண்ணின பசங்களும் பொண்ணுங்களும் ஒரே கூட்டமா சுத்திக்கிட்டும் சுப்பர் ஹீரோ கட்டவுட்களோட போட்டோ எடுத்திக்கிட்டும் ஒரே அளப்பர பண்ணிக்கிட்டு இருந்தாங்க. நமக்கு கொஞ்சம் பயம் எடுக்க ஆரம்பிச்சிரிச்சு, ஏன்னா நம்ம முன் அனுபவங்கள் அப்புடி. குருவி, ஆதி ன்னு பல படங்களுக்கு இப்படி ஹவுஸ் புல் கூட்டத்த நம்பி போயி பல்பு வாங்கினதுதான் நினைவுக்கு வந்தது. (அதுல நம்ம காட்டுப்பூச்சி வேற தளபதி கெட்டப்புலையே படம் பாக்க போவாரு) நாங்களும் ஒரு மாதிரியா கஷ்டப்பட்டு உள்ள நுழைஞ்சு வசதியான சீட்ட புடிச்சு உக்காந்துட்டோம். அப்புறம் என்ன ஒரு மாதிரியா படத்தையும் போட்டாங்க.

                             

படம் ஆரம்பிச்சதும் என்னமோ ஹை எனெர்ஜி ஆஸ்ட்ரோ பிசிக்ஸ்ன்னு செம ப்ளேடு போட்டாங்க. வழக்கமா எல்லா சுப்பர் ஹீரோ படங்கள்லயும் இதே மொக்கதானேன்னுட்டு நானும் தூங்கலாம்ன்னு முடிவு  பண்ணிட்டேன். அப்புறமாதான் படமே சூடு பிடிக்க ஆரம்பிச்சது. கொஞ்ச நேரத்துல இது ஒரு சுப்பர் ஹீரோ படமா இல்ல காமெடி படமான்னு கன்பியுஸ் ஆகுற அளவுக்கு படம் செம காமெடி. ஒவ்வொரு சீனுக்கும் தியடேர்ல செம ரேச்போன்ஸ். ஒவ்வொரு சுப்பர் ஹீரோ அறிமுகம் ஆகும்போதும் தியேட்டர்ல விசில் பறக்குது, ஒவ்வொரு காமெடி சீனுக்கும் செம க்ளாப்ஸ். நம்ம தேட்டேர்ல நம்ம பசங்ககூட ரஜினி சார் (/சந்தானம்) படம் பாக்குற பீல். அந்தளவுக்கு என்ஜாய் பண்ணி படம் பாக்குறாங்க. இதுவரைக்கு அமெரிக்காவுல எந்த படத்துக்கும் இந்தளவு தியேட்டர் ரேச்போன்ஸ் பார்த்ததில்ல. 21 ஜம்ப் ஸ்ட்ரீட் படத்துக்கு இருந்தத விட இது பலமடங்கு ஜாஸ்த்தி. 

                                 

படத்தோட கதை என்னன்னா அதர பழசானா உலகத்த காப்பாத்துற கத தான், ஆனா அத படமாக்கின விதமும் கொஞ்சமும் சுவாரஷ்யம் குறையாமல் படத்த நகர்த்திசென்ற வித்தயும்தான் இந்த படத்த ரொம்பவும் ரசிக்க வைக்குது. படத்துல உள்ள குறை நிரைகள பத்தி சொல்லனும்னா, படம் முழுக்க எப்ப எப்ப தேவையோ அப்ப அப்ப வார காமெடி சீன்கள். உதாரணமா தோர்-அயன் மேன் சண்டையில தோர் மின்னலை கொண்டு அயன் மேன தாக்க அயன் மேனோட பவர் நானூறு பெர்சென்ட் ரீசார்ஜ் ஆகுறது, கடவுள்கள யாராலும் எதுவுமே பண்ணமுடியாதுன்னு வில்லன் பெரிய லெக்சர் எடுத்திக்கிட்டு இருக்கறப்போவே ஹல்க் அவர உண்டு இல்லன்னு பண்ணுறது, இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம், ஹல்க் ஒரு மிகப்பெரிய பலம் படத்துக்கு, நம்ம தமிழ் படங்கள்ல வடிவேலு, விவேக் செய்யற வேலைய ஹல்க் தான் சென்ச்சிருக்காறு. அப்பப்போ படம் முழுதும் தலைவர் ஸ்டைல்ல நிறைய ஒன் லைனர் வந்து விழுந்து ரசிக்க வைக்குது. குறையின்னு சொல்லனும்னா ஒன்னே ஒன்னு, TRANSFORMERS 3: DARK SIDE OF THE MOON படத்துக்கும் இந்த படத்துக்கும் பிலாட் லெவெல்ல ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்கரவங்களுக்கு நிச்சயமா பரிசு குடுக்கலாம். ஆனா அதுக்காக அந்த படத்தோட காப்பிதான் இந்த படம்ன்னு சொல்ல முடியாத அளவுக்கு ஸ்க்ரீன்ப்ளே செம இண்டேறேச்டிங்கா போகுது. எப்பவுமே சுப்பர் ஹீரோ கதைகள் ஸ்க்ரீன் ப்ளேய நம்ம்பித்தானே எடுக்கப்படுது. அதனால அதையும் மன்னிச்சு விட்டுரலாம்.

மொத்தத்துல இதுவரைக்கும் நான் பார்த்த சுப்பர் ஹீரோ படங்கள்லேயே ரொம்ப ரசிச்சு பார்த்தது இந்த படம்தான். ஒரு செம மாஸ் என்டேர்டைநேர் படம்.