Monday, September 19, 2011

வந்தான் வென்றான் -சந்தானத்தால் கொஞ்சம் தப்பிச்சுது


எல்லாருக்கும் நன்றியுடன் கலந்த வணக்கம்ங்க!! என்னடா இவிங்க திரும்பவும் வணக்கம் சொல்லி கூடவே நன்றியும் சொல்றானேன்னு பார்க்குறீங்களா? இல்லீங்க இந்த பதிவ எழுதுற நானு வழக்கமான , உங்களுக்கு பழக்கமான பதிவர் Dr. Butti Paul இல்லீங்க. அவருதான் இதுநாள் வரைக்கும் Real Santhanam Fanz ங்குற பொதுவான பேர்ல எழுதிகிட்டு வந்தாரு. மொக்கராசு மாமா  ஆன நானு கடைசியா மங்காத்தா போஸ்ட் எழுதுன அப்புறம் ஒரு விபத்துல சிக்கி இப்பதான் கொஞ்சம் சகஜ நிலைக்கு வந்துருக்கேன். இன்னும் ஒடம்பு வலி குறையாமலிருந்தாலும் நம்ம தலைவர் சந்தானம் நடிச்ச வந்தான் வென்றான் படத்த போய் பார்த்துட்டு விமர்சனத்துடன் திரும்பவும் மொக்க போட ஆரம்பிக்கிறேன்.  காயமடைந்து இருக்கும் போது பேஸ்புக், ட்விட்டர் மற்றும் பிளாக் வாயிலாக என்னிடம் நலம் விசாரிச்ச எல்லா நண்பர்களுக்கும் என்னோட நன்றியதான் மொத வரில சொன்னேன். அப்புறம் இனிமே நம்ம பதிவுகள், கமெண்ட்கள் எல்லாமே Dr. Butti Paul அண்ட் மொக்கராசு மாமா ன்னு ரெண்டு வெவ்வேறு பேர்லதான் இருக்கும்னு பப்ளிக்கா அறிவிச்சிறோங்க. இப்ப  படத்தோட விமர்சனம்....
இந்த போஸ்டர்லயே வெளங்குது, எத நம்பி படத்த எடுத்து இருக்காங்கன்னு.
படம் ஆரம்பிச்சி ஒரு அரை மணி நேரம் ஹீரோவ திரைல காட்டவே இல்லேங்க. ஏதேதோ மொக்கையா சில காட்சிகள். ஏன்டா இந்த படத்துக்கு வந்தோம்னு செம காண்டுல ஒக்காந்து இருந்தேன். அப்புறம்தான் ஹீரோ இன்ட்ரோடக்சன் வந்துச்சு. நம்ம ஹீரோ ஒரு டான் மாதிரி அறிமுகமாகுறாரு, இந்தி பில்லா பட பிண்ணனி இசை அவருக்கு செமையா மேட்ச் ஆகுது அந்த காட்சில. அவரு வர்ற வரைக்கும் அடிபொடி அல்லைகைகள் எல்லாம் சாப்பிடாமா இருக்காங்க. அப்டியே வெளில வந்தா ஹீரோவுக்கு ஒரு புது பிரெண்டு (யாரோ ஜீவாவாம்) அறிமுகமாகுறாரு. அந்த பிரெண்டு தமிழ்நாட்டுல எதோ  ஒரு ஊர்ல இருந்து அவுங்க அண்ணன தேடி மும்பை வந்தவராம் (அவரு கதை நமக்கு எதுக்குங்க). அந்த பிரெண்டுகிட்ட ஹீரோ ஹிந்தில பேசுறாரு. ஆனா ஹீரோ பேசுற ஸ்டைல வச்சே அவரு பிரெண்டு "நீங்க தமிழ்தானே ?" ன்னு கேட்டுறாரு. அதுக்கான காரணத்தை நீங்க திரைல பாருங்க. அப்புறம் ஹீரோ தன்ன பத்தி சொல்ல ஆரம்பிக்கிறாரு. உண்மைலேயே அவரு டான் இல்லையாம், ஒரு டான் க்ரூப்ல அடிமை சமையல்காரரா இருக்காராம், நம்ம ஹீரோ சாப்பிட்ட பிறகு அடிபொடி அல்லைகைகள் சாப்பிடுவதற்கான காரணம் நம்ம ஹீரோ விஷம் கிஷம் கலக்கலன்னு உறுதி செஞ்சிக்கிறதுக்காகவாம். அப்டின்னா ஹீரோ எப்புடி இந்த டான் க்ரூப்ல சேர்ந்தாரு? இந்த எடத்துலதான் ஒரு பிளாஷ்பேக்.

பாணிபூரி விக்கிற ஹீரோ..
 நம்ம ஹீரோ ஒரு ஆறு வருசத்துக்கு முன்னாடி பாம்பைல  பாணிபூரி  கடை வச்சிருக்காரு. அவருக்கு போட்டியா பக்கத்துல இன்னொரு ஆள் பாணிபூரி விக்க வர்றாரு.  அவர விரட்டுரதுக்காக நம்ம ஹீரோ இந்த டான் க்ரூப்கிட்ட வர்றாரு. பிறகு நடந்த சில கலவரங்களால நம்ம ஹீரோவுக்கு அந்த டான் க்ரூப்லையே இருக்க வேண்டிய கட்டாயம். இவருக்கு சமையல் குறிப்பு குடுக்குறதுக்காக தராசு மணி ன்னு ஒருத்தர் மார்கெட்ல கட வச்சிருக்காரு.

அப்புறம் நம்ம ஹீரோ அவரு பிரெண்டுக்கு உதவுரதுக்கு வேறு சில கட்டாயங்களினால் கமிட் ஆகுராறு. அப்புறம் தன்னால் ஆனா எல்லா ஹெல்பையும் அந்த பிரெண்டுக்கு செய்றாரு. நடுவுல ஒரு சீன்ல அவருக்கு போட்டியா வந்த அந்த பாணிபூரி விக்கிறவனுக்கு ஒரு போலீஸ் காரர் மூலமா வைக்கிறாரு பாருங்க ஒரு ஆப்பு , தியேட்டர்ல செம அப்ளாஸ். அது மட்டும் இல்ல இந்த படத்துலேயே நம்ம ஹீரோ வர்ற காட்சிகள்ல மட்டும்தான் மக்கள் கொஞ்சம் உற்சாகமா பார்க்குறாங்க. அப்புறம் திரும்பவும் தூங்கிறாங்க.அப்டியே பிரெண்டுக்கு உதவி செஞ்சிகிட்டு இருக்கும்போது  ஒரு மொக்க சீன்ல நம்ம ஹீரோவுக்கு ஒரு பாட்டும் வருது, "முடிவில்லா மழையோடு விளையாடும் நம்ம கூட்டம்னு " ஒரு குத்து பாட்டு. ஹீரோவோட நடன திறமைகள அந்த பாட்டுல ஒரளவுக்கு காட்டி இருக்காங்க. அந்த பாட்டுக்கு அப்புறம் வர்ற கிளைமாக்ஸ் காட்சில அந்த பிரெண்டும் அவுங்க அண்ணனும் சண்ட போட்டு அண்ணன் தம்பிய குத்திர்றாரு. அப்ப அந்த எடத்துக்கு வந்து சேரும் நம்ம ஹீரோ படத்துல இருக்குற முக்கியமான ட்விஸ்ட அண்ணன்கிட்ட சொல்லி அவுங்க அண்ணனையும் தம்பியையும்   சேர்த்து வச்சிட்டு போயிறாரு (ஷாஜஹான் படத்துல ஹீரோ லவ்வர்ஸ சேர்த்து வைப்பாரே, அந்த மாதிரி இல்ல). அந்த காட்சில நம்ம ஹீரோ  நகைச்சுவைல மட்டும் இல்ல, குணசித்திரத்துலயும் தன்னால வெளுத்து வாங்க முடியும்னு நிருபிக்கிராரு. (அப்புறம் நா வெளிநடப்பு செஞ்சிடேங்க).

என்னடா இவன்? படத்துக்கு சம்பந்தமே இல்லாம என்னென்னமோ சொல்றான்னு பார்க்குறீங்களா? இல்லேங்க. இந்த படத்த நான் பார்க்க போனதே தல சந்தானதிற்காக. அவரு வர்ற காட்சிகள மட்டும் பார்த்தேன்.

ஏன்னா  முன்னாடி, நமக்கு கெடச்ச ரிப்போர்ட்படி  படம் சுமார்  ரகம். சூப்பரா வந்திருக்க வேண்டிய ஒரு படம் திரைக்கதை சொதப்பலால் சுமார் ரகம் ஆயிடிச்சு. ஜீவாவும் நந்தாவும் அவங்க அவங்க பங்க சிறப்பாவே செஞ்சிருந்தாலும், நம்ம தலைவர் வழக்கம் போலவே அவரால முடிஞ்சவரை படத்த தூக்கி நிறுத்த முயர்ச்சித்திருந்தாலும் திரைக்கதை சொதப்பலின் நிலவரம் ரொம்பவே சீரியஸ், அதாவது ICU ல வச்சி பாத்துக்கிட்டாலும் பொளக்கிறது  கஷ்டம். தலைவருக்காக இந்த படம் ஓடிச்சுன்னானும் அது கூட 'இட் இஸ் எ மிராக்கில்" வகையறாதான். இப்ப படத்தில் தலைவர் நடிப்பு பத்தி பிரபல விமர்சகர்களும், விமர்சக பிரபலங்களும் என்ன சொல்றாங்கன்னு பார்போம். 

டைட்டில் கார்ட இவங்க பேருதான் ஹீரோ - ஹீரோயின் அப்புடின்னு போட்டிருக்காம் 

அட்ராசக்க சி.பி 

"வந்தான் வென்றான்  - சந்தானம் பகிடி + தப்சியின் ஜகிடி"

தலைப்புலேயே அமர்களப்படுத்தறாரே, அதுவே சொல்லுது தலைவரோட பவர, இதுக்கு மேல என்னையா வேணும், தலைவர் ரசிகர்கள் எல்லாரும் ஒரு வாட்டி படம் பாக்கலாம். 

"படத்தில் சிக்சர் அடிப்பது சந்தானம் தான். கேப் கிடைக்கும் இடம் எல்லாம் கிடாதான்..."


தலைவர் நிச்சயமா புகுந்து விளையாடியிருக்கார். அப்புறம் என்ன காமெடி நிகழ்சிகளுக்கும், யுட்டுயூப் பிரியர்களுக்கும் செம விருந்து ரெடி.

"சி.பி கமெண்ட்: வந்தான் வென்றான் - நொந்தான் சென்றான் என்று சொல்ல வழியில்லாமல் சந்தானம் காப்பாற்றுகிறார்"


இதுக்கும் மேல உங்களுக்கு ஏதாச்சும் சொல்லனுமா? இப்ப சொல்லுங்க இந்த படத்தோட ஹீரோ யாரு?


கேபிள் ஷங்கர் 

"படத்தில் இருக்கும் ஒரே ஒரு ரிலாக்ஷேஷன் சந்தானம் தான் ஆனால் அவரும் எதோ ஓட்ட வைத்த காமெடியாய் அங்காங்கே கிச்சு கிச்சு மூட்டுகிறார் அவ்வளவே"  

ஒன்னும் தப்பா நினச்சுக்கதீங்கப்பா, திரைக்கதை அமைப்புல உள்ள சொதப்பலதான் அப்புடி சொல்றாரு. நாமெல்லாம் யாரு, சந்தானம் போஸ்டரையே மூணு மணி நேரம் பாக்குறவங்க, இந்த படத்துல நிச்சயம் தலைவர் நம்மள ஏமாத்த மாட்டாரு. 
 

செங்கோவி

"சந்தானம் சில நேரங்களில் சிரிக்கவைக்கிறார். பலநேரங்களில் மொக்கை தான். அவ்வப்போது வந்துவிழும் ஒன்லைனர் மட்டுமே ரசிக்க வைக்கிறது"


விடுங்க சார், இவரு இப்புடித்தான் சொல்லுவாரு, ஒன்லைனர் ரசிக்கவக்குதுங்குறாரே அது போதாதா? 

ஹீரோவும் வில்லனும் இவங்களாம், டைட்டில் கார்ட்ல 


லோஷன்
இதுதான் மாஸ்டர் பீஸ், இவரு  இந்தப்படம் பாத்துட்டு ஒரு தீவிர சந்தானம் ரசிகராகவே மாறிட்டாருன்னா பாத்துக்கேங்களேன். அவரே இம்புட்டு சிலாகிச்சு எழுதியிருக்கார்னா நம்ம தலைவர் நிச்சயம் நம்மள கைவிடல்ல. தைரியமா ஒரு சந்தானம் ரசிகனா தலைவரோட எந்த படத்துக்கும் போகலாம்...

சந்தானம் - கண்டேன் படம் போலவே இங்கேயும் இந்தக் குருவி தான் பனங்காயை என்ன, பனை மரத்தையே தாங்குகிறது. சிரிக்க வைப்பதுடன் படத்தில் திருப்பம் ஏற்படுத்தவும் பயன்படுகிறார்"


அட அட அட, தலைவர் தலைவர்தான்யா...


"சந்தானம் தான் படத்தின் ஹீரோ என்று சொன்னாலும் நல்லாவே இருக்கும்"


தலைவருக்கு உண்மையான அங்கீகாரம், லோஷன் சார் உங்களுக்கு ஒரு பெரிய நன்றி. தலைவர் வாழ்க, நாளைய முதல்வர் வாழ்க.... 


அப்புடீன்னா இவங்க ரெண்டுபேருமே டம்மி தானா?


அண்ணன் இந்த படத்துக்கு ஒரு வெர்டிக்ட் குடுக்கறாரு பாருங்க, அதயே நாங்களும் குடுக்கறோம்.

"  சந்தானத்தால் கொஞ்சம் தப்பிச்சுது"  



இவருதான் நிஜ வில்லன், அட படத்தோட டைரக்டர் ...
தலதளபதி ரசிகன்னு சொல்லிக்கறதுல நாங்க என்னைக்குமே பெரும படுறோம் சார். தலைவர் ரசிகர்கள்னா நிச்சயமா இந்த படத்த ஒரு தடவன்னாலும் தியேட்டர்ல பாக்கணும் சார். படத்துக்கு எவ்வளவு நெகடிவா விமர்சனம் வந்தாலும் சோர்ந்துடாதீங்க, தலைவர் ஒருவருக்காகவே இந்த படம் கல்லா கட்டணும். பாஸ் என்கிற பாஸ்கரன், சிறுத்தை ரேஞ்ஜ்ல சிக்சர் அடிக்க முடியாட்டியும் தலைவர் அடிக்கிற ஃபோர்க்காக ஒரு வாட்டி பார்கலாம்.

இன்ட்லி இணைப்பு
தமிழ் 10:

40 comments:

  1. அடப்பாவிகளா இப்படி வேற கெளம்பிட்டீங்களா?

    ReplyDelete
  2. எப்படியோ காமெடிகள்னாலதான் பெரும்பாலான படங்கள் ஓடுது, ஒரு கட்டத்துல அர்ஜூன், ராமராஜன், கார்த்திக் இவங்க படம்லாம் கவுண்டர் வெச்சுத்தான் ஓடுச்சு...... அந்த ட்ரெண்ட் இப்போ சந்தானத்திற்கு....

    ReplyDelete
  3. உங்க தமிழ்மணம் என்னாச்சு? இன்னும் சேர்க்கலியா? தமிழ்மணத்துல ரிஜிஸ்டர் பண்ணீங்களா இல்லியா?

    ReplyDelete
  4. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அடப்பாவிகளா இப்படி வேற கெளம்பிட்டீங்களா?//

    வேற வழி இல்லண்ணே...

    ReplyDelete
  5. ///பன்னிக்குட்டி ராம்சாமி said...

    எப்படியோ காமெடிகள்னாலதான் பெரும்பாலான படங்கள் ஓடுது, ஒரு கட்டத்துல அர்ஜூன், ராமராஜன், கார்த்திக் இவங்க படம்லாம் கவுண்டர் வெச்சுத்தான் ஓடுச்சு...... அந்த ட்ரெண்ட் இப்போ சந்தானத்திற்கு....///
    ஆமாண்ணே.... கவுண்டர் காமெடி இப்பவும் ஆதித்யால வந்தா அப்டியே நின்னு பார்க்குரோம்ல.. அந்த எடத்துக்கு நம்ம சந்தானமும் வருவாருன்னு நம்புறோம்!!

    ReplyDelete
  6. ///பன்னிக்குட்டி ராம்சாமி said...

    உங்க தமிழ்மணம் என்னாச்சு? இன்னும் சேர்க்கலியா? தமிழ்மணத்துல ரிஜிஸ்டர் பண்ணீங்களா இல்லியா?//

    ரிஜிஸ்டர் பண்ணியாச்சு.. அப்புறம் மெயில் அனுப்பியும் பார்த்தாச்சு ஒரு ரிப்ளையும் இல்லண்ணே.. ஒன்னுமே புரிய மாட்டேங்குது!!!

    ReplyDelete
  7. அட..என்ன ஒரு வித்தியாசமான விளம்பரம்..

    ReplyDelete
  8. இப்போதெல்லாம் பல படங்களைக் காப்பாற்றுவது சந்தானம் தான்.

    ReplyDelete
  9. தமிழ்மண ஓட்டுப்பட்டையை பதிவுக்கு கீழே வைங்க... முக்கி முக்கி ஒப்பன் ஆகுறதுக்கு முப்பது நிமிஷம் ஆயிடுச்சு...

    ReplyDelete
  10. எனக்கென்னவோ...நீங்க சந்தானம் சார கலாய்க்கிற மாதிரியே....தோணுதே...அது ஏன்???

    ஆனாலும் நல்லதான் விளம்பரம் பண்றீங்க சார்.

    ReplyDelete
  11. ஓரு படத்த ஓட வைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்குடா சாமீ...........

    ஆனாலும் சந்தானம் சாரோட டைமிங் காமெடி யாருக்கும் வராது...ஊறுகாயா இருந்தவரு மெயின் டிஸ் ஆகவே மாறிட்டு வராறே...

    ReplyDelete
  12. kandippa unka thalaivarukkaka orumurai paarththiduvom

    ReplyDelete
  13. சூப்பர் தலை சந்தானம் வாழ்க.....

    ReplyDelete
  14. Santhanathai thangipidikkum....
    Santhanam real fan .....
    VAZHGA !!!!

    ReplyDelete
  15. படத்தின் ஒரே ஆறுதல் சந்தானம்தான். அதிலும் அந்த செல்போன் திருடும் காட்சி, மருத்துவமனையில் வேலு நாயக்கர் மாதிரி பேசுவது எல்லாம் மிக அருமை.

    ReplyDelete
  16. படம் இன்னும் பார்க்க வில்லை, இனிதான் பார்க்கணும் சந்தானத்துக்காக...!!!

    ReplyDelete
  17. படம் தேறுச்சா? சந்தானம் தேறினாரா.?

    ReplyDelete
  18. //செங்கோவி said...
    அட..என்ன ஒரு வித்தியாசமான விளம்பரம்..////
    இந்த படத்த எல்லாம் ஓட வைக்க இப்புடி எதாவது பண்ணதான் உண்டு?

    ReplyDelete
  19. ///செங்கோவி said...
    இப்போதெல்லாம் பல படங்களைக் காப்பாற்றுவது சந்தானம் தான்.//
    ரொம்ப சரியா சொன்னீங்க! கண்டேன், உதயன் மாதிரி படங்களுக்கு கொஞ்சமாவது மக்கள் போனது சந்தானத்தால்தான்...

    ReplyDelete
  20. ///Philosophy Prabhakaran said...
    தமிழ்மண ஓட்டுப்பட்டையை பதிவுக்கு கீழே வைங்க... முக்கி முக்கி ஒப்பன் ஆகுறதுக்கு முப்பது நிமிஷம் ஆயிடுச்சு..//
    ஆமாண்ணே.. எதோ பிரச்சினைன்னு தோணுது.. நீங்க சொன்னமாதிரியே செஞ்சிறோம்!! இன்டலி, தமிழ்மணம் எல்லாமே தகராறு பண்ணுது!!

    ReplyDelete
  21. //கடம்பவன குயில் said...
    எனக்கென்னவோ...நீங்க சந்தானம் சார கலாய்க்கிற மாதிரியே....தோணுதே...அது ஏன்???
    ஆனாலும் நல்லதான் விளம்பரம் பண்றீங்க சார்.///
    ச்சே ச்சே.. அவரு கலாய்க்கும் போது சொல்லிட்டே கலாய்போம்.. இது வேற!! இந்த படத்த ஓட்ட வேற வழி இல்ல!! அதுனாலத்தான் இப்புடி ஒரு வெளம்பரம்!!

    ReplyDelete
  22. //கடம்பவன குயில் said...
    ஆனாலும் சந்தானம் சாரோட டைமிங் காமெடி யாருக்கும் வராது...ஊறுகாயா இருந்தவரு மெயின் டிஸ் ஆகவே மாறிட்டு வராறே...//
    அதுவும் மிக மிக குறுகிய காலத்தில்!!!

    ReplyDelete
  23. ///kobiraj said...
    kandippa unka thalaivarukkaka orumurai paarththiduvom///
    நன்றி கோபிராஜ்... உங்க தலைவரும் எங்க தலைவரும் சேர்ந்து நடிச்ச வேலாயுதமும் வருது!!!

    ReplyDelete
  24. ///K.s.s.Rajh said...
    சூப்பர் தலை சந்தானம் வாழ்க.....//
    ரொம்ப நன்றி.. உங்களுக்கு வட்ட செயலாளர் பதவி நிச்சயாம உண்டு!!!

    ReplyDelete
  25. ///NAAI-NAKKS said...
    Santhanathai thangipidikkum....
    Santhanam real fan .....
    VAZHGA !!!!//
    ஐயோ இது பெரிய வார்த்த... நாங்கதான் அவரு புண்ணியத்துல எதோ ஓட்டிகிட்டு இருக்கோம்!!!

    ReplyDelete
  26. ///பாலா said...
    படத்தின் ஒரே ஆறுதல் சந்தானம்தான். அதிலும் அந்த செல்போன் திருடும் காட்சி, மருத்துவமனையில் வேலு நாயக்கர் மாதிரி பேசுவது எல்லாம் மிக அருமை.///
    உண்மை!!! அப்புறம் ஜீவாவ மருத்துவமனைல சேர்த்துட்டு அந்து மூச்ச அடக்கி வச்சிருந்து விடுவாரே!!! செம நடிப்பு!!

    ReplyDelete
  27. ///MANO நாஞ்சில் மனோ said...
    படம் இன்னும் பார்க்க வில்லை, இனிதான் பார்க்கணும் சந்தானத்துக்காக...!!!///
    கண்டிப்பா பாருங்க சார்!!

    ReplyDelete
  28. ///தமிழ்வாசி - Prakash said...
    படம் தேறுச்சா? சந்தானம் தேறினாரா.?///
    படம் தேறல அண்ணே!! சந்தானம் மட்டும்தான் தேறுனாரு!!!

    ReplyDelete
  29. //Online Works For All said...
    அருமையான தகவல்

    Without Investment Data Entry Jobs !

    FOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com///

    என்னத்துக்கு இது? ஒரு டீபோல்ட் கமெண்ட போட்டுட்டு எங்கள வேலைக்கு கூப்டுறீங்க?
    ரொம்ப தேங்க்ஸ் சார்!! நாங்க ஏற்கனவே வேலை பார்குறோம்!!!

    ReplyDelete
  30. tamilan da

    padathula santhanam ilaina sethuruppen sema mokkai santhanum sariya use pannala sila scenes kalakirukaru thalai

    ReplyDelete
  31. //meyyappanram said...
    tamilan da
    padathula santhanam ilaina sethuruppen sema mokkai santhanum sariya use pannala sila scenes kalakirukaru thalai
    ////

    தமிழன்டா......

    ReplyDelete
  32. அட இதுவும் புதுசா இருக்கே...

    ReplyDelete
  33. ///♔ம.தி.சுதா♔ said...
    அட இதுவும் புதுசா இருக்கே...//
    வாங்க ம.தி.சுதா மொத தடவையா நம்ம பிளாக்குக்கு வந்து இருக்கீங்க, நீங்களே பார்த்துட்டு சொல்லுங்களேன்!!!
    அப்புறம் நமக்கு அடிக்கடி சுடுசோறு தாங்க...

    ReplyDelete
  34. மொக்கராசு மாமாவை வருக வருக என்று வரவேற்கிறேன்.
    நலம் தானே பாஸ்?

    ReplyDelete
  35. வணக்கம் பாஸ்
    கடந்த சில நாட்கள் கொஞ்சம் பிசியாகிட்டேன்.
    வர முடியலை...

    எல்லோர் வலையும் மீண்டும் நேற்று மாலை தொடக்கம் தான் மேயத் தொடங்கினேன்.

    மன்னிக்க வேண்டும்!

    ReplyDelete
  36. விமர்சனத்தைக் காமெடி கலந்து சூப்பரா எழுதியிருக்கிறீங்க பாஸ்..

    பதிவர்களின் விமர்சனங்களையும் பின்னணியில் போட்டு அசத்தியிருப்பது பதிவுக்குப் பக்க பலமாக இருக்கிறது.

    ReplyDelete
  37. உங்கள் பதிவு, ஏனைய நண்பர்களின் விமர்சனங்களை வைத்துப் பார்க்கும் போது சந்தானம் அசத்தியிருக்கிறார்.

    டைம் கிடைக்கும் போது படத்தினைப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  38. காமடியன்கள் தயவில்தான் பலதயாரிப்பாளருகளும் பணம்பண்ணிக்கிறாங்க

    ReplyDelete
  39. விமர்சனம் நல்லாத்தான் இருக்கு...சந்தானம் ஒரு தூண் என்று சொல்றீங்க...நம்பிட்டோம்...

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்!!