Friday, December 23, 2011

ஒரு விளக்கம், ஒரு வேண்டுகோள், ஒரு அறிவிப்பு:


ஒரு விளக்கம், ஒரு வேண்டுகோள், ஒரு அறிவிப்பு.........................

மொதல்ல உங்க எல்லாருகிட்டயும் மன்னிப்பு கேட்டுகுறோங்க. அதாவது முன்ன மாதிரி பிளாக்கிங்க்கு பெரிய அளவுல நேரம் ஒதுக்க முடியுதுல்லங்க. என்னடா எவன பார்த்தாலும் இதையே சொல்லிக்கிட்டு இருக்காங்க, ஒரு வேல இதையே ஒரு பிளாக்கிங் ட்ரென்டா  ஆக்க பார்க்குறாங்களோன்னு யோசிக்காதீங்க சத்தியமா உண்மைங்க. வருஷ  கடைசி நம்ம ரெண்டு பேருக்கும்  ஒரே கெடுபுடியான காலம், முன்ன மாதிரி வேளைக்கு பதிவு போட முடியறதும் இல்ல, பதிவுகள படிக்க முடியறதும் இல்ல. ஒவ்வொருநாளும்  ப்லோக்கருக்கு போயி டாஷ்போர்டுல வழமையா தொடர்ச்சியா  பதிவு போடுற  பதிவர்களின்(சி.பி, விக்கி, நாஞ்சில்,தமிழ்வாசி,நிருபன், மற்றும் பல நண்பர்கள்)  புதுசா வார பதிவுகள ஓபன் பண்ணி வச்சிட்டு, படிச்சு ஒட்டு கமெண்ட்டு போடலாம்னு பார்த்தா ஏதாச்சும் வேல வந்து தொலைக்கும். அப்புடியே ஒரு மாதிரியா பதிவுகள படிச்சு முடிச்சிட்டு கமெண்ட்டு போட ரிப்ரெஷ் பண்ணினா அங்க புதுசா ஒரு பதிவே ஒக்காந்து இருக்கும். அப்புறம் முடிஞ்சு போன கல்யாணத்துக்கு எதுக்கு மேளம் அடிக்கனும்ன்னு கமெண்டு போடாம வந்திடுவோம், அப்புறம் செங்கோவி அண்ணனோட ப்ளாகுக்கு போனா அவரு பதிவுகள காணவும் இல்ல,யாரு பதிவுலயும்  அவரு காமேண்டையும் காணவுமில்ல, தொடராத பதிவுகள்ன்னு ஒரு பதிவ போட்டுட்டு அவரும் வேலைல பிசியாகிட்டாரு போல.   பன்னிக்குட்டி அண்ணன ரெண்டு மாசமா இந்த ஏரியா பக்கமே காணல.இப்பத்தான் ஒரு வாரமா ஆக்டிவ்வா இருக்காரு போல,  அவரு கடைசி பதிவ கூட வாசிசாச்சு ஆனா இன்னும் மொய் வைக்கல.  கொஞ்ச நாளா இதேதான் நடக்குது, இதுக்கு எதாச்சு தீர்வு இருந்தா சொல்லுங்கப்பா. நம்ம ரெண்டு பேர்(புட்டிபால் அண்ட் மொக்கராசு மாமா) மேட்டர் என்னனா....புட்டிபாலுக்கு ஜனவரி எண்டுல அப்புடின்னு சொல்லியிருந்த ஒரு ப்ரோஜெக்டோட டெட்லயின திடீர்ன்னு ஜனவரி அஞ்சுன்னு மாத்திட்டாங்க, அதுக்காக மாஞ்சு மாஞ்சு வேல பார்த்துகிட்டு இருக்காரு. அப்புறம் மொக்கராசுக்கும் ஒரு வருசமா இழுத்தடிச்சிக்கிட்டு இருந்த ஒரு வேலைய முடிச்சே ஆக வேண்டிய கட்டாயம். கெளம்பிட்டாரு. அதனால இனிமே ஒரு ரெண்டு மூணு வாரத்துக்காவது  பதிவுலக பக்கம் நம்ம நடமாட்டம் சுத்தமா இல்லாம போனாலும் போயிடும். ஆனாலும் யாரும் நம்மள மறந்துட கூடாதேன்னுட்டு, முன்னொரு காலத்துல எழுதி கடைசி கட்ட திருத்தங்களுக்காக ட்ராப்டுல வச்சிருந்த ஒரு ரெண்டு பதிவுகள இந்த வருஷ கடைசிகுள்ள வலையேத்த முயற்சி பண்ணுறோம். அங்கங்க நெறைய தப்புகள் இருக்கும், தமிழ் பொறுக்குமா இல்ல தெரு பொறுக்குமான்னு தெரியல. குத்தம் குறைகளை மன்னிக்கவேண்டி மீண்டும்  கேட்டுக்கறோம்.


டிஸ்கி: யாருமே இல்லாத கிளாஸ்ல யாருக்குடா பாடம் நடத்துறீங்க? உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?ன்னு கேட்குறீங்களா? இல்லீங்க, ரெண்டு வாரமா பதிவே போடாட்டியும், எப்புடியும் ஒரு நாளைக்கு ஆவரேஜா 100 பேஜ் விவ்ஸாவது வருது. கண்டிப்பா அவுங்க என்ன எதிர் பார்த்து இங்க வர்றான்களோ அத கொடுக்க வேண்டியது நம்ம கடமை. வருஷ கடைசிகுள்ள அந்த டிராப்ட்ல இருக்குற ரெண்டு பதிவயும் போட்டுட்டு, 2012ல இருந்து புதுசா வர முயற்சி பண்ணுறோம்.

Friday, December 9, 2011

Transformers: Dark side of moon ஒரு தமிழ் சினிமாவாக இருந்திருந்தால்!

இந்த வருடம் ஜூன் மாதம் வெளிவந்த Tranformers 3 படம் பற்றி அறிந்திருப்பீர்கள். உலக அரங்கில் அதிக வசூல் பெற்ற படங்கள் வரிசையில் நான்காவது இடத்தில் இருக்கும் படம். முதல் மூன்று இடங்களில் இருப்பது அவதார், டைடானிக் மற்றும் ஹர்ரி போட்டர். படத்தின் நீளம் காரணமாகவும் இன்னும் சில குறைகள் காரணமாகவும் விமர்சன ரீதியாக வெற்றி பெறாத ஒரு படம். இந்த திரைப்படம் ஒரு தமிழ் படமாக இருந்திருந்தால் நமது விமர்சனம் எவ்வாறு இருந்திருக்கும் என ஒரு சிறு கற்பனை.


Transformers: அரை வேக்காடு. 

கோடி கோடியா பணத்த எப்படி குப்பையில கொட்டுறதுங்கறதுக்கு ஒரு சிறந்த உதாரணம் இந்த படம். சாதரணமான கார், ரேடியோ, லேப்டாப் போன்றவை ஜயன்ட் ரோபோட்ஸாக மாறினால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையை தவிர்த்து படத்தில் எதுவுமே ரசிக்கும்படியாக இல்லை. அதுவும் ஆடோபாட்சின் ஒரு தொழில்நுட்பத்தை கண்டறியவே மனிதனின் நிலாவுக்கான பயணம் நடந்தேறியது என்பது வரலாற்றை திரிப்பது. மனிதன் உண்மையில் நிலாவில் கால் வைத்தானா என்பதே விவாதத்துக்குரிய விடயமாக இருக்கும் போது கொஞ்சமும் அக்கறை அற்று இவ்வாறு சித்தரித்திருப்பது முட்டாள் தனத்தின் உச்சகட்டம். "ஸ்பேஸ் பிரிட்ஜ்" அப்பிடின்னு ஒன்னு, சார்பியல் தத்துவத்தின் வோர்ம்-ஹோல்ஸ்ல இருந்து அப்புடியே உருவியிருக்காங்க, இத பார்த்தப்போ சிரிக்கறதா இல்ல அழுறதான்னு தோனல. ஒரு விஞ்ஞான மாணவனா அது எவ்வளவு மொக்கைன்னு எனக்கு நல்லாவே தெரியும். இதுக்கு, முதல்பாகத்துல பென்டகனோட செக்யூரிட்டி பயர் வால்ல அஞ்சி நிமிசத்துல ஹாக் பண்றதா காட்டுறது எவ்வளவோ தேவல. ஒரு காட்சில லிங்கன் சிலைய உடைக்கிற மாதிரி காட்டியிருக்கறது தேசிய தலைவர்களுக்கு மிகப்பெரிய அவமதிப்பு. (இத கறுப்பின அமெரிக்கர்கள் மேல இயக்குனர் வச்சிருக்கற காழ்புணர்ச்சி, அரசியல் அவமதிப்பு அது இதுன்னு இன்னும் நிறைய விசயங்கள கோர்த்து போராட்ட லெவெலுக்கு கொண்டு போகனும்). நாலு பில்லர வச்சிக்கிட்டு, சென்டினல் ப்ரயிம் அவங்க நாகரீகத்துல ஐன்ஸ்டைன்னு சொல்றதுக்கு பதிலா பேசாம ஐன்ஸ்டைன தூக்குல போட்டிருக்கலாம்.


படம் முழுதும் அமெரிக்க மயம், அமெரிக்கர்கள்தான் உலகத்தையே காக்க பொறந்தவங்க மாதிரி பில்டப். தாங்கல. அதுலயும் மகா கொடும ஒரு காலேஜ் முடிச்ச பையன்  உலகத்தையே காப்பாத்துறது. ஏலியன் இனங்களுக்கு இடையில நடக்குற பிரபஞ்ச யுத்தத்த அசால்டா இவரு சமாளிக்கறதா சொல்றது பார்வையாளன முட்டாளாவே பாக்குற இயக்குனர்களின் மனப்பாங்கு. அவரு பண்றதா காட்ற ஆக்ஷன் காட்சிகள் லாஜிக் மீறலின் உச்சகட்டம். இன்னும் எத்தன நாளுக்கு இதையே பாக்க போறோம்? படத்தோட க்ளைமாக்ஸ்ல ஷாக் வேவ் வந்து ஒரு நகரத்தையே நாசப்படுத்துது, எவ்வளவு ரண களம் நடந்தாலும் அதுல எந்த கன ரக ஆயுதங்களும் இல்லாம சும்மா மாட்டிக்கிட்ட ஹீரோவுக்கோ, அவரோட கூட்டத்துக்கோ ஒண்ணுமே ஆகலியே அது எப்புடி? ஸ்பேஸ் ப்ரிட்ஜுக்கான கண்ட்ரோல் பில்லர சென்டினல் ப்ரயிம் ஒருவரால்தான் இயக்க முடியும்னு சொல்லிட்டு, க்ளைமாக்ஸ்ல வேறொருத்தர் இயக்குறாரு, இப்படி லாஜிக் மீரல்கள சொன்னா அதுவே தனி பதிவு போடுற அளவுக்கு வரும். ஒரு போலியான வரலாறா இருந்தாலும் எதோ பெரிசா சொல்லி தொடங்கின படம் க்ளைமாக்ஸ் அப்புடியே யூகிக்க கூடியதா இருக்குறது படத்துல உள்ள பெரிய்ய்ய குறை. படம் தொடங்கும்போதே தெரியும் அந்த சின்ன பையன் உலகத்தையே காப்பாத்த போறான்னு. அதுக்காக மூணு மணிநேரம் செலவழிச்சு படத்த பார்க்கணுமா?

அந்த சின்னப்பையன் நடிப்பு சகிக்கல, அவனுக்கெல்லாம் எவன்யா இந்த படத்துல நடிக்க சான்ஸ் கொடுத்தது? மேகன் பாக்ஸ தூக்கிட்டு ஒரு பிகர போட்டிருக்காங்க, சாயல்ல அப்புடியே காமரூன் டயஸ பாக்குறது மாதிரியே இருக்கு, கவர்ச்சி காட்றதா நெனச்சு அவ பண்ற கூத்துல நமக்கு வாந்திதான் வருது. மேகன் பாக்ஸ் எடத்துல வச்சு பார்த்தா கொமட்டிக்கிட்டு வருது. இயக்குனருக்கு என்ன ரசனையோ. படத்துல இருக்கற ஒரே ஒரு ஆறுதல் 3-D எபெக்ட் தான், ஆனா அதுக்காகவெல்லாம் தேட்டருக்கு போயி படம் பார்க்க முடியாது, திருட்டு VCD லதான் இந்த படம் பார்க்கணும். (3D எபெக்ட திருட்டு VCD ல எப்புடி பார்க்குறதுன்னு நீங்க கேள்வி கேக்க கூடாது, இவனுங்க படத்த எல்லாம் அப்புடி பார்க்குறதுதான் பொருத்தம்ன்னு கமெண்டு போடணும்) 

இவரு மூஞ்சிக்கு அவரைவிட ஒசரமான பிகரு கேக்குது.சிங்கம்டா நீ ...

மொத்தமா இது ஒரு சுத்த வேஸ்ட்டு படம், இத எடுத்தவன்தான் முட்டாள்னா இத பார்க்க போனவன் எல்லாரும் வடிகட்டின முட்டாள், அந்த படத்த பார்த்துட்டு அதுக்கு விமர்சனம் எழுதின புட்டிபால் உலக மகா முட்டாள். அப்புறம் அதஉட்காந்து இவ்வளவு நேரம் வாசிக்கிற நீங்க எல்லாம் ...............

அமெரிக்கர்கள் யாரும் இந்த படத்துக்கு ஏன் இப்புடி ஒரு விமர்சனம் இதுவரைக்கும் எழுதல்லன்னு யோசிச்சிட்டே இருந்தேன், திடீர்னுதான் தோணிச்சு, இந்த படத்த எடுத்தவங்க யாரும் நாங்க ஒரு மறைக்கப்பட்ட உண்மைய உலகுக்கு எடுத்து சொல்லியிருக்கோம்னோ, இந்த படத்த பார்த்தா உங்களுக்கு அமெரிக்கான்னு ஒரு திமிரு வரும்னு டிவில மணிக்கொருதரம் வந்து கூவல, இன்னொன்னு அமெரிக்க விமர்சகர்கள் விளம்பரத்த பார்த்துட்டு படத்துக்கு விமர்சனம் எழுதுறதும் இல்ல.

டிஸ்கி: சினிமா விமர்சனம் எழுதுறதுல நாலு வகை இருக்கு. ஒன்னு ஒரு படத்த பார்த்ததும் நம்ம மனசுக்கு பட்டத எழுதுறது. ரெண்டு நடுநிலையாகவே குறை நிறைகள சொல்றது, மூணு சினிமா இயக்குனர்கள் நடிகர்கள் எல்லாரும் முட்டாள்ன்னு நினைச்சு எழுதறது, நாலு தமிழ் சினிமா பாக்க போற ரசிகர்கள் எல்லாரும் முட்டாள்கள்ன்னு நினைச்சு எழுதறது. இது அஞ்சாவது வகை. 

ஆறுதல் பரிசு

இன்ஸ்பிரேசன்: இன்செப்சன் படம் பத்தி நம்ம நண்பர் ஒருத்தர் கூட பேசிக்கிட்டு இருந்தப்போ, படத்துல உள்ள திரைக்கதை ஒட்டைகள்ன்னு அவரு ஒரு பெரிய பட்டியலே போட்டாரு, அது முதல் இன்ஸ்பிரேசன். ரெண்டாவது, செங்கோவி அண்ணன், பழைய முதல் மரியாதைக்கு சமீபத்தில் விமர்சனம் எழுதியவர்.