Wednesday, September 19, 2012

நாங்க நினைப்பது என்னன்னா, ஆனா நடப்பது என்னன்னா!!

வாழ்க்கைல  எப்பவுமே நாங்க நினைக்கிற விடயங்களுக்கும், ஆனா உண்மையா நமக்கு நடக்குற விடயங்களுக்கும்   இடையில் பாரியளவிலான வித்தியாசங்கள் இருக்கும் . அது போன்ற சில விடயங்களின் தொகுப்பே இப்பதிவு.....


1.  நாங்க யாருன்னா: யாரவது ஒரு  பிரபல நடிகரின் அதி தீவிர ரசிகர்கள்.

மேட்டர் என்னன்னா: நம்ம தலீவர் சமீபத்துல நடிச்ச எல்லா படங்களும் படு-மொக்கை படு-தோல்வி படங்கள். நம்ம தலீவர் அடுத்த தீபாவளிக்கோ, பொங்கலுக்கோ ஒரு படத்துல தீவிரமா(!!)  நடிச்சிகிட்டு இருப்பாரு. ஒலக மகா டைரக்டர் அந்த படத்த எடுத்துகிட்டு இருப்பாரு. அந்த படத்தோட புரோட்யூசர்  படத்துக்கு செமையா பில்டப் குடுத்து ப்ரோமோஷன் பண்ணிக்கிட்டு இருப்பாரு.

நாங்க நினைப்பது என்னன்னா: இந்த படம் மட்டும் வரட்டும், நம்ம தலீவர் ரேஞ்ஜே மாறபோகுது. கோலிவுட்ல நம்ம தலீவர்க்கு இருக்குற   அத்தன போட்டி நடிகர்களும் ஒட்டுமொத்தமா ஒம்போது நாளைக்கு கக்கூஸே கதின்னு கழிச்சிகிட்டு இருக்க போறங்கெ. எந்திரன், 3-இடியட்ஸ்ன்னு அத்தன பட கலெக்ஷன் ரெக்கார்ட்ஸையும் நம்ம தலீவர் படம் ஒரே வாரத்துல பீட் பண்ணிரும். இந்த படத்துக்கு பிறகு  தலிவர்க்கும் அரசியல்ல ஒரு நிலையான இடம் கெடைச்சிடும். நாங்களும் பொண்டாட்டி கொழந்த குட்டின்னு அப்புடியே செட்டில் ஆயிடலாம்.

ஆனா நடப்பது என்னன்னா: இதுக்கு முன்னாடி நம்ம தலிவர் நடிச்ச அந்த நாலு படு-மொக்கை படு-தோல்வி படங்களும் எவ்வளவோ மேல். இந்த புது படம் அந்த நாலத்தயும்  விட படு மொக்கையா, படு கேவலமா, நாறத்தனமா இருக்கும்.

*************************************************
2. நாங்க யாருன்னா:  சாப்ட்டுவேரு புடுங்குற கம்பேனிலயோ இல்ல அது மாதிரி வேற எதாவது ஒக்காந்துகிட்டே வேலை செய்ற 27,28+ வயசு இளைஞர்கள்.

மேட்டர் என்னன்னா: நாம ஒக்கந்துகிட்டே வேல செய்றோமா, அப்புறம் தினம் நாலு வேளை புல் மீல்சும் , இடையிடையில ஸ்னேக்ஸும் திங்கிறோமா, இப்ப நமக்கு லேசா இள-தொந்தி(தொப்பை) வந்துருக்கு.

நாங்க நினைப்பது என்னன்னா: இந்த தொந்திய குறைக்கிறதுக்காக (மறைக்கிறதுக்காக)  ஒலகத்துல இருக்குற அத்தன தில்லாலங்கடி வேலையையும் செய்வோம். காத்தாலயே ஜாகிங், வாக்கிங் போக ட்ரை பண்ணுவோம். கம்பெனில ஜிம் இருந்தா அதுக்கு போகயும் ட்ரை பண்ணுவோம். பக்கத்து தெருல இருக்குற சூப்பர் மார்க்கட்டுக்கு நடந்தே போவோம். அப்புடி நடந்து போனா, நம்ம தொந்தி அடுத்த நாளே கரைஞ்சிடும்னு நெனச்சுப்போம். பிரபல சேனல்கள்ள மிட் நைட்ல போடுற டெலி-பை புரோகிராம்ஸ எல்லாம் ஒன்னு விடாம பார்த்து அதுல சொல்ற  நம்ம பட்ஜெட்டுக்கு ஏத்த எக்ஸர்ஸைஸ் ஈக்விப்மென்ட எல்லாம் வாங்கிருவோம். அப்புடி அதுல எக்ஸேர்ஸைஸ் செஞ்சா ஒரே  மாசத்துல சல்மான்கானுக்கு போட்டியா  சிக்ஸ் பேக்ஸ்கோ, இல்ல அமீர்கானுக்கு போட்டியா எயிட்  பேக்ஸ்கோ கொண்டுவந்துரலாம்ன்னு நெனச்சிக்கிட்டு இருப்போம். எக்ஸேர்ஸைஸ் செஞ்சி முடிச்சிட்டு யாரும் இல்லாதப்போ, கண்ணாடி முன்னாடி ஷர்ட்ட தூக்கி தொந்திய அளந்து பார்போம். 2mm கொரஞ்சிருக்குன்னு நெனச்சுப்போம்.

ஆனா நடப்பது என்னன்னா: மேல சொன்ன ட்ரை பண்ணுற சமாச்சாரங்க எல்லாம் ட்ரை பண்ற லெவல்ல தாண்டியே இருக்காது. வாங்கிபோட்ட எக்ஸேர்ஸைஸ் ஈக்விப்மென்ட்ஸ நம்ம வீட்டு பொம்மனாட்டிக துணி காய போடுறதுக்கு யூஸ் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. நாங்க 35+ வயசுல  "ஜி" படத்துல வர்ற தல-ய மாதிரி ஆகுறதையும் , 45+ வயசுல தமிழ்நாட்டு போலீஸ்ல சேர்றதுக்கான தகுதிகள உருவாக்கிக்கிறதயும் யாராலுமே தடுக்க முடியாது.

*************************************************3.  நாங்க யாருன்னா: தொழில் செய்துகொண்டே பதிவெழுதும் பதிவர்கள்

மேட்டர் என்னன்னா: நம்ம ஆபிஸ்ல நமக்கு மேல இருக்குற மேனேஜர்/சூப்பர்வைசர்/ஹெட்னுன்னு யாராவது ஒரு மேலதிகாரி இந்த வாரத்துக்குள்ள முடிக்க சொல்லி நமக்கு பல ப்ராஜக்ட்ஸ் கொடுத்துருப்பாரு. எல்லா ப்ராஜக்ட்ஸ்க்கும் இன்னும் ரெண்டு நாள் டெட்லைனே இருக்கும். எப்புடிடா இத்தினி வேலையையும் ரெண்டே நாள்ல முடிக்கிறதுன்னு செம டென்ஷன்ல இருப்போம்.

நாங்க நினைப்பது என்னன்னா: இந்த டென்ஷன எல்லாம் குறைக்கிரதுக்கு ஒரு செம காமெடி பதிவு எழுதுனா மனசு ரிலாக்ஸ் ஆகிடும்னு நெனச்சிப்போம். தமிழில் சமகாலத்தில் பதிவெழுதும் தலைச்சிறந்த பின்நவீனத்துவவாதியான நம்மளோட பதிவுகள் ஏதும் சமீபத்துல வரலையேன்னு நமது வாசககோடிகள்   பீல் பணிகிட்டு இருப்பாங்களே, அவங்கள திருப்தி படுத்துறதுக்காகயேனும் ஒரு செம காமெடி பதிவு போடனும்னு நினைப்போம். ஏற்கனவே பிரபல பதிவரா இருக்குற நாங்க, இந்த பதிவ மட்டும் பப்ளிஷ் பண்ணிட்டா, விக்ரமன் பட ஹீரோ மாதிரி ஒரே நைட்ல பத்து லட்சம் ஹிட்ஸ்ங்குற நம்ம டார்கெட்ட அச்சீவ் பண்ணி, கேபிள்,சி.பி,உ.த அண்ணாச்சிகள் எல்லாரையும் தாண்டி  டாப் டென் தமிழ் பதிவர்கள்ள இடம்பிடிச்சிடலாம்ன்னு கன்போர்மா நெனச்சிப்போம்.


ஆனா நடப்பது என்னன்னா: நாங்க செம காமெடின்னு நெனச்சிட்டு எழுதுன போஸ்ட் வழக்கம் போலவே செம மொக்கையா இருக்கும். பதிவுலகத்துல நமக்கு தெரிஞ்ச , நம்ம மேல பரிதாப பட்டு வர்ற ஒன்னு ரெண்டு நண்பர்கள்ல தவிர வேற யாருமே நம்ம பிளாக் பக்கம் வந்துருக்க மாட்டாங்க. வழக்கம்போலவே  இந்த போஸ்ட்டுக்கும் 200 ஹிட்ஸ்க்கு மேல வராது. ஏற்கனவே இருக்குற வேல டென்ஷன்+இந்த டென்ஷன்னு செம காண்டாகி கம்ப்யூடர் முன்னாடி உட்காந்து ஸ்க்ரீனையே வெறித்து பார்த்துகிட்டு  இருப்போம். நாளைக்கு ஆபிஸ் போய் மேலதிகாரிக்கு என்னெல்லாம் பொய் சொல்லலாம்னு சீரியா ஒக்காந்து யோசிச்சிட்டு இருப்போம்.
*************************************************

தொடரலாம்....

Saturday, September 1, 2012

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா இளையதளபதி?

இணையத்தளங்களில் அதிகம் கலாய்க்கப்படும் நடிகர் இளையதளபதி விஜய். ஏன் நாமே கூட நெறைய பதிவுகளில் அவர கலாய்சிருக்கம். இது ஏன்னு நம்ம பார்வையில் ஒரு அலசல்.


ரொம்பத்தான் யோசிக்கிறாரு, கண்டிப்பா கோட்டைய புடிச்சிருவாரு.
இணையத்தளங்களில் விஜய் கலாய்க்கப்படுவதற்கு வேறுபட்ட மூன்று காரணங்கள் இருக்கின்றன

1. பப்ளிசிட்டி - விஜயை கலாய்த்து ஒரு பதிவு போட்டால் நிச்சயம் ஹிட்ஸ் எகுறும். பின்னூட்டப் பெட்டி நிரம்பி வழியும். இலகுவாக பிரபலம் அடையலாம். இது பதிவுலகில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒன்று.  இது ஏன் என யோசிப்பவர்களுக்கு புரியக்கூடிய ஒரு விடயம் விஜய் ஆதரவாளர்களும் விஜய் எதிரிகளும் ஏறக்குறைய சம அளவில் இருப்பதும், மிக அதிக அளவில் இருப்பதும். (ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் தானே)

2. விஜய்  பண்ணும் அரசியல் - ரசிகர்களை பகடைக்காய்களாக்கும்  அரசியல் அண்ணன்கிட்ட நெறயவே இருக்கு. இதில் முக்கியமாக அப்பா - நம்ம அப்பா இல்லீங் தளபதியோட அப்பா, இந்த அப்பா, மகன் சம்பாதித்த கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்து பண்ணும் டிராமா. இது பலபேருக்கு பிடிப்பதில்லை. இங்கேயும் நஷ்டம் நம்ம தளபதிக்குதான்.

3. தளபதி கொடுத்த சமீபத்திய படங்கள்: இதுல ரெண்டு வகை இருக்கு. ஒன்னு பனமரம் படுத்தா பம்ப் அடிக்கற வகை. இன்னொன்னு நிஜமானா அன்பின் காரணமாக வருகிற ஏக்கம் (இந்த வசனத்த எழுதினவன் ஒரு கமல் ரசிகன் போல). நேத்து பேஞ்ச மழைக்கி இன்னக்கி மொளச்ச காளான் எல்லாம் ஹிட் குடுக்கறப்போ இவருக்கு  என்னாச்சிங்குற கவலை.

இது மூணும்தான் இளையதளபதி இணையத்தளங்களிலும், வலைப்பூக்களிலும்,  சோசியல் நெட்வர்க்களிலும் அதிகம் கலாய்க்கப்படுவதற்கு காரணமே. முதல் காரணத்துக்கு நாம ஒன்னும் பண்ண முடியாதது. ஒருவரின் பிரபலத்தில் ஒட்டிக்கொண்டு அவரை போற்றியும் தூற்றியும் பிரபலமாவது தமிழனுடைய மரபு, கலாசாரம். அது மாற்றப்பட முடியாத ஒன்று. இரண்டாவது காரணத்தை அலச நாம் அரசியல் பதிவர்கலில்லை, அந்த வேலைய வேறு நல்ல பதிவர்கள் கையில விட்டுட்டம். நாம நமது பிரச்சினைய மட்டும் விலாவாரியா பேசுவம். (அடங்கொக்காமக்கா, மறுபடியும் ஆரம்ம்பிச்சுட்டானுகளா, ச்சே  இந்த பதிவு இன்னம் முடியலியான்னு யோசிக்கறவங்க தயவு செய்தது ஒரு காப்பி குடித்துவிட்டு தொடரவும்) 

துப்பாக்கி வரட்டும்,  ஒங்கட டங்குவார அத்துபுடுறேன்
தளபதியோட படங்கள்ல நாங்க அதிகம் பார்த்த படம் காதலுக்கு மரியாதையோ, சிவகாசியோ கில்லியோ இல்ல, மாறாக வசீகராவும், சச்சினும்தான். வசீகரா தளபதி ஆக்ஷன் ஹீரோவா முழுசா ஜெயிக்கறதுக்கு முதல் வந்த படம். ரோமன்டிக்கா, ஆக்ஷனான்னு யோசிக்கிட்டு இருந்தப்போ வந்தது. சச்சின் இவரு ஆக்ஷன் ஹீரோவா சக்க போடு போட்டுக்கிட்டுரிந்தப்போ வந்தது. தளபதி பீக்ல இருக்கற நேரம் வந்தது. . சச்சின் (நான் என்ன பண்ண, இது மனுபாக்ச்சரிங் டிபாக்ட் - இந்த டயலக மறந்தவங்க இதுக்குமேல இந்த பதிவ படிக்காம இருக்கறது நலம்) நம்ம தளபதி ரொம்பவே நம்பிக்க வச்சி நடிச்ச படம், அந்த படம் வந்தப்போ தளபதி என்ன சொன்னார்னா "இந்த கதைக்காகதான் நான் இவ்வளவு நாளும் காத்துக்கிட்டிருந்தேன்" (இதேதான் வேட்டைக்காரனுக்கும் சொன்னாரு, சுறாக்கும் சொன்னருங்கிரீங்களா? சரி, டீல்ல விடுங்க). ஆனா அந்த படத்தோட ஒன்லைனர் குஷி படத்தோட ஒன்லைனரா இருந்ததாலேயும், ஸ்க்ரீன்ப்ளே நெறைய ஒற்றுமைகள கொண்டிருந்ததாலேயும் மக்கள் அந்த படத்த ஏத்துக்கல, ஆனா நிஜமாலுமே தளபதியோட காமெடி நடிப்பில் இந்த படம் ஒரு மயில் கல். ஆனா அத நம்ம தளபதி தப்பா புரிஞ்சுகிட்டாரு. மக்கள் நம்மள ஆக்ஷன் ஹீரோவா மட்டும்தான் பாக்குறாங்க ரொமாண்டிக் ஹீரோவா இனிமே நாம நடிக்கவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாரு. தொடர்ச்சியா ஆக்ஷன் படங்கள் குடுத்தாரு, இதுல சிவகாசி சரவெடி.. அப்புறமா ஒரு சறுக்கல், மறுபடியும் போக்கிரி, அப்புறம் சில சறுக்கல்கள், சமீப காலாமாகவே சிவகாசி மாஜிக் மறுபடியும் வர்க்அவுட் ஆகாதான்னு அதே பாணில தொடர் சறுக்கல்கள். அப்புறமா மறுபடியும் ரொமாண்டிக் ஹீரோ சப்ஜெக்ட்ல ஒரு கம்பாக் படம். சச்சின் தோல்வியில தளபதி எடுத்த தப்பான முடிவு இன்னம் அவர பாதிச்சிட்டு இருக்கு. காவலன் படம் பாத்திங்கன்னா இது புரியும், சச்சின்ல இருந்த துள்ளலும், இளமையும், குசும்பும் நிஜமா சொன்னா காவலன்ல இல்ல, கொஞ்சம் பயத்தோடயேதான் ஆக்ஷன் இமேஜ விட்டுகுடுத்திருப்பாரு. இதுதான் ஹிஸ்டரி.

சூப்பரு... தளபதியோட ஹேர் ஸ்டைல சொன்னேன்... 
ஜியாக்ரபி என்னனா (குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா) இதெல்லாம் சரியா ஓடாததுக்கு உண்மையான காரணம் எப்பிடி படம் நடிச்சாலும் ஓடும்னு நெனச்சிட்டு நடிப்புலயும் ஏன் நடனத்திலையும் கூட காட்டின போடுபோக்குதனம்தான். படத்துக்கு ஸ்கிரிப்ட், ஸ்க்ரீன்ப்ளே, டைரக்சன் (இதெல்லாம் எங்க விக்கிது?) முக்கியமே இல்ல நான் ஸ்க்ரீன்ல வந்து பஞ்சு டைலாக் பேசி ஆறு சண்ட போட்டா படம் ஓடும்னு நெனச்ச ஓவர் கான்பிடன்ஸ் (இதனால்தான் தல ஓவர்கான்பிடன்ஸ் ஒடம்புக்கு கெடுதின்னு சொன்னாரோ!). இதுக்கெல்லாம் மேல விஜயின் அரசியல அவரு படங்களுகுள்ளையும் ஓடவிட்டது. "தளபதி" அப்பிடின்குற இமேஜ் இருக்கற மாதிரியே பாத்து பாத்து கதைகள தேடினது, தேவையே இல்லாம அரசியல் அடித்தளம் போட தொடங்கினது இப்படின்னு அடுக்கிகிட்டே போகலாம். விஜயின் தோல்விகளுக்கு காரணம் அவரே ஒழிய வேறில்லை.

இப்ப நீங்க சச்சின் படத்தையும் சுறா படத்தையும் எடுத்து பாத்திங்கன்னா ஒங்களுக்கு புரியும். அக்ஷன் காட்சியா இருக்கட்டும், ரொமாண்டிக் காட்சியா இருக்கட்டும், காமெடியா இருக்கட்டும், நடனக் காட்சிகளா இருக்கட்டும், பாடல்களா இருக்கட்டும், நடிப்பா இருக்கட்டும் எதுலயுமே சச்சின்ல இருக்கற தரம், நேர்த்தி, உழைப்பு இவரோட அண்மை கால படங்கள்ல இல்லைங்குறது மறுக்கமுடியாத உண்மை. மீண்டும் நமக்கு அந்த துடிப்பான விஜய் வேண்டும், அது வரும் வரைக்கும் நாங்க அவர கலாய்க்கிறது தொடர்ந்துகிட்டே இருக்கும் (இது அன்புக்கலாய்).

காவலன், வேலாயுதம், நண்பன் வரிசைகள்ள "துப்பாக்கி"  அவற்றையும் தாண்டி  ஒரு மாபெரும் ஹிட் ஆகி விஜயோட தலையெழுத்த மாத்தும், அவரோட மட்டுமில்ல, தமிழ் சினிமாவோட, ஏன் குளிர்விட்டு போனதால ஆட்டம்  போடும் வேறு சில நடிகர்களோட தலையெழுத்தையும் சேர்த்து தீர்மானிக்கும்,  என்னும் நமது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா  இளையதளபதி?