இந்த காதல் இருக்கே காதல், அது ஒரு வீணா போனதுங்க, காதல் இல்லாத ஒரு தமிழ் சினிமாவ பாக்க முடியாது, ஏன் இந்திய சினிமாவே கெடயாதுன்னு சொல்லலாம். இந்த உலகத்துல பிறந்த எல்லா ஜீவராசிகளும் பண்ணுற ஒன்றுதான் இந்த பாழாப்போன காதல். காதல்ன்னா என்னாங்குற டவுட்டே நமக்கு இன்னும் தீரல, ஆனா நெறைய காதல் பஞ்சாயத்து மட்டும் நம்ம கோர்ட்டுக்கு அடிக்கடி வருது. இதுல பஞ்சாயத்து பண்ணி மூக்க ஓடச்சுக்கரதுக்கு நாம என்ன விமலகாசனா, அதனால நம்ம நண்பர்கள் எல்லாருக்கும் சேர்த்து காதல்ல எப்புடி சொதப்புரதுன்னு ஒரு பதிவு போட்டு அவுங்க வாழ்க்கைல ஒளி ஏத்தி வைக்கலாம்ன்னு முடிவு பண்ணி எறங்குனதுதான் இந்த பதிவு.
காதல்ல சொதப்புறதுக்கான வழிகள் நெறயவே இருக்கு, ஒவ்வொன்னா சொல்றோம், நல்லா கேட்டுக்குங்க மக்களே...
பேமானியா இருந்துக்கிட்டு அம்பானி பொண்ணுக்கு ரூட் விடுறது: நம்ம தகுதிக்கு மீறி ஆசைப்பட கூடாது. காதல்ங்குறது இயல்பா வரணும், ஒரு பொண்ணோட அழகையோ அந்தஸ்த்தையோ பார்த்து நாமாக வலிந்து ஏற்படுத்திக்க கூடாது, அப்புடி ஏற்படுத்திக்கிட்டோம்னா அது நிலைக்காது. பண்ணையார் பொண்ணுங்கள சினிமாவுல வேணும்னா வேலகாரன் காதலிக்கலாம் நிஜத்துல அது செட் ஆகாது. ஒததான் விழும்...
மொக்க பிகருக்கு நூல் விடுறது (சப்ப பிகருக்கு இல்லீங்க மொக்க பிகருக்கு): நானும் எப்படியாச்சு லவ் பண்ணனும்ன்னு அடம்புடிச்சி நெறயப்பேர் மொக்க பிகருங்களுக்கு நூல் விடுவாங்க, அப்புறம் லேட்டா புரிஞ்சுக்கிட்டு குத்துதே குடையுதேன்னு அலறுவாங்க, நம்ம சிம்பு சொல்ற மாதிரி காதல நாம தேடி போகக்கூடாது, அதுவா நடக்கணும், நம்மள தலைகீழா போட்டு திருப்பனும். உச்சந்தலைல நச்சுன்னு கொட்டனும்.
மொக்கயா நாலு பிரண்ட்ஸ கூட வச்சிகிட்டு லவ் பண்றது: கூட இருக்கறவன் எப்படிப்பட்டவன்னு தெரிஞ்சுக்காம லவ் பண்ண கூடாது. காதல்னாலே மேட்டர முடிக்கறதுன்னு சில பேர் நெனச்சிட்டு இருப்பாங்க, அது வேலை வெட்டி இல்லாதவன் பண்றதுன்னு சில பேர் நெனப்பாங்க, காதலே ஆப்புதான்னு சிலபேர் நினைப்பாங்க, இப்படி நினைக்கரவங்கள கூட வச்சிட்டு லவ் பண்ணினா நமக்கு எந்த ஆபத்தும் இல்ல, ஆனா நாம லவ் பண்ணின பொண்ணு நடு தெருவுலதான் நிக்கும்.
நாட்டாமைக்கு ஆள் சேர்க்குறது: லவ்வுல என்ன பிரச்சின வந்தாலும் அத நாம தனியாளாதான் ஹான்டில் பண்ணனும் நாட்டாமைக்கு ஆள் புடிக்க கூடாது, இதுக்கு பல காரணம் இருக்கு. ஒன்னு மின்சார கனவு மாதிரி ஆகிடலாம், இல்லனா அந்த பொண்ணு லவ்வ கூட சொல்ல தைரியம் இல்லாதவன் நம்மள எப்புடி வாழ் நாள் முழுவதும் வச்சு காப்பாத்த போறான்னு யோசிக்கலாம், நாளைக்கு ஒரு பிரச்சின வந்தா நாட்டாம தலையும் சேர்ந்து உருளும்,அப்புறம் அவன் வீணா நம்மள முறைப்பான்.
தெய்வீக காதல்னு பீலா விடுறது: ஒரு காதலுக்கு அடிப்படையே காமம்தான், அப்புறம் என்ன தெய்வீக காதல்? எந்த விடயத்தையும் உண்மையோட பார்த்தாதான் அது நிலைச்சு இருக்கும், சும்மா தெய்வீகம் அது இதுன்னு பீலா விட்டா அது சீக்கிரமா புட்டுக்கும். காதல் பண்ணிட்டு அந்த பொண்ண என்ன மியுசியத்துல இருக்கற பொம்ம கணக்கா பாத்துக்கிட்டு இருக்கவா போறீங்க, அப்புறம் என்ன தெய்வீக காதல், மண்ணாங்கட்டி காதல்?
வெட்டி பந்தா காட்டுறது: லவ்வர இம்ப்ரெஸ் பண்றதா நெனச்சு வெட்டியா பந்தா காட்டுறது, அப்புறம் லவ் பண்ண ஆரம்பிச்சதும் அத கண்டின்யூ பண்ண முடியாம விட்டிடுறது, பந்தாவ நம்பி வந்தவனா ரிலேஷன்ஷிப் அங்கேயே கட், இல்லன்னா இவன் ஒரு ஏமாத்து பித்தலாட்டக்காரனோன்னு ஒரு சந்தேகம் வரும், அது நீண்ட காலத்துல பெரிய பிரச்சினையா வெடிக்கலாம். ரஜினிதான் சிகரெட்ட மேல தூக்கி போட்டு பிடிக்கணும், மைக் மோகனுக்கு அது தேவையில்லாத வேல.
முனியம்மாவ லவ் பண்ணிட்டு எமி ஜாக்சன் லெவலுக்கு வர்ணிக்கறது: சுமாரான ஒரு பிகர லவ் பண்ண வேண்டியது, அவள இம்ப்ரெஸ் பண்ணறேன் பேர்வழின்னு கிளியோபேட்ரா ரேஞ்சுக்கு கவிதயாலையே வர்ணிக்க வேண்டியது, இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி அவளுக்கும் நாமதான் உலக அழகியோன்னு ஒரு நெனப்ப வரவைக்க வேண்டியது. அப்புறமா அவ பந்தா தாங்க முடியலடான்னு பிரெண்ஸ்க்கிட்ட புலம்ப வேண்டியது, இல்லனா அவளே நாம எதுக்கு இந்த சப்ப பையன் கூட இருக்கனும்ன்னு நெனச்சு ஒரு அலெக்சாண்டர தேடிப்போனா சட்டி சுட்டதடான்னு பாட வேண்டியது, தேவையா இந்த மானங்கெட்ட பொழப்பு
ரெண்டு மூணு பொண்ணுக்கு ஒரே நேரத்துல நூல் விட்டுகிட்டு, மாறி மாறி உளர்றது: நெறைய அப்பாவிங்க, அப்புறம் சில அடப்பாவிங்க பண்ணுற தப்புதான் இது. சீரியஸா பண்றோமா விளையாட்டா பண்ரோமான்னே தெரியாம மூணு நாலு பொண்ணுக்கு மாறி மாறி நூல்விட்டுட்டு, இங்க அனுப்ப வேண்டிய மெச்செஜ அங்க அனுப்புறது, அங்க சொல்ல வேண்டியது இங்க சொல்றதுன்னு சொதப்பிக்கறது. சுள்ளானுக்கு எதுக்கு மன்மதன் வேல..
லவ்வர கூட வச்சுக்கிட்டு கேத்ரீனா கைப் பத்தி பேசுறது: இந்த பொண்ணுங்க இருக்காளுங்களே ரொம்பவே எக்கோ புடிச்ச கழுதைங்க(அது எக்கோவா ஈகோவா, #டவுட்டு). தப்பி தவறியும் இன்னொரு பொண்ணு ரொம்ப அழகுன்னு சொல்லி வீண் வம்ப விலைக்கு வாங்கிடாதீங்க, ரொம்பவே உஷாரா இருக்கணும். ஒருத்திய கூட வச்சுக்கிட்டு இன்னொருத்திய அறிவுன்னு சொன்னாலும் தாங்கிக்குவாளுங்க ஆனா அழகுன்னு சொன்னீங்கன்னு வைங்க, உடனே இல்லாட்டியும் ரெண்டு நாள் கழிச்சின்னாலும் ரிவீட்டு கன்பர்ம்.
பட்டினில இருந்தவன் பிரியாணி பொட்டலத்த பார்க்குற மாதிரி பொண்ண வெறிக்க வெறிக்க பார்க்குறது: காதலுக்கு அடிப்படையே காமம்தான்னு சொல்லிட்டோம், ஆனா அதுக்காக மட்டுமேதான் பண்றதுன்னா அதுக்குன்னே வேற நெறைய விஷயங்கள் இருக்கு. பொண்ணுனா பூப்போல பாத்துக்கணும், அத விட்டுட்டு விழுங்குறாப்போல பாத்தா எந்த பொண்ணுக்குதான் கூச்சம் வராது, கூச்சம் எரிச்சலா மாற நெறைய நாள் இல்லிங்க, அதனால பாக்குறப்போ கூட கொஞ்சம் ஜாக்கிரதையாவே பாருங்க.
நான் வெஜ் சாப்பிட்டிட்டு அத பிரெண்ட்சுங்க கிட்ட சொல்றது: லவ் பண்றப்போ அப்பப்போ சின்னதா நான் வெஜ் சாப்ட்ரதெல்லாம் சகஜம்தானே, அதுக்காக அத போயி பிரெண்ட்சுங்க கிட்ட சொல்லி ஒங்க வீரதீரத்த காட்டமுற்பட்டீங்கன்னு வைங்க, ரெண்டு சிக்கல் இருக்கு. ஒன்னு அந்த பொண்ண பத்தி அவங்க பார்வையே ரொம்ப தப்பா இருக்கும். அப்புறம் எப்புடி அந்த பொண்ண கட்டிக்கிட்டு பிரெண்ட்சுங்க முன்னாடி தைரியமா நிக்கறது? சீரியஸா தான் நீங்க லவ் பண்ணினாலும் ஆட்டோமெட்டிக்கா அது மேட்டர முடிச்சிட்டு கழட்டி விடுற லவ்வா மாறிடும். இல்ல நீங்க சொன்னது எல்லாமே அந்த பொண்ணுக்கு தெரிய வந்திச்சின்னு வைங்க அதவிட பெரிய ஒரு துரோகத்த அந்த பொண்ணுக்கு நீங்க பண்ணிட முடியாது. அப்புறம் உங்க காதல் பெப்பே தான்.
சொந்தப் பேருல ப்ளாக் எழுதறது: இதுல பெருசா சொல்றதுக்கு என்னங்க இருக்கு, நாங்க சொந்த பேருல ப்ளாக் எழுதினா இப்புடி ஒரு பதிவு போட முடியுமா இல்ல போட்டுட்டுதான் ஒரு பொண்ண லவ் பண்ண முடியுமா?
சொல்றத சொல்லிட்டேம், இதுக்கும் மேல காதலிச்சு சொதப்பிக்கிட்டு தாடி வளர்க்கனும்ங்குறது உங்க தலையெழுத்துன்னா விமலகாசன் என்ன கமலகாசனால கூட உங்கள காப்பாத்த முடியாது
டிஸ்கி 1: டைட்டில் "காதலில் சொதப்புவது எப்புடி?" என்னும் குறும்படத்தில் இருந்து சுட்டோம்,ஆனா அதுக்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல,, ஆனாலும் அந்த பட இயக்குனரு பாலாஜிக்கு நன்றியையும், அவரோட முதல் பட முயற்சிக்கு வாழ்த்துகளையும் தெரிவிச்சிகிறோம்.
டிஸ்கி 2: உடனுக்குடன் பல பாயிண்டுகள் எடுத்துக்குடுத்த அனுபவசாலி மொக்கராசு மாமாவுக்கு எப்புடி நன்றி சொல்றதுன்னே தெரியல, ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி.
டிஸ்கி 3: போனஸா லவ் புரபோஸ் பண்றது எப்புடின்னு ரெண்டு வீடியோ தர்றோம், பார்த்துட்டு உங்களுக்கு எது செட் ஆகும்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க...