நம்ம எல்லாருக்குமே தெரியும் கடந்த மூணு நாலு வருஷமா நம்மள ஏமாத்தாத தமிழ் சினிமா நட்சத்திரங்கள் மூணே பேருதான். முதலாவது சூப்பர் ஸ்டார், ரெண்டாவது சூர்யா அப்புறம் லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் நம்ம தலைவர் சந்தானம். மத்தவங்க எல்லாருமே நம்ம பீலிங்க்ஸ்சோட வெளயாடுரதையே பொழப்பா வச்சிட்டிருக்காங்க. சிலம்பரசனும், கார்த்தியும் சமீபத்துல நம்மள ஆச்சர்யப்படுத்துனாங்க. அவங்க மட்டுமில்ல நாங்களும் இருக்கம்னு இந்த வருஷம் தலையும் தளபதியும் சொல்லியிருக்காங்க (மங்கத்தாவையும் வேலாயுதத்தையும் தான் சொல்றோம்). இந்த நேரத்துலதான் சூர்யாவோட ஏழாம் அறிவு மாட்டிகிரிச்சு. வாரணம் ஆயிரத்துக்கு அப்புறம் இவரோட தெறமய நிரூபிக்க இந்த படம் தான் வருது. இந்த நேரத்துலதான் நம்ம தல ரசிகர்களும் தளபதி ரசிகர்களும் சூர்யாவுக்கு எதிரா போர்க்கொடி தூக்கியிருக்காங்க. இந்த முக்கியமான சூழ்நிலையில நாம ஒரு பிளாஷ் பாக் போடலாம்னு முடிவு பண்ணியிருக்கம். இது பின்னணி பற்றிய ஒரு அலசல். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பதிவு. சினிமா பற்றிய புரிதலுக்கான ஒரு தொடர் பதிவின் ரெண்டாவது பதிவு. தேவை கருதி கொஞ்சம் சீக்கிரமாவே போடுறம்.
இந்திய சினிமாவுல ரெண்டு வகையான ஹீரோக்கள் இருக்காங்க, ஒன்னு ஆக்டர் இன்னொன்னு ஸ்டார். நம்ம MGR ஒரு ஸ்டார், சிவாஜி சார் ஒரு ஆக்டர். அப்புறம் சூப்பர் ஸ்டார் ஒரு ஸ்டார், உலக நாயகன் ஒரு ஆக்டர். இந்தி சினிமாவுல பாத்தீங்கன்னா ஆமீர் கான் ஒரு ஆக்டர், சல்மான் கான் ஒரு ஸ்டார். இப்பிடி ரெண்டு வேறுபட்ட ஹீரோக்கள் இருந்துக்கிட்டேதான் இருப்பாங்க, அந்த வரிசையில்தான் நம்ம இளையதளபதி ஒரு ஸ்டாராவும் அஜித் குமார் ஒரு ஆக்டாராவும் உருவாகிட்டு வந்தாங்க. படையப்பாவுக்கு அப்புறம் சூப்பர் ஸ்டார் குடுத்த வெற்றிடம் தெனாலி தவிர உலக நாயகன் குடுத்த தலைவலி காரணமா தல - தளபதி காம்பினேஷன் சூப்பர் ஹிட் ஆச்சி. அவங்க அவங்க, அவங்க அவங்க வேலைய சரியா செஞ்சிட்டு இருந்தாங்க. இந்த எடத்துலதான் நம்ம சூப்பர் ஸ்டாரோட பாபா படம் வந்திச்சு. யாருமே எதிர்பார்க்காத ஒரு தோல்விய சந்திச்சிச்சு. உடனே தல தளபதில தொடங்கி அதுக்கு அடுத்த தலைமுறையும் ரெடி அப்பிடின்னு நாம நெனச்ச சிம்பு தனுஷ் காம்பினேசன் வரைக்கும் எல்லாருக்கும் சூப்பர் ஸ்டார் நாற்காலி மேல ஆச வந்திச்சு. இந்த போட்டில எல்லாருமே ட்ரை பண்ணிக்கிட்டு இருந்தப்போ இளைய தளபதிதான் ஜெயிச்சாரு. கொஞ்சம் லேட்டவே புரிஞ்சிக்கிட்டாலும் நமக்கு எதுக்கு வீண் வம்புன்னு கொஞ்சம் ஒதுங்கியே இருந்த தலயும் அப்பப்ப ஹிட் குடுத்துக்கிட்டே இருந்தாரு.
இந்த எடத்துலதான் நந்தா படத்துக்கப்புறம் ஒரு நடிகன்குற அந்தஸ்த பெற்ற சூரியாவும் ஒரு ஆர்வத்தில "ஸ்ரீ" அப்பிடின்னு ஒரு படம் நடிச்சாரு, ஊத்திகிச்சு. ஆனா அவரு ஒடனே சுதாகரிச்சிட்டு சைலண்டா அவரோட கேம ஸ்டார்ட் பண்ணினாரு. இவர போலவே விக்ரமும். சூப்பர் ஸ்டார் நாற்காலி போட்டி ஒரு பக்கம் இருக்க இவங்க ரெண்டுபேரும் ஆக்டர் நாற்காலிய குறி வச்சு சைலண்டா முன்னேறிகிட்டே இருந்தாங்க. புதுசு புதுசா கத பண்றது, படத்துக்கு படம் வித்தியாசம் காட்டி நடிக்கிறது, அப்பிடி இப்படின்னு ஜமாய்ச்சிக்கிட்டு இருந்தாங்க. ஒருபக்கம் இளையதளபதி சூப்பர் ஹிட் குடுத்துகிட்டு இருந்தாரு, இன்னொரு பக்கம் இவங்க குடுத்துக்கிட்டு இருந்தாங்க. இந்த நேரம் பாத்து நம்ம தல ரேஸ்ல கார் ஓட்ட போயிட்டாரு. இந்த போட்டியில இடையிலேயே விக்ரமும் லேசா ஸ்லிப் ஆக சூர்யா மேல வந்தாரு. பாபா படத்தோட தோல்வி உருவாக்கி விட்ட ஸ்டார் வெற்றிடத்த இளைய தளபதி நிரப்பிகிட்டு இருந்தாலும், நம்ம உலக நாயகன் ஸ்டார் ஆக்டர்ங்கிற மூணாவது வகைய உருவாக்க (அதுதாங்க ஷாருக் கான் வகை) ட்ரை பண்ணிக்கிட்டு இருந்தாரு (நீண்ட நாளா உலக நாயகனுக்கு ஸ்டார் கனவு இருந்திச்சி, ஆனா சூப்பர் ஸ்டார் கூட அந்த விசயத்துல போட்டி போடுறது கஷ்டம்குறத நல்லாவே தெரிஞ்சு வச்சிருந்தாரு). நம்ம தலையும் அப்ப அப்ப இதேமாதிரி படங்கள் குடுத்துட்டு இருந்தாரு. இப்பிடியே போய்கிட்டு இருந்தப்போதான் சூப்பர் ஸ்டார் சிவாஜி மூலமா திரும்பி வந்தாரு. சிவாஜி படத்த பாத்திங்கன்னா அதுல வெறும் ஸ்டார் மட்டும் தெரிய மாட்டாரு, ஒரு நடிகனா ரஜினி சாரோட உழைப்பும் தெரியும். (ஒரு ஸ்டார் எப்பிடி நடிச்சாலும் படம் ஓடும்குற மாயையைய பாபா உடைச்சி விட்டுருந்துச்சு). Rajini is Back அப்பிடின்னதும் தளபதி மார்கட் ஆட்டம் காண தொடங்கிச்சு. இதுக்கு சிவாஜி படத்துல ஸ்டார் என்பதை தாண்டி தெரிஞ்ச ரஜனியோட உழைப்பும், படத்துல உள்ள நேர்த்தியும் தளபதி படங்கள்ல மிஸ் ஆனதுதான் முக்கிய காரணம். உலக நாயகனும் சூப்பர் ஸ்டாரும் ரெண்டு மூணு வருஷத்துக்கு ஒரு படம்தான்னு சுருங்கிப்போயிட்டப்புறம் தமிழ் சினிமாவின் முழு அடையாளமும் சூர்யாதான் அப்பிடின்குற ஒரு மாயை உருவாக தொடங்கிச்சு. இதுக்கு வாரணம் ஆயிரம் படமும், இந்தி கஜினியோட வெற்றியும் முக்கிய காரணங்கள். இந்த எடத்துல ஒரு உண்மைய சொல்லி ஆகணும், சூர்யாவோட இந்த முன்னேற்றத்துக்கு எப்படி அவரோட கடின உழைப்பு காரணமோ அதே அளவுக்கு விக்ரம், அஜித், மற்றும் தளபதியோட தோல்விகளும் காரணம்.
இந்த கால கட்டத்துலதான் அயன் அப்பிடின்னு ஒரு பெரிய வெற்றிப்படம் வந்திச்சு. இப்போ சூர்யாவுக்கு இன்னுமொரு பொறுப்பும் வந்திச்சு, அது என்னன்னா எல்லா தரப்பினருக்கும் லாபம் சம்பாதிச்சு குடுக்கற படங்கள் குடுக்கனும்குற பொறுப்புதான் (இதுல பட தயாரிப்பு, விநியோகம் அப்பிடின்னு பிலிம் பிசினெஸ் தொடர்புடைய அரசியல் காரணங்கள் நெறயவும் இருக்கு, அது நமக்கு தேவ இல்லாதது). அது வரைக்கும் அந்த பொறுப்ப ஏத்துகிட்டு இருந்தவுங்க நம்ம சூப்பர் ஸ்டாரும் இளைய தளபதியும்தான். அந்த பொறுப்பு வந்ததும், இவரு ஒரு படம் குடுத்தாரு, ஆதவன் அப்பிடின்னு, அது ஒரு ரவிகுமார் படம். ரவிகுமார் படத்துல நம்ம என்ன எதிர்பார்பமோ அது இருந்திச்சி, ஆனா சூர்யாவுக்கு அது ஒரு பொருத்தமில்லாத படம். ஆக்டரா இருந்த சூரியாவுக்கு ஸ்டார் சாயம் பூசி ஸ்டார்-ஆக்டர் அக்கின படம். தளபதி ரசிகர்களுக்கு சூர்யா மேல கோபம் வாரத்துக்கு காரணமா இருந்த படம். அடுத்தபடம் சிங்கம். படத்துலயும் அவரோட பெர்போர்மான்ஸ் நல்லா இருந்ததால படமும் ஓடிச்சு. தளபதி ரசிகர்கள் இன்னமும் கடுப்பாகிட்டாங்க. இது நமக்கு சரிப்பட்டு வராதுன்னு புருஞ்சிக்கிட்ட சூர்யா அவரோட பழைய ரூட்டுக்கே திரும்பிட்டாரு. ரத்த சரித்திரம்னு ஒரு படம் பண்ணினாரு, ரிசல்ட் அவ்வளவு நல்லா வரல, ஆனா நிஜத்த சொல்லணும், சூப்பரா நடிச்சிருந்தாரு சூர்யா. நான் விஜய்க்கு போட்டி இல்லன்னு சொல்ல ரொம்பவே ட்ரை பண்ணியிருந்தாரு. அதோட எழாம் அறிவு, மாற்றான் அப்பிடின்னு ரெண்டு மாறுபட்ட படங்கள் கையில.
இப்பதான் நம்ம எந்திரன் சார் வந்தாரு. இந்தப் படத்துல ஒரு நல்லது நடந்திச்சு. எந்திரன் படத்த எடுதிக்கிட்டீங்கன்ன அது ஒரு ஸ்டார் படமே இல்ல, சிவாஜி படத்தைவிட அதிகமானதும் கடினமானதுமான உழைப்ப கொட்டியிருந்தாரு சூப்பர் ஸ்டார். இது சுப்பர் ஸ்டார் நாற்காலிக்கு போட்டி போட்டுக்கிட்டுருந்தவங்களுக்கு ஒரு முக்கியமான செய்திய சொல்லிச்சு. அது என்னன்னா, ரஜினியோட கடைசி மூச்சி இருக்க வரைக்கும் யாரும் அந்த நாற்காலிய தொட்டு கூட பாக்க முடியாதுங்குறதுதான். அதோட சேர்த்து, ஒரு குடும்பத்தையோ ஊரையோ நாட்டையோ காப்பத்துற மாதிரி கதைய அமைச்சு பதினாறு மெகா வில்லனையும் இருநூறு கொசுறு வில்லனையும் அடிச்சிட்டு விரல சொடுக்கி தொடைய தட்டி பத்து பதினஞ்சு பஞ்ச் டயலாக் பேசிட்டா மட்டும் சுப்பர் ஸ்டார் ஆகிட முடியாதுன்னும் கத்து குடுத்துச்சி.
இப்பதான் தமிழ் சினிமாவுலையே ரொம்பவும் ஆரோக்யமான ஒரு திருப்பம் வந்திச்சு. சூப்பர் ஸ்டார் பாபா அப்பிடிங்கிற தோல்விக்கப்புறம் எப்பிடி பின்னுதைத்தாரோ (அதாங்க Bounce Back) அதேபோல (கொஞ்சம் லேட் ஆ இருந்தாலும் லேட்டஸ்டா நம்ம தளபதிவும் காவலன்னு ஒரு சுமார் ஹிட் படம் குடுத்தாரு. விக்ரமுக்கு தெய்வத் திருமகள், தலைக்கு மங்காத்தா வருது. அதேபோல வேலாயுதம் மேலயும் பலத்த எதிர்பார்ப்பு இருக்கு. அது மட்டுமில்ல தளபதியோட அடுத்த படம் நண்பன், யோஹன்னு இப்பவே கள கட்டுது. தலைக்கு பில்லா இரண்டாம் பாகம், விக்ரமுக்கு ராஜ பாட்டை, கரிகாலன். இப்ப அந்த தலமுற நடிகர்கள் எல்லாரும் அவங்க அவங்க ரூட் எதுன்னு தெளிவா புரிஞ்சுக்கிட்டங்க, இனிமே நிச்சயமா பட்டய கெளப்புவாங்க. இளைய தலமுறைகிட்ட(ஆர்யா, விஷால், ஜீவா அண்ட் கோ) இருந்த இந்த புரிதலும் நட்பும் இப்ப இந்த தலைமுறைகிட்டையும் வந்திருச்சு. கண்டிப்பா இவங்க கிட்ட ஈகோ கிடையாது, ஆரோக்கியமான போட்டி மட்டுமே இருக்கு.
இதுதான் சூர்யாவுக்கு நெசமான சவாலே, இப்ப இவரு ஒரு ஆதவன் நடிச்சாருன்னா நிச்சயமா ஊத்திக்கும், அது அவருக்கும் நல்லாவே தெரியும். இனிமே இவருக்கு இன்னொருத்தர் வேலையையும் சேர்த்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை, செய்யவும் முடியாது. தல தளபதி மாஸ் முன்னாடி போட்டி போடறதும் ரொம்ப கஷ்டம்னு தெரிஞ்சு வச்சிருக்காரு. எழாம் அறிவு வேலாயுதத்துக்கு போட்டி இல்ல, மங்காத்தா எழாம் அறிவுக்கு போட்டி இல்ல, இந்த மூணு படமும் வேற வேற ஜோனர், அந்த வகையில மூணுமே பெஸ்ட்டா இருக்கும்குறது நம்ம நம்பிக்கை. ஆனா தொடர் தோல்விகளால துவண்டு போயிருந்த தல-தளபதி ரசிகர்கள் சூர்யா மேல உள்ள கோபத்த தீர்த்துக்க இதத்தான் சரியான தருணமா பாத்துட்டு இருக்காங்க. நம்ம பார்வை என்னனா சூர்யா ஸ்டார்-ஆக்டர்ங்குற இமேஜ விட்டுட்டு ஆக்டர்ங்குற இமேஜ் மட்டுமே உள்ள படங்கள்ல நடிக்கணும். தளபதிதான் ஸ்டார், தலைதான் ஸ்டார் ஆக்டர், சூர்யாதான் ஆக்டர் இந்த கூட்டணி சரியா அமைஞ்சா தமிழ் சினிமாவோட மூணு கான்கள் இவங்கதான் (தூண்கள்னுதானே சொல்லுவாங்க இது என்ன கான்கள்னு யோசிக்காதிங்க, இது சல்மான் கான், அமீர் கான், ஷாருக் கான்). அப்ப விக்ரம்ன்னு கேக்குறீங்களா, அவரு அஜய் தேவ்கன். (அப்புறமா நம்ம இளைய தலமுற அதுதாங்க ஆர்யா, கார்த்தி, ஜீவா, ஜெயம் ரவி, சிம்பு, தனுஷ், பரத் எல்லாம், ரித்திக் ரோஷன், ஷஹிட் கபூர், இம்ரான் கான், ரான்பீர் கபூர், ஜான் ஆப்ரஹாம், அந்த லிஸ்ட்டு)
இவங்க மூணுபேர் படமும் ஜெயிக்கணும் (அதுக்கு அவங்க நல்ல படம் குடுக்கனும்னு சொல்ற ஒங்க மைன்ட் வாயிஸ நாங்க கேட்ச் பண்ணிட்டோம், அதுதான் எங்க ஆதங்கமும் ), அப்பத்தான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நல்லது, அப்புறம் நடிகர்களே ஈகோ எல்லாத்தையும் விட்டுட்டு நடிக்கறாங்க, பழகிக்கறாங்க, ரசிகர்கள் நாம அடிச்சுக்கனுமா? எப்பிடியும் நாம சினிமா ரசிகர்கள்தான், யாரு நல்ல சினிமாவ குடுத்தாலும் ரசிப்பம், முக்கியமான ஒரு விஷயம், நீங்க யாரு ரசிகரா இருந்தாலும் பரவாயில்லை, தயவு செய்து மறுபடியும் எப்பிடி நடிச்சாலும் இவரு படம் ஓடும்ங்கிற எண்ணத்த மட்டும் யாருக்கும் உருவாக்கி விட்டுறாதீங்க, அப்புறம் நமக்கு சுறாவும், அசலும், ஆதவனும், அருளும்தான் மிஞ்சும்.
டிஸ்கி: இவனுக யாரு ரசிகர்கள் அப்பிடின்னு குழம்பி போயிருக்கற ஒங்களுக்கு மறுபடியும் சொல்றோம், நாங்க தலதளபதி (சந்தானம்) பான்ஸ். நல்ல சினிமாவை ஆதரிப்போம் கெட்ட சினிமாவை களாய்ப்போம், அது யாரு படமா இருந்தாலும் சரி, பாகுபாடே பார்க்க மாட்டோம். இதுதான் கொள்கை விளக்கம்.
டிஸ்கி 2: உங்களோட கமேன்ட்சும் ஓட்டும்தான் எங்களுக்கு பூஸ்ட். ஒங்களுக்கு என்ன தோணுதே, அத அப்புடியே கீழ பதிவு செஞ்சிட்டு போங்க சார்.
Post is too good nalla analysys ... but u have to accpet a fact nalla story or script ah iruntha entha padamum hit agum athuku Example myna .... if big stars acted in a good script mass hit agum ithan true .. mathapadi star value is nothing before script apadi star value irunthuchuna Sura aegan aadavan kandasamy lam hit ayurukanum thalaiva yen agala script selection .... if they select good script like kavalan billa deivathirumagal etc sure Hit so SCRIPT SELECTIOn is matter than Start value
ReplyDeleteand another thing is that technical team works
ReplyDeletelatest ko eduthukonga who thought it will be a blockbuster but a criticist knows it will become hit coz a technical aspects sounds for a film ipa ko eduthkitingana good director + Music + camera +script + dilouges everything is perfect thats secret success of FIlm
Coming to vijay he always listen scripts but tat lack technical ascpcets not good technical team
coming to ajith has good technical team but lacks in script
coming to surya script+ technical team athan avaorda success nalla zoom pani parunga surya oda maximum films are by good directors like ar murugadoss gautham vasudev menon kv anand music pathingana namma harris jayaraj oda music vache otirvar aaadhavan matamana padam but harris pata vachu theritar harris a vita yvuan ar rahman ipadi technical ascpects he is strong
vijay mulichutar he too now strong in technical teams like he joineed with ar murugadoss harris
shankar harris gautham rahman so next 2 years ku vijay than mass surya will be class
ajith mulichukita ithu arokyamana potiya irukum ena santhanam fans nan solrathu seriya nengale enaku reply panungo
You are right in your thoughts, but there is a big factor called execution. cinema is a team work, only a few star's have realized it. Ya all the directors worked with Surya are good directors, there is no doubt about it, but there is a big doubt whether Surya joined the good directors or they became good by joining with Surya. If you take Bala, ARM, KV, and Goutham the successful movies of them were just their 2nd movies. In case of Amir and Krishna they were their first movies. That means the claim by Vijay fans that Surya give successful movie by joining hands with established directors is false (only the established director he Joined hands is KSR and you know the outcome), What we think is the freedom Surya gives to the directors (it's mainly because of his Image and his fan's expectation), the team they become and the sort of execution they pull off together are the keys. In Vijay's and Ajiths case the Image on them and the influence they have make the directors fails. Classic examples would be Kireedom and Kuruvi (A.L Vijay and Dharani). That they should really learn from actors like Surya, Arya, Jiiva and even Jeyam Ravi. There is something when ARM, KV and Gautham says Surya is directors delight (unlike one acor repeatedly claiming him self as Director's Hero - You know who is that)
ReplyDeleteComing to Adhavan, it is an out and out KSR movie, but not suitable for Surya. It needs a bigger star but surya pulled it off in a Ok manner, It is the 3rd biggest grosser of 2009 (According to BehindWoods http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-4/top-20-movies-2009/aadhavan.html). About Kandhasamy, We think it is one of Vikram's best performance to date (far better than DTM). they movie failed because of the similarity it had with Ayan and Shivaji. Sushi Ganeshan gave a lot of expectation as a director his first two movies but definitely failed in Kandhasamy.
About Ajith you say, He is defenetly a Directors Actor, When ever he submit him self to a director completely he gave Wonderful movies (KSR-Ajith, Saran-Ajith (Exception Asal, he influenced a lot), ARM-Ajith). Kandippaa avaru mulichchukkanum.
Definitely the script, technical team and the execution are the success of a movie, Star value gives a big opening (that is why Ajith's movies have the bigger opening after Rajni's movies) but how it fairs in a long run depends on the script and technical team. Ko and VTV even myna, and Subramaniya puram are good examples for the possitive side Asal and Sura are examples for the negative.
ReplyDeleteAlso a Star can make a difference to a movie, A star can pull of A mediocre movie to a biggest grosser. Singam, Sivakasi, Thiruppachchi and most of Rajni's movies are example for this category. this movies were well executed apart from script and technical team.
All the actors and directors we have in tamil cinema are highly talented, But they miss a beat sometimes. There will be an analysis on this factors coming up soon (post the release of Mangatha)
Thanks AG For your thoughtful comments. This kind of thoughtfulness is what needed for a good cinema culture. We spend a lot of money and time in watching movies, so we deserve some quality in the movies. Filmakers can't keep on saying that we are making films to satisfy the audience after giving some junks. nammala enna aga thugannu nenachchittangaala?
Again cool :) i accept all factors and
ReplyDeletei forget to mention this too even though star value does not help movie with movie scripts ... they highly give good opening nalla vasul pota kasa first show la edukra therama star value ku than iruku :D inthakalathula enga padam 100 nal oduthu very rare case ellam net and dvds than but theatre vasul highly depends on first week collections athukaporam padam epadi irukunu poruthu than produceroda thala yeluthu
in that case star value ilama padam odathu for certain times
i mean that ithey stars nalla script and technical team iruntha namma tamil cinema world levela kalakalam ithu ipa than stars ku purinjurukum pola ?
Thanks AG For your thoughtful comments. This kind of thoughtfulness is what needed for a good cinema culture. We spend a lot of money and time in watching movies, so we deserve some quality in the movies. Filmakers can't keep on saying that we are making films to satisfy the audience after giving some junks. nammala enna aga thugannu nenachchittangaala?
ReplyDelete// :D therinja katha thana
ஸ்டார் - ஆக்டர் அலசல் பிண்ணியிருக்கீங்க பாஸ்... அதற்காக கைதட்டலுடன் ஒரு விசில் (சொய்ய்ய்ய்ய்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்)
ReplyDeleteரஜினியோட கடைசி மூச்சி இருக்க வரைக்கும் யாரும் அந்த நாற்காலிய தொட்டு கூட பாக்க முடியாதுங்குறதுதான். //
ReplyDeleteசூப்பர் ஸ்டாரின் இடத்தை மற்ற நடிகர்கள் நினைத்துப்பார்க்க முடியாத உயரத்தில் ரஜினி சார் போயிட்டாரு என்பது உண்மை தான்
உங்க பதிவுகளில் இந்த பதிவு ஒரு மைல்கல்லாக இருக்குமென்பதில் ஐயமில்லை... தொடர்ந்து கலக்குங்க
ReplyDeleteநன்றி...மாய உலகம்
ReplyDeleteமாய உலகம் உங்களின் தொடர்சியானா ஆதரவுக்கு நன்றி.. தொடர்ந்து வாங்க.. ஆமா நண்பரே சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்தான்.. அவர தொடுரதுக்கு இன்னொருத்தன் பிறக்க கூட முடியாது!!!
சூர்யாவால் இன்னும் மாஸ் ஹீரோ ஆக முடியவில்லை என்பதை சரியாகச் சொல்லி இருக்கீங்க..விஜய்-அஜித் தான் மாஸ்!!
ReplyDeleteஅப்பா..... மிக விரிவான அலசல், நிறைய விஷயங்களை நிதானமா யோசிச்சு எழுதி இருக்கீங்க, பாராட்டுக்கள்!
ReplyDeleteஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான் ஊருக்கெல்லாம்!
ReplyDeleteநல்ல அலசல்..உங்க மற்ற பதிவுகளும் நல்லா இருக்கு..வாழ்த்துகள்!
ReplyDeleteதமிழ்மணத்துல உங்க பதிவை சப்மிட் பண்ணுங்க...! http://www.tamilmanam.net/user_blog_submission.php
ReplyDelete///(நீண்ட நாளா உலக நாயகனுக்கு ஸ்டார் கனவு இருந்திச்சி, ஆனா சூப்பர் ஸ்டார் கூட அந்த விசயத்துல போட்டி போடுறது கஷ்டம்குறத நல்லாவே தெரிஞ்சு வச்சிருந்தாரு)/////!
ReplyDelete////இது சுப்பர் ஸ்டார் நாற்காலிக்கு போட்டி போட்டுக்கிட்டுருந்தவங்களுக்கு ஒரு முக்கியமான செய்திய சொல்லிச்சு. அது என்னன்னா, ரஜினியோட கடைசி மூச்சி இருக்க வரைக்கும் யாரும் அந்த நாற்காலிய தொட்டு கூட பாக்க முடியாதுங்குறதுதான். ////
தலைவர் இப்போ சூப்பர் ஸ்டார் ரேஞ்சு தாண்டி இப்போ இந்திய சூப்பர் ஸ்டார் ஆகி விட்டார்!
தலைவரின் நாற்காலி இனிமேல் பிறப்பவர்களுக்கும் கிடைக்காது (ஒரே புரட்சி தலைவர்,ஒரே நடிகர் திலகம்,ஒரே சூப்பர் ஸ்டார்..!)என்பதே உண்மையாக இருந்தாலும்……
மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு கமேண்ட்சும் நச்ச்!
(தளதளபதி ரசிகர்களும் சந்தானம் சார் போல லொள்ளு பார்ட்டிகள் என நிருபித்துள்ளீர்கள்!! அருமையான பதிவு..வாழ்த்துக்கள் டு ''நண்பேண்டா'' நண்பர்கள்..!)
இந்த மூணு படமும் வேற வேற ஜோனர், அந்த வகையில மூணுமே பெஸ்ட்டா இருக்கும்குறது நம்ம நம்பிக்கை.//
ReplyDeleteநம்புவோம்.
அலசல் அருமை.
நாங்களும் சந்தானம் fans தான்! அதான் உங்ககூட இனைஞ்சிட்டோம்! :-)
ReplyDeleteநன்றி saro, செங்கோவி, பன்னிக்குட்டி ராம்சாமி, உங்கள் ஆதரவு தொடர்ந்தும் எங்களுக்கு தேவை தமிழ் மணத்தில் எதோ சட்ட சிக்கல் (அய்யய்யோ தொழில்நுட்ப கோளாறு). சீக்கிரம் சரி பண்ணிர்றோம்.
ReplyDeleteஜீ... உங்கள் பதிவுகளை படித்தேன், அதில் இழையோடும் லொள்ளும், கருத்தொற்றுமையும் உங்களை தலதளபதி பான்னு பறை சாற்றிச்சு, அடிக்கடி நம்ம ப்ளாக்குக்கு வாங்க டீ காப்பி எல்லாம் சூடா இருக்கும்
//உலக நாயகன் இடத்தை அஜீத் அடைய முயல்வதாக
ReplyDeleteதெரியவில்லை. தனக்கென ஒரு ரூட்டில் போகிறார்.
தசாவதாரதம் படத்திலேயே அமெரிக்க வில்லன் வேடம்
உலக நாயகனுக்கு சூட் ஆகலை. அஜீத்துக்கு வில்லன் வேடம்
அல்வா சாப்பிடற மாதிரி. மங்காத்தா படத்தை எதிர்பார்த்து
இருக்கும் அஜீத் ரசிகர்களில் நானும் ஒருவன். தலைவரை
‘கடவுள் மாதிரி’ என்று சொன்ன முதல் தமிழ் நடிகர் அஜீத் ஒருவரே.
குருவியை பற்றி ‘தளபதி’ என்ற பெயரில் வந்த analysis
முழுவதும் censor செய்யப்படவேண்டிய பகுதி. தலைவரின்
‘தளபதி’ பட டைட்டில் குருவிக்கு வேண்டாம். ‘குருவி’ என்ற
பெயரில் அவரைப் பற்றி எழுதுவதில் ஆட்சேபனை இல்லை.
விக்ரம் பற்றி ஏதோ எழுதி இருந்தது படித்தேன். ‘பிதாமகன்’
மிக மிக உயர்ந்த நடிப்பு. உலகநாயகன் செய்யாததை தமிழில்
செய்து சாதித்துக் காட்டியவர் விக்ரம். தெய்வத் திருமகள்
காப்பி அடித்த படம். No comments.
‘சிவாஜி-எம்.ஜி.ஆர்’ – அன்று.
‘கமல்-ரஜினி’ – நேற்று.
‘கமல்-ரஜினி’-இன்று. (இது உண்மை)
நாளை யார் என்பது தான் கேள்வி!!
ஹிந்தி கான்களுக்கும், தமிழ் படங்களுக்கும் என்ன சம்பந்தம்?
“அமீர் கான் யார்? சல்மான் கான் யார்? ஷாரூக் கான் யார்?”
இதெல்லாம் நாம் மண்டையை உடைத்து கொள்ள வேண்டியதில்லை.
-=== மிஸ்டர் பாவலன் ===-//
இது நமது பதிவுக்கு போடப்பட்டிருந்த எதிரூட்டம். பதிலளிப்பது நமது கடமை. அது வேறு ஒரு பதிவின் பின்னூட்டத்தில் இருந்ததால் கண்ணியம் கருதி அங்கு பதிலளிக்காமல் இங்கு பதிலளிக்கிறோம்
எந்த கருத்துக்கும் ஒரு எதிரூட்டம் இருக்கும். உங்கள் கருத்துக்கு நாம் மதிப்பளிக்கிறோம். அதே நேரம் நாம் இதை விளக்கவும் கடமைப் பட்டுள்ளோம். அஜித் பற்றி கூறியதெல்லாம் உலக நாயகனால் ஒரு ஸ்டார் ஆக்டர் ஆக முடியவில்லை ஆனால் அஜித் அதை சாதித்துக் காட்டினார் என்பதுதான். நெகடிவ் ஷேட் கொண்ட பாத்திரங்கள் உலகநாயகனுக்கும் அல்லவா சாப்பிடுவது போன்றதுதான், தசாவதாரம் வில்லன் பாத்திரம் ஒட்டாமல் போனதற்கு அவரது நடிப்பை விட மேக் அப் வெளியே தெரியும் மட்டமான லைடிங்கும் ஒளிப்பதிவும்தான் முக்கிய காரணம். உலக நாயகன் சாதனைகளை நாம் மறக்க முடியாது, பதினாறு வயதினிலே சப்பாணி இதுவரை யாராலும் தொட முடியாத கதாபாத்திரம். உலக நாயகனுக்கு இயல்பாய் வரும் நகைச்சுவை மன்மதன் அம்பில் காணமல் போனது கவலை தருவது. ஸ்டார் கனவில் மூழ்கி அவர் சமீப காலமாக அண்டர் டெலிவரியே பண்ணிக்கொண்டிருக்கிறார் என்பதே நிஜம் (தசாவதாரம் ஒரு நல்ல உதாரணம்)
விஜய் மீது உங்களுக்கு உள்ள வருத்தம் புரிகிறது, என்ன செய்வது விஜகாந்திர்க்கு பிற்பாடு அவரே தளபதி என அறியப்படுகிறார், ஒருவேளை டாகுடர் என கூறியிருந்தால் நீங்கள் சந்தோசப்பட்டிருப்பீர்களோ என்னவோ (தளபதி ரசிகர்கள் கடுப்பாகி இருக்க மாட்டாங்க).
விக்ரம் பற்றிய உங்கள் கருத்து சரியானது, எனினும் சித்தனை விட சக்தியே மனதில் நிற்பதாக எங்களுக்கு ஒரு எண்ணம். ஒருவேளை நாங்க சந்தானம் ரசிகர்கள் என்பாதால் இருக்கலாம். சித்தன் எங்களை பாதித்தது ஒரே இடத்தில் தான், சக்தியின் பிணத்தின் முன் கதறி அழும் பொது, அந்த காட்சியில் கூட வலிமை சேர்த்தது பார்வையாளனுடன் ஒன்றிப்போன சக்தியே என்றும் ஒரு கருத்து இருக்கிறது. விக்ரம் ஒரு திறமையான நடிகர் என்பதில் ஐயம் இல்லை. ஆயினும் தெய்வத்திருமகளை விட அந்நியனில் சிலபகுதிகளிலும் (கண்டிப்பாக மாறி மாறி பேசும் போலீஸ் ஸ்டேஷன் காட்சியில் அல்ல) கந்தசாமியிலும் அவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிப்பதாக படுகிறது.
கடைசியாக கான்கள் பற்றி எழுதியதற்கு இரண்டு காரணம், ஒன்று ஸ்டார், ஆக்டர், ஸ்டார்-ஆக்டர் என்கிற கான்செப்டை விளக்குவது, இரண்டாவது போட்டி போட்டு வெற்றியடைவதற்காக ஒருவரை காப்பியடிக்கவோ அல்லது ஒரே பாதையில் பயனிக்கவோ தேவையில்லை, தமக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு அதனை திறம்பட செய்வதே போதும் என்பதை விளக்குவதர்காக்கவுமே. ஒரு மக்கள் திலகம் தான், ஒரு நடிகர் திலகம்தான், ஒரே சூப்பர் ஸ்டார், ஒரே உலகநாயகன் தான். சூப்பர் ஸ்டார் மக்கள் திலகத்தின் பாதையில் போயிருந்தால் அவருக்கும் ஜெயிச்சிருக்க முடியாது, உலக நாயகன் சூப்பர் ஸ்டார் பதில் போயிருந்தால் அவராலும் ஜெயிச்சிருக்க முடியாது. இதனை இன்றைய தலைமுறைக்கு விளக்கவே கான்களை பயன்படுத்த வேண்டியதாயிற்று. மற்றபடி தமிழ் சினிமாவையும் இந்தி சினிமாவையும் காம்பயர் செய்வதற்காக அல்ல.
deen_uk பின்னூட்டத்துக்கு நன்றி. நமது பதிவை http://www.envazhi.com/?p=27984 இல் பகிர்ந்ததற்கும் நன்றி. தொடர்ந்தும் உங்கள் ஆதரவு நமக்கு தேவை.
ReplyDeleteநன்றி கோகுல்
ReplyDeleteதொடர்ந்து வாங்க...
அட கலக்கிடீங்க போங்க...
ReplyDelete@ஜயந்தன் ரொம்ப ரொம்ப நன்றிங்க... தொடர்ந்து உங்க சப்போர்ட்டதர்றதுக்கு மீண்டும் நன்றி...
ReplyDeletefantastic one.....
ReplyDelete@santhanam saiz thank you...
ReplyDeleteயாரையும் கிண்டல் பண்ணாத நியாயமான பதிவு.. அப்படியே நம்ம சூப்பர் ஸ்டார் ர விட்டு கொடுக்காம பேசுனது நல்ல இருந்தது.. Castro Karthi
ReplyDelete@Castro Karthi
ReplyDeleteநாம எதுக்குங்க அவுங்கள கிண்டல் பண்ணனும்... எல்லாரும் நல்ல படம் குடுத்தா நல்லா இருக்கும்னு சொல்றோம்!!!!
நல்லா இருக்கு.
ReplyDeleteஎன் வலைப்பூவிற்கு வந்ததற்கு நன்றி!
ரொம்ப நீளமான பதிவு. ஆனா ஒரு சராசரி ரசிகனுக்கு இந்த பதிவின் மூலமாக விரிவான விளக்கம் கொடுத்திருக்கிங்க.
ReplyDelete@N.H.பிரசாத் நன்றி பிரசாத்.. இது எங்க கடமை.. தொடர்ந்து வாங்க... இதுபோல இன்னும் நிறைய எழுதுவோம்!!!
ReplyDelete@tamil நன்றிங்க.. இதுல என்னங்க இருக்கு.. ஒருத்தருக்கு ஒருத்தர் வந்து போயிக்கிறதுதானே...தொடர்ந்து வாங்க...
ReplyDeleteஉங்க நேர்மை பிடிச்சிருக்கு
ReplyDelete@Ramesh உங்க கமென்ட் புடிச்சிருக்கு
ReplyDeleteஇன்னைக்கு தான் முதல் தடவ உங்க ப்ளோக்குக்கு வரேன் ... superb ...
ReplyDeleteநம்ம ஊருல நமக்கு யாரா பிடிக்குமோ அவங்களோட வெற்றியையும் பிடிக்காதவங்க தோல்வியையும் மட்டுமே பேசவோ அலசவோ ஆளு இருக்கு .ஆனா நீங்க நல்லா எழுதிருகிங்க .ரொம்ப நல்லா தமிழ் சினிமாவ தெரிஞ்சவங்களால மட்டுமே இந்த மாதிரி பதிவு எழுத முடியும்.
-- உதவாகர....
u did great job butti paul....
ReplyDeleteChristopher(உதவாக்கரை) said...
ReplyDelete//இன்னைக்கு தான் முதல் தடவ உங்க ப்ளோக்குக்கு வரேன் ... superb ...
நம்ம ஊருல நமக்கு யாரா பிடிக்குமோ அவங்களோட வெற்றியையும் பிடிக்காதவங்க தோல்வியையும் மட்டுமே பேசவோ அலசவோ ஆளு இருக்கு .ஆனா நீங்க நல்லா எழுதிருகிங்க .ரொம்ப நல்லா தமிழ் சினிமாவ தெரிஞ்சவங்களால மட்டுமே இந்த மாதிரி பதிவு எழுத முடியும்.
-- உதவாகர....//
நன்றி கிறிஸ்தோபர், தொடர்ந்தும் நல்லதா எழுத முயற்சிக்கறோம்..
cheyan said...
ReplyDelete//u did great job butti paul....//
Thanks cheyan
supera sonninga bossssss.........
ReplyDeletethala thalapathy na masssssss.....
vazhka oru vattam thaane......