Sunday, August 21, 2011

சந்தானத்தின் முதல் திரைப்படம் எது? வெளிவராத உண்மைகள், எக்ஸ்க்ளுசிவ்.

தலைவர் சந்தானம் கடந்த இரண்டு மூன்று வருஷமா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாதவரா மாறிட்டாரு. இன்னைக்கு  ஒரு படத்திற்கு பூஜை போடும் தயாரிப்பாளரோ அல்லது இயக்குனரோ  ஹீரோ , ஹீரோயின், இன்ன பிற நடிகர்களை எல்லாம் டிசைட் பண்ணறதற்கு  முதல்லயே நம்ம சந்தனாத்திற்கு அட்வான்ஸ் குடுத்துடறாங்க. (அவரும் இதுதான் சான்ஸ்னு லட்சங்களை தாண்டி கோடிகளுக்கு போய்ட்டாரு). உடலை அஷ்டாங்கம் செய்யாம, கருத்து சொல்றேன் பேர்வழின்னு படுத்தி எடுக்காம அவருக்குன்னு டயலாக் டெலிவரில ஒரு புதிய ஸ்டைலை வச்சிக்கிட்டு வெற்றி நடை போடுறாரு. இவரது காமெடிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஒவ்வொரு நாளும் பல மடங்குல கூடிகிட்டு இருக்கு எங்குரதுக்கு பேஸ்புக் பக்கங்களே சாட்சி. அவ்வளவு ஏன்  நீங்க வாசிச்சிகிட்டு இருக்குற இந்த ப்ளாக்கே சந்தானத்தின் ரசிகர்களால் சந்தானத்தின்  ரசிகர்களுக்காக எழுதப்படற ஒரு ப்ளாக். இந்த பதிவுல அவர பத்துன ஒரு முக்கியமான உண்மைய, அதாவது இதுவரைக்கும் யாருக்கும் தெரியாத ஒரு உண்மைய சொல்ல போறோம்.

சந்தானத்திடம்  உங்கள் திரையுலக குரு யாருன்னு கேட்டா உடனே அவரு சிம்புவின் (STR) பேரை சொல்வாரு. அதுக்கு பல காரணங்கள் இருக்கு . முக்கியமான காரணம் மன்மதன். ஆமா அதுதான் சந்தானத்தை தமிழ் சினிமா அடையாளம் கண்டுகொண்ட முதல் படம். பொபி என்னும் கேரக்டரில் சந்தானம் முழு நீளகாமெடியனாக நடித்து வாயுள்ள பிள்ளை என தன்னை நிரூபித்த முதல் படம் (இந்த படத்தில் தலைவர் கவுண்டரும் இருக்காரு, ஆனா அவரு நடிச்ச சில சீன்களை சிம்பு வெட்டி போட்டுட்டாரு, அப்புறம் அது ஒரு பெரிய பிரச்சினையானது வேற கதை) . So இந்த படத்துல இருந்து சந்தானத்த ஆப்சேர்வ் பண்ண ஆரம்பிச்சவுங்க எல்லாம் சந்தானத்தின் முதல் படம் மன்மதன்னு நெனைசாங்க. இது 2004 தீபாவளிக்கு வெளிவந்த படம்.

ஆனா கொஞ்ச விவரம் தெரிஞ்சவர்கள், சந்தானத்தை பற்றிய நியூஸ்களை தேடி படித்தவர்கள், மற்றும் பேசாத கண்ணும் பேசுமே (ஹீரோ:மோனல், ஹீரோயின்:குணால்) என்னும் மொக்க படத்தை பார்த்தவர்கள் எல்லாம் சந்தானம் அதுல ஒரு துக்கடா கேரக்டரில் நடித்ததை அறிந்திருப்பார்கள். விக்கிபீடியால கூட இதுதான் இவரின் முதல் படமா குறிப்பிடபட்டு இருக்கு (அது யாரோ ஒரு புண்ணியவான் அவருக்கு தெரிஞ்ச விசயத்தை எடிட் பண்ணி போட்டு இருக்காரு, விக்கியை யாரு வேணும்னாலும் எடிட் பண்ணலாம்ங்க).   இந்த படத்தின் இயக்குனர் முரளி கிருஷ்ணா. இவரு 2001ல் பார்வை ஒன்றே போதுமே என்ற பாடல்களால் ஹிட் ஆன ஒரு படத்தை கொடுத்தவரு. பார்வை ஒன்றே போதுமே வெற்றியின் பின் அதே நடிகர்களை வைத்து அவசர அவசரமாக எடுத்த படம்தான் பேசாத கண்ணும் பேசுமே. இது ஒரு மொக்க படம். இந்த படத்துல இவரு செஞ்ச ஒரே ஒரு நல்ல காரியம் சின்ன பாப்பா பெரிய பாப்பா, காஸ்ட்லி மாப்பிளை மற்றும் சில விஜய் டிவி ப்ரோக்ராம்களில் தலைகாட்டியிருந்த ஒரு காமெடி நடிகருக்கு சின்னதா ஒரு ரோல் குடுத்து இருந்தாரு. அதுதான் நம்ம சந்தானம். இந்த படம் வெளிவந்த ஆண்டு 2002, பார்வை ஒன்றே போதுமே வெற்றியின் பின் அவசர அவசரமாக தயாரிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கும் குறைவான கால பகுதியில் ஷூட்டிங் முடிக்கப்பட்டு வெளிவந்த படம் இது. அப்புடி பார்த்தா சந்தானம் முரளி கிருஷ்ணாவை தானே தன்னோட திரையுலக குருன்னு சொல்லனும் அப்புறம் ஏன் அவரு சிம்புவை சொல்றாரு? இங்கதான் ஒரு முக்கியமான விசயமே இருக்கு.

ஆமா சந்தானம் முதல் முதலாக தமிழ் சினிமாக்காக கமெரா முன்னுக்கு நின்ன படம் இது ரெண்டும் இல்ல, அது வேற. ஆமாங்க சிம்புதான் சந்தானத்தின்  குரு. சிம்பு மட்டும் இல்ல, அவுங்க அப்பா டீ.ஆரும்  குருதான். அது எப்புடின்னு கேக்குரவுங்களுக்கான பதில் கீழ உள்ள படத்தில இருக்கு.ஆமாங்க. டி. ஆர் அவரு மகன் சிம்புவை ஹீரோவாக அறிமுகப்படுத்துவதற்காக இயக்கி, தயாரித்து, எழுதி, ஒளிப்பதிவு செஞ்சி, இசை அமைத்து  அப்புறம் இருக்குற எல்லா வேலைகளையும் செஞ்சு எடுத்த படம்தான் காதல் அழிவதில்லை. இந்த படத்தின் ஷூட்டிங் 2001ன் முற்பகுதியிலேயே தொடங்கிவிட்டது. இந்த படத்துக்காகத்தான் சந்தானம் முதல் முறையா கமெரா முன்னாடி நின்னாரு. ஆனா இந்த படம் ரிலீஸ் ஆனது 2002 தீபாவளிக்கு. அதாவது பேசாத கண்ணும் பேசுமேக்கு பிறகு. ஆனாலும் சந்தானம் கமெரா முன்னாடி நின்ன படம்ங்குற வகைல இதுதான் அவரின் முதல் படம். அப்புறம்தான் மன்மதன். என்னா ஷாக்கா இருக்கா? அதுதான் Real Santhanam Fanz. இந்த படத்தில் முதல் காட்சி முதல் எண்டு கார்டு வரை  சில காலேஜ் சீன்களில் சந்தானம் சிம்புவின் நண்பராக வருவார். அனால் இந்த படத்தில் இவருக்கு பெருசா டாக்கி போர்ஷன்ஸ் இல்லை. சும்மா வந்து நிப்பாரு, சிரிப்பாரு, உட்காருவாரு, போவாரு, அதாவது பத்தோட பதினொன்னு, அத்தோட இது ஒன்னு மாதிரி கேரக்டர்.
இன்னும் சில படங்கள், உங்களுக்காக எக்ஸ்க்ளுசிவ்:


அதாவது, பட ரிலீஸ் படி பார்த்தல் முதல்படம்: பேசாத கண்ணும் பேசுமே. ரெண்டாவது படம்: காதல் அழிவதில்லை. மூணாவது படம்: மன்மதன்.
ஷூட்டிங் ஆர்டர் படி பார்த்தல்: முதல்படம்: காதல் அழிவதில்லை. ரெண்டாவது படம்: பேசாத கண்ணும் பேசுமே. மூணாவது படம்: மன்மதன்.
எப்புடி  பார்த்தாலும் இது வரலாற்றில் விட்டு போன ஒரு விஷயம். நாங்க எங்க சந்தானம் ரசிகர்கள் மற்றும் ப்ளாக் வாசகர்களுக்காக அறியத்தருகிறோம். இந்த மேட்டருக்காக கண்டிப்பா நீங்க ஓட்டு போடுவீங்கன்னு தெரியம், அதுக்கு இப்பவே அட்வான்ஸ் தேங்க்ஸ். ஹி ஹி.

டிஸ்கி:இந்த விசயத்த நாங்க இப்ப விக்கிபீடியால எடிட் பண்ணி எழுதி இருக்கோம். WIKI SANTHANAM LINK
டிஸ்கி  2: இந்த நன்றி கடன்களுக்காக தான் சிம்பு எப்ப டேட் கேட்டாலும், சந்தானம் கொடுப்பாரு(வரிசையா வானம், ஒஸ்த்தி, வேட்டை மன்னன் ). அது மட்டுமில்ல டி.ஆர் இன் காவியமான வீராசாமியில் சந்தானம் நடித்ததுக்கும் இதே நன்றி கடந்தான் காரணம்.


14 comments:

 1. 'சந்தனன்னா மனக்கதான் செய்யும், சாணின்னா நாறதான் செய்யும்'

  ReplyDelete
 2. ஓ அதான் அன்னைக்கு வீராசாமி படத்துலருந்து ஒரு சீன் சிவாஜியில் இருந்தத கரக்டா கண்டு சொன்னீங்க... சூப்பர் ...சந்தானத்தின் குரு யாருன்னு தெரிஞ்சுக்கிட்டோம்...அவரது முதல் படமும் எதுன்னு தெரிய இந்த பதிவு உதவியது வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. நீங்க சொல்லி இருந்த பாஸ் என்கிர பாஸ்கரன்
  பாத்தேன். சந்தானம் நல்லாவே நடிச்சிருக்கார்.
  சிவா மனசுல சக்தி கிடைக்கலியே?

  ReplyDelete
 4. @Lakshmi பாட்டி.... எப்புடி பாட்டி படம் புடிச்சிருந்துச்சா? தொடர்ந்து பாருங்க.. இந்த வருஷ கடைசில வருது பாருங்க ஓகே ஓகே.. சந்தானம் அதுல ஒரு ஹீரோவா நடிக்கிறாரு...

  ReplyDelete
 5. apapdi sollunga antony boss okok la santhanam hero super patti aduthu yuvan yuvathi intha varam varudu parunga

  ReplyDelete
 6. ஆஹா, நான் கூட சந்தானத்தோட முதல் படம் 'மன்மதன்'னு நினைச்சிகிட்டிருந்தேன். 'சரித்திரப் புகழ்' வாய்ந்த உண்மைக்கு நன்றி.

  ReplyDelete
 7. @N.H.பிரசாத் உங்க டவுட்ட கிளியர் பண்ணதுல ரொம்ப சந்தோஷங்க...

  ReplyDelete
 8. திரை உலக வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு மாபெரும் அரிய தகவலை வெளியுலகிற்கு தெரியப்படுத்திய பெருமை உங்களையே சேரும்..- ரவிதங்கதுரை, சேலம்

  ReplyDelete
 9. திரை உலக வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு மாபெரும் அரிய தகவலை வெளியுலகிற்கு தெரியப்படுத்திய பெருமை உங்களையே சேரும்..- ரவிதங்கதுரை, சேலம்

  ReplyDelete
 10. அப்படியா??
  சமயம் கிடைக்கும் போது இந்த ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க நண்பரே...
  http://dohatalkies.blogspot.com/2012/07/schindlers-list_1072.html

  ReplyDelete
 11. என்ன ஆராட்சி என்ன அறிவு

  ReplyDelete
 12. Epadiyo engaga eyes a open pannitinga rompa thanksungo

  ReplyDelete
 13. Get the latest cinema news in hindi, breaking News Stories on Hindi Cinema, Hindi movie news, filmy samachar and daily Bollywood gossip. Get your daily dose of entertainment & cinema news only on MNewsindia. Cinema News Samachar | सिनेमा समाचार फिल्मी ख़बरें

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்!!