Showing posts with label Santhanam News. Show all posts
Showing posts with label Santhanam News. Show all posts

Sunday, August 21, 2011

சந்தானத்தின் முதல் திரைப்படம் எது? வெளிவராத உண்மைகள், எக்ஸ்க்ளுசிவ்.

தலைவர் சந்தானம் கடந்த இரண்டு மூன்று வருஷமா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாதவரா மாறிட்டாரு. இன்னைக்கு  ஒரு படத்திற்கு பூஜை போடும் தயாரிப்பாளரோ அல்லது இயக்குனரோ  ஹீரோ , ஹீரோயின், இன்ன பிற நடிகர்களை எல்லாம் டிசைட் பண்ணறதற்கு  முதல்லயே நம்ம சந்தனாத்திற்கு அட்வான்ஸ் குடுத்துடறாங்க. (அவரும் இதுதான் சான்ஸ்னு லட்சங்களை தாண்டி கோடிகளுக்கு போய்ட்டாரு). உடலை அஷ்டாங்கம் செய்யாம, கருத்து சொல்றேன் பேர்வழின்னு படுத்தி எடுக்காம அவருக்குன்னு டயலாக் டெலிவரில ஒரு புதிய ஸ்டைலை வச்சிக்கிட்டு வெற்றி நடை போடுறாரு. இவரது காமெடிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஒவ்வொரு நாளும் பல மடங்குல கூடிகிட்டு இருக்கு எங்குரதுக்கு பேஸ்புக் பக்கங்களே சாட்சி. அவ்வளவு ஏன்  நீங்க வாசிச்சிகிட்டு இருக்குற இந்த ப்ளாக்கே சந்தானத்தின் ரசிகர்களால் சந்தானத்தின்  ரசிகர்களுக்காக எழுதப்படற ஒரு ப்ளாக். இந்த பதிவுல அவர பத்துன ஒரு முக்கியமான உண்மைய, அதாவது இதுவரைக்கும் யாருக்கும் தெரியாத ஒரு உண்மைய சொல்ல போறோம்.

சந்தானத்திடம்  உங்கள் திரையுலக குரு யாருன்னு கேட்டா உடனே அவரு சிம்புவின் (STR) பேரை சொல்வாரு. அதுக்கு பல காரணங்கள் இருக்கு . முக்கியமான காரணம் மன்மதன். ஆமா அதுதான் சந்தானத்தை தமிழ் சினிமா அடையாளம் கண்டுகொண்ட முதல் படம். பொபி என்னும் கேரக்டரில் சந்தானம் முழு நீளகாமெடியனாக நடித்து வாயுள்ள பிள்ளை என தன்னை நிரூபித்த முதல் படம் (இந்த படத்தில் தலைவர் கவுண்டரும் இருக்காரு, ஆனா அவரு நடிச்ச சில சீன்களை சிம்பு வெட்டி போட்டுட்டாரு, அப்புறம் அது ஒரு பெரிய பிரச்சினையானது வேற கதை) . So இந்த படத்துல இருந்து சந்தானத்த ஆப்சேர்வ் பண்ண ஆரம்பிச்சவுங்க எல்லாம் சந்தானத்தின் முதல் படம் மன்மதன்னு நெனைசாங்க. இது 2004 தீபாவளிக்கு வெளிவந்த படம்.

ஆனா கொஞ்ச விவரம் தெரிஞ்சவர்கள், சந்தானத்தை பற்றிய நியூஸ்களை தேடி படித்தவர்கள், மற்றும் பேசாத கண்ணும் பேசுமே (ஹீரோ:மோனல், ஹீரோயின்:குணால்) என்னும் மொக்க படத்தை பார்த்தவர்கள் எல்லாம் சந்தானம் அதுல ஒரு துக்கடா கேரக்டரில் நடித்ததை அறிந்திருப்பார்கள். விக்கிபீடியால கூட இதுதான் இவரின் முதல் படமா குறிப்பிடபட்டு இருக்கு (அது யாரோ ஒரு புண்ணியவான் அவருக்கு தெரிஞ்ச விசயத்தை எடிட் பண்ணி போட்டு இருக்காரு, விக்கியை யாரு வேணும்னாலும் எடிட் பண்ணலாம்ங்க).   இந்த படத்தின் இயக்குனர் முரளி கிருஷ்ணா. இவரு 2001ல் பார்வை ஒன்றே போதுமே என்ற பாடல்களால் ஹிட் ஆன ஒரு படத்தை கொடுத்தவரு. பார்வை ஒன்றே போதுமே வெற்றியின் பின் அதே நடிகர்களை வைத்து அவசர அவசரமாக எடுத்த படம்தான் பேசாத கண்ணும் பேசுமே. இது ஒரு மொக்க படம். இந்த படத்துல இவரு செஞ்ச ஒரே ஒரு நல்ல காரியம் சின்ன பாப்பா பெரிய பாப்பா, காஸ்ட்லி மாப்பிளை மற்றும் சில விஜய் டிவி ப்ரோக்ராம்களில் தலைகாட்டியிருந்த ஒரு காமெடி நடிகருக்கு சின்னதா ஒரு ரோல் குடுத்து இருந்தாரு. அதுதான் நம்ம சந்தானம். இந்த படம் வெளிவந்த ஆண்டு 2002, பார்வை ஒன்றே போதுமே வெற்றியின் பின் அவசர அவசரமாக தயாரிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கும் குறைவான கால பகுதியில் ஷூட்டிங் முடிக்கப்பட்டு வெளிவந்த படம் இது. அப்புடி பார்த்தா சந்தானம் முரளி கிருஷ்ணாவை தானே தன்னோட திரையுலக குருன்னு சொல்லனும் அப்புறம் ஏன் அவரு சிம்புவை சொல்றாரு? இங்கதான் ஒரு முக்கியமான விசயமே இருக்கு.

ஆமா சந்தானம் முதல் முதலாக தமிழ் சினிமாக்காக கமெரா முன்னுக்கு நின்ன படம் இது ரெண்டும் இல்ல, அது வேற. ஆமாங்க சிம்புதான் சந்தானத்தின்  குரு. சிம்பு மட்டும் இல்ல, அவுங்க அப்பா டீ.ஆரும்  குருதான். அது எப்புடின்னு கேக்குரவுங்களுக்கான பதில் கீழ உள்ள படத்தில இருக்கு.



ஆமாங்க. டி. ஆர் அவரு மகன் சிம்புவை ஹீரோவாக அறிமுகப்படுத்துவதற்காக இயக்கி, தயாரித்து, எழுதி, ஒளிப்பதிவு செஞ்சி, இசை அமைத்து  அப்புறம் இருக்குற எல்லா வேலைகளையும் செஞ்சு எடுத்த படம்தான் காதல் அழிவதில்லை. இந்த படத்தின் ஷூட்டிங் 2001ன் முற்பகுதியிலேயே தொடங்கிவிட்டது. இந்த படத்துக்காகத்தான் சந்தானம் முதல் முறையா கமெரா முன்னாடி நின்னாரு. ஆனா இந்த படம் ரிலீஸ் ஆனது 2002 தீபாவளிக்கு. அதாவது பேசாத கண்ணும் பேசுமேக்கு பிறகு. ஆனாலும் சந்தானம் கமெரா முன்னாடி நின்ன படம்ங்குற வகைல இதுதான் அவரின் முதல் படம். அப்புறம்தான் மன்மதன். என்னா ஷாக்கா இருக்கா? அதுதான் Real Santhanam Fanz. இந்த படத்தில் முதல் காட்சி முதல் எண்டு கார்டு வரை  சில காலேஜ் சீன்களில் சந்தானம் சிம்புவின் நண்பராக வருவார். அனால் இந்த படத்தில் இவருக்கு பெருசா டாக்கி போர்ஷன்ஸ் இல்லை. சும்மா வந்து நிப்பாரு, சிரிப்பாரு, உட்காருவாரு, போவாரு, அதாவது பத்தோட பதினொன்னு, அத்தோட இது ஒன்னு மாதிரி கேரக்டர்.
இன்னும் சில படங்கள், உங்களுக்காக எக்ஸ்க்ளுசிவ்:










அதாவது, பட ரிலீஸ் படி பார்த்தல் முதல்படம்: பேசாத கண்ணும் பேசுமே. ரெண்டாவது படம்: காதல் அழிவதில்லை. மூணாவது படம்: மன்மதன்.
ஷூட்டிங் ஆர்டர் படி பார்த்தல்: முதல்படம்: காதல் அழிவதில்லை. ரெண்டாவது படம்: பேசாத கண்ணும் பேசுமே. மூணாவது படம்: மன்மதன்.
எப்புடி  பார்த்தாலும் இது வரலாற்றில் விட்டு போன ஒரு விஷயம். நாங்க எங்க சந்தானம் ரசிகர்கள் மற்றும் ப்ளாக் வாசகர்களுக்காக அறியத்தருகிறோம். இந்த மேட்டருக்காக கண்டிப்பா நீங்க ஓட்டு போடுவீங்கன்னு தெரியம், அதுக்கு இப்பவே அட்வான்ஸ் தேங்க்ஸ். ஹி ஹி.

டிஸ்கி:இந்த விசயத்த நாங்க இப்ப விக்கிபீடியால எடிட் பண்ணி எழுதி இருக்கோம். WIKI SANTHANAM LINK
டிஸ்கி  2: இந்த நன்றி கடன்களுக்காக தான் சிம்பு எப்ப டேட் கேட்டாலும், சந்தானம் கொடுப்பாரு(வரிசையா வானம், ஒஸ்த்தி, வேட்டை மன்னன் ). அது மட்டுமில்ல டி.ஆர் இன் காவியமான வீராசாமியில் சந்தானம் நடித்ததுக்கும் இதே நன்றி கடந்தான் காரணம்.


Tuesday, August 2, 2011

நடிகர் சந்தானத்திற்கு எதிராக வக்கீல்கள் போராட்டம்

இன்னைக்கு காலைல இருந்து எல்லா வெப்சைட்லயும் ஒரு நியூஸ்.அது என்னன்னா நடிகர் சந்தானத்திற்கு எதிராக வக்கீல்கள் போராட்டம்




அடப்பாவிகளா!!! ஒங்கள எல்லாம் எப்புடிடா திருத்துறது? நீங்க எல்லாம் என்னடா நெனச்சிக்கிட்டு இருக்கீங்க. இது ஒரு படம் இந்த படத்துல சந்தானம் ஒரு வக்கீலா நடிச்சிருக்காரு. இதுல எங்கடா ஒங்கள அவமான படுத்துனாரு?. இன்னிக்கு டேட்க்கு பிரபலமா யாரு யாரு இருக்காங்களோ, அவங்கள எதிர்த்து உப்பு சப்பு இல்லாம ஒரு ஆர்பாட்டத்த நடத்தி நீங்க பேமஸ் ஆகலாம்னு பார்க்குறீங்க?.

ஏற்கனவே இந்த படத்துக்கு எதிரா கண்ட கண்ட எழவு எடுத்த ஜாதி பிரசினைய கைல எடுத்து என்னென்னமோ பண்ணாங்க, ஆனா அந்த பிரசினைய ஒத்த எழுத்த மாத்தி சிம்பிளா தீர்த்து படத்த வெளியிட்டு ஹிட் ஆக்கியும் காட்டிட்டாங்க. சரி அவிங்க தான் படிக்காதவன்க ஜாதி வெறி புடிச்ச மிருக ஜாதி மனுசங்கனா, நீங்க வக்கீல்கள்தானே? நல்லா படிச்சவங்கதானே? அப்புறம் எதுக்குடா இப்புடி நடந்துக்றீங்க? எதோ ஒங்க பின்னால ஒரு சங்கம் இருக்குங்குற தைரியத்துல எதுக்கு வேணும்னாலும் போராட்டம் ஆர்ப்பாட்டம் செய்வீங்களாடா? இல்ல தெரியாமதான் கேக்குறேன், இப்ப இதுக்கு சந்தானம் மன்னிப்பு கேட்டுடார்னா ஒங்களுக்கு என்னடா கெடைக்க போகுது? மரமண்டைக.

உண்மைல இந்த படத்துல சந்தானம் வக்கீல்களுக்கு சார்பாதான் நடிச்சிருக்காரு. எழும்பூர் கோர்ட்டு பக்கம் போனா பாருங்க, பாதி பேர் கேஸ் கெடைகாதா கெடைகாதானு அலஞ்சிகிட்டு வெட்டியாதான் இருக்காங்கே. அந்த மாதிரி ஒரு கதாபாத்திரதுல தான் சந்தானம் நடிச்சாரு. அதுவும் வாதாடி தோத்து போன வக்கீல கொலை பண்ண ரவுடி தாதாவ பார்த்து வக்கீல்களுக்கு சார்பா தான் பேசுவாரு. "புடிங்ங்க சார் அவன, வக்கீலையே கொலை  பண்ணுவானாம், காட்டுமிராண்டி, புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் அவன "னு ஒரு தாதா பயலுக்கு எதிராதான் பேசுவாரு. நியாயமா பார்த்த ஊர்ல இருக்குற ரவுடி , தாதா பயலுகதான் ஆர்பாட்டம் பண்ணனும்(ஆனா அவிங்க பண்ண மாட்டங்க ஏன்னா அவிங்களுக்கு சங்கம் இல்ல). ஆனா வக்கீல் தொழில்ல இருக்கும் கஷ்டங்கள காமெடியா சொல்லி, அத மக்களுக்கு புரியவச்சி, ஒரு வக்கீல் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு எந்த விதமான பிரதி உபகாரமும் பார்க்காமல் எப்புடி எல்லாம் உதவி பண்றார்னு வக்கீல் தொழில பத்தி உயர்வா காட்டுனா உடனே ஆர்பாட்டம்  அது இதுனு கெளம்பிடுவீங்க, ஏன்னா ஒங்க பின்னாடி ஒரு சங்கம் இருக்குங்குற தைரியம்.

ஏன்டா அறிவு கெட்ட வக்கீல்களே;

சிங்கம்புலி படத்துல ஜீவா ஒரு பெண் சபலிஸ்ட் வக்கீலா வருவாரு, அவர விட்டுருங்க.
எதோ ஒரு படத்துல வக்கீல் வண்டுமுருகன்கிற பாத்திரதுல வடிவேல் அசட்டு வக்கீலா வருவாரு, அவரையும் விட்டுருங்க.
இதே படத்துல நாசர் , அப்புறம் விதி படத்துல இன்னும் பல படங்கள்ள வக்கீல வில்லனா காட்டுவாங்க அதையும் விட்டுருங்க.


ஆனா இன்னிக்கு பீக்ள இருக்குற சந்தானத்துக்கு எதிரா ஆர்பாட்டம் பண்ணி நீங்க பேமஸ் ஆக பார்க்குறீங்க. போங்கட போயி புள்ளகுட்டிகள படிக்க வைங்கடா.


Related post:
வளரும் சந்தானமும் ஒழிக்க நினைக்கும் சில தமிழ் சினிமா இணையங்களும்

ஹாசினி பேசும் படம்: விமர்சனத்துக்கு ஒரு விமர்சனம்

டிஸ்கி 1: வழமையா நாங்க மொக்கதான் போடுவோம், ஆனா இன்னைக்கு கொஞ்சம் சீரியஸா ஒரு பதிவு.

அண்மைக் காலமாகவே எனக்கு ஹாசினி பேசும் படம் பார்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இது கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பப்படும் ஒரு நிகழ்ச்சி, இருநூறு எபிசோட்களை கடந்து வந்திருக்கிறது. இவர் பல படங்களை விமர்சனம் செய்திருந்தாலும், சமீப காலம் வரை நான் எதையுமே  பார்த்ததில்லை.ஆனால் நமது தல சந்தானம் நடித்த இரண்டு படங்களின் விமர்சனத்தை நான் மிக அண்மையில்தான் பார்த்தேன், அதுவரை சுகாசினி ஒரு நல்ல விமர்சகர் என்கிற பதிவே என்னுள் இருந்தது. பாஸ் என்கிற பாஸ்கரன், மற்றும் சிறுத்தை படங்களுக்கான விமர்சனங்களே அவை. அவை இரண்டையும் பார்த்த பின்பே மற்றைய படங்களைப் பற்றி அவர் என்ன விமர்சனம் செய்கிறார் என்று பார்கவேண்டுமேன்கிற எண்ணம் தோன்றியது, அதன் பின்னரே இணையத்தளங்களில் கிடைக்கப்பெற்ற ஏனைய படங்களின் விமர்சனங்களை பார்த்தேன். அவை பற்றிய ஒரு பதிவே இது. மொதல்ல நம்ம சந்தானம் பற்றி சுகாசினியின் விமர்சனத்துக்கு வருவோம்.

தமன்னாவ வாடி போடின்னு கூப்பிடறார்ங்குறது  அந்த அம்மாவோட கவலை, காட்டுப்பூச்சி அப்பிடி கூப்பிடல்லன்னாதான் அது சொதப்பலா இருக்கும். தமன்னாவ மட்டும் இல்ல கார்த்திய அதவிட கேவலமாவேல்லாம் சொல்லறாரு. எத்தனையோ படத்துல ஹீரோவ கலாய் கலாயின்னு கலாச்சிருக்காரு. இந்தம்மா சொல்றத பாத்தா இவங்க இன்னம் கதாபத்திரங்கள பாக்குற அளவுக்கு முதிர்ச்சியடயலன்னு தான் தோணுது. இவங்க இன்னமும் நடிகர்கள்தான் திரையில பார்கிறாங்க. பேரழகன் படத்துல சூரியாவ அசிங்கம்னு விவேக் சொல்லுவாரு, அதவிட எவ்வளவோ கேவலமாவேல்லாம் சொல்லுவாரு, ஆனா பாஸ் என்கிற பாஸ்கரன்ல நயன்தாரவ சூப்பர் பிகருன்னு சொன்னது மோசம்ங்குறாங்க, வானம் படத்துல பிரம்மானந்தம் "நான் சிங்கத்தைவிட ஒசரம்னு" சொல்லுவாரு (வானம், இந்தம்மாவோட விமர்சனத்துக்கு பிறகு வந்த படமா இருந்தாலும்), இந்தம்மா என்னடான்னா நீங்க ஹீரோக்கள பத்தி பெர்சொனலா கமெண்ட் அடிச்சு பாருங்களேன்னு சவால் விடுது. இந்தம்மா தமிழ் படங்கள் கூட பாக்குறதில்ல போல. இப்ப முந்தி மாதிரி இல்ல, ஆணாதிக்க சினிமா, ஹீரோ வேர்ஷிப் எல்லாம் எல்லா சினிமாவுலயும் கிடையாது. நீங்க இன்னம் கொஞ்சம் வளரனும் (வேணும்னா காம்ப்ளான் குடிச்சி பாருங்க). அப்புறம், கும்பகோணத்துல எந்த பிசிக்ஸ் ப்ரோபெசர் இப்பிடி இருப்பாங்கன்னு கேக்குறாங்க, ஏன் கும்பகோணத்துல அழாகான பொண்ணுங்களே இருக்கக்கூடாதா? ராவணன் படத்துல காட்டுக்குள்ள கூட ஐஸ்வர்யா ராய் மேக்கப் போட்டமாதிரி பளிச்சின்னு இருப்பாங்க (ஒரு வேள அது ஐஸ்வர்யா ராய் அப்பிடித்தான்னு சொல்லுவாங்க போல, அப்ப நயாந்தாரா மட்டும் என்ன மொக்க பிகரா?, ஐயோ நான் மரியாத இல்லாம பெர்சனலா கமென்ட் அடிச்சுட்டேனே), எந்த நாட்டுல தீவிரவாதி மேக்கப் போட்டு வெள்ள வேளேரன்னு அழாக இருந்தாங்கன்னு தில்சே(உயிரே) படத்துல மனிஷாவ பார்த்து இவங்க கேப்பாங்களா?

அய்யா வாசகர் மகா ஜனகளே, இதுக்கு மேல நான் ஹாசினி பேசும் படம் பத்தி விமர்கிக்க போறன். கொஞ்சம் ஒவேரவேதான் இருக்கும். சுகாசினிய விமர்சிக்கறது பாலை கருப்புன்னு சொல்ற மாதிரி இருக்கும் அப்பிடின்னு யாராவது நெனச்சீங்கன்னா தயவு செய்து இந்த பதிவ இதுக்கு மேல படிக்காத்திங்க. 

முதலாவதாக ஹாசினி பேசும் படம் ஒரு reviewஆ அல்லது critiqueஆ என்பது புரியவில்லை. நமக்கு எல்லாமே விமர்சனம் தானே, சுஹாசினியும் அப்படியே எண்ணிக்கொண்டார் போலும். இவரது விமர்சனம் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே சினிமாவினை பார்க்கிறது. சுகாசினி நல்ல படங்களுக்கு சில அளவு கோல் வைத்திருக்கிறார். 
  1. குட் ஓவர் இவில்
  2. களம் நகர்புறம் சார்ந்ததாக இருக்க வேண்டும் 
  3. Protagonist நல்லவாராக மட்டுமே இருக்கவேண்டும் (தமிழ் சினிமாவின் அடிநாதமான ஹீரோ, வில்லன் கான்செப்ட்)
  4. படத்தில் ஒரு பெரிய கதை இருக்க வேண்டும் 
  5. கதாபாத்திரங்கள் டைப் காஸ்ட் பண்ணபட்டிருக்க வேண்டும் நல்லவர்கள், கெட்டவர்கள்
  6. Protagonist  அல்லது அவரை சுற்றி வருபவர்கள்  பெண்களை மதிப்பவர்களாக, கலாசாரக்க் காவலர்களாக, சமூகத்தால் அங்கிகரிக்கப்பட்ட விடயங்களை மட்டுமே செய்பவர்களாக இருக்க வேண்டும். 
  7. வாழ்கையில், சமுகத்தில் வெற்றி பெற்றவர்களின் கதையாக மட்டுமே திரைப்படக்கதை இருக்க வேண்டும் 

இன்னும் பல அளவுகோல்கள் இருக்கிறது, அந்த பட்டியல் மட்டுமே மிகவும் நீண்டதாக ஆகிவிடக்கூடாது. இந்த விமர்சனங்களைப் பார்த்தபோது சுஹாசினிக்கு உலக சினிமா மற்றும் தமிழ் சினிமா பற்றிய போதுமான புரிதல் இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாகி விடுகிறது. ஹாலிவூடில் பாண்டசி, பிக்சன், சுப்பர் ஹீரோ படங்கள் என சில படங்கள் வெளிவரும், இந்தவகையான படங்கள் பொழுதுபோக்கு ஒன்றை மட்டுமே குறியாக கொண்டிருக்கும், நடக்க முடியாத அசாத்தியாமான விடயங்களே இவற்றில் காணப்படும்.  (சயின்ஸ் பிக்சன் என்பது சிலவேளைகளில் ஒரு விதிவிலக்கு) இந்த மாதிரியான படங்களுக்கு உள்ள தமிழ் வடிவமே நமது மாஸ் திரைப்படங்கள். ஆரம்ப நாட்களில் இவை சுப்பர் ஹீரோ படங்களாக மட்டுமே இருந்தன, பின்னைய நாட்களில் பாண்டசி, பிக்சன் போன்றவையும் சேர்ந்து கொண்டன. இவற்றின் கதயையோ அல்லது கதைக் களத்தையோ யாரும் விமர்சிப்பதில்லை, இந்த படங்களில் கையாளப்பட்டிருக்கும் தொழில் நுட்பம், படமாக்கலின் நேர்த்தி போன்ற விடயங்களே விமர்சிக்கப்படும். இவற்றின் கதை, யதார்த்த மீறல் என்பவை taken for granted இவ்வகையான படங்களுக்கு critique அவசியமில்லை, review வே எழுதப்படும். நம்ம சுகாசினி அவர்கள் தமிழில் வெளிவரும் போர்முலா திரைப்படங்களுக்கும் கதை நேர்த்தி எதிர்பார்க்கிறார் அவற்றையும் critisize செய்கிறார். அதே போன்று காமெடி, ரொமாண்டிக் காமெடி, டீன் மூவீஸ் என சில வடிவமும் வெளி வரும். இவற்றில் கதை என்று ஒன்று இருக்காது, ஒன்றரை மணி நேரம் நமது அறிவை அடகு வைத்துவிட்டு சிரிப்பதற்காகவே இந்த படங்கள் வரும். ஹங் ஓவர் போன்ற படங்களை குறிப்பிடலாம். இவற்றின் மறு வடிவமே பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்கள். இவை ஜாலியான படங்கள். அனுபவிக்கனும் ஆராயக்கூடாது வகையறாவை சேர்ந்ததுதான் இதுவும். 

விமர்சனத்துக்கு உள்ளாக்க கூடிய படங்கள் வரிசையில் இருப்பவை மாற்று சினிமாவுக்கான முயர்ச்சியும் சென்சிபிள் entertainers  வகையை சார்ந்தவையும் தான். TRP rating கிற்காக புதிதாக வெளிவந்து வெற்றிபெற்ற எல்லா படங்களையும் ஒரே அளவுகோலினை வைத்து விமர்சிப்பது முறையாகாது.  சிறுத்தை சிறுத்தை தான், ஆடுகளம் ஆடுகளம் தான், இரண்டையும் ஒரே நியாய தராசில் வைத்து பார்க்க முடியாது. இதை அவர் புரிந்து கொண்டு விமர்சனம் செய்வார் என்றால் நல்லது. 

தமிழ் சினிமாவினை பற்றிய ஒரு புரிந்து கொள்ளலை நமது இன்னுமொரு பதிவில் விரைவில் பார்ப்போம். 


டிஸ்கி 2: டிஸ்கி 1ல எதோ சீரியஸ் பதிவுன்னு சொன்னியே? எங்கடா அது? இதுவும் மொக்கதான்டானு சொல்றீங்களா? ஓகே டீல்.

  

Sunday, July 17, 2011

வளரும் சந்தானமும் ஒழிக்க நினைக்கும் சில தமிழ் சினிமா இணையங்களும்

பாஸ் என்கிற பாஸ்கரன் , சிவா மனசுல சக்தி வெற்றிப்பட இயக்குனர் M.ராஜேஷின் ஓகே ஓகே படபிடிப்பில்  கலந்துகொள்ளாமல் சந்தானம் டிமிக்கி கொடுக்குராறாம்.  திமுக தேர்த்தலில் தோத்ததுதான் அதுக்கு காரணமாம். அப்புடின்னு ஒன்னு ரெண்டு தமிழ் சினிமா இணையதளங்கள் சொல்லுது.
  1. http://www.tamilcinema.com/  ஒரு கல்லும் ஒரு கண்ணாடியும் மோதிக் கொண்டால் கண்ணாடிக்குதானே கேடு? அதைதான் ஏற்படுத்தி வருகிறாராம் சந்தானம். உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடி படப்பிடிப்பு சந்தானத்தால் தடுமாறிக் கொண்டிருப்பதாக தகவல். 
  2. http://mullaivaanamsinema.blogspot.com முந்தைய ஆட்சியின்போது கைநிறைய கால்ஷீட்டை அள்ளிக் கொடுத்த சந்தானம், இப்போது ஆட்சி மாற்றத்தையடுத்து முன்பு காட்டிய தாராளத்தில் ஒரு சிறு பகுதியைக் கூட காட்டவில்லையாம். அநேகமாக ஹீரோ உதயநிதி வருகிற எல்லா காட்சியிலும் சந்தானமும் இருப்பதால், இவர் வந்தால்தான் அவர் நடிக்க முடியும் என்கிற அளவுக்கு நிலைமை. 
 இல்ல தெரியாமதான் கேக்குறோம் இந்த  தமிழ்சினிமா.காம் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா. இவிங்க இஷ்டத்துக்கு அள்ளி விடுறாங்கே. உண்மையில் நடந்தது என்னன்னா???
ஓகே  ஓகே படத்தின் படபிடிப்புக்காக சந்தானம், உதயநிதி மற்றும் இயக்குனர் M.ராஜேஷ் எல்லாம் ஜூலை 12ம் திகதி மும்பை போய் இருக்காங்க, மும்பை குண்டு வெடிப்பின்போதும் படக்குழுவினர் மும்பைலையே இருந்து இருக்காங்க, ஆனால் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் இருந்து  சுமார் 70km தூரத்தில் இவர்கள் இருந்ததால் இவர்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை.  முன்னரே திட்டமிட்டப்படி ரெண்டே நாளில் ஷூட்டிங்கை முடித்துக்கொண்டு ஜூலை 15ம் திகதியே சென்னைக்கு திரும்பி விட்டார்கள் அத உதயநிதியே  ட்விட்டரில் சொல்லி உள்ளார். 
இது மும்பையில் சந்தானமும் உதயநிதியும் எடுத்துக்கொண்ட படம்.(ஹன்சிகா எடுத்த படம்)
அப்புறம் இன்னொரு விஷயம் , சந்தானமும் உதயநிதியும் தான் இன்னிக்கு டேட்டுக்கு கோடம்பாக்கத்தின் நெருங்கிய நண்பர்கள். விஜய் டிவி அவார்ட் பங்க்ஷனின் போது விழா ஆரம்பித்து முடியும் வரை இருவரும் பக்கத்து பக்கத்து சீட்டிலேயே இருந்தனர். மேலும் இந்த விடயத்தை confirm செய்வதற்கு நாம் உதயநிதியை twitterஇல் தொடர்பு கொண்டு கேட்டோம். அதற்கு அவரின் பதில்கள்.





 சந்தானம் மிக விரைவாக வளர்ச்சி அடைந்துகொண்டு வருகிறார். அடுத்தடுத்து விருதுகளையும் அள்ளிகொண்டு வருகிறார். அவரின் வளர்ச்சியை பொறுக்க முடியாமலே தமிழ்சினிமா.காம் போன்ற சில மூன்றாம் தர இணையங்கள் இவ்வாறான அவதூறுகளை பரப்பிக்கொண்டு போய் வதந்திகளை கிளப்புகின்றன. அரசியல்  காரணங்களுக்காக வரவிருக்கும் ஒரு நல்ல படத்தை நசுக்க பார்க்காதீர்கள்.

சந்தானத்த என்ன அகா துகானு நினைச்சிடீங்களா?



Thursday, June 23, 2011

அப்பாடக்கர்னா என்னா ? சந்தானம் விளக்கம்




இன்னிக்கு டேட்ல எவன பார்த்தாலும் நீ என்ன பெரிய அப்பாடக்கரா , நீ என்ன அவ்வளவு பெரிய அப்படக்கரானு வயசு வித்தியாசம் இல்லாம அர்த்தமே புரியாம சொல்லிக்கிட்டு திரியுதுங்க. இந்த அப்பாடக்கர்ங்கிற வார்த்தைய பேமஸ் ஆக்குன பெரும எல்லாம் சந்தானத்தையே சேரும்.

கேக்குறதுக்கு பார்க்குறதுக்கு க்ளிக் பண்ணுங்க:





அப்பாடக்கர்னா என்ன? குழந்தை கவிஞர் புதுகை அப்துல்லா ஒரு விளக்கம் கொடுத்துருகாரு.

இது சென்னையைச் சேர்ந்த செந்தமிழ். மகான் தக்கர் பாபா சென்னையில் சிலகால இருந்தபோது சென்னைவாழ் மக்கள் அவரை அன்புடன் அப்பா தக்கர் பாபா என்று அன்போடு அழைத்து இருக்கின்றனர். வேதங்களிலும்,ஞானங்களிலும் கரைகண்ட அவரிடம் ஆன்மீகம் தொடர்பாக எந்தக் கேள்வி கேட்டாலும் தெளிவான பதில் கிடைக்கும். அதேபோல ஒருவன் அவன் துறையில் தெளிவாக அனைத்தையும் தெரிந்தவனாக இருந்தால் அவன் பெரிய அப்பாதக்கர் என்று சொல்லபட்டு பின்னர் சென்னை உச்சரிப்பில் அப்பாடக்கர் ஆகிவிட்டது. அப்பா தக்கர் பாபா வித்யாலயான்னு டிநகர்ல ஒரு ஸ்கூல் இருக்கு. இப்படி சொல்லிக் கேட்டீங்கன்னா அங்க ஒரு பயலுக்கும் தெரியாது. அப்பாடக்கர் ஸ்கோலு எங்கருக்குன்னு கேளுங்க, டக்குனு காட்டுவானுங்க :)


- குழந்தை கவிஞர் புதுகை அப்துல்லா ..


 அப்புறம் இந்த அப்பாடக்கர்ங்குற வார்த்தைய அர்பன் டிக்ஷனரிலயும் சேர்த்துட்டாங்கே. கிளிக்  பண்ணுங்க