வருஷம் பூரா பதிவு போடுறோமோ இல்லையோ,
ஆனா வருஷ கடைசில "டாப் 10"கள் போட வேண்டியது ஒரு பதிவரோட முக்கிய
கடமைகளில் ஒன்னு. இந்த பிளாக்ல ஒன்னுக்கு ரெண்டாவே பதிவர்கள் இருக்கோம்,
அப்புறம் இது கூட போடலான்னா வருங்காலத்துல நம்ம பழைய போஸ்ட்ஸ தேடி படிக்க
போற(!) சின்னஞ்சிறுசுக நம்மள பத்தி எவ்வளவு கேவலமா நினைக்குங்க. ஆனா
வெளிவர்ற எல்லா படத்தையும் பார்க்குற மக்கு பசங்க இல்ல நாங்க, கொஞ்சமாவது
படத்துல என்டர்டேய்ன்மென்ட் இருக்குன்னு தெரிஞ்சா மட்டும்தான் அந்த படத்த
கொஞ்சம் லேட்டானாலும் பார்போம். என்டர்டேய்ன்மென்ட்ங்குற கேட்டகரில மாஸ்,
ஆக்ஷன், யாரு ஹீரோ, யாரு ஹீரோயின் ப்லா ப்லான்னு நிறைய இருந்தாலும்
எப்பவுமே காமெடிக்குதான் முதலிடம்.
எதுக்காக
இவ்வளவு மொக்க போடுற? மேட்டர சீக்கிரமா சொல்லுங்குறீங்களா!!! ஓகே பாஸ். 2012ல வந்த
படங்கள்ல, நாங்க பார்த்த படங்கள்ல காமெடி நல்லா இருக்குன்னு நமக்கு தோணுன
சில படங்கள டாப் 10 ரேன்க் பண்ணுறோம். அம்புட்டுத்தேன்.(டாப் 10 காமெடி படங்கள்ன்னு லிஸ்ட் எடுத்தா, ரெண்டு மூணுதான் தேறும், அதுனால காமெடி காட்சிகள் டாப்பா இருந்த படங்களின் தரவரிசை). அப்புறம், ஜஸ்ட் காமெடி மட்டும்னதுனால, செம மாஸ் ஹீரோக்களின் சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள படவில்லை.
10.நீதானே என் பொன் வசந்தம்/ மிரட்டல்
ரெண்டு படமுமே பெருசா ஒன்னும் சொல்றதுகில்ல. ஆனா சந்தானத்தின் கவுன்டர்ஸ் பல இடங்கள்ல ரசிக்கிற மாதிரியும், சிரிக்கிற மாதிரியும், போரிங்கான படத்துக்கு கொஞ்சம் பூஸ்ட்டாவும் இருந்துச்சு. சந்தானமும் இல்லன்னா மிரட்டல் பார்க்குறது கொஞ்சம் கஷ்டம்தான். நீ.எ.பொ.வல சந்தானம் காமெடியும் சமந்தாவும்....
9.அட்டகத்தி/காதலில் சொதப்புவது எப்புடி
ரெண்டுமே புது டைரக்டர்ஸ் படம். ரெண்டுக்குமே காதலில் சொதப்புறதுதான் களம். காமெடியான களம். அட்டகத்தி சென்னை புறநகர் பேஸ்ட் இளைஞர்களின் அடாவடிகளுடன் கூடிய காமெடி, கொஞ்சம் சீரியஸா பார்த்தா சிரிக்கலாம். ஆனால், கா.சொ.எ எல்லாருக்கும் பொதுவான காமெடி. கா.சொ.எக்கு இன்னும் கொஞ்சம் அதிக ரேன்க் கொடுக்கலாம்ன்னாலும், இங்க ஜஸ்ட் காமெடிய வச்சி மட்டும் ரேன்க் பண்ணுறதால 9.
8.சுந்தரபாண்டியன்
சூப்பர் ஹிட்டு படம். எல்லா மேட்டரையும் சரியா மிக்ஸ் பண்ணிருந்தாங்க. சூரியோட கவுன்டர்ஸ் மட்டுமில்லாம, முக்காவாசி படம் பூராவே காமெடி டோன் இருந்துச்சு.
7. 3/சகுனி
ரெண்டுமே ரொம்பவும் பில்ட்அப் கொடுத்து மொக்க வாங்குன படங்கள். 3ல சைக்கோ, தற்கொலைன்னு பயம் காட்டுனாங்க. சகுனில ஸ்க்ரீன்பிளே சறுக்கிடுச்சு. ஆனா ரெண்டு படத்துலயும் காமெடி போர்ஷன் சூப்பர். மெரீனால டைரக்டர் சொன்னத மட்டும் செஞ்ச சிவகார்த்திகேயன், 3ல டைமிங் காமெடில கலக்கிருந்தாரு. அதே மாதிரி, சகுனி படத்துல ஆட்டோ சவாரில சந்தானமும்-கார்த்தியும் அடிக்கிற லூட்டிகள் ஆதித்தியால பார்க்கும்போது நல்லாவே இருக்கு. யூரின் பாஸ் பண்ணி பைன் கட்டுற சீக்வென்ஸ் செம காமெடி!
6.நான் ஈ
மக்கள என்டர்டேய்ன் பண்ணுறதுக்காகவே அளவெடுத்து செஞ்ச படம். "ஈ"பண்ணுற காமெடிகள் அட்டகாசம். போனஸ்ஸா நட்புக்காக(!) சந்தானம்.. கிளைமேக்ஸ்க்கு அப்புறம் வர்ற காமெடி சீன்ஸ்க்காக ரெண்டு மூணு வாட்டி ரிப்பீட் பார்த்த படம்.
5.மனம் கொத்தி பறவை
சிவகார்த்திகேயனோட முழுநீள ஹீரோ அவதார படம். மிச்ச சொச்ச, சொச்ச மிச்ச காமெடி நடிகர்கள் பலபேர கூட்டணி சேர்த்துகிட்டு படம் பூரா எதோ ஒரு விதத்துல சிரிப்பு வர்ற மாதிரி சீன்ஸ் இருந்துச்சு. பட், சிவகார்த்திகேயன் கிட்ட இருந்து நாங்க இன்னும் நிறைய எதிரபார்குறோம் பாஸ்.
4.நண்பன்
ஷங்கர் படம்னா எப்பவுமே காமெடி அளவா இருக்கும். ஹிந்தில ஹிட்டான அந்த படிப்ஸ் ஸ்டுடண்ட் கேரக்டருக்கு சத்தியன் செமையா பொருந்தினாரு. சத்தியனின் பாடி லேங்க்வேஜ், டயலாக் டெலிவரி எல்லாமே சூப்பர். கூடவே மாஸ் ஹீரோக்கள்ள காமெடி சரியா வர்க்அவுட் ஆகுற விஜய், அப்கமிங்ல ஜீவான்னு எல்லாரும் இருந்ததுனால, என்ஜாய் பண்ணி பார்த்த படம்.
3. கலகலப்பு
உள்ளதை அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக போன்ற படங்கள்ல கவுண்டமணி எனும் லெஜன்ட், அப்புறம் வின்னர், கிரி பீரியட்ல வடிவேலுன்னு கூட்டணி வச்சி காமேடில கலக்குன சுந்தர்.சி அப்பால காணமல் போயிட்டாரு. அப்புறம் சுந்தர்.சி இயக்கி, நடிச்சி வெளிவந்த சில படங்கள பார்த்தப்புறம், இந்த மனுஷனுக்குன்னு பெருசா காமடி நாலெட்ஜ் இல்ல, அந்தந்த பீரியட்ஸ்ல அசிஸ்டென்ட்ஸ்ஸா இருந்த சுராஜ், பூபதி பாண்டியன் மாதிரி ஆட்கள் தான் எடுத்து கொடுத்துருக்காங்கன்னு ஒருமுடிவுல இருந்தப்ப, சுந்தர்.சியின் கம் பேக் பிலிம். பர்ஸ்ட் ஆப் "அகில உலக சூப்பர்ஸ்டார்" சிவா, செகன்ட் ஆப் "காமெடி சூப்பர்ஸ்டார்" சந்தானம், அப்புறம் இளவரசு மாதிரி துணை கேரக்டர்ஸ்ன்னு நிஜமாவே கலகலப்புதான்.
ஒரு வேளை, இப்போ வசன அசிஸ்டென்ட்டா இருந்த கேபிள்சங்கர் அண்ணன்தான் இந்தவாட்டி கலகலப்புக்கு காரணமா இருந்துருப்பாரோ?
2. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
"என்னாச்சி?" சந்தானம் ஃபேன்ஸ்ன்னு சொல்லிட்டு சந்தானம் இல்லாத ஒரு படத்துக்கு லீட் பொசிஷன் கொடுத்துருகீங்க?ன்னு கேட்டிங்கன்னா, அதுதான் பாஸ், இந்த படத்தோட வெற்றியே. செமையா என்ஜாய் பண்ணி பார்த்த படம். பிரேம், சரஸ், பக்ஸ், பஜ்ஜி ஆக்டிங், சான்ஸ்லெஸ்!! டயலாக் டெலிவரி, பாடி மாடுலேஷன் எல்லாத்தையும் விட்டுருங்க, ஒவ்வொரு சீனுக்கும் அந்த மூணு பிரெண்ட்ஸ்மூஞ்சில கொடுக்குற எக்ஸ்பிரெஷன்ஸ் இருக்கே.. செம செம!! டைரக்டர் வேலைக்காரர்ன்னு தோணுது, இவருகிட்ட இருந்தும், இவரு மாதிரி புதுசா வர்ற டைரக்டர்ஸ் கிட்ட இருந்தும், நாங்க இன்னும் நிறைய எதிர் பார்க்கலாம்ன்னு தோணுது!
1. ஒரு கல் ஒரு கண்ணாடி
குறிப்பிட்ட ஒரு வருசத்துல, ராஜேஷ்-சந்தானம் கூட்டணில ஒரு படம் வந்துருக்குன்னா, அந்த வருசத்துல அத தாண்டி இன்னொரு படம் எப்புடிங்க பர்ஸ்ட் ப்ளேஸ்ல வரும்? சோ, நீங்க எதிர்பார்த்த மாதிரியே ஓகே ஓகே பர்ஸ்ட்டு. ஒவ்வொரு ராஜேஷ் படமும் சந்தானத்துக்கு ஒவ்வொரு டர்னிங் பாயிண்ட்ஸ். இந்த படத்த பத்தி நாங்க பலவாட்டி எழுதியாச்சி.. பல வாட்டி பார்த்தும் இன்னும் அலுக்கல! இனிமேலும் அலுக்காது! அடிச்சி சொல்லுறோங்க, "ஆல் இன் அழகுராஜா" மட்டுமில்ல, அதுக்கு பிறகும் ராஜேஷ்-சந்தானம் கூட்டணில வரபோற படங்கள் எல்லாமே பிளாக்பஸ்டர்ஸ்தான்.
***************************************
ஆக, கடந்த சில வருஷங்கள விட இந்த 2012 வருஷம் காமெடி ரசிகர்களுக்கு சிறப்பாவே இருந்துச்சு. இது 2013ல யும் தொடரும்னு தெரியுது! 2013 வருட ஆரம்பத்துலையே சந்தானம், பவர்ஸ்டார் காம்பினேஷன்ல லட்டு தின்ன ரெடியா இருங்க காமெடி ரசிகர்களே!!