அப்பாடா, பல தடைகளையும் தாண்டி ஒரு பாடா படத்த பார்த்தாச்சு. நம்ம ராசு மாமா படம் பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாரு. நமக்கோ படம் பார்க்கணும்னா மூணு மணிநேரம் வண்டி ஓட்டனும், அதாவது கிட்டத்தட்ட இருநூறு மைல் தூரம் போகணும் தேட்டேருக்கு. அதுக்கு படம் ஒர்த்தா இல்லாயான்னு பார்க்கலாமேன்னு ராத்திரி பூரா ஒக்காந்து மாங்கு மாங்குன்னு பதிவுகள படிச்சா மிக்ஸ்ட் ரிவீவ். கொஞ்சம் பேரு ஆகா அற்புதம்ன்றாங்க, கொஞ்சம் பேரு ஒரு வாட்டி பார்க்கலாம்ங்குறாங்க, இன்னும் கொஞ்சம் பேரு மொக்கயின்னு சொல்றாங்க. எது உண்மையின்னு ஒண்ணுமே புரியல. எதுக்கு வம்பு படத்த பார்த்திடுவோமேன்னு முடிவெடுத்து ஒரு வழியா பார்த்தும் ஆச்சு. இதுவரைக்கும் உங்க எல்லோருக்கும் படத்தோட கதை என்னன்னு அக்குவேறு ஆணிவேரா தெரிஞ்சிருக்கும். இருந்தாலும் விமர்சன தர்மத்துக்காக மிகச்சுருக்கமா சொல்லிடறோம்.
ஒன் லைனெர்: "இந்தியாவுல, அதுவும் தமிழர்கிட்ட இருந்து போன மருத்துவமும், தற்காப்பு கலைகளும், நாம மொத்தமாக மறந்துவிட்ட நிலையில் நமக்கே எதிரியா திரும்பினா என்ன ஆகும்?"
பிளாட்: மருத்துவ ரீதியா இந்தியாவ அடிமைப்படுத்த சீனா பயோ-வார் ஆராம்பித்து, அதை செயல்படுத்த ஒரு மார்சியல் ஆர்ட்ஸ் அண்ட் நோக்கு வர்மம் எக்ஸ்பெர்ட இந்தியாவுக்கு அனுப்புது. கூடவே ஸ்ருதி ஹாசன கொல்லச்சொல்லியும் ஆர்டர். இது எதுக்குன்னா போதிதர்மன் பற்றிய அவரது மருத்துவ ஆராய்ச்சி. ஸ்ருதி மருத்துவ ஆராய்ச்சியில் வெற்றி பெற்றாரா? சீனாவின் திட்டம் தோற்கடிக்கப்பட்டதா என்பதை, தமிழர்களின் பாரம்பரியம், நமது அறிவியல் மகிமைகள் என்பவற்றின் பின்னணியில் கூறி முடிகிறது படம்.
ஜானர்: இந்த படம் "செமி ஹிஸ்டோரிகால் சயன்ஸ் பிக்ஷன். கூர்ந்து கவனிக்கவும் "பிக்ஷன்" இது "டிராமா" அல்ல. ஒரு அர்தண்டிக் (?) வரலாற கையில வச்சுக்கிட்டு நிகழ்காலத்த பிக்ஷன் ஆக்கி அதுல டிராமா கலந்து, சயன்ஸ் கலந்து ஒரு கலவையா ஆக்கியிருக்காங்க. இத வச்சுக்கிட்டு எப்புடி ஒரு கதைய பின்னியிருக்காங்க, அத எப்புடி காட்சிப்படுத்தி திரையில கொண்டுவந்திருக்காங்க, அதுல வெற்றி பெற்றிருக்காங்களா இல்லாயான்னு இனி பார்க்கலாம்.
போதிதர்மர் தான் கதையின் அடி நாதம். போதிதர்மன் தற்காப்பு கலை நிபுணர் மட்டுமல்லாமல் சிறந்த மருத்துவரும் கூட என்பது வரலாற்றுக் குறிப்பு. நம்ம யாருக்குமே இவர தெரியாது, எனவே இவர் யார்ன்னு சொல்லாம கதைக்குள்ள போக முடியாது, எனவே படம் ஆரம்பிக்க முதல்ல இருபது நிமிஷம் போதிதர்மர் எபிசோட். படத்தோட பெரிய ஹைலைட் இதுதான், நடிப்பாக இருக்கட்டும், காட்ச்சிப்படுத்தலாக இருக்கட்டும், கிராபிக்ஸாக இருக்கட்டும், சூப்பர். சூப்பர். சூப்பர். ஆனா இதுவேதான் படத்தோட மைனசும். அது எப்புடின்னு பிறகு பார்ப்போம்.
ஸ்ருதியோட மருத்துவ ஆராய்ச்சி DNA சம்பந்தப்பட்டது. இதுதான் படத்தோட பிக்சன் பகுதி. மரபனுக்களுக்குள் ஒரு மெமரி இருக்கு. இதுல உடல் அமைப்பு, உடல் கோளாறுகள், உயரம், தலைமுடி அமைப்பு போன்றவை புதைந்திருக்கும், இது பரம்பரை பரம்பரையாக கடத்தப்படும். அவற்றில் ஆட்சியான இயல்புகள், பின்னடைவான இயல்புகள் என இரு வகை இருக்கும், ஆட்சியான இயல்புகள் வெளிப்படும், பின்னடைவான இயல்புகள் புதைந்து போகும். இதுவே உயரமான தந்தைக்கும், குட்டையான தாய்க்கும் பிறக்கும் குழந்தை உயரமானவரா குட்டயானவரா என்பதை தீர்மானிக்கும். இது அறிவியல். ஆனா ஒருவர் உருவாக்கிக்கொண்ட இயல்புகள், ஆற்றல்கள், திறமைகள் என்பனவும் DNAவில் பதியப்படும், என்பதும் பின்னடைவான நிலையில் இருக்கும் இந்த இயல்புகளை தூண்டுவதன் மூலம் அந்த ஆற்றல்களை திரும்பக்கொண்டுவரலாம் என்பதும் கற்பனை, இந்த ஆராய்ச்சி பற்றிய குறிப்புகள்தான் போதிதர்மர் நமக்கு வழங்கிச்சென்ற (நாம் தொலைத்து விட்ட) சுவடியில் இருந்து ஸ்ருதிக்கு கிடைப்பதாக கூறப்படுகிறது. இதுவே நமது கடந்த காலத்துக்கும், நிகழ்காலத்துக்கும் உள்ள இணைப்பாக படத்தில் வருகிறது. போதிதர்மனின் DNA மாதிரி அவரது வழித்தோன்றலான அரவிந்தனது மாதிரியுடன் 80 சதவீதம் ஒத்துப்போகிறது எனவே அரவிந்தனின் DNA வை தூண்டுவதன் மூலம் போதிதர்மனின் ஆற்றல்களை, மருத்துவத்தை திரும்ப பெறலாம் என்பது ஸ்ருதியின் கணக்கு. அது நடைபெறும் இடத்தில் தனது திட்டம் தவிடு பொடியாகிவிடும் என்பது சீனாவின் கணக்கு. இதற்கிடையில் நடைபெறும் போராட்டமே ஏழாம் அறிவு.
ஆரம்ப இருபது நிமிடங்கள் படத்தின் மீது மிகப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. கதை நிகழ்காலத்துக்கு வரும் போது விரியும் காதல் காட்சிகள் அந்த எதிர்பார்ப்புக்கு தீனி போடும் விதத்தில் இல்லை. இந்த இருபது நிமிட காட்சிகள் படத்தின் ஆரம்பத்தில் வராது, ஸ்ருதி சூர்யாவிடம் நமது பெருமைகளை விளக்கும் அந்த மியுசியம் காட்சியின் போது வந்திருக்குமானால் தொய்வு தவிர்க்கப்பட்டிருக்கும். திரைக்கதையில் இருக்கும் சொதப்பல் இதுவே. ஒரு பிரமாண்டமான மிகவும் கருத்து செறிவான ஒரு விடயத்தை ஆரம்பத்திலேயே காட்டி பார்வையாளனின் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்று பின்பு சாதாரணமான காதல்காட்ச்சிகளையும் (ஒப்பிடும்போது) மிகவும் சாதரணமான பாடல்களையும் இட்டு நிரப்பும் போது படத்தில் ஸ்ருதி சொல்லும் "உன்னோட காதல குப்பையில போடு" டயலாக்தான் நமக்கும் வருது. ஒரு வேள அந்த எபக்ட தான் முருகதாஸ் நம்மக்கிட்ட இருந்து எதிர்பார்த்தாரான்னு தெரியல. அப்புடியிருந்தாலும் அந்த முயற்சி இந்த படத்துக்கு கை கொடுக்கல. செமி ஹிஸ்டோரிகள், சை பை மெடிகல் த்ரில்லர்ல டிராமா மிக்ஸ் பண்ணினது வொர்கவுட் ஆகல.
படத்துக்கு தேவையே இல்லாத வலிந்து திணிக்கப்பட்டது போன்ற (சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட) பாடல்கள், குறைந்தது ஒரு பாடலையாவது வெட்டியிருக்கலாம், இந்தமாதிரி ஒரு படத்துக்கு மூன்று நிமிடத்துக்கு மேல ஒலிக்கும் பாடல்களை கம்போஸ் பண்ணினது எந்த மடயன்னு கேக்க தோணுது, பாடல்களின் நீளம் மிகவும் அதிகம். (முதல் இருபது நிமிடம் தவிர்த்து) பின்னணி இசை படு சுமார். ஹாரிஸ் ஜெயராஜ் கவனிக்க வேண்டிய முக்கியமான இடம்.
அறிவியல் பகுதிகளை ரொம்பவே எளிமைப்படுத்தறதா நினைச்சு கன்பியுஸ் பண்ணாம இருந்திருக்கலாம். DNA வில் புதைந்திருக்கும் இயல்புகளை தூண்டுறதுன்னு கான்செப்ட் சொல்லிட்டு, போதிதர்மரோட ஆவிய புகுத்துறது போல உணர்வு தரக்கூடிய, போதிதர்மரையே திரும்ப கொண்டு வருவதான வசனங்களை தவிர்த்து, போதிதர்மரின் இயல்புகளை பெறலாம் என அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கலாம். (அறிவாளிகள் கவனத்திற்கு: ஸ்ருதியின் கையில் போதிதர்மர் DNA இல்லை, அவர் இணையத்தில் கிடைத்த DNA மாதிரியின் கட்டமைப்பு விளக்கப்படத்துடன் ஒப்பிட்டே எத்தனை சதவீதம் பொருந்துகிறது என்பதை அறிந்து கொள்கிறார். நம்மாளு சேம்பிள அவுங்க டேட்டா பேசுக்கு அனுப்பி ஒப்பிட்டு கொள்கிறார் என்று வைத்துக்கொள்வோம். எனவே போதிதர்மரின் DNA வை "புகுத்தி" என படத்தில் வரவில்லை என்பதனை கவனத்தில் கொள்க). ப்ரீ க்ளைமாக்ஸ் சண்டைக்காட்ச்சியில் வாகனங்கள் பறக்கும் கிராபிக்ஸ்ஸில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.
கதையா தேர்வு செய்து நடித்த சூர்யாவுக்கு பாராட்டுக்கள். கதை முழுக்க முழுக்க வில்லனையும், ஸ்ருதியையும் சுற்றி பின்னப்பட்டது. சூரியா ஒரு கருவி, இந்த மாதிரி ஒரு படத்த அதுவும் ஹீரோவ விட அறிவான ஹீரோயின்னும் பலசாலியான வில்லனும் உள்ள கதையில் ஒரு நடிகனாக மட்டுமே நடித்தது பாராட்டுக்குரியது. அதற்க்கான உழைப்பும் மிக அபாரம். போதிதர்மன் வரலாற்று பதிவு, கிளைமாக்ஸ் சண்டை, போஸ்ட் க்ளைமாக்ஸ் டிவி இண்டர்வியு மட்டுமே சூர்யாவுக்கு ஹீரோயிசம் காட்ட சந்தர்ப்பங்கள், மனிதன் பின்னுராறு. அரவிந்தன் கதாபாத்திரம், பாரம்பரியத்தை தொலைத்துவிட்ட சாதாரண நவீன தமிழ் இளைஞன், அதுக்கு என்ன தேவையோ அதையே பண்ணியிருக்காரு, அளவான நடிப்பு. நடனத்துல ராபர்டிக்ஸ் மூமென்ட் இன்னும் கொஞ்சம் குறைச்சுக்கனும். ஜோ தவிர மத்த ஹீரோயின்கள் கூட கூச்சப்பட்டு ஒதுங்காம இன்னும் கொஞ்சம் ரொமான்ஸ் பண்ணலாம்.
ஸ்ருதி, சமீபத்துல சூரியாவுக்கு ஹீரோயின்னா நடிச்சவங்க லிஸ்டிலேயே அழகா தெரிஞ்சது, கதாபாத்திரமா நிலைச்சது இவங்க மட்டுமே, அதுவே முதல் வெற்றி. கொடுக்கப்பட்ட வேலை பெரியது, அதை சொதப்பாம கஷ்டப்பட்டு கேரி பண்ணியிருக்காங்க. தமிழ்ல அறிமுகப்படத்துக்கு இந்த பெர்போமான்ஸ் ஓகே. ஆனா வாயிஸ் மடுலேசன், எக்ஸ்பிரசன் இன்னும் வரணும். அழகா இருக்காங்க, கமல் பொண்ணுன்னு பாக்காம, ஸ்ருதின்னு பாருங்க ரசிக்கலாம்.
முருகதாஸ், ஒரு நல்ல படம் கொடுக்க முழு முயற்சியாக ஈடுபட்டமைக்கு பாராட்டுக்கள். ஒரு பரீட்சார்த்த முயற்சி, காண்டேன்ட் வைஸ் படம் அபாரம், எக்ஸிகியுசன் கொஞ்சம் சறுக்கல். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம், இயக்கம் பெரும்பகுதியான இடங்களில் அபாரம், சில இடங்களில் கோட்டை. போதிதர்மர் பற்றிய வரலாறினை எதிர்பார்ப்பு இல்லாமல் திரையரங்குக்கு வரும் சாதாரண ரசிகனுக்கு சுவாரஷ்யம் குறையாமல் கொடுத்தமைக்கு பாராட்டுக்கள்.
ஜானி, மனுஷன் குடுத்த காசுக்கு மேலையே வேலை செஞ்சிருக்காரு, தமிழ் சினிமாவின் முதலாவது பலம் வாய்ந்த, இடைவேளைக்கு அப்புறம் ஹீரோக்கு அடங்கிப்போகாத வில்லன். இவர சமாளிக்க முடியாம ஹீரோவே திணறிப்போறது அழகான யதார்த்தம், அவரது கலைகளே ஹீரோவோட மூதாதையர் கத்துக்குடுத்ததுதான்னு தெரியும் போது அதுவே வலியுடன் கூடிய எதார்த்தமும்.
ரவி கே சந்திரனின் கமெரா அற்புதம், விழலுக்கு இறைத்த நீராக பாடல்கள் கொடுமை. எடிட்டிங், இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். ராஜீவனின் கலை ததுரூபம். குறிப்பாக முதல் இருபது நிமிடமும் யம்மா யம்மா பாடல் காட்ச்சியில் வரும் ரயில்வே ஸ்டேசனும்.
ஒப்பீடு: தமிழில் சில நாட்களுக்கு முன் வந்த இரண்டு பிக்சன் கதைகள், தசாவதாரம், ஆயிரத்தில் ஒருவன். இரண்டையும் விட ஒப்பீட்டளவில் இதன் பலங்கள் அதிகம், பலவீனகள் குறைவு. தமிழ் சினிமா முன்னோக்கி போகிறது.
பாட்டம் லைன்: நல்ல முயற்சி, ஒரு மிகச்சிறந்த படமாக அமைய சகல தகுதிகளையும் கொண்டுள்ள படம், சிறு சிறு ஓட்டைகளால் மெல்லவும் முடியாது, துப்பவும் முடியாது நிலையில் இருக்கு. ஆறு மணி நேர வண்டி ஓட்டத்துக்கும், குடுத்த காசுக்கும் படம் வஞ்சனை இல்லை.
நம்ம ரேடிங்: 7 /10 (பரீட்ச்சார்த்த முயற்சி என்பதால் சில குறைகள் மன்னிக்கப்படுகிறது)
**********************************
பதிவுக் குறிப்பு: நீங்கள் சூர்யா எதிரி இல்லையாயின், ஹாலிவூட் படங்களே உலகப்படங்கள் எனக்கூறும் மொத்த படித்த மேதாவி இல்லையாயின், ஒரு தமிழ் படத்த நல்லம்ன்னு சொன்னா நாம கட்டிக்காத்த இமேஜ் கெட்டுப்போகும்னு அடம்பிடிக்காதவராயின், அதிகப்படியான விளம்பரங்களை சகித்துக்கொள்ளும் பக்குவம் இருப்பின் ஏழாம் அறிவு உங்களுக்கும் பிடிக்கும். கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம். ஒரு முறையா பலமுறையா என்பது உங்களை பொறுத்தது.
டிஸ்கி: படத்தின் லாஜிக் மீறல்கள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. காரணம், ஒன்று, படம் பிக்ஷன் ஜோனர், இரண்டாவது, ஒரு திரைப்படத்தில் எல்லா விடயங்களையும் காட்ட வேண்டும் என்றில்லை. உதாதரனமாக சிஸ்டம் பற்றி விவாதிக்க விருப்பமில்லையாயின், நூறு போலிஸ கொண்னப்புரம் ஏன் போலீஸ் ஒன்னும் செய்யலன்னு கேள்வி கேக்க தேவையில்லை. போலீஸ் எதுவும் செய்ததாக காட்டவும் இல்லை, செய்யாததாக காட்டவும் இல்லை. இது சினிமா விதிகளில் ஒன்று. படத்தின் பிளாஸ் பற்றியும் அதிகம் குறிப்பிடவில்லை. (இன்னொரு பதிவு தேத்தனும்ல).
டிஸ்கி: ஒரு நல்ல முயற்சி தவறான விமர்சனங்களால் வீண் போய் விடக்கூடாது என்பதற்காக சற்று ஆணிகளை ஒதுக்கிவிட்டு விரிவான ஒரு பதிவு. நீண்ட நாள்களுக்கு பின் தமிழர் பாரம்பரியம், போதிதர்மன் வரலாறு, அழிந்துபோன அல்லது அளிக்கப்பட கலைகள் போன்ற பல விடயங்களை விவாதிக்கக் கூடிய ஒரு படம். படம் பார்த்தவர்களின் ஆக்கபூர்வமான கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன. சம்பந்தமே இல்லாது அரசியலை இழுப்பதையும், படமே பார்க்காது இது நொட்ட அது நோசக்கு என சொல்வதையும் தவிர்த்தால் கூடுதல் மகிழ்ச்சி.
டிஸ்கி: சனி அல்லது ஞாயிறு ரா.1 விமர்சனத்துடன் சந்திப்போம்.
விமர்சனம் நல்லாயிருக்கு
ReplyDeleteஎல்லோரும் குறைகளை மட்டுமே பெரிதுபடுத்திக்காட்டும்போது நீங்க நல்லதை மட்டுமே பெரிதாக்கி காட்டியிருக்கிறீங்க.
நல்லாயிருக்கு... படம் எடுக்கிறவனோட கஷ்டத்த புரிஞ்சுவச்சிருக்கிறீங்க.
அப்போ வேலாயுதம் விமர்சனம் இல்லையா??????
ReplyDeleteமதுரன் said...
ReplyDelete///விமர்சனம் நல்லாயிருக்கு
எல்லோரும் குறைகளை மட்டுமே பெரிதுபடுத்திக்காட்டும்போது நீங்க நல்லதை மட்டுமே பெரிதாக்கி காட்டியிருக்கிறீங்க.
நல்லாயிருக்கு... படம் எடுக்கிறவனோட கஷ்டத்த புரிஞ்சுவச்சிருக்கிறீங்க.////
ஆத்தாடி, நானே நாங்களும் நெகடிவாதான் விமர்சனம் போட்டுட்டோமோன்னு பயந்திக்கிட்டே இருந்தேன்... பாசிடிவ்ன்னு சொன்னது மனசுக்கு சந்தோஷம்.
மதுரன் said...
ReplyDelete//அப்போ வேலாயுதம் விமர்சனம் இல்லையா??????//
இன்னும் வேலாயுதம் பார்க்கல நண்பா. ரெண்டு படத்தையும் ஒரே தடவையா பாத்துடலாம்ன்னுதான் போனேன், கொஞ்சம் டைமிங் மிஸ் ஆனதுல வேலாயுதம் மிஸ் ஆகிடிச்சு. பார்த்ததும் கண்டிப்பா விமர்சனம் வரும்.
ஆனா வேலாயுதம் ஓவரால் பாசிடிவ் விமர்சனம் தானே, உள்ள தூங்கிக்கிட்டிருந்த தளபதி ரசிகன லைட்டா தட்டி எழுப்பறாங்க.. கண்டிப்பா பார்க்கணும்.
வணக்கம்,டாக்டர்!மீண்டும்,தீபாவளி நல வாழ்த்துக்கள்!அழகாக விமர்சித்திருக்கிறீர்கள்!பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.
ReplyDeleteYoga.S.FR said...
ReplyDelete//வணக்கம்,டாக்டர்!மீண்டும்,தீபாவளி நல வாழ்த்துக்கள்!அழகாக விமர்சித்திருக்கிறீர்கள்!பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.//
நன்றி ஐயா, உங்களுக்கும் மறுபடியும் தீபாவெளி வாழ்த்துக்கள்.
தரமான விமரிசனம்.
ReplyDeleteசூப்பர் மச்சி
ReplyDeleteகலக்கலா
வெலாவாரிய
நெறைய மெனக்கெட்டு
படம் பார்க்க வைக்கும் அளவுக்கு உன் விமர்சனம்
வாழ்க வளமுடன்
நல்ல விமர்சனம்.. அருமை
ReplyDeleteஉங்க மூணு மணி நேர பயணத்துக்கு ஒர்த்தான விமர்சனம் கொடுத்திருகிங்க...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete'பதிவுக்குறிப்பில' நீங்கள் குறிப்பிட்டுள்ள விடயம் அருமை ..உண்மையும் கூட ...
ReplyDeleteநடு நிலைமையான விமர்சனம்
அப்போ படம் பார்க்கலாம்னு சொல்றீங்க ம்ம்ம்ம்...
ReplyDeleteவணக்கம் பாஸ் நான் இன்னும் 7ம் அறிவு பார்க்கவில்லை...எங்க ஊரில் ஓரே ஒரு டியேட்டர் இருப்பதால்....வேலாயுதம் திரையிட்டதால் 7ம் அறிவு...வரவில்லை உங்கள் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டி விட்டது...விமர்சனம் அழகு......
ReplyDeleteஇனிய இரவு வணக்கம் அண்ணன்களா,
ReplyDeleteவிமர்சனம் கலக்கலா எழுதியிருக்கிறீங்க.
விமர்சனம் நல்லா இருக்கு .
ReplyDeleteஇன்னும் படம் பார்க்கல .படம் பார்த்து விட்டு வந்து கமெண்ட் போடுறேன்
வேலாயுதம் படம் விமர்சனம் எப்போ போடுவிங்க
///நம்ம ராசு மாமா படம் பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாரு.////
ReplyDeleteமச்சான் கலீக்ஸ் முன்னாடி கல்லாப்ஸ் பண்ணாத.. ஆணி எல்லாம் புடுங்கி முடிஞ்சாச்சி, நாளைக்கி பார்க்குறேன்...
ரொம்ப பொறுமையாவும் யதார்த்தமாவும் விமர்சனம் பண்ணி இருக்கீங்க...! நல்ல விமர்சனம்.
ReplyDeleteபோதி தர்மா கற்றுக் கொண்ட திறமைகள் (acquired skills) டி.என்.ஏவுல அடுத்த தலைமுறைக்கு வருமா? இது சாத்தியமற்றதுன்னு நினைக்கிறேன்.
ReplyDeleteசென்னை பித்தன் said...
ReplyDelete//தரமான விமரிசனம்.//
நன்றி ஐயா..
siva said...
ReplyDelete//சூப்பர் மச்சி
கலக்கலா
வெலாவாரிய
நெறைய மெனக்கெட்டு
படம் பார்க்க வைக்கும் அளவுக்கு உன் விமர்சனம்
வாழ்க வளமுடன்//
தேங்க்ஸ் மச்சி, சும்மா ஒருவாட்டி பாரு.
ஜ.ரா.ரமேஷ் பாபு said...
ReplyDelete//நல்ல விமர்சனம்.. அருமை//
நன்றி நண்பரே..
தமிழ்வாசி - Prakash said...
ReplyDelete//உங்க மூணு மணி நேர பயணத்துக்கு ஒர்த்தான விமர்சனம் கொடுத்திருகிங்க...//
போக்கு - வரத்து ரெண்டையும் சேர்த்து ஆறு மணி நேரம் ஆச்சு, இதுகூட பண்ணலைனா நல்லாவா இருக்கும்..
கந்தசாமி. said...
ReplyDelete//'பதிவுக்குறிப்பில' நீங்கள் குறிப்பிட்டுள்ள விடயம் அருமை ..உண்மையும் கூட ...
நடு நிலைமையான விமர்சனம்//
ஆமாங்க, அதுதானே நடக்குது. நடுநிலைன்னு சொன்னதுக்கு மிக்க நன்றி..
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete//அப்போ படம் பார்க்கலாம்னு சொல்றீங்க ம்ம்ம்ம்...//
எந்த எதிர்பார்ப்பும் இல்லாம, இது ஒரு தமிழ் சினிமாங்குரத மறக்காம பாக்குறதுக்கு படம் ஓகே.
K.s.s.Rajh said...
ReplyDelete//வணக்கம் பாஸ் நான் இன்னும் 7ம் அறிவு பார்க்கவில்லை...எங்க ஊரில் ஓரே ஒரு டியேட்டர் இருப்பதால்....வேலாயுதம் திரையிட்டதால் 7ம் அறிவு...வரவில்லை உங்கள் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டி விட்டது...விமர்சனம் அழகு......//
நன்றி நண்பா, அங்க படம் வந்தாகூட பாதிக்கு மேல படத்துல இருக்காதுன்னு நினைக்கிறேன், நான் பார்த்த படத்துல கூட, பெரியல் கிரவுண்டுல சூரியா பேசுற வசனங்கள் எதுவுமே இருக்கல...
நிரூபன் said...
ReplyDelete//இனிய இரவு வணக்கம் அண்ணன்களா,
விமர்சனம் கலக்கலா எழுதியிருக்கிறீங்க.//
நன்றிண்ணே, எல்லாம் உங்கள மாதிரி பெரியவங்ககிட்ட இருந்து கத்துக்கறதுதான்..
உதவாக்கரை said...
ReplyDelete///விமர்சனம் நல்லா இருக்கு .
இன்னும் படம் பார்க்கல .படம் பார்த்து விட்டு வந்து கமெண்ட் போடுறேன்
வேலாயுதம் படம் விமர்சனம் எப்போ போடுவிங்க///
எதிர்பார்ப்ப கம்மி பண்ணிக்கிட்டு போங்க, படம் ஓகே யா இருக்கும். கொஞ்சம் டைமிங் மிஸ் ஆனதுல வேலாயுதம் மிஸ் ஆகிடிச்சி. பார்த்ததும் கண்டிப்பா விமர்சனம் வரும்.
மொக்கராசு மாமா said...
ReplyDelete///நம்ம ராசு மாமா படம் பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாரு.////
மச்சான் கலீக்ஸ் முன்னாடி கல்லாப்ஸ் பண்ணாத.. ஆணி எல்லாம் புடுங்கி முடிஞ்சாச்சி, நாளைக்கி பார்க்குறேன்...////
பாத்திட்டு சொல்லுங்க மாம்ஸ்,
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//ரொம்ப பொறுமையாவும் யதார்த்தமாவும் விமர்சனம் பண்ணி இருக்கீங்க...! நல்ல விமர்சனம்.//
நன்றிண்ணே, எதோ நம்மால முடிஞ்சது.
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//போதி தர்மா கற்றுக் கொண்ட திறமைகள் (acquired skills) டி.என்.ஏவுல அடுத்த தலைமுறைக்கு வருமா? இது சாத்தியமற்றதுன்னு நினைக்கிறேன்.///
அது ஆப்மார்க் கலப்படமற்ற கற்பனை,
"ஒருவர் உருவாக்கிக்கொண்ட இயல்புகள், ஆற்றல்கள், திறமைகள் என்பனவும் DNAவில் பதியப்படும், பின்னடைவான நிலையில் இருக்கும் இந்த இயல்புகளை தூண்டுவதன் மூலம் அந்த ஆற்றல்களை திரும்பக்கொண்டுவரலாம் என்பது கற்பனை"
வசனம் கன்பியுசிங்கா இருக்கு, கொஞ்சமா திருத்திக்கறேண்ணே...
அழகிய திரைப்பட விமர்சனத்திற்கு நன்றி சகோ வாழ்த்துக்கள் .
ReplyDelete7 Aum Arivu -- Excellent Concept overshadowed by Commercial items like Love Scenes, Songs, etc...Yemma Yemma Song is amazing song..But inda movie ku athu theva ila..It disturbed the flow of the movie...It is a better song than "Venmathi Venmathi" from Minnalae but due to his placement in the movie, it will not be remembered for long time...Surya va pathi sollavae venam..Girls will watch the movie just to see him for more than 5 times..He has started exposing much more than Shreya or Namitha :-) I felt that i am too proud to be a TAMILIAN for a minute and wanted to see the MUSEUM in our State for the first time..This is the SUCCESS for this movie..
ReplyDeleteNeengae sonna mathiri, flashback padathuku naduvula vandu irundae, nalla irundu irukum...But the problem is, bodhi dharman pathi already Tv la every one hour sollitangae..So, athu kuda bore adichi irukalam..Big mistake was HYPE..Just coz of it, Above Average movie looks like POOR movie for people.
ReplyDeleteஉலகமே போற்றும் போதிதர்மரின் பெயரைக் கூட தெரியாமல் வாழும் தமிழரின் இன்றைய இழிநிலையை, இன வரலாற்றை மறந்து, இனத்தின் பெருமையை மறந்து, பிற இனங்களைப் பின்பற்றி, பிறமொழிகளைப் பேசுவதைப் பெருமையாக எண்ணி, பொருள் ஈட்டுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு பெயரளவில் மட்டுமே தமிழராய் வாழும் தமிழர்களிடம், தங்கள் இனத்தில் ஒரு புத்தன் உண்டு, அவனுக்கு நாடெங்கும் சிலை வைத்து அவனை கடவுளாக வணங்கும் ஒரு வல்லரசு நாடு உண்டு என பொட்டில் அடித்தாற்போல் சொல்லியிருக்கிறார் முருகதாஸ்.
ReplyDeleteதிரையரங்கை விட்டு வெளியில் வரும்போது இரு தமிழ் அறிவாளிகள் கீழ்க்கண்டவாறு பேசிக்கொண்டனர், "என்ன மாப்ள? போதிதர்மரு போதிதர்மருனு மூணு மணி நேரம் கொண்டேபுட்டாய்ங்க. வேலாயுதமாவது போயிருக்கலாம்டா" என்று! மக்களே.. மதம் மாறுவது போல சுலபமாய் இனம் மாற முடிந்தால் புதியதை தெரிய மறுக்கும், பழையதை புரிய மறுக்கும் இந்த கேடுகெட்ட, சுயமரியாதையற்ற ஐந்தறிவு ஜீவன்கள் நிறைய இருக்கும் தமிழினத்தில் இருந்து உலகின் எதோ மூலையில் மானத்துடன் வாழும் எதோ ஒரு குட்டி இனத்திற்கு மாறிவிடலாம்! எஞ்சியுள்ள காலத்தை கொஞ்சமேனும் சுயமரியாதையோடு கழிக்கலாம்
TAMIL PIRATES என்ற பிரதியின் மூலம் பார்க்கக்கிடைத்தது.எனக்குப் பிடித்திருந்தது "ஏழாம் அறிவு!"
ReplyDeleteவிமர்சனத்தையும் படம் மாதிரியே ரொம்ப விளக்கமா சொல்லி இருக்கீங்க. அந்த காதல் காட்சிகள்தான் படத்தில் மிக வறட்சியான பாகம்.
ReplyDeleteஎன்னை பொறுத்தவரை
கதாநாயகன் - ஜானி
கதாநாயகி - ஸ்ருதி
சப்போர்டிங்க் ஆக்டர் - சூர்யா
அம்பாளடியாள் said...
ReplyDelete//அழகிய திரைப்பட விமர்சனத்திற்கு நன்றி சகோ வாழ்த்துக்கள்//
கருத்துக்கு நன்றி சகோ.
Unknown said...
ReplyDelete//7 Aum Arivu -- Excellent Concept overshadowed by Commercial items like Love Scenes, Songs, etc...Yemma Yemma Song is amazing song..But inda movie ku athu theva ila..It disturbed the flow of the movie...It is a better song than "Venmathi Venmathi" from Minnalae but due to his placement in the movie, it will not be remembered for long time...Surya va pathi sollavae venam..Girls will watch the movie just to see him for more than 5 times..He has started exposing much more than Shreya or Namitha :-) I felt that i am too proud to be a TAMILIAN for a minute and wanted to see the MUSEUM in our State for the first time..This is the SUCCESS for this movie..//
கருத்துக்களுக்கு நன்றி. எதிர்பார்ப்புக்கள் இல்லாமல், படம் பார்பவர்களுக்கு ஒரு நல்ல படம். அதிகப்படியான விளம்பரத்தை நம்பி போனவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம்.
Unknown said...
ReplyDelete//Neengae sonna mathiri, flashback padathuku naduvula vandu irundae, nalla irundu irukum...But the problem is, bodhi dharman pathi already Tv la every one hour sollitangae..So, athu kuda bore adichi irukalam..Big mistake was HYPE..Just coz of it, Above Average movie looks like POOR movie for people//
இங்கே இருப்பதால் விளம்பரத்தொல்லை சற்றுக் குறைவு. அங்கே நிலைமை என்னன்னு தெரியல..
jeyathees said...
ReplyDelete//உலகமே போற்றும் போதிதர்மரின் பெயரைக் கூட தெரியாமல் வாழும் தமிழரின் இன்றைய இழிநிலையை, இன வரலாற்றை மறந்து, இனத்தின் பெருமையை மறந்து, பிற இனங்களைப் பின்பற்றி, பிறமொழிகளைப் பேசுவதைப் பெருமையாக எண்ணி, பொருள் ஈட்டுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு பெயரளவில் மட்டுமே தமிழராய் வாழும் தமிழர்களிடம், தங்கள் இனத்தில் ஒரு புத்தன் உண்டு, அவனுக்கு நாடெங்கும் சிலை வைத்து அவனை கடவுளாக வணங்கும் ஒரு வல்லரசு நாடு உண்டு என பொட்டில் அடித்தாற்போல் சொல்லியிருக்கிறார் முருகதாஸ்
திரையரங்கை விட்டு வெளியில் வரும்போது இரு தமிழ் அறிவாளிகள் கீழ்க்கண்டவாறு பேசிக்கொண்டனர், "என்ன மாப்ள? போதிதர்மரு போதிதர்மருனு மூணு மணி நேரம் கொண்டேபுட்டாய்ங்க. வேலாயுதமாவது போயிருக்கலாம்டா" என்று! மக்களே.. மதம் மாறுவது போல சுலபமாய் இனம் மாற முடிந்தால் புதியதை தெரிய மறுக்கும், பழையதை புரிய மறுக்கும் இந்த கேடுகெட்ட, சுயமரியாதையற்ற ஐந்தறிவு ஜீவன்கள் நிறைய இருக்கும் தமிழினத்தில் இருந்து உலகின் எதோ மூலையில் மானத்துடன் வாழும் எதோ ஒரு குட்டி இனத்திற்கு மாறிவிடலாம்! எஞ்சியுள்ள காலத்தை கொஞ்சமேனும் சுயமரியாதையோடு கழிக்கலாம்//
ரைட்டு..
Yoga.S.FR said...
ReplyDelete//TAMIL PIRATES என்ற பிரதியின் மூலம் பார்க்கக்கிடைத்தது.எனக்குப் பிடித்திருந்தது "ஏழாம் அறிவு!"//
ஐயாவுக்கே படம் பிடிச்சிருக்குன்னா படத்துல எதோ விஷயம் இருக்கு...
// பாலா said...
ReplyDeleteவிமர்சனத்தையும் படம் மாதிரியே ரொம்ப விளக்கமா சொல்லி இருக்கீங்க. அந்த காதல் காட்சிகள்தான் படத்தில் மிக வறட்சியான பாகம்.
என்னை பொறுத்தவரை
கதாநாயகன் - ஜானி
கதாநாயகி - ஸ்ருதி
சப்போர்டிங்க் ஆக்டர் - சூர்யா//
மொத்த சரி நண்பரே. ஒரு பெரிய ஹீரோ பாத்திரத்தின் தேவை அறிந்து அதற்கேற்ற வகையில் நடித்திருப்பது நிச்சயம் வரவேற்க்கத்தக்கது. அந்தவகையில் சூர்யா இந்தப்படத்தில் ஹீரோதான்.
Genetics மாணவி ஸ்ருதி 1600 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து சீனா சென்று மருத்துவத்தையும் தற்காப்பு கலைகளையும் பரப்பிய போதி தர்மரைப் பற்றி DNA ஆராய்ச்சி செய்கிறார்.
ReplyDeleteபோதி தருமரின் வம்சாவளியில் வந்த சூர்யாவுடன் போதி தருமரின் DNA என்பது சதவிகதத்திற்கு மேல் (83.74%) ஒத்துப்போவதால் அவருக்கு போதி தருமரின் DNAவை செலுத்தி பழைய மருத்துவ ரகசியங்களையும், தற்காப்பு கலைகளையும் மீட்டெடுக்க முனைகிறார் ஸ்ருதி.
இதற்கிடையே சீனா – இந்தியா பயோ வார், ஆப்பரேஷன் ரெட் இன்னபிற மசாலா மேட்டர்களையும் குழைத்து கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
கதை... ம்ம்ம் ஓகே ஆனால் திரைக்கதை. இரண்டு குறைகள் – ஒன்று மொக்கை, இன்னொன்று லாஜிக். படம் பார்ப்பவர்களுக்கு குறைந்தபட்சம் ஐந்தறிவு கூட இருக்காது என்று நினைத்துவிட்டு மொழம் மொழமா பூவை சுற்றியிருக்கிறார்கள்.
இரண்டாம் பாதி ஆரம்பமான பின்பு இப்ப லிப்ட்ல இருந்து வில்லன் வருவான் பாரேன், இப்ப திரும்பி வந்து எட்டிப்பார்ப்பானே என்று கடைக்கோடி ரசிகன் கூட யூகிக்கும் அளவிற்கு பயங்கர க்ளிஷேத்தனங்கள்.
இரண்டே முக்கால் மணிநேரம் பொறுமையை சோதிக்காமல் பல காட்சிகளை வெட்டி எறிந்திருக்கலாம்.
சூர்யா ஹீரோயிசம் காட்டாமல் ஹீரோயிசம் காட்டுகிறார். ஸ்ருதி பாடல் காட்சிகளில் மட்டும் அழகாக தெரிகிறார். மற்றபடி உவ்வே. சீன நடிகர் ஜானி பார்த்து பார்த்தே எல்லோரையும் சாகடிக்கிறார் படம் பார்ப்பவர்களையும் சேர்த்து.
ஹீரோ பின்னாடியே ஜல்லியடித்துக் கொண்டு திரியும் காமெடியன் மிஸ்ஸிங். (சில காட்சிகள் வரும் குள்ள நடிகரை தவிர்த்து) அதற்கெல்லாம் நேரமும் இல்லை. அது படத்திற்கு பலமா பலவீனமா என்று தெரியவில்லை.
ஸ்ருதியின் தோழிகளாக வருபவர்கள் சூப்பர் ஃபிகர்ஸ்.
பாடல்கள் பற்றி ஏற்கனவே தெரிந்திருக்கும். அவற்றை காட்சிப்படுத்திய விதத்தில் ஒளி ஓவியர் ரவி கே சந்திரன், கலை இயக்குனர் ஆகியோரது உழைப்பு தெரிகிறது. குறிப்பாக முன் அந்திச்சாரல் பாடலில் காட்டப்பட்ட லொக்கேஷன் பிரமிக்க வைத்தது.
பின்னணி இசையை பொறுத்தவரையில் சொதப்பலோ சொதப்பல். க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் எழவு மியூசிக் மாதிரி ஒன்னு போட்டிருக்கிறார், கொன்னுட்டாரு போங்க.
படம் ஆரம்பிக்கும் முன்பு செய்திப்பட பாணியில் போதி தர்மரைப் பற்றி சுமார் இருபது நிமிடக்காட்சிகள் ரசிக்க வைத்தன. தியேட்டருக்கு லேட்டாக வரும் ரசிகர்கள் பாவம்.
அதே மாதிரி க்ளைமாக்ஸ் முடிந்தபிறகு சூர்யா வேப்பிலை மருத்துவம், மஞ்சள் மகத்துவம், யாழ்ப்பாண நூலகம் எரிப்பு என்று தமிழனை குத்திக்காட்டும் வசனங்கள் நச்.
படம் முடிந்த மறுவினாடியே தெறித்து ஓடும் ரசிகர்களும் பாவம்.
சில காட்சிகளில் மட்டும் தமிழனை பெருமைப்படுத்திய இயக்குனர் பல காட்சிகளில் தமிழனை தலைசொறிய வைத்திருக்கிறார். தமிழனை ஏமாற்ற சீனாக்காரன் எல்லாம் தேவையில்லை கள்ளக்குறிச்சிக்காரனே போதும் என்று நம் தலையில் மாங்கு மாங்கென்று டன் கணக்கில் மிளகாய் அரைத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
கலைஞரின் பேரன் உதயநிதி ஸ்டாலின் எடுத்த படத்தில் இலங்கைத்தமிழனின் வீழ்ச்சியை பற்றி பேசி நம்மை புடைக்கச் செய்வார்களாம். என்னங்கடா ஒங்க நியாயம்.
. மற்றபடி தமிழ், தமிழன், தமிழனின் பெருமை என்று படத்தில் காட்டப்படும் ஜிம்மிக்ஸ் வேலைகள் எரிச்சலூட்டுகின்றன. .
Dr. Butti Paul said...
ReplyDeleteஐயாவுக்கே படம் பிடிச்சிருக்குன்னா படத்துல எதோ விஷயம் இருக்கு...////படம் விறுவிறுப்பாக இருக்கிறது.பட ஆரம்பத்தில் 25 நிமிடம் சரித்திர விளக்கம்.பின்னர் கதை தொய்வின்றி நகர்கிறது என்பது தவிர "பிடிக்கும்" காட்சி "ஒன்று"ம் இல்லை!ஹன்சி இதில் இல்லையே?
mcckrishna
ReplyDeleteஎதுக்குங்க பிரபாகரன் சாரோட விமர்சனத்த இங்க கொண்டுவந்து பின்னூட்டமா போடுறீங்க? நாம அவரோட நிரந்தர வாசகர்.
Yoga.S.FR said...
ReplyDelete//Dr. Butti Paul said...
ஐயாவுக்கே படம் பிடிச்சிருக்குன்னா படத்துல எதோ விஷயம் இருக்கு...////படம் விறுவிறுப்பாக இருக்கிறது.பட ஆரம்பத்தில் 25 நிமிடம் சரித்திர விளக்கம்.பின்னர் கதை தொய்வின்றி நகர்கிறது என்பது தவிர "பிடிக்கும்" காட்சி "ஒன்று"ம் இல்லை!ஹன்சி இதில் இல்லையே?//
ஸ்ருதியோட ஒரு தெலுங்கு பட ஸ்டில்லுக்கே முருகதாஸ் வாங்கி கட்டுறாரு, இதுல பிடிக்கிற மாதிரி காட்சி அமைச்சிருந்தார்னா... ஹன்சி... ஹ்ம்ம்
appao ippo bodhi dharma famila la yaru iruka avanga irukangala idha namma kandupiduchu aids pondra pala therka mudiyatha vyathila alichuvalarasu aana naan tamilan nu peruma pada thayar vru padatha parthu 2claps panituporom thats it avvalavuthan ya nam panrom. ennai porutha varai intha padatha kamalsir kuruthipunal attemp mathiri oru 1.00hr la documetnry ya eduthu irukalam nalla irunthurukkum
ReplyDeletemeyyappanram said...
ReplyDelete//appao ippo bodhi dharma famila la yaru iruka avanga irukangala idha namma kandupiduchu aids pondra pala therka mudiyatha vyathila alichuvalarasu aana naan tamilan nu peruma pada thayar vru padatha parthu 2claps panituporom thats it avvalavuthan ya nam panrom. ennai porutha varai intha padatha kamalsir kuruthipunal attemp mathiri oru 1.00hr la documetnry ya eduthu irukalam nalla irunthurukkum//
பாஸ் விமர்சனம் முழுதும் படிச்சீங்களா? டாகுமெண்டரியா எடுக்கறதுக்கு படத்துல ஒண்ணுமே இல்ல. இது ஒரு கற்பனை, போதிதர்மர் உண்மை பாத்திரமா உருவாக்கமான்னே வரலாற்றாலர்களிடம் இன்னும் சந்தேகம் இருக்கு. இதுல அவரோட பரம்பரைய எங்க கண்டுபிடிக்கறது? "DNA ல உருவாக்கிக்கொண்ட திறமைகள் பதியப்படும், அத தூண்டலாம்" அப்புடிங்கறது முழுக்க முழுக்க கற்பனை. அத செயல்படுத்திக் காட்டுன்னு சவால் விடுறது நியாயமில்ல. நமக்குன்னு ஒரு பாரம்பரியம் இருந்தது, அத மறந்திட்டு நாம இன்னும் அடிமை மனப்பான்மையிலேயே இருக்கோம், அத நீக்கிக்கணும், அம்புட்டுதான், அப்புறம் RNA ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற ஒரு தமிழன் இருக்காரு, அவர் கதைய வேணும்னா ஒரு மணிநேர டகுமென்றியா எடுக்கலாம்.
saringa butti paul . nanba apapram eppadi sure asolraru murugadoss bdhidharma iruntharu nu chinalaelalrum solranga we know he is from ttamilnadunu. anga silaiyellam kamikranga
ReplyDeletemeyyappanram said...
ReplyDelete//saringa butti paul . nanba apapram eppadi sure asolraru murugadoss bdhidharma iruntharu nu chinalaelalrum solranga we know he is from ttamilnadunu. anga silaiyellam kamikranga//
விடுங்க பாஸ், இது ஒரு மொக்க படம்.. சூர்யா ஒரு மொக்க நடிகர், முருகதாஸ் ஒரு மொக்க டைரெக்டர்.. நமக்கு ஓகே ஓகே வருது, வெயிட் பண்ணுங்க..
விடுங்க பாஸ், இது ஒரு மொக்க படம்.. சூர்யா ஒரு மொக்க நடிகர், முருகதாஸ் ஒரு மொக்க டைரெக்டர்.. நமக்கு ஓகே ஓகே வருது, வெயிட் பண்ணுங்க..
ReplyDeleteithu weight boss. super okok pappom kalakanum dec ellame bb movie vettai,rajapattai,okok
வணக்கம்
ReplyDeleteநல்லதொரு விமர்சனப்பார்வை நான் நாளைதான் படம் பார்கப்போகிறேன்..
உண்மையிலேயே ஒரு படம் எல்லோரையும் கவர்ந்துவிடாது உங்கள் விமர்சனம் நடுநிலையாய் இருக்கிறது.. என்ன நடந்தாலும் அந்த படத்தை பார்கவேண்டும் என்று விமர்சனங்களை பார்க முன்னமே முடிவெடுத்திருந்தேன் உங்கள் விமர்சனம் என்னை கட்டாயம் படம்பார்கவேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது பதிவுக்கு நன்றி..
tamilar unarvai kasakukiratha 7am arivu http://meyyappanram87.blogspot.com/2011/10/blog-post.html
ReplyDeleteகாட்டான் said...
ReplyDelete//வணக்கம்
நல்லதொரு விமர்சனப்பார்வை நான் நாளைதான் படம் பார்கப்போகிறேன்..
உண்மையிலேயே ஒரு படம் எல்லோரையும் கவர்ந்துவிடாது உங்கள் விமர்சனம் நடுநிலையாய் இருக்கிறது.. என்ன நடந்தாலும் அந்த படத்தை பார்கவேண்டும் என்று விமர்சனங்களை பார்க முன்னமே முடிவெடுத்திருந்தேன் உங்கள் விமர்சனம் என்னை கட்டாயம் படம்பார்கவேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது பதிவுக்கு நன்றி..///
முதவாட்டி நம்ம கடைக்கு.. நன்றி மாம்ஸ்..
தமிழில் சில நாட்களுக்கு முன் வந்த இரண்டு பிக்சன் கதைகள், தசாவதாரம், ஆயிரத்தில் ஒருவன். இரண்டையும் விட ஒப்பீட்டளவில் இதன் பலங்கள் அதிகம், பலவீனகள் குறைவு. தமிழ் சினிமா முன்னோக்கி போகிறது.//
ReplyDeleteசூப்பர் பாஸ்
பிரிச்சு மேஞ்சி பின்னி பெடலெடுத்துருக்கீங்க தலைவா!
ReplyDeleteஎன் கருத்துக்கள் போன்ற (அதையும் தாண்டிய பார்வைகளுடன்) உள்ள விமர்சனம். வாழ்த்துக்கள் நண்பரே.
ReplyDelete