Sunday, October 30, 2011

Ra.One எனது பார்வை (இது விமர்சனம் அல்ல)


ஷாரூக் கான் படம், நமக்கு ரொம்பவே பக்கத்துல இருக்கற தேட்டர் வரைக்கும் வந்திருக்கு, படம் பாக்கலைனா தெய்வகுத்தம் ஆகிடுமேன்னு நேற்று படம் பார்த்தேன். படத்துல நிறைய குறை நிறை இருக்கு, என்கூட படம் பார்க்க வந்த மூனுபேர்ல ஒருத்தருக்கு படம் பிடிக்கல, ஒருத்தர் தேட்டர்ல தூங்கிட்டாரு, இன்னொருத்தர் சிரிப்புசத்தம் இன்னொரு RR ஆ ஒலிச்சிக்கிட்டே இருந்திச்சு.. இதுதான் படம் பத்தி சொல்லக்கூடியது.. எனக்கு படம் பிடிச்சிருந்தது, ஏன்னா அது ஷாரூக் கான் படம், ஷாரூக்கோட மொக்க மொக்க படங்களே சுமார்ன்னு சொல்லுவேன், அப்புடின்னா இந்த படத்த  சூப்பெர்ன்னு தானே சொல்லுவேன், படத்துல இருக்கற குறைகள் ஆறறிவுக்கு பட்டாலும், ஷாரூக்கும், உள்ள இருக்கும் ஷாரூக் ரசிகனும் அத மிகைச்சிடிச்சு, அதனால எனக்கு இந்த படத்துக்கு விமர்சனம் எழுதற தகுதி இல்லன்னு நினைக்கிறேன். விமர்சன தர்மங்களில் முதலாவது நடுநிலைமை, இந்த படத்துல அத பேணமுடியாது என்பது நல்லாவே தெரியுது. அதனால ஜஸ்ட் எனது பார்வை.

கதை: மகனது உலகத்தில் மகனுக்கு சுப்பர் ஹீரோவா இருக்க நினைக்கிற அப்பா, அவனது ஆசைகளுக்காவே மிகவும் பலம் வாய்ந்த ஒரு வில்லனை உருவாக்கி ஒரு வீடியோ கேமை  வடிவமைக்கிறார். அந்த வில்லனுக்கு ஒரு செயற்கை அறிவு ஊட்டப்படுகிறது. அதன் மூலம் வில்லன் தானாக பல விடயங்களை கற்றுக்கொண்டு ஒவ்வொரு தடவையும் வேறுபட்ட சவால்களை இடக்கூடியதாக உருவாகிறது. இந்த வில்லனுக்கு அசைவுகளை கற்றுத்தருவதற்கு மனித அசைவுகளை சின்கரனைஸ் பண்ணும்போது அது அசைவுகள் மட்டுமல்லாது நாம் பேசுபவை முதல்கொண்டு  பலதையும் கற்றுக்கொள்கிறது. ஷாரூக் மகனுக்கு கேமினை அறிமுகப்படுத்தும்போது இந்த வில்லனை யாராலும் தோற்கடிக்க முடியாது என சொல்கிறார், வில்லன் அதையும் தனது மேமொரியில் போட்டுக்கொள்கிறது. முதல்நாள் கேமை லூசிபார் எனும் பெயரில் விளையாடும் ஷாரூக்கின் மகன் இரண்டு லெவல்களில் வில்லனை தோற்கடித்துவிட யாராலும் தோற்கடிக்க முடியாது என பதிவு செய்ததை நினைவில் கொண்டு வில்லன் லூசிபிரை கொல்ல வேண்டும் என அலைகிறது. தொலை தொடர்பு, தொலைக்காட்ச்சி, வானொலி  என பலவகைகளில் நம்மை சுற்றும் மின்காந்த (டிஜிடல் ராய்ஸ் என படம் கூறும்) அலைகளின் உதவியுடன் கேமிலிருந்து வில்லன் வெளியேறி லூசிபாரை கொல்ல அலைகிறது. வில்லன் தோர்கடிக்கப்பட்டானா மகன் காப்பாற்றப்பட்டான என்பதை தொழில்நுட்ப உதவியுடன் கூறி முடிகிறது படம்.


ஷாரூக் இறக்கும் வரை படத்தில் காமெடிக்கு பஞ்சமே இல்லை. இடை வேளைக்கு முதலே ஷாரூக் இறந்துவிட மிகுதி நேரத்தை சூப்பர் ஹீரோ ஷாரூக் பார்த்துக் கொள்கிறார். எந்த சூப்பர் ஹீரோவும் இவ்வளவு காமெடி பண்ணியதில்லை என தேட்டரையே சிரிப்பில் ஆழ்த்துகிறது படம். தெரிஞ்சு வந்தாங்களா தெரியாம வந்தாங்களான்னு யோசிக்க வச்ச இரு கறுப்பின அமெரிக்க பெண்கள் படம் முழுவதும் சிரித்தது ஷாரூக்கின் காமெடியை பறை சாற்றியது. ஜானி இங்க்லீஷ் ரீபோர்ன் படம் பார்த்த போது கூட தேட்டரில் இவளவு சிரிப்பொலி கேட்கவில்லை, அந்த படத்துக்கு மொத்தமே பத்துபேர்தான் வந்திருந்தாங்கங்குறது வேற விஷயம். காமெடின்னு சொல்லிட்டேன் அப்புறம் நமக்கு படம் புடிச்சிருந்திச்சின்னுவேற தனியா சொல்லனுமா? கிராபிக்ஸ் சில இடங்களில் அருமை, சில இடங்களில் கமலஹாசனின் விக்ரம் பட ரேஞ்சுக்கு செம சொதப்பல்.

இம்புட்டு செலவு செய்த படத்தை பற்றி சில குறிப்புக்கள் 

1. ரொம்ப தின் லைனா இருந்தாலும் குட் ஓவர் ஈவில் என்பது மிக அழகாக குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் சொல்லப்பட்டது நல்ல விடயம். உதாரணமாக "வில்லன்ஸ் ஆர் ராக்கிங், தே ஹேவ் நோ ரூல்ஸ்" ன்னு பையன் சொல்லும்போது வில்லன் கெட்டவன், நல்லவன்தான் ஜெயிக்கனும்ன்னு ஷாரூக் சொல்லுவது, எவ்வளவு பெரிய, அழிக்கவே முடியாத பலசாலி வில்லனாக இருந்தபோதும், வில்லன் அளவுக்கு பலம் இல்லாத நல்லவனான G.One வில்லனை வெற்றிகொள்ள வேண்டிய தேவையை மிகவும் அழகாக சொன்னது. ஈவில் ட்ராயம்ப்பை சாதரணமாக காட்டக்கூடிய காலகட்டத்தில் (உதாரணம் ஷாரூக்கின் டான்), குழந்தைகளுக்காக படம் எடுக்கும் போது மிகக்கவனமாக இதை கையாண்டது.

2. கேம் உருவாக்கிய எவருமே முழுதாக பரீட்சிக்காது கேம் லான்ச் பண்ணுவது  பெரியவே ஒரு லாஜிக் ஓட்டை, லான்ச் பண்ணுவதற்கு முதல் டெவெலப்மென்ட் ஸ்டேஜ்லையே ஷாரூக்கின் மகன் விளையாடுவது போல் எடுத்திருக்கலாம். செமி பைனல்ல தோத்து, பைனல் ஆடி சாம்பியன் ஆன படத்தையே ஒரு காமேர்சியல் லேண்ட் மார்க் படமா சொல்லிக்கிட்டு இருக்கோம், இது பெரிய விசயமான்னு கேக்கலாம், ஆனாலும் பெரிய விசயம்தான். விஞ்ஞான நம்பகத்தன்மையை மொத்தமா சிதைக்குற இடம் இது. ஒழுங்கா டெஸ்ட் பண்ணினா கேம்ல அப்புடி ஒரு பெரிய பிழை வந்தத தடுத்திருக்கலாம்,  தொழில் நுட்ப வளர்ச்சி முழுதும் ஆபத்தே என சொல்பவர்களுக்கு இந்த டெஸ்டிங் போன்ற சில விடயங்கள்தான் விஞ்ஞானத்த இன்னும் தாக்கு பிடிக்க வச்சிக்கிட்டு இருக்கு. மொத்த படமுமே இந்த லாஜிக் ஓட்டயிலதான் தங்கி இருக்குன்னும் போது பெரிய விசயமா இல்லையா?


3. கிராபிக்ஸ் சில இடங்களில் மொக்கையாக இருந்தாலும், முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் இப்படி ஒரு படத்தை எடுத்தது. வெளிநாட்டு தொழில் நுட்பத்தில் மொக்கையா எடுக்கறத (ஹி ஹி ஏழாம் அறிவு) விட நம்ம தொழில் நுட்பத்தில் மொக்கையா எடுக்கறது எவ்வளவோ மேல். (இதுல என்ன இருக்குன்னு புரியாம கேள்வி கேக்கறவங்களுக்கு, கிராபிக்ஸ் அனிமேசன் என்பதன் பயன்பாடு ரொம்ப பெரியது, ஆனால் அதன் வளர்ச்சிக்கு கோடி கோடியாக பணம் தேவை, அந்த பணம் கேமிங்கிலும், பிலிம் மேகிங்கிலும் இருந்துதான் கிடைக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பெரும்பாலான முதலீடு இங்குதான் இருக்கிறது, நமது முதலீட்டில் வேறொருவன் ஆராய்ச்சி செய்வதை விட நம்மவரே ஆராய்ச்சி செய்வது நல்லவிசயம் தானே, என்ன நான் சொல்றது?). ட்ரைன் சீகுவேன்ஸ் எந்திரனின் ட்ரைன் சீகுவேன்ச மிஞ்சும் கிராபிக்ஸ். இந்தியன்னு பெரும பட்டுக்கலாம்.

4. நான் இந்தில தான் படம் பார்த்தேன், அதனால ஷாரூக் கானோட சேகர் சுப்பிரமணியம் காரெக்டர், காமெடி, உள்ளேயே வாழும் கலாசார உணர்வு எல்லாத்தையும் தாண்டி சில இடங்களில் கொஞ்சம் நெருடலா இருந்தது. இம்புட்டு பெரிய படம், உலகம் முழுக்க பல மொழிகள்லயும் பல தேட்டர்கள்ளையும்  வெளியிடப்படும் போது இன்னும் கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம், இந்தியாவின் தலை சிறந்த டெக்னீசியான்ஸ் தமிழ் நாட்டுலதான் இருக்காங்கன்னு பேட்டிகள்ள ஒத்துக்கொண்டதோட மட்டுமில்ல அத படத்துலயும் பதிவு செய்ய நினைத்தது பாராட்டப்பட வேண்டியது. ஆனாலும் அவ்க்வர்ட் பிஹேவியர் உள்ளவரா அவரும் அவரது பக்கத்து வீட்டுக்காறரா வரும் சதீஷ் ஷாவும் மட்டுமே இருப்பது அந்த நோக்கத்தையே மழுங்கடிப்பது.

5. டார்கெட் ஆடியன்ஸ் யார்ன்னு குழம்பிப் போனது போல உருவாக்கி இருக்கும் படம். பெரியவர்களுக்கு படம் கொஞ்சம் சின்னபுள்ள தனமா இருக்கும். குழந்தைகளுக்கு கொஞ்சம் ஓவராவே கவர்ச்சி இருக்கும்.  ஒருவேள மனதளவில் குழந்தைகளாகவும் செயல்பாடுகளில் முத்தல்களாகவும் இருக்கும் நம்ம மொக்கராசு மாமா போல உள்ளவங்களுக்காக இந்த படத்த எடுத்திருப்பாங்களோ?


பாட்டம் லைன்: ஷாரூக் ரசிகராகவும், காமெடி பிரியராகவும் என்டேர்டைன்மண்டுக்காக மட்டுமே படங்கள் எனும் எண்ணத்தில் இருப்பவராகவும் இருந்தால் உங்களுக்கு படம் பிடிக்கும். இதுல ஏதாவது ஒன்னு குறைஞ்சாலும் படம் மொக்கையா தெரியலாம். குழந்தைகளுக்கு படம் பிடிக்கும். (சில காட்சிகளை தவிர) குழந்தைகளுக்கு பரிந்துரைக்கக்கூடிய படம். வேலாயுதம் (ஹன்சிகா காட்சிகள்) குழந்தைகளுக்கு ஓகேன்னு சொன்னீங்கன்னா இது டபுள் ஓகே.

***********************************

சொல்ல மறந்த கதை: அது என்னமோ தெரியல ஷாரூக் கான் படம்னா மொக்க பிகர் கூட சூப்பர் பிகரா தெரியுது. கரீன கபூர் சூப்பரா இருக்காங்க, நல்லா காட்றாங்க திறமையையும் நடிப்பையும். ஷாரூக் கானோட மகனா நடிக்கற பையன் நல்லாவே நடிச்சிருக்காரு, சில காட்சிகளில் கரீனாவை தூக்கி சாப்பிடும் நடிப்பு, சில காட்சிகளில் ஷாரூக்கிற்கே சவால் விடும் நடிப்பு. அர்ஜுன் ரம்பால் ஓகே, ஆனா அந்த கெட்-அப்ல என்ன இருக்குன்னு அம்புட்டு ரகசியமா வச்சிருந்தாங்கன்னு தெரியல. விஷால்-சேகர் பின்னணி இசை நல்லா இருக்கு. மூணு பாட்டுதான் படத்துல (ஏழாம் அறிவு டீம் நோட் திஸ்), அக்கான் பாட்டு இன்ஸ்டன்ட் ஹிட். கேமெரா நன்று.

ஒப்பீடு: இந்த படத்த எந்திரனோட ஒப்பிட தேவையில்லங்குறது என்னோட சொந்த கருத்து. அதையும் தாண்டி கொஞ்சம் சொல்லுடான்னு மொக்கராசு மாமா கேட்டுக்கொண்டதால சொல்றேன். விசுவல் எபக்ட், என்டேர்டைன்மென்ட் ரெண்டுலயும் எந்திரன். பட்ஜெட்டுக்கு தக்கதா என்டேர்டைன்மேண்ட தவிர எதாச்சும்னா Ra.One.  என்னதான் சொல்லுங்க ரஜனி ரஜனிதான், எந்திரன்தான்.


டிஸ்கி: ஆறு மணிக்கு 3D ஷோ. டான்-2  ட்ரெய்லர் மிஸ் பண்ணிட கூடாதேன்னு அஞ்சு மணிக்கே தேட்டேருக்கு போனேன், ப்ரொஜெக்டர் பழுது 8 மணிக்கு நோர்மல் ஷோ போடுவோம் பாருங்கன்னு சொல்லிட்டாங்க, அங்கயும் டான்-2 ட்ரெய்லர் போடுவாங்கன்னு பார்த்தா அதையும் கண்ணுல காட்டல, நமக்கு இந்த ராசி போகாது போலிருக்கே.(நீதி: அமேரிக்காலயும் ப்ரொஜெக்டர் பழுதாகும் மக்களே.)25 comments:

 1. //ரஜனி ரஜனிதான்//
  அப்படிச் சொல்லுங்க!

  ReplyDelete
 2. செஞ்ச செலவுக்கு வொர்த் இல்லையா?

  ReplyDelete
 3. படத்த நிஜமாவே போஸ்ட் மார்ட்டம் பண்ணிட்டீங்களே?

  ReplyDelete
 4. நல்ல விமர்சனம்..இதே தான் என் ஃப்ரெண்ட்ட்டும் சொன்னார்.

  ReplyDelete
 5. தலைவர் ரஜினி வர்ற சீன் பத்தி ஏன் ஒன்னுமே சொல்லலை? என்னய்யா விமர்சனம் போடுறீங்க, ராஸ்கல்ஸ்..

  ReplyDelete
 6. சென்னை பித்தன் said...
  //ரஜனி ரஜனிதான்//
  அப்படிச் சொல்லுங்க!//

  அதுல எந்த சந்தேகமும் இல்ல ஐயா.

  ReplyDelete
 7. கோகுல் said...
  //செஞ்ச செலவுக்கு வொர்த் இல்லையா?//

  தெரியலயேப்பா...

  ReplyDelete
 8. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //படத்த நிஜமாவே போஸ்ட் மார்ட்டம் பண்ணிட்டீங்களே?//

  போஸ் மார்டம் எல்லாம் இல்லன்னே, சும்மா மனசுல பட்டது.

  ReplyDelete
 9. செங்கோவி said...
  //நல்ல விமர்சனம்..இதே தான் என் ஃப்ரெண்ட்ட்டும் சொன்னார்.//

  விமர்சனம் இல்லன்னு சொன்னாலும் ஏத்துக்க மாட்டேன்னு அடம்புடிக்கரீங்களே இது நியாயமாண்ணே?

  ReplyDelete
 10. செங்கோவி said...
  ///தலைவர் ரஜினி வர்ற சீன் பத்தி ஏன் ஒன்னுமே சொல்லலை? என்னய்யா விமர்சனம் போடுறீங்க, ராஸ்கல்ஸ்..///

  எதுக்கு வம்புன்னுதான் அத விட்டுட்டேன்னே... உலகம் முழுக்க ரஜனி சார கொண்டுபோகணும்னு அவருக்கு கவுரவம் கொடுத்தது புடிச்சிருந்தது. அந்த சீன்ல கரீனாவோட முகபாவம் ஏனோ சில ரஜனி ஜோக்ஸ்ஸ நினைவு படுத்தி தொலைத்தது. மீண்டும் பாயின்ட் நம்பர் 4 பீலிங்தான்.

  ReplyDelete
 11. எனக்கென்னமோ ரஜினிய கிண்டல் அடிச்சி விட்டிருந்த மாதிரி இருந்தது. ரஜினி வந்த உடனே கரீனா கன்னத்துல போட்டுக்கறதுலாம் ஓவர்... (யூ டியூப் கிளிப் பார்த்தேன், அந்த சீன்ல தியேட்டர் ஆடியன்ஸ் கேவலமா சிரிக்கிறாங்க.......)

  ReplyDelete
 12. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //எனக்கென்னமோ ரஜினிய கிண்டல் அடிச்சி விட்டிருந்த மாதிரி இருந்தது. ரஜினி வந்த உடனே கரீனா கன்னத்துல போட்டுக்கறதுலாம் ஓவர்... (யூ டியூப் கிளிப் பார்த்தேன், அந்த சீன்ல தியேட்டர் ஆடியன்ஸ் கேவலமா சிரிக்கிறாங்க.......)//

  அதே அதேதான் (பாயின்ட் நம்பர் 4 )... ஆனா என்கூட படம் பார்க்க வந்திருந்தவங்கள்ள ஒருத்தர் இந்தியர் இல்ல, தமிழரும் இல்ல, ரஜனி சார ஸ்க்ரீன்ல கண்டதும் ரஜனின்னு அவரையே அறியாமல் ஆச்சர்யத்தில் வாய் திறந்தாரு.. அது ரஜினி பவர்.

  ReplyDelete
 13. அப்ப படம் வேலைக்கு ஆகாதா?

  ReplyDelete
 14. பாஸ் நான் உங்க பதிவை படிக்க வந்திட்டு..உங்கள் தளத்தில் இருக்கும் ok...ok ரெயிலரை பார்த்துவிட்டேன் அட தலைவர் என்னமா ஓரு தத்துவத்தை அழகாக சொல்லியிருக்கார்.......

  ReplyDelete
 15. அப்ப ரா ஓன் மொக்கையா?

  ReplyDelete
 16. உண்மையிலேயே எந்திரன் இதை விட பல மடங்கு பெட்டர்.

  ReplyDelete
 17. என்னா போஸ்ட் மார்ட்டம்! சூப்பர் பாஸ்!

  ரஜினி வர்ற சீன மொக்கையா இருக்கா பாஸ்?

  ReplyDelete
 18. //அதே அதேதான் (பாயின்ட் நம்பர் 4 )... ஆனா என்கூட படம் பார்க்க வந்திருந்தவங்கள்ள ஒருத்தர் இந்தியர் இல்ல, தமிழரும் இல்ல, ரஜனி சார ஸ்க்ரீன்ல கண்டதும் ரஜனின்னு அவரையே அறியாமல் ஆச்சர்யத்தில் வாய் திறந்தாரு.. அது ரஜினி பவர்.//

  புல்லரிச்சிருச்சு இத வாசிக்கும் போதே உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்

  ReplyDelete
 19. அப்ப படம் பார்க்கிறது சுத்த அநியாயமா?

  ReplyDelete
 20. நல்ல அலசல் நண்பரே

  ReplyDelete
 21. படம் பார்க்கலாம்னு சொல்றதுக்காக நீங்க நிறைய உதாரணங்களை பக்க பலமா சேர்த்துகிட்டீங்க...

  படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  ReplyDelete
 22. படம் பற்றிய அலசல் அருமை தலை..

  உண்மையில் நானும் Ra one பார்க்கலாம் என்றிருந்தேன்.
  உங்க விமர்சனத்தை படித்ததும் வேணாம் என்று தோணுது..
  வெறும் பத்து பேர் ஒரு படத்திற்கா...
  அப்போ படம் ஓடும் தியேட்டரின் மின்சார செலவிற்கு கூட காசு தேறாதே///

  ReplyDelete
 23. நிரூபன் said...
  ///படம் பற்றிய அலசல் அருமை தலை..

  உண்மையில் நானும் Ra one பார்க்கலாம் என்றிருந்தேன்.
  உங்க விமர்சனத்தை படித்ததும் வேணாம் என்று தோணுது..
  வெறும் பத்து பேர் ஒரு படத்திற்கா...
  அப்போ படம் ஓடும் தியேட்டரின் மின்சார செலவிற்கு கூட காசு தேறாதே///

  என்னண்ணே நீங்க, பத்து பேர் இருந்தது ஜானி இங்க்லீசுக்கு, இந்த படம் கிட்ட தட்ட ஹவுஸ் புல், எந்த இங்க்லீஸ் படத்துக்கும் இப்படி ஒரு கூட்டம் பார்த்ததில்ல.

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்!!