ஊருக்குள்ள ஒவ்வொரு மனுஷனுக்கும் ஆயிரம் பிரச்சின இருக்கு, இதுல பெரிய பிரச்சின நாட்டாம பண்றது. அடடா நாலு பேரு நம்மகிட்ட வந்திட்டாங்களேன்னு உடனே, "நீ அவனுக்கு ஒரு குட்டு குட்டு, நீ அவனுக்கு ஒரு மிட்டாய் குடுங்குற" ரீதியில நாமளும் நாட்டாம பண்ணிட முடியாது. இது எப்பவுமே புலி வால புடிச்ச கதைதான். அதனால இன்னிக்கு நாட்டாம பண்றது எப்புடின்னு பாப்போம்.
முதலாவதா எந்தெந்த பிரச்சினைகள்ள நாட்டாம பண்ணலாம் எதேதுல பண்ணக்கூடாதுன்னு தெளிவா புரிஞ்சிக்கணும்.
- காதல் பிரச்சினையில நாட்டாம பண்ணவே கூடாது: இதுல கைய வச்சோம்னா நம்ம பாடு திண்டாட்டம்தான். ரெண்டு பேர சேர்த்து வச்சோம்னு வைங்க, சந்தோசமா இருந்தாங்கன்னா நம்மள கண்டுக்கவே மாட்டாங்க, எதாச்சி பிரச்சினைன்னு வந்திச்சு, நம்ம தலைதான் உருளும். சிலபேர் வலிய வந்து அத்து விடுங்கம்பாங்க, நாமளும் போராடி அத்து விடுவோம், அப்புறம் எப்போ ஒட்டிக்குவாங்கன்னு தெரியாது, ஒட்டிக்கிட்டாங்க நம்மள வாரு வாருன்னு வாரிடுவாங்க, அப்போ அவன் உன்னப்பத்தி அப்புடி சொன்னான், இப்புடிச்சொன்னான்னு போட்டுகுடுத்து நம்ம தாலிய அத்திடுவாங்க, நாம பொது எதிரி ஆயிடுவோம். இந்த சட்டம், நட்புக்குள்ள வாற பிரச்சினையில இருந்து கணவன் மனைவிக்கிடயில இருக்கறது வரை பொருந்தும்.
- திருமண வரன் பாக்கிறப்போ: அந்த பய்யன் உன்னோட பிரெண்டுதானே, ஆளு எப்புடின்னு கேள்வி கேட்டாங்கன்னா உசாராகிடுங்க, இதுல வீணா கருத்து சொல்லபோய் செம்ப நெளிச்சுக்காதீங்க. ஒருத்தங்க திருமணத்துக்கு முன்பு எப்புடி, பின்பு எப்புடின்னு யாராலையும் கணிக்க முடியாது. உங்க கருத்த நாசூக்கா சொல்லிட்டு எஸ்கேப் ஆகிக்காங்க, அதுதான் சேப்டி. (நம்ம காட்டுப்பூச்சிக்கு பொண்ணு பாக்குறப்போ சர்டிபிகேட் குடுத்தா நம்ம நிலைமை என்னாகும்னு யோசிச்சு பாருங்க, புரிஞ்சிடும்)
- ஒருவரது நம்பிக்கை சார்ந்த கருத்துக்களில்: இத தெளிவா சொன்னா என்னோட செம்பு நெளிஞ்சிடும், அதனால நாசூக்கா ஒரு உதாரணம் சொல்றேன் கேளுங்க, தலைவர் சந்தானம்தான் டாப் காமெடியங்குறது எல்லாருக்கும் தெரியும், இதுல யாராச்சி வந்து இல்ல இன்னாருதான்னு சொல்றாங்கன்னு வைங்க, அந்த பஞ்சாயத்த தீர்த்து வைக்க வந்தவர புழல்லையோ இல்லன்னா ஜி.ஹெச் லயோதான் பார்க்கணும்.
- நம்ம அறிவுக்கு எட்டாத விசயத்துல அல்லது நமக்கு சம்பந்தமில்லாத விசயத்துல: உதாரணமா நீங்க ஒரு கண் டாக்டர்ன்னு வைங்க, நானும் விண்டோஸ் கம்பூட்டர் பாவிக்கறேன்னு சொல்லிக்கிட்டு சாப்ட்வேர் இன்ஜினியருக்கு ப்ரோக்ராமிங்க்ல விளக்கம் குடுக்க போயிடாதீங்க, மண்ட காஞ்ச்சிடும். இந்த விசயத்துல தேவையில்லாம நாட்டாம பண்ணி நம்ம சவக்குழிய நாமளே தோண்டிக்கக்கூடாது. பெரிய விசயமா இருந்தா பெரியவங்க கையில ஒப்படைச்சிட்டு ஒதுங்கிடனும். ஜட்டியே போடாவதவன் ஜட்டி விளம்பரத்த பத்தி பேசக்கூடாது.
- அழையாதவிடத்துல சம்பந்தமே இல்லாம ஆஜராகி நாட்டாம பண்ண கூடாது: இது ரொம்ப முக்கியமானது எல்லாருமே மறந்து போயிடுறது, நம்மள யாருமே கூப்பிடாதவரை எந்த விசயத்துக்கும் நாட்டாம பண்ண போக கூடாது. அது வேலில போற ஓனான வேட்டிக்குள்ள விட்ட கதையாயிடும்.
இதையும் மீறி ஒரு விசயத்துல நாட்டாம பண்றதுன்னு இறங்கிட்டோம்னு வைங்க, முக்கியமா கவனிக்க சில விஷயங்கள் இருக்கு.
- பிரச்சினை என்னன்னு தெளிவா புரிஞ்சிக்கணும், இல்லனா தலைவலின்னு வந்தவனுக்கு கால்ல ஆப்ரேசன் பண்ணின கதையா போயிடும். ஒரு நாணயம்னா ரெண்டு பக்கம் இருக்கும்னு சொல்வாங்க, ரெண்டு பக்கத்தையும் முதல்ல நல்லா அலசி ஆராஞ்சிக்கணும். முடிஞ்ச வரைக்கும் நுனிப்புல் மேயுற பழக்கத்த விட்டுட்டு பிரச்சினையின் அடிப்படை வரை போய் ஒரு தெளிவ ஏற்படுத்திக்கணும்.
- பிரச்சினை என்னன்னு புரிஞ்சுக்கிட்டோமா, அடுத்த கட்டமா நம்ம நிலைப்பாடு என்னன்னு ஒருவாட்டி மறு விசாரண செஞ்சிக்கனும், ஒன்னுக்கு நாலுதரம் யோசிச்சி உறுதிப்படுத்திக்கிட்டு பிரச்சினையின் தீவிரத்தோட ஒப்பிட்டு நாட்டாம பண்ணலாமா வேணாமான்னு முடிவெடுக்கணும். நம்ம தலைவர் ரசிகர்தான்னு வந்ததுக்கப்புறம், சிறந்த காமெடியன் யார்ன்னு நாட்டாம பண்ணக்கூடாது.
- இப்போ பிரச்சினயோட நடுநிலைமை பார்வை என்னன்னு பார்க்கணும். இருபத்தஞ்சி வருசத்துக்கு மேல வாழ்ந்த எந்த ஒரு மனுசனும், ஒரு பிரச்சினைய அலசி ஆராயுரப்போ, தனது சொந்த அனுபவங்களின் அடிப்படையில, தனது சொந்த நிலைப்பாட்டதான் எடுக்கறான். நடுநிலைமை பார்வை வரணும்னா அந்த நாணயத்தோட ரெண்டுபக்கத்துலயும் நம்மள வச்சிக்கிட்டு யோசிக்கணும். உதாரணமா தலைவர் காமெடிதான் சிறந்ததுங்குறது மறுக்கமுடியாத உண்மை, ஆனா பிரேம்ஜி ரசிகர்களுக்கும் தலைவர் ரசிகர்களுக்குமிடையில் நாட்டாம பண்ணுமிடத்து, அது இல்ல நடுநிலைமை பார்வை, பிரேம்ஜி ரசிகர்களுக்கு அவரோட காமெடி, தலைவர் காமெடியவிட சிறந்ததா தெரியும், நாம தலைவர எப்புடி விட்டுக்குடுக்க மாட்டோமோ அவங்க பிரேம்ஜிய விட்டுக்குடுக்க மாட்டாங்கங்குரதுதான் நடுநிலம பார்வை. "இல்ல நல்லா யோசிச்சு பாரு, தலைவருக்குத்தான் ரசிகர்கள் அதிகம், அவரு காமெடிக்குத்தான் நிறையபேர் சிரிக்கறாங்க, அவருக்கிட்ட கேளு, இவருக்கிட்ட கேளு, நடுநிலமயா யோசிக்கரவனுக்கு இது புரியும்ன்னு" நாட்டாம பண்ண போனமுன்னா நமக்கு ஜி ஹெச் தான்.
இந்த மூணு விஷயத்தையும் கவனிச்சீங்கன்னா, நாட்டாம பண்ண வாற கேசுல பத்துல ரெண்டுக்குத்தான் நாட்டாம பண்ண முடியும்கறது உங்களுக்கே தெளிவா தெரியும். அதுக்கப்புறம் என்ன உங்க தீர்ப்ப சொல்ல வேண்டியதுதான். அத விட்டுட்டு அம்மா வாங்க அய்யா வாங்கங்க நானும் தீர்ப்பு சொல்றேன்னு தொடங்கினீங்க, செம்பு நெளியறது நிச்சயம்.
அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல, சின்ன வயசுல இருந்து நாங்க ரொம்ப நல்லவங்கங்களாவே வளர்ந்துட்டோம். |
கருத்துச்சொல்லும் போதும் நாட்டாமை பண்ணும் போதும் கவனத்திலிருத்த வேண்டியது: "யாகாவாராயினும் நாகாக்க"
டிஸ்கி: ஒரு காதல் விவகாரத்தில் நாட்டாமை பண்ணப்போய் நொந்து போன அன்பு நண்பன் விமலஹாசனுக்கு இந்த பதிவு சமர்ப்பணம். பதிவின் நோக்கத்தை திசைதிருப்பும் வண்ணம் பின்னூட்டம் இடவேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மாப்ள விஷயம் புரிஞ்சி போச்சி ஹிஹி!
ReplyDeleteநாட்டாமை நல்ல தீர்ப்பா சொல்லுமோய்.... ஹி..ஹி... அது யாருங்க நாட்டாமை?
ReplyDeleteநட்புடன்,
http://tamilvaasi.blogspot.com/
அட ஆண்டவா...இதுக்கு முடிவே இல்லியா?
ReplyDeleteஇன்று புதன்கிழமை!
ReplyDeleteபுட்டி பாலு டிஸ்கி சூப்பருங்க.
ReplyDelete//பதிவின் நோக்கத்தை திசைதிருப்பும் வண்ணம் பின்னூட்டம் இடவேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.//
ReplyDeleteஆஹா......என்னவோ சொல்லவறீங்க....ஆனால் சொல்லமாட்டீங்கறீங்க....
நான் சாப்பிடுவதற்கும் கொட்டாவி விடுவதற்கும்தான் வாய் திறப்பது வழமை. So no problem.
ReplyDeleteபரவால்ல விடுங்க தல!"அவரு" பாவமில்ல?சொம்பு நெளியிறது புதுசா என்ன?நாங்க மறந்து போயி,றிலாக்ஸா இருக்கோம்!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநல்லா சர்ப் போட்டு அலசி இருக்கீங்க...
ReplyDeleteஉங்களை நம்ம கோர்ட்டுல ஜட்ஜ் அய்யாவா போடலாம் போல...
நல்லா சொல்லியிருக்கீங்க ,நன்றி நண்பரே
ReplyDeleteவிக்கியுலகம் said...
ReplyDelete//மாப்ள விஷயம் புரிஞ்சி போச்சி ஹிஹி!//
அப்பாடா ஒருத்தருக்காச்சி புரிஞ்சிச்சே
தமிழ்வாசி - Prakash said...
ReplyDelete//நாட்டாமை நல்ல தீர்ப்பா சொல்லுமோய்.... ஹி..ஹி... அது யாருங்க நாட்டாமை?//
தீர்ப்பு சொல்றது நம்ம வேல இல்லிங்கோ... நாட்டாமைன்னா சரத்குமார் தானே.
செங்கோவி said...
ReplyDelete//அட ஆண்டவா...இதுக்கு முடிவே இல்லியா?//
இருக்குண்ணே, உங்களுக்கு தெரியாததா...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//இன்று புதன்கிழமை!//
பாத்துண்ணே, இந்திய பொருளாதாரத்த கேலி சென்ச்சிட்டீங்கன்னு உங்கமேல பழி வந்திடப்போகுது...
கடம்பவன குயில் said...
ReplyDelete//பதிவின் நோக்கத்தை திசைதிருப்பும் வண்ணம் பின்னூட்டம் இடவேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.//
ஆஹா......என்னவோ சொல்லவறீங்க....ஆனால் சொல்லமாட்டீங்கறீங்க....///
அதுதான் சொல்லிட்டோமே...
அம்பலத்தார் said...
ReplyDelete///நான் சாப்பிடுவதற்கும் கொட்டாவி விடுவதற்கும்தான் வாய் திறப்பது வழமை. So no problem.///
ரைட்டு
Yoga.S.FR said...
ReplyDelete//பரவால்ல விடுங்க தல!"அவரு" பாவமில்ல?சொம்பு நெளியிறது புதுசா என்ன? நாங்க மறந்து போயி,றிலாக்ஸா இருக்கோம்!///
அந்த விவகாரம் இன்னும் ஓயலியா? நாங்கதான் நேர காலம் தெரியாம பதிவு போட்டுட்டமா? இனிமே ரிலாக்ஸ் அகிடுறோம் ஐயா..
இராஜராஜேஸ்வரி said...
ReplyDelete//"யாகாவாராயினும் நாகாக்க"//
காத்துட்டோம். நன்றி சகோ, வருகைக்கும், கருத்துக்கும்.
ரெவெரி said...
ReplyDelete//நல்லா சர்ப் போட்டு அலசி இருக்கீங்க...
உங்களை நம்ம கோர்ட்டுல ஜட்ஜ் அய்யாவா போடலாம் போல...//
காதல், குடும்ப சண்டை, விவாகரத்து பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளபடாது, கிரிமினல் வழக்குன்னா ஓகே.
M.R said...
ReplyDelete//நல்லா சொல்லியிருக்கீங்க ,நன்றி நண்பரே//
நன்றி நண்பரே..
Dr. Butti Paul said...
ReplyDeleteதமிழ்வாசி - Prakash said...
//புட்டி பாலு டிஸ்கி சூப்பருங்க.//
ஆபாசமா பேசாதீங்க சார்.
ஆளாளுக்கு உள்குத்து பதிவு போட்டா என்ன அர்த்தம்...
ReplyDeleteசிங்கம் படத்துல விவேக் பண்ற மாதிரி நாட்டாமை பண்ணலாமா...
ReplyDeletePhilosophy Prabhakaran said...
ReplyDelete//ஆளாளுக்கு உள்குத்து பதிவு போட்டா என்ன அர்த்தம்...//
இது உள்குத்து பதிவு இல்லை நண்பரே... நேரங்கெட்ட நேரத்தில் தவறுதலாக இடப்பட்ட பதிவு...
Philosophy Prabhakaran said...
ReplyDelete//சிங்கம் படத்துல விவேக் பண்ற மாதிரி நாட்டாமை பண்ணலாமா...//
பண்ணலாமே... ஆனா செம்பு நெளிஞ்சிடும், பரவாயில்லையா?
ஐயா நீங்கதான் ஒரு தீர்ப்ப மாத்தி சொல்லனும்
ReplyDeleteALL ONE STEP BACK..NATTAMAI COMMING...
ReplyDeleteஐயா இந்த தீபாவளி ரேசில் இந்த படம் முன் வரும்
ReplyDeleteநம்ம கோர்ட்டுல ஜட்ஜ் அய்யாவா போடலாம் போல.// BOSS NO
ReplyDeleteEVARA bangalore கோர்ட்டுல ஜட்ஜ் அய்யாவா போடலாம்....
அட அருமையான நாட்டாமை பண்ணுறது பற்றி பதிவு
ReplyDeleteநீங்கள் சொல்லுறமாதிரி காதல் விசயத்துல நாட்டாமை பண்ணப்போன அம்புட்டுதான் நம்மல நெளிச்சுவிடுவாங்க...
பதிவின் நோக்கத்தை திசைதிருப்பும் வண்ணம் பின்னூட்டம் இடவேண்டாம்//
ReplyDeleteஇதுதான் திசை திருப்புற வரி ;-))
//siva said...
ReplyDeleteஐயா நீங்கதான் ஒரு தீர்ப்ப மாத்தி சொல்லனும்
///
யோவ் இன்னும் தீர்ப்பே சொல்லல, அதுக்குள்ள மாத்தி சொல்லனும்னா எப்புடியா?
//siva said...
ReplyDeleteALL ONE STEP BACK..NATTAMAI COMMING...
///
நாட் ஒன்லி நாட்டாமை தட் நெளிஞ்சு போன செம்பு ஆல்சோ கமிங்...
//siva said...
ReplyDeleteஐயா இந்த தீபாவளி ரேசில் இந்த படம் முன் வரும்
///
ஆகா திரும்பவும் வாய கிளருறாரே..இது பத்தி நாங்க சுமார் தொள்ளாயிரத்தி நாப்பத்தி எட்டு பதிவு போட்டாச்சு...சரி உங்களுக்காக, இந்த கீழே உள்ள பதிவையும் அதுல கீழே உள்ள லின்க்சையும் பாருங்க சார்.வேலாயுதம் படத்தை முடக்குகிறாரா உதயநிதி ஸ்டாலின்?
//siva said...
ReplyDeleteநம்ம கோர்ட்டுல ஜட்ஜ் அய்யாவா போடலாம் போல.// BOSS NO
EVARA bangalore கோர்ட்டுல ஜட்ஜ் அய்யாவா போடலாம்...///
ஹீ ஹீ.. பெங்களூர் கோர்ட் இப்ப எங்க இருக்குன்னு அந்த ஜட்ஜ் அய்யவுக்கே தெரியாது, இஷ்டத்துக்கு லொகேஷன மாத்துறாங்கபா
///K.s.s.Rajh said...
ReplyDeleteஅட அருமையான நாட்டாமை பண்ணுறது பற்றி பதிவு
நீங்கள் சொல்லுறமாதிரி காதல் விசயத்துல நாட்டாமை பண்ணப்போன அம்புட்டுதான் நம்மல நெளிச்சுவிடுவாங்க...
///
அப்பாடா நீங்களாவது நம்ம நோக்கத்தை, அதாவது காதல் நாட்டாம பண்ண போன நம்ம நண்பனின் அவலத்தை புரிந்துகொண்ட கமெண்ட் போடீன்களே...சந்தோஷம்..
This comment has been removed by the author.
ReplyDeleteஅண்ணன்களா, வணக்கம்,
ReplyDeleteவிரிவான கமெண்ட் அடிக்க முடியலை..
பதிவினை ரசித்துப் படித்தேன்...
இது ஊமக் குத்தா இல்லே கும்மாங் குத்தா? என்பதனை இச் சம்பவத்தோடு தொடர்புடைய நபர் தான் சொல்ல வேண்டும்,
ஆனால் செமையான காமெடி கலந்த உள் குத்து என்று மட்டும் விளங்குது.
பிரச்சினை என்னன்னு தெளிவா புரிஞ்சிக்கணும், இல்லனா தலைவலின்னு வந்தவனுக்கு கால்ல ஆப்ரேசன் பண்ணின கதையா போயிடும்.//
ReplyDeleteஹா ஹா ஹா ஹா அவ்வ்வ்வ்வ்வ்....
அருமையா சொல்லிட்டீங்க, ஆமா நாட்டாமை பண்ணிகிட்டு கடைசில அடி வாங்குறது யாரு ஹி ஹி...
ReplyDeleteஅருமையா சொல்லீட்டீங்க
ReplyDeleteநாட்டாமை
நாட்டாம சொம்பு ரொம்ப அடி வாங்கிடுச்சா?
ReplyDeleteடிஸ்கி: ஒரு காதல் விவகாரத்தில் நாட்டாமை பண்ணப்போய் நொந்து போன அன்பு நண்பன் விமலஹாசனுக்கு இந்த பதிவு சமர்ப்பணம். பதிவின் நோக்கத்தை திசைதிருப்பும் வண்ணம் பின்னூட்டம் இடவேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
ReplyDelete//
அய்யய்யோ திஸ்கியை படிக்காம கமென்ட் போட்டுட்டேன்!மன்னிச்சு!
//’சோதிடம்’’ சதீஷ்குமார் said...
ReplyDeleteபதிவின் நோக்கத்தை திசைதிருப்பும் வண்ணம் பின்னூட்டம் இடவேண்டாம்//
இதுதான் திசை திருப்புற வரி ;-))///
அண்ணே நீங்க வேற!! ஏற்கனவே ஏழர சுத்துது இதுல இப்புடி ஒரு கமென்ட போட்டு பீதிய கெளப்புறீங்களே
//நிரூபன் said...
ReplyDeleteஅண்ணன்களா, வணக்கம்,
விரிவான கமெண்ட் அடிக்க முடியலை..
பதிவினை ரசித்துப் படித்தேன்...
இது ஊமக் குத்தா இல்லே கும்மாங் குத்தா? என்பதனை இச் சம்பவத்தோடு தொடர்புடைய நபர் தான் சொல்ல வேண்டும்,
ஆனால் செமையான காமெடி கலந்த உள் குத்து என்று மட்டும் விளங்குது.///
அண்ணே என்ன அண்ணே நீங்களே எங்கள அண்ணன்களான்னு சொல்றீங்க... அப்புறம் இது உள்குத்தும் இல்ல கும்மாங்குத்தும் இல்ல, புட்டிபால் சொன்ன மாதிரி "நேரங்கெட்ட நேரத்தில் தவறுதலாக போட்ட பதிவு..." , சம்பந்தப்பட்ட நபர் நம்ம பிரண்டு விமலஹாசன்ட் மட்டும்தான்...
//MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteபிரச்சினை என்னன்னு தெளிவா புரிஞ்சிக்கணும், இல்லனா தலைவலின்னு வந்தவனுக்கு கால்ல ஆப்ரேசன் பண்ணின கதையா போயிடும்.//
ஹா ஹா ஹா ஹா அவ்வ்வ்வ்வ்வ்..////
//MANO நாஞ்சில் மனோ said...
அருமையா சொல்லிட்டீங்க, ஆமா நாட்டாமை பண்ணிகிட்டு கடைசில அடி வாங்குறது யாரு ஹி ஹி...///
அததான்யா சொன்னோமே, நம்ம பிரண்டு விமலஹாசன்...கோர்த்து விடுற மாதிரியே கமெண்ட் போடுறங்கபா
ஆஹா என்னமா தின்ங் பண்ணுறாங்க
ReplyDelete///வைரை சதிஷ் said...
ReplyDeleteஅருமையா சொல்லீட்டீங்க
நாட்டாமை
////
நாஞ்சொல்றது ச்சரிதானா?
//கோகுல் said...
ReplyDeleteநாட்டாம சொம்பு ரொம்ப அடி வாங்கிடுச்சா?
////
நெளிஞ்சு போச்சி, பழைய ஈயம் பித்தளைக்கு கோஅ போட முடியல..
//
அய்யய்யோ திஸ்கியை படிக்காம கமென்ட் போட்டுட்டேன்!மன்னிச்சு! ///
விடுங்க பாஸ்..அதான் படிசிடிங்கள்ள..
//KANA VARO said...
ReplyDeleteஆஹா என்னமா தின்ங் பண்ணுறாங்க
///
வாங்க கானா வரோ, இப்புடி எல்லாம் தின்க் பண்ணலனா நம்ம சொம்ப நெளிசிடுவாங்க பசங்க..
ஹா ஹா நல்ல சொன்னீங்க நண்பா.
ReplyDeleteஎன்னை பொறுத்தவரை நாட்டாமை பண்ணாம இருப்பதே சிறந்தது.
இதனால்தான் நான் யாருக்கும் நாட்டாமை பண்றதே இல்ல. யாராச்சும் ஏதாவது கேட்டாங்கன்னா என் கருத்தை மட்டும் சொல்லுவேன். அத எடுத்துக்கறதும், எடுத்துக்காததும் அவங்கவங்க இஷ்டம்.
ReplyDelete"யாகாவாராயினும் நாகாக்க"
ReplyDeleteஅருமை !....அருமை !...அருமை !....எங்க சார் இருந்து வருகிறது
ReplyDeleteஉங்களுக்கு மட்டும் இப்படி நகைச்சுவையாக நாலு நல்ல விசயம்
சொல்லுவதற்கு?.......இதெல்லாம் றூம் போட்டு யோசித்தீங்களா?...
என்று கேட்க மாட்டன் .ஐசுப் பெட்டியில இருந்து யோசிச்சு இருப்பீங்க
போல .வாழ்த்துக்கள் .மிக்க நன்றி அருமையான பகிர்வுக்கு ...........
பாலா said...
ReplyDelete//ஹா ஹா நல்ல சொன்னீங்க நண்பா.
என்னை பொறுத்தவரை நாட்டாமை பண்ணாம இருப்பதே சிறந்தது.//
ஆமா நண்பரே, நம்ம வேலைய ஒழுங்கா பாக்கவே நமக்கு நேரமில்ல, இதுல நாட்டாம வேறயா?
N.H.பிரசாத் said...
ReplyDelete//இதனால்தான் நான் யாருக்கும் நாட்டாமை பண்றதே இல்ல. யாராச்சும் ஏதாவது கேட்டாங்கன்னா என் கருத்தை மட்டும் சொல்லுவேன். அத எடுத்துக்கறதும், எடுத்துக்காததும் அவங்கவங்க இஷ்டம்.//
சரியாக சொன்னீங்க நண்பரே..
மாய உலகம் said...
ReplyDelete//"யாகாவாராயினும் நாகாக்க"//
அதே, அம்புட்டுதான் மேட்டர்.
அம்பாளடியாள் said...
ReplyDelete///அருமை !....அருமை !...அருமை !....எங்க சார் இருந்து வருகிறது
உங்களுக்கு மட்டும் இப்படி நகைச்சுவையாக நாலு நல்ல விசயம்
சொல்லுவதற்கு?.......இதெல்லாம் றூம் போட்டு யோசித்தீங்களா?...
என்று கேட்க மாட்டன் .ஐசுப் பெட்டியில இருந்து யோசிச்சு இருப்பீங்க
போல .வாழ்த்துக்கள் .மிக்க நன்றி அருமையான பகிர்வுக்கு ...........///
நன்றி சகோ, கருத்தாச்சொன்னாலும் காமெடியா சொல்லனும்னு தலைவர் சொல்லியிருக்காரு.
, கருத்தாச்சொன்னாலும் காமெடியா சொல்லனும்னு தலைவர் சொல்லியிருக்காரு.
ReplyDelete//
Thalaivar Santhanam Valga,,,
டிஸ்கில கடிவாளம் போட்டதால ஆளாளூக்கு பம்பறாங்களே?
ReplyDeleteநாட்டாமை தீர்ப்ப மாத்திச் சொல்லு.........
ReplyDelete//siva said...
ReplyDelete, கருத்தாச்சொன்னாலும் காமெடியா சொல்லனும்னு தலைவர் சொல்லியிருக்காரு.
//
Thalaivar Santhanam Valga,,,///
[box][co="red"]பின்ன, ஒரு நாளைக்கு ஏழு லட்சம் சம்பளம் வாங்குராறு, வருஷம் 25கோடி, நல்லா வாழுவாரு மச்சி [/co][/box]
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteடிஸ்கில கடிவாளம் போட்டதால ஆளாளூக்கு பம்பறாங்களே?
//
[box][co="red"]இல்லைனா இந்த பதிவவச்சும் நாட்டாம பண்ணி இருப்பாய்ங்களே..[/co][/box]
//விச்சு said...
ReplyDeleteநாட்டாமை தீர்ப்ப மாத்திச் சொல்லு.......//
[box][co="red"]தீர்ப்பு சொல்லி பல நாளாச்சு, இனிமே மாத்தி சொல்ல ஏலாது, சாமி குத்தமாயிறும்..[/co][/box]
என்றா பசுபதி நாஞ்சொலறது ச்சரிதானே..
ReplyDelete