நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி இறுதியாக நேற்றுடன் (12/7/2012) ஒரு முடிவுக்கு வந்துவிட்டது!!. இரண்டரை மணி நேரம் நிகழ்ச்சியின் நெகிழ்ச்சியான தருணங்கள், காமெடி தருணங்கள், சிவகுமார் பிரவேசம், வெற்றி பெற்றோரின் வெற்றியின் பின்னான அனுபவங்கள் என ஒரு இழு இழுத்து 11.30க்கே முடித்தார்கள். ஹிந்தியில் சக்க போடு போட்ட Kaun Banega Crorepati (KBC) நிகழ்ச்சி தமிழில் வரபோகிறது என்று அறிவித்த நாள் முதல் இந்த நிகழ்ச்சி பற்றிய எதிர்பார்ப்பு தமிழ் தொலைகாட்சி ரசிகர்களிடம் ஓரளவுக்கு இருந்து கொண்டே வந்தது (ஏற்கனவே பல வருடங்களுக்கு முன் சன் டிவியில் இது போன்ற ஒரு நிகழ்ச்சி வந்திருந்தாலும் கூட). பிரகாஷ்ராஜில் ஆரம்பித்து, விஜய், விக்ரம் என தொடர்ந்து இறுதியாக சூர்யா தான் இந்நிகழ்ச்சியை நடத்த போகிறார் என தெரிந்தவுடன், சூர்யா இந்த நிகழ்ச்சிக்கு சரி வருவாரா? அவர் எப்படி இந்நிகழ்ச்சிக்கு? இது ஹிட்டாகுமா? பல நேர் மறை கமெண்ட்கள் இருந்து கொண்டே வந்தது. நிகழ்ச்சி ஆர்மபித்த நாள் முதல் எபிசோட் தொடர்ந்து ஒரு சில எபிசோட்ஸ் தவிர இறுதிநாள் எபிசோட் வரையிலும் ஓரளவுக்கு பார்த்தவன் என்னும் முறையில் இந்நிகழ்ச்சியை பற்றிய என்னுடைய பார்வை இது:
நிகழ்ச்சியை ஆரம்பிபதற்க்கு முன்னாடியே தொடர்ச்சியான விஜய் டிவி விளம்பரங்கள், நிகழ்ச்சியில் பங்குபற்றுவதற்கான கேள்விகள் அதற்கான பதிலை sms பண்ணுவதன் மூலம் விஜய் டிவியும் தொலைபேசி நிறுவனங்களும் அடிக்கும் கூட்டு கொள்ளைகள் என ஒரளவுக்கு மக்கள் இந்நிகழ்ச்சியை பற்றி பேசிக்கொண்டு தான் இருந்தனர். பெப்ரவரி 27, 2012 நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாள் ஒரளவுக்கு எதிர்பார்ப்புடன் பலரும் இந்நிகழ்ச்சியை பார்த்தார்கள். ஆனால் முதல் எட்டு அல்லது பனிரெண்டு எபிசோட்களை தொடர்ந்து பார்த்தபோது "அடச்சே இந்த மொக்கைக்கா இவ்வளவு பில்டப் குடுத்தாங்க"ன்னு கேட்க தோன்றியது, அது போக அவர்களால் கேட்கப்பட்ட மகா புத்திசாலிதனமான கேள்விகள்:
இது இன்னொரு லொள்ளுசபா.., நம்ம சந்தானம், மனோகர வச்சிகிட்டு ஒரு காமெடி பண்ணாரே அது மாதிரின்னு ஒரு விதமான சலிப்பு வந்து, வேறு சில வேலைகளின் காரணமாகவும் பிறகு பார்க்காமலே இருந்து நடுவில் ஒன்னு ரெண்டு செலிபிரிட்டி எபிசோட்ஸ் மட்டும் பார்த்தேன். பிறகு மே மாதம் இருந்து சரி இப்ப பார்ப்போமே? மாற்றம் ஒன்றே மாறாததுன்னு சொல்லி என்னென்ன மாற்றங்கள் செஞ்சிருக்காங்கன்னு பார்த்தால், சூர்யாவின் உச்சரிப்பு, போட்டியாளர்களை கையாளும் விதம், அவர்களுடனான சம்பாஷனைகள், முதல் ஐந்து கேள்விகளின் தரம் எல்லாமே ஓரளவுக்கு முன்னேறி இருந்தது. அப்புடியே தொடர்ந்து பார்த்தால் இந்நிகழ்ச்சியின் மூலம் பல நல்ல விசயங்களும் நடப்பது தெரிந்தது.
இவற்றில் ஒருவர் செய்வதைப் பார்த்து மற்றவர் அப்படியே செய்வதை எப்படிக் குறிப்பிடுவீர்கள்?
நாய் அடிச்சான் காப்பி, கொசு அடிச்சான் காப்பி, ஈயடிச்சான் காப்பி, பேய் அடிச்சான் காப்பி.
ஒரு உணவின் பெயர் கொண்ட பண்டிகை எது?
ஏகாதசி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, மெதுவடை.
இது இன்னொரு லொள்ளுசபா.., நம்ம சந்தானம், மனோகர வச்சிகிட்டு ஒரு காமெடி பண்ணாரே அது மாதிரின்னு ஒரு விதமான சலிப்பு வந்து, வேறு சில வேலைகளின் காரணமாகவும் பிறகு பார்க்காமலே இருந்து நடுவில் ஒன்னு ரெண்டு செலிபிரிட்டி எபிசோட்ஸ் மட்டும் பார்த்தேன். பிறகு மே மாதம் இருந்து சரி இப்ப பார்ப்போமே? மாற்றம் ஒன்றே மாறாததுன்னு சொல்லி என்னென்ன மாற்றங்கள் செஞ்சிருக்காங்கன்னு பார்த்தால், சூர்யாவின் உச்சரிப்பு, போட்டியாளர்களை கையாளும் விதம், அவர்களுடனான சம்பாஷனைகள், முதல் ஐந்து கேள்விகளின் தரம் எல்லாமே ஓரளவுக்கு முன்னேறி இருந்தது. அப்புடியே தொடர்ந்து பார்த்தால் இந்நிகழ்ச்சியின் மூலம் பல நல்ல விசயங்களும் நடப்பது தெரிந்தது.
பெஸ்ட் என்டர்டைனர் ரமீலா பேகம்.! இவரின் எபிசோட் யூட்யூப் ஹிட்டு! |
இந்நிகழ்ச்சியை பற்றிய சில பொதுவான கருத்துகளும் என் எண்ணங்களும்:
நிகழ்ச்சி ஹோஸ்ட்? அமிதாப் அளவுக்கு ஆளுமை உள்ள ஆள் என்றால் ரஜினி அல்லது கமலை தான் கொண்டுவரணும், ஆனா ரஜினி என்னிக்குமே வரமாட்டார், கமல் இப்போதைக்கு வரமாட்டார். அதுக்கு அடுத்த லெவல்ல ஹிந்தியில் ஒரு சீசன் செய்த ஷாருக்கான் ரேஞ்ச்சுக்கு பார்த்தீங்கன்னா, அதுக்கு விஜய், அஜித், விக்ரம், சூர்யா நாலு பேர்ல ஒருத்தரதான் புடிக்கனும். முதலில் சொல்லப்பட்ட விஜய், திரையில் தெரிவதற்கு அப்புடியே எதிர்மாறாகதான் டிவியிலோ அல்லது பொது நிகழ்ச்சிகளிளோ இருப்பாரு, அவரது உம்மனாம் மூஞ்சி இந்த நிகழ்ச்சிக்கு எப்புடியுமே சரி படாது. அஜித்தை பொறுத்தவரையிலும் அவரு விஜய்டிவி குடுக்குற அவார்ட் பன்க்ஷனுக்கே வரமாட்டாரு! இந்த மாதிரி நிகழ்ச்சிக்கா வர போறாரு? அப்புடியே வந்தாலும் "நா பேஷ் மாட்ன்"ங்குறத தொடர்ந்து கேட்க முடியாது. விக்ரம் சமீபத்துல கூட ஒரு பேட்டில இந்த நிகழ்சிக்கு முதலில் என்னை கேட்டார்கள், ஆனா நம்ம மூஞ்சிய தொடர்ந்து டிவில பார்த்துகிட்டு இருந்தா, யாருமே தியேட்டர்க்கு வந்து நம்ம படத்த பார்க்க மாட்டாங்க. டிமான்ட் குறைஞ்சிரும்ன்னு எதோ சொல்லி இருந்தாரு. மேலும் விக்ரமின் ஒரு விதமான குழந்தைத்தனமான அணுகுமுறைகளும்! இந்த நிகழ்ச்சிக்கு எப்புடியுமே ஒத்து வராது!! ஆகவே ஆரம்பத்தில் குறைகள் இருந்தாலும் அவற்றை திருத்திக்கொண்டு திரையில் சாதித்த சூர்யா, இங்கும் தன்னை சமாளித்து கொள்வார் என்னும் அளவில் அந்த நாலு பேரில் சூர்யாதான் பெஸ்ட் சாய்ஸ். இந்நிகழ்ச்சியிலும் சூர்யா திரையில் போன்றே தவறுகளை திருத்திக்கொண்டு பிந்திய எபிசொட்களில் ஆட்டம், பாட்டு, காமெடி , சென்டிமென்ட்ன்னு கலக்கி இருந்தாரு. விக்ரம் சொன்னதுபோல் , இந்நிகழ்ச்சியின் பின் சூர்யாவின் டிமான்ட் குறையவில்லை, மாறாக, கொஞ்சம் கூடிருச்சுன்னே சொல்லலாம். குறிப்பாக சூர்யா டி.ஆர்.பி ஏற்றுவதற்காக அழுது புரண்டு சென்டிமென்ட் செய்த எபிசோட்களின் மூலம், வீடுகளில் வசிக்கும் தாய்க்குலங்களின் ஆதரவு ரொம்பவே கூடிருச்சுன்னு சொல்லலாம். அடுத்து சூர்யா படம் என்ன? ரிலீஸ் ஆனவுடன் தியேட்டர் போய் பார்ப்போமா?ன்னு இப்பவே வீட்டு ஆண்களை பெண்கள் நச்சரிக்க தொடங்கிட்டாங்ன்னு வேற கேள்வி. இது சூர்யாவின் கேரியரில் நிச்சயம் ஒரு பிளஸ்சே. சூர்யாவும் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு பிளஸ்சே.
இந்நிகழ்ச்சியை பற்றிய இன்னொரு முக்கியமான குறை. யாராலையுமே 25 லட்சத்துக்கு மேல ஜெயிக்க முடியல. இது குறையா இல்லையானு தெரியல. ஏன்னா ஒரு கோடிய அப்புடியே அள்ளி குடுக்க முடியாது. 25 லட்சத்தின் பின் நிகழ்ச்சியை நிறுத்தவும் இல்லை. கேட்கப்பட்ட கேள்விகள் ரொம்பவே கடினமாக இருந்தது. ஆனாலும் முதல் 25 லட்ச வெற்றியாளர் மணிகண்டன், ஐ.ஏ.எஸ் கனவுள்ள மாற்று திறனாளி ராஜ்குமார், பாடசாலைய நிர்வகிக்கும் அந்த பாட்டி எல்லாருமே இன்னும் கொஞ்சம் அதிகமாகவே ஜெயித்திருக்க வேண்டியவர்கள். மேலும் நிகழ்ச்சியில் பங்குகொண்ட சுமார் 100 போட்டியாளர்களில் சுமார் 30 க்கும் அதிகமானவர்கள் 320,000 க்கு அதிகமாகவே ஜெயித்தார்கள். ஜெயித்தவர்களில் பலர் வறுமையின் பிடியில் அல்லது கல்வி, மருத்துவம், வீடு என எதாவது தேவை உள்ளவர்களாகவே இருந்தனர். பலர் திருப்தியடைந்தனர். நிகழ்ச்சியில் வெறுமனே வெற்றியடைந்தால் உலகம் சுத்துவேன், நீச்சல் குளத்துடன் வீடு கட்டுவேன்னு பீலா விட்டுக்கொண்டு வந்தவர்களை மிக சாமர்த்தியமாக வெளியேற்றிய வகையிலும் தேவை உள்ளவர்களுக்கு முடிந்தவரையில் உதவிய வகையிலும் ஜீனியஸ் சரியாகவே செய்தார் என சொல்லலாம். என்ன ஒன்னு உண்மையான தேவை உள்ளவர்களுக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாகவே கொடுத்துருக்கலாம். மற்றொரு விமர்சனம் என்ன என்றால் வந்த எல்லா செலிபிரிட்டியும் பெரிய தொகை வின் பண்ணார்கள். ஆமாம் , சிவகார்த்திகேயன்( 10,000), கலகலப்பு டீம் ( 80,000 ) தவிர எல்லாருமே பெரிய தொகை ஜெயித்தார்கள். ஆனால் அவர்களில் யாருமே, ஜெயிச்ச காசை வீட்டுக்கு கொண்டு போக விளையாட வில்லை. எதாவது ஒரு சமுக நல தொண்டிற்க்காகவே விளையாடினார்கள். அவர்களை இன்னும் கொஞ்சம் ஜெயிக்க விட்டு நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே உதவிகள் செய்திருக்கலாம்.
நிகழ்ச்சியின் முடிவு? சில இணையத்தளங்களிலும், பிரபல டிவிட்டர்களின் ட்வீட்களிளும் நிகழ்ச்சி முடிக்கபட்டதற்கு ஒரு காரணம் திரும்ப திரும்ப சொல்லப்பட்டு கொண்டு வருகிறது. அதாவது நிகழ்ச்சியின் டி.ஆர்.பி குறைந்துவிட்டது. ஆரம்பத்தில் இருந்த ஹைப் இல்லை. ப்ரோக்ராம் பெயிலியர். அதுதான் நிகழ்ச்சி அவசர அவசரமாக முடிக்கப்பட்டது என்று திரும்ப திரும்ப சொல்கிறார்கள். இந்த டி.ஆர்.பி மற்றும் அது எவ்வாறு கணிக்கபடுகிறது என்பதில் ஆரம்பத்தில் இருந்தே பல குளறுபடிகள் உள்ளன. ஆனா நான் வாசித்தவரையிலும் சில ஆங்கில இதழ்களில்(அது உண்மையா பொய்யான்னு தெரியல) நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி முதல் வாரங்களில் இருந்ததை விட பிந்திய வாரங்களில் மற்ற எல்லா சம நேர சீரியல்களை முந்திக்கொண்டு தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முதல் இடத்துக்கு வந்துவிட்டது என்றே இருந்தது (இதை நம்பலாம இல்லையானு தெரியல, எங்கயாவது டி.ஆர்.பி பார்க்க கூடிய சோர்ஸ் இருந்தால் கமென்ட ப்ளீஸ்).ஆனால் நிச்சயமாக நிகழ்ச்சி முடிக்கப்பட்டதற்கு டி.ஆர்.பி ஒரு காரணம் இல்லை. ஹிந்தியில் கூட KBC நிகழ்ச்சி இந்த பனிரெண்டு வருடங்களில் வெறும் ஐந்து சீசன்கள் மட்டுமே வந்துள்ளது. ஒவ்வொரு சீசனும் மூன்றில் இருந்து ஐந்து மாதங்களுக்குள் முடிக்கப்பட்டது. இது போன்ற நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக வருவதை விட இவ்வாறு இடைவெளி விட்டு விட்டு வரும்போது தான் அடுத்த சீசனுக்கான எதிர்பார்ப்பை எகிரவைத்து தயாரிப்பாளர்கள் பணம் சம்பாதிக்கலாம் என்பது தெளிவான உண்மை. அதுபோக ஆரம்பத்திலேயே ஒரு எபிசோட்க்கு 50 லட்சம் படி 40 எபிசோட்ஸ் ப்ளான் பண்ணப்பட்டு சூர்யாவிற்கு 20 கோடி சம்பளம் கொடுத்துதான் நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள்ன்னு அப்போதைய செய்திகள்ள வந்துச்சு. ஆகவே 40 எபிசோட்ஸ் ப்ளான் பண்ணப்பட்ட ஒரு நிகழ்ச்சி சுமார் 80 எபிசோட்ஸ் கண்டுள்ளது என்பதே உண்மை. இது நிகழ்ச்சி வெற்றி பாதையில் சென்ற ஒரே காரணத்தினால் மட்டுமே இருக்கலாம்.
இறுதியாக என்ன தோணுதுன்னா விஜய் டிவி கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியை அடுத்த வருடம், அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியின் பின் தொடர்வார்கள். அதில் அநேகமாக சூர்யாவே ஹோஸ்டாக இருப்பார்(இப்போதைக்கு மாற்று இல்லை) ,ஆனால் இன்னும் கொஞ்சம் பெட்டரா செய்வார். திரும்பவும் டிவில மொக்க கேள்வி கேட்டு பதிலை sms பண்ண சொல்லுவாங்க. அதுக்கு திட்டி ட்வீட் போட்ட பிரபல ட்வீட்டர்கள், பதிவர்கள், நீங்க, நானு, எல்லாருமே sms அனுப்புவோம். நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், விஜய் டிவி, சூர்யா, மற்றும் இது சம்பந்தபட்டவுங்க எல்லாரும் நல்லா சம்பாதிப்பாங்க. சம்பாதிச்சதில் சிறு தொகையை போட்டியாளர்களுக்கும் சமூக நல பணிகளுக்கும் குடுப்பாங்க. என்டர்டய்மன்ட்க்காக நீங்களும் நானும் டிவி முன்னாடி உட்காந்து போட்டியாளர் சொன்ன ஆப்ஷன் சரியா பிழையான்னு சூர்யா மூஞ்ச பார்த்துகிட்டு இருப்போம்!!!
டிஸ்கி: ஆத்தா சத்தியமா நா சூர்யாவின் தீவிர ரசிகன் இல்ல.
நீங்க சொன்னது போல அண்மைக் காலமாக ப்ரோகிராமின் தரம் கொஞ்சம் கூடி இருந்தது உண்மை தான்.
ReplyDeleteமுதலாவது சீசன் தானே முடிஞ்சிருக்கு? கொஞ்ச நாள் போனதும் சூர்யாவ மீண்டும் டீவில பார்க்க முடியாதான்னு தாய்க்குலம் ஏங்கும். அப்போ டீவில மீண்டும் sms கேள்விகள் தோன்றும். சீசன் டூ ஸ்டார்ட் !!!
காலை வணக்கம்,மாமா!நல்லாயிருக்கேளா?இந்த நீங்களும் வெல்லலாம் ஒரு கேடி,சாரி கோடி பத்திய உங்க கண்ணோட்டம்!?சரியா இல்லியான்னு நேக்குத் தெரியல.ஏன்னா,நான் இது பாக்கிறதில்ல!ஹ!ஹ!ஹா!!!///சூர்யா நல்ல பையன்!!!!!!!
ReplyDeleteபாஸ்! எனக்கு தெரிஞ்சவரைக்கும் இன்னும் பல சீசன் வர வாய்ப்பு இருக்கு. இது கடைசி வாரம் வாரம்னு சொல்லிட்டு இருந்தாலும் நடுவில இந்த சீசனோடனும் சொன்னாரு. ஆரம்பத்துல சூர்யா கொஞ்சம் ரோபோதனமா இருந்தாலும் போக போக நல்ல பிக்கப் ஆயிட்டாரு. அதோட சன் டிவி ல வர்ற கையில் ஒரு கோடில 1 லட்சம் ஜெயகுறதே கஷ்டம்னு ஆனதும் அந்த ப்ரோக்ராம் மதிப்பு கொறைஞ்சி போய்டுச்சு. ரிஷி பண்ண டீலா நோ டீலா இத விட விறு விறுப்பா இருந்தது
ReplyDeleteநான் இதெல்லாம் பாக்குறதே இல்ல
ReplyDelete//Yoga.S. said...
ReplyDeleteகாலை வணக்கம்,மாமா!நல்லாயிருக்கேளா?///
நன்னாருக்கேன் மாமா,, நீங்க பேஷா இருக்கேளா?
//VITHYAN'S said...
ReplyDeleteபாஸ்! எனக்கு தெரிஞ்சவரைக்கும் இன்னும் பல சீசன் வர வாய்ப்பு இருக்கு. இது கடைசி வாரம் வாரம்னு சொல்லிட்டு இருந்தாலும் நடுவில இந்த சீசனோடனும் சொன்னாரு. ஆரம்பத்துல சூர்யா கொஞ்சம் ரோபோதனமா இருந்தாலும் போக போக நல்ல பிக்கப் ஆயிட்டாரு. அதோட சன் டிவி ல வர்ற கையில் ஒரு கோடில 1 லட்சம் ஜெயகுறதே கஷ்டம்னு ஆனதும் அந்த ப்ரோக்ராம் மதிப்பு கொறைஞ்சி போய்டுச்சு. ரிஷி பண்ண டீலா நோ டீலா இத விட விறு விறுப்பா இருந்தது
//////
ஆமா பாஸ்
//ஹாலிவுட்ரசிகன் said...
ReplyDeleteநீங்க சொன்னது போல அண்மைக் காலமாக ப்ரோகிராமின் தரம் கொஞ்சம் கூடி இருந்தது உண்மை தான்.
முதலாவது சீசன் தானே முடிஞ்சிருக்கு? கொஞ்ச நாள் போனதும் சூர்யாவ மீண்டும் டீவில பார்க்க முடியாதான்னு தாய்க்குலம் ஏங்கும். அப்போ டீவில மீண்டும் sms கேள்விகள் தோன்றும். சீசன் டூ ஸ்டார்ட் !!!
///
பின்ன அவுங்களும் சம்பாதிக்க வேண்டாமா? நமக்கு என்டர்டைன்மென்ட் இருந்தா போதும் பாஸ்!! வேற என்னாத்த கேட்க போறோம்?
ஒரிரண்டு எபிசோடுகள் பார்த்தேன்! நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் நபர்களின் கல்வித் தகுதிக்கேற்ப கேள்விகள் கேட்கப்பட்டது. சில நெகிழ்ச்சியான முடிவுகள் ஏற்பட்டன. மொத்தத்தில் நிகழ்ச்சி தோல்வியல்ல!
ReplyDelete***பெஸ்ட் என்டர்டைனர் ரமீலா பேகம்.***
ReplyDeleteஇஸ்லாமியப் பெண்களுக்கு சுதந்திரம் இல்லை மண்ணாங்கட்டினு ஒரு பக்கம் நம்மாளுக நீலிக்கண்ணீர் வடித்து ஒப்பாரி வைத்துக்கொண்டு இருக்கும்போது ரமீலா பேகம் எப்பிசோட் எல்லாரையும் கொகரையில் அறைவதுபோல இருந்தது. She is the best of all! :) I think everybody loved that!
அதெல்லாம் தெரியாது !! ஆனா அவுங்க கலக்கிட்டாங்க.. அதுவும் இறுதி எபிசோட்ல அவுங்களுக்கு மட்டுமே திரும்பவும் ஒரு வாட்டி விளையாட சான்ஸ் கொடுத்தாங்க!!
Delete