ம்ம்ம்ம்ம், மேட்டருக்கு
போறதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான மேட்டர்.. இப்பவும் எனக்குள்ளே ஒரு
மிருகம், அதாவது "தல ரசிகன்"ங்குற மிருகம் உறங்கி கிடக்கு..
அதே மாதிரி ஒரு மிருகம் உங்களுக்குள்ளேயும் உறங்கி கிடக்குன்னா, நீங்க மேல
வாசிக்கலாம்.. இல்லன்னாலும் வாசிக்கலாம்.. ஓகே? ஓகே ஓகே ...
என்ன சொல்றது, முந்தி மாதிரி எல்லாம் இல்ல சார்,
ஏகன் படத்த கூட பர்ஸ்ட் டே பார்த்த பையன் சார் நான்... ஆனா பில்லா-2
பர்ஸ்ட் டே பார்க்கல!! எதிர்பார்ப்பு இல்லன்னு சொல்ல முடியாது.. 95%
எக்ஸ்பெக்டேஷன் Behindwoodsல
கொடுத்து இருந்தாங்க , ஆனா அது ரொம்ப அதிகமோ? அப்புடின்னுதான் இருந்துச்சு!!
எது எப்புடியோ!! ஒரு வழியா பில்லா-2 பார்த்தாச்சு..
படத்த பத்தி சொல்லனும்னா பல பேர் சொன்ன மாதிரி படம் ஒன்னும் அவ்வளவு மொக்க மொக்க
இல்ல.. ஆனா கண்டிப்பா மங்காத்தா அளவுக்கு இல்ல பிரதர், அதுக்காக நீங்க, ஏகன்
மாதிரியா?ன்னு கேட்டீங்கன்னா,
நிச்சயமா இல்ல இல்ல இல்ல , அவ்வளவு ஏன், அசல விடவும் பெட்டரா
இருக்கு..ஆஞ்சநேயா?, ஜனா?, ஆழ்வார்? ஜி? ஐயய்யோ அது
எல்லாத்த விடவும் பெட்டர்! அப்ப எந்த மாதிரி? பில்லா-1 மாதிரின்னு
சொல்லலாமா? ஆன்சர்
தெரியலயே!!
சரி
யாரோ இது அஜித்தின் ராஜபாட்டை!! ன்னு சொன்னாங்களாமே? ஐயோ சொன்னவரு வாய்
அழுகி போகனும், சாமி சத்தியமா
அதவிட 1634 மடங்கு மேல இந்த
பில்லா-2.. சகுனி? சந்தானம்
இருந்ததுனால தப்பிச்சிச்சி, ஆனா பில்லா-2
க்கு சந்தானம் தேவையே இல்லயே! அது போக எதுக்கு நாங்க ஒரு நடிகரின் படத்த இன்னொரு
நடிகர் படத்தோட கேவலமா கம்பேர் பண்ணிக்கிட்டு!!!
ஸ்க்ரீன்பிளே
மோசமா? இல்லையே!! இத
விட பெட்டரா இந்த படத்துக்கு செய்ய முடியுமா? எல்லாம்
சீனும் சீக்குவன்சா இருக்கு, ஒன்னு ரெண்டு டர்னிங் பாயிண்ட்ஸ் கூட இருக்கு!! கிட்டதட்ட சுவாரஷ்யமா இருக்கு!! அப்ப எங்க பிழைச்சிச்சி? ஹ்ம்ம்!! ஆனா
சக்ரி டோலாட்டி மேல கொஞ்சம் கோவமா இருக்கு!! சரி கடைசியா நீ என்னதான் சொல்ல வர்ற? ம்ம்ம்ம்ம்ம்.
இப்புடி வேணும்னா சொல்லலாம்,
தல
ரசிகர்கள், தலக்காக இந்த
படத்த ஒரு வாட்டி பார்க்கலாம்,
ஏன்
தல ரசிகர்கள் ரெண்டு வாட்டி கூட பார்க்கலாம்!! அப்ப
மத்தவங்க? அவுங்க
தேவைபட்டா பார்க்கலாம், வேணும்னா
பார்க்கமா கூட இருக்கலாம்!!
கடைசியா, தலக்கு ஒரு மேட்டர் (தல இத
படிப்பாரா?ன்னு தெர்ல, எதுக்கும் சொல்லி வக்கிறேன்)... எப்பவுமே தல நல்லா
பண்ணிருக்காரு, ஸ்டைலிஷா! இருக்காரு.. ஸ்மார்ட்டா இருக்காரு, கெத்தா இருக்காரு! ஆனா டைரக்டர் தான்
சொதப்பிடாருன்னு சொல்ல வைக்காத தல,
ரொம்ப கஷ்டமா இருக்கு.. இப்ப நீ இருக்குற
ரேஞ்சுக்கு வாலி மாதிரி படம் பண்ண முடியாது,
அது ஓகே.. ஆனா ஒரு வில்லன், வரலாறு மாதிரி பெர்போர்மன்ஸ் ஒரியண்டட் மாஸ் படம்
ஒன்னு கொடு தல,உன்னால முடியும். கண்டிப்பா ப்ளாக்புஸ்ட்டர்
ஆகும்.. ஒரு விஷயம் புரிஞ்சிக்கனும் நீ! எப்பவுமே தல வெறியன் ரசிகன் உன்கிட்ட
எதிர்பார்குறதுக்கும் , சாதாரண நல்ல சினிமா ரசிகர்கள் உன்கிட்ட
எதிர்பார்குறதுக்கும், ஒரு நூலிழை தான் வித்தியாசம் இருக்கு(தேங்க்ஸ் டு முருகதாஸ்). அந்த நூலிழைய விட்டு கொஞ்சம் இறங்கி வந்து சாதாரண சினிமா
ரசிகர்கள்காக நீ படம் பண்ணாலும்,
நாங்க அவுங்கள விட அதிகமாவே ரசிப்போம்!!!!
டிஸ்கி: தல ரசிகர்கள் இல்லாதவுங்க இத படிச்சி குழம்பி , என்ன திட்ட வந்தீங்கன்னா!! அது தான் மொத பெரக்ராப்லையே சொல்லிட்டேனே, அப்புறம் தலய பார்த்தா உங்களுக்கு இப்புடி தெரியுதா? இல்ல என்ன பார்த்தா உங்களுக்கு அப்புடி தெரியுதா?
படத்திற்கான எதிர்மறை விமர்சனங்கள் கொஞ்சம் மிகையாகவே இருக்கிறது. மங்காத்தாவோடு இதை ஒப்பிட்டால் ஏமாற்றமே மிஞ்சும்
ReplyDelete"நாலுபேருக்கு நல்லது நடக்கும் னா நாம எது பண்ணாலும் தப்பே இல்ல" என நல்லவனா வாழ இவன் வேலு பாய் இல்ல, "நாம வாழனுன்னா எத்தன பேர வேணுன்னாலும் கொல்லலாம் " என்று வாழும் பில்லா. கொலைகள் ஓவர் தான்.
ReplyDeleteஒரு டான் இன் வாழ்க்கையில் சந்தானம் காமெடியையும்,குத்து பாட்டையும்,செண்டிமெண்ட் முடிச்சுக்களையும் எதிர் பார்க்கலாமா? முனியாண்டி விலாசில் வெண்பொங்கல்,சாம்பார் வடையை கேட்பது வீண்.
யுவன் முதல் பார்ட் இல் தீம் ம்யுசிக் கை மட்டும் ஆங்காங்கே போட்டு ஒப்பேத்தி இருந்தார், ஆனால் இதில் ஒரு அகதி சர்வதேச கடத்தல் மன்னனாகும் வரை அவன் வாழ்வில் ஒவ்வொரு நொடியும் அவன் போக்கிலே நம்மையும் போகுமாறு தனது இசையால் அழைத்து சென்றிருக்கிறார். நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய இசை.
அஜித்,சக்கரி,ராஜசேகர்,முருகன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் .ஓரளவு !? சர்வதேச தரத்தில் ஒரு தமிழ் படம்.
ஒரு நல்ல நடிகனை ஒரே டிராக்கில் ஓடவிடுவது சரியல்ல என்பதே என் கருத்தும்.
ReplyDeleteஆமா பாஸ்!! ரஜினிக்கு நடந்தது அஜித்துக்கும் நடக்காம இருக்கனும்!!
Deleteஒரு படம் ஓடினால் மட்டும் காரணம் அஜித்... ஆனால் அந்த படம் ப்ளாப்னா அந்த படத்தோட இயக்குனர் காரணமா..? இது என்னங்கட உங்க நியாயம்... படம் அட்டர் பிளாப்.... இந்த படத்த நெட்ல பாக்க முயற்சி பண்ணேன்... யம்மா ... சத்தியமா முடியல பா... பிறகு எப்படி தியேட்டர்ல போய் பர்தன்கண்ணே தெரியலே...
ReplyDeleteஆமா இப்ப எதுக்கு இந்த பதிவு அவ்அவ் அவ்
ReplyDeleteசும்மா ஒரு இதுக்குத்தான்.. எல்லாரும் பில்லா பதிவு போடுறாங்களே, நாங்க மட்டும் போடலன்னா எங்கள அன்னந்தண்ணி பொளங்காம ஊர விட்டு தள்ளி வைச்சிர மாட்டாங்க!! அதுதான்
Delete///அப்புறம் தலய பார்த்தா உங்களுக்கு இப்புடி தெரியுதா? இல்ல என்ன பார்த்தா உங்களுக்கு அப்புடி தெரியுதா?
ReplyDeleteஎங்கள பாத்தா உமக்கு எப்பிடி அய்யா தெரியுது? ஹி..ஹி..ஹி....
///அந்த நூலிழைய விட்டு கொஞ்சம் இறங்கி வந்து சாதாரண சினிமா ரசிகர்கள்காக நீ படம் பண்ணாலும், நாங்க அவுங்கள விட அதிகமாவே ரசிப்போம்!!!! ///
ஆனாலும் நியாயமான கருத்து, நம்புவோம் தல அப்பிடியொரு படம் குடுப்பாருன்னு, நிச்சயம் குடுப்பார்!
அஜித் சார் ஒரு கிராமத்து கதையில நடிச்சாலும் பரவால்ல ...மொதல்ல இந்த கோட்டு சூட்ட கழட்ட சொல்லுங்கய்யா..
ReplyDelete//இப்பவும் எனக்குள்ளே ஒரு மிருகம், அதாவது "தல ரசிகன்"ங்குற மிருகம் உறங்கி கிடக்கு//
ReplyDeleteபதிவ படிச்ச மிருகம் துங்கின மாதிரி தெரியவில்லை :)
நன்றி,
ஜோசப்
--- ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)