Friday, August 31, 2012

தமிழ்சினிமாவில் அப்பட்டமான காப்பிகள்: முகமூடிகள் கிழிகின்றன!

SPOOF POST 
தமிழ்/இந்திய  படங்கள்ல இருந்து சுட்ட ஹாலிவுட் படங்கள பத்தி நாங்க ஏற்கனவே எழுதுன பதிவுகள்  Avatar - குருவி படத்தின் தழுவலா? மற்றும் Batman ஆன வேலாயுதம் மூலமாக ஹாலிவுட் திருட்டு கலாச்சாரத்தை பற்றிய ஒரு தெளிவான விளக்கத்தை நீங்கள் பெற்றிருப்பீர்கள் என நம்புகிறோம். ஹாலிவூட்காரங்க மட்டும்தான் நம்மூரு படங்கள காப்பி அடிக்கறாங்களா, நம்மாளுக மட்டும் என்ன கொறச்சலா, தமிழ்ல வெளிவர்ற  படங்கள் எல்லாமே எதோ ஒரு உலகப் படத்தோட அப்பட்டமான காப்பிதான்னு நமக்கு நல்லாவே தெரியும். இருந்தாலும் நாங்களும் எங்க பங்குக்கு கொஞ்சம் தமிழ்பட கேரக்டரைசேஷன்களில் உள்ள சில உலகபடங்களின்  அப்பட்டமான காப்பிகள் பத்தி இந்த  பதிவில் சொல்லபோறோம்.

சமீபத்திய சென்சேஷன்  ஹிட்டு ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துல இருந்து ஆரம்பிப்போம். அதுல சந்தானம் கேரக்டர எடுத்துகிட்டீங்கன்னா அவரு ஒரு கல்யாண கார் ஓட்டுபவர், அதாவது ஒரு ஜானவாச கார வச்சிக்கிட்டு அத சேட்டு வீட்டு திருமணங்களுக்கு வாடகைக்கு ஓட்டிகிட்டு இருப்பாரு. இந்த கேரக்டர் ஸ்கெட்ச் நம்ம இயக்குனர் M.ராஜேஷின் சொந்த சுயபுத்தியில் உதிச்ச ஒரு கேரக்டர்ன்னு நீங்க நெனச்சிங்கன்னா உங்கள விட ஒரு அடிமுட்டாள் யாருமே இந்த உலகத்துல  இருக்க முடியாது. ராஜேஷும்  மத்த எல்லா தமிழ் சினிமா டைரக்டர்ஸ்  மாதிரியே  இத ஒரு உலக படத்துல இருந்து சுட்டு (அதாவது அவுங்க மொழில இன்ஸ்பைர் ஆகி-யாமாம் ) நம்ம முட்டாள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு குடுத்துருக்காரு. 1988ல வெளிவந்த 奸人本色ங்குற ஹாங்காங் படத்த பத்தி உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல. 01/01/1988 ல திரையிடப்பட்டு  01/07/1988 வரைக்கும் ஹாங்காங்ல செம ஓட்டம் ஓடுன ஒரு காமெடி படம். இந்த படத்துல பிரபல ஹாங்காங்  நடிகர் சின்-ஹோ-யின்க் (Sin Ho-Ying) கூட ஒரு வெட்டிங் கார் டிரைவராதான்  வருவாரு. அந்த கேரக்டர் அப்புடியே பட்டவர்த்தனமா சுட்டு தமிழ்படுத்தி சந்தானத்த நடிக்க வச்சிட்டாரு ராஜேஷ்.M.

ஹாங்காங் படத்தின் அப்பட்டமான தழுவல்
இல்லையே? ஓகே ஓகேல  சந்தானம் ஒரு தியேட்டர் காண்டீன் டெலிவரி பையன்னு ஒரு சீன்ல அறிமுகபடுத்துவாங்களே?ன்னு கிராஸ் கொஸ்டின் கேக்குறீங்களா? அடப்ப்ப்போங்க சார், ஒரே ஒரு சீன்ல வந்தாலும் அது கூட 1970கள்ள  புகழ்பெற்ற  அமெரிக்கன்-பிரிட்டன் டிவி ப்ரோக்ராம் The Muppet Show ல ரிச்சர்ட் ஹன்ட்ங்குற நடிகை நடித்த க்லேடிஸ் பாத்திரத்தின் ஆம்புள வேர்ஷன்தான். அதுல அவுங்க மப்பெட் தியேட்டர்ல உணவு பரிமாறும் Cafeteria ladyயா வருவாங்க. இதுல நம்ம சந்தானம் சத்யம் தியேட்டர் கேண்டீன்ல "Welcome to Sathyam Cinemas, Enjoy your snacks"ன்னு தமிழ்ல சொல்லிக்கிட்டு வருவாரு. அது ஒன்னுதான் வித்தியாசம். மத்தபடி ரெண்டும் ஒன்னுதான். திருட்டு பசங்க.

மப்பெட் ஷோவின் இன்ஸ்பிரேஷன் கேண்டீன் பாய்

அடுத்ததா  சிறுத்தை படத்தையே எடுத்துக்குங்க. அந்த படத்துல நம்ம சந்தானம் நடிச்ச கேரக்டர ஆராய்ச்சி செய்றதுக்கு முன்னாடி, அந்த  படத்துல சந்தானம் கேரக்டர் பேர பார்திங்கனா "காட்டுபூச்சி"!! இந்த பேர எங்க இருந்து சுட்டாங்க தெரியுமா? எந்த ஆங்கில படத்தின் தழுவல் தெரியுமா? படத்துல அது என்ன பூச்சின்னு சரியா காட்டவில்லை. காட்டுக்குள்ள இருக்குற பூச்சின்னா அநேகமா எட்டுக்கால் பூச்சியதான் மனசுல வச்சி இந்த பேர வச்சிருப்பாங்க. எட்டுக்கால் பூச்சி???!!! அதாவது சிலந்திபூச்சி!! அதாவது ஆங்கிலத்துல ஸ்பைடர்!! ஆமாங்க அந்த கேரக்டருக்கான இன்ஸ்பிரேஷன் ஸ்பைடர்மேன் படத்துல இருந்துதான் சுட்டுருக்காங்க. படம் வந்து அந்த காட்டுபூச்சி கேரக்டர் செம ஹிட்டாகி இவ்வளவு நாள் ஆகிருச்சி , சமீபத்துல விஜய் டிவி அவார்ட் பன்க்ஷனில் கூட இத பத்தி பேசிருக்காரு சந்தானம். யாரோ வீட்டுக்கு பக்கத்துல இருக்குற நிஜ கேரக்டர்ன்னு வாய் கூசாமா பொய் சொல்றாரு. ஆனா எந்த எடத்துலயும் ஸ்பைடர் மேன் திரைப்படத்துக்கு ஒரு சின்ன நன்றிய கூட சொல்லாத சந்தானத்தை இந்த இடத்துல மிக வன்மையாக கண்டிகிறோம்!!!

போட்டோ கூட ஒரே மாதிரின்னா பாருங்களே...

மேல  சொன்ன எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்கு. தேவைன்னா கமெண்ட்ல கேளுங்க. லிங்க் தர்றோம்.

டிஸ்கி: இது சும்மா ஆரம்பம் மட்டும்தான். அடுத்தடுத்து பாஸ்கரனின் நல்லதம்பி முடிதிருத்துபவர், சகுனி அப்பாதுரை ஆட்டோ டிரைவர்,கலகலப்பு வெட்டுபுலி ,கண்டேன் காதலை மொக்கராசு மாமா, தில்லாலங்கடி புட்டிபால் மெண்டல் பேஷன்ட்...  மாதிரி இன்னும் பல சந்தானம் கேரக்டர்களை எந்தெந்த ஆபிரிக்கன், கொரியன், பிரெஞ்சு, இத்தாலியன், ஹங்கேரியன், ரஷ்யன், உஷ்பெகிஷ்தான், செகோஸ்லோவாக்கியன் படங்கள்ல இருந்து சுட்டு (அதாவது இன்ஸ்பையர் ஆகி) எடுத்து இருக்காங்கன்னு சந்தானத்தின் முகத்திரைய கிழிக்க இருக்கோம்.


***************** ஹீ ஹீ... இது சும்மா.. ஒரு ஸ்பூஃப் பதிவு..*****************

24 comments:

  1. என்னமோ போங்க மொ.ரா மாமா!ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ஹாபி!பதில் தெரிஞ்சிருந்தா தானே கேள்வி கேக்க முடியும்?

    ReplyDelete
    Replies
    1. ஐயா.. உங்க ஸ்பீட்ட நா ரொம்ப அப்ரிசியேட் பண்ணுறேன்.. இந்த பதிவுக்கு ஒரு விளக்ககமெண்ட் போட்டு வர்றதுக்குள்ள நீங்க கமெண்ட் போட்டுடீங்களே!!

      Delete
  2. முக்கியமான் மேட்டர்: இது உள்/வெளி/கும்மாங் குத்து பதிவெதுவும் கெடையாது.. இப்ப தமிழ் சினிமால இருக்குற கிளிஷேக்களை ஸ்பூஃப் பண்ணி நம்ம சி.எஸ் அமுதன் தமிப்படம் எடுத்தாருல்ல, அப்புறம் தெலுகு சினிமால சமீபத்திய ஸ்பூஃப் ஹிட்டு சுடிகாடு... மாதிரி இப்ப பதிவுலகத்துல ட்ரென்டியா இருக்குற டாபிக்கவச்சி நாங்க ஸ்பூஃப் பண்ணிருகோம்...

    இது வெறும் மொக்க காமெடிக்காக மட்டுமே..
    அப்புறம் டைட்ல்ல "முகமூடி" அதுவும் சும்மா ஒரு ஸ்பூஃப் பெப்க்கு மட்டுமே!!

    ReplyDelete
  3. trailer 'ஏ இவ்ளோனா..

    ReplyDelete
  4. //போட்டோ கூட ஒரே மாதிரின்னா பாருங்களே//...:) :) :)

    பகிர்வுக்கு மிக்க நன்றி !....

    ReplyDelete
  5. நல்ல நகைச்சுவையான பகிர்வு! நன்றி!

    இன்று என் தளத்தில்
    ருத்திராட்சம் சில தகவல்கள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_31.html

    ReplyDelete
  6. என்னமா கண்டு பிடுக்கிறீங்கப்பா....

    (இன்ட்லி வேலை செய்யவில்லை... ஒட்டுப்பட்டை மற்றும் இன்ட்லி விட்கேட், உங்கள் தளத்தில் இருந்தால், இன்ட்லி திரட்டி சரியாகும் வரை நிறுத்தி (Edit html and Remove Indli Widget) வைக்கவும்... தளம் திறக்க பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிறது...)

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி சார்... கண்டிப்பா இப்பவே ரிமூவ் பண்ணிடறேன்..

      (யப்பே இந்த நல்ல மனசுக்காரர பின்னூட்ட சூறாவளி, 500 கமெண்ட் போடுவேன்ன்னு கிண்டல் பண்ணுற நண்பர்களா, இப்பவவாது புரிஞ்சிகிங்க நம்ம தனபாலன் அண்ணனின் நல்ல மனசை..)

      Delete
  7. நீயெல்லாம் நல்லா வருவே டா (ங்க),,,

    எப்படிப்பா இப்டியெல்லாம் யோசிக்கறீங்க..?

    ReplyDelete
    Replies
    1. அது வந்து, குவாட்டர் அட்ச்சிட்டு மொட்ட மாடில நின்னேனா...

      Delete
  8. தளம் அருமை.

    ReplyDelete
  9. உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

    ReplyDelete
  10. ஆனாலும் உங்களுக்கு அறிவு ரொம்பத்தான் பெருத்து போச்சு! இந்த மாதியான நூதன‌ திருட்டுக்கள் எல்லாம், ஐன்ஸ்டீன தவிர ஒலகத்தில ரெண்டு பேரால மட்டும் தான் கண்டு பிடிக்க முடியுமாம். ஒன்னு நீங்க , இன்னோன்னு இந்த பின்னூட்டம் போட்டவர்!

    ReplyDelete
    Replies
    1. ஓகே ஓகே..இதெல்லாம் என்ன நம்ம பெருமையா? கடம,,,,

      Delete
  11. சார் அந்த சொப்பனசுந்தரிய இப்ப யார் வெச்சிருக்கான்னு ஆல் லாங்வேஜஸ்லயும் செக் பண்ணி சொல்லுங்க சார்.........

    ReplyDelete
    Replies
    1. அந்த கார் தள்ளுற சீன் கூட எங்க இருந்து சுட்டாங்கன்னு தெரியுமா? அந்த சொப்பன சுந்தரி மேட்டர கங்கை அமரன எங்க இருந்து புடிசாரு தெர்யுமா? அடுத்த பதிவுல டீடெயில்லா போடுறோம்...

      Delete
    2. விரைவாக போடுங்க பாஸ் அப்பவாது யாரெல்லாம் வசுருந்தங்கனு தெரிஞ்சுக முடித்தா பார்போம்

      Delete
  12. நீங்க cbi ல சேந்துருங்க பாஸ்

    ReplyDelete
    Replies
    1. Actually, ஆல்ரெடி நா FBIலதான் இருக்கேன்...

      Delete
  13. Don't think that much and get confusing.., Is it correct to compare spider man..,

    ReplyDelete
    Replies
    1. I am really proud of you Mr.Ar..

      Delete
  14. இப்போ வருத்தப்பட்டு என்ன செய்ய.....

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    வலைப்பூ தலையங்க அட்டவணை
    info@ezedcal.com
    http//www.ezedcal.com

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்!!