டிஸ்கி 1: இந்த விஜய் பய (இது டைரக்டர் விஜய்) ஐ ஆம் சாம் படத்த அட்ட காப்பி அடிச்சாலும் அடிச்சாரு, கொஞ்ச நாளாவே இந்த பதிவுலக நண்பர்கள் தமிழ் சினிமா காப்பி பத்தி நெறயவே எழுதுறாங்க. இந்த நேரத்துலதான் நமக்கு இப்பிடி ஒரு மேட்டர் மாட்டிச்சு. இது திருட்டு கலாசாரத்துக்கு எதிரான காத்திரமான பதிவு இல்ல. நம்ம பாணில களாய் கம் மொக்க பதிவு. "இது யார் மனதையும் காயப்படுத்துவதற்காக அல்ல".
2009 ம் ஆண்டு வெளியாகி உலகம் முழுக்க சக்க போடு போட்ட அவதார் படத்த பத்தி நான் சொல்லி உங்களுக்கு தெரிய தேவையில்ல. அதுக்கும் மேல வேணும்னா நான் அந்த படத்தோட கதை சுருக்கத்த நம்ம பாணியில சொல்லிடறேன். சுரங்கம் அகழ்வு தொழில் செய்யும் ஒரு கம்பெனி (கோச்சா அண்ட் கோ, ரெண்டுபேரு மட்டுமே இருந்து ஒரு கிரகத்தையே ஆட்ராங்கன்னு சொன்னா மொக்கயாகிடுங்குறதால "கம்பெனி") விலையுயர்ந்த ஒரு கனிமம் (வைரக்கல்லுக்காக கிரகம் தாண்டி எல்லாம் போகமுடியாது, அதனால இது வேற "கனிமம்") இருக்கறத கண்டுபிடிச்சி வேற்று கிரகத்துக்கு போறாங்க (ஹை பட்ஜெட்ல படம் எடுக்கனும்னா கடப்பாவுக்கு போறதவிட வேற்றுக்கிரகம்தான் சரியா வரும்). அங்க இருக்கற மக்களை வேற இடத்துக்கு நகர வச்சாதான் அவங்களால அந்த கனிமத்த எடுக்க முடியும் (அங்க இருக்கறவங்கள கொத்தடிமைகளா பிடிக்க வேண்டிய அவசியம் இல்ல, ஏன்னா இது ஹை பட்ஜெட் படம், அவங்களுக்கிட்டயே நெறைய நவீன ஆயுதம் முதல் கருவிகள் வரை இருக்கு, ஆனாலும் பிரச்சின வேணுமில்ல அதுக்காகத்தான் நகர்த்துறது). அப்பத்தான் நம்ம ஹீரோ கடவுள் மாதிரி வந்து கனரக ஆயுதங்கள அம்பு வில் கொண்டு (ஹாலிவூட்ல வெறும் கையால அடிச்சா ஏத்துக்க மாட்டாங்க அதனாலதான் அம்பு வில்லு) எதிர்த்து மக்களை காப்பாத்துவாரு. கொள்ளைகார கும்பல பூரா பேரையும் கிரகத்த விட்டே வெளியேத்துவாறு. இதுதான் கத சுருக்கம். இத எங்கயோ பார்த்த மாதிரி இருக்கா?
அதுதாங்க நம்ம இளையதளபதி நடிப்பில், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், தரணி இயக்கத்தில் 2008 லையே வெளிவந்த குருவி படம். இத எப்பிடி லவட்டி இருக்காங்க பாருங்க. சுடச்சுட காப்பிங்குறது இதுதான். இந்த லட்சணத்துல இந்த படத்துக்காக பத்துவருஷம் தவமிருந்தேன்னு வேற பீலா. (யாருக்கிட்ட). கதையத்தான் சுட்டங்கன்னு பாத்தா கதைய மட்டுமில்ல காட்சிகள அப்பிடியே சுட்டிருக்காங்க. உதாரணமா நம்ம இளையதளபதி ஒரு பில்டிங் மேல இருந்து ஓடுற ட்ரயினுக்கு பாய்வாரே ஒரு ஆயிரம் அடிப் பாய்ச்சல், அத மட்டும் ரெண்டு எடத்துல வச்சிருக்காங்க, எங்கன்னு யோசிக்கறீங்களா? அதுதாங்க ஜாக் சாலி நூறடி ஒசரத்துல இருந்து நிலத்துக்கு குதிபாரே, பயிற்சிக்காக ஒரு தடவையும்
சண்டையில அடிபட்டு ஒரு தடவையும் (இதுல கொடும என்னனா நம்ம தளபதி சும்மாவே பாய்வாரு, ஆனா அத நியாயப்படுத்துறேன் பேர்வழின்னு நாவியோட எலும்பு பைபர், விழுந்தாலும் நொறுங்காது அது இதுன்னு ஜேம்ஸ் கேமரூன் கத விட்டுருப்பாரு). அப்புறம் இன்னொரு காட்சி, நம்ம தளபதி வில்லன் வீட்டுக்கு போறப்போ அங்க மாட்டிகிறுவாரு, அப்ப தேனிக்களோட எதிர்பாராத உதவி கெடச்சி தப்பிப்பாறு, அதே காட்சியதான் சண்டையில அடிபட்டு பின்வாங்குறப்போ வன விலங்குகளோட உதவி கிடைப்பது மாதிரி மாத்தி வச்சிருப்பாங்க அவதார்ல. இப்படி கதையையும் சுட்டு காட்சியையும் சுட்டு படம் எடுக்கற இவன்(ஜேம்ஸ் கேமரூன்) எல்லாம் ஒரு மனுஷனா? இத தட்டி கேக்கவே யாரும் இல்லையா?
சண்டையில அடிபட்டு ஒரு தடவையும் (இதுல கொடும என்னனா நம்ம தளபதி சும்மாவே பாய்வாரு, ஆனா அத நியாயப்படுத்துறேன் பேர்வழின்னு நாவியோட எலும்பு பைபர், விழுந்தாலும் நொறுங்காது அது இதுன்னு ஜேம்ஸ் கேமரூன் கத விட்டுருப்பாரு). அப்புறம் இன்னொரு காட்சி, நம்ம தளபதி வில்லன் வீட்டுக்கு போறப்போ அங்க மாட்டிகிறுவாரு, அப்ப தேனிக்களோட எதிர்பாராத உதவி கெடச்சி தப்பிப்பாறு, அதே காட்சியதான் சண்டையில அடிபட்டு பின்வாங்குறப்போ வன விலங்குகளோட உதவி கிடைப்பது மாதிரி மாத்தி வச்சிருப்பாங்க அவதார்ல. இப்படி கதையையும் சுட்டு காட்சியையும் சுட்டு படம் எடுக்கற இவன்(ஜேம்ஸ் கேமரூன்) எல்லாம் ஒரு மனுஷனா? இத தட்டி கேக்கவே யாரும் இல்லையா?
இனி இந்த ரெண்டு படத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைய ஒரு அலசு அலசுவோம்
குருவி படத்துல பிரதானமான பிரச்சினை வைரக்கல்ல அகழ்வு செஞ்சா அந்த எடத்துல நிலச்சரிவு ஏற்படும், இயற்கை சமநிலை பாதிக்கப்ப்படும்னுதான் மணிவண்ணனும் இந்திய அரசும் வைரக்கல் அகழ்வ எதிர்பாங்க, அதே பிரச்சினைதான் இங்கயும், கனிமத்த அகழ்றதால இயற்கை சமநிலை பாதிக்கப்படும்னுதான் போராட்டமே (இதுக்கு ஈவா, மரங்களுக்கிடயான நெட்வொர்கிங் அது இதுன்னு பந்தா வேறு. அப்புறமா மரம் செடி கொடில இருந்து மிருகங்கள் வரைக்கும் ஒரு லிங்காம், குருவியோட ஆரம்ப காட்சில நம்ம தளபதிக்கும் அவரு காருக்கும் இல்லாத லிங்கா?).
கதாபாத்திரங்களின் ஒற்றுமை
அப்புடியே இருக்கும் கதாபாத்திரங்கள்
- குருவி/வேலு - ஜாக் சாலி (அதே ரெண்டு ஷேடு - இன்னொருத்தர் பேருல கடப்பாக்குள்ள போற ஒரு பாத்திரம், குருவியா ஊர்சுத்துற ஒரு பாத்திரம் - இததான் ஆர்மியில இருந்தவர்னு மனுஷனாவும், அவதார இயங்குற நாவின்னும் வச்சிருக்காங்க)
- கோச்சா - பாகர் செல்ப்பிட்ஜ் (கார்பரேட் அதிகாரி, இவருதான் மெயின் வில்லன், இவரு சொல்றபடிதான் இந்த கூட்டமே இயங்குது, நம்ம சுமன், இது இந்தியாவுலயும் கெடக்குது அப்பிடின்னு வைரக்கல்ல வச்சி அடிக்கற அதே லெக்சர இவரு அந்த கணிமத்தோட ஒரு துண்ட கையில வச்சிக்கிட்டு அடிப்பாரு)
- கொண்டா ரெட்டி/ கடப்பா ராஜா - கேர்னல் மில்ஸ் (பாதுகாப்பு உயர் அதிகாரி, எதுக்கு ரெண்டு வேற வேற பாதிரமுன்னு ரெண்டையும் ஒன்னாவே மாத்திட்டாங்க, இவங்கள கொல்றதுதான் மிக முக்கியமான போர்சன் படத்துலையே)
- இளவரசு - த்ருடி (அதாங்க அந்த பொம்பள பைலட், ஒரே ஆம்புளங்களா இருக்குன்னு ஒரு பெண் கதாபாத்திரம், ரெண்டுபேருமே வில்லன்களுக்கு நெருங்கிய எடத்துல கையாள்களாக இருந்து ஹீரோவுக்கு உதவுறவங்க, ஆனா கடசில வில்லன்களுக்கு தெரியவந்து ரெண்டுபெரையுமே கொன்னுடுவாங்க)
சில மாற்றங்களுடன் இருக்கற கதாபாத்திரங்கள்
- த்ரிஷா - நெய்த்திரி (வில்லன் தங்கச்சி ஹீரோயின் இங்க, மணிவண்ணன் கேரக்டர் பண்ணுபவரோட பொண்ணு ஹீரோயின் அங்க, நெய்த்திரி பாதி த்ரிஷா பாதி குருவி கலந்த கதாபாத்திரம், நம்ம தளபதி Zoro ஆக்ட் குடுத்து அங்கயும் இங்கயும் தாவுரத இந்த நாவி பொண்ணு பண்ணுது, அத பாத்து த்ரிஷா காதல் வயப்படுறத இதுல ஹீரோ பண்ணுறாரு, அதுதான் வித்தியாசம். அப்புறமா சென்னையில நம்ம தளபதி த்ரிஷாவ காப்பாத்துறது கம் வைரத்த எடுக்க முயர்ச்சிக்கிற சீனைத்தான் இந்த பொண்ணு வன விலங்குகள் கிட்ட இருந்து ஹீரோவ காப்பாத்துறது, ஹீரோகிட்ட இருந்து நாவிக்கள் போர் தந்திரத்தை கத்துக்க முயர்ச்சிக்கிறதுன்னு வச்சிருக்காங்க)
- விவேக் - நார்ம் ச்பெல்மேன் (இது காமெடிக்கு பயன்படல்லன்னாலும் விவேக்கோட பாத்திரத்ததான் கொஞ்சம் டெவலப் பண்ணி ஒரு ஆராய்ச்சியாளரா வச்சிருக்காங்க. இவரைத்தான் குடும்பத்த பாத்துகன்னு ஜாக் விட்டுட்டு போவாரு சாரி உள்ள இருந்து உளவுபார்க்கன்னு)
- சரண்யா - Dr கிரேஸ் (சரண்யா காரக்டர் படு மொக்கங்குரதால விஞ்ஞானி ஆக்கி டெவலாப் பண்ணியிருக்கராம் ஜேம்ஸ் கேமரூன். கெட்டவங்க கூட்டத்துல இருந்து ஹீரோக்கும் ஹீரோயினுக்கும் உதவி செய்யற ஒரு பொம்பள, குருவியில கணவனையே எதிர்த்து அப்பிடிங்குரத இங்க ஆராச்சிக்காக பணம் குடுக்கற கம்பனியையே எதிர்த்து அப்பிடின்னு திரிச்சிருக்காங்க)
- கொண்டா ரெட்டி தம்பி - நாவி போராளி (இவரு முன்பாதில கொண்டா ரெட்டிதம்பி மாதிரி வில்லத்தனம் பண்ணுவாரு, த்ரிஷா கூட நடந்த நிச்சயதார்த்தம் கூட பங்கம் இல்லாம அப்பிடியே வச்சிருப்பாங்க, பின் பாதில அப்பிடியே ரிவேர்ஸ் அடிச்சு கடப்பா நண்பர்கள் கதாபாத்திரமா மாறியிருப்பாரு, இவரோட இன்னும் ரெண்டு மூணு கொசுறு பாத்திரங்கள் வேற)
படத்தைதான் சுட்டாங்கன்ன போஸ்டரையும் விட்டு வாக்கல்ல, நாம மேல போட்டிருக்கற ரெண்டு ஒப்பீட்டு படங்களையும் நல்லா குறுகுறுன்னு உத்துப்பாருங்க, உங்களுக்கே புரியும். முதல் படத்துல நம்ம தளபதி சேத்துல இருந்து எந்திரிச்சு வாரதால அவரு முகத்துல ஓடுற கோடுகளகூட அப்பிடியே வச்சிருக்காங்க (இது நாவிக்களோட ஒடம்புல இருக்கறதாம் அப்புடின்னு ஒரு வெளக்கம் வேற). அப்புறம் அந்த பாயுற படங்கள். மூணாவது படத்துல ஹீரோ ஹீரோயின்ன கொஞ்சம் முன்னுக்குப் பின்னுக்குன்னு ஆர்டர மாத்தி தப்பிச்சிருக்காங்க. அதுல கூட த்ரிஷா குடுக்கற லுக்கையும் கழுத்துக்கு முன்னால முடிய போட்டிருக்கறதையும் கூட விட்டு வக்கல.
குருவி படத்த சுடுறதுன்னு முடிவு பண்ணினதுக்கப்புறம் கதைய கொஞ்சம் டெவலப் பண்ணறதா நெனச்சி இவங்க இந்த கதைக்கு கொஞ்சம் கிட்டவா வாற இன்னொரு தமிழ் படத்தோட (இது ஒரு மலையாளப்பட ரீமேக்) கதைய அப்பட்டாமா தழுவியும் இருக்காங்கன்னு சில பதிவுகள் சொல்லுது. (1 2 )
இதுக்கும் மேல வேணும்னா நீங்களே ரெண்டு படத்தையும் எடுத்து பாத்துட்டு ஒரு முடிவுக்கு வாங்க. என்னதான் இண்டேளிஜண்டா பண்ண முயற்ச்சித்தாலும் எங்க கண்ணுக்கு என்னவோ குருவி படத்தோட அட்ட காபிதான் அவதார்னு படுது.
அவதார் படம் எது எதோட தாக்கம்னு இயக்குனர் ஜேம்ஸ் கமரூன் இப்படிசொல்லியிருக்காரு "It owes a lot to good, old-fashioned, adolescent adventure storytelling like Rudyard Kipling's The Man Who Would Be King, Lawrence Of Arabia and John Carter Of Mars. There are also a lot of very recognizable archetypes in the story: the American frontier and the conflict between a technical, military civilization and a nature-aligned indigenous population" இதுல குருவி படத்தோட பெயரே இல்லைங்கிறது மிகவும் கவலை தருவது.
இந்த திருட்ட பத்தி நாங்க உதயநிதி சாருக்கு tweet பண்ணி இருக்கோம். அவரு இத கண்டுக்கலனாலும் இந்தமாதிரி திருட்டுக்கள் ஒழியும்வரை இந்த முயற்சி தொடரும்.
இந்த திருட்ட பத்தி நாங்க உதயநிதி சாருக்கு tweet பண்ணி இருக்கோம். அவரு இத கண்டுக்கலனாலும் இந்தமாதிரி திருட்டுக்கள் ஒழியும்வரை இந்த முயற்சி தொடரும்.
டிஸ்கி 2 : ஒருவேள கிறிஸ்தோபர் நோலன் சொன்னதுபோல ஜேம்ஸ் கமரூன் கனவுல நம்ம ஆளுங்க புகுந்து அவதார் கதைய திருடினாலும் திருடியிருப்பாங்க (எதோ ஒரு வலைப்பூவில் முருகதாஸ் பற்றி இவ்வாறு படித்ததாக ஞாபகம் - நான் திருடலப்பா)
டிஸ்கி 3 : அவதார் படம் 1995 ல் வெளியான Pocahontas என்கிற காட்டூன் படத்தின் அட்ட காப்பின்னு fail blog கூறுகிறது. இத வச்சிக்கிட்டு குருவி படம் அந்த கார்டூன் படத்தோட காபின்னு நம்ம பதிவுலக நண்பர்கள் சத்தியம் பண்ணி சூடம் ஏத்தினாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. (வியட்நாம் காலனி தப்பிச்சுது, ஏன்னா இது 1992 வந்தது)
Real Santhanam Fanz குறிப்பு: இத படிச்சிட்டு இந்த திருட்டு கலாசாரத்துக்கு நாங்க ஆதரவாளர்கள் என்ற முடிவுக்கு வர வேண்டாம். எமது வலைப்பூவில் திருட்டுக்கு எதிரான போராட்டம் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது. விரைவில் இது பற்றிய ஒரு முழு நீள பதிவோடு உத்தியோகபூர்வ(???) யுத்தம் ஆரம்பிக்கும். வரவிருக்கும் முக்கிய படங்கள் மூணும் திருடப்பட்டவையாக இருக்கலாம் என்ற அச்சம் பதிவுலக நண்பர்கள் மத்தியில் இருக்கிறது, எதிர்கொள்ள நாங்களும் தயாராகிக்கிறோம்.
உங்கள் ஓட்டும் கமெண்டும்தான் எங்களுக்கான உற்சாக டானிக், so please VOTE&COMMENT.
nanba dtm padatha vida matinga pola neenga its not copy boss 3 scenes same then story taken mathelam made for tamil cinema gr8 movie boss inime antha vitrunga nanba
ReplyDelete@meyyappanram
ReplyDeleteஹி ஹி ...விடுங்க பாஸ்.. இது DTM பத்தின பதிவு இல்ல... அவதார் அண்ட் குருவி.. நம்ம தமிழ் படத்த சுட்டு எடுத்த இங்கிலீஸ் படம்தான் அந்த அவதார்ந்குறோம்.
boss romba mokkaya irukku...
ReplyDelete@yuva
ReplyDeleteஆமா பாஸ்.. அதுதான் டிஸ்கி 1லேயே சொல்லிட்டோம்ல... எனிவே உங்க கமெண்டுக்கு நன்றி...
Final Fantasy 5 படமும் நம்ம தளபதியின் ATM இன் ஈயடிச்சான் காப்பிதானே!!!
ReplyDeleteஅடேங்கப்பா.......... டாகுடரு படத்த ஆராச்சி பண்ணியே டாகுடர் பட்டம் வாங்கிடுவீங்க போல இருக்கே?
ReplyDeleteஆதி, வில்லு, சுறா போன்ற காவியங்களையும் இதே முறையில் ஆராய்ச்சி செய்து தருமாறு கேட்டுக் கொல்கிறேன்........
ReplyDeleteஹா ஹா வித்தியாசமான ஆராய்ச்சி ,வித்தியாசமான பதிவு ,அருமை
ReplyDelete@Mohamed Faaique ச்சே ச்சே.. அது வேற இது வேறன்ங்க.. கூடிய சீக்கிரம் அத பத்தியும் பேசுவோம்.. நீங்க தொடர்ந்து வாங்க...
ReplyDelete@பன்னிக்குட்டி ராம்சாமி நன்றியோ நன்றிங்க... ஆமாங்க, நாமளும் டாக்குடர் ஆகும் காலம் வெகு தூரம் இல்ல...டாக்குடர் விசை அளவுக்கு இல்லன்னாலும் அட்லீஸ்ட் உங்க பேவரிட் ஸ்டார் டாக்குடர் சீனிவாசன் ரேஞ்சுக்கு ட்ரை பண்ரோம்ங்க....
ReplyDelete@பன்னிக்குட்டி ராம்சாமி
ReplyDelete//ஆதி, வில்லு, சுறா போன்ற காவியங்களையும் இதே முறையில் ஆராய்ச்சி செய்து தருமாறு கேட்டுக் கொல்கிறேன்........ //
தங்கள் சித்தம், எங்கள் பாக்கியம்...வெகு விரைவில்.....
@M.R
ReplyDeleteநன்றிங்க.. நன்றிங்க.. தொடர்ந்து வாங்கங்க...தொடர்ந்து வாங்கங்க...
unga mokkaiya pakarapa power star srinivasan podra mokkaie better pola....
ReplyDeleteஎன்னங்க செய்றது, இதே ரெண்டு படமும் ஆர்டர் மாறி வந்திருந்தா நம்ம தமிழ் படத்தோட நெலம என்ன ஆகியிருக்கும். அப்ப அத மொக்கயின்னு சொல்ற தைரியம் எத்தன பேருக்கு இருந்திருக்கும். தொடர்ந்தும் வாங்க, பவர் ஸ்டார (பவன் கல்யாண் மன்னிக்கணும்) இதுலயாவது ஜெயிக்க ட்ரை பண்ணுவம்.
ReplyDeleteஹா ஹா சும்மா பிரிச்சு மேன்சுட்டீங்க தல ... குருவியவே சுட்டுட்டாய்ங்களா ஹா ஹா.. பயங்கர அலசல் ... அருமை அசத்துங்க
ReplyDeleteம்ம்ம் நடக்கட்டும், இந்தமாதிரி பதிவு போட நிறைய
ReplyDeleteஹோம் ஒர்க்கெல்லாம் பன்ரீங்க போல இருக்கெ.
@மாய உலகம் நன்றிங்க... இங்கிலீஸ் படத்த சுட்டா மட்டும்தான் தட்டி கேப்பீங்களா? நம்ம டாக்குடர் விசய் படத்த சுட்டா கேக்க மாடீன்களான்னு யாரும் கேட்டுரபடாதுல்ல..அதுதான் இந்த மொக்க பதிவு!!
ReplyDelete@Lakshmi வாங்க பாட்டி , நீங்க கோயில் கோயிலா போயி ஹோம் ஒர்க் , பீல்ட் ஒர்க் எல்லாம் பண்ணுறீங்க, எதோ எங்க ரேஞ்சுக்கு கொஞ்சம் மொக்க படங்கள பார்த்து நாங்க ஹோம் ஒர்க் பண்றோம்!!! ஹா ஹா ..
ReplyDeleteகவுண்டமணி படத்தையும் அவர் படத்தில் பேசிய டயலாக்குகளையும் தனது பிளாக்கில் போட்டு அதை சூப்பர் ஹிட்டாக்கிய அண்ணன் பன்னிகுட்டி ராமசாமியைக் காப்பியடிச்சு நீங்க சந்தானத்தின் படத்தைப் போட்டுள்ள மாதிரி தெரியுது. இதனால் என்ன தெரிய வருதுன்னா காப்பி எல்லா இடத்திலும் இருக்கு.
ReplyDeletenalla sirippu tharum oppitu..vaalththukkal
ReplyDelete@Jayadev Dasகவுண்டமணி ஸார் நம்ம தல சந்தானத்துக்கு எப்பிடி ஒரு பல்கலைகழகமோ, அதே மாதி அண்ணன் பன்னிகுட்டி ராமசாமி எங்களுக்கு ஒரு முன்னோடி.. அதுக்காக அண்ணன் மட்டும்தான் ஒரே ஒரு பான் பேஜ் வச்சிருக்கலாம்னா அது எப்பிடி நியாயம்? நாங்க குருவியோட காபிதான் அவதார்னு சொன்னமாதிரி இருக்கு நீங்க சொல்றது.. ஹீ ஹீ ஹீ
ReplyDelete@மதுரை சரவணன்நன்றி தலைவரே, தொடர்ந்தும் வாங்க
ReplyDeletesuper.you will continue.
ReplyDeleteKuruviyoda anda hotel scene thrishavoda bagla irundu virattha thiruda parkkurathu, apporam veettukku koottikittu porathu ellamey Malayal padathula irundu Vetkamillama SUTTADU......9Enna Padamnu Theriyuma Dileep Herova Nadichu Vanda Padam 1998la Peru "VETTAM").
ReplyDeleteAwesome post with perfect guidelines
ReplyDeleteTamil Cinema