டிஸ்கி 1: வழமையா நாங்க மொக்கதான் போடுவோம், ஆனா இன்னைக்கு கொஞ்சம் சீரியஸா ஒரு பதிவு.
அண்மைக் காலமாகவே எனக்கு ஹாசினி பேசும் படம் பார்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இது கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பப்படும் ஒரு நிகழ்ச்சி, இருநூறு எபிசோட்களை கடந்து வந்திருக்கிறது. இவர் பல படங்களை விமர்சனம் செய்திருந்தாலும், சமீப காலம் வரை நான் எதையுமே பார்த்ததில்லை.ஆனால் நமது தல சந்தானம் நடித்த இரண்டு படங்களின் விமர்சனத்தை நான் மிக அண்மையில்தான் பார்த்தேன், அதுவரை சுகாசினி ஒரு நல்ல விமர்சகர் என்கிற பதிவே என்னுள் இருந்தது. பாஸ் என்கிற பாஸ்கரன், மற்றும் சிறுத்தை படங்களுக்கான விமர்சனங்களே அவை. அவை இரண்டையும் பார்த்த பின்பே மற்றைய படங்களைப் பற்றி அவர் என்ன விமர்சனம் செய்கிறார் என்று பார்கவேண்டுமேன்கிற எண்ணம் தோன்றியது, அதன் பின்னரே இணையத்தளங்களில் கிடைக்கப்பெற்ற ஏனைய படங்களின் விமர்சனங்களை பார்த்தேன். அவை பற்றிய ஒரு பதிவே இது. மொதல்ல நம்ம சந்தானம் பற்றி சுகாசினியின் விமர்சனத்துக்கு வருவோம்.
தமன்னாவ வாடி போடின்னு கூப்பிடறார்ங்குறது அந்த அம்மாவோட கவலை, காட்டுப்பூச்சி அப்பிடி கூப்பிடல்லன்னாதான் அது சொதப்பலா இருக்கும். தமன்னாவ மட்டும் இல்ல கார்த்திய அதவிட கேவலமாவேல்லாம் சொல்லறாரு. எத்தனையோ படத்துல ஹீரோவ கலாய் கலாயின்னு கலாச்சிருக்காரு. இந்தம்மா சொல்றத பாத்தா இவங்க இன்னம் கதாபத்திரங்கள பாக்குற அளவுக்கு முதிர்ச்சியடயலன்னு தான் தோணுது. இவங்க இன்னமும் நடிகர்கள்தான் திரையில பார்கிறாங்க. பேரழகன் படத்துல சூரியாவ அசிங்கம்னு விவேக் சொல்லுவாரு, அதவிட எவ்வளவோ கேவலமாவேல்லாம் சொல்லுவாரு, ஆனா பாஸ் என்கிற பாஸ்கரன்ல நயன்தாரவ சூப்பர் பிகருன்னு சொன்னது மோசம்ங்குறாங்க, வானம் படத்துல பிரம்மானந்தம் "நான் சிங்கத்தைவிட ஒசரம்னு" சொல்லுவாரு (வானம், இந்தம்மாவோட விமர்சனத்துக்கு பிறகு வந்த படமா இருந்தாலும்), இந்தம்மா என்னடான்னா நீங்க ஹீரோக்கள பத்தி பெர்சொனலா கமெண்ட் அடிச்சு பாருங்களேன்னு சவால் விடுது. இந்தம்மா தமிழ் படங்கள் கூட பாக்குறதில்ல போல. இப்ப முந்தி மாதிரி இல்ல, ஆணாதிக்க சினிமா, ஹீரோ வேர்ஷிப் எல்லாம் எல்லா சினிமாவுலயும் கிடையாது. நீங்க இன்னம் கொஞ்சம் வளரனும் (வேணும்னா காம்ப்ளான் குடிச்சி பாருங்க). அப்புறம், கும்பகோணத்துல எந்த பிசிக்ஸ் ப்ரோபெசர் இப்பிடி இருப்பாங்கன்னு கேக்குறாங்க, ஏன் கும்பகோணத்துல அழாகான பொண்ணுங்களே இருக்கக்கூடாதா? ராவணன் படத்துல காட்டுக்குள்ள கூட ஐஸ்வர்யா ராய் மேக்கப் போட்டமாதிரி பளிச்சின்னு இருப்பாங்க (ஒரு வேள அது ஐஸ்வர்யா ராய் அப்பிடித்தான்னு சொல்லுவாங்க போல, அப்ப நயாந்தாரா மட்டும் என்ன மொக்க பிகரா?, ஐயோ நான் மரியாத இல்லாம பெர்சனலா கமென்ட் அடிச்சுட்டேனே), எந்த நாட்டுல தீவிரவாதி மேக்கப் போட்டு வெள்ள வேளேரன்னு அழாக இருந்தாங்கன்னு தில்சே(உயிரே) படத்துல மனிஷாவ பார்த்து இவங்க கேப்பாங்களா?
அய்யா வாசகர் மகா ஜனகளே, இதுக்கு மேல நான் ஹாசினி பேசும் படம் பத்தி விமர்கிக்க போறன். கொஞ்சம் ஒவேரவேதான் இருக்கும். சுகாசினிய விமர்சிக்கறது பாலை கருப்புன்னு சொல்ற மாதிரி இருக்கும் அப்பிடின்னு யாராவது நெனச்சீங்கன்னா தயவு செய்து இந்த பதிவ இதுக்கு மேல படிக்காத்திங்க.
முதலாவதாக ஹாசினி பேசும் படம் ஒரு reviewஆ அல்லது critiqueஆ என்பது புரியவில்லை. நமக்கு எல்லாமே விமர்சனம் தானே, சுஹாசினியும் அப்படியே எண்ணிக்கொண்டார் போலும். இவரது விமர்சனம் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே சினிமாவினை பார்க்கிறது. சுகாசினி நல்ல படங்களுக்கு சில அளவு கோல் வைத்திருக்கிறார்.
- குட் ஓவர் இவில்
- களம் நகர்புறம் சார்ந்ததாக இருக்க வேண்டும்
- Protagonist நல்லவாராக மட்டுமே இருக்கவேண்டும் (தமிழ் சினிமாவின் அடிநாதமான ஹீரோ, வில்லன் கான்செப்ட்)
- படத்தில் ஒரு பெரிய கதை இருக்க வேண்டும்
- கதாபாத்திரங்கள் டைப் காஸ்ட் பண்ணபட்டிருக்க வேண்டும் நல்லவர்கள், கெட்டவர்கள்
- Protagonist அல்லது அவரை சுற்றி வருபவர்கள் பெண்களை மதிப்பவர்களாக, கலாசாரக்க் காவலர்களாக, சமூகத்தால் அங்கிகரிக்கப்பட்ட விடயங்களை மட்டுமே செய்பவர்களாக இருக்க வேண்டும்.
- வாழ்கையில், சமுகத்தில் வெற்றி பெற்றவர்களின் கதையாக மட்டுமே திரைப்படக்கதை இருக்க வேண்டும்
இன்னும் பல அளவுகோல்கள் இருக்கிறது, அந்த பட்டியல் மட்டுமே மிகவும் நீண்டதாக ஆகிவிடக்கூடாது. இந்த விமர்சனங்களைப் பார்த்தபோது சுஹாசினிக்கு உலக சினிமா மற்றும் தமிழ் சினிமா பற்றிய போதுமான புரிதல் இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாகி விடுகிறது. ஹாலிவூடில் பாண்டசி, பிக்சன், சுப்பர் ஹீரோ படங்கள் என சில படங்கள் வெளிவரும், இந்தவகையான படங்கள் பொழுதுபோக்கு ஒன்றை மட்டுமே குறியாக கொண்டிருக்கும், நடக்க முடியாத அசாத்தியாமான விடயங்களே இவற்றில் காணப்படும். (சயின்ஸ் பிக்சன் என்பது சிலவேளைகளில் ஒரு விதிவிலக்கு) இந்த மாதிரியான படங்களுக்கு உள்ள தமிழ் வடிவமே நமது மாஸ் திரைப்படங்கள். ஆரம்ப நாட்களில் இவை சுப்பர் ஹீரோ படங்களாக மட்டுமே இருந்தன, பின்னைய நாட்களில் பாண்டசி, பிக்சன் போன்றவையும் சேர்ந்து கொண்டன. இவற்றின் கதயையோ அல்லது கதைக் களத்தையோ யாரும் விமர்சிப்பதில்லை, இந்த படங்களில் கையாளப்பட்டிருக்கும் தொழில் நுட்பம், படமாக்கலின் நேர்த்தி போன்ற விடயங்களே விமர்சிக்கப்படும். இவற்றின் கதை, யதார்த்த மீறல் என்பவை taken for granted இவ்வகையான படங்களுக்கு critique அவசியமில்லை, review வே எழுதப்படும். நம்ம சுகாசினி அவர்கள் தமிழில் வெளிவரும் போர்முலா திரைப்படங்களுக்கும் கதை நேர்த்தி எதிர்பார்க்கிறார் அவற்றையும் critisize செய்கிறார். அதே போன்று காமெடி, ரொமாண்டிக் காமெடி, டீன் மூவீஸ் என சில வடிவமும் வெளி வரும். இவற்றில் கதை என்று ஒன்று இருக்காது, ஒன்றரை மணி நேரம் நமது அறிவை அடகு வைத்துவிட்டு சிரிப்பதற்காகவே இந்த படங்கள் வரும். ஹங் ஓவர் போன்ற படங்களை குறிப்பிடலாம். இவற்றின் மறு வடிவமே பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்கள். இவை ஜாலியான படங்கள். அனுபவிக்கனும் ஆராயக்கூடாது வகையறாவை சேர்ந்ததுதான் இதுவும்.
விமர்சனத்துக்கு உள்ளாக்க கூடிய படங்கள் வரிசையில் இருப்பவை மாற்று சினிமாவுக்கான முயர்ச்சியும் சென்சிபிள் entertainers வகையை சார்ந்தவையும் தான். TRP rating கிற்காக புதிதாக வெளிவந்து வெற்றிபெற்ற எல்லா படங்களையும் ஒரே அளவுகோலினை வைத்து விமர்சிப்பது முறையாகாது. சிறுத்தை சிறுத்தை தான், ஆடுகளம் ஆடுகளம் தான், இரண்டையும் ஒரே நியாய தராசில் வைத்து பார்க்க முடியாது. இதை அவர் புரிந்து கொண்டு விமர்சனம் செய்வார் என்றால் நல்லது.
தமிழ் சினிமாவினை பற்றிய ஒரு புரிந்து கொள்ளலை நமது இன்னுமொரு பதிவில் விரைவில் பார்ப்போம்.
டிஸ்கி 2: டிஸ்கி 1ல எதோ சீரியஸ் பதிவுன்னு சொன்னியே? எங்கடா அது? இதுவும் மொக்கதான்டானு சொல்றீங்களா? ஓகே டீல்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்!!