Thursday, August 11, 2011

மங்காத்தா ட்ரெய்லர்: சந்தானம் பேன்ஸ் விமர்சனம்

உங்கள்ள பாதிபேர் ஏற்கனவே மங்காத்தா ட்ரைலர பார்த்து இருப்பீங்க. வெளியான ஒரே மணித்தியாத்துல கிட்டத்தட்ட 5000 ஹிட்ஸ் வாங்கிருச்சு(ரிலீஸ் ஆனது ராத்திரி 12மணிக்கு ). அப்புடி பார்காதவுங்க கீழ ட்ரைலர பார்த்துட்டு பதிவுக்கு போங்க.



இந்த ட்ரைலர் எழுப்பற அதிர்வலைகள பாத்தா இது நிச்சயம் ஒரு ஹிட்டுன்னு தெரியுது. ஹட்ஸ் ஆப் டு வெங்கட் பிரபு அண்ட் டீம். தமிழ் சினிமாவின் ஆழகான ஹீரோ அஜித் குமார் சமீபத்துல அழகாக இருக்கும் படம் இதாதான் இருக்கும்னு தோணுது (என்னடா நரச்ச முடி கெட் அப்புக்கு இந்த பில்டப்புன்னு யோசிக்காதீங்க நெஜமாவே தல சுப்பரா இருக்காரு). இந்த ட்ரைலர பாக்குறப்போ ரொம்ப சந்தோசமா இருக்கு, அதுக்கு காரணம் அல்டிமேட் ஸ்டாரும் அக்ஷன் கிங்கும் இருந்தும் பந்தா இல்லாம இருக்கு. தமிழ் பட இயக்குனர்கள் மட்டுமில்ல மூத்த நடிகர்கள் கூட ஆரோக்யமான பாதையில்தான் போய்கிட்டு இருக்காங்கங்குறதனால வர்ற சந்தோஷம் அது. இது தல ரசிகர்கள் சொல்ற சூப்பர் ட்ரைலரோ இல்ல சில தளபதி ரசிகர்கள் சொல்ற மாதிரி மொக்க ட்ரைலரோ இல்ல, நட்சத்திர பட்டாளமே இருந்தும் இந்த ட்ரைலர்லையே இயக்குனர் தெரியறாரு, அதுதான் இந்த படத்தோட முதல் வெற்றின்னு தோணுது. குடுக்கற காசுக்கு வஞ்சகம் இல்லாம படம் இருக்குமுன்னு தோணுது.

ட்ரைலர பாக்குறப்போ சில படங்கள் நினைவுக்கு வந்து தொலைக்கிறத தடுக்க முடியல. அதுல முக்கியாமான ஒன்று நம்ம மாதவன் நடிச்ச டீன் பட்டி (Teen Patti) அப்பிடின்குற படம். அது ஒரு அக்ஷன் படம் இல்லங்கிறதையும் நிச்சயமா இந்த படம் அந்த படத்தோட தழுவல் இல்லங்கிறதையும் நாங்க அடிச்சு சொல்லுறோம். அப்புறம் நெறைய பெயர் மறந்துபோன ஹாலிவூட் படக் காட்சிகள் எல்லாம் ஞாபகம் வந்து தொலைக்கிது. இது வெங்கட் பிரபு படம், ஏ.எல் விஜய் படம் இல்ல அதனால கண்டிப்பா இது எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான படம்னு மட்டும் நமக்கு உறுதியா சொல்ல முடியும். வெங்கட் பிரபு ஏற்கனவே    ஹாலிவூட்ல சக்க போடு போடுற  நெறைய ஜோனர்கள முதல் முறையா தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்காரூ  (அதுதானே அவரோட வெற்றி) இதுவும் அந்த மாதிரி ஒரு முயற்சிதான், (நல்ல வேள இதுல தல நடிச்சாரு, வேற யாராச்சும் நடிச்சிருந்தா  பிரபு தேவாவோட நெலமதான் நம்ம வெங்கட் பிரபுவுக்கும் வந்திருக்கும்).  


தல அஜித்துக்கு வாலி,வில்லன், வரலாறு, பில்லாக்கு அப்புறமா ஒரு ரியல் வெற்றி படமா இந்த மங்காத்தா இருக்கும் என்பதில் எந்த டவுட்டும் இல்லை. தேங்க்ஸ் டு வெங்கட் பிரபு அண்ட் டீம். கலக்குங்க பாசு. 

தல  ரசிகர்களை திருப்தி படுத்துற அதேவேளையில் ஒரு மல்டி ஸ்டாரெர் படமாக , திரைக்கதைக்கு  முக்கியத்துவம் உள்ள, எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் படமாக , முக்கியமாக ஒரு இயக்குனர் படமாக  இது இருக்கும் என்னும் நம்பிக்கையை தருது இந்த ட்ரெய்லர்.

It's  Venkat Prabhu's and Ajith's f**king  GAME!!


டிஸ்கி: தளபதிய கலாய்குறானுக தலையோட பட ட்ரைலருக்கே பதிவு எழுதுராணுக, சரியான தல ரசிகர்களா இருப்பானுக போலன்னு நெனக்கிறவங்களுக்கு ஒன்னு சொல்லிகறோம், நாங்க எப்பவுமே தலதளபதி ரசிகர்கள், அதாவது தமிழ் சினிமா ரசிகர்கள். நாங்க ஏன் சில நேரங்கள்ல தளபதிய கலாய்குரங்கிறத சொல்ல ஒரு பதிவு தயாரகிட்டிருக்கு.  அதுவரக்கும் 2010 மே மாதம் பதிவிலிடப்பட்ட  விஜய் என்ன செய்ய வேண்டும்? என்கிற கட்டுரையை வாசிக்கவும் (நன்றி வெப்துனியா.காம்) . மேலும் தளபதியின் நேர்மையை பாராட்டி நாம ரெண்டு நாள் முன்னாடி போட்ட பதிவு இங்கே: வேலாயுதம் சுட்ட படமா? சுடாத படமா?


டிஸ்கி 2: Santhanam Fanzக்கும் மங்காத்தாவுக்கும் என்ன சம்பந்தம்னு நெனக்கிறவங்க இந்த வீடியோவ பார்க்கவும் 




1 comment:

உங்கள் கருத்துக்கள்!!