Sunday, August 7, 2011

தெய்வத்திருமகள் மறுபடியும் ஒரு பதிவு


தெய்வத்திருமகள் படம் பற்றி ஏற்கனவே நம்ம பார்வையை இங்க பதிவு செஞ்சிருந்தோம் (தெய்வதிருமகள் : ஒரு சந்தானம் ரசிகனின் மாற்று பார்வை) . நாம அது ஒரு மொக்க படம் (மூணாவது வகை - இண்டலக்சுவல் சீட்டிங் - தமிழ் சினிமா நேர்மையான புரிதல்) அப்பிடின்னு தெளிவா சொன்னபோது நம்ம வாசகர்கள்ள பலபேர் கோபப்பட்டிருக்கலாம் (உண்மைய வேற எப்பிடித்தான் சொல்றது?). உயிர்மை ஆகஸ்ட் இதழ்ல பிரபல இசை விமர்சகர் ஷாஜி எழுதிய தெய்வத்திருமகள்: இது நகல் அல்ல போலி அப்பிடின்குற விமர்சனத்த மிக அண்மையில்தான் அவரது ப்ளாகில் வாசிக்க முடிந்தது. இவரது பதிவு நூத்துக்கு தொன்னூத்தி எழு விழுக்காடு நம்ம கருத்தோட ஒன்றிப்போகுது . தமிழ் சினிமா அபத்தங்கள புரிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் நேரமிருந்தா இவரது நீண்ட பதிவ வாசித்து பாருங்கன்னு கேட்டுக்கொள்கிறோம் (லிங்க்தெய்வத் திருமகள் நகல் அல்ல. போலி!

இப்ப மிச்சமுள்ள மூணு விழுக்காடுகளுக்கு வருவோம். இவரு நம்ம தலைவர் சந்தானம் வக்கீல்கள அவமானப்படுத்துற மாதிரி நடிச்சிருக்கருன்னு சொல்றாரு. இவரோட விமர்சனத்த வாசிச்சிட்டு வக்கீலுங்க போராட்டம் நடத்தினாங்கள இல்ல அவங்க போராட்டம் நடத்தினதுக்காக இவரு இப்பிடி எழுதினாரான்னு தெரியல. ஆனா நாம நமது விமர்சனத்துல ஒரு விஷயம் சொல்லியிருந்தம். தலைவரோட நடிப்புதான் இந்த படத்த காப்பதுதுன்னு, இப்ப அதுக்குரிய உண்மைப் பொருள சொல்லவேண்டிய தருணம் வந்திருச்சி. தலைவர் நடிப்புதான் இந்த படத்த நூறு விழுக்காடு அபத்தம்ங்குறசீடிங்) வகையறால இருந்து முப்பது விழுக்காடு சென்சிபெல் என்டேர்டைனர் எங்கிற வகையராவுக்கு சமீபத்துல கொண்டுவந்து வக்கிதுங்குரதுதான் நாம அன்னக்கி சொன்ன அந்த உண்மை. அந்த வகையில பாக்குறப்போ ஒரு நடிகரா நம்ம தலைவர் மேல வைக்கிர அந்த விமர்சனத்த நம்மால ஒத்துக்க முடியாது, (இது பத்தின ஒரு விரிவான பதிவு இங்கே)


இதுக்கும் மேல விக்ரம் சுப்பரா நடிச்சிருக்காரு தேசியவிருது நிச்சயம் அவருக்கு கெடக்கணும் அப்பிடின்னு யாரவது நெனச்சிங்கன்னா நாம ஒங்ககிட்ட ஒரு விசயம் கேக்கணும். ஒங்கள்ள எத்தனைபேருக்கு  ரெண்டு தடவக்கி மேல இந்த படத்துல இருக்கற விக்ரம் - சாரா மட்டும் வாற ப்ளாஷ் பாக் காட்சிகள முழுசா பாக்குற தைரியம் இருக்கு? இன்றைய தேதில கமல் சாருக்கு அப்புறம் விக்ரம்தான் பெஸ்டுன்னு நெனச்சிங்கன்னா ஒங்ககிட்ட ஒரு கேள்வி. ஒங்கள்ள எத்தன பேர் சித்தனுக்காக பிதாமகனும் க்ரிஷ்ணாவுக்காக தெய்வதிருமகளும் பாப்பீங்க?  அதே நேரம் ஒங்கள்ள எத்தன பேர் சக்திக்காக பிதாமகனும் சின்னாவுக்காக பேரழகனும்  பாப்பீங்க? இதுக்கு மேல நீங்களே முடிவு பண்ணிக்கங்க. லேட்டஸ்ட் பின்னிணைப்பு.: மக்களே எல்லாரும் நெட்ல நல்லா தேடி பாருங்க, ஐஆம் சாம்இன் ரெண்டாம் பாகம் எதுனாச்சும் வந்து இருக்குதான்னு? ஏன்னா டைரக்டர் விஜய் இந்த படத்தின் ரெண்டாம் பாகத்தையும் எடுக்க போறாராம் 2013ல.
http://www.filmics.com/tamil/Tamil-Movie-News-in-tamil/director-vijay-said-deivathirumagal-part-ii-soon.html

1 comment:

  1. "இதுக்கும் மேல விக்ரம் சுப்பரா நடிச்சிருக்காரு தேசியவிருது நிச்சயம் அவருக்கு கெடக்கணும் அப்பிடின்னு யாரவது நெனச்சிங்கன்னா நாம ஒங்ககிட்ட ஒரு விசயம் கேக்கணும். ஒங்கள்ள எத்தனைபேருக்கு ரெண்டு தடவக்கி மேல இந்த படத்துல இருக்கற விக்ரம் - சாரா மட்டும் வாற ப்ளாஷ் பாக் காட்சிகள முழுசா பாக்குற தைரியம் இருக்கு? "

    போங்க எனக்கு முதல் தடவையே பார்க்க முடியல இதில இரண்டாவது தடவை

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்!!