Sunday, November 6, 2011

நிர்வாண மிருக நேயமும் இளைய தளபதி பிளாட் ஜெனேரேட்டரும் -: கும்ப்ளிங் கும்ப்ளிங் 6/11/2011


PeTA, PeTA ன்னு ஒரு அமைப்பு இருக்கு. "பீபில் பார் எதிக்கள் ட்ரீட்மென்ட் ஆப் அனிமல்ஸ்" என்பதுதான் அதன் விரிவாக்கம். கொஞ்ச நாளுக்கு முன்னாடி நாய்களை தத்து எடுங்கள்ன்னு நம்ம திரிஷாவ வச்சு இந்தியாவுல ஒரு பெரிய காம்பைன் பண்ணினாங்க. அந்தம்மா மிருக நேயம் நெறஞ்சவங்க, அவங்க வளர்க்குற நாய் கூட தத்து எடுத்ததுதான்-பின்ன அவுங்க நாய பெத்தா எடுக்க முடியும்- அதனால அவங்கதான் இதுக்கு மிகப்பொருத்தமாக இருப்பாங்கன்னு சொன்னாங்க, த்ரிஷா பத்தி கிசு கிசு மட்டுமே எழுதற பலபேர் கூட அந்தம்மாவோட மிருக நேயத்த பாராட்டி கட்டுரயெல்லாம் எழுதினாங்க. என்னடா இது புதுசா இருக்கேன்னு யோசிச்சிட்டே இருந்தேம். அப்புறமாதான் நமக்கு  அவுங்க மிருக வதைக்கு எதிராக எல்லோரையும் வெஜிடேரியன் ஆகும்படி ஒரு காம்பைன் நடத்தின சில படங்கள பார்க்க கிடைச்சுது, அதுக்கப்புறமாதான் அவங்க காம்பைன் திட்டங்கள வாசிச்சா, பாதிக்கு மேல நிர்வாணத்த மையப்படுத்தியது. அது ஏன்னு ஒரு அழகான விளக்கம் குடுத்திருக்காங்க, "இலாப நோக்கமற்ற நிறுவனமான எங்களுக்கு விளம்பரம் செய்வதற்கு கோடி கோடியா பணம் கிடைக்கிறது கஷ்டம், ஆனா இவ்வாறான ஒரு காம்பைன் பண்ணினா இலவச விளம்பரம் கிடைக்கும், நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவுமே தப்பில்ல" அப்புடின்னு இருக்கு அந்த விளக்கம். இப்ப புரியுதா அவங்க எதுக்கு த்ரிஷாவ தெரிவு செஞ்சாங்கன்னு?

ஒஸ்தி படத்துல நடிக்கிற பொண்ணு..எவன்யா டைரக்டர்?
ஒஸ்தி படம் ரிலீஸ் மறுபடியும் தள்ளி போச்சாம், 11/11/11 க்கு வரும்ன்னு எதிர்பார்க்கப்பட்ட படம், அதேபோல  மயக்கம் என்னவும் 18/11/11தான் ரிலீஸ்ன்னு செல்வா சொல்லிட்டாரு. சித்தார்த்தோட தெலுங்கு படமான ஓ மை ப்ரெண்டு மட்டும்தான் இந்த டேட்டுக்கு வரும் போலிருக்கு. சிதார்த்தோட படம் பத்தி ஏன் சொல்றோம்னா அதுல ரெண்டு ஹீரோயின், ஒன்னு ஸ்ருதி, மத்தது ஹன்சிகா. வேலாயுதம் வெற்றிக்கு அப்புறமா ஹன்சிகா நமக்குதான்னு பதிவுலகத்துல ஒரு பெரிய நம்பிக்க துளிர் விட்டு இருந்தாலும் இந்த படம் ஜெயிச்சா மறுபடியும் தெலுங்கு வாலாக்கள் கொத்திக்கிட்டு போயிட வாய்ப்பு இருக்கு. ஏன்னா ஹன்சிகாவோட ஆகஸ்ட் வெளியீடு தெலுங்கு படம் kandireega பெரிய வெற்றி, அதே போல வேலாயுதமும் வெற்றி, அதனால ஒ மை பிரெண்ட் படத்துக்கு லக்கி சார்ம் ஹன்சிகாதான்னு சித்தார்த் சொல்றாரு.  அதுதான் எதுக்கும்னு சொல்லி வச்சுக்கறோம். என்னென்ன பூஜையெல்லாம் பண்ண இருக்கோ இப்பவே ரெடியாகுங்கப்பா.

எனக்கே எனக்கா?
வேலாயுதமும் ஏழாம் அறிவும் அசாசின் கிரீட் அப்புடின்குற ஒரு வீடியோ கேமோட காப்பின்னு ரெண்டு படமும் ரிலீஸ் ஆக முதல்லையே பெரிய கலவரமே நடந்திச்சு. இது என்னடா அநியாயமா இருக்குன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தோம், ஹாலிவூட் காரங்க மட்டும் நம்ம தமிழ் படங்கள காப்பி பண்ணலாம் நம்மாளுக பண்ண கூடாதா? ஏற்கனவே குருவி படத்த காப்பி பண்ணி வந்த ரெண்டு ஹாலிவூட் படங்கள பத்தி நாங்க பதிவு போட்டது எல்லாருக்குமே தெரியும், இப்போ புதுசா இன்னுமொன்னு, அதுதாங்க அந்த ஜானி இங்க்லீஷ் படத்துல நம்ம தளபதியோட சிவகாசி இன்ட்ரோடக்ஸன் சீன அப்புடியே காப்பி அடிச்சிருக்காங்க, தளபதி வெல்டிங் பீம் வச்சு கதவ அவரு ஷேப்புக்கே வெட்டி எடுத்து வெளிய வருவாரே, அதே தான் அங்க ஒரு கார் லேசர் பீம் வச்சு காரோட ஷேப்புக்கே கதவ வெட்டி வெளிய வரும். யாருக்கிட்ட, நாங்கெல்லாம் தளபதி படத்த இம வெட்டாம பாக்குறவங்களாச்சே, நம்மள ஏமாத்த முடியுமா, சூரியா படத்த பாலிவூட்ல ரீமேக் பண்றாங்கன்னா தளபதி படத்த ஹாலிவூட் காரங்க சுடுறாங்க, தளபதி மாஸ சொல்ல வேற எதனாச்சு வேணுமா? நிலைமை இப்புடி இருக்க இந்த அநியாயத்த கொஞ்சம் பாருங்க, இளைய தளபதி பிலாட் ஜெனேரேட்டர், இதுல படத்துல தளபதியோட பெயர், கூட நடிக்கற காமெடியன், தங்கச்சி பெயர் அப்புடி கொஞ்சம் விசயங்கள குடுத்தா படத்தோட கதை வர்ற மாதிரி பண்ணி வச்சிருக்காங்க. என்னா ஒரு எகத்தாளம்.அப்புறம் எதுக்கு ஜெயம் ராஜா,பாபு சிவன், பிரபு தேவா எல்லாம் இருக்காங்க?


கார்த்தி கார்த்தின்னு ஒரு மார்கட்டே இல்லாத தமிழ் சினிமா நடிகர் இருக்காராமே, அவரு எதோ சகுனின்னு ஒரு படம் நடிக்கராராமாம். அந்த படத்துல ஹீரோயின்னா ப்ரனிதா பொண்ணு நடிக்குதுன்னும், காமெடிக்கு தலைவர் சந்தானம் இருக்காருன்னும் உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும், இப்போ என்னடான்னா அந்த படத்துல புதுசா அனுஷ்கா வேற ஒரு முக்கியமான காரெக்டர் பண்றாங்களாம், ஏற்கனவே ராதிகா சரத்குமார், ரோஜா, மும்தாஜ்ன்னு ஒரு பட்டாளமே இருக்கு, போதும் போதாததுக்கு ஸ்ரேயா வேற நடிக்கறதா அரசல் புரசலா ஒரு கத இருக்கு. எதுக்குடா இம்புட்டு பெரிய பட்டாளத்த வச்சு நடிக்க வக்கிராங்கன்னு யோசிச்சிட்டே இருந்தோமா, நேத்துத்தான் அது எதுக்குன்னு வெளங்கிச்சு, ஒன்னுமில்லைங்க, இந்த கார்த்தி பய அவரோட மார்கெட் நிலவரம் தெரியாம தளபதியோட காவலன் படத்துக்கூட சிறுத்தைன்னு எதோ ஒரு படம் ரிலீஸ் பண்ணி அட்ரசே தெரியாம போச்சாமே, இப்பவும் சகுனி பொங்கலுக்குதான் வரும் போல இருக்காம், ஏற்கனவே நண்பன் பொங்கல் ரிலீஸ்னால ரொம்பவே பயந்து போயிதான் இப்படி நட்ச்சத்திர பட்டாளமா போட்டு நிரப்புறதா கோடம்பாக்கத்துல ஒரு பேச்சு இருக்கு. ஆனானப்பட்ட ரஜனிகாந்தே நண்பனுக்கு பயந்து ராணாவ தள்ளிப்போட்டப்போ, கார்த்தி என்ன கார்த்தி... (இத நீங்க நம்பினா முட்டாள், இல்லன்னா சைக்கோ எப்புடி வசதி?)


அழகே உன்பெயர்தான் சமந்தாவோ...


26 comments:

 1. குட் மோர்னிங்!காலை வணக்கம்.ஓ.....இன்னமும் அங்க விடிஞ்சிருக்காதே?சரி பரவால்ல, நல்லாருக்கு.சினிமா பத்தி ரொம்ப நல்லா வரைஞ்சிருக்கீக!அதெப்புடி ஹன்சி மோட்டார் சைக்கிள்ள ஒக்காந்திருக்கு? நசிஞ்சு போவாது???ஹி!ஹி!ஹி!!!!!மொத வட நமக்கே, நமக்கா?

  ReplyDelete
 2. ஹா ஹா ஹா ஹா செமையா கலக்கிட்டீங்க போங்க...!!

  ReplyDelete
 3. ஆஹா சமந்தா சமந்தா அழகு அழகு...!!!

  ReplyDelete
 4. ஓ!இதுக்குதான் அவங்கள தேர்ந்தெடுத்தாங்களா?

  சென்சாரேல்லாம் பண்ணிருக்கீங்க!

  ReplyDelete
 5. கமலா காமேஷ்க்கு அவசரமா மாப்பிளை பார்க்கிறதா நியூஸ் வந்துச்சே, அது ஏன்னு இன்னைக்குத் தெரிஞ்சுக்கிட்டேன், நன்றி.

  ReplyDelete
 6. //ஹன்சிகா நமக்குதான்னு பதிவுலகத்துல ஒரு பெரிய நம்பிக்க துளிர் விட்டு இருந்தாலும் இந்த படம் ஜெயிச்சா மறுபடியும் தெலுங்கு வாலாக்கள் கொத்திக்கிட்டு போயிட வாய்ப்பு இருக்கு.//

  என்னய்யா இது, பீதியைக் கிளப்புறீங்க..ஒரு மனுசனை நிம்மதியா இருக்க விட மாட்டீங்களா?

  ReplyDelete
 7. // என்னென்ன பூஜையெல்லாம் பண்ண இருக்கோ இப்பவே ரெடியாகுங்கப்பா.//

  இதுக்கு என்ன பூஜை செய்ய...ஏதாவது செய்வினை தான் வைக்கணும்.

  ReplyDelete
 8. ////பின்ன அவுங்க நாய பெத்தா எடுக்க முடியும்- /////

  ஹி.ஹி.ஹி.ஹி.ஹி..........

  ReplyDelete
 9. ////
  செங்கோவி said...
  கமலா காமேஷ்க்கு அவசரமா மாப்பிளை பார்க்கிறதா நியூஸ் வந்துச்சே, அது ஏன்னு இன்னைக்குத் தெரிஞ்சுக்கிட்டேன், நன்றி////

  எனக்கும் புரிஞ்சு போச்சி..ஹி.ஹி.ஹி.ஹி...........

  ReplyDelete
 10. ////ஆனானப்பட்ட ரஜனிகாந்தே நண்பனுக்கு பயந்து ராணாவ தள்ளிப்போட்டப்போ, கார்த்தி என்ன கார்த்தி... (இத நீங்க நம்பினா முட்டாள், இல்லன்னா சைக்கோ எப்புடி வசதி?)////

  ஹா.ஹா.ஹா.ஹா..........

  ReplyDelete
 11. அனைத்து தொகுப்புகளும் அருமை

  ReplyDelete
 12. ஒஸ்தி, மயக்கம் என்ன படங்களோடு சேர்ந்து பப்பரப்பா பவர் ஸ்டாரின் ஆனந்த தொல்லையும் ரிலீஸ் ஆகுதாம்... அதைப் பத்தி ஒண்ணுமே சொல்லலை...

  ReplyDelete
 13. ஹா ஹா... உந்த ஹன்சிகா போய் தொலையட்டும் அப்போத்தான் பதிவுலகில் நிம்மதியா நடமாட முடியும்... எவன பார்த்தாலும் ஹன்சி கண்சின்னு கடுபேத்துறாங்க.. இந்த செங்கோவி பாஸ் இருக்கும் வரை அது நடக்காது போல...... அந்தாளு செய்வினை செய்தாவது ஹன்சியை தமிழ் நாட்டில் நிறுத்தீரும்.... அவ்வவ்

  ReplyDelete
 14. சித்தார் படத்தில் மறுபடியும் சுருதியா?? அப்போ ஏன் ஸ்ருதிய விட்டுட்டு அவரு ஹன்சி பற்றி பேசுறார்.... அழகு பிகரை விட்டுட்டு அட்டு பிகர் பற்றி பேசலாமோ....

  ReplyDelete
 15. கலக்கல் தொகுப்புக்கள் பாஸ்.

  ReplyDelete
 16. ஓட்டு போட மறந்து போய் வந்துட்டேன் .
  .உன் பொணத்த ரேவேர்ஸ்ல தாண்டி போய் ஓட்டு போடலாமா

  ReplyDelete
 17. கலக்கல் நண்பா

  ReplyDelete
 18. வணக்கம் அண்ணன்களா,
  இன்னைக்குத் தான் உங்க பதிவினைப் படிக்க டைம் கிடைச்சது,
  கோவிசுக்க வேணாம்

  திரிஷாவை வைத்து விளம்பரம் ரசித்தேன்,

  ஒஸ்தி பட ரிலீசும் எம்மையெல்லாம் விட்டு ஓடுப் போகப் போகும் ஹன்சியின் நிலையும் கவலையாக இருக்கு.


  அப்புறம் மிஸ்டர் பீனின் ஜானி இங்கிலிஷ் நம்பவே முடியலைப்பா.
  விஜய் ரசிகர்களுக்கு இது கூடவா தெரியாது?

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  கார்த்தி பொங்கலுக்கு விஜய் கூட போட்டியா வந்தாச்சும் தன் மார்க்கட்டை நிறுத்தலாம் என்று பார்க்கிறார்
  விடுங்க பாஸ்!

  சுவையான தொகுப்பு!

  ReplyDelete
 19. ஏன்?இப்பிடில்லாம்?முடியல!

  ReplyDelete
 20. 11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 21. செம கலக்கல்...அருமை...-:)

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்!!