Tuesday, September 13, 2011

பதிவுலக ரவுண்டப் - ஒரு அட்டகாசமான பதிவு.

தலைவர் சந்தானத்துக்கு ஃபான் கிளாப் தொடங்கலாம்னு பதிவுலகத்துல  காலடி எடுத்து வச்சு, ஒரு வாசகனாகி இந்த ரெண்டு மாசத்துல நாங்க புரிஞ்சுக்கிட்டது, தெரிஞ்சுகிட்டது அப்புறம்  வாங்கிய பல்புகளின் தொகுப்பு இது.

தலைவர் ரசிகர்கள்னு சொல்லிபுட்டு தலைவர் படம் இல்லாம ஒரு பதிவா?
எதோ நம்ம பாட்டுக்கு தலைவர பத்தியும் சினிமா பத்தியும் பதிவு எழுதிட்டிருந்தப்போ ஒரு பதிவுக்கு கொஞ்சம் கமெண்டு வந்திச்சு, நம்மள மதிச்சும் நாலுபேரு கமெண்டு போடுறாங்களேன்னு ஒரு மிதப்புலையே இவங்கல்லாம் யாருன்னு பாப்பமேன்னு ஆரம்பிச்சதுதான் பதிவுன்னா என்னா, பதிவர்னா என்னன்னு புரியவச்சிது. நமக்கும் எதாச்சி பொறுப்பு இருக்கும்போலன்னு சிந்திக்கவச்சது.
இம்புட்டு பெரியமனுஷனுங்கெல்லாம் நம்ம ப்ளாகுக்கு வந்திருக்காங்களே, நன்றி, தொடர்ந்தும் வாங்கன்னு இவங்க காமெண்டுக்கெல்லாம் பதில் போட்டது எம்புட்டு திமிர்தனம்னு, அசிங்கப்பட்டான் ஆட்டோகாரன் ரேஞ்சுக்கு ஷேம் ஷேம் பப்பி ஷேமா போச்சி.

எங்க நல்லநேரம் எங்களுக்கு டியுஷன் எடுக்கற மாதிரியே, நெறைய பதிவுகள் வந்திச்சி,

கமெண்ட் போடுவது எப்படி? (இது இல்லனா இன்னமும் நன்றி தொடர்ந்தும் வாங்கத்தான்),
யோக்கிய பதிவர்களை நசுக்கும் அயோக்கிய பதிவர்கள் (இத படிச்சதுக்கப்புறம் பிரபல பதிவர்ங்குற வார்த்தையே என்னமோ கெட்ட வர்தயாதான் தோணுது)
இந்த பதிவர்கள் தொல்ல தாங்கமுடியடா சாமி (இத வாசிச்சிருக்கலனா நாங்களும் நெறைய பேருக்கு ஈ மெயில் அனுப்பியிருப்பம்),

இப்பிடி எக்கச்சக்கம், இம்புட்டு மேட்டர் இருக்கா பதிவுலகத்துலன்னு மூக்கு வேர்த்துடுச்சு. அப்புறமாதான் இன்னுமொரு விஷயம் கண்ண குத்திச்சி, அது என்னன்னா.... 
ஒருத்தனுக்கு எத்தன பேர்டா ஆப்பு வைப்பீங்க, கூகுலுமா. 
சமீபத்துல முகப்புத்தகத்த பாத்தா, Do not see idiots movie ன்னு கூகிள் ட்ரான்ஸ்லேடர்ல அழுத்தி பாருங்க செம காமெடின்னு போட்டிருந்திச்சு. நாம அழுத்தி பாத்தா "idiots படம் பாக்கதீங்கன்னு" சொல்லிச்சு, இதுல என்னடா காமெடின்னு யோசிச்சிட்டே இருந்தோமா அப்புறமாதான் தெரிஞ்சிச்சு, idiots ன்னா அது என்னமோ ***** ன்னு மொழிபெயர்த்திருக்கு, இதுல கொடும என்னனா கூகிள், பதிவர்களான நம்மகிட்ட இருந்துதான் தமிழ் கத்துக்குதமே (நாம எல்லாருமா சேந்து ஏன் ஒரு கட்டணம் வசூலிக்க கூடாது?),  நாம போடுற மொக்க எப்பிடியெல்லாம் பாதிக்குதுன்னு தெரிஞ்சுகிட்ட்டதுக்கு அப்புறம்தான் இனிமே தளபதிய கலாய்கிரதில்லன்னு ஒரு பொறுப்புவாய்ந்த முடிவு எடுத்திருக்கோம்.

என்ன சாந்தமான ஒரு முகம் இந்த ஆள எதுக்கு வம்புக்கு இழுக்கறாங்க? சார் நாங்க சமாதானம் சார். 
அதவிடுங்க சார், கூகுளுக்கே தமிழ் கத்துக்குடுக்கற நமக்கே சில இணையத்தளங்கள் தமிழ் கத்துக்குடுக்கும் பாருங்க, "திறமை காட்டுதல்", "தாராளம்", "பெரிய மனசு" ஐயோ ஐயோ ஐயோ, இவங்ககிட்ட தமிழ் கத்துகிட்டா கூகிளோட நெலம என்ன ஆகும். (இதுதான் ஆணாதிக்க தமிழோ?) யாராச்சி சீரியஸா ஒரு நல்ல பெண்மணிய பத்தி அவங்களோட பெரியமனசு, தாராளமா நடந்துகிட்டாங்க, வேலையில அப்பிடியொரு திறம காட்டி உயர் அதிகாரிகள திருப்திப்படுத்தி முன்னுக்கு வந்தாங்கன்னு எழுதினா அத கூகுள்ல ட்ரான்ஸ்லேட் பண்ணி வாசிக்கற வெள்ளைக்காரன் எப்புடி புரிஞ்சுக்குவான்? #டவுட்டு? (அதென்ன ஆணாதிக்க தமிழ்னு யோசிக்கறவங்க இதே வசனத்த பெண்மணிக்கு பதில் ஆண்மகன்னு போட்டு வாசிச்சு பாருங்க புரியும்)

ஒரு ஐஸ் கரீம கூட சிந்தாம சாப்பிடத்தெரியல சின்ன பொண்ணுய்யா, இந்தப்பொண்ணபோய் ...
ஆண் பதிவரா இருந்தா எதாச்சும் ஒரு நடிகைக்கு வெறித்தனமா நூலு விடனுமாமே , நாங்களும் யாரடா பிடிக்கலாம்னு தீவிரமா யோசிச்சு ஒருத்தருக்கு காஜல் அகர்வாலும் அடுத்தவருக்கு சமந்தாவும்னு முடிவுபண்ணா (இப்ப புரிஞ்சிருக்குமே நாங்க ஏன் பிரிஞ்சுட்டோம்னு) , இந்த காஜல் பொண்ணு பண்ணின கூத்துனால ஒருத்தருக்கு செம பல்பு.  இது கிக்கான பிகருன்னு பாத்தா மக்கான பிகரா இருக்கேன்னு இன்னிவரைக்கும் ஒரே புலம்பல். நேத்து வந்த பியாவுல இருந்து நாளக்கி வரப்போற சரண்யா வரைக்கும் செம டிமாண்ட்ல இருக்கு, யாராச்சும் இந்த பிரனீதா பொண்ணாவது ப்ரீயா இருக்கான்னு செக் பண்ணி சொல்லுங்கப்பா.

"அயோக்கியப்பதிவர்கள்" (அப்பிடின்னா என்னா?) விளம்பரத்துக்காக நடிகைகளோட போட்டோவ  பதிவுல போடுறாங்கன்னு ஒரு குற்றச்சாட்டு, அப்புறமாதான் யோசிச்சு பார்த்தோம், இதுவரைக்கும் நாங்க ஒரு நடிகையோட போட்டோ கூட போடலியே, ஒரு வேள நம்ம ப்ளாகுக்கு வர்றவங்க நம்மள ஆணாதிக்கவாதிகள்னு நெனச்சிட்டா, அதுதான் இளையதளபதியோட சமாதானமான கையோட இலியானா படத்த போட்டு நாங்க ஆணாதிக்கவாதிகள் இல்லன்னு அடிச்சு சொல்லிட்டம், அத நிரூபிக்கறதுக்காக இனிமே பதிவுகள்ள நல்ல படங்களா போடலாம்னு இருக்கம்.
இது பிரனீதா இல்லீங், தமிழ் படத்துல நடிச்ச பொண்ணு, தேறுமான்னு தெரியல அதாங்..
கடைசியா ஒரு மேட்டர், சினிமா பத்தி மட்டுமே பதிவு எழுதறோமே, கொஞ்சம் வித்தியாசமா புதுசா எதாச்சி ட்ரை பன்னுவமேன்னு ஒரு மூணு நாலு ஐடியா புடிச்சோம், அப்புறம் ஒவ்வொரு ப்ளாக்கா   வாசிக்கும்போதுதான் புரிஞ்சிச்சு நம்ம புடிச்ச ஐடியா எதுவுமே புது சரக்கில்ல, ஆல்ரெடி நெறயப்பேர் அதெல்லாம் பண்ணிகிட்டிருக்காங்கன்னு, இனிமே புதுசா யோசிக்க எதாச்சும் மிச்சம் மீதி இருக்கான்னு தெரியல, என்ன வாழ்கடா இது.

ஆங், இத மறந்திட கூடதுப்பு, நம்ம பதிவுகளுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து பின்னூட்டம் போடும் அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி.

சத்திய பிரமாணம்: இனிமேல் நாங்கள் பதிவுலக விதிக்கு கட்டுப்பட்டு நடப்போம் எனவும், ஜனநாயக கடமையினை தவறாது நிறைவேற்றுவோம் எனவும், குறைந்தபட்ச ஒழுக்கம் கட்டுப்பாடாவது பேணி நடப்போம் எனவும், தனிமனித தாக்குதல், திருட்டுப்பதிவு, சம்பந்தமில்லாத தலைப்பில் பதிவு, விளம்பரம் போன்றவற்றில் இருந்து இயன்றவரை தவிர்ந்து நடப்போம் எனவும், இயன்றவரை தமிழ் கொலை, எழுத்துக்கொலை போன்றவற்றில் ஈடுபடாதிருப்போம் எனவும், சுய லாபம் தேடி பிரபலங்கள் பெயரை கெடுக்காமல் நடந்துகொள்வோம் எனவும், மொக்க போட்டாலும் மொக்க மொக்க போடாமல் இருப்போம் எனவும் தலைவர் சந்தானம் சாட்சியாக உறுதி கூறுகிறோம். (அப்பிடீன்ன நீங்க பதிவு எழுதறத நிறுத்த போறீங்களான்னு கேக்குறீங்களே, இது நியாயமா?)
சத்திய பிரமாணம் எடுத்துக்கிட்டா உடனே செயல் படித்திடனும். 
முக்கியமான டிஸ்கி: நல்லதம்பின்னு பேரவச்சிக்கிட்டு அட்டகாசம்பண்ணலாம்னு பாத்தா ரொம்ப கொடும சார், அதே பேருல ஒருத்தர் ஏற்கனவே சலூன் ஆரம்பிச்சு இப்ப எந்த பதிவுமே போடாம  இருக்கார். அதனால இன்னில இருந்து நல்லதம்பிங்குற பேர Dr. Butti paul ன்னு மாத்திக்குறேன் (இது சமீபத்துல வாங்கின பல்பு) . பேரையும் புடிச்சிகிராய்ங்க , பதிவும் போட மாட்டாய்ங்க, தெரியாமத்தான் கேக்குறேன் இவிங்கெல்லாம் அவ்ளோ பெரிய அப்படாக்கரா?


டிஸ்கி 1: இந்தப்பதிவுக்கு "விஜய்யால் கூகுளுக்கு வந்த சோதனை" அப்பிடின்னு தலைப்பு வைக்கிறதாதான் பிளான், அப்புறம் யாராச்சும் அதுக்கு தனியா ஒரு பதிவு போட்டு கும்மிடுவாங்களோன்னு  தலைப்ப மாத்தி வச்சிட்டோம். ஆமா இந்த சம்பந்தமே இல்லாம தலைப்பு வக்கிரத யாரு ஆரம்பிச்சு வச்சா?

டிஸ்கி 2: கும்முவதாக இருந்தால் தாராளமா கும்மவும், நிறை குறைகளை சுட்டிக்காட்டி மெருகேற்றுவதா இருந்தா அதையும் பண்ணுங்க, இதெல்லாம் ஒருத்தருக்கு ஒருத்தர் பண்ணிக்கரதுதனே. ரொம்ப நன்றிங்க. 

45 comments:

 1. வெல்கம் நண்பர்களே... இன்னொருத்தர் பேரு வச்சா என்ன அவருதான் அவர் வலைப்பூவிற்கு சோறு வைக்கலையே... நீங்களும் அதே பேரை வச்சிக்கோங்க...

  ReplyDelete
 2. @Philosophy Prabhakaran

  //இன்னொருத்தர் பேரு வச்சா என்ன அவருதான் அவர் வலைப்பூவிற்கு சோறு வைக்கலையே... நீங்களும் அதே பேரை வச்சிக்கோங்க...//

  நன்றி நண்பா... இதுவும் நல்லாத்தான் இருக்கு, ஆனா நாளக்கி அவரு நம்ம கடையில பங்கு கேட்டு கோர்டுக்கு போயிட்டாருன்னா, ஏற்கனவே தலைவருக்கும் வக்கீல்களுக்கும்வாய்கா தகராறு வேற.

  ReplyDelete
 3. ///// நேத்து வந்த பியாவுல இருந்து நாளக்கி வரப்போற சரண்யா வரைக்கும் செம டிமாண்ட்//////
  என்னது எங்க தலைவி சரன்யா இனித்தான் வராங்களா இதை வண்மையாக கண்டிக்கின்றேன்...அவங்க ஆல் ரெடி வந்துட்டாங்க.....வந்து என் ப்லாக்க பாரும்யா

  ReplyDelete
 4. ////தலைவர் சந்தானத்துக்கு ஃபான் கிளாப் தொடங்கலாம்னு பதிவுலகத்துல காலடி எடுத்து வச்சு, ஒரு வாசகனாகி இந்த ரெண்டு மாசத்துல நாங்க புரிஞ்சுக்கிட்டது, தெரிஞ்சுகிட்டது அப்புறம் வாங்கிய பல்புகளின் தொகுப்பு இது./////

  நீங்க ஹன்சிகாவுக்கோ,இல்லை.அமலா பாலுக்கோ,இல்லை அஞ்சலிகோ இன்னும் பல நடிகைகளுக்கோ ரசிகர் மன்றன் என்று தொடங்கி பதிவு போட்டு இருந்தீங்கன்னா இன்னேரம் பதிவுலகில் ஒங்க ரேஞ்சே வேற...சாராசரியா ஒங்க ஒவ்வொறு பதிவுக்கும் 150,200,கமண்ட் வந்து குவிந்து இருக்கும்..ஹி.ஹி.ஹி.ஹி.ஹி

  ReplyDelete
 5. அப்பறம் சந்தானத்தி எனக்கும் ரொம்ம புடிக்கும் நண்பர்களே தொடர்ந்து கலக்குங்க...வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. // தமிழ்வாசி - Prakash said...
  பல்பு இவ்ளோ சீப்பா?//

  காஸ்ட்லி பல்பு பத்தியெல்லாம் சொல்ல முடியாது நண்பரே..

  ReplyDelete
 7. ///K.s.s.Rajh said...
  ///// நேத்து வந்த பியாவுல இருந்து நாளக்கி வரப்போற சரண்யா வரைக்கும் செம டிமாண்ட்//////
  என்னது எங்க தலைவி சரன்யா இனித்தான் வராங்களா இதை வண்மையாக கண்டிக்கின்றேன்...அவங்க ஆல் ரெடி வந்துட்டாங்க.....வந்து என் ப்லாக்க பாரும்யா///

  ஆங்.. சரண்யாவ உங்களுக்கே ஒதுக்கி வச்சிட்டோம் தலைவரே.. அதுக்கு இனிமே யாருமே போட்டியாக வர முடியாது..

  ReplyDelete
 8. //K.s.s.Rajh said...
  ////தலைவர் சந்தானத்துக்கு ஃபான் கிளாப் தொடங்கலாம்னு பதிவுலகத்துல காலடி எடுத்து வச்சு, ஒரு வாசகனாகி இந்த ரெண்டு மாசத்துல நாங்க புரிஞ்சுக்கிட்டது, தெரிஞ்சுகிட்டது அப்புறம் வாங்கிய பல்புகளின் தொகுப்பு இது./////

  நீங்க ஹன்சிகாவுக்கோ,இல்லை.அமலா பாலுக்கோ,இல்லை அஞ்சலிகோ இன்னும் பல நடிகைகளுக்கோ ரசிகர் மன்றன் என்று தொடங்கி பதிவு போட்டு இருந்தீங்கன்னா இன்னேரம் பதிவுலகில் ஒங்க ரேஞ்சே வேற...சாராசரியா ஒங்க ஒவ்வொறு பதிவுக்கும் 150,200,கமண்ட் வந்து குவிந்து இருக்கும்..ஹி.ஹி.ஹி.ஹி.ஹி//

  இத நாங்க வன்மையா கண்டிக்கிறோம், தலைவர் தலைவர்தான்...
  (இதெல்லாம் இப்பிடி பப்ளிக்கா சொல்லரீங்களே, தனியா சொன்னீங்கன்னா நாங்க வேற பெயர்ல வேற ப்ளாக்காச்சி தொடங்கியிருப்பம்)

  ReplyDelete
 9. வணக்கம் நண்பா,
  இருங்க படிச்சிட்டு வாரேன்

  ReplyDelete
 10. தலைவர் சந்தானத்துக்கு ஃபான் கிளாப் தொடங்கலாம்னு பதிவுலகத்துல காலடி எடுத்து வச்சு, ஒரு வாசகனாகி இந்த ரெண்டு மாசத்துல நாங்க புரிஞ்சுக்கிட்டது, தெரிஞ்சுகிட்டது அப்புறம் வாங்கிய பல்புகளின் தொகுப்பு இது.//

  அவ்......அப்போ செம ஜாலியாக இருக்கும் என்று நெனைக்கிறேன்.

  ReplyDelete
 11. இப்பிடி எக்கச்சக்கம், இம்புட்டு மேட்டர் இருக்கா பதிவுலகத்துலன்னு மூக்கு வேர்த்துடுச்சு. அப்புறமாதான் இன்னுமொரு விஷயம் கண்ண குத்திச்சி, அது என்னன்னா....//

  போங்க பாஸ்...இதை விட இன்னும் பல மேட்டர்கள் வெளித் தெரியாமல் இருக்கு. இணையம் என்பது குரங்கின் கையில் பூமாலை போல எம் தமிழர்களின் கையில் கிடைத்திருக்கிறது என்று நினைக்கின்றேன்.

  யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் எழுதுவார்கள், எவரைப் பற்றியும் திட்டி எழுதுவார்கள் என்பதற்கு நிறையப் பதிவுகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் நீங்க மிஸ்ட் பண்ணிட்டீங்க பாஸ்.

  ReplyDelete
 12. (அதென்ன ஆணாதிக்க தமிழ்னு யோசிக்கறவங்க இதே வசனத்த பெண்மணிக்கு பதில் ஆண்மகன்னு போட்டு வாசிச்சு பாருங்க புரியும்)//

  அவ்...உட்கார்ந்து யோசிப்பீங்களோ தலைவரே...

  ReplyDelete
 13. அப்புறமாதான் யோசிச்சு பார்த்தோம், இதுவரைக்கும் நாங்க ஒரு நடிகையோட போட்டோ கூட போடலியே,//

  அவ்....இப்போ போட்டிருக்கிறீங்களே...அதுவே போதாதா...
  அவ்..............

  ReplyDelete
 14. செம காமெடியான பதிவு..

  கும்முவோருக்கு நீங்க தலைப்பில் விஜயைப் பற்றிப் போட வேண்டிய அவசியம் இல்லை, பதிவில் போட்டாலே பின்னிப் பெடலெடுத்திடுவாங்க பாஸ்.

  ReplyDelete
 15. //நிரூபன் said...
  வணக்கம் நண்பா,
  இருங்க படிச்சிட்டு வாரேன்//

  வணக்கம் நண்பரே, நலமா?

  ReplyDelete
 16. //நிரூபன் said...
  இப்பிடி எக்கச்சக்கம், இம்புட்டு மேட்டர் இருக்கா பதிவுலகத்துலன்னு மூக்கு வேர்த்துடுச்சு. அப்புறமாதான் இன்னுமொரு விஷயம் கண்ண குத்திச்சி, அது என்னன்னா....//

  போங்க பாஸ்...இதை விட இன்னும் பல மேட்டர்கள் வெளித் தெரியாமல் இருக்கு. இணையம் என்பது குரங்கின் கையில் பூமாலை போல எம் தமிழர்களின் கையில் கிடைத்திருக்கிறது என்று நினைக்கின்றேன்.

  யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் எழுதுவார்கள், எவரைப் பற்றியும் திட்டி எழுதுவார்கள் என்பதற்கு நிறையப் பதிவுகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் நீங்க மிஸ்ட் பண்ணிட்டீங்க பாஸ்.//

  இப்பவே கண்ணக்கட்டுதே, இதுக்கு மேலயுமா, அப்புறம் வயித்தகலக்குதுன்னு கடைய காலிபண்ணிட்டு எஸ்கேப் ஆகிடவேண்டியதுதான்...

  ReplyDelete
 17. //நிரூபன் said...
  (அதென்ன ஆணாதிக்க தமிழ்னு யோசிக்கறவங்க இதே வசனத்த பெண்மணிக்கு பதில் ஆண்மகன்னு போட்டு வாசிச்சு பாருங்க புரியும்)//

  அவ்...உட்கார்ந்து யோசிப்பீங்களோ தலைவரே...//

  இல்ல சார், படுத்துட்டு யோசிப்போம்...

  ReplyDelete
 18. //நிரூபன் said...
  அப்புறமாதான் யோசிச்சு பார்த்தோம், இதுவரைக்கும் நாங்க ஒரு நடிகையோட போட்டோ கூட போடலியே,//

  அவ்....இப்போ போட்டிருக்கிறீங்களே...அதுவே போதாதா...
  அவ்.............//

  இது என்னமோ பெண்கள் வாரமாமே அதுதான்...

  ReplyDelete
 19. /////// தனிமனித தாக்குதல், திருட்டுப்பதிவு, சம்பந்தமில்லாத தலைப்பில் பதிவு, விளம்பரம் போன்றவற்றில் இருந்து இயன்றவரை தவிர்ந்து நடப்போம் எனவும், இயன்றவரை தமிழ் கொலை, எழுத்துக்கொலை போன்றவற்றில் ஈடுபடாதிருப்போம் எனவும், சுய லாபம் தேடி பிரபலங்கள் பெயரை கெடுக்காமல் நடந்துகொள்வோம் எனவும், மொக்க போட்டாலும் மொக்க மொக்க போடாமல் இருப்போம் எனவும் தலைவர் சந்தானம் சாட்சியாக உறுதி கூறுகிறோம்.///////

  உங்க கடமை உணர்ச்சி கண்ணு கலங்க வைக்குது.......

  ReplyDelete
 20. //நிரூபன் said...
  செம காமெடியான பதிவு..

  கும்முவோருக்கு நீங்க தலைப்பில் விஜயைப் பற்றிப் போட வேண்டிய அவசியம் இல்லை, பதிவில் போட்டாலே பின்னிப் பெடலெடுத்திடுவாங்க பாஸ்.//

  விஜய் மாஸ்ங்குறது இதுதானோ?

  ReplyDelete
 21. ////////நாம போடுற மொக்க எப்பிடியெல்லாம் பாதிக்குதுன்னு தெரிஞ்சுகிட்ட்டதுக்கு அப்புறம்தான் இனிமே தளபதிய கலாய்கிரதில்லன்னு ஒரு பொறுப்புவாய்ந்த முடிவு எடுத்திருக்கோம்.///////

  நம்ம டாகுடர் பதிவுகள்லாம் படிச்சிருக்கீங்களா?

  ReplyDelete
 22. ////////கடைசியா ஒரு மேட்டர், சினிமா பத்தி மட்டுமே பதிவு எழுதறோமே, கொஞ்சம் வித்தியாசமா புதுசா எதாச்சி ட்ரை பன்னுவமேன்னு ஒரு மூணு நாலு ஐடியா புடிச்சோம், அப்புறம் ஒவ்வொரு ப்ளாக்கா வாசிக்கும்போதுதான் புரிஞ்சிச்சு நம்ம புடிச்ச ஐடியா எதுவுமே புது சரக்கில்ல, ஆல்ரெடி நெறயப்பேர் அதெல்லாம் பண்ணிகிட்டிருக்காங்கன்னு, இனிமே புதுசா யோசிக்க எதாச்சும் மிச்சம் மீதி இருக்கான்னு தெரியல, என்ன வாழ்கடா இது.//////

  அப்படியெல்லாம் பாத்தா சாப்புட கூட முடியாது, நீங்க பாட்டுக்கு எழுதுங்கப்பு.......

  ReplyDelete
 23. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////////நாம போடுற மொக்க எப்பிடியெல்லாம் பாதிக்குதுன்னு தெரிஞ்சுகிட்ட்டதுக்கு அப்புறம்தான் இனிமே தளபதிய கலாய்கிரதில்லன்னு ஒரு பொறுப்புவாய்ந்த முடிவு எடுத்திருக்கோம்.///////

  நம்ம டாகுடர் பதிவுகள்லாம் படிச்சிருக்கீங்களா?//

  அண்ணே வணக்கமுண்ணே,
  கவுண்டருக்கு டாக்குடர் கதைசொன்ன பதிவு படிச்சோம், செம ரகள...

  ReplyDelete
 24. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  என்ன கொடும சார் இது....?//

  ஏது சார்?

  ReplyDelete
 25. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////// தனிமனித தாக்குதல், திருட்டுப்பதிவு, சம்பந்தமில்லாத தலைப்பில் பதிவு, விளம்பரம் போன்றவற்றில் இருந்து இயன்றவரை தவிர்ந்து நடப்போம் எனவும், இயன்றவரை தமிழ் கொலை, எழுத்துக்கொலை போன்றவற்றில் ஈடுபடாதிருப்போம் எனவும், சுய லாபம் தேடி பிரபலங்கள் பெயரை கெடுக்காமல் நடந்துகொள்வோம் எனவும், மொக்க போட்டாலும் மொக்க மொக்க போடாமல் இருப்போம் எனவும் தலைவர் சந்தானம் சாட்சியாக உறுதி கூறுகிறோம்.///////

  உங்க கடமை உணர்ச்சி கண்ணு கலங்க வைக்குது.......//

  நன்றி சார், ஒரு தமிழன் என்னக்கும் கடமை உணர்ச்சி தவறக்கூடாதுன்னு தலைவர் சொல்லியிருக்காரு.

  ReplyDelete
 26. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////////கடைசியா ஒரு மேட்டர், சினிமா பத்தி மட்டுமே பதிவு எழுதறோமே, கொஞ்சம் வித்தியாசமா புதுசா எதாச்சி ட்ரை பன்னுவமேன்னு ஒரு மூணு நாலு ஐடியா புடிச்சோம், அப்புறம் ஒவ்வொரு ப்ளாக்கா வாசிக்கும்போதுதான் புரிஞ்சிச்சு நம்ம புடிச்ச ஐடியா எதுவுமே புது சரக்கில்ல, ஆல்ரெடி நெறயப்பேர் அதெல்லாம் பண்ணிகிட்டிருக்காங்கன்னு, இனிமே புதுசா யோசிக்க எதாச்சும் மிச்சம் மீதி இருக்கான்னு தெரியல, என்ன வாழ்கடா இது.//////

  அப்படியெல்லாம் பாத்தா சாப்புட கூட முடியாது, நீங்க பாட்டுக்கு எழுதுங்கப்பு.......//

  அண்ணனே அனுமதி குடுத்துட்டாரு.... இனிமே உங்க ஐடியாவ உல்டா பண்ணினா கோவிச்சுக்க மாட்டீங்கல்ல?

  ReplyDelete
 27. நீங்க உல்டா பண்ணாம எழுதுனாலும் கோவிச்சுக மாட்டேன்......... ஜமாய்ங்க....... நம்ம ஆதரவு உங்களுக்கு எப்பவும் உண்டு!

  ReplyDelete
 28. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  நீங்க உல்டா பண்ணாம எழுதுனாலும் கோவிச்சுக மாட்டேன்......... ஜமாய்ங்க....... நம்ம ஆதரவு உங்களுக்கு எப்பவும் உண்டு!//

  ஆவ், கோடி நன்றிகள். ஆதரவுக்கும் அனுமதிக்கும்...

  ReplyDelete
 29. வணக்கம் ஃபேன்ஸ் சார்! கும்புடுறேனுங்க! இனிய செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்!

  அப்புறம் வலையுலகம் பத்தி ரொம்ப அருமையாவே எழுதியிருக்கீங்க! நீங்க எடுத்துக்கிட்ட சத்தியமும் அருமை!

  ReplyDelete
 30. // ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
  வணக்கம் ஃபேன்ஸ் சார்! கும்புடுறேனுங்க! இனிய செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்!

  அப்புறம் வலையுலகம் பத்தி ரொம்ப அருமையாவே எழுதியிருக்கீங்க! நீங்க எடுத்துக்கிட்ட சத்தியமும் அருமை!//

  வாங்க மணி சார், கும்புடுறேனுங்க, நன்றி காமென்ட்டுக்கு. சத்தியத்த மீறாமலிருப்பது எப்பிடின்னு ஒரு பதிவு போடுங்களேன், படிச்சாவது சத்தியத்த காப்பாத்த ட்ரை பண்றோம்...

  ReplyDelete
 31. காமெடியான பதிவு.

  ReplyDelete
 32. //மாலதி said...
  காமெடியான பதிவு.//

  நன்றி சகோ... நாங்க ரொம்பவே பீல் பண்ணி எழுதின பதிவுக்கு இப்பிடி ஒரு காமென்ட் போட்டிருக்கீங்களே அப்ப நாங்க முழு மொக்கன்னே முடிவா?

  ReplyDelete
 33. இந்த பதிவு சீரியஸா.....காமெடியா......மொக்கையா????

  நீங்க நல்லவரா????....கெட்டவரா???????

  ஐயோ...இன்னைக்கு யாரோட பதிவுக்கு போனாலும் பொடிவச்சே எழுதிருக்காங்களே...என்னை மாதிரி் சின்ன பாப்பாக்களுக்கு ஒண்ணுமே புரியலீங்க...

  ReplyDelete
 34. @கடம்பவன குயில்
  //இந்த பதிவு சீரியஸா.....காமெடியா......மொக்கையா????
  நீங்க நல்லவரா????....கெட்டவரா???????///

  ஆஆஆஹாஆ.... தெரிலையே!!!

  //ஐயோ...இன்னைக்கு யாரோட பதிவுக்கு போனாலும் பொடிவச்சே எழுதிருக்காங்களே...என்னை மாதிரி் சின்ன பாப்பாக்களுக்கு ஒண்ணுமே புரியலீங்க..//
  விடுங்க சகோ,ஒவ்வொரு மனுஷனுக்கு ஒவ்வொரு பீலிங்க்ஸ்...

  ReplyDelete
 35. இது சீரியசா, காமெடியான்னு யாருக்கும் புரியக்கூடாது-ன்னு எழுதறது நான் மட்டும் தான்னு நினைச்சேன்..பரவாயில்லை, இங்கயும் ஆள் இருக்கு..கலக்குங்கய்யா!

  ReplyDelete
 36. //செங்கோவி said... இது சீரியசா, காமெடியான்னு யாருக்கும் புரியக்கூடாது-ன்னு எழுதறது நான் மட்டும் தான்னு நினைச்சேன்..பரவாயில்லை, இங்கயும் ஆள் இருக்கு..கலக்குங்கய்யா!//

  நன்றிங்கய்யா!!! எல்லாம் உங்க புண்ணியத்தில்தான். தமிழ் காமேண்டுப்பொட்டிக்கு நன்றி....

  ReplyDelete
 37. >>>>டிஸ்கி 1: இந்தப்பதிவுக்கு "விஜய்யால் கூகுளுக்கு வந்த சோதனை" அப்பிடின்னு தலைப்பு வைக்கிறதாதான் பிளான், அப்புறம் யாராச்சும் அதுக்கு தனியா ஒரு பதிவு போட்டு கும்மிடுவாங்களோன்னு தலைப்ப மாத்தி வச்சிட்டோம். ஆமா இந்த சம்பந்தமே இல்லாம தலைப்பு வக்கிரத யாரு ஆரம்பிச்சு வச்சா?


  hi hi ஹி ஹி அது நான் தான்

  ReplyDelete
 38. >>கடைசியா ஒரு மேட்டர்,

  எங்கே? எங்கே?

  ReplyDelete
 39. இது சாதா பதிவா? உள்குத்துப்பதிவா?

  ReplyDelete
 40. // சி.பி.செந்தில்குமார் said...
  டிஸ்கி 1: இந்தப்பதிவுக்கு "விஜய்யால் கூகுளுக்கு வந்த சோதனை" அப்பிடின்னு தலைப்பு வைக்கிறதாதான் பிளான், அப்புறம் யாராச்சும் அதுக்கு தனியா ஒரு பதிவு போட்டு கும்மிடுவாங்களோன்னு தலைப்ப மாத்தி வச்சிட்டோம். ஆமா இந்த சம்பந்தமே இல்லாம தலைப்பு வக்கிரத யாரு ஆரம்பிச்சு வச்சா?


  hi hi ஹி ஹி அது நான் தான்//

  ஆகா, நீங்களா அது... இருந்தாலும் ஒங்க நேர்மை எங்களுக்கு புடிச்சிருக்கு சார்.

  ReplyDelete
 41. // சி.பி.செந்தில்குமார் said...
  >>கடைசியா ஒரு மேட்டர்,

  எங்கே? எங்கே?//

  சமந்தா படம் போட்டேருக்கோமே, பாக்கலியா?

  ReplyDelete
 42. //சி.பி.செந்தில்குமார் said...
  இது சாதா பதிவா? உள்குத்துப்பதிவா?//

  சாதா பதிவுதான் சார், சந்தேகம்னா தொடர்சில வார்னிங் போட்டிருக்கோம் பாத்துக்கங்க..

  ReplyDelete
 43. அதவிடுங்க சார், கூகுளுக்கே தமிழ் கத்துக்குடுக்கற நமக்கே சில இணையத்தளங்கள் தமிழ் கத்துக்குடுக்கும் பாருங்க, "திறமை காட்டுதல்", "தாராளம்", "பெரிய மனசு" ஐயோ ஐயோ ஐயோ, இவங்ககிட்ட தமிழ் கத்துகிட்டா கூகிளோட நெலம என்ன ஆகும். (இதுதான் ஆணாதிக்க தமிழோ?)

  அட இப்படியெல்லாம் நடக்குதா ....!!! அடுத்த பதிவையும் பார்ப்பம் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .......

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்!!