Friday, September 30, 2011

காதல்னா என்ன: ஒரு விவகாரமான மொக்க டவுட்டு

பெண்களுக்கான அறிவிப்பு: "தலைப்புலேயே விவகாரம்னு சொல்லிட்டோம், அதனால இந்த பதிவ பெண்கள் தவிர்ப்பது நலம்" அப்பிடின்னெல்லாம் போட்டு விளம்பரம் தேடிக்க விருப்பமில்லீங்க, இது ஆண்களின் பார்வையில் எழுதப்பட்ட ஒரு பதிவு. படிக்கறதும் படிக்காததும் உங்க இஷ்டம்.

சும்மா ஒரு விளம்பரத்துக்கு: நண்பன் பத்தி பதிவுன்னு நினச்சி நாலு பேரு வருவாங்கல்ல, அதுக்குத்தான்.
"எங்கப்பாரு இந்த காதலர்கள் தொல்ல தாங்கமுடியலடா சாமி" நண்பர்கள் கூடினா இந்த டாபிக்ல ரெண்டுமணி நேரமாவது பேசுவாங்க. பேசி முடிஞ்சு ரெண்டு நிமிஷம் போறதுக்குள்ள மறுபடியும் ஆரம்பிப்பாங்க, மச்சி, இன்னிக்கி ஒரு சூப்பர் பிகர் மாட்டிச்சிடா, நம்பர் வாங்குறதுக்குள்ள எஸ் ஆகிடிச்சி. நமக்கு மண்டைய பிச்சிக்கனும்னு தோணும். இன்னொருத்தன் சொல்லுவான், மச்சான் நான் அவள உசிருக்கு உசிரா காதலிக்கிறண்டா, அவ இல்லைன்னா எனக்கு வாழ்க்கையே இல்ல. அது எப்புடி வாழ்க்கையே இல்லாம போகும்? சில பேரு பகல் எல்லாம் நல்லா இருப்பானுக, ராத்திரி ஆனா போதும், அற்பனுக்கு காதல் வந்தா அர்த்த ராத்திரில சிப்ப தொறப்பானாம் கணக்கா புலம்ப ஆரம்பச்சிருவாணுக. இவனுங்க லவ் பண்றத கூட தாங்கிக்கலாம். ஆனா வெட்கப்படுவானுக பாருங்க, கால் விரலாலயே மண்ணுல குழி தோன்டுறது, பக்கத்துல கெடக்குற துணில சடை பின்னுறது, முடிச்சி போடுறது, முக்கியமா பேப்பர்ஸ கிழிச்சிபோடுறதுன்னு வெட்கபட்டுகிட்டே குடுபானுக பாருங்க ஒரு எக்ஸ்பிரஷன்!!! நம்ம தலைவர் சந்தானம் மாதிரி "நீ என்ன கருமத்த வேணும்னாலும் பண்ணி தொலைடா, ஆனா இப்புடி வெட்கம் மட்டும் படாத, பயமா இருக்கு"ன்னுதான் சொல்ல தோணும்.

ரோட்டுல நடந்துபோற ஒரு பொண்ண பாத்தா காதல் வருது, கூடவே பழகுற பொண்ணு மேலயும் காதல் வருது, அட, ஹன்சிகா மேலயும் காதல் வருது. பத்து வயசிலையும் வருது, பதினாறுலயும் வருது, இருபத்தஞ்சிலயும் வருது, முப்பதுலயும் வருது, அத விடுங்க, அருபதுலயும் வருது. திருமணம் ஆக முதலும் வருது, ஆன பிறகும் வருது.. என்ன காதல்டா இது. யாருக்கு வேணும்னாலும் யாருமேல வேணும்னாலும் வாற ஒண்ணுதான் இந்த பாழாப்போன காதல். இதுக்காக வீட்டவிட்டு ஓடுறாணுக, கைய அறுத்தக்கறாணுக, தற்கொல பண்ணிக்கறாணுக, சமயத்துல கொலை கூட பண்ணுறானுக. அம்புட்டு முக்கியமான விசயமா இது, ஒரு எழவும் புரிய மாட்டேங்குது.  உசிர குடுத்து பொண்ணுக பின்னாடி சுத்துறானுக, கேட்டா பிகரு இல்லனா ஒரு பய மதிக்க மாட்டேன்குறாண்டான்னு அலுத்துக்கறானுக, அட அத விடுங்க, நடிகைய லவ்வலன்னா பதிவுலகத்துலையே மதிக்க மாட்டாங்களாமே, அப்ப பாருங்களே!!
இந்தாளு என்ன பேன் பாக்குறாரா?
காதல்ல வகை வேற, கண்டதும் காதல், காணாம காதல், பேசி பழகி வாற காதல், ஆர்வகோளாறு காதல், அப்புறம் அனுபவக் காதல். இன்னும் சொல்லுவாங்க தெய்வீக காதல், புனிதமான காதல், நமக்கு ஒரு டவுட்டு புனிதமான காதல்னா புனிதம் கெட்ட காதல் வேற இருக்கா? மகாகவி, கவிப்பேரரசு, நவீன உலகின் பழமைப் புலவன், உலக நாயகன் கமல்ஹாசன் என்னடான்னா இந்த எளவு எல்லாம் ஹார்மோன் செய்யற கெரகம்ங்குறாரு, போதும் போதாததுக்கு மறைந்த எழுத்தாளர் சுஜாதா எக்ஸ் க்ரோமோசோம், வை க்ரோமோசோம், எக்ஸ் எக்ஸ் வை வை அம்புட்டுதான் மேட்டர் அப்புடிங்குறாரு. அப்புடின்னா இந்த காதல் என்ன அறிவியலா? காதல் கடவுள் மாதிரி, உணர்ந்துக்கறவங்களுக்கு அது தெய்வீகம், உணராதவங்களுக்கு அது வெறும் கல்லு, காதல் ஒரு மதம் சார், அப்புடின்னெல்லாம்  யாரோ அறிவாளிகள் சொல்லியிருக்காங்களாம், அப்ப காதல் என்ன ஆண்மீகமா? இதயெல்லாம் விடுங்க சார், நம்ம டாகுடர் என்னடான்னா, காதல் ஒரு தனிக்கட்சி கொடி ஏத்துங்கராறு ... அட அப்ப இது அரசியலா? 

எத்தனையோ விவஸ்தகெட்ட ஆராய்ச்சி பண்ணிட்டோமே, இந்த காதல் பத்தியும்தான் ஒன்னு பண்ணிப்பார்போமேன்னு சும்மா தமாசா ஆரம்பிச்சோம். டவுட்டு தான் மிஞ்சிச்சு. எதனால இந்த காதல் வருது? ஆணுக்கு பொண்ணு மேல தான் காதல் வரும், பொண்ணுக்கு ஆணுமேலதான் வரும் (என்ன ஒரு கண்டுபிடிப்பு...). உண்மையான அன்புதான் காதல், அது புநிதமானதுங்குறாங்களே அப்புறம் யாரும் ஏன் நான் என்னோட அம்மாவ காதலிக்கிறேன், சகோதரிய காதலிக்கிறேன்னு சொல்லறதில்ல? அத விடுங்க பெண் நண்பிக்கும் காதலிக்கும் என்ன சார் வித்தியாசம், காதலிகூட ஜல்சா பண்ணலாம், நண்பி கூட பண்ணமுடியாது, அதுதானே? காதலிச்சா கலியாணம் பண்ணிக்கனும்னு தானே காதலிக்கறாங்க? அப்புடி இல்லனா இடயிலையே கிளைமாக்ஸ வச்சிட்டு கழட்டி விட்டுடராங்க. அப்புடின்னா காதலுக்கு அடிப்படையே காமம், பால் கவர்ச்சி (டீசெண்டா சொன்னா ரொமான்ஸ்) தானே, அப்புறம் என்ன பெரிய இவுனாட்டம் புனிதமான காதல்னு ஒரு பந்தா?

மிகப்பெரிய மொக்க டவுட்டு: காதலுக்கும் கிட்டாருக்கும் என்ன சம்பந்தம்?
இதுல வேற இன்னொரு டவுட்டு, காமம் மட்டுமே இருந்தா அது காதலாகுமா? அப்பிடின்னா என்னென்ன கண்றாவி எல்லாமோ இந்த கடகரில வருது. ஆக ரொமான்ஸ் தவிரவும் வேற எதுவும் தேவைப்படுதோ? அன்பு, நட்பு, புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு அது இதுன்னு நெறைய இருக்கே, இது எல்லாமே சேர்ந்து இருந்திச்சின்னாதான் அது காதல் போலிருக்கு, ஒன்னு குறைஞ்சாலும் அதுக்கு வேற பெயர்தான் வருது. அப்புடின்னா காதல் ஒரு சேர்வையோ? அதுனாலதான் கெமிஸ்ட்ரின்னு சொல்றாங்களா? ரொம்பத்தான் டவுட்டு டவுட்டா இருக்கு. எத்தின சினிமா, எத்தின கவித, எத்தின ஆராய்ச்சி கட்டுர, எதப் படிச்சும் இதுக்கு விடை கிடக்கல. உலகத்துல எத்தனையோ விஷயம் இருக்கு, ஆனா நம்மளுக்கு இப்பிடி ஒரு சந்தேகம், காதல்னா என்ன?

பெரிய மனுஷங்களா, இந்த சின்னப்பசங்களுக்கு காதல்னா என்னன்னு ஒரு விளக்கம் குடுங்கப்பா, உங்களுக்கு புண்ணியமா போகும்.

கொஞ்ச நாளாவே ஸ்ருதி படமா இருக்கேன்னு பாக்குறீங்களா, போங்க சார் வெக்கம் வெக்கமா வருது...

சுய புலம்பல்: அடுத்த பதிவு எங்களது ஐம்பதாவது பதிவு, "தமிழ் சினிமாவையே புரட்டிப்போடும் ஒரு பதிவு. எப்பவரும்ன்னு தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வரும்", அப்புடியெல்லாம் சொல்லி மொக்க பில்டப் குடுக்க விரும்பல. வழக்கம் போல அது ஒரு சினிமா பதிவு. தலைவர் பத்திய ஒரு பதிவு. திங்கள் காலையில வரும். வந்து ஓட்டு கமெண்டு போட்டு வாழ்த்திட்டு போங்க சார். வாழ்த்து எல்லாம் கேட்டு வாங்கவேண்டி இருக்குப்பா.

நன்றி: ட்ராப்டுல பதிவ படிச்சிட்டு, அதுக்கு ஒரு இடைச்செருகல காமென்ட்டா போடாம தனி பதிவாவே போட்டு பல்பு வாங்கவச்ச மொக்க ராசு மாமாவுக்கு.

67 comments:

 1. நான் தான் முதலா?

  ReplyDelete
 2. உண்மைக்காதல் ...என்று வசனம் பேசித்திரிபவர்களுக்கு சாட்டையடிப்பதிவு...ஏம்ப்பா உண்மைக்காதலர்களே இந்தப்பதிவை கொஞ்சம் படிங்க

  ReplyDelete
  Replies
  1. பெண் நண்பிக்கும், காதலிக்கும் என்ன வித்தியாசம்னா, காதலி மாதிரி கடலை போடவோ, மேட்டரோ பாச்சா பலிக்காமா இருந்தால், இந்த பழமும் புளிக்கும் என வைத்துக்கொண்டு பெண்நண்பி-ன்னு ஊர்ல சொல்லிக்கிறாங்கனு ஒரு டவுட்டு. அடுத்தவன்(ள்) பொண்டாட்டி/கணவன் மீது வரும் காதலை என்னன்னு சொல்லலாம்.....ஒரு டவுட்டுதான்.

   Delete
 3. அப்பறம் ஸ்ருதி படம் சூப்பர்..ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.............

  ReplyDelete
 4. K.s.s.Rajh said...

  //நான் தான் முதலா?//

  வருக வருக...

  //உண்மைக்காதல் ...என்று வசனம் பேசித்திரிபவர்களுக்கு சாட்டையடிப்பதிவு...ஏம்ப்பா உண்மைக்காதலர்களே இந்தப்பதிவை கொஞ்சம் படிங்க//

  சார், சாட்டயடி எல்லாம் இல்ல, நம்ம டவுட்டு, அம்புட்டுதான்..

  //அப்பறம் ஸ்ருதி படம் சூப்பர்..ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.............//

  ஸ்ருதிக்கும் ரசிகர்கள் இருக்காங்கப்பா...

  ReplyDelete
 5. மாப்ள அந்த அளவுக்கு நான் ஒர்த் இல்லையப்பா...ஹிஹி...நாமளா போயி வம்புல மாட்டிக்கனுமா(சுய தவிப்பு!)

  ReplyDelete
 6. விக்கியுலகம் said...
  //மாப்ள அந்த அளவுக்கு நான் ஒர்த் இல்லையப்பா...ஹிஹி...நாமளா போயி வம்புல மாட்டிக்கனுமா(சுய தவிப்பு!)//

  என்ன மாம்ஸ், வழக்கமா பதிவுதான் புரியாது, வர வர உங்க கமெண்டு கூட புரியமாட்டேங்குதே, (பரிதவிப்பு!!)

  ReplyDelete
 7. என்னாச்சு!பதிவுலக அரசியல் ஜோதியில நீங்களும் கலந்துட்டீங்களா??? பெண்களுக்கான தலைப்பைச் சொன்னேன்.

  ReplyDelete
 8. //என்ன காதல்டா இது. யாருக்கு வேணும்னாலும் யாருமேல வேணும்னாலும் வாற ஒண்ணுதான் இந்த பாழாப்போன காதல். இதுக்காக வீட்டவிட்டு ஓடுறாணுக, கைய அறுத்தக்கறாணுக, தற்கொல பண்ணிக்கறாணுக, சமயத்துல கொலை கூட பண்ணுறானுக. அம்புட்டு முக்கியமான விசயமா இது, ஒரு எழவும் புரிய மாட்டேங்குது.//

  ஒரு ஃபிகரும் மாட்டலங்கறதுக்காக இப்படியா காதல்மேல கடுப்பாறது???
  வெய்ட் பண்ணுங்க பாஸ்..ஒங்களுக்குன்னு ஒருத்தி இனிமேலயா பிறக்கப்போறா....எங்கேயோ இருக்கா...வந்துசேருவா...

  ReplyDelete
 9. தமிழ்மணத்தில் உங்கள் பிளாக் லிஸ்ட் ஆகலன்னு வருது. என்னன்னு பாருங்க.

  ReplyDelete
 10. காதல் டவுட் எல்லாருக்குமே தா உண்டு நீங்க மொக்க போடரிக நன்றி சகோ

  ReplyDelete
 11. காதல் காமத்தின் இன்னொரு வடிவம்தான் பாஸ்.. வேறொன்றும் இல்லைப்பா

  ReplyDelete
 12. கடம்பவன குயில் said...
  //என்னாச்சு!பதிவுலக அரசியல் ஜோதியில நீங்களும் கலந்துட்டீங்களா??? பெண்களுக்கான தலைப்பைச் சொன்னேன்.//

  என்ன சகோ நீங்க, நாங்களே அரசியல் வேணாம்னு ஒதுங்கியிருக்கோம்..

  //ஒரு ஃபிகரும் மாட்டலங்கறதுக்காக இப்படியா காதல்மேல கடுப்பாறது???
  வெய்ட் பண்ணுங்க பாஸ்..ஒங்களுக்குன்னு ஒருத்தி இனிமேலயா பிறக்கப்போறா....எங்கேயோ இருக்கா...வந்துசேருவா...//

  இவுங்க பண்றதுக்கு பேருதான் காதல்னா அந்த கருமாந்திரம் நமக்கு வேணாம்

  //தமிழ்மணத்தில் உங்கள் பிளாக் லிஸ்ட் ஆகலன்னு வருது. என்னன்னு பாருங்க.//

  ஜி வீ பிரகாஷ் சொந்தமா டியூன் போடறது நடந்தாலும் நமக்கும் தமிழ்மணத்துக்கும் இருக்கற தகராறு தீராது சகோ, அத டீல்ல விடுங்க...

  ReplyDelete
 13. mohan said...
  //காதல் டவுட் எல்லாருக்குமே தா உண்டு நீங்க மொக்க போடரிக நன்றி சகோ//

  அப்ப சல்லி காசு பெறாததுதான் இந்த காதல்ங்குறீங்களா?

  ReplyDelete
 14. மதுரன் said...
  //காதல் காமத்தின் இன்னொரு வடிவம்தான் பாஸ்.. வேறொன்றும் இல்லைப்பா//

  அட, இது நல்ல முடிவு..

  ReplyDelete
 15. இனிய காலை வணக்கம் அண்ணண்களா!

  உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா..

  24 மணி நேரமும் பதிவுலகில் வலம் வாறீங்க..
  (நான் சும்மா காமெடிக்கு சொல்றேன்..
  அதுக்காக உங்கள் சேவையினை நிறுத்தி எங்கள் வயிற்றில் புளியைக் கரைக்க வேணாம் பாஸ்)

  ReplyDelete
 16. பாஸ், தமிழ் மணத்தில் உங்கள் பதிவினை ரிஜிஸ்டர் பண்ணுங்களேன். எல்லாம் சரியாகும்!

  ReplyDelete
 17. பாஸ், தமிழ் மணத்தில் உங்கள் பதிவினை ரிஜிஸ்டர் பண்ணுங்களேன். எல்லாம் சரியாகும்!

  ReplyDelete
 18. "தலைப்புலேயே விவகாரம்னு சொல்லிட்டோம், அதனால இந்த பதிவ பெண்கள் தவிர்ப்பது நலம்" அப்பிடின்னெல்லாம் போட்டு விளம்பரம் தேடிக்க விருப்பமில்லீங்க, இது ஆண்களின் பார்வையில் எழுதப்பட்ட ஒரு பதிவு. படிக்கறதும் படிக்காததும் உங்க இஷ்டம்.//

  அடிங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்

  இந்த டீலிங் நல்லாத் தானே இருக்கு....

  ReplyDelete
 19. சும்மா ஒரு விளம்பரத்துக்கு: நண்பன் பத்தி பதிவுன்னு நினச்சி நாலு பேரு வருவாங்கல்ல, அதுக்குத்தான்.//

  அவ்.வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  மொக்கையில சும்மா பத்த வைக்கிறீங்களே;-))))))))

  ReplyDelete
 20. அட அத விடுங்க, நடிகைய லவ்வலன்னா பதிவுலகத்துலையே மதிக்க மாட்டாங்களாமே, அப்ப பாருங்களே!..

  ஹையோ.....ஹையோ...

  யாரோட டவுசரையோ உருவிட்டீங்களே...

  கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
 21. இந்தாளு என்ன பேன் பாக்குறாரா?//

  ஒரு வேளை அவங்க தலையில முடி சிக்குப் பட்டிருக்கும்.

  அதனை எடுக்கிறார் போல இருக்கும்....

  ReplyDelete
 22. நிரூபன் said...

  //இனிய காலை வணக்கம் அண்ணண்களா!

  உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா..

  24 மணி நேரமும் பதிவுலகில் வலம் வாறீங்க..
  (நான் சும்மா காமெடிக்கு சொல்றேன்..
  அதுக்காக உங்கள் சேவையினை நிறுத்தி எங்கள் வயிற்றில் புளியைக் கரைக்க வேணாம் பாஸ்)//

  நீங்க ராத்திரி ஒரு மணி வர பதிவுலகத்துல வலம் வரலாம் நாங்க வலம் வரக்கூடாதா பாஸ்?

  ReplyDelete
 23. நிரூபன் said...
  //பாஸ், தமிழ் மணத்தில் உங்கள் பதிவினை ரிஜிஸ்டர் பண்ணுங்களேன். எல்லாம் சரியாகும்!//

  அது அவ்வளவு சீக்கிரம் தீர்ற தகராறு இல்ல பாஸ்..

  ReplyDelete
 24. காதல், காமம் ,நட்பு, ரொமான்ஸ் பற்றிய தேடலைத் தூண்டுகின்ற பதிவு,

  நான் நினைக்கிறேன், உண்மை அன்பு என்பது காமம் நீங்கிய பின்னர் தான் வரும் என்று..

  இந்த மாதிரி ஆராய்ச்சியில் நானும் சிக்கி ரெண்டு பதிவுகளை எழுதித் தொலைத்தேன்.

  எப்போது ஒரு ஆணும்- பெண்ணும் பிரதியுபகாரம் எதிர்பார்க்காது காதலிக்கத் தொடங்குகிறார்களோ, அப்போது தான் காதல் என்பதற்கான உண்மை அர்த்தம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

  அல்லது உடற் பசி நீங்கிய பிறகு இளையவர்கள் மத்தியில் தோன்றுகின்ற இயல்பான புரிந்துணர்வுடன் கூடிய அன்பே காதல் எனப்படும் என்பது என் கருத்து பாஸ்!

  ReplyDelete
 25. நிரூபன் said...
  //
  அடிங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்

  இந்த டீலிங் நல்லாத் தானே இருக்கு....//

  ஜஸ்ட் அனுபவிங்க பாஸ், ஆராய வேணாம்..

  ReplyDelete
 26. நிரூபன் said...
  //சும்மா ஒரு விளம்பரத்துக்கு: நண்பன் பத்தி பதிவுன்னு நினச்சி நாலு பேரு வருவாங்கல்ல, அதுக்குத்தான்.//

  அவ்.வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  மொக்கையில சும்மா பத்த வைக்கிறீங்களே;-))))))))//

  எவ்வளவோ பண்ணிட்டோம், இத பண்ண மாட்டோமா?

  ReplyDelete
 27. நிரூபன் said...
  //அட அத விடுங்க, நடிகைய லவ்வலன்னா பதிவுலகத்துலையே மதிக்க மாட்டாங்களாமே, அப்ப பாருங்களே!..

  ஹையோ.....ஹையோ...

  யாரோட டவுசரையோ உருவிட்டீங்களே...

  கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

  ஐயோ, யாரு டவுசரையும் நாங்க உருவல

  ReplyDelete
 28. நிரூபன் said...
  //இந்தாளு என்ன பேன் பாக்குறாரா?//

  ஒரு வேளை அவங்க தலையில முடி சிக்குப் பட்டிருக்கும்.

  அதனை எடுக்கிறார் போல இருக்கும்....//

  அத எடுத்து என்ன செய்யப்போறாரு?

  ReplyDelete
 29. நிரூபன் said...
  //காதல், காமம் ,நட்பு, ரொமான்ஸ் பற்றிய தேடலைத் தூண்டுகின்ற பதிவு,

  நான் நினைக்கிறேன், உண்மை அன்பு என்பது காமம் நீங்கிய பின்னர் தான் வரும் என்று..

  இந்த மாதிரி ஆராய்ச்சியில் நானும் சிக்கி ரெண்டு பதிவுகளை எழுதித் தொலைத்தேன்.

  எப்போது ஒரு ஆணும்- பெண்ணும் பிரதியுபகாரம் எதிர்பார்க்காது காதலிக்கத் தொடங்குகிறார்களோ, அப்போது தான் காதல் என்பதற்கான உண்மை அர்த்தம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

  அல்லது உடற் பசி நீங்கிய பிறகு இளையவர்கள் மத்தியில் தோன்றுகின்ற இயல்பான புரிந்துணர்வுடன் கூடிய அன்பே காதல் எனப்படும் என்பது என் கருத்து பாஸ்!//

  அட நம்ம பதிவுல இம்புட்டு இருக்கா? அது என்னமோ சார், காமம் இல்லனா அது காதல் இல்லன்னுதான் படுது

  ReplyDelete
 30. ஸ்ருதி படம் நல்லா இருந்தது..

  காதல் பற்றிய ஆறாய்ச்சியும் நல்லா இருந்தது.... :))))

  ReplyDelete
 31. காதலுக்கும் கிட்டாருக்கும் என்ன சம்பந்தமா...?? யோவ் இங்கேதான் பெரிய விஷயமே இருக்கு, அதாவது நான் கிட்டார் வாசிக்கும் போது, நான் கிட்டாரை பார்ப்பேன் அவள் என்னைப்பார்த்து ரசிப்பாள்.....எப்பூடி....

  ReplyDelete
 32. //MANO நாஞ்சில் மனோ said...

  காதலுக்கும் கிட்டாருக்கும் என்ன சம்பந்தமா...?? யோவ் இங்கேதான் பெரிய விஷயமே இருக்கு, அதாவது நான் கிட்டார் வாசிக்கும் போது, நான் கிட்டாரை பார்ப்பேன் அவள் என்னைப்பார்த்து ரசிப்பாள்.....எப்பூடி....///

  வாலி படத்துல தல சொன்ன மாதிரி இருக்கே!!!

  ReplyDelete
 33. neenga yaaraiyum lov panan pla butti paul athan unga felingsa bayangaram blog a potrukigna love pannunga sir life nalal irukum :)))

  ReplyDelete
 34. thalaiva super... Enaku oru doubt. Adhu onka post ku sambantham illathadhu adhanala mannikavum. Indli ya pola vera yethavathu nalla traffic tharakoodiya site irukka? Please sollunga appatucker. Plz dont say udanz, tamilveli, tamilmanam becoz they all useless

  ReplyDelete
 35. 49 வது பதிவு அதுக்குள்ள வந்தாச்சா? அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 36. காதல் பத்தி என் டாக்குட்டர் மாப்ள ஆரய்ச்சி முடிவு தான் என் கருத்தும்!

  ReplyDelete
 37. ஓ..நேத்துப் பதிவு மொக்கை பண்ண வேலையா...

  ReplyDelete
 38. Sen22 said...
  //ஸ்ருதி படம் நல்லா இருந்தது..

  காதல் பற்றிய ஆறாய்ச்சியும் நல்லா இருந்தது.... :))))//

  படம் மட்டுமில்ல சார், அந்த பொண்ணு கூட நல்லாத்தான் இருக்கு..

  ReplyDelete
 39. MANO நாஞ்சில் மனோ said...
  //காதலுக்கும் கிட்டாருக்கும் என்ன சம்பந்தமா...?? யோவ் இங்கேதான் பெரிய விஷயமே இருக்கு, அதாவது நான் கிட்டார் வாசிக்கும் போது, நான் கிட்டாரை பார்ப்பேன் அவள் என்னைப்பார்த்து ரசிப்பாள்.....எப்பூடி....//

  ரசிப்பாளா முறைப்பாளா? கேவலமா கிட்டார் வாசிச்சாகூட லவ் வொர்கவுட் ஆகும் போலிருக்கே..

  ReplyDelete
 40. meyyappanram said...
  //neenga yaaraiyum lov panan pla butti paul athan unga felingsa bayangaram blog a potrukigna love pannunga sir life nalal irukum :)))//

  ஸ்ருதி படம் பாத்திட்டும் நீங்க இப்புடி சொல்றது நல்லாவா இருக்கு?

  ReplyDelete
 41. சி.பி.செந்தில்குமார் said...
  //49 வது பதிவு அதுக்குள்ள வந்தாச்சா? அட்வான்ஸ் வாழ்த்துக்கள்//

  நன்றி சார், ஐம்பதாவது பதிவுக்கும் வாழ்த்து சொல்லுவீங்கல்ல?

  ReplyDelete
 42. செங்கோவி said...
  //காதல் பத்தி என் டாக்குட்டர் மாப்ள ஆரய்ச்சி முடிவு தான் என் கருத்தும்!//

  ரெண்டாம் கட்ட ஆராய்ச்சி முடிவுகள் எப்போ வரும்?

  ReplyDelete
 43. செங்கோவி said...
  //ஓ..நேத்துப் பதிவு மொக்கை பண்ண வேலையா...//

  கேட்டா, பப்ளிஷான பதிவ படிச்சா கமெண்டு போடலாம், டிராப்டுல படிச்சா பதிவுதான் போடலாம்ன்னு தத்துவமா கொட்டறாரு...

  ReplyDelete
 44. கொஞ்சம் லவ்..நிறைய லவ்ஸ்...

  புரட்டிபோட வைக்க போகும் ஐம்பதுக்கு இப்பவே வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 45. அட இன்னா பாஸ் நீங்க?
  நம்ம சைட்டுக்கு வாங்க!
  கருத்து சொல்லுங்க!!
  நல்லா பழகுவோம்!!!

  ReplyDelete
 46. சார் டுடே வெள்ளிக்கிழமை so tomrow வந்து கம்மெண்டு போடறேன்
  அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 47. படம் மட்டுமில்ல சார், அந்த பொண்ணு கூட நல்லாத்தான் இருக்கு..//

  unmai....:)

  ReplyDelete
 48. ஒரு அற்புதமான ப்ளாக் படிச்ச சந்தோசம்

  ReplyDelete
 49. நான் தான் அப்போ 49...

  ReplyDelete
 50. அட ஐம்பதாவது வடை எனக்குதான்
  வாழ்க வளமுடன்
  இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்
  வடக்கு வீதி சந்தானம் ரசிகர்மன்றம்

  கிளை என் 1526

  ReplyDelete
 51. காதல்ங்குறது என்னா தான் காமெடியா பேசுனாலும் காமக்கடவுளின் கண்கள் வீசும் பார்வையில் இரு ஜீவன்களின் புனித உணர்வுகள்....அம்புட்டுதான் சொல்லிபுட்டேன்

  ReplyDelete
 52. காதலுடைய புனிதத்தை கேவலபடுதீட்டாங்க அப்படினு மட்டும் சொல்லமாட்டேன் பாஸ்

  ReplyDelete
 53. குறுகிய காலத்தில் 50 வாழ்த்துக்கள்

  ReplyDelete
 54. என்ன காதலோ,என்ன கத்தரிக்காயோ?ஒண்ணுமே புரியல டாக்டரே!எழுதியிருக்கிறத படிச்சேன்!புரியிற மாதிரியும் இருக்குது,புரியாத மாதிரியும் இருக்குது!

  ReplyDelete
 55. ////ரெவெரி said...

  கொஞ்சம் லவ்..நிறைய லவ்ஸ்...

  புரட்டிபோட வைக்க போகும் ஐம்பதுக்கு இப்பவே வாழ்த்துக்கள்..////

  நன்றிங்க.. ஆமா புரட்டி போடுறதுக்கு அது என்னா பெட்ஷீட்டா? பதிவுங்க!! வழமைபோல எழுதுறோம் நாள இருந்தா ஆதரவு தாங்க!!!!!

  ReplyDelete
 56. ///சீனுவாசன்.கு said...

  அட இன்னா பாஸ் நீங்க?
  நம்ம சைட்டுக்கு வாங்க!
  கருத்து சொல்லுங்க!!
  நல்லா பழகுவோம்!!!
  ///
  கண்டிப்பா,, ஆனா வெறும் டீபோல்ட் கமெண்ட எல்லா பதிவுலையும் போடாம, கொஞ்சம் வாசிச்சிட்டு ஒங்க கருத்த சொன்னா ரொம்ப நல்லா இருக்கும்!!!!

  ReplyDelete
 57. /siva said...

  ok ok
  //
  ஓகே ஓகே...

  //சார் டுடே வெள்ளிக்கிழமை so tomrow வந்து கம்மெண்டு போடறேன்
  அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ///
  ஆனா நாங்க சண்டேதான் பாப்போம்!!

  ReplyDelete
 58. //siva said...

  படம் மட்டுமில்ல சார், அந்த பொண்ணு கூட நல்லாத்தான் இருக்கு..//

  unmai....:)
  ////
  ஆமா ஆனா கமல் அங்கிள் பொண்ணாச்சே.... என்னா பண்றது?

  //siva said...

  ஒரு அற்புதமான ப்ளாக் படிச்ச சந்தோசம்
  ////


  நன்றிங்க...

  ///siva said...

  நான் தான் அப்போ 49...//
  49வது பதிவுக்கு நீங்க 49... சூப்பர்.....

  ReplyDelete
 59. ///siva said...

  அட ஐம்பதாவது வடை எனக்குதான்
  வாழ்க வளமுடன்
  இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்
  வடக்கு வீதி சந்தானம் ரசிகர்மன்றம்

  கிளை என் 1526
  ///
  நன்றிங்க... எங்க அம்பதாவது பதிவுக்கும் நீங்கதான் 50வதா கமெண்ட் போடணும்!!!!

  அப்புறம் இப்டியே எல்லா சந்தானம் ரசிகர் மன்றங்களையும் நம்ம பிளாகோடா இணைச்சிட்டா நம்ம பவர இந்த ஒலகத்துக்கு காட்டிரலாம்!!!

  ReplyDelete
 60. //மாய உலகம் said...

  காதல்ங்குறது என்னா தான் காமெடியா பேசுனாலும் காமக்கடவுளின் கண்கள் வீசும் பார்வையில் இரு ஜீவன்களின் புனித உணர்வுகள்....அம்புட்டுதான் சொல்லிபுட்டேன்
  ////

  அட சரியாதான் சொல்லிப்புட்டீங்க.....அததான் நாம முழு பதிவா சொன்னோம்!!௧

  ReplyDelete
 61. //கார்த்தி கேயனி said...

  காதலுடைய புனிதத்தை கேவலபடுதீட்டாங்க அப்படினு மட்டும் சொல்லமாட்டேன் பாஸ்
  ///

  ஐயோ நீங்க அப்டி சொன்னாலும் நாங்க அத பெருசா எடுத்துக்க மாட்டோம்/...... நம்ம கருத்த நாங்க சொன்னோம், ஒங்க கருத்த நீங்க சொல்லுங்க அவ்வளவுதான்...

  ReplyDelete
 62. //kobiraj said...

  குறுகிய காலத்தில் 50 வாழ்த்துக்கள்
  ///
  சுறா, மங்காத்தான்னு ஒங்க ஆளுங்க எல்லாரும் 50அடிக்கும்போது... நாங்களும் அடிக்கலாம்ல....நன்றி....

  ReplyDelete
 63. //Yoga.s.FR said...

  என்ன காதலோ,என்ன கத்தரிக்காயோ?ஒண்ணுமே புரியல டாக்டரே!எழுதியிருக்கிறத படிச்சேன்!புரியிற மாதிரியும் இருக்குது,புரியாத மாதிரியும் இருக்குது///

  இந்த டாக்குடர்மார் செய்றது எல்லாமே இப்புடிதாங்க... கண்டுக்காதீங்க பாஸ்!!!

  ReplyDelete
 64. ஏனோ குவியமிலா குவியமிலா ஒரு காட்சிப்பேழை...
  ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை........

  ReplyDelete
 65. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //ஏனோ குவியமிலா குவியமிலா ஒரு காட்சிப்பேழை...
  ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை.......//

  என்னது ஆண்ணன் பாட்டு பாடியிருக்காரு?

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்!!