Wednesday, September 14, 2011

பதிவுலக ரவுண்டப் - ஒரு அட்டகாசமான பதிவு 2

இது நேற்றைய பதிவின் தொடர்ச்சி, பின்னூட்ட பெட்டி வழியே அறிமுகமாகி நம்மள ரொம்பவே பீல் பன்னவச்சவங்க யாரு யாருன்னு சொல்லற ஒரு பதிவு. 

வார்னிங்: இதுல உள்குத்து இருக்கு, வெளிக்குத்து இருக்குன்னு யாரச்சும் கற்பன பண்ணிகிட்டா சேதாரத்துக்கு நாங்கள் பொறுப்பில்லை.  

இத ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி சூடான ஒரு மேட்டர். 

சங்கக்காரா ICC பீபில் சாய்ஸ் அவார்டு வாங்கியிருக்காராம், போட்டில நம்ம காப்டன் டோனியும் இருந்தாரே நம்ம 120 கோடி வாக்குகள தாண்டி இது எப்பிடி சாத்தியம்னு ரொம்பவே யோசிச்சப்போதான்  காரணம் புரிஞ்சிச்சு, எல்லாம் நம்மாளுக பண்ணுற கூத்துத்தான், எவனாவது ஒருத்தன் கிரிக்கெட் பத்தி ஒரு பதிவு போட்டிருந்தா போதும், எந்த மொழி தளமா இருந்தாலும் எந்த நாட்டு தளமா இருந்தாலும், ICC என்ன பண்ணனும்குறதில இருந்து ஜிம்பாவே அணி உள்பூசல் வரைக்கும் என்ன விசயமா இருந்தாலும், அங்க  ஒடனே ஓடிப்போயி சம்பந்தமே இல்லாம சச்சின் தான் உலகத்திலேயே சிறந்த பட்ஸ்மன்,   ஷேவாக் மாதிரி வருமா, காப்டன்னா அது தோனிதான்னு வம்பளப்பாங்க பாருங்க, அப்புறம் இந்தியர்கள தவிர வேற யாருய்யா நம்மாளுக்கு ஒட்டு போடுவா. (இப்போ எதுக்கு எல்லா இந்தியர்களுக்கும் கணணி அறிவு இருக்கா, ஈ மெயில் ID இருக்கா, ஒட்டு போட தெரியுமான்னு லாஜிக் கேள்விகள் கேக்கறீங்க?)


இதன் முதல் பதிவை படிக்காதவர்களுக்கு இதற்குமேல் படிக்க அனுமதியில்லை.
தேங்காய ஒடச்சி ஆரம்பிச்சு வச்சிடு தலைவா. 
செங்கோவி அண்ணன் நமக்கு ஒரு காமெண்டு போட்டிருந்தாருன்னு அவரு பூவுக்கு சும்மா கடமைக்கி ஒரு விசிட்டு அடிச்சா, "கமெண்டு போடுவது எப்பிடின்னு" ஒரு பதிவு போட்டிருந்தாரு. நல்லாத்தான் சொல்றாரா நக்கலா சொல்றாரான்னே புரியாதளவுக்கு இருந்திச்சு அந்த பதிவு. அப்பிடியே அவரு பின்னூட்ட பெட்டிய வாசிச்சா "நான் ஒரு காமெடி பீசுங்கோ" ங்குற ரேஞ்சுக்கு ஒரே பில்டப்பு. அப்புறம்தான் தெரிஞ்சிச்சு இந்த அண்ணனுக்குள்ளையும் ஒரு சத்தியராஜ் (அதானுங்க புரட்சித்தமிழன்) ஒளிஞ்சிருக்கிறது. நிறைய ஆழமான கருத்துக்கள போற போக்குல அடிச்சுட்டு போயிடுறாரு.. (பொருத்தமா இருந்தாலும்)  கில்மா பதிவு மாதிரியே தலைப்பு வச்சி எழுதுறாரு பாருங்க ஒரு தொடர், வாழ்கயின்னா என்னான்னு அப்பிடி ஒரு டியூஷன் எடுக்கறாரு. சினிமா பதிவு எழுதியே எத்தன நாளக்கி குப்ப கொட்டறதுன்னு எங்களையே சிந்திக்க வச்சுட்டர்ணா பாத்துக்கங்களேன். அனாலும் அவருக்கு ஏன் திரிஷா புடிக்காதுன்னு குடுத்தாரு பாருங்க ஒரு வெளக்கம், அன்னில இருந்து அந்தம்மா மார்கட்டே காலி....
ஏன்  க... கா.. ன்னு சிரிக்கரிக்கறீங்க, என்ன வச்சி ஒன்னும் காமெடி கீமெடி பண்ணலியே
ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியின் டைரியில் இருந்து...(சுதந்திர தின ஸ்பெஷல்)
இது ஒரு மிக முக்கியமான பதிவு. சுதந்திர தினத்தன்று பதிவிடப்பட்டது. நம்ம ப்ளாக் மூலமாவும் ஒரு 30 பேராச்சி படிச்சாங்கன்னா அதுவும் ஒரு நல்ல விஷயம் தானே. எதோ எங்களால முடிஞ்சது. பதிவு நீளமயிருக்கேன்னு படிக்காம விட்டுடாதீங்க, புக் மார்க் பண்ணிவச்சு நேரம் எடுத்தாவது படிங்கப்பா. அதோட சேர்த்து அண்ணனோட "இதை வெளிய யார்கிட்டயும் சொல்லிடாதீங்க சார்..." "தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு இடமா" என்ற பதிவுகளையும் படிச்சு பாருங்க. அப்புடியே மன்மத லீலைகள் தொடர வாசிங்கப்பு...

டிஸ்கி 0: செங்கோவி பத்தி குறிப்புபோட்டுட்டு ஹன்சிகாவ மிஸ் பண்ணினா எப்புடி, அண்ணன ஆறுதல் படுத்துறதுக்கு ஒரு அதிரி புதிரியான ஹன்சிகா படம் இறுதியில்.
-

                     அலேர்ட்: சொன்னதுமே ஓடிப்போனா இப்படித்தான் பல்பு கிடைக்கும் 

-
பன்னிகுட்டி ராம்சாமி அண்ணன் நமக்கு ஒரு பெரிய இன்சுபிராசன். காமடி நடிகர்களுக்கு ப்ளாக் வச்சும் ஜெயிக்கலாம்னு சொல்லிகுடுத்தவரு. ஆனா என்ன ஒரு கொற அண்ணன் பேரால நமக்கு நிம்மதியா ஒரு பழமொழிகூட சொல்ல முடியல. கவுண்டரு ரசிகரு புரிஞ்சுக்குவாரப்புன்னு பாத்தா நம்மள கோத்து விடுறதுக்காகவே சிலபேர் வந்து காமென்ட் போடுவாங்க பாருங்க, செம டென்சன் ஆகிடும் (ஒடனே பழைய காமெண்டுகள பாக்க ஓடிடாதீங்க, டிலீட் ஆப்சன் எதுக்கு இருக்கு). அப்புறம் ஒரு மேட்டர், நானும் மொக்கராசும் ரொம்ப சீரியசா புதுசா என்ன டைப் பதிவு போடலாம்னு தின்க் பண்ணிகிட்டிருந்தப்போ ஒரு மேட்டர் மாட்டிச்சு, அப்பத்தான் ராசு மாமா சொன்னாரு, அண்ணனோட ப்ளாகுக்கு போயி பாரு அண்ணன் ஆல்ரெடி பண்ணிட்டருன்னு. நம்ம ஒன்ன யோசிச்சா இவரு அத அதுக்கு முனாடியே பண்ணி வச்சிடராறு. அதனாலதான் அவரு கவுண்டர் ரசிகர் நம்ம சந்தானம் ரசிகர்.  கலாய்கிறதுக்கும் கும்முறதுக்கும் அண்ணன்கிட்டதான் படிக்கணும்.


தளபதிய கலாய்கிறதுக்குன்னா அது  நம்ம ராம்சாமி அண்ணன்தான்,  அண்ணனோட கிரியேடிவிட்டி (எதுக்கு கெட்டவார்த்த பேசுறன்னு திட்டபோறாரு) வியக்கவக்கிது.  இனிமே பதிவுலகத்துல யாராவது தளபதிய கலாய்க்கிறதுன்னு முடிவு பண்ணினா குறைந்தபட்சம் இந்த பதிவையும் ஒரு டாக்டரின் ரத்த சரித்திரம்... அப்பிடிங்குற பதிவையும் படிச்சிட்டு ஆரம்பிங்கன்னு கேட்டுக்கறோம். சிரிப்பு போலீச வச்சு அண்ணன் அடிக்கற ரகள இருக்கே, வாசிச்சுப்பாருங்கப்பு அப்புறம் தெரியும்.  

என்னப் பத்தி தெரியுமில்ல? ங்கொக்கா மக்கா...! குசும்பப் பாத்தியா? படுவா...பிச்சிபுடுவேன் பிச்சு!
நிரூபன் சார் இருக்காரே சமயத்துல சார் ரொம்ப சீரியசு, ஆனா புதுசா எந்த பதிவர் வந்தாலும் அவங்க கடைய தேடி போய் வாழ்த்துவதோட மட்டுமில்ல தனது தளத்துல அவங்களுக்கு ஒரு அறிமுகமும் குடுத்து ஆதரவும் குடுக்குறதுல அண்ணன் டாப்பு. இவரு வழியா ஈழ மக்கள் வாழ்கைய தெரிஞ்சுக்ககிடைச்சது நமக்கு ஒரு நல்ல அனுபவம், கில்மாபட சி டி வாங்கப்போனது  அண்ணனுக்கு ஒரு நல்ல அனுபவம். புறக்கணிக்கப்பட்ட பதிவரின் உள்ளக்குமுறல்ன்னு அண்ணன் புலம்பியிருந்தாரு பாருங்க அது ஒரு ட்ரண்ட செட்டர் பதிவு. அதுக்கப்புறம் யார பாத்தாலும் பதிவுலக அரசியலாவே பதிவு போடுறாங்க, இதனால நாங்க எப்பிடி ஒரு பதிவு போடனும்குறதுல தொடங்கி எப்பிடி பதிவு போடக்கூடாதுங்குற வரைக்கும் நெறயவே தெரிஞ்சுக்கிட்டம்.

இது ஆண் பதிவரின் கவிதையான்னு ஒரே குழப்பமா போயிருச்சு, அம்புட்டு பீல் பண்ணியிருக்காரு அண்ணன். இதைப்படிச்சதும் ஒன்னு ஞாபகத்துக்கு வருது. சமீபத்துல ஒரு பதிவரோட சீரியசான ஒரு பதிவ படிச்சிட்டு பின்னூட்டம் போடலாம்னு போனா முதலாவது காமெண்டே "அண்ணீக்கு வீட்டுல சண்டையோ" அப்பிடின்குற ரேஞ்சுல இருந்திச்சி, அப்புறம்தான் தெரிஞ்சுகிட்டேன் அது ஒரு பெண் பதிவரோட பதிவுன்னு, இதுமாதிரி ஆண்களுக்கு போடற நிறைய பின்னூட்டங்கள வாசிச்சிருக்கோம், ஆனா இத வாசிக்கறப்போ மட்டும் என்னமோ ஒரு நெருடல், ஒரு வேள அதுதான் ஆணாதிக்க மனப்பான்மையா இருக்குமோ, (அப்பிடீன்னா நாமதான் ஆணாதிக்கவாதிகளா? #டவுட்டு)
ஒருவேள ஆனாதிக்கம்னா இதா இருக்குமோ? 
RSF பஞ்ச்: அதென்னமோ புதுசா பதிவுலகத்துல கட்சி, ஓட்டரசியல்ன்னு என்னென்னமோ வந்திருக்காமே, எப்பங்க தேர்தல் வரப்போகுது?  யாரு யாரெல்லாம் தேர்தல்ல நிக்கப்போறாங்க? 


டிஸ்கி 1:  நமக்கு அறிமுகமான ஏனய பதிவர்கள் பற்றிய குறிப்புக்களை அடுத்தடுத்த பதிவுகளில் காண்க. என்னது, அப்ப இந்த பதிவு முடியலியான்னு டென்சன் ஆகிடாதீங்க, இப்பதானே ஆரம்பிச்சிருக்கு..... போகப்போக பாருங்க.. 
 அண்ணனுக்கு என்னவொரு குழந்தை பாசம்......
படத்த பாத்திட்டீங்கல்ல, இப்ப போய் டிஸ்கி 0: க்கும் அடுத்த பராக்கும் இடையில உள்ள இடைவெளிய செலக்ட் பண்ணினீங்கன்னா அங்க அண்ணன் பத்தி ஒரு கிசு கிசு இருக்கும். (உள்குத்து மேட்டர்(?)) படிச்சுப்பாருங்க.   


உங்கள் ஓட்டும் கமெண்டும்தான் எங்களுக்கான உற்சாக டானிக், so please VOTE&COMMENT.

62 comments:

 1. ஆமா!இதுல உள்குத்து,வெளிக்குத்து ஏதாவது இருக்கா?
  மொத்ததுல எல்லாரையும் பல்பு வாங்க வச்சுட்டிங்க.ம்ம்ம்

  ReplyDelete
 2. ரெண்டு பேருமே எனக்கு பிடிச்ச பதிவர்கள், செங்கோவி எழுதுற பதிவுல எல்லாமே ஒரு நகைச்சுவை இழையோடியிருக்கும்...

  நம்ம பன்னிக்குட்டி அண்ணன் வந்து போடுற பின்னூட்டத்த கவுண்டர் வாய்ஸ்ல நெனச்சு பாத்தீங்கண்ணா விழுந்து விழுந்து சிரிப்பீங்க...

  ReplyDelete
 3. @கோகுல்

  // ஆமா!இதுல உள்குத்து,வெளிக்குத்து ஏதாவது இருக்கா?//
  இந்த வாரம் உள்குத்து வாரமாம், அதனாலதான் எதுவுமே இல்லன்னு சொல்லி ஆரம்பிச்சிருக்கோம்.. ஹி ஹி

  மொத்ததுல எல்லாரையும் பல்பு வாங்க வச்சுட்டிங்க.ம்ம்ம்//
  தைரியமா சொன்னீங்களே, உங்க நேர்மை பிடிச்சிருக்கு கோகுல்..

  ReplyDelete
 4. //Heart Rider said...
  ரெண்டு பேருமே எனக்கு பிடிச்ச பதிவர்கள், செங்கோவி எழுதுற பதிவுல எல்லாமே ஒரு நகைச்சுவை இழையோடியிருக்கும்...

  நம்ம பன்னிக்குட்டி அண்ணன் வந்து போடுற பின்னூட்டத்த கவுண்டர் வாய்ஸ்ல நெனச்சு பாத்தீங்கண்ணா விழுந்து விழுந்து சிரிப்பீங்க...//

  ரெண்டுபேரும் சேந்து பின்னூட்டம் போடுவாங்களே, அதப்பத்தி!!!

  ReplyDelete
 5. ஆ பதிவுலகத்தையே கைக்குள்ளே வைத்து இருக்கிறீர்களே .அருமை .இடையில் உங்களை மிஸ் பண்ணி விட்டேன் .இருங்க முதல் பதிவையும் படித்து விட்டு வாறன்

  ReplyDelete
 6. ஓட்டு போட்டாச்சு

  ReplyDelete
 7. //kobiraj said...

  //ஆ பதிவுலகத்தையே கைக்குள்ளே வைத்து இருக்கிறீர்களே//

  என்ன சார் நீங்க எங்கள வம்புல மாட்டிவிடுறீங்க...

  //அருமை .இடையில் உங்களை மிஸ் பண்ணி விட்டேன்//

  நன்றி, நண்பா..

  //இருங்க முதல் பதிவையும் படித்து விட்டு வாறன்//

  என்னய்யா, அத படிக்கலனா இத படிக்கக்கூடாதுன்னு கொட்ட எழுத்துல போட்டுமா?

  ReplyDelete
 8. //kobiraj said...
  ஓட்டு போட்டாச்சு//

  ஒருவேள இவரு நம்ம சத்திய பிரமாணத்த வாசிச்சிருப்பாரோ?

  ReplyDelete
 9. பெரிய பெரிய ஆளுங்கள பத்தி என்னைய போல ஆளு என்னத்த சொல்றது...அவங்க மேதைங்க....பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 10. சார் நான் நேத்து தோனிய பத்தி ஒரு பதிவு போட்டு இருக்கே வந்து பாருங்க....

  ReplyDelete
 11. இந்த ஹன்சிகா சின்ன வயசிலையே கும்புனுதான் இருக்கு..ஹி.ஹி.ஹி.ஹி. என்னத்தை திங்குதோ.......

  ReplyDelete
 12. ////சங்கக்காரா ICC பீபில் சாய்ஸ் அவார்டு வாங்கியிருக்காராம், போட்டில நம்ம காப்டன் டோனியும் இருந்தாரே நம்ம 120 கோடி வாக்குகள தாண்டி இது எப்பிடி சாத்தியம்னு ரொம்பவே யோசிச்சப்போதான் காரணம் புரிஞ்சிச்சு, எல்லாம் நம்மாளுக பண்ணுற கூத்துத்தான், எவனாவது ஒருத்தன் கிரிக்கெட் பத்தி ஒரு பதிவு போட்டிருந்தா போதும், எந்த மொழி தளமா இருந்தாலும் எந்த நாட்டு தளமா இருந்தாலும், ICC என்ன பண்ணனும்குறதில இருந்து ஜிம்பாவே அணி உள்பூசல் வரைக்கும் என்ன விசயமா இருந்தாலும், அங்க ஒடனே ஓடிப்போயி சம்பந்தமே இல்லாம சச்சின் தான் உலகத்திலேயே சிறந்த பட்ஸ்மன், ஷேவாக் மாதிரி வருமா, காப்டன்னா அது தோனிதான்னு வம்பளப்பாங்க பாருங்க, அப்புறம் இந்தியர்கள தவிர வேற யாருய்யா நம்மாளுக்கு ஒட்டு போடுவா./////

  இதான் மேட்டரு...

  சங்கக்கார ஒரு ஜெண்டில் மேன் கிரிக்கெட் வீரர்..அவரை மக்கள் தேர்ந்து எடுத்ததில் ஆச்சரியம் இல்லை(ஏன்னா நானும் அவருக்குதானே ஒட்டு போட்டன்.ஹி.ஹி.ஹி.ஹி)

  ReplyDelete
 13. நல்ல தொடர் தொடர்ந்து அசத்துங்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. // விக்கியுலகம் said...
  பெரிய பெரிய ஆளுங்கள பத்தி என்னைய போல ஆளு என்னத்த சொல்றது...அவங்க மேதைங்க....பகிர்வுக்கு நன்றி!//

  எங்களைபோல ஆளுங்களே சொல்றப்போ நீங்க என்ன சொல்ல முடியாது? எனி உள்குத்ஸ்? வரவுக்கு நன்றி மாம்ஸ்.

  ReplyDelete
 15. //K.s.s.Rajh said...
  சார் நான் நேத்து தோனிய பத்தி ஒரு பதிவு போட்டு இருக்கே வந்து பாருங்க....//

  அட்டகாசம்சார், இருங்க வாறேன்.

  ReplyDelete
 16. //K.s.s.Rajh said...
  இந்த ஹன்சிகா சின்ன வயசிலையே கும்புனுதான் இருக்கு..ஹி.ஹி.ஹி.ஹி. என்னத்தை திங்குதோ.......//

  என்னய்யா நீ, இதெல்லாம் சிறுவர் துஷ்பிரயோகம், போலீஸ் கேஸ் ஆகிடப்போகுது...

  ReplyDelete
 17. //K.s.s.Rajh said...

  இதான் மேட்டரு...

  சங்கக்கார ஒரு ஜெண்டில் மேன் கிரிக்கெட் வீரர்..அவரை மக்கள் தேர்ந்து எடுத்ததில் ஆச்சரியம் இல்லை(ஏன்னா நானும் அவருக்குதானே ஒட்டு போட்டன்.ஹி.ஹி.ஹி.ஹி)//

  ஜென்டில் மேன்னா, (பந்து) இருக்கவங்ககிட்ட புடுங்கி இல்லாதவங்களக்கு குடுப்பாரா சார்?

  ReplyDelete
 18. //K.s.s.Rajh said...
  நல்ல தொடர் தொடர்ந்து அசத்துங்க வாழ்த்துக்கள்//

  நன்றி நண்பா, எதோ இத வச்சாவது பொழப்ப ஓட்டுவம்.

  ReplyDelete
 19. //
  இதுல உள்குத்து இருக்கு, வெளிக்குத்து இருக்குன்னு யாரச்சும் கற்பன பண்ணிகிட்டா சேதாரத்துக்கு நாங்கள் பொறுப்பில்லை.
  //

  அப்பா இருக்குனு அர்த்தம்

  ReplyDelete
 20. முதலில் உங்கள் மனம் திறந்த பாராட்டுக்கு நன்றி.

  அடுத்து..

  ReplyDelete
 21. பன்னிக்குட்டி, நிரூவைப் பத்திக்கூட படிக்காம ஓடிப் போய் ஹன்சியைப் பார்த்தா, இப்படிப் பண்ணிட்டீங்களே..இது நியாயமா?

  ReplyDelete
 22. கும்மிப் பதிவு/கமெண்ட் எப்படிப் போடறதுன்னு பன்னிக்குட்டியார்கிட்டத் தான் நாம கத்துக்கணும்..

  ஷார்ப் & ஸ்வீட்டா கமெண்ட் அடிக்கிறதுல அவரை மிஞ்ச ஆள் கிடையாது.

  அதுவும் ஒரு நடிகர் டோன்லயே பேசி/எழுதி கலக்கியது அவர் தான்..அந்த ஐடியாவைப் பிடிச்சாரே, அது தான் அவரோட திறமைக்கு சான்று.

  ReplyDelete
 23. ஈழ விஷயத்தில் நிரூவின் தரப்பு முக்கியமானது என்றே நான் நினைக்கின்றேன். மக்கள் பார்வையில் அந்த விஷயத்தை அணுகுவோர் குறைவு..அதை இங்கே சரியாகச் செய்பவர் நிரூ தான்..

  ReplyDelete
 24. //"என் ராஜபாட்டை"- ராஜா said...

  //
  இதுல உள்குத்து இருக்கு, வெளிக்குத்து இருக்குன்னு யாரச்சும் கற்பன பண்ணிகிட்டா சேதாரத்துக்கு நாங்கள் பொறுப்பில்லை.
  //

  அப்பா இருக்குனு அர்த்தம்//

  என்ன நியாயம் சார் இது, இப்பிடி போட்டா இல்லைன்னு அர்த்தம்னுல்ல நினைச்சிட்டிருந்தேன்...

  ReplyDelete
 25. //செங்கோவி said...
  முதலில் உங்கள் மனம் திறந்த பாராட்டுக்கு நன்றி.

  அடுத்து..//

  விடுங்க சார், இதெல்லாம் ஒருத்தருக்கு ஒருத்தர் பண்ணிக்கறதுதானே...

  ReplyDelete
 26. // செங்கோவி said...
  பன்னிக்குட்டி, நிரூவைப் பத்திக்கூட படிக்காம ஓடிப் போய் ஹன்சியைப் பார்த்தா, இப்படிப் பண்ணிட்டீங்களே..இது நியாயமா?//

  இதுனாலதான் சார் சூப்பர் ஸ்டார், "அதிகமா ஜோள்லுற பதிவரும், நண்பர்கள மதிக்காத பதிவரும் பல்பு வாங்காததா சரித்திரமே இல்லைன்னு" படையப்பால சொன்னது

  ReplyDelete
 27. //செங்கோவி said...
  கும்மிப் பதிவு/கமெண்ட் எப்படிப் போடறதுன்னு பன்னிக்குட்டியார்கிட்டத் தான் நாம கத்துக்கணும்..

  ஷார்ப் & ஸ்வீட்டா கமெண்ட் அடிக்கிறதுல அவரை மிஞ்ச ஆள் கிடையாது.

  அதுவும் ஒரு நடிகர் டோன்லயே பேசி/எழுதி கலக்கியது அவர் தான்..அந்த ஐடியாவைப் பிடிச்சாரே, அது தான் அவரோட திறமைக்கு சான்று.//

  ஆமா சார், அந்த க.....கா... மேட்டர்ல உங்கள சுத்தல்ல விட்டாரு பாருங்க...

  ReplyDelete
 28. //செங்கோவி said...
  ஈழ விஷயத்தில் நிரூவின் தரப்பு முக்கியமானது என்றே நான் நினைக்கின்றேன். மக்கள் பார்வையில் அந்த விஷயத்தை அணுகுவோர் குறைவு..அதை இங்கே சரியாகச் செய்பவர் நிரூ தான்..//

  ஆமா சார், இருதலைக் கொள்ளி எறும்பாக மக்கள் பட்ட வேதனை, இவருதான் பேசுறாருன்னு தோணுது.

  ReplyDelete
 29. செங்கோவி அண்ணே நீங்க பெரிய ஆளுண்ணே ஹி ஹி....

  ReplyDelete
 30. பன்னும் ரொட்டியும் ரொம்ப சாப்பிடாதேய்யானு சொன்னேன் கேட்டாரா ம்ஹும் இப்போ பன்னிகுட்டியா ஆகிட்டாரு...

  ReplyDelete
 31. //MANO நாஞ்சில் மனோ said...
  செங்கோவி அண்ணே நீங்க பெரிய ஆளுண்ணே ஹி ஹி....//

  ஆனா அவரே அந்த குழந்தை முகத்த பாக்க ஓடி பல்பு வாங்கிட்டாரே... ஹி ஹி

  ReplyDelete
 32. //MANO நாஞ்சில் மனோ said...
  பன்னும் ரொட்டியும் ரொம்ப சாப்பிடாதேய்யானு சொன்னேன் கேட்டாரா ம்ஹும் இப்போ பன்னிகுட்டியா ஆகிட்டாரு...//

  அப்ப பண்ணும் ரொட்டியும் சாப்பிட்டா அண்ணன் மாதிரி கலாய்க்க வருமா? ட்ரை பண்ணுவோம்...

  ReplyDelete
 33. எல்லாவற்றையும் ரசித்தேன் பாஸ்..
  செமையாக கலாய்ச்சிருக்கிறீங்க.

  ReplyDelete
 34. புறக்கணிக்கப்பட்ட பதிவரின் உள்ளக்குமுறல்ன்னு அண்ணன் புலம்பியிருந்தாரு பாருங்க அது ஒரு ட்ரண்ட செட்டர் பதிவு//

  அன்பிற்குரிய நண்பா,
  அந்தப் பதிவில் பிரபலமாகத ஒரு பதிவரின் உணர்வுகளிற்கு முக்கியத்துவம் கொடுத்து, தாஹீர் அவர்களின் அனுமதியோடு தான் அப் பதிவினைப் பதிந்திருந்தேன்.

  உண்மையில் அதில் உள் குத்து ஏதும் வைக்கலை.
  தாஹீரின் மன உணர்வுகளையே முன் வைத்திருந்தேன்.
  அப் பதிவின் பின்னர் வரும் ட்ரண்ட செட்டர் பதிவுகளுக்கும் ஏதும் தொடர்பிருப்பதாக நான் நெனைக்கலை பாஸ்.
  http://www.thamilnattu.com/2011/08/blog-post_19.html

  ReplyDelete
 35. தங்களின் அறிமுகங்களுக்கு நன்றி நண்பா.

  ReplyDelete
 36. //நிரூபன் said...
  எல்லாவற்றையும் ரசித்தேன் பாஸ்..
  செமையாக கலாய்ச்சிருக்கிறீங்க.//

  உங்களைப்பத்தியும் ஒரு குறிப்பு இருக்கு பாஸ்.
  ஒருவேள இவரும் படிக்காம காமென்ட் போட ஆரம்பிச்சுட்டரோ?

  ReplyDelete
 37. அடப் பாவிங்களா..

  படிச்சேன்..என்னைப் பற்றிச் சொல்லியிருக்கும் பதிவில் அதிக கமெண்ட் போட விரும்பவில்லை, அதான் அம்பாலிக்கா எஸ் ஆகினேன்.

  ReplyDelete
 38. நிரூபன் சார் இருக்காரே சமயத்துல சார் ரொம்ப சீரியசு, ஆனா புதுசா எந்த பதிவர் வந்தாலும் அவங்க கடைய தேடி போய் வாழ்த்துவதோட மட்டுமில்ல தனது தளத்துல அவங்களுக்கு ஒரு அறிமுகமும் குடுத்து ஆதரவும் குடுக்குறதுல அண்ணன் டாப்பு.//

  புதுசா வாற எல்லோர் பதிவிற்கும் நான் போகும் அளவிற்கு எனக்கு டைம் இல்லை பாஸ்..

  புதுசா வந்த பதிவர்களுள், யார் யார் திரட்டிகளில் இணையாது, திரட்டிகள் பற்றி அறியாதிருக்கிறார்களோ,
  அவர்களுக்குத் தான் முதலில் அறிமுகம் கொடுப்பேன்,

  ReplyDelete
 39. நிரூபன் சார் இருக்காரே சமயத்துல சார் ரொம்ப சீரியசு, ஆனா புதுசா எந்த பதிவர் வந்தாலும் அவங்க கடைய தேடி போய் வாழ்த்துவதோட மட்டுமில்ல தனது தளத்துல அவங்களுக்கு ஒரு அறிமுகமும் குடுத்து ஆதரவும் குடுக்குறதுல அண்ணன் டாப்பு.//

  அப்புறமா....புதிய பதிவர்களை மட்டும் அல்ல..பதிவுலகில் எழுதி வருகின்றோரில் வெளித் தெரியாதோரையும்(அதிகம் பேரால் அறியப்படாதோரையும்) அறிமுகப்படுத்துகிறேன்,.

  ReplyDelete
 40. இவரு வழியா ஈழ மக்கள் வாழ்கைய தெரிஞ்சுக்ககிடைச்சது நமக்கு ஒரு நல்ல அனுபவம், கில்மாபட சி டி வாங்கப்போனது அண்ணனுக்கு ஒரு நல்ல அனுபவம்//

  அவ்...அந்தப் பதிவிலிருந்து நம்ம எல்லாப் பதிவுகளையும் நீங்க மிஸ்ட் பண்ணாம படிக்கிறீங்க போல இருகே...
  பதிவுலகில் நீங்கள் ஒரு மலையப்பா

  ReplyDelete
 41. ஈழ மக்கள் விடயம் பற்றி நீங்கள் சொல்லியிருந்தீங்க.

  ஈழ மக்கள் பற்றி நான் இன்னும் அதிக விடயங்களைப் பகிர வேண்டியுள்ளது,.
  இதுவரை பகிர்ந்ததெல்லாம் சிறு துளி பாஸ்...

  ReplyDelete
 42. // நிரூபன் said...

  //புறக்கணிக்கப்பட்ட பதிவரின் உள்ளக்குமுறல்ன்னு அண்ணன் புலம்பியிருந்தாரு பாருங்க அது ஒரு ட்ரண்ட செட்டர் பதிவு//

  அன்பிற்குரிய நண்பா,
  அந்தப் பதிவில் பிரபலமாகத ஒரு பதிவரின் உணர்வுகளிற்கு முக்கியத்துவம் கொடுத்து, தாஹீர் அவர்களின் அனுமதியோடு தான் அப் பதிவினைப் பதிந்திருந்தேன்.

  உண்மையில் அதில் உள் குத்து ஏதும் வைக்கலை.
  தாஹீரின் மன உணர்வுகளையே முன் வைத்திருந்தேன்.
  அப் பதிவின் பின்னர் வரும் ட்ரண்ட செட்டர் பதிவுகளுக்கும் ஏதும் தொடர்பிருப்பதாக நான் நெனைக்கலை பாஸ்.
  http://www.thamilnattu.com/2011/08/blog-post_19.html///

  அய்யய்யோ நமக்குத்தான் பல்பா... இந்தாளு படிச்சிட்டுதான் காமெண்டு போட்டிருக்காரு, நம்ம நெட் தான் வீக்கு..

  ReplyDelete
 43. Real Santhanam Fanz said...
  //நிரூபன் said...
  எல்லாவற்றையும் ரசித்தேன் பாஸ்..
  செமையாக கலாய்ச்சிருக்கிறீங்க.//

  உங்களைப்பத்தியும் ஒரு குறிப்பு இருக்கு பாஸ்.
  ஒருவேள இவரும் படிக்காம காமென்ட் போட ஆரம்பிச்சுட்டரோ?//

  ஐயோ..வெட்கமா இருக்கு சார்...போங்க..
  அவ்.........

  ReplyDelete
 44. //நிரூபன் said...
  தங்களின் அறிமுகங்களுக்கு நன்றி நண்பா.//

  என்ன சார் இது ஒங்களோட ஒரே ரோதனையா போச்சி, உங்கள அறிமுகப்படுத்துற அளவுக்கு நாங்க இன்னும் வளரல சார்.

  ReplyDelete
 45. //நிரூபன் said...
  ஈழ மக்கள் விடயம் பற்றி நீங்கள் சொல்லியிருந்தீங்க.

  ஈழ மக்கள் பற்றி நான் இன்னும் அதிக விடயங்களைப் பகிர வேண்டியுள்ளது,.
  இதுவரை பகிர்ந்ததெல்லாம் சிறு துளி பாஸ்...//

  நிச்சயமா, எதிர்பார்க்கிறோம்...

  ReplyDelete
 46. அட, எல்லோரையும் நன்கு கவனித்து, அருமையாக அலசியிருக்கீங்க!

  ReplyDelete
 47. //ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
  அட, எல்லோரையும் நன்கு கவனித்து, அருமையாக அலசியிருக்கீங்க!//

  கும்புடுறேன் சார், வாங்க, உங்களையும் கவனிச்சிட்டுதான் இருக்கோம்....

  ReplyDelete
 48. ஆகா! ரெண்டு 'தலை' பற்றி எழுதியிருக்கீங்க! சூப்பர்!

  ReplyDelete
 49. தலைவரு களத்துல எறங்கிட்டாரு போல...

  ReplyDelete
 50. செங்கோவி இன்னும் கஞ்சிக்காவ விடமாட்டேங்கிறாரே? பாவம்யா கமலா காமேசு.....

  ReplyDelete
 51. ////விக்கியுலகம் said...
  பெரிய பெரிய ஆளுங்கள பத்தி என்னைய போல ஆளு என்னத்த சொல்றது...அவங்க மேதைங்க....பகிர்வுக்கு நன்றி!
  ///////

  தக்காளிக்கு லொல்ல பாருய்யா... ங்கொய்யால மேதைன்னு சொல்லி நம்மளையெல்லாம் ராமராஜனாக்கிப்புட்டாரு.....

  ReplyDelete
 52. /////// MANO நாஞ்சில் மனோ said...
  செங்கோவி அண்ணே நீங்க பெரிய ஆளுண்ணே ஹி ஹி....

  ////////

  ஏண்ணே கமலா காமேசையும் உங்க ஹோட்டல்ல பாத்துட்டிங்களா?

  ReplyDelete
 53. ////////MANO நாஞ்சில் மனோ said...
  பன்னும் ரொட்டியும் ரொம்ப சாப்பிடாதேய்யானு சொன்னேன் கேட்டாரா ம்ஹும் இப்போ பன்னிகுட்டியா ஆகிட்டாரு...
  ///////

  யோவ் அது பன்னும் டீயும்யா..... சைட் டிஷ் தக்காளி சட்னி......

  ReplyDelete
 54. //////Real Santhanam Fanz said...
  //MANO நாஞ்சில் மனோ said...
  பன்னும் ரொட்டியும் ரொம்ப சாப்பிடாதேய்யானு சொன்னேன் கேட்டாரா ம்ஹும் இப்போ பன்னிகுட்டியா ஆகிட்டாரு...//

  அப்ப பண்ணும் ரொட்டியும் சாப்பிட்டா அண்ணன் மாதிரி கலாய்க்க வருமா? ட்ரை பண்ணுவோம்...
  /////////

  பன்னும் ரொட்டியும் தின்னா கலாய்க்க மட்டுமில்ல கக்கா கூட வராது......

  ReplyDelete
 55. //ஜீ...... said...
  ஆகா! ரெண்டு 'தலை' பற்றி எழுதியிருக்கீங்க! சூப்பர்!///
  ஆமாங்க..நீங்களும் அண்டர் ஆப்சர்வேஷன்....

  ReplyDelete
 56. ///பன்னிக்குட்டி ராம்சாமி said...
  தலைவரு களத்துல எறங்கிட்டாரு போல...///
  யாருங்க தலைவரு!!!நாங்க சும்மா ஜுஜுபி...

  ReplyDelete
 57. ///பன்னிக்குட்டி ராம்சாமி said...
  செங்கோவி இன்னும் கஞ்சிக்காவ விடமாட்டேங்கிறாரே? பாவம்யா கமலா காமேசு.....///
  ஹீ ஹீ.. கஞ்சிக்கா!!!! அதுதாண்ணே அவருக்கு பல்பு குடுத்தோம்!!!

  ReplyDelete
 58. ///பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ////விக்கியுலகம் said...
  பெரிய பெரிய ஆளுங்கள பத்தி எ..அவங்க மேதைங்க....பகிர்வுக்கு நன்றி!
  ///////

  தக்காளிக்கு லொல்ல பாருய்யா... ங்கொய்யால மேதைன்னு சொல்லி நம்மளையெல்லாம் ராமராஜனாக்கிப்புட்டாரு.....///
  ஆமாண்ணே ... விட்டா இவுங்க உங்கள பவரு ஸ்டாரு கணக்கா ஆக்கிடுவாங்க..

  ReplyDelete
 59. ///பன்னிக்குட்டி ராம்சாமி said...
  பன்னும் ரொட்டியும் தின்னா கலாய்க்க மட்டுமில்ல கக்கா கூட வராது...///
  அண்ணே. கலாய்கிறதுக்கு உங்ககிட்ட ட்ரெய்னிங் எடுகுறோம்,, கக்கா போறதுக்குதான் அண்ணன் சற்குணராஜு இருக்காரே...(கக்கூசில் கக்கா போவது எப்படி .......? )

  ReplyDelete
 60. ஜயா வணக்கமுங்க...அம்மா வணக்கமுங்க.......நான் தாங்க ஸ்டையில் நாராயணன் கஞ்சிபஜார் வலைப்பதிவின் உரிமையாளர்.இன்றைக்குதானுங்க வலைப்பதிவு எழுதவந்து இருக்கேன்.

  என்னையும் இந்த வலையுலகில் ஏற்றுக்கொள்ளுங்கள் பிரபல பதிவர் பெருமக்களே..நீங்களை எல்லாம் வந்து விடுவீங்கனு நினைக்கிறன்.....எனவே எல்லா பிரபல பதிவரும் வாருங்க உங்க ஆதரவை அள்ளிதாருங்க.

  ReplyDelete
 61. பண்ணும் ரொட்டியும் தின்னா கலாய்க்க என்ன கக்கா கூட வராது..................ஹா ஹா

  ReplyDelete
 62. //கும்மாச்சி said...
  பண்ணும் ரொட்டியும் தின்னா கலாய்க்க என்ன கக்கா கூட வராது..................ஹா ஹா//

  நீங்களும் எதுக்கு சார் வெந்த புண்ணுல வேல பாச்சுறீங்க...

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்!!