Monday, September 26, 2011

ஏழாம் அறிவு, அஞ்சலி, காஜல், பவர் ஸ்டார்: கும்ப்ளிங் கும்ப்ளிங் - 25/09/2011

வெல்கம் டு கும்பளிங் கும்பளிங். இதென்ன டூரா? ஆமா சார், உருப்படியா ஏதாச்சும் பதிவு போடுங்கன்னு ஆளாளுக்கு மெயில்ல மெரட்றாங்க (நாங்க என்ன வச்சுகிட்டா வஞ்சகம் பண்றோம்) அதனால இனிமே வாரா வாரம் நாங்க பார்த்த, ரசிச்ச விடயங்கள தொகுக்குறதா முடிவு பண்ணிட்டோம். ஆளாளுக்கு கொத்துபராட்டா போடறாங்க, அவுங்களா யோசிச்சுக்கிறாங்க, நாங்களும் போடுவோம்ல, அதுதான் இந்த கும்பளிங் கும்பளிங்.

இது தேறாதுன்னு முடிவு பண்ணிட்டாங்களாமே உண்மையா? 
தலைவர் படம் வந்தான் வென்றான் அப்புறம் எங்கேயும் எப்போதும்ன்னு ஒரு படம்  வந்திருக்கே, இந்த சுகாசினி அம்மா என்ன சொல்றாங்கன்னு பாப்போமேன்னு ஹாசினி பேசும் படத்த தேடினா, ஜெயா டிவில இருந்தே அவுங்கள தூக்கிட்டாங்களாமே, இப்போ நம்ம மதன் சார்தான்  அந்த புரோகிராம செய்றாராம், விசாரிச்சு பாத்ததுல அவுங்க விமர்சனத்துக்கு நாங்க எழுதின எதிர் விமர்சனத்த பாத்துட்டுத்தான் அப்புடி பண்ணினதா மீடியா வட்டாரத்துல பேசிக்கறதா சொல்றாங்களே உண்மையாவா? பச்சத்தண்ணிய குடிச்சுட்டு பாயசம் சாப்பிட்டதா பில்டப் குடுக்குறதும்பாங்களே ஒரு வேள அது  இதுதானா?

ஏழாம் அறிவு ஆடியோ வெளியீட்டு விழால இயக்குனர் விஜய் பேசறப்போ, “இதுவரை ஆங்கிலப் படங்களைத்தான் ரெஃபரன்ஸுக்கு வைத்துக் கொள்வார்கள் தமிழ் இயக்குனர்கள். இனி ஏழாம் அறிவை அந்த லெவலில் வைக்கலாம். தமிழ்ப் படங்களை உலகமே பார்க்கிறது. அந்த வகையில் இனி ஹாலிவுட் காரர்களும் இந்தப் படத்தை ரெபரன்ஸுக்கு வைக்கும் அளவுக்கு படம் உள்ளது” அப்புடின்னு சொல்லி இருக்காராம். ஒரு வேள இந்த 7ம் அறிவு படத்த இன்ஸ்பிரேஷனா வச்சுகிட்டு ஒரு படம் இயக்குறது இவரோட அடுத்த கட்ட திட்டமா இருக்குமோ? பட் இந்தாளு நேர்ம நமக்கு புடிச்சி இருக்கு. இதுக்கே எத்தன நாளக்கிடா செத்த பாம்பையே அடிப்பீங்கன்னு கடுப்பாகுரீங்களே, அப்புடின்னா அல்கா அஜித் பாடிய சிறகெங்கு என்கிற மலையாள பாடலை டவுன்லோட்பண்ணி சீக்கிரம் சுடனும்ன்னு  வெள்ளிகிழமை  இரவு நடந்த எயார்டெல் சூப்பர் சிங்கர் கிராண்ட் பினாலேவில் தனுஷ், ஜி.வி.பிரகாஷ் தோள்ல கைய போட்டுகிட்டே சொன்னாரே அத என்ன சொல்றது? அது உள்குத்தா, வெளிகுத்தா இல்ல கும்மாங்குத்தா? ஆனா ஒன்னு, பல பேரோட ஃபேவரிட்டான சத்தியபிரகாஷ்க்கு தன்னோட "3" படத்துல வாய்ப்புகுடுக்கறதா ட்வீட் பண்ணியிருக்கறத கண்டிப்பா பாராட்டனும்.எங்களோட ஏழாம் அறிவு பாடல் விமர்சனத்த படிச்சிட்டு இலங்கையில இருந்து வாசக நண்பர் ஒருவர் நமக்கு ஒரு மெயில் தட்டியிருந்தாரு, அதுல இந்த வீடியோ இணைப்பு இருந்திச்சி(பிண்ணனில போறது அவுங்க நாட்டு ஒவ்வொரு பிரண்டும் தேவ மச்சான்). அப்புடியே ரிங்கா ரிங்கா பாட்ட ஓடவிட்டா ஏழாம் அறிவு ஹீரோ இன்றடக்சன் சாங் பாக்க தேவயில்ல, அதேதான் எடுத்திருக்காங்க, வீடியோவையும் கூடவே ரிலேடட் வீடியோக்களையும் பாருங்க, முருகதாஸ் காப்பி அடிச்சுட்டர்ன்னு ஒரே பந்தா, நிச்சயமா படம் வந்ததுக்கப்புறம் சுட்டுட்டாங்கன்னு நெறையபேர் கூச்சல் போட போறாங்க, அந்த அளவுக்கு வேற வேற வீடியோக்கள் இருக்கு. அதனால இப்பவே  சொல்லிக்கறோம், இது ப்ளாஷ்மெப் அப்பிடின்குற வகை. இதுக்கு காபி ரைட்ஸ் எல்லாம் தேவையில்ல, யாரு வேணும்னாலும் பண்ணலாம். மேலதிக விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

நம்ம சிவகார்த்திகேயன் தம்பி அது இது எது ப்ரோக்ராமுக்கு வந்திருந்த ஜெய்கிட்ட உங்களுக்கு எப்படிப்பட்ட பொண்ணு பொண்டாட்டியா வரணும்ன்னு கேட்டதுக்கு அவரு அந்த எங்கேயும் எப்போதும் மணிமேகல மாதிரி பொண்ணுதான் வேணும்ன்னு  சொல்லிட்டு, ப்ளூ ஜீன்ஸ் வைட் டீஷர்ட்  போட்ட பொண்ணா இருந்தாகூட ஓகேன்னு அஞ்சலிய பாத்துகிட்டே சொன்னாரு.  மேட்டர் என்னான்னா அன்னிக்கு அஞ்சலி பாப்பா ப்ளூ ஜீன்ஸ் வைட் டீஷர்ட்ல வந்திருந்தது மட்டுமில்ல,  நான் ரியல் லஃப்லையும் எங்கேயும் எப்போதும் மணிமேகல மாதிரி பொண்ணுதான்னு ஸ்டேட்மென்ட் வேற குடுத்திருந்திச்சு. அப்புடின்னா  நாங்க கேள்விப்பட்ட கிசு கிசு எல்லாமே உண்மையா? இந்த நியூஸ வாசிச்சிட்டு எத்தின பதிவர்கள் ஹார்ட்அட்டாக் வந்து சோனா அட்மிட் ஆன அதே ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகப்போராங்களோ?

நல்லாதானே இருந்தாங்க, ஏன் மறுபடியும் இப்புடி ஆகிட்டாங்க?
ஹாஸ்பிட்டல்னதும் தான் ஞாபகத்துக்கு வருது, சமீபத்துல பவர் ஸ்டார்  பேட்டி ஒன்னு பார்க்கக் கெடச்சிச்சு. பவர் ஸ்டார் அவர நம்பி இருக்கற அஞ்சு லட்சம் ரசிகர்களுக்காக கான்சசன் ரேட்டுல பைத்தியம் சாரி வைத்தியம் பாக்குற திட்டம் பத்தி சொன்னாரு, அப்புறம்தான்யா வெளங்கிச்சு அவரு ஏன் நடிக்க வந்தாருன்னு, ரெண்டு ஹாஸ்பிட்டல் கட்டி வச்சிருக்கருல்ல, கூட்டம் வர வேணா, எல்லாம் ஒரு விளம்பரம்தான். அதுசரி, கேள்வி கேக்குறவன் எதுக்கு கில்மா பட போஸ்டர் மாதிரியே போஸ்டர் ஒட்டுரீங்கன்னு சுத்தி வளச்சி கேக்குறதுகூட புரியாம சீரியஸா பதில் சொல்ற ஆளு இம்புட்டு யோசிச்சிருப்பாருங்குறீங்க, டீல்ல விடுங்கப்பா.

ஒருவேள நிஜமாவே இந்த காஜல் பொண்ணுக்கு மர கழண்டுருச்சான்னு நமக்கு ஒரு கன்பூஷன். கொஞ்ச நாளா எந்த மேகசீன பாத்தாலும் டிரெஸ்ஸ கழட்டிட்டு போஸ் குடுக்குது, அப்புறமா அது நான் இல்லன்னு பேட்டி குடுக்குது. FHM மேகசீனுக்கு குடுத்த போடோவோட சலசலப்பே இன்னும் அடங்கல இந்த மாத பிலிம்பேர் மேகசினோட அட்டைப்படமும் அம்மணிதான், ஆனா என்ன பயத்துல புறமுதுகு காட்டி நிக்குது.   பாலிவூட் பட ஆசைதான் இந்த பொண்ண இம்புட்டு பாடுபடுத்துதின்னு வெளில பேசிக்கறாங்க. பாலிவூட் பட வாய்ப்பு கெடைக்குதோ இல்லையோ நெறைய பிட்டுப்பட வாய்ப்பு கெடைக்குதாம். ஏம்மா, ப்ளே பாய்ன்னு ஒரு மேகசீன் இருக்காமே, அதுல போட்டோ வந்தா டைரெக்டா ஹாலிவூடுக்கே போயிடலாமே, அத விட்டுட்டு எதுக்கு வீணா லோகல்ல ட்ரை பண்ணிக்கிட்டு. இது கிக்கான பிகருதான் ஆனா கன்போமா மக்கு பிகரு. நமக்கு ஒன்னு மட்டும் புரியல, ஏன் இந்த கலாசார காவலர்கள் இன்னும் போராட்டம் நடத்தல?
பண்ணறதையும் பண்ணிட்டு என்ன கோபமா லுக்கு வேண்டி கெடக்கு.

ஆங், ஒரு முக்கியமான மேட்டர், நல்ல வேள போராட்டம்னதும்  ஞாபகம் வந்திரிச்சு, ஐ போன், ஐ பாட், ஐ போட், ஆப்பிள் மெக்ன்னு என்னமோ எல்லாம் இருக்காமே, அதுல எல்லாம் தலைவரோட பெயர டைப் பண்ணினா அது என்னமோ "lanthanam" அப்பிடின்னு திருத்துது. அதனால அதுகளுக்கு எதிரா ஒரு போராட்டம் பண்ணலாம்னு இருக்கோம். இந்த ஆப்பிள் கம்பனிக்கு முன்னால உண்ணாவிரதம் இருக்க யாரெல்லாம் வாறீங்க? (தமிழேன்டா!!!)

வர்ற அக்டோபேர்ல நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்ல அம்மா, தாத்தான்னு ஆளாளுக்கு சிங்கம் சிங்கிளா வரும்னு ஸ்டேட்மென்ட் குடுகுறாங்க  (தேர்தலா இல்ல இது என்ன வண்டலூர்  Zoo வா). அம்மாவே சரணம்னு இருந்த கேப்டன் இப்ப என்னா பண்றதுனே  தெரியாம முழிச்சிக்கிட்டு இருக்காரு. நம்ம டவுட் என்னன்னா இந்த வாட்டி உள்ளாட்சி தேர்தல்ல அம்மா கட்சில நிக்கிறதுக்கு சீட் வாங்கி தர்றேன்னு நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுக்கு உறுதிமொழி வழங்குனாரே நம்ம டாக்குட்டர் அப்பா, அம்மா ரிலீஸ் பண்ண வேட்பாளர் லிஸ்ட்ல  அவுங்க பேர் எல்லாம் இருக்கா? அப்புடி இல்லன்னா அவுரு மூஞ்சிய எங்க கொண்டு  போய் வச்சுப்பாரு?

சரிப்பா இன்னிக்கி நாங்க போட்ட மொக்கையில ரொம்ப கடுப்பாகி இருப்பீங்க, உங்கள ஆசுவாசப்படுத்தறதுக்காக இந்த வீடியோவ பாருங்க, இதுல உள்ள தொப்பி போட்ட ஆசாமிகள் யார்ன்னு புரியுதா? என்னமா யோசிக்கராங்கய்யா..டிஸ்கி 1: சில பல அரசியல் காரணங்களால் இந்த வார பதிவுலக ரவுண்டப் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.  அது என்ன அரசியல் காரணம்னு யோசிக்கறீங்களா? ஒன்னும் இல்லங்க, இந்த வாரம் கொஞ்சம் பிசி ஆகிட்டதால நிறைய வலைப்பூக்கள படிக்க முடியல, அம்புட்டுதேன்.

29 comments:

 1. கும்ப்ளிங்...கும்ப்ளிங் நல்ல ஆரம்பம்.

  தொடர்ந்து கலக்குங்க கலக்கல்-பாய்ஸ்!

  ReplyDelete
 2. அஞ்சலி ஏன்யா இப்படி நிக்குது..மணிமேகலை இப்படிப் பண்ணலாமா...முடியலை.

  ReplyDelete
 3. ///Blogger செங்கோவி said...

  கும்ப்ளிங்...கும்ப்ளிங் நல்ல ஆரம்பம்.

  தொடர்ந்து கலக்குங்க கலக்கல்-பாய்ஸ்!///
  ஆமாங்க இதையும் நாங்களேதான் யோசிக்கிறோம்!!! உங்க முதல் வார்த்தைக்கு நன்றி!!

  ReplyDelete
 4. ////செங்கோவி said...

  அஞ்சலி ஏன்யா இப்படி நிக்குது..மணிமேகலை இப்படிப் பண்ணலாமா...முடியலை.///
  அதுக்கு என்ன கஷ்ட காலமோ!! இது ஏழாம் அறிவு பாடல் ரிலீஸ் பங்க்ஷன்ல...

  ReplyDelete
 5. இனிய காலை வணக்கம் பாஸ்,
  நலமா?

  ஏழாம் அறிவு படப் பாடல்கள், படம் பற்றிய பின்னணி விசயங்கள் என கும்மியிருக்கிறீங்க.
  ரசித்தேன்.

  ReplyDelete
 6. இலங்கைப் பாட்டிலையும் கையை வைச்சிட்டாங்களா..

  அவ்....

  ஆங்கிலப் பாடல்கள் என்றால் நம்மாளுங்க இலகுவாக கண்டு பிடிக்கிறாங்களே.
  இப்படி சிங்கள மொழியில் கைவைத்தால் மாட்டிக்க மாட்டோம் என்று நினைத்திருப்பாங்களோ;-))))))

  ReplyDelete
 7. கும்ப்ளிங் கும்ப்ளிங் ஆரம்பமே கலக்கல்.

  ReplyDelete
 8. ஆஹா ஆரம்பிச்சிட்டாயிங்கடோ..............கலக்கல்...!!!

  ReplyDelete
 9. ///செங்கோவி said...
  அஞ்சலி ஏன்யா இப்படி நிக்குது..மணிமேகலை இப்படிப் பண்ணலாமா...முடியலை///

  அய் ஜாலி....தங்கத்தலைவர் ஜெய் வாழ்க........ஹி.ஹி.ஹி.ஹி

  ReplyDelete
 10. ///கிக்கான பிகருதான் ஆனா கன்போமா மக்கு பிகரு.////

  மக்குனாலும் கிக்கான பிகராச்சே..என்னோட பதிவுல வைச்சு இருக்கேன் பாருங்க தலைவிக்கு கட்டோவ்வுட்டு..ஹி.ஹி.ஹி.ஹி..

  ReplyDelete
 11. பதிவு சும்மா சூப்பர் அப்பு

  வீடியோ கலக்கல்..

  ReplyDelete
 12. //நிரூபன் said...

  இனிய காலை வணக்கம் பாஸ்,
  நலமா?

  ஏழாம் அறிவு படப் பாடல்கள், படம் பற்றிய பின்னணி விசயங்கள் என கும்மியிருக்கிறீங்க.
  ரசித்தேன்.///
  காலை(மாலை!!) வணக்கம் பாஸ்... நலம்... ஏழாம் அறிவு இப்பதான் ஆரம்பிச்சி இருக்கோம்.. போக போக பாருங்க பாஸ்...

  ReplyDelete
 13. ///நிரூபன் said...

  இலங்கைப் பாட்டிலையும் கையை வைச்சிட்டாங்களா..

  அவ்....

  ஆங்கிலப் பாடல்கள் என்றால் நம்மாளுங்க இலகுவாக கண்டு பிடிக்கிறாங்களே.
  இப்படி சிங்கள மொழியில் கைவைத்தால் மாட்டிக்க மாட்டோம் என்று நினைத்திருப்பாங்களோ;-))))))//
  இவுங்க அப்புடிதான் பாஸ்... ஆமா இதுல நாங்க காட்சியமைப்ப தான் காப்பின்னு சொன்னோம் (!!உண்மைல அது வேற மேட்டர்)... ஆனா அந்த பாட்டு அப்புடியே நம்ம எயார்டெல் "ஒவ்வொரு பிரண்டும் தேவை மச்சான்" மாதிரியே இருக்கு.. சிங்கள மொழில என்ன சொல்றாங்க பாஸ்?

  ReplyDelete
 14. //பாலா said...

  கும்ப்ளிங் கும்ப்ளிங் ஆரம்பமே கலக்கல்.///

  வை ஆர் யு கும்ப்ளிங் கும்ப்ளிங்? நன்றி பாஸ்..

  ReplyDelete
 15. //MANO நாஞ்சில் மனோ said...

  ஆஹா ஆரம்பிச்சிட்டாயிங்கடோ..............கலக்கல்...!!!//

  வாங்கண்ணா வாங்க ... ஆமா எழுந்துட்டோம் இதோ வந்துர்றோம்!!!

  ReplyDelete
 16. ////K.s.s.Rajh said...

  ///செங்கோவி said...
  அஞ்சலி ஏன்யா இப்படி நிக்குது..மணிமேகலை இப்படிப் பண்ணலாமா...முடியலை///

  அய் ஜாலி....தங்கத்தலைவர் ஜெய் வாழ்க........ஹி.ஹி.ஹி.ஹி///

  என்னாது தங்க தலைவர் ஜெய்யா? அப்ப அவருதான் அடுத்த டாக்குட்டர்ன்னு சொல்றீங்களா?

  ReplyDelete
 17. ///K.s.s.Rajh said...

  ///கிக்கான பிகருதான் ஆனா கன்போமா மக்கு பிகரு.////

  மக்குனாலும் கிக்கான பிகராச்சே..என்னோட பதிவுல வைச்சு இருக்கேன் பாருங்க தலைவிக்கு கட்டோவ்வுட்டு..ஹி.ஹி.ஹி.ஹி..////

  இது எதுக்கு கட்அவுட் எல்லாம்? மொத்தமா அவுத்து போட்டுகின்னு இருந்ததுக்கா?

  ReplyDelete
 18. ///ஜ.ரா.ரமேஷ் பாபு said...

  பதிவு சும்மா சூப்பர் அப்பு

  வீடியோ கலக்கல்..///
  ஆமாப்பு அந்த வீடியோல இருக்கது என்னாதுன்னு கண்டு பிடிச்சிடீங்களா?

  ReplyDelete
 19. அரசியல் காரணம் <= பிசி
  -:)

  ReplyDelete
 20. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  //:)//

  என்னங்க இது? புள்ளி வச்சு கோலம் போட்டிருக்கீங்க?

  ReplyDelete
 21. ரெவெரி said...
  //அரசியல் காரணம் <= பிசி
  -:)//

  இவரும் அதே புள்ளி ஆனா வேற கோலம்... அரசியல் வேணாம்னுதான் பிசி ஆகிட்டோம்..

  ReplyDelete
 22. தமிழ்வாசி - Prakash said...
  //கலக்கல்ஸ்...//

  நன்றி சார், ஒத்த சொல்லால...

  ReplyDelete
 23. அப்பறம் மொக்க மாமா!உடம்பு பரவால்லையா?

  ReplyDelete
 24. என்ன உங்களால ஒருத்தருக்கு வேலை போயிடுச்சா?ஏங்க இப்படி?

  ReplyDelete
 25. கோகுல் said...
  //அப்பறம் மொக்க மாமா!உடம்பு பரவால்லையா?//

  அவருக்கென்ன கெத்தா இருக்காரு....

  ReplyDelete
 26. கோகுல் said...
  //என்ன உங்களால ஒருத்தருக்கு வேலை போயிடுச்சா?ஏங்க இப்படி?//

  நாங்க எங்க கடமையதானேங்க செஞ்சோம்..

  ReplyDelete
 27. அடேங்கப்பா ஒரே பதிவுல எம்புட்டு மேட்டர்...

  ReplyDelete
 28. //Philosophy Prabhakaran said...
  அடேங்கப்பா ஒரே பதிவுல எம்புட்டு மேட்டர்...//

  நீங்க உலகத்தையே சுத்திக்காட்டுறீங்க, நாங்க வெறும் உள்ளூர்தான்..

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்!!