Monday, October 3, 2011

தமிழ் சினிமாவின் தடைகளும் சந்தானத்தின் பங்களிப்பும்


வர்றேண்டா, இனிமேதான் ஆட்டமே கள கட்டபோகுது..
சினிமா என்பது நம் மக்களிடையே ஊறிப்போன ஒன்று. அந்தவகையில் இந்த சினிமா கலாசாரம் ஆரோக்கியமானதாக உள்ளதா என்கிற கேள்வி தவிர்க்க முடியாதது. தற்போதுள்ள சினிமா கலாசாரம் கண்டிப்பாக ஆரோக்கியமானதல்ல என்கிற பதிலையே வருத்தத்துடன் தெரிவிக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. தமிழ் சினிமா பெரும்பாலும் பொழுது போக்கு வட்டத்துக்குள்ளேயே அடைக்கப்படுகிறது. மாஸ் என்டேர்டைனர்ஸ் என்பதே தமிழ் சினிமாவின் உச்சகட்டம். இது நாயகன் விம்பத்தின்பால் கட்டமைக்கப்பட்டது. ஒரு கதாநாயகனை சுற்றி பின்னப்படும் கதை, அவனது வீர தீர சாகசங்களை சொல்லி முடிக்கும், அல்லது அவனது வாழ்க்கைப் போராட்டத்தை சொல்லி முடிக்கும். தமிழ் சினிமாவின் முதல் எதிரி நம் முன்னோர்கள் கட்டமைத்த இந்த கதாநாயகன் விம்பமும் அதை அரசியலுக்கான அடித்தளமாக எண்ணி நம் கதாநாயகர்கள் செய்த தகிடு தத்தம்களுமே.

நமது தமிழ் சினிமாவின் கதைக் களத்தை  உற்று நோக்கினால் அது ஒரு குறுகிய வட்டத்துக்கு உள்ளேயே அடைக்கப்பட்டிருக்கிறது. ஒரு கதாநாயகன் கதாநாயகி. இவர்களுக்கிடையே உள்ள காதல், அல்லது குடும்ப செண்டிமெண்ட், அல்லது ஒரு வில்லனை கதாநாயகன் எதிர்ப்பது. தமிழ் சினிமாவின் ஆரம்ப நாட்களில் இருந்து இன்று வரை உள்ள வழிமுறை இதுவே. நாயகன், நாயகி, வில்லன் தவிர வரும் அனைத்து பாத்திரங்களும் பலவீனமானதாகவே இருக்கும். இது கமெர்ஷியல் திரைப்படங்களில் இருந்து யதார்த்த திரைப்படங்கள் என அழைக்கப்படும் திரைப்படங்கள் வரை காணப்படும். கதாநாயகன் அதி புத்திசாலியாக இருப்பார், அல்லது மகா நல்லவராக இருப்பார், அல்லது உருப்படாத கழுதையாக இருப்பார், அதில் எந்த குறையும் இல்லை, ஆயினும் அவர் சார்ந்த அனைத்து கதாபாத்திரங்களும் மழுங்கடிக்கப்பட்டதாகவே இருக்கும். இதுதான் தமிழ் சினிமாவின் முதல் வரையறை.

இந்த எளவு எங்க போய் முடியப்போகுதோ.. நாமதான் ஏதாச்சும் பண்ணனும் போலிருக்கு.
காலா காலமாக திரையில் தோன்றும் கதாநாயகர்கள் நம்மை காக்க வந்த கடவுளாகவே சித்தரிக்கப் பட்டு வருகிறார்கள். சினிமாவில் கதாநாயகனாக நடிக்கும் ஒருவர் தமிழ் நாட்டின் அடுத்த முதல்வருக்கான தகுதியை கொண்டிருக்கவேண்டும் எனவே ரசிகனும் எதிர்பார்க்கிறான், அதனையே நாயகர்களும் உருவாக்க நினைக்கிறார்கள். இதனால் தான் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தாலும் நம் நாயகர்கள் கருத்துச்சொல்ல வேண்டும், காவிரி நீர் பிரச்சினையாக இருந்தாலும் இவர்கள் தீர்த்து வைக்க வேண்டும், ஈழப் பிரச்சினையாக இருந்தாலும் இவர்கள் தலையிட வேண்டும். நம் நாயகர்களோ ரசிகர் மன்றங்களாக ஆரம்பித்து பின்னாளில் அதனை ஒரு அரசியல் கட்சியாக மாற்றி, அரசியல் வாதிகளாகும் நோக்கத்துடனேயே தந்திரமாக செயற்படுகின்றனர், அல்லது அரசியலுக்கு வருவேன் வரமாட்டேன் என உள்ளே வெளியே ஆட்டம் ஆடுவார்கள். ஒரு சினிமாவுக்கான பட்ஜெட் தொழில்நுட்ப குழு, கதை அனைத்தும் நாயக நடிகரையும், அவரது இமேஜ், அவருக்கு உள்ள வெறித்தனமான ரசிகர்கள்  அதனால் உள்ள வியாபார மட்டம் போன்றவற்றை அடிப்படையாக வைத்தே தீர்மானிக்கப்படுகின்றது. 

இந்த வட்டத்துக்குள் கதை சொல்ல ஆரம்பிக்கும் இயக்குனருக்கு நிச்சயமாக படைப்பு சுதந்திரம் இல்லை. யதார்த்தமாக படம் எடுக்க முடியாது. இந்த எழுதப்படாத விதியை மீற பலபேருக்கு துணிவில்லை, சில இயக்குனர்கள் இதில் சற்று மாறுபட்டு "கதாநாயகன்" அல்ல "கதையின் நாயகன்" என்கிற விம்பத்தை பதிக்கிறார்கள். இங்கும் ஒருவர், அவரை சுற்றிய கதையே திரைப்படம் ஆகிறது. படம் பார்கச்செல்லும் ரசிகனும், படத்தில் ஒரு நாயகனையே காண்கிறான். நாயகனை உயர்த்துவதற்காக அவன் சார்ந்த ஏனைய கதாபாத்திரங்கள் மழுங்கடிக்கப்படுகிறது. உதாரணமாக நாயகனின் நண்பர்கள். பெரும்பாலும் இவர்கள் காமெடி செய்யவே பயன்படுவார்கள். சில வேளைகளில் கதையின் ஓட்டத்துக்கு உதவுகிறேன் பேர்வழி என நம்மை வறுத்து எடுப்பார்கள். இந்த கதாபாத்திரங்கள் நாயகனை மிகைத்திடாதவண்ணம் மிகக் கவனமாக கையாளப்படும். பிற கதாபாத்திரங்கள் நாயகனை மிகைக்க முடியும் என்கிற நிலை தோன்றும் வரை படைப்பு சினிமா என்பது நமக்கு எட்டாக்கனி. அதுவரை இந்த நடிகர்கள் கொடுமையை நாம் அனுபவித்தே ஆகவேண்டும். இதற்கு தீர்வு இருக்கிறதா? ஆம், இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு மன்மதன் என்கிற திரைப்படம் மூலம் அறிமுகமானது அந்த தீர்வு. எங்கள் தலைவர், நகைச்சுவை அரசர் சந்தானம் தான் அந்த தீர்வு.

என்னா அக்கப்போரு பண்ணினீங்க, இனி வேடிக்க மட்டும் பாருங்க..
என்ன நல்லாதானே போய்கிட்டு இருந்திச்சு ஏன் இப்ப தீடீர்னு மொக்க ஸ்டார்ட் பண்ணிட்டங்கன்னு பாக்கிறீங்களா, இது மொக்க இல்லீங்க, நிஜம். வழக்கமாக நாயகனிடம் அடங்கிப்போகும் மக்கு நண்பன் போலல்லாமல், நாயகனை சீண்டும், அறிவுரை வழங்கும், உதவிசெய்யும், நாயகனை வழிநடத்தும் நண்பராகவும் ஒரு காமெடி நடிகன் இருந்து ஜெயிக்க முடியும் என்பதை சாதித்துக்க் காட்டியவர். பாஸ், sms, சிறுத்தை, தெய்வத்திருமகள் போன்ற படங்கள் இதற்க்கு எடுத்துக்காட்டு. இயல்பான நட்பு வட்டத்தை திரையில் தோற்றுவிக்க முடியும் என்பதையும் எடுத்துக்காட்டியவர். எதர்க்கெடுத்தாலும் நாயகனுக்கு ஜால்ரா தட்டும் நண்பராக அல்லாமல், நாயகனது குறை நிறைகளை உணர்த்தக்கூடிய, அந்த கதாபாத்திரத்துக்கு முழுமை சேர்க்கக்கூடிய (காம்ப்ளிமென்ட்) நிஜ வாழ்க்கை நட்பை திரையில் கொண்டுவருவதற்கு ஒரு தூண்டுகோலாக இருக்கிறார். மிகை நடிப்பு, அங்க சேஷ்டைகள், உதைப்பது அல்லது உதை வாங்குவது, கருத்து சொல்லி வறுத்தெடுப்பது அல்லாமல், இயல்பாக, நிஜ வாழ்கையில் நடக்கக்கூடிய விடயங்களை திரையில் செய்து கைதட்டல் வாங்கியவர். நாயகனை மிகைக்கும் அல்லது நாயகனுக்கு சமனான கதா பாத்திரங்களையும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என எடுத்துக்காட்டியிருக்கிறார். நாயகனுக்கு இணையான புட்டேஜ் இன்னொரு கதாபாத்திரத்துக்கும் வழங்கலாம் என்பதை தெளிவு படுத்தியிருக்கிறார். 

தலைவர் பல இயக்குனர்களுக்கு தைரியம் அளித்திருக்கிறார், கதாநாயகனை வைத்து மட்டுமல்லாமல் கதாபாத்திரங்களை வைத்து கதை பின்னும் சுதந்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறார். பல பெரிய நடிகர்களின் படங்களே சந்தானத்தை நம்பித்தான் இருக்கு, எந்த நகைச்சுவை நடிகருக்கும் இல்லாத ஆன்லைன் ரசிகர் வட்டம், சில சமயங்களில் சில கதாநாயகர்களை மிஞ்சும் ரசிகர் வட்டம் தலைவருக்கு  இருக்கு. இது தமிழ் சினிமாவுக்கு ஒரு மிகப்பெரும் வெற்றி. நிஜமான சினிமா ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரும் வெற்றி. நாங்க சந்தானம் ரசிகர்களா இருக்கிறதும், தலைவருக்கு ஆன்லைன் ரசிகர் மன்றம் வச்சிருக்கிறதும் நியாயமா இல்லையான்னு இப்ப சொல்லுங்க சார்.


டிஸ்கி 00: இது காபி பேஸ்ட் பதிவோ மொழிபெயர்ப்பு பதிவோ அல்ல, சோ, எந்த தயக்கமும் இல்லாமல், கூகிளிடம் விசாரிக்காமல் காமென்ட் போடலாம் என தைரியமாக தெரிவித்துக்கொள்கிறோம்.

டிஸ்கி 01: தமிழ் சினிமாவுக்கு தலைவரின் முக்கியத்துவத்தை இந்த முக்கியமான பதிவில் எடுத்துக்கூறியிருக்கிறோம். பதிவுலக வராற்றிலேயே ஒரு முக்கியமான பதிவு, அட எங்களுக்கு முக்கியமான பதிவு சார். அதாவது எங்களது ஐம்பதாவது பதிவு.


சந்தானம் 50 அல்ல,  பதிவு எண் 50. 


63 comments:

 1. அண்ணே இனிய காலை வணக்கம்!

  நலமா..

  பேஸ்புக்கிற்கு மெசேஜ் அனுப்பியிருக்கேன்.

  ReplyDelete
 2. ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் என்று சொல்லி ஒரு வட்டத்திற்குள் உங்களை நிறுத்திப் பார்க்க விரும்பவில்லை.

  ஆனாலும் உங்களின் எழுத்து நடைக்கும், கலாய்த்தல் நிறைந்த மொக்கைகளுக்கும், சினிமா பற்றிய சுவாரஸ்யமான விடயப் பரப்புக்களைத் தொட்டு நீங்கள் மேற்கொள்ளும் அலசல்களும், எப்போதும் வாசகர் உள்ளங்களிற்கு விருந்தளிக்கும் வண்ணம் தரம் குன்றாது ஜனரஞ்சக அந்தஸ்தினை நோக்கிய படைப்புக்களாக நகர வேண்டும் என்று வாழ்த்துறேன் சார்!

  ReplyDelete
 3. நல்லதோர் அலசல் பாஸ்,

  சந்தானம் போன்று ஏனைய நடிகர்களையும் தமிழ் சினிமா மாற்றிக் காண்பித்து, சினிமாவின் ஒரே மாதிரியான படங்களினைத் திரும்பத் திரும்பத் தந்து எம்மையெல்லாம் சலிக்கச் செய்யும் இயல்பிற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்!

  ReplyDelete
 4. 50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. சந்தானத்தின் குடும்ப ஸ்டில்ஸ்ஸாஆஆ... அலசல் பின்னி பெடலெடுக்குறீங்க... கலக்குங்க பாஸ்

  ReplyDelete
 6. வணக்கம் பாஸ் 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. கொஞ்ச காலம் மொக்கை படமாக இருந்தாலும் வடிவேல் இருந்தால் படம் ஓடும் என்ற நிலைமை இருந்தது..அது இப்ப மாறி சந்தாணம் இருந்தால் அது மொக்கை படம் என்றாலும் ஓடும் என்ற நிலை வந்துவிட்டது..கவுண்டமணி இல்லாத தமிழ் சினிமாவுக்கு சந்தாணத்தின் வரவு ஆறுதல்

  ReplyDelete
 8. சிம்பு ஒரு நல்ல நடிகர்,பாடகர்,இயக்குநர்,பாடல் ஆசிரியர்,இப்படி பல முகம் அவருக்கு ஆனால் அவர் செய்த வேலைகளில் எனக்குப்பிடித்தது என்றால் சந்தாணத்தை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திவிட்டதுதான்...

  ReplyDelete
 9. 50 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

  ஒரு அசத்தலான பதிவையே தந்திருக்கிறீர்கள். கதாநாயகன் என்ற விம்பத்தையே சுற்றிச்சுழரும் தமிழ்சினிமா எப்போது மாற்றமடைகிறதொ அப்போதுதான் மாற்றமடையும்.

  சந்தானம் உண்மையிலேயே தமிழ்சினிமாவிற்கு ஒரு மைல் கல்தான்

  ReplyDelete
 10. ovvoru pathivum super boss athuvum intha 50th rocking thala thalabathy na summava

  ReplyDelete
 11. பாஸ்.. இதுக்கு ஒரு கமெண்ட் போட்டிருந்தனே.. எங்க காணோம் Spam இற்குள் பொய்விட்டதா

  ReplyDelete
 12. நிரூபன் said...
  //அண்ணே இனிய காலை வணக்கம்!
  நலமா..
  பேஸ்புக்கிற்கு மெசேஜ் அனுப்பியிருக்கேன்.//

  இனிய காலை வணக்கம். நன்றி பாஸ்..


  //ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் என்று சொல்லி ஒரு வட்டத்திற்குள் உங்களை நிறுத்திப் பார்க்க விரும்பவில்லை.//

  அடடா.. வட்டம் சதுரம்னெல்லாம் தத்துவம் பேசுறாரே..

  //ஆனாலும் உங்களின் எழுத்து நடைக்கும், கலாய்த்தல் நிறைந்த மொக்கைகளுக்கும், சினிமா பற்றிய சுவாரஸ்யமான விடயப் பரப்புக்களைத் தொட்டு நீங்கள் மேற்கொள்ளும் அலசல்களும், எப்போதும் வாசகர் உள்ளங்களிற்கு விருந்தளிக்கும் வண்ணம் தரம் குன்றாது ஜனரஞ்சக அந்தஸ்தினை நோக்கிய படைப்புக்களாக நகர வேண்டும் என்று வாழ்த்துறேன் சார்!//

  மெய் சிலிர்க்குது பாஸ், கோடி நன்றி..

  ReplyDelete
 13. //சந்தானம் போன்று ஏனைய நடிகர்களையும் தமிழ் சினிமா மாற்றிக் காண்பித்து, சினிமாவின் ஒரே மாதிரியான படங்களினைத் திரும்பத் திரும்பத் தந்து எம்மையெல்லாம் சலிக்கச் செய்யும் இயல்பிற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்!//

  வியாபாரம், ரசிகர்களின் ரசனை அது இதுன்னு நொண்டி சாக்கு சொல்லறது மாறும் வரை அது கொஞ்சம் கஷ்டம்..

  ReplyDelete
 14. மாய உலகம் said...
  //50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்//

  நன்றி ராஜேஷ்..

  //சந்தானத்தின் குடும்ப ஸ்டில்ஸ்ஸாஆஆ... அலசல் பின்னி பெடலெடுக்குறீங்க... கலக்குங்க பாஸ்//

  இது ட்விட்டர் பான்சுக்காக...

  ReplyDelete
 15. K.s.s.Rajh said...
  //வணக்கம் பாஸ் 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்//

  நன்றி ராஜ்,

  //கொஞ்ச காலம் மொக்கை படமாக இருந்தாலும் வடிவேல் இருந்தால் படம் ஓடும் என்ற நிலைமை இருந்தது..அது இப்ப மாறி சந்தாணம் இருந்தால் அது மொக்கை படம் என்றாலும் ஓடும் என்ற நிலை வந்துவிட்டது..கவுண்டமணி இல்லாத தமிழ் சினிமாவுக்கு சந்தாணத்தின் வரவு ஆறுதல்//

  ஆம் ராஜ், தலைவர் ஒரு படி மேலே சென்று ஆரோக்கியமான தமிழ் சினிமாவுக்கு வலி தேடிக்கொடுத்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது..

  //சிம்பு ஒரு நல்ல நடிகர்,பாடகர்,இயக்குநர்,பாடல் ஆசிரியர்,இப்படி பல முகம் அவருக்கு ஆனால் அவர் செய்த வேலைகளில் எனக்குப்பிடித்தது என்றால் சந்தாணத்தை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திவிட்டதுதான்...//

  நமக்கு பிடித்ததும் அதுதான்...

  ReplyDelete
 16. மதுரன் said...
  //50 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.//

  நன்றி மதுரன்..

  //ஒரு அசத்தலான பதிவையே தந்திருக்கிறீர்கள். கதாநாயகன் என்ற விம்பத்தையே சுற்றிச்சுழரும் தமிழ்சினிமா எப்போது மாற்றமடைகிறதொ அப்போதுதான் மாற்றமடையும்.//

  ஆம் மதுரன், அதுதான் நமது ஆதங்கமும், ஆனால் அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது..

  //சந்தானம் உண்மையிலேயே தமிழ்சினிமாவிற்கு ஒரு மைல் கல்தான்//

  நிச்சயமாக, தலைவர் ஒரு நகைச்சுவை நடிகர் என்பதையும் தாண்டி தமிழ் சினிமாவின் ஒரு ஆளுமை என்பதே நிஜம்.


  //பாஸ்.. இதுக்கு ஒரு கமெண்ட் போட்டிருந்தனே.. எங்க காணோம் Spam இற்குள் பொய்விட்டதா//

  எஸ் பாஸ், அங்கேதான் இருந்தது.. நோண்டி எடுத்திட்டோம்..

  ReplyDelete
 17. meyyappanram said...
  //ovvoru pathivum super boss athuvum intha 50th rocking thala thalabathy na summava//

  நன்றி பாஸ், உங்கள் தொடர்ச்சியான ஆதரவுக்கும் வாழ்த்துக்களுக்கும்.. தலதளபதி வாழ்க..

  ReplyDelete
 18. குடும்ப போட்டோ எல்லாம் போட்டு அசத்துறீங்க பாஸ்!
  வாழ்த்துக்கள் ஐம்பதிற்கு!

  ReplyDelete
 19. // தலைவருக்கு ஆன்லைன் ரசிகர் மன்றம் வச்சிருக்கிறதும் நியாயமா இல்லையான்னு இப்ப சொல்லுங்க சார்.//

  தப்பே இல்லை..நல்ல அலசல்.

  ஆனால் ஹீரோக்களை நக்கல் செய்வதை ஆரம்பித்து வைத்தவர் கவுண்டமணி தான். அதனாலேயே சூப்பர்கள் அவரை ஒதுக்கி வைத்தார்கள்...சந்தானம் அதன் தொடர்ச்சி தான்.

  ReplyDelete
 20. // இது காபி பேஸ்ட் பதிவோ மொழிபெயர்ப்பு பதிவோ அல்ல, சோ, எந்த தயக்கமும் இல்லாமல், கூகிளிடம் விசாரிக்காமல் காமென்ட் போடலாம் என தைரியமாக தெரிவித்துக்கொள்கிறோம்.//

  ஹா...ஹா...சூப்பர் டிஸ்கி.

  ReplyDelete
 21. // பதிவுலக வராற்றிலேயே ஒரு முக்கியமான பதிவு, அட எங்களுக்கு முக்கியமான பதிவு சார். அதாவது எங்களது ஐம்பதாவது பதிவு. //

  வாழ்த்துகள்..சீக்கிரம் 100ஐத் தாண்டுங்கள் ஃபேன்ஸ்!

  ReplyDelete
 22. 50-வது பதிவுக்கு வாழ்த்துக்கள் பாஸ்...

  ReplyDelete
 23. நானும் சந்தானம் fan-nu சொல்ல பெருமப்படறேன்

  ReplyDelete
 24. மொக்கமாமா நீங்க ரொம்ப அறிவாளி
  நீங்கள் இன்னும் மென் மேலும் வளர வாழ்த்துகிறோம்
  இப்படிக்கு

  ReplyDelete
 25. ஹே ஐம்பதாவது போஸ்டுக்கு 25VATHU கமெண்ட்ஸ்
  வாழ்க வளமுடன்
  கமெடி ஸ்டார் சந்தானம் வாழ்க
  கிளைத்தலைவர்
  மொக்கரசு மாமா வாழ்க
  வடக்கு வீதி சந்தானம்
  ரசிகர் மன்றம்
  கிளை எண்

  ReplyDelete
 26. ஜீ... said...
  //குடும்ப போட்டோ எல்லாம் போட்டு அசத்துறீங்க பாஸ்!
  வாழ்த்துக்கள் ஐம்பதிற்கு!//

  நன்றி ஜீ, உங்கள் அன்பிற்கும், வாழ்த்துக்களிற்கும்..

  ReplyDelete
 27. சந்தானம் always rock

  ReplyDelete
 28. இன்று என் வலையில்
  நாஞ்சில் மனோ Vs கருண் Vs சி.பி – யார் அதுல பெரிய ஆள்?

  ReplyDelete
 29. செங்கோவி said...

  //ஆனால் ஹீரோக்களை நக்கல் செய்வதை ஆரம்பித்து வைத்தவர் கவுண்டமணி தான். அதனாலேயே சூப்பர்கள் அவரை ஒதுக்கி வைத்தார்கள்...சந்தானம் அதன் தொடர்ச்சி தான்.//

  நிஜம் சார், கவுண்டர் முதுகுல நிற்கிரதாலையோ என்னமோ, இவரு கொஞ்சம் அதிக தூரம் பார்குராறு. கலாய்த்தல் தவிரவும் கதாநாயகனை மட்டுமே மையாப்படுத்தாமல் நிஜ வாழ்கையை பிரதிபலிக்கக்கூடிய நட்பினை திரையில் காட்ச்சிப்படுத்த தூண்டுராறு, உதாரணமா சிங்கம் புலிய சொல்லலாம், சந்தானம் தவிர வேறு யாரு பண்ணியிருந்தாலும் ஜீவா தவறு செய்வதை நகைச்சுவயூடு உணர்த்தி தட்டிக்கேட்கக்கூடிய கதாபாத்திரமாக அது அமைந்திருக்காது, "அவன் பண்றான் நாமளும் ட்ரை பண்ணுவோம்" பாணி நகைச்சுவயாவேதான் அமைஞ்சிருக்கும். ரைட்டா, தப்பா?

  //ஹா...ஹா...சூப்பர் டிஸ்கி.//

  டிஸ்கிய பாத்ததாலதான் "அலசல் அருமை" அப்பிடின்னு போட்டீங்களா?

  //வாழ்த்துகள்..சீக்கிரம் 100ஐத் தாண்டுங்கள் ஃபேன்ஸ்!//

  சார், நீங்க "கிளுகிளுப்பான் பதிவு மெசின்" கண்டுபிடிச்சிட்டீங்களா? சீக்கிரம் 100 தண்டுங்கன்னு சொல்றீங்க.

  ReplyDelete
 30. siva said...
  //MOKKAMA MAMMA VAALGA//

  மொக்கமாமா நீங்க ரொம்ப அறிவாளி
  நீங்கள் இன்னும் மென் மேலும் வளர வாழ்த்துகிறோம்
  இப்படிக்கு//

  யோவ்.. பதிவுல பாதிக்கு மேல எழுதிட்டு மங்கு மாங்குன்னு காமேன்ட்சுக்கு பதிலும் போட்டுகிட்டிருக்கேன், அது என்ன மொக்க மாமாவுக்கு மட்டும் வாழ்த்து???

  ReplyDelete
 31. siva said...
  //ஹே ஐம்பதாவது போஸ்டுக்கு 25VATHU கமெண்ட்ஸ்
  வாழ்க வளமுடன்
  கமெடி ஸ்டார் சந்தானம் வாழ்க
  கிளைத்தலைவர்
  மொக்கரசு மாமா வாழ்க
  வடக்கு வீதி சந்தானம்
  ரசிகர் மன்றம்
  கிளை எண்//

  கோடி நன்றிகள் பாஸ், சந்தானம் சார் நீடூழி வாழ வாழ்த்துக்கள், உங்களுக்கும் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 32. Sen22 said...
  //50-வது பதிவுக்கு வாழ்த்துக்கள் பாஸ்...//

  நன்றி பாஸ்,

  // Sen22 said...
  நானும் சந்தானம் fan-nu சொல்ல பெருமப்படறேன்//

  நிச்சயமா சார், தைரியமா பெருமைப்படலாம்.

  ReplyDelete
 33. "என் ராஜபாட்டை"- ராஜா said...
  //சந்தானம் always rock//

  அவரு என்ன பாறையா?
  உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் கோடி நன்றிகள். santa Rox!!!

  ReplyDelete
 34. உங்கள் 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்! உங்க தலைவருக்கும் வாழ்த்துக்கள்!

  சந்தானம் பற்றி பல தகவல்களை அறிந்து கொண்டேன்!

  ReplyDelete
 35. // இது காபி பேஸ்ட் பதிவோ மொழிபெயர்ப்பு பதிவோ அல்ல, சோ, எந்த தயக்கமும் இல்லாமல், கூகிளிடம் விசாரிக்காமல் காமென்ட் போடலாம் என தைரியமாக தெரிவித்துக்கொள்கிறோம்.////

  இதெல்லாம் பண்ணியும் தமிழ்மணம் இன்னும் கண்டுக்கலியே?

  ReplyDelete
 36. //////Powder Star - Dr. ஐடியாமணி said...
  உங்கள் 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்! உங்க தலைவருக்கும் வாழ்த்துக்கள்!

  சந்தானம் பற்றி பல தகவல்களை அறிந்து கொண்டேன்!///////

  ஆமா இல்லேன்னா இவருக்கு சந்தானம் பத்தி ஒண்ணுமே தெரியாது.......

  ReplyDelete
 37. 50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..!! அப்படியே உங்க “தலைவருக்கும் “வாழ்த்துக்கள் :-))

  ReplyDelete
 38. நாங்க சந்தானம் ரசிகர்களா இருக்கிறதும், தலைவருக்கு ஆன்லைன் ரசிகர் மன்றம் வச்சிருக்கிறதும் நியாயமா இல்லையான்னு இப்ப சொல்லுங்க சார்.//

  இல்லையாபின்ன? இதனை பேர் மன்றத்துல உறுப்பினரா இருப்பதிலையே புரிகிறது.

  ReplyDelete
 39. தலைவர் பல இயக்குனர்களுக்கு தைரியம் அளித்திருக்கிறார், கதாநாயகனை வைத்து மட்டுமல்லாமல் கதாபாத்திரங்களை வைத்து கதை பின்னும் சுதந்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறார். பல பெரிய நடிகர்களின் படங்களே சந்தானத்தை நம்பித்தான் இருக்கு,//

  உண்மைதான் எவ்ளோ மொக்கையா இருந்தாளும் சந்தானம் படத்துல இருக்காருங்ற ஒரே காரணத்துக்காக போய் எவ்வளவு அனுபவிச்சுருக்கோம்.?இதுக்கு பல உதாரணங்கள்.அதெல்லாம் நான் சொல்ல வேணாம் உங்களுக்கே தெரியும்.

  ReplyDelete
 40. ஒரு நகைச்சுவை நடிகருக்குண்டான வரையறைகளை உடைத்து இயல்பான நடையில் ,அன்றாடம் பழகும் பக்கத்துக்கு வீட்டு பையனைபோல் திரையில் தோன்றுவதே இவரின் வெற்றிக்கு காரணம் என நினைக்கிறேன்!என்ன dr,puttippaal&மொக்க மாமா சரிதானே?

  இவ்வளவு தூரம் வந்துட்டு இத சொல்லாம போனா எப்படி?

  ஐம்பதுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 41. இது காபி பேஸ்ட் பதிவோ மொழிபெயர்ப்பு பதிவோ அல்ல, சோ, எந்த தயக்கமும் இல்லாமல், கூகிளிடம் விசாரிக்காமல் காமென்ட் போடலாம் என தைரியமாக தெரிவித்துக்கொள்கிறோம் -:)

  ஐம்பதுக்கு வாழ்த்துக்கள்...

  தொடர்ந்து இப்படியே சிரிக்கவும் சிந்திக்கவும் வையுங்கள்...

  ReplyDelete
 42. நன்றாக அலசி,பிழிந்து காயப் போட்டிருக்கிறீர்கள்!கங்கிராட்ஸ்,ஐம்பதாவது பதிவுக்கும்!!!!!!!!!!

  ReplyDelete
 43. //Powder Star - Dr. ஐடியாமணி said...

  உங்கள் 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்! உங்க தலைவருக்கும் வாழ்த்துக்கள்!

  சந்தானம் பற்றி பல தகவல்களை அறிந்து கொண்டேன்!///

  நன்றிங்க பாஸ்....இன்னும் நெறைய இருக்கு பாஸ்... ஆறுதலா பேசுவோமே

  ReplyDelete
 44. ///பன்னிக்குட்டி ராம்சாமி said...

  // இது காபி பேஸ்ட் பதிவோ மொழிபெயர்ப்பு பதிவோ அல்ல, சோ, எந்த தயக்கமும் இல்லாமல், கூகிளிடம் விசாரிக்காமல் காமென்ட் போடலாம் என தைரியமாக தெரிவித்துக்கொள்கிறோம்.////

  இதெல்லாம் பண்ணியும் தமிழ்மணம் இன்னும் கண்டுக்கலியே?
  ///

  இல்லியே அண்ணே... நம்ம நிருபனும் ட்ரை பண்ணி பார்த்தாரு...ம்ஹூம்.. கண்டுக்கவே மாட்டேன்குறாங்க.. என்ன பண்ணலாம் பாஸ்?

  ReplyDelete
 45. /பன்னிக்குட்டி ராம்சாமி said...

  //////Powder Star - Dr. ஐடியாமணி said...
  உங்கள் 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்! உங்க தலைவருக்கும் வாழ்த்துக்கள்!

  சந்தானம் பற்றி பல தகவல்களை அறிந்து கொண்டேன்!///////

  ஆமா இல்லேன்னா இவருக்கு சந்தானம் பத்தி ஒண்ணுமே தெரியாது.......
  ////

  அது கெடக்கட்டும்... நீங்க ஏன் அம்பதாவது பதிவுக்கு வாழ்த்து சொல்லாமலே போறீங்க???

  வாழ்த்த எல்லாம் கேட்டு வாங்க வேண்டி இருக்கு!!!!

  ReplyDelete
 46. /ஜெய்லானி said...

  50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..!! அப்படியே உங்க “தலைவருக்கும் “வாழ்த்துக்கள் :-))
  ///

  ரொம்ப நன்றி ஜெய்லானி சார்!!!

  ReplyDelete
 47. //கோகுல் said...

  நாங்க சந்தானம் ரசிகர்களா இருக்கிறதும், தலைவருக்கு ஆன்லைன் ரசிகர் மன்றம் வச்சிருக்கிறதும் நியாயமா இல்லையான்னு இப்ப சொல்லுங்க சார்.//

  இல்லையாபின்ன? இதனை பேர் மன்றத்துல உறுப்பினரா இருப்பதிலையே புரிகிறது.
  ////

  அப்புடிங்குறீங்க... நீங்க சொன்ன சரிதான் பாஸ்!!!

  ReplyDelete
 48. ///கோகுல் said...

  தலைவர் பல இயக்குனர்களுக்கு தைரியம் அளித்திருக்கிறார், கதாநாயகனை வைத்து மட்டுமல்லாமல் கதாபாத்திரங்களை வைத்து கதை பின்னும் சுதந்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறார். பல பெரிய நடிகர்களின் படங்களே சந்தானத்தை நம்பித்தான் இருக்கு,//

  உண்மைதான் எவ்ளோ மொக்கையா இருந்தாளும் சந்தானம் படத்துல இருக்காருங்ற ஒரே காரணத்துக்காக போய் எவ்வளவு அனுபவிச்சுருக்கோம்.?இதுக்கு பல உதாரணங்கள்.அதெல்லாம் நான் சொல்ல வேணாம் உங்களுக்கே தெரியும்.
  /////

  அது சரி... நீங்க என்ன பாஸ் மறைக்கிறது? நாங்களே ஒத்துகுறோம் ,, உதயன், மார்கண்டேயன் போன்ற படங்களில் நடிக்காமலே இருந்துஇருக்கலாம்...

  ReplyDelete
 49. //////
  அது கெடக்கட்டும்... நீங்க ஏன் அம்பதாவது பதிவுக்கு வாழ்த்து சொல்லாமலே போறீங்க??? //////

  யோவ் பிச்சிபுடுவேன் பிச்சி...... இதென்ன கிரிக்கெட் மேட்சா 50, 100 ன்னுக்கிட்டு..... சரி, சரி..... நல்லா எழுதுங்கப்பா.........

  ReplyDelete
 50. ஐ.. அம்பதாவது பதிவுக்கு அம்பதாவது பதிவு போட்ட பன்னிகுட்டி அண்ணனுக்கு ஒரு பிளேட் "அஞ்சலி" பார்சல்....

  ReplyDelete
 51. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  //////
  அது கெடக்கட்டும்... நீங்க ஏன் அம்பதாவது பதிவுக்கு வாழ்த்து சொல்லாமலே போறீங்க??? //////

  யோவ் பிச்சிபுடுவேன் பிச்சி...... இதென்ன கிரிக்கெட் மேட்சா 50, 100 ன்னுக்கிட்டு..... சரி, சரி..... நல்லா எழுதுங்கப்பா........//////

  ஐயய்யோ அண்ணே செம காண்டாயிட்டாரு..."50வது மற்றும் 100வது பதிவுகளில் பதிவர்கள் பண்ணும அலம்பல்கள்"ன்னு எதாவது பதிவு போட்டுருவாரோ?

  ReplyDelete
 52. ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா


  உண்மைதான் ,ஒவ்வொரு மனிதரும் கதாநாயகன் தான் அவரவர்க்கு.

  நான்கில் ஒருத்தர் மட்டும் நாயகன் என்று இல்லை .

  சந்தானத்தின் கதாபாத்திரத்தின் தனித்துவம் பற்றி விளக்கி வந்த இந்த பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பா

  தொடரவும் செய்தேன்

  அன்பு உலகம் வந்து கருத்திட்டமைக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 53. 50 vadhu வது பதிவுக்கு 55 வது வாழ்த்து

  ReplyDelete
 54. விவேக்கின் விட்டுச்சென்ற இடத்தை சர்வசாதாரணமாக சந்தானம் பிடித்துக்கொண்டார் என்றால் மிகை இல்லை

  ReplyDelete
 55. M.R said...
  ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா


  உண்மைதான் ,ஒவ்வொரு மனிதரும் கதாநாயகன் தான் அவரவர்க்கு.

  நான்கில் ஒருத்தர் மட்டும் நாயகன் என்று இல்லை .

  சந்தானத்தின் கதாபாத்திரத்தின் தனித்துவம் பற்றி விளக்கி வந்த இந்த பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பா

  தொடரவும் செய்தேன்

  அன்பு உலகம் வந்து கருத்திட்டமைக்கு நன்றி நண்பரே///

  சரியாகச் சொன்னீர்கள் நண்பா, நம்ம தமிழ் சினிமாவில் கோடியில் ஒன்றுதான் கதாநாயகன். வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே.

  ReplyDelete
 56. சி.பி.செந்தில்குமார் said...
  //50 vadhu வது பதிவுக்கு 55 வது வாழ்த்து//

  55 ஆவது வாழ்த்துக்கு 55 ஆவது நன்றி

  // விவேக்கின் விட்டுச்சென்ற இடத்தை சர்வசாதாரணமாக சந்தானம் பிடித்துக்கொண்டார் என்றால் மிகை இல்லை//

  சரியா சொன்னீங்கன்னே, தலைவர் விவேக்குகளுக்கும் பல படி மேலே சென்றுவிட்டார்.

  ReplyDelete
 57. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  //வாழ்த்துக்கள்..சகோ..//

  நன்றி சகோ...

  ReplyDelete
 58. நகைச்சுவை நடிகர்களில் நான் கவுண்டமனி ரசிகர்ங்க :)இப்பத்தான் முதல்முறையா இங்க வந்திருக்கேன்!

  முக்கியமா கவுண்டமனி அண்ணனோட இடத்தை சந்தானம் இப்ப பிடிச்சிட்டு வரார். அதனால எனக்கும் சந்தானத்த பிடிக்க ஆரம்பிச்சுருச்சு :))

  ReplyDelete
 59. தமிழ் சினிமாவுக்கு வலி /வழியா

  ReplyDelete
  Replies
  1. எங்க கமென்ட்லயா? அது ஹீ ஹீ வழிதான்...

   Delete

உங்கள் கருத்துக்கள்!!