Saturday, September 17, 2011

பதிவுலக ரவுண்டப் : ஒரு அட்டகாசமான பதிவு 3

நம்ம பதிவுலக ரவுண்டப்  பதிவின் மூணாவது பகுதி இது. நம்மள பீல் பண்ண வச்ச பதிவர்கள் வரிசை இங்க தொடருது... 

கெட்டப்பே ஒரு கெத்தா இருக்கே...
பதிவுக்கு போக முதல்ல இதையும் கொஞ்சம் கேளுங்கப்பு. நாங்க ப்ளாகோட பெயர மாத்திட்டோம், அதுக்காக தலைவருக்கு என்ன ஆச்சின்னு கேக்காதீங்க, அவருதான் சப்-டைட்டில்ல இருக்காரே, இது எப்பவும் போல தலைவர் ரசிகர் மன்றம்தான். எல்லாருக்கும் தெரியுமே தலைவருக்கு நாக்குல சனின்னு, நாங்களும் ஏதாவது வம்பளக்கபோய் அது தலைவருக்கு பிரச்சினையா முடியக்கூடாதில்ல, அதனாலதான் ஒரு சேப்டிக்கு (யாருய்யா அது, இத காண்டம்னு வாசிக்கறது). 


அது என்ன "அகாதுகா அப்பாடாகர்ஸ்" அப்பிடின்னு ஆராச்சி கட்டுற எழுதவைக்கிற அளவுக்கு கெளப்பி விட்டீங்கன்னா மூஞ்சில பூரான் வுட்ருவோம் ஆமா... இதெல்லாம் சும்மா அனுபவிக்கனும், ஆராயக்கூடாது. 

அப்புறம் கூடங்குளம் போராட்டத்தில் நேரடியாகவும், பதிவுகள் வாயிலாகவும் இணைந்து கொண்டுள்ள நண்பர்களுக்கு ஆதரவினை வழங்கிக்கொண்டு இன்றைய பதிவினை ஆரம்பிக்கிறோம். நண்பர் ராஜேஷ் அவரது மாய உலகத்தில் தொகுத்தளித்துள்ள பதிவுகளை நீங்களும் ஒருவாட்டி வாசிச்சுத்தான் பாருங்களேன். நம்மால் முடிஞ்ச ஆதரவை நாமும் வழங்குவோம்...

இதன் முதல் இரு பதிவுகளை [பதிவு 1 மற்றும் பதிவு 2] படிக்காதவர்களுக்கு இதற்குமேல் படிக்க அனுமதியில்லை.
யார்கூட சண்டை போடப்போறாரு?
நமக்கு அறிமுகமான பிரபலபதிவர்கள் வரிசையில்........

கவிதை வீதி சௌந்தர்: நம்மளையும் ஒரு மனுஷனா மதிச்சு முதல் பின்னூட்டம் இட்டது சார்தான், தெய்வத்திருமகள் ஒரு சந்தானம் ரசிகனின் மாற்றுப்பார்வை அப்பிடின்குற பதிவுக்கு, உங்கள் பார்வையில் ரசித்தேன்னு போட்டிருந்தாரு, கவித, கவித அப்போ அது இந்த மரமண்டைகளுக்கு புரியல. அரசியல், கிரிகெட், சினிமான்னு கலந்து கட்டி அடிச்சாலும் சாரோட கவிதைகள் எப்பவுமே சூப்பர், ஒரு சமுதாய அக்கறை இவரோட கவிதைகள்ல பொதிஞ்சிருக்கும். சுயமரியாதை விட்டு வாழ்வதா? ரொம்பவே ரசிக்கவைத்த ஒரு கவிதை. 

வெட்டும்போதும் கூட 
எதிர்ப்பு காட்டாமலிருக்கும்
மரத்தினைப்போல

நாளை துளிர் விடலாம் 
என்ற நம்பிக்கையில்  

பின்னிட்டீங்க சார்.


தமிழ்வாசி பிரகாஷ்: சார் ஒரு கணணிப்பிரியர். நமக்கெல்லாம் ப்ளாக் எப்புடி மெயின்டைன் பன்னனும்குறதில இருந்து கிருமி அடிச்சா (வைரசுன்னா கிருமிதானுங்களே?) எப்பிடி மருந்து தெளிக்கலாங்குற  வரைக்கும் நெறயவே சொல்லிக்குடுத்திருக்காரு. CNC PROGRAMING & OPERATION மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக சார் எழுதும் ஒரு தொடர். தமிழில் இது ஒரு புது முயற்சி. துறை சார் வாசகர்களுக்கு நிறைய பயனுள்ள தகல்களையும் விளக்கங்களையும் அளிக்கிறது இந்தத் தொடர். சமுதாய அக்கறைதான் சாரின் உயிர் நாடி, சார் பத்தி எல்லாருக்கும் புரியற மாதிரி சொல்லனும்னா இவரு மௌனம் பேசியதே சூரியா காரக்டர், அதுக்காக ஜீன்ஸ் போட்ட சகுனியான்னு கேக்காதீங்க... "பஸ்ஸில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துக்கள்" வாசிச்சு பாருங்க உங்களுக்கே புரியும், யப்பா லவ்வர்ஸ் பெருமக்களே, இனிமே இந்தாள பக்கத்துல பாத்தீங்கன்னா உஷாராகிக்காங்க அப்புறம் உங்க குடும்பத்துலயும் கொழம்பு ஊத்திடுவாரு. சார் ஒரு சிறுகதை பிரியன், நல்ல நல்ல சிறுகதைகளா அள்ளி விட்டுகிட்டே இருப்பாரு. சமீபத்துல ஆளு அஞ்சலி பொண்ண ஜொள்ளுறதா  பேசிக்கறாங்க, அப்புடீன்னா ஷீனா ஷகாபடிக்கு என்ன ஆச்சி? விடுங்கப்பா, நமக்கு எதுக்கு ஊர் வம்பு...


இந்தப்பொண்ணு அறிமுகமாக முதல்லையே திருமணமானவங்களாமே, உண்மையா தமிழ்வாசி?

சி.பி. செந்தில் குமார்: ஒரு தமிழ் படம் ரிலீசாச்சின்னா கூகுளில் மூலமா நாம முதல்ல வந்து சேர்ற இடம் அட்ராசக்க, அப்பெல்லாம் தெரியாது அண்ணாத்ததான் அங்க அப்படாகர்னு. நாம பாட்டுக்கு விமர்சனத்த படிச்சிட்டு அப்பீட்டாகிடுவம். படம் மொக்கன்னா இவரு கலாய்ப்பாரு பாரு, ப்ரடுசெர்ல இருந்து டீ பாய் வரைக்கும் யாரும் தப்பிக்க முடியாது. வெங்காயம் இயக்குனருக்கு பல்பு குடுக்க போயி அண்ணன் பல்பு வாங்கினது தனி கத. இப்பெல்லாம் வருஷத்துக்கு நூத்தம்பது படம் வருது, அதுல ஒரு பத்து பதினச்சுதான் தேறுது, மிச்ச மீதிக்கிட்டருந்தெல்லாம்  நம்மள காப்பாத்தறதுக்காகவே அவரோட உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்பணிச்சு, தியேட்டர்ல போயி ப்ளேடு வாங்குறாரே, அண்ணனுக்கு ரொம்ப பெரிய மனசுய்யா... ஆனா அதுக்கு பழிவாங்கனும்னு அப்பப்ப சீரியஸா தலைப்பு வச்சி துணுக்குகள தொகுத்து நமெக்கெல்லாம் பல்பு குடுப்பாரு பாரு, அதுல அவருக்கு ஒரு ஆத்ம திருப்தி.  காமெடி கும்மின்னு கும்மினாருன்னா, பேட்டி குடுத்தவனுக்கும், எடுத்தவனுக்கும் எதுக்குய்யா இப்பிடி பண்ணினோம்னு ஒரே பீலிங் ஆகிடும். சீரியஸ் மேட்டர்னாலும் மொக்கன்னாலும் ஒரே நக்கல் ஒரே குசும்புதான், அதுதான் அண்ணனோட ஸ்ட்ரெந்து. இவர பதிவுலக டாகுடர்னு சொல்லலாம், அம்புட்டு விமர்சனத்த சந்திச்சிருக்காரு மனுஷன். "மணிரத்னம் ஒரு சகாப்தமா? ஒரு அழகிய ஆரய்ச்சி" (பாகம் மூணு எங்க சார்?), "பெண் எழுத்து ஒரு பாசிடிவ் பார்வை", ரெண்டும் அண்ணனோட சீரியஸ் பதிவுகள். சாரோட லிஸ்டுல இத தேடுறது கஷ்டம்தான், ட்ரை பண்ணிதான் பாருங்களேன்.

இதுதானுங் ப்ரனீதா, முதல் பதிவுல போட மறந்துட்டமா  அதானுங்  . 
--

ஒருமுக்கியமான விஷயம், உலகம் பூரா சாலை விபத்துக்களால ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிச்சிட்டே வருது. இன்னைக்கு காலைல கேள்வி பட்ட ஒரு மனச கரைய வைக்கும் செய்தி: நம்ம பழைய கேப்டன் அசாருதீனின் 19 வயது மகன் அதிக வேகத்துடன் பைக் ஓட்டி ஒரு காரை முந்த முயன்றபோது திடீரென விபத்துக்குள்ளாகி  உயிரிழந்துள்ளார். அப்புறம் நம்ம  மொக்கராசு மாமாவும் சமீபத்தில் ஒரு கார் ஆக்சிடண்டில சிக்கி தெய்வாதீனமா உரிர் தப்பினது உங்க எல்லாருக்கும் தெரியும். ஒரு சிலரின் கவனக்குறைவுகளால், அதிமிஞ்சிய  வேகத்தினால், விளையாட்டுதனங்களால் பலர் பாதிக்கப்படும் இது போன்ற சோகங்களை விரிவாக பேசும் படமாக சமீபத்தில் வெளிவந்த எங்கேயும் எப்போதும் இருக்கு. அந்த படத்தை வெற்றி பெற செய்து நாலு பேருக்கு விழிப்புணர்வூட்டலாமே. 


கெளம்புறதுக்கு முன்னாடி ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் டிராவிடுக்கு எல்லாரும் ஜோரா ஒரு தடவ விசில் போடுங்க, அந்தாளும் ஒத்தையா நின்னு நம்ம ஆளுங்கள வெள்ளயங்க கிட்ட இருந்து மீட்க எவ்வளவு போராடினாரு. சீக்கிரமா ஒரு சிலை வைக்க ஏற்பாடு செய்யணும்பா. 


அப்டேட்: தமிழ்வாசியின் மெக்கானிகல் துறையினருக்கான தொடர் பற்றிய தகவல் இணைக்கப்பட்டுள்ளது. சுட்டிக்காட்டிய செங்கோவி அண்ணனுக்கு நன்றிகள்.

டிஸ்கி 1: இன்னும் சில பிரபல பதிவர்கள் பற்றிய குறிப்புக்களுடனும், சுவையான சம்பவங்களுடனும் ஒரு புதுப்பொலிவில் பதிவு தொடரும்.... 

டிஸ்கி 0: வழக்கமா நூறு பதிவு, ஒரு லட்சம் ஹிட்ஸ் எடுத்ததுக்கப்புறம்தான் இப்புடி திரும்பி பார்த்து பதிவு போடுவாங்களாமே, நாங்க இப்பவே போடுறோமேன்னு தப்பா நெனச்சிடாதீங்க, நன்றி சொல்றதுக்கு நூறு பதிவெல்லாம் எதுக்கு, மனசு இருந்தா போதாதான்னு அண்ணன் ஜீ யே சொல்லிட்டாரு, அப்புறம் என்ன. 

டிஸ்கி -1: தலைவர் படம் வந்திருக்கு, வந்தான் வென்றான்னு பேரு. தலைவருக்காக எல்லாரும் ஒரு தடவ தேட்டர்ல போய் பாருங்க, அப்புறமா யூடுபி தலைவர் காமெடி மட்டும் பாத்துக்கங்க. 

டிஸ்கி -2: அது என்ன டிஸ்கி -2 , டிஸ்கி -1, டிஸ்கி  0... எல்லாம்னு பாக்குறீங்களா, மூணு நாலு டிஸ்கி எல்லாம் போடக்கூடாதாமே, அதுதான், நாங்க கணக்குல கரெக்டா இருப்போம்ல.   


50 comments:

  1. உங்கள் பார்வை மிகவும் தெளிவாக உள்ளது. 
    ஆமா, ரியல் சந்தானத்திற்கு இந்த ரியல் சந்தானம் ஃபான்ஸ் ப்ற்றித் தெரியுமா? உச்சி குளிர்ந்துடுவாரே! ஒரு நகைச்சுவை நடிகருக்கு இவ்வளவு தீவிர ரசிகரை நான் பார்த்ததேயில்லை.
    வாழ்க வளர்க!

    Sharmmi.blogspot.com

    ReplyDelete
  2. எங்களைப் பத்தியும் எழுதுங்க சாரே!

    ReplyDelete
  3. எத்தைச் சொல்றது, என்னத்தைச் சொல்றது, ஒரே பேஜாராக் கீது சார்.

    ReplyDelete
  4. //ஷர்மி said...
    உங்கள் பார்வை மிகவும் தெளிவாக உள்ளது.
    ஆமா, ரியல் சந்தானத்திற்கு இந்த ரியல் சந்தானம் ஃபான்ஸ் ப்ற்றித் தெரியுமா? உச்சி குளிர்ந்துடுவாரே! ஒரு நகைச்சுவை நடிகருக்கு இவ்வளவு தீவிர ரசிகரை நான் பார்த்ததேயில்லை.
    வாழ்க வளர்க!

    Sharmmi.blogspot.com//


    நன்றி சகோ, தெளிவான இருக்கம்குறீங்க, அப்புறமா தலைவருக்கு தெரியுமான்னு கேக்குறீங்க, ஏன் இந்த கன்பியுசன்?

    ReplyDelete
  5. //DrPKandaswamyPhD said...
    எங்களைப் பத்தியும் எழுதுங்க சாரே!//

    நீங்க இல்லாமலா? கண்டிப்பா சார்,

    //எத்தைச் சொல்றது, என்னத்தைச் சொல்றது, ஒரே பேஜாராக் கீது சார்.//

    சார் பொடி வச்சு பேசுறாரோ?

    ReplyDelete
  6. செந்தில்குமார் சூப்பர் அவரின் சீரியஸ் பதிவுகளை தேடி படிக்க வேண்டும் .அப்புறம் உங்கள் பனி மகத்தானது .தொடருங்கள்

    ReplyDelete
  7. சூப்பர் சார் கலக்குங்க........நண்பேண்டா

    ReplyDelete
  8. , ரெண்டும் அண்ணனோட சீரியஸ் பதிவுகள். சாரோட லிஸ்டுல இத தேடுறது கஷ்டம்தான், ட்ரை பண்ணிதான் பாருங்களேன்.
    //
    இதுக்குப்பேர் தான் வஞ்சப்புகழ்ச்சியா?

    அந்த பதிவுகளை நானும் படிச்சிருக்கேன்.
    உண்மையில் சீரியஸ் தான்!
    பதிவர்களின் ரவுண்டப் கலக்கல்!
    கூடங்குளம் போராட்டதிற்கு ஆதரவு அளித்த மொக்கராசு மாமாவுக்கும்.DR.புட்டிப்பாலுக்கும் நன்றி!

    ReplyDelete
  9. மொக்க மாமா எப்படி இருக்கார்?

    ReplyDelete
  10. ரைட்டு.... இன்னைக்கு இந்தாள் கிட்ட நாம மாட்டிக்கிட்டோமா?

    ReplyDelete
  11. இந்தப்பொண்ணு அறிமுகமாக முதல்லையே திருமணமானவங்களாமே, உண்மையா தமிழ்வாசி////

    இப்ப அந்த கல்யாணம் முறிஞ்சு போச்சு.. அதனால பிகர் இப்ப ப்ரீ தான்.... ஹி.ஹி...ஹி....

    ReplyDelete
  12. அகாதுகா அப்பாடாகர்ஸ்///

    பேரு சூப்பரு....

    ReplyDelete
  13. //kobiraj said...
    உங்கள் பனி மகத்தானது .தொடருங்கள்//

    ஒருவேள சார் நம்மள காலாய்கிறாரோ?

    ReplyDelete
  14. //K.s.s.Rajh said...
    சூப்பர் சார் கலக்குங்க........நண்பேண்டா//

    நண்பேன்டா....

    ReplyDelete
  15. கோகுல் said...
    //அந்த பதிவுகளை நானும் படிச்சிருக்கேன்.
    உண்மையில் சீரியஸ் தான்!//

    படிச்சிருக்கீங்கள்ல, அப்புறம் எதுக்கு சும்மா வஞ்சப்புகழ்ச்சின்னெல்லாம் சொல்லிக்கிட்டு.

    //கூடங்குளம் போராட்டதிற்கு ஆதரவு அளித்த மொக்கராசு மாமாவுக்கும்.DR.புட்டிப்பாலுக்கும் நன்றி!//

    அது நம்ம கடம சார்.. இதுக்கெல்லாம் நன்றி சொல்லி அந்நியப்படுத்தக்கூடாது..

    //மொக்க மாமா எப்படி இருக்கார்?//

    சீக்கிரமே தேறிடுவார் சார், நீங்க ஒருத்தராவது கேட்டீங்களே, ரொம்ப நன்றி சார்..

    ReplyDelete
  16. தமிழ்வாசி - Prakash said...

    //ரைட்டு.... இன்னைக்கு இந்தாள் கிட்ட நாம மாட்டிக்கிட்டோமா?//

    சார் எதுக்கு டென்சன் ஆகுறாரு?

    //இப்ப அந்த கல்யாணம் முறிஞ்சு போச்சு.. அதனால பிகர் இப்ப ப்ரீ தான்.... ஹி.ஹி...ஹி....//

    மனுஷன் அந்தம்மா மேட்டர் எல்லாம் பிங்கர் டிப்ஸ்ல வச்சிருக்காரே..

    //அகாதுகா அப்பாடாகர்ஸ்
    பேரு சூப்பரு....//

    ரொம்ப நன்றி சார்..

    ReplyDelete
  17. அடகடவுளே நம்ம பேரக் காணோமே எங்க போச்சு .....!!!
    காக்கா தூக்கி இருக்கும் .ஆனா அருமையா அறிமுகம்
    செய்திருக்காரு மிக்க நன்றி சகோ தொடர்ந்தும் அறிமுகம்
    செய்யுங்க .(அப்பயாவது நம்மளப்பத்தி என்ன சொல்லுறாருன்னு
    பார்க்கலாம் ஹி ...ஹி ..ஹி ...)

    ReplyDelete
  18. //"அகாதுகா அப்பாடாகர்ஸ்"//
    நல்லாத்தான் இருக்கு பாஸ்!

    ரவுண்ட் அப் சூப்பர்! தமிழ்வாசி பற்றி கொஞ்சம் புதிய தகவல்கள்! நன்றி!

    அப்புறம் அதென்ன டிஸ்கில? ஆ! ஹார்ட் அ டச் பண்ணிட்டீங்களே பாஸ்!
    :-)

    ReplyDelete
  19. நல்ல விரிவான அலசல் பாஸ்! அனைவரைப்பற்றியும் நீங்க சொன்னதெல்லாம் உண்மை!

    ReplyDelete
  20. தமிழ்வாசி அளவிற்கு எளிய மனிதரை நான் பதிவுலகில் பார்த்ததில்லை. பிரபலப் பதிவர் என்ற பந்தாவே இல்லாமல் பழகக்கூடியவர். பதிவர்க்கு ஏதேனும் உதவி தேவையென்றால், தெரிந்ததை பகிர்ந்துகொள்ளக்கூடியவர். சினிமாக் கட்டுரைகள் மட்டுமல்லாமல், கதை/கவிதை என எல்லா ஏரியாவிலும் கலக்கி எடுப்பவர். அவர் பதிவுலகில் இன்னும் உச்சத்தைத் தொடுவார்.

    அவரது சிஎன்சி டெக்னிகல் தொடர் தமிழில் ஒரு பெரிய முயற்சி. அதனைச் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே..

    ReplyDelete
  21. கில்மா படத்திற்கு ஃபோட்டோ/ஃபோன் நமபர் போட்டு, விமர்சனம் எழுதும் ஒரே ஒரு தைரியசாலி அண்ணன் சிபி தான். மொக்கைப் படங்களில் இருந்து காப்பாற்றுவதற்காகவே பிறந்தவர் அல்லவா அவர்!

    ReplyDelete
  22. நேரமின்மை காரணமாக கவிதைவீதியை வாசித்ததில்லை, இன்று உங்கள் மூலம் அவர் பற்றி அறிந்தேன்..நன்றி.


    அப்புறம், கமெண்ட் பாக்ஸை பாப்-அப் ஆக்கியதற்கு நன்றி.

    ReplyDelete
  23. அம்பாளடியாள் said...
    //அடகடவுளே நம்ம பேரக் காணோமே எங்க போச்சு .....!!!
    காக்கா தூக்கி இருக்கும்//

    காக்கா தூக்கிட்டுப் போக உங்க பேரு என்ன வடையா?

    //ஆனா அருமையா அறிமுகம்
    செய்திருக்காரு மிக்க நன்றி சகோ தொடர்ந்தும் அறிமுகம்
    செய்யுங்க//

    ஐயோ இவங்களுக்கெல்லாம் அறிமுகமா? இவங்கெல்லாம் சுப்பர்ஸ்டார்கள், இது வெறும் நன்றி நவிலல்.

    //(அப்பயாவது நம்மளப்பத்தி என்ன சொல்லுறாருன்னு
    பார்க்கலாம் ஹி ...ஹி ..ஹி ...)//

    ஒருவேள அடுத்தடுத்த வார பதிவுகளில் உங்க பேரும் வருமோ? காக்கா கிட்டதான் கேட்டுப்பார்கனும்.

    ReplyDelete
  24. ஜீ... said...
    //
    //"அகாதுகா அப்பாடாகர்ஸ்"//
    நல்லாத்தான் இருக்கு பாஸ்!//

    நன்றி பாஸ்.

    //ரவுண்ட் அப் சூப்பர்! தமிழ்வாசி பற்றி கொஞ்சம் புதிய தகவல்கள்! நன்றி!//

    மறுபடியும் நன்றி பாஸ், அந்த புதிய தகவல் ஷீனா ஷகாபடியா? வெளங்கிடும்..

    //அப்புறம் அதென்ன டிஸ்கில? ஆ! ஹார்ட் அ டச் பண்ணிட்டீங்களே பாஸ்!
    :-)//
    இதுக்கே இப்புடியா, அப்பிடின்னா தொடர்ந்து படிச்சா மனுஷன் என்ன ஆவாரோ?

    ReplyDelete
  25. ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
    //நல்ல விரிவான அலசல் பாஸ்! அனைவரைப்பற்றியும் நீங்க சொன்னதெல்லாம் உண்மை!//

    வர வர இந்தாலும் ஒரு வரில காமென்ட் போடா ஆரம்பிச்சுட்டாரே, அப்பிடின்னா???

    ReplyDelete
  26. செங்கோவி said...

    //தமிழ்வாசி அளவிற்கு எளிய மனிதரை நான் பதிவுலகில் பார்த்ததில்லை. பிரபலப் பதிவர் என்ற பந்தாவே இல்லாமல் பழகக்கூடியவர். பதிவர்க்கு ஏதேனும் உதவி தேவையென்றால், தெரிந்ததை பகிர்ந்துகொள்ளக்கூடியவர். சினிமாக் கட்டுரைகள் மட்டுமல்லாமல், கதை/கவிதை என எல்லா ஏரியாவிலும் கலக்கி எடுப்பவர். அவர் பதிவுலகில் இன்னும் உச்சத்தைத் தொடுவார்//

    நாங்க இப்பிடி கலைக்கிறதும் அதுக்கும் அவர் போடும் கமேண்டுமே சாட்சி. நிச்சயமாண்ணே, அவரு பல உச்சங்களை தொடுவார்..

    //அவரது சிஎன்சி டெக்னிகல் தொடர் தமிழில் ஒரு பெரிய முயற்சி. அதனைச் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே..//

    சுட்டிக்காட்டியதற்கு நன்றி, சேர்த்துட்டோம்..

    //கில்மா படத்திற்கு ஃபோட்டோ/ஃபோன் நமபர் போட்டு, விமர்சனம் எழுதும் ஒரே ஒரு தைரியசாலி அண்ணன் சிபி தான். மொக்கைப் படங்களில் இருந்து காப்பாற்றுவதற்காகவே பிறந்தவர் அல்லவா அவர்!//

    அவரளவு தைரியமான பதிவர் வேறுயாரும் இல்லை. புனைப்பெயர் கூட இல்லாமல் உள்ளதை உள்ளபடி சொல்லும் தைரியம் யாருக்கும் வராது.

    //நேரமின்மை காரணமாக கவிதைவீதியை வாசித்ததில்லை, இன்று உங்கள் மூலம் அவர் பற்றி அறிந்தேன்..நன்றி.//

    நாங்க எதோ விளையாட்டா ஆரம்பிச்சோம், பொறுப்பு கூடுது போலிருக்கே..

    //அப்புறம், கமெண்ட் பாக்ஸை பாப்-அப் ஆக்கியதற்கு நன்றி//

    இணைப்பு குடுத்து உதவியதற்கு நன்றி.

    ReplyDelete
  27. மாய உலகம் said...
    //இன்றைய வலைச்சரத்தில் தங்களை
    அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
    நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்
    //

    நன்றி நண்பரே, உங்களின் ஒரு பதிவுக்கும் இந்த பதிவில் இணைப்பு குடுத்துள்ளோம், கோவிச்சுக்க மாட்டீங்கங்குற நம்பிக்கைதான்

    ReplyDelete
  28. மாற்றம் எல்லாம் நல்லாயிருக்கு அதைப்பத்தி நாங்கம் எதுவும் கேள்வி கேட்க மாட்டோம்...

    ReplyDelete
  29. பிரபல பதிவர்கள் பற்றி தங்களுடைய கருத்துக்கும் மற்றும் மதிப்பிற்க்கும் மிக்க நன்றி....

    என்னை குறிப்பிட்டமைக்கும் நன்றிகள்..

    ReplyDelete
  30. கூடல் பாலா உண்மையில் மதிக்கத்தக்க மனிதராக மாரிவிட்டார் அவர்களுடைய கோரிக்கையை மத்திய அரசு கண்டிப்பாக கண்கொண்டு தக்க நடிவடிக்கை எடுக்க உத்திரவிடவேண்டும்...

    அந்த போராட்டம் விரைவில் வெற்றிப்பெற்று அவர்களுடைய அறப்போர் முடிவுக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன்..

    ReplyDelete
  31. எலேய் என்னாச்சுலேய் எல்லாம் நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு....

    ReplyDelete
  32. வணக்கம் பாஸ்,

    நான் கொஞ்சம் பிசியாகிட்டேன்,
    வீக்கெண்ட் என்பதால்..
    விரிவான கமெண்ட் போட முடியலை, மன்னிக்கவும்,

    கவிதை வீதி சௌந்தர், தமிழ்வாசி பிரகாஷ்,
    அண்ணாச்சி சிபி பற்றி அசத்தலாக தொகுத்திருக்கிறீங்க.

    ReplyDelete
  33. தலை உங்க ப்ளாக் பெயர் வாயினுள் நுழைய மறுத்தாலும்,
    சூப்பரா இருக்கு.

    ReplyDelete
  34. நிறைய பதிவரை பெருமைப்படுத்தி பதிவு போட்டிருக்கீங்க. இது நல்ல ஒரு ஆரம்பம். வாழ்த்துக்கள். புது தலைப்புதான் வாயிலேயே நுழைய மாட்டரது.

    ReplyDelete
  35. இன்னைக்கு தாம்பா வாறன் ஆரம்பமே அசத்தலாயிருக்கே... கலக்குவோம்டி...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

    ReplyDelete
  36. # கவிதை வீதி # சௌந்தர் said...

    //மாற்றம் எல்லாம் நல்லாயிருக்கு அதைப்பத்தி நாங்கம் எதுவும் கேள்வி கேட்க மாட்டோம்...//

    இதெல்லாம் ஒரு தலைபோற விஷயமான்னு எம்புட்டு நாசுக்கா கேக்குறாரு..

    //பிரபல பதிவர்கள் பற்றி தங்களுடைய கருத்துக்கும் மற்றும் மதிப்பிற்க்கும் மிக்க நன்றி....
    என்னை குறிப்பிட்டமைக்கும் நன்றிகள்..//

    நன்றி சார்..

    //கூடல் பாலா உண்மையில் மதிக்கத்தக்க மனிதராக மாரிவிட்டார் அவர்களுடைய கோரிக்கையை மத்திய அரசு கண்டிப்பாக கண்கொண்டு தக்க நடிவடிக்கை எடுக்க உத்திரவிடவேண்டும்...
    அந்த போராட்டம் விரைவில் வெற்றிப்பெற்று அவர்களுடைய அறப்போர் முடிவுக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன்..//

    நம்மை சார்ந்துள்ள சமுதாயத்துக்கு நாமும் பயனுள்ளவரா இருக்கணும். பாலா அண்ணனின் செயல்பாடு, அவர்மீது மட்டுமல்ல ஒட்டு மொத்த பதிவுலகம் மீதே ஒரு மரியாதையை ஏற்படுத்தியிருக்கிறது. போராட்டம் வெற்றிபெற நமது வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  37. MANO நாஞ்சில் மனோ said...

    //எலேய் என்னாச்சுலேய் எல்லாம் நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு....//

    இப்பவும் நல்லாதானே சார் போய்க்கிட்டு இருக்கு

    ReplyDelete
  38. நிரூபன் said...
    //வணக்கம் பாஸ்,

    நான் கொஞ்சம் பிசியாகிட்டேன்,
    வீக்கெண்ட் என்பதால்..
    விரிவான கமெண்ட் போட முடியலை, மன்னிக்கவும்,

    கவிதை வீதி சௌந்தர், தமிழ்வாசி பிரகாஷ்,
    அண்ணாச்சி சிபி பற்றி அசத்தலாக தொகுத்திருக்கிறீங்க.//

    நன்றி பாஸ், சாதரணமா எல்லாரும் வீக் டேய்ஸ்ல தானே பிஸி ஆவாங்க, நீங்க என்ன வீக் எண்டுல? ஆமா இது நீங்க வேலை பாக்குற கம்பெனிக்கு தெரியுமா?

    //தலை உங்க ப்ளாக் பெயர் வாயினுள் நுழைய மறுத்தாலும்,
    சூப்பரா இருக்கு//

    அப்பாடா, சார் அனுபவிக்கறாரு..

    ReplyDelete
  39. Lakshmi said...
    //நிறைய பதிவரை பெருமைப்படுத்தி பதிவு போட்டிருக்கீங்க. இது நல்ல ஒரு ஆரம்பம். வாழ்த்துக்கள்.//

    நன்றி பாட்டி

    //புது தலைப்புதான் வாயிலேயே நுழைய மாட்டரது//

    உங்களுக்காக ப்ளாக் பெயர வாழைபழம்ன்னு மாத்திடலாம்னு இருக்கோம்.

    ReplyDelete
  40. மாய உலகம் said...
    //நன்றி நண்பரே...//

    மீண்டும் நன்றி நண்பரே..

    ReplyDelete
  41. ♔ம.தி.சுதா♔ said...
    //இன்னைக்கு தாம்பா வாறன் ஆரம்பமே அசத்தலாயிருக்கே... கலக்குவோம்டி...//

    கண்டிப்பா சார், தொடர்ந்தும் வாங்க கலக்குவோம்.

    //மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்//

    அட்டகாசமான பதிவுதான், எத்தன நாளக்கிதான் ஹீரோக்கள தெய்வமா கும்புட போறாங்களோ?

    ReplyDelete
  42. அப்படியே சந்தாணம் ஸ்டையில்லே கலக்குறீங்க.............

    இன்று பதிவர்கள் பலருக்கு பயனுள்ளமேட்டர் ஒன்னு சொல்லி இருக்கேன்...வந்து பாருங்க

    ReplyDelete
  43. சி.பி.செந்தில்குமார் said...
    //அடங்கோ!@@@@@@@@@//

    என்ன சார் அது @@@@@@ கெட்டவார்த்தையா?

    ReplyDelete
  44. ஸ்டைல் நாராயணன் உரிமையாளர் கஞ்சிபஜார் said...
    //அப்படியே சந்தாணம் ஸ்டையில்லே கலக்குறீங்க.............//

    நன்றி சார்.

    ReplyDelete
  45. எல்லாரும் நம்ம நண்பர்கள்தான்.... நடத்துங்க நடத்துங்க.....

    ReplyDelete
  46. நம்ம தலைவர் கெட்டப் எந்த படத்துல உள்ளது ..அப்புறம் இன்னொன்னு மொத்தம் மூணு ஆம்பள படம் போட்டுட்டு ரெண்டே ரெண்டு பிகர் படம் தான் போட்டிருக்கிங்க .இது நல்லதுக்கு இல்ல சொல்லிபுட்டேன்

    ReplyDelete
  47. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    எல்லாரும் நம்ம நண்பர்கள்தான்.... நடத்துங்க நடத்துங்க.....///
    ஒங்க நண்பர்கள் நம்ம நண்பர்கள் எல்லாமே ஒண்ணுதான்ணே ... ஏன்னா நாம ரெண்டு பேரும் நண்பர்கள் ஆச்சே!!

    ReplyDelete
  48. //உதவாக்கரை said...
    நம்ம தலைவர் கெட்டப் எந்த படத்துல உள்ளது ..அப்புறம் இன்னொன்னு மொத்தம் மூணு ஆம்பள படம் போட்டுட்டு ரெண்டே ரெண்டு பிகர் படம் தான் போட்டிருக்கிங்க .இது நல்லதுக்கு இல்ல சொல்லிபுட்டேன்//
    அது அந்த சுட்டிசாத்தான்படம்ணே... இனிமே நீங்க சொல்ற மாதிரி பிகருங்க படத்த அதிகமா போடுரோம்ணே!!

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்!!