Friday, September 16, 2011

சோனாவும் சரணும் - கிழியும் முகத்திரைகள்


இன்னிக்கி சூடான விஷயம் என்னனா, சரண் சோனாவ மேட்டர் பண்ண ட்ரை பண்ணினதுதான். இந்த சம்பவத்த சோனா வாயாலேயே கேட்டு தெரிஞ்சுக்க விடியோவை பார்க்கவும்.

இது ஒன்னும் நமக்கு புதுசில்லையே, வழக்கமா நாம பாத்துட்டு வாறதுதானே, இந்தமாதிரி சமாச்சாரங்கள் வாறதும், அப்புறமா வந்த வேகத்துல செட்டில் ஆகிடறதும் நடந்துக்கிட்டுதானே இருக்கு. சினிமா நடிகர்கள் நடிகைகள் பத்தி இது ஒன்னும் புதுசில்ல, நிகிதா விவகாரம் இன்னம் அடங்கவே இல்ல அதுக்குள்ள இன்னொன்னு. கொஞ்ச நாள் முன்னாடி பிரபுதேவா , அதுக்கும் முன்னாடி சிம்பு, கமல்ஹாசன்னு சர்ச்சைகள் ஏராளம். இந்தப்போக்கு கொஞ்ச நாளா இலக்கிய வட்டத்தையும் ஆட்டிகிட்டு இருக்கு. கொஞ்ச நாள் முன்னாடி சாரு சாட்டிங் விவகாரம், அதுக்கும் முன்னாடி சோபா சக்தி விவகாரம் இதெல்லாம் நீங்க யாரும் மறந்திருக்க மாட்டீங்கன்னு தெரியும். இந்த விவகாரங்கள் சரியான முறையில் தான் டீல் பண்ணப்படுதான்னு யோசிச்சா அது கொஞ்சம் குழப்பமாவேதான் இருக்கு. குழம்பின குட்டைய குழப்புறதுதானே நம்ம வழக்கம். முதல்ல இந்த விவகாரம் பத்தி பார்போம்.


ஏன் ஒருமாதிரி பாக்குறீங்க?
நமக்கு இப்புடி ஒன்னு நடந்தா நாம என்ன பண்ணுவோம்? அந்த பப்ளிக் ஆறுபேரையும்(?) கூப்பிட்டு வச்சி இந்தாள நிறுத்திவச்சி தெரிஞ்ச கெட்டவார்த்தை எல்லாம் சொல்லி திட்டி மன்னிப்பு கேக்க வைப்போம், அதுக்கும் மேல இன்னும் நாலுபேருக்கு இது நடக்ககூடதுன்னு நெனைச்சோம்னா தனியா போலீஸ் ஸ்டேஷன் போயி கம்ப்ளைன்ட் குடுப்போம்.  யாராச்சி பிரஸ் மீட் வச்சி என்ன எங்க தொட்டான் என்ன செஞ்சான்னு சொல்லுவமா? இல்ல அப்புடி சொல்றதால பொதுமக்களுக்கு ஏதாச்சும் பிரயோசனம் கெடைக்குமா? வேணும்னா அந்த ஆளோட இமேஜே டேமேஜ் பண்ணலாம், நம்ம இன்னும் நாலுபேர்கிட்ட போய் சேரலாம், பத்திரிகைகளுக்கும், பதிவர்களுக்கும், டீ-கட அரட்டைகளுக்கும் ஒரு கில்மா சமாச்சாரம் குடுக்கலாம். அவ்வளவுதான். ஒரு பிரைவேட் பார்ட்டில, நடந்த ஒரு விசயத்த(!) இப்புடி அம்பலப்படுத்த வேண்டிய தேவை என்ன?  இதுல எதாச்சும் சமுதாய அக்கறை இருக்கானு தெரியல. அது மட்டுமே நம்ம ஆதங்கம். அதுக்காக சரண் நல்லவரு இந்தம்மா கெட்டவங்கன்னு நாங்க சொல்ல வரல, நடந்த சம்பவம் உண்மை சம்பவமாவே இருக்கலாம், ஆனா அது கையாளப்பட்ட விதம் பொருத்தமானதா இல்லைன்னு மட்டும் தெரியுது. 

அலேர்ட்: 18+ மட்டும் சரண் படத்துக்கு அருகிலுள்ள  இடைவெளியை சிலெக்ட் செய்யவும்.
-->
எப்புடி இருந்த நான்... இப்புடி ஆயிட்டேன்...
இந்தம்மா மட்டும் யோக்கியமா, சினிமாவுல கவர்ச்சி காட்டி ரசிகனோட பாலியல் வேட்கைய தூண்டித்தானே பிரபலமாகுனாங்க, அதனால அவ ஒரு தே$$$$யா, அப்பிடின்குற ரேஞ்சுல கண்டிப்பா சில பேர் பேசுவாங்க, இதுவும் நியாயம்னு படல, அவுங்க தொழில் கவர்ச்சி நடிகையா இருக்கலாம், ஆனா அவங்களும் ஒரு பெண்தான். கவர்ச்சி நடிகைன்னாலே பாலியல் தொழிலாளின்னு பாக்குறது சரிப்பட்டு வராது, அப்புடின்னா கோடைகாலத்துல ஐரோப்பிய நாடுகள்லயும், அமெரிக்க நாடுகள்லயும் நடமாடற எல்லா பெண்களையும் அப்புடித்தான் சொல்லணும். ஆடைக் குறைப்பு நம்ம பாலியல் வேட்கைய தூண்டுதுன்னா நம்மகிட்டதான் எதோ குறை இருக்கு, இல்லனா நம்ம கலாசாரத்துல எதோ குறை இருக்கு, அதுக்காக இந்த ஆடை குறைப்பு சரின்னு சொல்லல, நம்மகிட்ட இருக்கற தப்புதான் அவங்களையும் அந்த தப்ப பண்ண வக்கிதுன்னு சொல்றோம்.  ஒரு நிஜமான பாலியல் தொழிலாளிகிட்ட கூட அவங்க விருப்பமில்லாம நடந்துகிட்டா அது ரேப் தான். சரண் இந்தம்மா கிட்ட அப்புடி நடந்திருந்தார்னா அது நிச்சயமா ரேப் அட்டெம்ட் தான். 
<--


இது பப்ளிசிடிக்காக செய்யப்பட ஒன்றா, அல்லது உண்மையிலேயே சரண் ஒரு காமுகனா என்ற கேள்விக்கு பதில் தெரிய வேண்டுமென்றால் வேறு எங்காவாது போய்த் தேடுங்கள், இந்தப் பதிவின் நோக்கம் அவை பற்றி ஆராய்வதில்லை. யாரு சரி யாரு பிழை, இவர்களது யோக்கியம் என்ன, என்பதை அலசுவது நமது நோக்கமில்லை. அது தேவையும் இல்லை. பொதுமக்களுக்கு இந்த விடயங்களை எடுத்துச்செல்லும் புண்ணிய காரியங்களில்(!) இணைந்துகொண்டுள்ள  நாம் இது பற்றிய சரியான புரிந்துணர்வோடு செயல்படுகிறோமா என்பதே நமது கவலை. ஊர் கோடியில் ஒரு பெண் மூன்று நபர்களால் கற்பழிக்கப்பட்டால் அது துண்டுச் செய்தி, ஆனால் இது தலைப்புச்செய்தி, ஏன் இந்த பாகுபாடு?

ஒரு நடிகனையோ, இலக்கியவாதியையோ, தொழில் மட்டத்தில் அல்லது படைப்பு மட்டத்தில் விமர்சிக்காது அவர்களை வழிகாட்டிகளாக, கடவுளர்களாக கொண்டாடுவதுதான் இந்த பிரச்சினைகளுக்கு மூல காரணமே. பிரபலங்கள் என்பவர்களும் தனி மனிதர்கள்தான், தனி மனித பலகீனம் நிச்சயம் அவர்களையும் ஆட்டுவிக்கும். பிரபலங்கள் என்றால் ராமனாகவோ சீதையாகவோ இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பது நமது மடமை. இவங்க ஒன்னும் கடவுள் இல்லியே. தனி மனித பலகீனங்களுடன் போராடி தோற்றுப்போன பிரபலங்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை நமக்கு கில்மா மேட்டர் ஆனதுதான் கொடுமை.

நம்மள பத்தியும் எதுவும் சொல்றாங்களோ?
தனிமனித சுதந்திரத்தில் தலையிடக் கூடாதென்று பக்கம் பக்கமாக பேசுபவர்கள்தான் இது பற்றியும் பக்கம் பக்கமாக எழுதுவார்கள். அந்தரங்கங்களுக்குள் நுழைந்து சுகம் காணுவது அபத்தமில்லையா? இரு தனி மனிதர்களுக்கிடைப்பட்ட சம்பவங்களை வெளிச்சமிட்டுக்காட்டுவது முறையாகுமா? ஒவ்வொரு மனிதனும் அவனது செயல்பாட்டிற்கு யாதேனும் நியாயம் காணவே செய்கிறான். அந்தரங்கம் புனிதமானதகாகவே இருக்கிறது அம்பலப்படுத்தும் வரை. அப்பிடியெனில் சரண் போன்றவர்கள் இவ்வாறு நடந்துகொண்டால் அது முறையாகுமா? இதை நாம் கண்டுகொள்ளாது விட்டுவிட வேண்டுமா? தட்டிக்கேட்கவே கூடாதா? இந்த முரண்பாடு இருந்து கொண்டேதான் இருக்கும் பிரபலங்கள் மீதுள்ள கடவுள் விம்பம் விட்டொழிக்கப்படும் வரை. இந்த விடயங்களை விமர்சிக்ககூடாது என்று சொல்லவில்லை, அம்பலப்படுத்தக்கூடாது என்று சொல்லவும் இல்லை, ஆயினும் உலகமே அழிந்து விட்டது, என்கிற அளவில் பில்ட்-அப் தேவையில்லை என்பதுதான் எமது தாழ்மையான கருத்து. தனி மனிதர்களையும், கருத்துக்களையும், செயல்பாடுகளையும் பிரித்துப்பார்க்கும் பக்குவம் நமக்கு இன்னும் வரவில்லையோ என்கிற ஆதங்கம்தான் இந்த பதிவு.

டிஸ்கி: எதோ மனசுல பட்டத சொல்லிட்டோம். எங்களுக்கே ஒன்னும் புரியல, யாராச்சி புரியவச்சிங்கன்னா கோடி புண்ணியமா போகும்.


29 comments:

  1. என்னய்யா இன்னைக்கு ஒரே கள்ள'மார்"கேட்டா இருக்கே என்னாச்சு???

    ReplyDelete
  2. இல்லய்யா... ஊர்ல எவ்வளவு முக்கியமான பிரச்சினைகள் இருக்கு(நீங்க உங்க பதிவுல சொன்ன பிரச்சினையையும் சேர்த்துதான் சொல்றேன்), ஆனா அத எல்லாம் விட்டுட்டு இது எதோ தல போற விஷயம் மாதிரி மீடியாக்கள் சொல்லிக்கிட்டு இருக்கே.. அந்த எரிச்சல்ல எழுதுன பதிவு!!!

    ReplyDelete
  3. இவங்களுக்கு வேற வேலையே கிடையாது ஃபேன்ஸ். எவன் எவகூட போனான்னு அலசுறது தான் ஜனநாயகத்தின் நாலாவது தூணின் கடமையா?

    ReplyDelete
  4. // Delete
    Blogger செங்கோவி said...

    இவங்களுக்கு வேற வேலையே கிடையாது ஃபேன்ஸ். எவன் எவகூட போனான்னு அலசுறது தான் ஜனநாயகத்தின் நாலாவது தூணின் கடமையா?//
    ஆமாண்ணே.. முக்கிய பிரச்சினைகள யாருமே கண்டுக்குறது இல்ல... ஆனா சந்திக்கு சந்தி இத பத்திதான் பேசுறாங்க... கெரகம்டா சாமி... உங்க சாரு சாட் பத்தின பதிவையும் வாசித்தோம், கருத்துக்கள் கிட்டத்தட்ட ஒத்து போகுது சார்...

    ReplyDelete
  5. இது பத்தி நாம ஏதாவது சொல்லி இந்திய இறையாண்மைக்கு குந்தகம் வந்திடப் போகுது...

    ReplyDelete
  6. சோனா அடிக்கடி புப்ளிசிட்டி தேடுபவர் .இதுவும் அதன் ஒரு கட்டமாக இருக்கலாம் .விஜய் ரசிகர்மன்றத்தின் மகளிர் அணி தலைவி என்று அறிக்கை விட்டமையும் இதுக்குத்தானே

    ReplyDelete
  7. அப்புறம் யாரு சார் அந்த படத்தில் இருப்பவர்கள்

    ReplyDelete
  8. என்ன கருமமோ எனக்கு ஒன்றும் புரியலைப்பா.....ஒருவேளை சோனா சொன்னது உண்மையா பொய்யா என்று...அந்தபாட்டியில் கலந்து கொண்டவர்களிடம் விசாரித்தால் தெரியும்..ஆனால் அதுக்கும் சோனா ஒரு பதில் வைத்து இருப்பார்..அந்தப்பாட்டிலில் கலந்து கொண்டவர்கள் எல்லாம் சரணின் நண்பர்கள் என்று....இதற்காக சரண் நல்லவர் வல்லவர்..என்று சொல்ல வரவில்லை.உண்மையில் அவர் சோனாவிடம் தவராக நடந்து இருந்தால் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டும்...கவச்சி நடிகை என்றால் என்ன அவ்வளவு கேவலமா? அவங்களும் பெண்தானே?

    ReplyDelete
  9. //Philosophy Prabhakaran said...
    இது பத்தி நாம ஏதாவது சொல்லி இந்திய இறையாண்மைக்கு குந்தகம் வந்திடப் போகுது...//

    ஆமா சார், நம்ம ஜாக்கிரதையா இருக்கணும், எங்களுக்கு என்னமோ நம்ம அரசியல் அமைப்பு பிடிக்காம நடக்குற ஒரு வெளிநாட்டு சதிதான் இதுன்னு தோணுது..

    ReplyDelete
  10. kobiraj said...

    //சோனா அடிக்கடி புப்ளிசிட்டி தேடுபவர் .இதுவும் அதன் ஒரு கட்டமாக இருக்கலாம் .விஜய் ரசிகர்மன்றத்தின் மகளிர் அணி தலைவி என்று அறிக்கை விட்டமையும் இதுக்குத்தானே//

    நமீதா விவகாரத்த மறந்துட்டீங்களே.

    //அப்புறம் யாரு சார் அந்த படத்தில் இருப்பவர்கள்//

    என்ன சார் இப்புடி கேக்குறீங்க, நாங்க என்ன பதிவுக்கு சம்பந்தமே இல்லாமலா படம் போடுறோம், சோனாவும், சரணும் சார்.

    ReplyDelete
  11. K.s.s.Rajh said...
    //என்ன கருமமோ எனக்கு ஒன்றும் புரியலைப்பா....//

    எங்களுக்கும்தான் சார்

    //ஒருவேளை சோனா சொன்னது உண்மையா பொய்யா என்று...அந்தபாட்டியில் கலந்து கொண்டவர்களிடம் விசாரித்தால் தெரியும்..//

    அத தெரிஞ்சுகிட்டு நாம என்ன நோபெல் பரிசா வாங்கப்போரம்?

    //ஆனால் அதுக்கும் சோனா ஒரு பதில் வைத்து இருப்பார்..அந்தப்பாட்டிலில் கலந்து கொண்டவர்கள் எல்லாம் சரணின் நண்பர்கள் என்று....இதற்காக சரண் நல்லவர் வல்லவர்..என்று சொல்ல வரவில்லை.உண்மையில் அவர் சோனாவிடம் தவராக நடந்து இருந்தால் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டும்...கவச்சி நடிகை என்றால் என்ன அவ்வளவு கேவலமா? அவங்களும் பெண்தானே?//

    அதுதானே, சார் 18 + ஒன்லின்னு சொன்னதால Spoiler வாசிக்காம விட்டுட்டீங்களா?

    ReplyDelete
  12. //"என் ராஜபாட்டை"- ராஜா said...
    கலகிட்டிங்க//

    நீங்க வேற, நாங்களே கலங்கிப்போய் நிக்கறம்.

    ReplyDelete
  13. உம்ம குசும்பு கொஞ்சம் ஓவர் ஓய்

    மோனிகாவும் சோனாவும் ஒண்ணா!!?

    ஹா ஹா ஹா

    ReplyDelete
  14. //ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    உம்ம குசும்பு கொஞ்சம் ஓவர் ஓய்

    மோனிகாவும் சோனாவும் ஒண்ணா!!?

    ஹா ஹா ஹா//

    என்ன சார் இப்பிடி கேட்டுப்புட்டீங்க, நாங்க கிளிண்டனும் சரணும் ஒண்ணுன்னா சொன்னோம்??

    ReplyDelete
  15. இததான் என் வீட்டு கழிபரையில் என்ன நடக்குதுன்னு பாக்க உனக்கு உரிமையில்லை என்றாரோ ஓர் பிரபல நடிகர் ?படித்தீங்களா ? கமல் படத்தில் முத்தத்திற்கு தடை

    ReplyDelete
  16. //IlayaDhasan said...
    இததான் என் வீட்டு கழிபரையில் என்ன நடக்குதுன்னு பாக்க உனக்கு உரிமையில்லை என்றாரோ ஓர் பிரபல நடிகர் ?//

    வேற எப்புடி சார் சொல்றது இதயெல்லாம்..

    ReplyDelete
  17. ஒண்ணுமே புரியல போங்க.

    ReplyDelete
  18. //N.H.பிரசாத் said...
    ஒண்ணுமே புரியல போங்க.//

    என்ன சார் நீங்க, நீங்களாச்சி எங்க குழப்பத்த தீர்த்து வப்பீங்கன்னு பார்த்தா நாங்க சொன்னதையே திரும்ப சொல்லிட்டு போறீங்க?

    ReplyDelete
  19. பப்ளிக்கா ஒரு பப்ளிசிட்டியோ!

    ReplyDelete
  20. //thalir said...பப்ளிக்கா ஒரு பப்ளிசிட்டியோ!//
    சீப்பப்ளிசிட்டியோ இல்ல உண்மையாவே இருக்கட்டும்.. ஏன் இந்த பில்ட்அப்பு? அதுதான் நாம கேள்வி?

    ReplyDelete
  21. விபச்சாரி என்றாலும் அவளின் அனுமதி மீறி தொடுபவன் தண்டனைக்குரியவன்.....

    யார் மீது தவறென்று அவர்களுக்குத்தான் தெரியும்...

    ReplyDelete
  22. சோனா..சோனா...உன் அங்கம் தங்கம் தானான்னு பாட்டுல சந்தேகம் கேட்டுருப்பார். அதைப்போய் சோனா இப்படி பப்ளி’குட்டி’ பண்ணிட்டாங்களே...

    ReplyDelete
  23. ஆன்னா ஊன்னா இதையே சொல்றாங்க சோனா.. ஆ.வி எஃபெக்ட்

    ReplyDelete
  24. ஷீ-நிசி said...
    //விபச்சாரி என்றாலும் அவளின் அனுமதி மீறி தொடுபவன் தண்டனைக்குரியவன்.....

    யார் மீது தவறென்று அவர்களுக்குத்தான் தெரியும்...//

    உண்மை, ஆனால் அது விவாதத்துக்குரிய விடயமா என்பதே எமது கேள்வி?

    ReplyDelete
  25. கௌதமன் said...
    //சோனா..சோனா...உன் அங்கம் தங்கம் தானான்னு பாட்டுல சந்தேகம் கேட்டுருப்பார். அதைப்போய் சோனா இப்படி பப்ளி’குட்டி’ பண்ணிட்டாங்களே...//

    விடுங்க பாஸ், அவரு அங்கயாவது பாடினாரே.

    ReplyDelete
  26. மழை said...
    //ஆன்னா ஊன்னா இதையே சொல்றாங்க சோனா.. ஆ.வி எஃபெக்ட்//

    எல்லாம் இதையே பேசுறதுக்கும் கேக்குறதுக்கும் நாலு கேனயன் இருக்கானேங்குற திமிர்தான்

    ReplyDelete
  27. மோனிகாவுக்கு வேற நல்ல படத்த போட்டிருக்கலாம்...

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்!!