கல்யாணம் அண்ணன் நம்ம லௌ மேரேஜ் பதிவ படிச்சிட்டு செம டென்ஷன் ஆகிட்டாரு. ஏற்கனவே எனக்கு பொண்ணு கெடைக்கறது குதிரைக் கொம்பா இருக்கு, இதுல நீங்க வேற இப்படி ஒரு பதிவு போட்டா என் நிலைமை என்னவாகுறதுன்னு ஒரு கேள்வி கேட்டு நம்மள சிந்திக்க வச்சிட்டாரு. அவரைப் பொறுத்தமட்டும் அவருக்கு பொண்ணு கெடைக்காததுக்கு ஒரே காரணம் தமிழ் சினிமா. வெளிநாட்டு வாழ் எலிஜிபில் பேட்சுலர்சை தமிழ் சினிமா "அமெரிக்க மாப்பிள்ளை" என்னும் பெயரில் அசிங்கப்படுத்தி பொண்ணு கிடைக்காம பண்ணிடுதுங்கறது அண்ணன் வைக்கிற குற்றச்சாட்டு. ஒரு சமூக ஆர்வலரா, இந்த அவல நிலையைப் போக்க நாமளும் ஏதாவது செய்யணுமே, அதுதான் இந்தப் பதிவு.
நம்ம பசங்கள நம்ம ஊரோட தொடர்ப்பு படுத்தற விஷயங்கள் மூணுங்க, ஒன்னு தமிழ் சினிமா, ரெண்டாவது விஜய் டிவி, மூணாவது சமூக வலைத் தளங்கள். நம்ம ஊருலயெல்லாம் பசங்க ஒண்ணா சேர்ந்தா தண்ணி அடிப்பாங்க, தம் அடிப்பாங்க, பொண்ணுங்கள பத்தி டிஸ்கஸ் பண்ணுவாங்க, இங்கயெல்லாம் பசங்க ஒண்ணா சேர்ந்தா சந்தானம், சிவகார்த்திகேயன் காமெடில தொடங்கி, சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் ப்லூபெர்ஸ்ன்னு எதையாவது பார்த்து சிரிச்சிக்கிட்டே, ப்ரிட்ஜுல இருந்த பழைய சாதத்தையும் சாம்பாரையும் மைக்ரோ வேவுல சூடு பண்ணி சாப்பிட்டு மல்லாக்க படுத்து தூங்கிடுவாங்க. அந்தளவு அப்பிராணிகளான பசங்க.
அமெரிக்க மாப்பிள்ளைன்னா அவ்வளவு இளக்காரமாங்க, அவுங்க திறமை, பெருமை என்னன்னு உங்களுக்கு தெரியுமா? புருஷ லட்சணம் மொத்தமா அமையப் பெற்ற ஆண் வர்க்கமுங்க நம்ம பசங்க. சாம்பிளுக்கு நாலு அஞ்சு எடுத்து விடுறேன் கேட்டுக்கங்க.
1. அமெரிக்க மாப்பிள்ளைகள் எல்லாருமே கண்டிப்பா சமையல் எக்ஸ்பேர்டா இருப்பாங்க. ஏன்னா தினமும் இட்லி தோசைக்காகவோ இல்ல ஒரு பிரியானிக்காகவோ நூறு இருநூறு மைல் தூரம் அலையை முடியாது, எது வேணும்னாலும் நாமளா சமைச்சாதான் உண்டு, சோ கண்டிப்பா சமையல் தெரிஞ்சிருக்கும். அதுலயும் வெரைட்டி வெரைட்டியா சமையல் பண்ணுவாங்க. இன்னும் முக்கியமா "நேத்து சமைச்சதுதான் இன்னிக்குமா?" ன்னு ஒருநாளும் சண்ட போட மாட்டாங்க, போன வாரம் சமச்சத இந்தவாரம் சூடு பண்ணிக் குடுத்தாக்கூட சப்புக் கொட்டி சாப்பிட்டுட்டு போய்க்கிட்டே இருப்பாங்க.
2. நீங்க மணிக்கணக்கா ஷாப்பிங் பண்ணாலும் பொறுமையா உங்ககூட கம்பெனி குடுப்பாங்க. இந்த நாட்டுல பேங்க்ல ஒரு செக்கு டெபாசிட் பண்ணனும்னாலோ இல்ல முடி வெட்டிக்கனும்னாலோ கூட அபாயின்மென்ட் எடுத்து மூணு நாலு மணிநேரம் காத்திருந்துதான் பண்ணனும். சோ இந்த வரிசையில நிக்கறதோ இல்ல பார்கிங் லாட்ல மணிக்கணக்கா காத்திருக்கறதோ நம்ம பசங்களுக்கு சப்ப மேட்டர், அதனால ஷாப்பிங் போறீங்கன்னா உங்களுக்கு போர்ட்டரும் டிரைவரும் கன்பர்ம்.
3. மணிக்கணக்கா ஃபோன் கால் பேசுறது நம்ம பசங்களுக்கு ஜுஜுபி. ஏன்னா வீடோ, நட்போ பெரும்பாலும் சர்வதேச தொடர்பாத்தான் இருக்கும். சிக்கன் சமைக்கறதுக்கு தக்காளி போடனுமால தொடங்கி ஒன்னாம்புல கூடப் படிச்ச கோகிலா புருஷன் இப்ப யார வச்சிருக்கான் வரைக்கும், போன்ல தான் பேசியாகனும். நா எல்லாம் ராசு மாமாவுக்கு ஸ்கைப்புனேன்னா ஃபைவ், சிக்ஸ் ஹவர்ஸ் சும்மா பேசிக்கிட்டே இருப்பேன். நம்ம நண்பர் ஒருத்தர் சும்மா ஒரு நாளைக்கு பத்து பதினோரு மணிநேரம் அவரேஜா ஃபோன் பேசுவாருன்னா பார்த்துக்கங்களேன். சோ நீங்க ஃபோன் பேசினாலோ இல்ல பக்கத்துவீட்டு பொண்டுகளோட மணிக்கணக்கா ஊர் வம்பு பேசினாலோ நோ ப்ராப்ளம்.
4. ட்ராபிக் ரூல்சுக்கு கட்டுப்பட்டு எப்பவுமே கவனமா வண்டி ஓட்டுவாங்க, டூ வீலர்ன்னா கொஞ்சம் தள்ளியே நிப்பாங்க. போர் வீலர்ல எப்பவுமே ஓவர் ஸ்பீடுல போகமாட்டாங்க. என்ன காரணம்ணா இங்க ட்ராபிக் ரூல்ஸ் அப்புடி, மாட்டிக்கிட்டா கமிஷனர் எங்க சித்தப்பான்னு சொல்லி எஸ்கேப் ஆகவும் முடியாது, ஃபயின் போட்டான்னா அதுவேற பெரிய தொகையா இருக்கும், அதையும் தாண்டி, இன்சூரன்ஸ்ல இருந்து எல்லாமே ஜாஸ்தி ஆகி நம்ம பரம்பரையையே பாதிச்சுடும். சோ நம்ம பசங்க வண்டி ஓட்டரதுல எப்பவுமே அந்நியன் அம்பி தான்.
5. இங்க உள்ள பசங்க எல்லாருமே அட்லீஸ்ட் ஒரு ரெண்டு சீரியல் கண்டிப்பா பார்பாங்க. விஜய் டிவில வாற தமிழ் சீரியல்ல தொடங்கி, பிக் பங்க் தியரி, பிரண்ட்ஸ், டூ அண்ட் அ ஹால்ப் மேன், ப்ரேகிங் பேட் ன்னு எல்லா சீரியலும் அத்துப் பொடியா இருக்கும். சோ நீங்க சீரியல் பார்கறத கண்டுக்கவே மாட்டாங்க. கூட சேர்ந்து பார்கலைனாலும், நீங்க சீரியல் கதை சொன்னா ரொம்ப இன்டரஸ்டா கேப்பாங்க.
6.அமேரிக்கா மனுஷன டென்ஷன் பண்ணி டிப்ரஷன் சப்ரஷனுக்கு ஆளாக்கி மெண்டலாக்கி அலையை விடுறதுல நம்பர் ஒன்னு. அதனால இந்த ப்ராஷர ஹாண்டில் பண்றதுக்காகவே நம்ம பசங்க, பதிவு எழுதறது, ஃபோட்டோ கிராபி, ஜிம் ட்ரைனிங், சமையல் அது இதுன்னு பல எக்ஸ்ட்ரா காரிகியுலர் ஆக்டிவிடீஸ் கைவசம் வச்சிருப்பாங்க. அதோட இந்த நாட்டுல ஒரு ஆணி புடுங்கறதுக்கு ஆள் வச்சாக்கூட மணிக்கு அறுபது டாலர்ன்னு இருநூறு முன்னூறு டாலர் புடிங்கிக்குவாங்க, சோ இந்த வண்டி ரிப்பேர் பண்றது, ப்ளம்பிங், எலக்ரிகல் ரிபேர்னு எதுன்னாலும் நம்ம பசங்களே பாத்துடுவாங்க. இதனால ரெண்டு நன்மை இருக்கு, ஒன்னு எதிர்காலத்துல வீட்டுல எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும் சூசயிட் பண்ணிக்கறதோ அல்லது மெண்டல் ஆகிறதோ நடக்காது, நீங்க எவ்வளவு டென்ஷன் படுத்தினாலும் எந்த பிரச்சினையும் இல்லாம தாங்கிக்குவாங்க, அம்புட்டு நல்ல பசங்க. ரெண்டாவது கைவசம் ஏகப்பட்ட தொழில் இருக்கும். ரிஷஷன் அது இதுன்னு வந்து வேல இல்லாம போச்சின்னா ஒரு ரெஸ்டூரன்டோ இல்ல மெக்கானிக்கல் ஷாப்போ வச்சு பொழச்சுக்குவாங்க.
7. முக்கியமா "எப்ப பாரு ரேடியோ பெட்டி மாதிரி தொண தொணன்னு பேசிக்கிட்டே இருக்கே" வகையறா குற்றச்சாட்டுக்கள் ஒரு போதும் உங்க மேல வராது. ஏன்னா தமிழ நேர்ல கேட்டு வருஷக்கணக்கா ஆகியிருக்கும், மொக்கையா நாலு வார்த்த தமிழ்ல பேசக்கூட யாருமே இல்லையான்னு ஏங்கிப் போயிருப்பாங்க, சமயத்துல இன்னொரு மனுஷன் பேசுறதக் கேட்டே, அது என்னங்க இன்னொரு மனுஷன் தன்னோட மயிண்டு வாயிச கேட்டே வாரக் கணக்கா ஆகியிருக்கும். இந்த நிலமையில நீங்க என்ன பேசினாலும் எவ்வளவு மொக்கையா இருந்தாலும் ரசிச்சுக் கேப்பாங்க.
7. முக்கியமா "எப்ப பாரு ரேடியோ பெட்டி மாதிரி தொண தொணன்னு பேசிக்கிட்டே இருக்கே" வகையறா குற்றச்சாட்டுக்கள் ஒரு போதும் உங்க மேல வராது. ஏன்னா தமிழ நேர்ல கேட்டு வருஷக்கணக்கா ஆகியிருக்கும், மொக்கையா நாலு வார்த்த தமிழ்ல பேசக்கூட யாருமே இல்லையான்னு ஏங்கிப் போயிருப்பாங்க, சமயத்துல இன்னொரு மனுஷன் பேசுறதக் கேட்டே, அது என்னங்க இன்னொரு மனுஷன் தன்னோட மயிண்டு வாயிச கேட்டே வாரக் கணக்கா ஆகியிருக்கும். இந்த நிலமையில நீங்க என்ன பேசினாலும் எவ்வளவு மொக்கையா இருந்தாலும் ரசிச்சுக் கேப்பாங்க.
இவ்வளவு புருஷ லட்சணமும் ஒருங்கே சேர்ந்து வரப்பெற்ற இந்தப் பசங்கள அமெரிக்க மாப்பிள்ளைன்னு அரைக்கால் டவுசரும் காதுல ஒரு செவுட்டு மிஷினுமா தமிழ் சினிமா அசிங்கப் படுத்தறத நான் எதிர்ப்பதோடு, கல்யாணம் அண்ணன் போன்ற எங்க பசங்கள நம் சமூகம் முப்பது நாற்பது தாண்டியும் பிரம்மச்சாரிகளாகவே வாழ வைக்கற கொடுமையையும் வன்மையா கண்டிக்கறேன்.
டிஸ்கி: காலத்தின் கட்டாயத்தினால் தேவை ஏற்பட்டால் இந்தப் பதிவினை மேலும் தொடர்வதர்க்கு இடமுண்டு.
அட்டகாசம்..ஒவ்வொரு பாயின்ட்டும் உண்மை. ஒரு அமெரிக்க மாப்ளையே எழுதின பதிவுங்கிறதால, அத்தனையும் முத்துக்கள்.
ReplyDeleteநன்றிண்ணே, பதிவின் நீளம் கருதி இன்னும் கொஞ்சம் முத்துக்கள் மிஸ் ஆகிடிச்சு.
Deleteஇன்னும்..........இன்னும் அதிகமா எதிர் பாக்குறோம்.(டாய்லெட் கிளீன் பண்ணுறது,புல்லு வெட்டுறது ன்னு ...................................)ஹ!ஹ!!ஹா!!!
ReplyDeleteஆமா ஐயா, ஒரு ஹோம் மேக்கரா இருக்கறதுக்கு கூட நம்ம பசங்க நூறு பெர்சென்ட் எலிஜிபில்.
DeleteInteresting post. Thanks.
ReplyDeletesooper post.
ReplyDelete