ஒவ்வொரு மனுஷனுக்கும "லட்சியங்கள்" ரொம்ப தேவையானவை, ரொம்ப அத்தியாவசியமானவையும்
கூட. நாம யாரு, என்ன மாதிரி பேக்ரவுன்ட்ல இருந்தோம், இப்போ என்ன பண்ணிட்டு இருக்கோம், இனிமே என்ன பண்ண போறோம்,
எல்லாவற்றையும் கடந்து நம்ம ஒவ்வொருவருக்கும் ஒரு சில லட்சியங்கள் கண்டிப்பா
இருக்கும், இருக்கனும். லட்சியங்களை நிர்ணயித்து கொள்வதும், அதை நோக்கிய பாதையில் சின்ன சின்ன வெற்றிகளை அடைவதும், எப்பவுமே நமக்கு "கெத்தை" தருபவன, அந்த "கெத்து" வாழ்கைக்கு ரொம்ப முக்கியம். "வாழ்க்கைல லட்சியங்கள் மாறிக்கொண்டு கூட இருக்கலாம். ஆனா,
லட்சியத்தை அடையனும்ங்குற எண்ணம் மட்டும் மாறவே கூடாது"ன்னு ஒரு மாபெரும்
மகான் சொல்லியிருக்காரு. அந்த மகான் யாருங்குறது நமக்கு தேவையில்லை.
எனக்கு
நினைவு தெரிந்த நாட்களில், நீ பெரியாளாகி என்னவாகுவ?ன்னு யாரவது கேட்டால்.
"அப்பாவை போல நானும் பிஸினெஸ்
மேன் ஆவேன்"ன்னு சொல்லிக்கிட்டு
இருப்பேன். ஏன்னா, ஒவ்வொரு
மகனுக்கும் தன் தந்தையே
முதல் இன்ஸ்பிரேஷன் என்பதால், அப்போ எனக்கு "பிசினெஸ்
மேன்" ஆவது லட்சியம். அப்புறம்
இந்த படிப்ப
படிச்சி, யுனிவர்சிட்டி போயி மேற்படிப்பு எல்லாம் படிச்சு, அங்கேயே வேலை செஞ்சு,
நமக்குன்னு ஒரு ப்ரொபஷனல் துறையை
உருவாக்கி கொண்டு, இருந்த பொழுது, இடையிடையே உலகம்
அறிந்த ஒரு பெரிய புரொபசர்
ஆவனும், மில்லியன்களில் சம்பாதிக்கும் டேடா சயன்டிஸ்ட் ஆவனும்னு இலட்சியங்கள்
மாறி கொண்டிருந்தன.
அனால், லட்சியம் இல்லாமல் இருக்கவில்லை. வேலைய
விட்டு வெளில
வந்து, திரும்பவும் வேறு வேலை தேடி
"நான் படிச்ச படிப்புக்கு இல்லாத
வேலை, எங்க அப்பா பேருக்கு
இல்லாத வேலை" எதுவுமே கிடைக்காமல்
இருக்கும்போது கூட
, "சிக்ஸ்-பேக்" உருவாக்குவதை லட்சியமாக
வச்சிக்கிட்டேன். அதை அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு முன்னாடி
"தல" போல இருந்த நான் "சூர்யா" போல
ஆவனாலுமே "சிவகார்த்திகேயன்" போலயாவது ஆயிட்டேன்
என்பது மகிழ்ச்சி. ஏன் நடிகர்களை பற்றி
சொல்றேன்னா, எல்லா தமிழ் சினிமா
ரசிகர்களை போலவும் பஸ் புடிச்சி கோடாம்பாக்கம்
போயி, "ஸ்ட்ரெய்ட்டா ஹீரோ" ஆகிரனும் என்பது கூட எனது
கடந்த கால இலட்சியங்களில் ஒன்று.
அவ்வளவு ஏங்க, எல்லா வயசுக்கு
வந்த பையனை போலவே "எனக்கு
சூப்பர் ஃபிகர் செட் ஆவனும்"
என்பது கூட எனது இன்னும் நிறைவேறாத லட்சியமே.
இடையே
இந்த பதிவுலகத்துல(!) கண்ட கண்ட பதிவுகளை வாசித்து, உலகத்தர சினிமாக்கள்ன்னு சொல்லபடுற திரைபடங்கள பார்த்து "நம்ம வாழ்கையின் நிதர்சனம்
என்னன்னா" ரேஞ்ச்ல பேச தொடங்கிவிட்டேன்.
சமீபத்துல கூட ஒரு நண்பன் அவனோட லட்சியங்களையும் அவற்றை அவன் அடைய முற்படும்போது
ஏற்படும் தோல்விகளையும் பத்தி சொல்லிட்டு இருக்கும்போது, "'உங்க அப்பன எல்லாம் ஏமாத்திபுட்டாங்கடா'ன்னு ஆரண்யகாண்ட வாழ்ந்து கெட்ட ஜமீந்தார்
மாதிரி என்புள்ளைக்கு எதிர்காலத்தில் சொல்லிட்டு இருப்பேனோன்னு பயமா இருக்கு மச்சி"ன்னு சொன்னான். நானும் பயந்துட்டேன். ரஜினியானப்புறம் "எல்லாம் கொஞ்ச காலம்தான் நண்பா"ன்னு சொல்றது இல்ல மேட்டர், ரஜினியாவது தான் மேட்டரே!
என்னை பொறுத்த வரைக்கும், திரும்பவும்
ஆரம்ப புள்ளிக்கே வந்துட்டேன். மீண்டும் ஒரு லட்சியத்தை நிர்ணயித்து கொண்டேன். அதை நோக்கிய பயணத்தை ஆரம்பிக்க உள்ளேன். சமீப காலமா "ஒன்னுமே
இல்லாமல் ஆரம்பித்து மாபெரும் சாம்ராஜ்யம் உருவாக்கிய அண்ணாமலை சாதனையாளர்களின் பயோகிராபிகளை" வெறித்தனமா தேட தொடங்கியிருக்கேன், வாசிக்க. பொதுவா எல்லா வெற்றியாளர்களுமே தங்களுக்கு பின்னால்
ஒரு டெம்ப்ளேட் பிளாஸ்பேக் வச்சிருப்பாங்க. உதாரணத்துக்கு "நா சின்ன வயசுல வீடு வீடா பேப்பர் போட்டேன் " , " வீடியோ
கேசட் வித்தேன் ", " பால் கறந்தேன் ", " ஒரே ஒரு சூட்கேசுடன் சிட்டிக்கு வந்தேன்" , "தூங்க இடம் இல்லாமல்,
பப்ளிக் பார்க்ல படுத்து இருந்தேன் "
ன்னு எதாவது ஒன்னு இருக்கும். நானும் இப்போதுல இருந்தே, நாம அது போல இதுவரைக்கும் என்னென்ன
பண்ணிருக்கோம்ன்னு ஒரு லிஸ்ட் எடுத்து ரெக்கார்ட்ல
வைக்க ஆரம்பிசிட்டேன். பை தி பை, இப்போ எதுக்கு இவ்வளவு வெளாவாரியா "லட்சியம்" என்னும்
டாபிக்கில் லெக்சர் பண்றேன்னா, நாளைக்கு டிவி
பேட்டில நீங்க உங்க இளம் வயதில் என்ன பண்ணிட்டு இருந்தீங்கன்னு கேட்கும்போது, "வெட்டியா பிளாக் எழுதிகிட்டு இருந்தேன்"னு சொல்வது கூட எனது லட்சியமே!
நீங்க பரவாயில்லை. நான் ‘வச்சிருந்த’ லட்சியத்தையெல்லாம் வெளிலயே சொல்ல முடியாது!
ReplyDeleteஆகா, நம்மள விட அதியுயர் லட்சியங்களோ!
Deleteபத்,குஷ், இல்லன்னாலும் இன்னும் ஹன்ஸ் லட்சியம் இருக்கே உங்களுக்கு!
ஒரு லட்சியத்துக்கு ஒரு பாட்டு வீதம் போட்டு வைங்க full energyஆ இருக்கும்.
ReplyDeleteஹீ ஹீ.. ஒவ்வொரு பாட்டு முடியுறப்பவும் அந்தந்த லட்சியங்கள அடைஞ்சிரலாமா!
Deleteஉங்கள் இலட்சியம் இன்னும் பல பாடல்களில் தேடடும்! என் கனவு எல்லாம் மொக்கை தான் மாமா !ஹீ
ReplyDeleteநன்றி நேசரே... நாம சொன்னதும் மொக்கதானே ....
Deleteநான் கூட யோசிக்க்த்துப் பாக்கும்போது நிறைய கஷ்டப்பட்டது ஞாபகத்துக்கு வருது. லிஸ்ட் போடுறேன், வாழ்க்கையில உயர்வான நிலைக்கு வரும்போது (வந்தால்) சொல்லிக்க வசதியா இருக்கும். ஹிஹி..
ReplyDeleteலிஸ்ட் போட்டு வச்சுக்குங்க ஸ்கூல் பையன் சார், கண்டிப்பா உயர்வான நிலைக்கு வருவோம்....
Deleteஹா ஹா ஹா நான் கூட இந்த உலகத்துக்கு எதோ பெருசா சொல்ல வாரீங்கன்னு நினைச்சேன்.. கடைசி வரில அழுத்தமா சொல்லிடீங்க :-))))))
ReplyDeleteநாம எங்க சார், உலகத்துக்கு சங்கதி சொல்லுறது... எதோ நம்மால முடிஞ்சது, நாலு மொக்கைய போடுவோம்....
Deleteநான் கூட,தி............. இருந்து "மஞ்சப்பை" ஒண்ணு தான் கொண்டு வந்தேன்,திருட்டுத் தனமா ரயிலில டிக்கட்டு கூட இல்லாம!
ReplyDeleteஐயா, மஞ்ச பையோட வந்து, நீங்கதான். சாதிச்சுட்டீன்களே... ஜமாய்ங்க...
Deleteவெற்றி பெற வாழ்த்துக்கள் :-) வேற சிந்தனையில் கவனம் செலுத்தாம ஒரு முடிவோட இருந்தீங்கன்னா சக்சஸ் தான்.
ReplyDeleteஅறிவுரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கிரி சார்.... :-)
Delete