Friday, July 29, 2011

எதிர்பார்புள்ள தமிழ் படங்களும் சில கமெண்ட்களும்.



ஒரு கல் ஒரு கண்ணாடி

நம்ம தலைவர் ஹீரோவா நடிக்கிற படம், ராஜேஷ் இயக்கம், உதயநிதி ஸ்டாலின் இன்னொரு ஹீரோ, இந்தவருடத்தின் சூப்பர் டூப்பர் ஹிட்டு, இந்த வருஷ கடைசில படத்த எதிர்பார்க்கலாம், இந்த படத்துல ஹன்சிகா மற்றும் ஆண்ட்ரியா இருக்காங்க. ஆண்ட்ரியா நம்ம தலைக்கு ஜோடியா நடிக்குராங்கன்னு காத்து வாக்குல கேள்விப்பட்டோம். அப்புறம் நட்புக்காக ஆர்யாவும் இந்த படத்துல இருக்காரு. இந்த படத்துக்கு இருக்கற எதிர்பார்ப்ப பத்தி நாம சொல்லவே தேவையில்ல, கலெக்ஷன்ல இது எப்பிடியும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆகிடும், ஆனா இந்த படத்துக்கு போட்டியா வசூலிக்க கூடிய படங்கள்னு நாங்க நெனக்கிற படங்களோட ஒரு பட்டியல் இதோ.........




1 . ஏழாம் அறிவு  

இது ஒரு சூர்யா படம், அந்த ஒரு விஷயம் போதும் இந்த படத்துக்கு உள்ள எதிர்பார்ப்ப பத்தி சொல்றதுக்கு. அதுக்கும் மேல, இது முருகதாஸ் படம், சுருதிஹாசனோட மொத தமிழ் படம்(என்ன பொண்ணு சூர்யாவ விட கொஞ்சம் ஒசரம் ஜாஸ்தி, ஆனா சிங்கம் சமாளிச்சிருமில்ல), கஜினி கம்போ சேர்ந்து பண்ணுற படம் இப்படி நெறைய எதிர்பார்ப்பு இருக்கு. ரோபோவுக்கு அடுத்தபடியா அதிக எதிர்பார்ப்பு உள்ள தமிழ் படம் இதுதான். (ராணாவ மறந்துட்டேன்னு நெனக்காதிங்க, ராணா பில்டப் ஆக்டோபர்க்கு பிறகுதான்  ஆரம்பிக்க போகுது). இந்தபடத்துக்கு தமிழ்நாட்டுல மட்டுமில்ல, இந்தில இருந்து ஹாலிவூட் வரைக்கும் எதிர்பார்ப்பு இருக்குன்னா பார்துங்கங்களேன் (இது கொஞ்சம் ஓவர் பில்டப் தான், ஆனா இந்த பயபுள்ள சூர்யாவுக்கு இந்தில செம மவுசு, இவரு படம் பண்ற வரைக்கும்தான் பாத்துகிட்டு இருக்காங்க ரீமேக் பண்றதுக்கு). இது ஒரு கஜினி, அயன் வரிசையில உள்ள படம், நம்ம தலைவர் சந்தானம் இல்ல, சந்தானம் இல்லாம ஓடுற ஒரு சில படங்கள் லிஸ்டுல இதுவும் சேர்ந்தா சந்தோசம்தானே. கூடுதல் தகவல் இந்த படத்துல அபினயாவும் இருக்காங்க. இந்த படத்தோட ஓகே ஓகே பட trailer வர இருக்குறதல படத்துக்கு செம எதிர்பார்ப்பு. ஆகஸ்ட்ல இல்லனா செப்டெம்பர்ல படம் ரிலீஸ் ஆகும்னு எதிர்பார்க்கலாம். 


2 . மங்காத்தா 

இது தலையோட ஐம்பதாவது படம். வெங்கட்பிரபு படம். அத விட மொத முறையா  பிரேம்ஜி அமரன், வைபவ் ரெட்டி, அரவிந்த் ஆகாஷ்,  அர்ஜுன் அப்பிடின்னு பெரிய பட்டாளமே தல படத்துல இருக்கு (அப்பிடியா இல்லனா மொத முறையா அவங்க படத்துல தல இருக்காரா?). VTV க்கு அப்புறம் திரிஷா நடிச்சிருக்காங்க. வெங்கட் பிரபுன்னாலே காமடிக்கு பஞ்சம் இருக்காது. ஆக்சன் த்ரில்லர் அப்பிடின்னு  சொல்றாங்க, அந்த ஏரியாவுல தலையும் ஆக்சன் கிங்கும் கலக்குவாங்கன்னு எதிர்பார்க்கலாம். (தலைக்கு வரிசையா வந்த தலையே இல்லாத படங்களுக்கு அடுத்து இந்த படம் வருது). பாடல்கள்  ஆகஸ்ட் 10 ரிலீஸ். அப்புறம் இன்னும் ரெண்டு வாரத்துக்கு பெறகு  படம் ரிலீசுங்குறாங்க. இந்த படத்துலயும் சந்தானம் சார் இல்ல, ஆனாலும் அஜித்தின் நல்ல  மனசுக்காக  இந்த படம் நல்லபடியா ஓடனும். கூடுதல் தகவல், இந்த படத்துல லக்சுமி ராய், ஆண்ட்ரியா கூட அஞ்சலியும் இருக்காங்க. யுவன் சங்கர் ராஜா இசையமைச்சிருக்கார். பாடல்கள் சுமார் ரகம்தான்.
எமது  மங்காத்தா ட்ரைலர் விமர்சனம் இங்கே


3 .  ரௌத்திரம் மற்றும் வந்தான் வென்றான்

ரெண்டுமே பெரிய இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக போகின்றன.
மொதல்ல ரௌத்திரத்த பாப்போம். இது நம்ம ஜீவா தம்பியோட படம் (மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்). கோ படதுக்கப்புரம் வரப்போறது.  ஸ்ரேயா சரண் ஜோடியா நடிச்சிருக்காங்க. பிரகாஷ் ராஜ் இருக்காருங்க, கூடுதல் தகவல் இந்த படத்துல ப்ரீத்தி Jhangiani (எதுக்கு வம்புன்னு அந்த பேர இங்கிலீஷ்லேயே போட்டுட்டோம்) இருக்காங்க, இது ஒரு பாலிவூட் பிகர், ஹலோ படத்துக்கப்புறம் மறுபடியும் தமிழ்ல நடிச்சிருக்கு. இது ஆகஸ்ட்டு 12 ரிலீஸ்.

அப்புறம்  வந்தான் வென்றான்.இது ஜீவாவின் ரௌத்திரத்திற்க்கு பெறகு ரிலீசாகும் படம்.  ஆனா இதுல உள்ள முக்கியமான விஷயம் என்னான்னா தலைவர் சந்தானம் மும்பைல பாணி பூரி விற்பவறாக கலக்குகிறார், ஏற்கனவே ட்ரெய்லரில் இருக்கும் சந்தானத்தின் டான் ஸ்பூப்(spoof) காமெடி கலக்கிக்கிட்டு இருக்கு. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் இது ஜெயம் கொண்டான் , கண்டேன் காதலை கண்ணன் இயக்கும் படம். அந்த ரெண்டு படத்துலயும் சந்தானம் காமெடி செம ஹிட்.ஜீவா+சந்தானம் திரும்பவும் கூட்டணி சேரும் இந்த படமும் ஹிட்டாகனும்னு வாழ்த்துவோம். ஆங் இன்னொரு மேட்டர், வெள்ளாவி வச்சு வெளுத்த பிகர் நடிக்கும் ரெண்டாவது தமிழ் படம் இது. செப்டெம்பர் இறுதிக்குள் ரிலீஸ் ஆகிரும்.


4. வேலாயுதம் 

இது ராஜா இயக்கத்துல தளபதியும் தல-தளபதியும் சேர்ந்து நடிக்கற படம். ஆசாத் தெலுங்கு படத்தின்  நாட்டை எடுத்து   ராஜா இயக்குர மொத நேரடி படம், (இதுவரைக்கும் ரீமேக்தான் பண்ணிக்கிட்டு இருந்தாரு, திரைக்கதையையும் சுட்டு, வசனங்களை மொழிபெயர்ப்பு மட்டும் செஞ்சிட்டு, திரைகதை, வசனம், இயக்கம் ராஜான்னு போட்டுக்குவாரு, ஆனா அதுல கூட ஒரு நேர்மை இருந்திச்சு, சில பேர் இங்கிலீஷ் படத்தையும் ராபின் ஹூட் பாட்டையுமே சுட்டுட்டு, இது சொந்த முயற்சின்னு சொல்லிகிராங்க. (இது பத்தின மேலதிக தகவல்கள்) . இந்த  படத்துல   சந்தானம் சொல்லும் "எந்த ஹீரோவும் இப்புடி பழி வாங்கி பார்த்ததில்லடா" செம டைமிங் பன்ச்(ஆனா போஸ்டர பார்த்தா தான் என்னமோ குருவி ரெண்டாம் பாகம் மாதிரி தோணுது). பயந்துராதேங்க, இந்த படத்துல சில ஆறுதலான விசயங்களும் இருக்கு, ஜெனிலியா (அதுதாங்க நம்ம ஹரினி), ஹன்சிகான்னு ரெண்டு பொண்ணுங்க, சரண்யா மோகனும்(தங்கச்சி) இருக்காங்க, அப்புறமா நம்ம M.S பாஸ்கரும் இருக்காரு. (தேரோட்றவன் கேனயனா இருந்தா மாடும் மச்சான்னு சொல்லுமா?)  டாகுட்டருக்கு இந்த படமாவது கைகொடுக்குமான்னு பாப்பம். இதுவும் ஆகஸ்ட் ரிலீசாம். இந்த படமும் ஓடுவதற்கு வாழ்த்துக்கள்.சந்தானம் விஜய் காமெடி போர்ஷன் செமையா வந்திருப்பதாக கேள்வி.



5 . ஒஸ்த்தி
இது ஹிந்தில ஒங்க வீட்டு ஓட்டம், எங்க வீட்டு ஓட்டம் இல்ல ங்கொக்காமக்கா ஓட்டம் ஓடுன தபாங் படத்தின் ரீமேக். சிம்பு அலைஸ் எஸ்.டி.ஆர் நடிக்கிறார். வெற்றி பெற்ற ஒரு படத்தை அத விட சூப்பரா ரீமேக் பண்ணும் வித்தை தெரிந்த தரணி இந்த படத்த இயக்குறாரு. ஜித்தன் ரமேஷ் சிம்புவின் அண்ணன் பாத்திரத்திலும் ரிச்சா கங்கோபத்யை, மதுஷாலினி. மற்றும் சரண்யா மோகன் (திருப்பியும் அதே அண்ணனுக்கு தங்கச்சி ரோல்) போன்றோரும் நடிக்கிறாங்க. ஆனா அது எல்லாத்தையும் விட இப்போது கோலிவுட்டில் டெம்போவை எகிற வைக்கிற செய்தி இந்த படத்தில் சந்தானம் இணைந்து இருப்பது. சந்தானம்+சிம்பு+vtv கணேஷ் திரும்பவும் கூட்டணி சேர்ந்தால் நிச்சய ஹிட்டுதான். எந்த ஒரு காமெடி நடிகரும் நல்ல பார்மில் உள்ளபோது ஒரு போலிஸ் படத்தில் நடித்து கலக்குவது வழமை(வடிவேல்=மருதமலை, விவேக்=மே.பா ராசக்காபாளையம்) அதே போல் இப்போது பீக்கில் இருக்கும் சந்தானம் இந்த படத்தில் போலீஸ் ஏட்டு/கான்ஸ்டபிள் ரோலில் நடிப்பதாக கேள்வி. சந்தானத்திற்கு இது இன்னொரு மைல்கள்ளாக இருக்கும் . இது தீபாவளி ரிலீஸ்.


அப்புறம் இந்த வருஷத்தில் சந்தானம் நடிப்பில் முப்பொழுதும் உன் கற்பனைகள்(அதர்வா), யுவன்யுவதி(பரத், முழு நீள காமெடி), வேலூர் மாவட்டம்(நந்தா), கள்ள சிரிப்பழகா(ஷக்தி) போன்ற படங்களும் ரிலீஸ் ஆகின்றன. ஆனால் இந்த படங்களிற்கான  எதிர்பார்ப்பு ரொம்ப கம்மி. கண்டேன், உதயன் படங்களை போல இந்த படங்களிலும் சந்தானத்தின் காமெடி மட்டுமே ஹிட்டாக கூடிய வாய்ப்புக்களே அதிகம். நம்ம இன்னொரு நண்பன்ஆரியாவோட வேட்டைன்குற படமும் லிஸ்ட்ல இருக்கு.


8 comments:

  1. படங்களின் உங்க பார்வை சூப்பருங்கோ

    ReplyDelete
  2. //meyyappanram said...

    santhanam ma kokka
    //
    அதானே

    ReplyDelete
  3. அருமையான படைப்பு வாழ்த்துக்கள் சகோ .என்னதான் இருந்தாலும் வந்து சாமி கும்புட்டிற்றுஉண்டியல்ல தட்சணை போடாமல் வந்தது மன்னிக்க
    முடியாத குற்றம் சகோ ஹி...ஹி ..ஹி .... நீங்களே கையவிட்டால் சாமி எப்படித்தான் முன்னேறுவது...!!!

    ReplyDelete
  4. wants to be a 1000th member in ur facebook group... request sent.. add me

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்!!