Friday, July 8, 2011

அவன் இவன், மாயைகளும் நிதர்சனமும்.



அவன் இவன் திரைப்படம் சமீபத்தைய தமிழ் திரைப்படங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம், காரணம் பாலா. பாலாவினுடைய படைப்பு பற்றி விமர்சிக்கும் அளவுக்கு ஞானமோ அறிவோ (ரெண்டுமே ஒன்னுதானோ) நமக்கு கிடையாது, எனவே அதை வேறு நபர்களிடம் விட்டுவிடுவோம்(அப்புறம் ஒனக்கு என்ன ம......க்கு இந்த வேல அப்பிடின்னு நீங்க கேட்டாலும்) ஒன்றரை வருடங்களுக்கு மேலாக எதிர்பார்ப்புடன் காத்திருந்து பார்த்த ஒரு திரைப்படம் பற்றி எனது அபிப்பிராயங்களையும் பதிவு செய்துவிட வேண்டும் என்கிற நப்பாசையில் இந்த பதிவு. 

யதார்த்த சினிமாவுக்கு வழிகாட்டியாக தரமான திரைப்படங்களின் அடையாளமாக திகழ்ந்த பாலாவின் திரைப்படங்கள் எப்போதுமே வாழ்வில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் கதாபாத்திரங்களை சுற்றியே பின்னப்பட்டிருக்கும். உதாரணமாக நந்தா, அல்லது பிதாமகனை எடுத்துக்கொண்டால் நந்தாவோ அல்லது சித்தனோ நாம் அன்றாடம் காணும் ஒரு கதாபாத்திரம் அல்ல. எனினும் சூரியா மற்றும் விக்ரமின் நடிப்பினால் அந்த கதாபாத்திரங்கள் செயற்கை தன்மை அற்று நம்மை படத்துடன் ஒன்றிப்போக வைத்துவிடுபவை. அவன் இவனில் பாலா கண்டிருக்கும் முதல் தோல்வி வால்டர் வணங்காமுடி கதாபத்திரத்தின் செயற்கை தன்மையே ஆகும். இரண்டாவது இடையிடையே எட்டிப்பார்க்கும் யதார்த்த மீறல்கள். மூன்றாவது காரணம் கூறப்படாத ஹைனஸ்  மற்றும் அவன்-இவன் குடும்பத்திற்கான நட்பு. நான்காவது இறுதியாக படம் பேசும் அடிமாடு சந்தை அரசியல். இதில் முதல் காரணம் தவிர்த்து மற்றயவை பற்றி பல விமர்சகர்களும் போதுமான அளவுக்கு விமர்சித்து விட்டதால் அவற்றை விட்டு விட்டு, அவன்-இவன் படம் தோற்றுவித்த மாயையான விஷால் நடிப்புடன் தொடர்புடைய முதல் காரணத்தை மட்டும் இங்கே அலசுவோம்.

அம்பிகாவின் நடிப்பில் தொடங்கி அந்த பெரியவர் வரை அத்தனை பேரும் நேர்த்தியாக கொடுக்கப்பட்ட வேலையே செய்திருக்கிறார்கள். ஆர்யா பற்றி சொல்லவே வேண்டாம் அவர் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார். ஆர்யாவுடநிருக்கும் அந்த பய்யன் கூட மிக இயல்பான நடிப்பை அழகாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். விஷால் ரொம்பவே கஷ்டப்பட்டு உடலை வருத்தி நடித்திருக்கிறார், அது கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டிய விஷயம். அடுத்தது ஒரு மாஸ் ஹீரோ என்கிற வட்டத்தை தாண்டி நடிக்க முயற்சி செய்ய அவர் அடுத்துக்கொண்ட பிரயர்தனங்களையும் பாரட்டியாகவேண்டும். ஹீரோவுக்கான ஈகோவை விட்டுக்கொடுக்க வேண்டிய ஒரு கதாபத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதையும் பாராட்டவேண்டும் (எல்லாமே நல்லம்னு சொல்றியே அப்புறம் ஏன் நடிப்பு செயற்கைங்குரன்னு நீங்க கேக்குறது புரியுது). ஆனால் அவர் இந்த படத்துக்கும் அந்த கதாபாத்திரத்துக்கும் எவ்வளவு அழகு சேர்த்திருக்கிறார் அல்லது நியாயம் சேர்த்திருக்கிறார் என்பது கேள்விக்குறியே. விஷாலின் நடிப்பில் முதல் பிரேமிலிருந்து ஒரு செயற்கைத்தனம் ஓட்டிக்கொண்டே இருக்கிறது. அதுவே நம்மை படத்துடன் ஒன்றிப்போக முடியாதபடி செய்துவிடுகிறது (விஷால் நடிக்கிறார்னு தெளிவா புரியுதுங்க, அதுதான் மேட்டர்) விஷாலின் வாய்ஸ் மாடுலேஷன் இன்னமும் திமிரு லெவலை தாண்டவில்லை (படு மொக்க அப்பிடின்னு வாசிச்சிக்கோங்க) அது இந்த படத்தில் அவர் செய்யும் கரெக்டரை ரொம்பவே பாதிக்கிறது. செயற்கை தன்மையை மேலும் பறை சாற்றுகிறது.

விஷால் நடிப்பதற்கான கதவுகளை பாலா முற்றாகவே திறந்துவிட்டிருக்கிறார். அதை அவர் எந்த அளவு பிரயோசனப் படுத்தியிருக்கிறார் என்பதை அறிய ஒரு காட்சியை அலசுவோம். சூர்யா வரும் அந்த நவரச காட்சி. இந்த காட்சியை நான் குறைந்தது எழு தடவை பார்த்திருப்பேன். காட்சி முடிந்ததும் மனசில் நிற்பது சூரியாவும் ஆரியாவும் தான் (அங்கேயே நம்ம மாப்புள கோட்ட விட்டுடாபுல). இந்த காட்சி பிதாமகன் திரைப்படத்தில் சிம்ரன் - சூரியா பங்கேற்கும் நடனக்காட்சிக்கு ஒப்பானது. இரண்டையும் பாருங்கள். சிம்ரன் நடனத்தையும் சூர்யா நடனத்தையும் பற்றி நான் சொல்லவேண்டியதில்லை  முழு தமிழ்நாடே அறியும். ( புள்ளயாண்டான் அந்த டிபட்மன்ட்ல படு வீக்கு). ஆயினும் அந்த காட்சி முடிந்ததும் எல்லார் மனதிலும் சூர்யாவே நிறைந்திருப்பார், அவர் உடல் மொழி அவ்வளவு தூரம் பேசியிருக்கும். சிம்ரன் சூர்யா இருவருமே சம அளவில்தான் திரை நேரத்தை பங்குபோட்டிருப்பர்கள். அவன் இவன் காட்சியில் முழு நேரத்தையும் விஷால் பயன்படுத்திக்கொள்ள அவகாசம் வழங்கியிருப்பார் பாலா. இடையிடையே சில நொடிகள் மட்டுமே சூர்யாவையும் ஆரியாவையும் காட்டியிருப்பார். அனால் அவர்கள் இருவரும் நெறயவே ஸ்கோர் பண்ணியிருப்பாங்க. உதாரணமா கருணையை வெளிக்கொணர ஏறக்குறைய ஒன்றரை நிமிடங்கள் விஷால் முயற்சித்திருப்பார், ஆனால் சூரியா அதனை ஒரு வினாடியில் காட்டுவார் (விஷாலோட கண்ண டொக்காக்கி பயல மக்காகிட்டாங்களோ - அவரு கண்ண காட்டி நடிச்சிருந்தா இன்னமும் மொக்கயாகியிருக்கும்). ஆர்யா, முகத்தில் பெருமிதத்தையும் பாசத்தையும் ஒன்று சேர சில வினாடிகளியே காட்டுவார். இது விஷால் தவறவிட்ட தருணங்களின் தொகுப்பு.
நீங்களும்  அத இன்னொருவாட்டி கொஞ்சம் பாருங்க:



ப்ளேட முளிங்கிட்டதா சொல்லி வைத்தியசாலை போகும்போதும் சரி (எப்படியா மூணு டிபாட்மன்ட் தேடிக்கிட்டிருக்கிற திருடன ஆஸ்பிடல்ல இருந்து நேரா வீட்டுக்கு அனுப்பினீங்க, அய்யா பாலா இத ஒங்ககிட்ட இருந்து எதிர்பார்கல) , விஷாலின் நவரசத்துக்கு மயங்கி ஹைனசிடம் புலம்பும் போதும் சரி, பூட்டு திறக்கும் போதும் சரி, அப்புறமா விஷால வெறுப்பேத்தும்போதும் சரி இன்னம் பல இடங்களில் ஆர்யா ஆர்பாட்டமில்லாமல் நெறயவே ஸ்கோர் பண்ணியிருக்கார் (நண்பேன்டா). 

பாலா இயக்கத்தில் எங்கயோ கோட்ட விட்டுருக்கார், விஷால் நடிப்பில் மொத்தமா கோட்ட விட்டுருக்கார் (சாமி, நீங்க அம்மா பாருங்க அய்யா பாருங்க நானும் நடிச்சிருக்கான் நானும் நடிச்சிருக்கன்னு சொல்றது தாங்கல). தரம் பற்றி யோசிக்காமல் பொழுதுபோக்காக பார்க்க இது ஒரு நல்ல படம் (ஆர்யா இருந்ததால தப்பிச்ச படம்) 

டிஸ்கி: ஆமா இதுக்கு எதுக்கு ஜெயம் ரவி படத்த போட்டு இருக்கனு நீங்க கேப்பீங்க, அதுக்கும் ஒரு காரணம் இருக்கு ,அதாவது இந்த படத்துல விஷால் செஞ்ச மாறுகண் வேஷம் ஓலகதுலையே மொத மொறையானு கின்னஸ்ல போடுறதுக்கு விஷால்&family TRY பண்றாங்களாம், ஆனா இத இந்த ஜெயம் ரவி S/O மகாலக்ஷ்மி காலத்துலேயே செஞ்சிட்டாறு
இதாங்க அந்த பாட்டு லிங்க் http://youtu.be/d2VJW5CHxhQ

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்!!