Tuesday, July 19, 2011

தெய்வதிருமகள் : ஒரு சந்தானம் ரசிகனின் மாற்று பார்வை


 

தலைவர் சந்தானத்தின் நடிப்பில் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்த தெய்வ திருமகள் படத்தினை முதல் முறை பார்த்தபோது இது ஒரு அற்புதமான படம் என்ற பிரமையே எனக்கும் ஏற்பட்டது. சந்தானம் ரசிகன் என்கிற வட்டத்தை தாண்டி நடுநிலைமையுடன் இரண்டாவது முறை படத்தை பார்த்தபோதுதான் படத்திலுள்ள குறைகள் கண்களில் பட்டது (ஆரம்பிச்சிட்டான்யா). இந்த திரைப்படம் எண்பதுகளின் கடைசியிலேயோ அல்லது தொண்ணூறுகளின் தொடக்கதிலேயோ கமலின் நடிப்பில்  வெளிவந்திருந்தால்  இதையும் ஒரு காவியம் அல்லது அற்புதமான திரைப்படம் அல்லது செலுலோயிட் கவிதை என்றோ கூட வர்ணித்திருக்கலாம்.(என்னடா ஒன்னோட பிரச்சின?). படத்தின் கதயையோ,திரைகதயையோ,அல்லது காட்சிப்படுத்தலையோ நான் இங்கு விமர்சிக்கப் போவதில்லை. நீரவ் ஷா, அந்தோனி மற்றும் ஜி.வீ பிரகாஷ் படத்திற்கு அழகு சேர்த்திருக்கிறார்கள். making is fine அப்பிடின்னு சொல்லலாம். அனுஷ்காவுக்கு இது ஒரு மைல் கல் (பொண்ணுகிட்ட ஜனங்க எத எதிர்பார்பாங்களோ அது துளிகூட இல்லாம எத எதிர்பார்க்க மாட்டங்களோ அத மட்டுமே நம்பி நடிச்சிருக்கு, வாழ்த்துக்கள்). அமலா பால்(மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுற), அந்த குட்டி பொண்ணு முதிர்ச்சியான நடிப்பு. நம்ம விக்ரம் சார் வழக்கம் போல ஒரு ஆப் ட்ராக் கதாபாத்திரத்த கைல எடுத்திருக்கார் (நம்ம நாட்டுல இப்பிடி ஒரு கதாபாத்திரத்த கைல எடுத்து நடிச்சாதனே சிறந்த நடிகன்னு சொல்லுறம், ரக்தரித்திரத்துல அவ்வளவு அற்புதமான ஒரு நடிப்பா குடுத்த சூரியாவ நாம கண்டுக்கவே இல்ல, விண்ணை தாண்டி வருவாயா சிம்புவ (சாரி STR) டீல்ல விட்டுட்டோம் , ஆனா அவன் இவன் விஷால கொண்டாடல அதுமாதிரிதான்). அந்த கதா பத்திரத்த மிகச்சிறப்பாக எண்பதுகளுக்கே உரிய நேர்த்தியோட பண்ணியிருக்கார்(ஆனா ஆத்தா சத்தியமா அவன் இவன் விஷால விட ரொம்ப ரொம்ப நல்லா பண்ணி இருக்காரு விக்ரம்).
இப்ப இந்த படம் எங்க எங்க சொதப்புது, எதனால பாஸ் மார்க் வாங்கியிருக்குன்னு பார்ப்போம். படத்துல முதல் சொதப்பல் கிருஷ்ணா பாத்திரப்படைப்பு. (என்னடா நாலு பேரு நல்லதுன்னு சொல்லுறத மொக்கன்னு சொல்லுறதே ஒனக்கு பொழப்பா போச்சி). இத நான் ஏன் சொல்றன்னா, நான் அயன்னு ஒரு படமும் மை நேம் இஸ் கான்னு ஒரு படமும் பார்த்திருக்கன், அயன் படத்துல சாதாரண கடத்தல் காரன் பாத்திரம் அதுக்காக அந்த இயக்குனர் எவ்வளவோ ஆராய்ச்சி செஞ்சிருக்கார், அதே போலதான் மை நேம் இஸ் கானும். ஆடுகளத்துல வாற பாத்திர படைப்பும் அப்பிடித்தான். இந்த எடத்துல நான் ஏன் கோ படத்த சொல்லலைனா அதுல வாற பாத்திரம் கே வி ஆனந்த் சாரோட நிஜ வாழ்க அத சொல்ல அவருக்கு ஆராய்ச்சி எல்லாம் தேவல. இந்த படத்துல ஒரு முக்கியமான விசயத்தைதான் கைல எடுத்திருக்காங்க, ஆனா அத ரொம்பவே சொதப்பியிருக்காங்க. அது எப்பிடின்னா, கிருஷ்ணா பாத்திரம் மன வளர்ச்சி குறைந்த ஒரு பாத்திரம், இவ்வளவு தான் நமக்கு சொல்றாங்க. 
ஆனா மனவளர்ச்சி குறைவுன்னதும் அதுக்குள்ள எல்லாத்தையுமே சேத்துகிட்டாங்க, கிருஷ்ணாவுக்கு சின்ன சின்ன விசயங்களையே ஞாபகம் வச்சிக்க முடியாது, (உதாரணமா அவரு புள்ளயோட ஸ்கூல் பேர் ஞாபகம் இல்ல, அவரு வாழ்ந்த எடத்துக்கு அட்ரஸ் சொல்ல முடியாது, மனைவி வைதியசாலைல இருக்கறதா யாரோதான் ஞாபகப்படுத்துறாங்க). அப்புறமா அவருக்கு நடைமுறை வாழ்கையில உள்ள நெறைய விஷயங்கள் தெரியாது (போலீஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளைன் பண்ணறது, வக்கீல் கோர்ட்ல இருப்பாருங்கங்குறது, இத்தியாதி இத்தியாதி). ஒரு சின்ன விஷயம் பத்தி மட்டுமே வாழ்க சுழல்றது, மத்த எத பத்தியுமே கவலை இல்லாதது ( நிலா வேணும்,நிலா வேணும்), அப்புறமா எதையுமே புரிஞ்சுக்க முடியாதது (திருடன் தன்கிட்ட பணத்த புடுங்கிட்டு ஓடுறது புரியாது, தன்ன சுத்தி என்ன நடக்குதுங்குறது புரியாது, இந்த மாதிரி). நிக்க சொன்னா ஒரே எடத்துல நிக்கிறது, நேர்மை (நதண்ணி குழாய மூடுறது, சிக்னல் விழுந்ததுக்கு அப்புறம் யெல்லோ லைன் கிராஸ் பண்றது) அப்புறம் மானரிசம். இதெல்லாம் வச்சி பாக்குறப்போ கிருஷ்ணாவோட பிரச்சின என்னங்குறது புரியவே மாட்டேங்குது. இதுல இருக்குற ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை மனநிலை குறைவோடு சம்பந்தப்பட்டவை. இவருக்கு கண்டிப்பா Asperger syndrome கிடையாது (மை நேம் இஸ் கான்ல ஷாருக் கானுக்கு உள்ள வருத்தம்) ஆனா நடிப்புல பாதிக்கு மேல ஒரே மாதிரி இருக்கு. வேற ஏதாவது autism spectrum disorders இருக்குன்னு பாத்தா அதுவும் கொழப்பமா இருக்கு, Psychosis , உஹூம். அப்ப என்னதான் இவரோட பிரச்சின, ஒண்ணுமே புரியல.

 இது இயக்குனரோட கோளாறா இல்ல நடிகரோட புரிந்துகொள்ளல்ல இருக்கற கோளாறா னு புரியல. இந்த மாதிரி ஒரு விசயத்த நடிகர் கமல்ஹாசன் கையில எடுத்துகிட்டா என்ன செய்வாரோ அதத்தான் விக்ரமும் செஞ்சிருக்கார். நான் ஒரு நடிகன்குற அடையாளத்த முற்படுத்தி, சும்மா பாட்டுக்கு நடிச்சி தொலைக்கிறது, பார்வையாளன ஒரு முட்டாளாவே பாவிச்சு தனது முட்டாள்தனத்த மறைகிறது. (இதைத்தானே கால காலமா செஞ்சிட்டு இருக்கீங்க) மை நேம் இஸ் கான்ல உள்ள அளவுக்கு கூட இந்த பாத்திர படைப்புல நேர்மை இல்லன்குறதுதான் கொடும. இதுல என்ன விசயம்னா இந்த குழப்பத்தால  படமே டம்மி ஆகிடுது. எப்பிடிடா ஒரு கொழந்தக்கி கொழந்த பொறக்கும், எங்க சாதரணமா மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான வன்முறைய காணல இப்படியெல்லாம் கேள்வி கேக்குறதுக்கும், இது டிராமா இல்ல பாண்டசி படம்னு ஒருத்தன் விமர்சனம் எழுதுரத்துக்கும் காரணமாயிடுது. இயக்குனர் விஜய்கிட்ட கேட்டா இது "இது ஐஆம் சாம் , ரெயின் மேன், மை லெப்ட் புட், மற்றும்  அவரோட ஒரு கசின் பிரதர் கிட்ட இருந்து வந்த இன்ஸ்பிரேஷன்னு சொல்றார், அதுதான் எல்லாம் சேர்ந்து ஒரே காக்டெயில் ஆகிருச்சு போல). ஆனாலும் பாராட்டபட வேண்டிய ஒரு விஷயம் மகளுக்கும் தந்தைக்கும் இடையிலான பாசம் ஒரு கவிதைபோல படமாக்கபட்டிருக்கு, ஆனா இது புரியாத கவிதை, அழகா இருக்கு, ஆனா என்னன்னே புரிய மாட்டேன்குதுங்குற நிலைமைதான் நமக்கு. கிருஷ்ணாவின் பாத்திரப்படைப்பும் அதுக்கு உயிர் கொடுத்த விதமும் தான் இதுக்கு முழு காரணம். இன்னம் கொஞ்சம் நேர்த்தியா சொல்லியிருக்கலாமோன்னு தோணுது.
இவ்வளவையும் தாண்டி இந்தப்படம் மக்கள் மனத கவர்ந்திருக்குன்னா அது படத்துல உள்ள நகைச்சுவை இழைதான், அதாவது  வழக்கம்போல  இந்த படத்தையும் நம்ம தலைவர் சந்தானம்தான் காப்பாத்தியிருக்கார். இந்த படத்துக்கு தலைவர் ஒரு மிகப்பெரிய பிளஸ், ஏன்னா சாதரணமா படம் பாக்க போற ரசிகன் நெறைய கேள்வி கேக்காம பாத்துட்டு வாரத்துக்கு தலைவர்தான் முக்கிய காரணம், அவரு மட்டும் இல்லனா இந்த படமும் இந்த வருஷத்தின் ராவணன் (சொதப்பல்) லிஸ்ட்ல சேர்ந்திருக்கும்.
 
முக்கியமான விஷயம், இந்த படம் ஐ ஆம் சாம் படத்தோட காபியாம், அந்த படம் இதவிட அற்புதம்னு சிலரும், அதுவே மொக்க அதுட காப்பி அதவிட மொக்கன்னு சிலபேரும் சொல்லிக்கிட்டு திரியுறாங்க, நான் இன்னமும் அந்த படம் பாக்கல, சில வேள அதுல இன்னும் நெறைய விஷயங்கள் சொல்லியிருக்கலாம், தமிழ் ரசிகர்கள் முட்டளுங்கதானே அப்பிடின்குற இந்த தமிழ் சினிமா படைப்பாளிகளின் எகத்தாளமான போக்கால அதுல சொல்லப்பட்ட நெறைய விசயங்கள இவங்க டம்மி பண்ணியிருக்கலாம், ஆனா நான் ஒன்னு கேக்கணும், ஐ ஆம் சாம் படத்துல சந்தானம் இருக்காரா? இல்லல, அப்பிடின்னா அதவிட இதுதான் பெஸ்டு


சந்தானம் பஞ்ச் 1:  இது படமா , இல்ல ஸ்டேஜ்  ட்ராமாவா? ஒரே அமெச்சூர் பாத்திரங்களா சுத்திகிட்டு இருக்கு?
சந்தானம் பஞ்ச்  2 I am Sam படத்த எடுத்த Jessie Nelsonஅ விடதமிழ் பிளாகர்ஸ்தான் அதிகமா " I am Sam" ," I am Sam" சொல்லி இருப்பாங்க, எதுக்கு எடுத்தாளும் அதயே சொல்றாங்களே.
சந்தானம் பஞ்ச் 3: ஒழுங்கா படிக்காததனாலதான் இவனுக படத்தயெல்லாம் பார்த்து தொலைக்க  வேண்டியதா இருக்கு.

2 comments:

உங்கள் கருத்துக்கள்!!