Monday, April 9, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி: பர்ஸ்ட் ரிப்போர்ட்

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் ட்விட்டர் நண்பர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


ஒரு வழியா 2012 இன் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குள்ளான ஓகே ஓகே படம் இன்னக்கி ரிலீஸ் ஆகுது. ஏற்கனவே மிடில் ஈஸ்ட்ல ரிலீஸ் ஆகி செமத்தியான ரிபோர்ட். தமிழ் நாட்டுல திங்கள் கிழமை வரைக்கும் டிக்கெட் இல்லாம மொத்தமும் புக் ஆகிடிச்சு. இந்த படத்தப்பத்தி ஒரு சின்ன முன்னோட்டம் அண்ட் ஒரு பர்ஸ்ட் ரிப்போர்ட்.

ராஜேஷ் AS கேப்டன் ஆப் த ஷிப்
தமிழ் சினிமா இயக்குனர்கள் வரிசையில் ராஜேஷுக்கு என்றைக்குமே ஒரு தனி இடம் உண்டு. தலைவர் சந்தானத்தின் முழுத்திறமையையும் வெளிக்கொண்டுவரும் இயக்குனர் என்கிற வகையில் மட்டுமல்ல சிறந்த திரைக்கதை ஆசிரியர், இயக்குனர் என்கிற வகையிலும் அவருக்கு தனி இடம் உண்டு. தற்கால இளைஞர்களின் நாடி பிடித்து அதற்க்கு ஏற்ப படம் பண்ணுவதில் ராஜேஷ் எப்பவுமே கெட்டி. இவரோட படங்கள் இரண்டரை மணிநேரம் என்டேர்டைன்மென்ட் காரண்டி. ஏற்கனவே சிவா மனசுல ஷக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் ரெண்டுமே செம ஹிட். மூனாவதா ஓகே ஓகே செமையா வந்திருக்கு படம். ஹாட்ரிக் நிச்சயம்.

''இந்தப் படத்தின் கதை தமிழ் சினிமாவில் இதுவரை வராத கதை ஒன்றும் அல்ல .......... இந்த சிம்பிளான கதையை சொல்லியிருக்கும் விதம் தான் சினிமாவுக்கு திரைக்கதையே முக்கியம் என்பதற்கு இன்னொரு சாட்சி. சீனுக்கு சீன் சிரிப்பு வெடிகளுடன் ரகளையாக படத்தைக் கொண்டு சென்றுள்ளார் ராஜேஷ்." - செங்கோவி 

உதய் AS சரவணா...
தமிழ் சினிமாவின் சமத்துப் பிள்ளை அப்பிடின்னு பேரெடுத்த உதயநிதி ஹீரோவா அறிமுகமாகிராறு. இவரோட முதல் படம் அப்பிடிங்குரதால ராஜேஷும் கஷ்டப்பட்டு ரிஹெர்சல் எல்லாம் குடுத்து செமையா தயார் பண்ணியிருக்காரு. நம்ம ராஜேஷ் பலமே அவரு உருவாக்குற மிடில் கிளாஸ் ஹீரோக்கள் தான். இந்த படத்துல கூட உதயநிதி ஒரு பக்கத்து வீட்டு பையனா அசத்தியிருக்காருன்னு பட்சி சொல்லுது. உதய் சாதரணமாவே கல கல பார்ட்டி, அடுத்தவங்கள காலாய்க்கிறது மட்டுமில்ல தன்ன தானே கலாய்ச்சிக்கறது கூட அவருக்கு அசால்டா வரும். அதுனால இந்த படம் அவருக்கு சரியான லான்சிங் பாட் ஆக இருக்கும்.

"உதயநிதி தமிழ்சினிமாவுக்கு புதிய நல்வரவு. அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லாத கேரக்டரைத் தேர்ந்தெடுத்ததிலேயே பாதி ஜெயித்து விடுகிறார். .......... அதிகம் நடிப்புத் திறமை தேவைப்படாத, அடுத்த வீட்டுப் பையன் போன்ற கேரக்டரில் இயல்பாகப் பொருந்திப் போகிறார். டான்ஸ் ஆடவும் முயற்சி செய்கிறார். ......... நல்ல எதிர்காலம் உண்டு. ஓகே ஓகே-ல் உதயநிதி ஓகே!" - செங்கோவி 


ஹன்ஷிகா AS மீரா...

சின்னக்குஷ்பு ஹன்சிகா ஹீரோயின்னா நடிச்சிருக்காங்க. ராஜேஷ் படங்கள்ல எப்பவுமே ஹீரோயினுக்கு ஒரு வெயிட்டான பாத்திரம் இருக்கும். (தமிழ் சினிமாவுல இப்போ இருக்கற வெயிட்டானா ஹீரோயினும் ஹன்சி தான்). வழக்கமா நம்ம சினிமாவுல ஹீரோயினுக்கு வெயிட்டான பாத்திரம்ன்னா ஒன்னு லூசா நடிக்க வைப்பாங்க, இல்லையின்னா படம் முழுக்க கிளிசரீன குடுத்துடுவாங்க, அதுவும் இல்லையின்னா இருக்கவே இருக்கு விலை மாது வேடம். இதை தவிர்த்து ஒரு நோர்மலான ஹீரோயின வெயிட்டா காட்டுறது நம்ம ராஜேஷ் தான். அந்த வகையில ஹன்சிகாவுக்கும் இது ஒரு முக்கியமான படமா இருக்கும்.

"பச்சை கோதுமை மாவு என்று படத்தில் சந்தானத்தாலும் வெளியில் நம்மாலும் வர்ணிக்கப்படும் ஹ..ஹ..ஹன்சிகா, இதிலும் அழகாக வருகிறார், போகிறார், சிரிக்கிறார். பெரிதாக நடிக்கத் தேவையில்லாத கேரக்டர் என்பதால் நாமும் தப்பித்தோம். இந்தப் படத்திற்காக ஹன்சிகா மெலிந்ததாக செய்தி வெளியானது. நமக்கென்னவோ இன்னும் உலக உருண்டை போல்தான் தெரிகிறார். - செங்கோவி 


சந்தானம் AS  பார்த்தசாரதி (பார்த்தா)
தலைவர் சந்தானம் படம் முழுதும் கிட்டத்தட்ட இன்னொரு ஹீரோவா வர்றாரு  (உதய் பாசையில சொல்லனும்னா சந்தானம்தான் ஹீரோ, உதய் ஒரு முக்கியமான காரெக்டர் பண்ணியிருக்காரு). உதய்க்கும்  தலைவருக்கும் கெமிஸ்ட்ரி செமையா வொர்கவுட் ஆகியிருக்குங்கறது ஆடியோ ரிலீஸ் பார்த்த எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும். அதனால இந்த படம் கண்டிப்பா காமெடி விருந்து. (சமீபத்துல வந்த படங்கள பார்த்து மெண்டலாகி சுத்திக்கிட்டிருக்கற தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ரட்சகன் இந்தப் படம்) தலைவர அடுத்த லெவெலுக்கு கொண்டுபோகப்போற படம். இந்த படத்து மூலமா நம்ம தலைவர் பாடல் ஆசிரியர் அவதாரம் கூட எடுத்திருக்காரு. வேணாம் மச்சான் வேணாம் பாடல் இப்போதே எல்லா ரேடியோ சானெலயும் ஆட்டிப்படைச்சிக்கிட்டு இருக்கு, சீக்கிரமாவே தொலைக்காட்ட்சிகளையும் ஆக்கிரமிக்கப் போகுது, ஏன்னா இந்த பாடலுக்கு நம்ம தலைவரும் டான்ஸ் ஆடியிருக்கராறு. டீசெருக்கே பலத்த வரவேற்ப்பு இருக்கு. இந்த படத்தோட சிறப்புகள இன்னும் அடுக்கிக்கிட்டே போகலாம். இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றி ஓகே ஓகே.

"உதயநிதிக்கு படத்தில் பில்டப் ஏதுமற்ற அறிமுகக் காட்சி தான். ஆனால் சந்தானம் தான் ஹீரோ மாதிரி அறிமுகம் ஆகிறார். ஏனென்றால் படத்தின் ரியல் ஹீரோவே அவர் தானே! ஒவ்வொரு நகைச்சுவை நடிகருக்கும் ஒரு பீக் பீரியட் வரும். அந்த நேரத்தில் அவர்களின் ஒவ்வொரு அசைவிலும், டைமிங்-லும் நகைச்சுவை பொங்கும். சந்தானத்திற்கு இது அப்படியான நேரம். உள்ளத்தை அள்ளித்தா - கவுண்டர், வின்னர்-வடிவேலு போன்று இந்தப் படத்தில் சந்தானம் கலக்கி எடுத்துவிட்டார்........
பல காட்சிகளிலும் தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது. தற்போதைய சூழ்நிலையில் தானே நகைச்சுவையில் நம்பர்-1 என்று அழுத்தமாக நிரூபிக்கிறார். படத்தின் ட்ரெய்லரிலேயே பல காட்சிகள் வெளியாகிவிட்டதே, இனி படத்தில் என்ன இருக்கப் போகிறது என்று நினைத்துப் போனால், மனிதர் பட்டாசாக வெடித்துள்ளார். விடிய விடிய மிமிக்ரி செய்யும் காட்சி அதகளம். ஓகேஓகே-ல் சந்தானம் ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே!" - செங்கோவி 






எல்லாரும் கண்டிப்பா தியட்டருக்கு போய் படம் பாருங்க, செமையா என்ஜாய் பண்ணுவீங்க அதுக்கு நாங்க உத்தரவாதம். புத்தாண்டினை குடும்பத்தோடு ஜாலியா கொண்டாடுங்க. 

டிஸ்கி: நீண்ட நாட்களுக்கு அப்புறம் பதிவுலகில் ரெண்டாவது இன்னிங்க்ஸ் ஆரம்பித்திருக்கும் செங்கோவி அவர்களுக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள், அதுவும் ஓகே ஓகே விமர்சனத்துடன் ஆரம்பித்ததற்கு கோடி நன்றிகள். 


ஒரு கல் ஒரு கண்ணாடி காமெடி சரவெடிகள்


உதயநிதி:  பாண்டிச்சேரி போறோம். கல்யாணத்த நிப்பாட்டுறோம். பொண்ணத் தூக்குறோம். இதான் மச்சான் பிளான்.
சந்தானம்:  என்னது பொண்ணத் தூக்குறதா?…டேய்,அவங்க சீர்வரிசையா குடுக்கிற கட்டில் பீரோவக் கூட என்னாலத்  தூக்கமுடியாது. மீசை வளந்தா பெரிய பசங்களெல்லாம் சண்டைக்கு கூப்பிடுவானுவோனு பயந்துதான்  மீசையே வைக்காம இருக்கிறேன்.
உதயநிதி: டேய் என்னடா பன்னுவானுவோ..ஆளு வச்சி அடிப்பாங்களா? இல்ல போலீசுகிட்ட  போவாங்களாஎன்ன ஆனாலும் சரி ..எவன் குறுக்க வந்தாலும் சரி………………மச்சான் நீ பாத்துக்கோ..!
சந்தானம்:   ???????????
————————————————————————–
உதயநிதி: டேய் ..கல்யாணத்த நிப்பாட்ட கார் கேட்டா.. இதப்போயி எடுத்துட்டு வந்திருக்க.
சந்தானம்: ஏன் மச்சான் கல்யாணத்த நிறுத்திறதுக்குன்னே ஏதாவது புது மாடல் கார் விட்டிருக்காங்களா?
—————————————————————————
பூக்கடைக் காரரிடம்..
சந்தானம்: யோவ்ஏதாவது டிஸ்கவுன்ட் கொடுய்யா..
பூக்கடைக்காரர்:  டிஸ்கவுன்ட் எல்லாம் கிடையாது சார்வேணா  இந்தப் பூவ வச்சுக்கிங்க..
சந்தானம்:  காதுலையா?
—————————————————————————–
சிக்னலில் ஒரு பெண்ணிடம்..
உதயநிதி: எக்ஸ்கியுஸ்மி..ஒரு கப் காபி சாப்டலாமா?.ஏனா.எந்த நல்லக் காரியம் பன்றதுக்கு முன்னாடியும் காபி சாப்டனும்னு எங்க அம்மாசொல்லியிருக்காங்க.
பெண்: காபி சாப்டர பழக்கம் இல்லீங்க..
சந்தானம்: வாங்க அப்ப பீர் சாப்டலாம். ஏனா எந்த நல்ல காரியம் செய்யுறதுக்கு முன்னாடியும் பீர் சாப்டனும்னு எங்க ஆயா சொல்லியிருக்காங்க
பெண்: லெகரா.?..ஸ்ட்ராங்கா ?
—————————————————————————–
போலிஸ் நிலையத்தில்
(இரவு முழுவதும் சந்தானம் மிமிக்கிரி செய்து சோர்ந்து போனபின் )
உதயநிதி: என்ன மச்சான்  சிவாஜி சார் வாய்ஸ் எடுக்கிறியா
சந்தானம்: டே ராத்திரி பூரா மிமிக்கிரி பண்ணி பண்ணி அந்த ஆளு வாய்ஸ் மாறி ஆயிடுச்சுடா..
——————————————————————————-
(ஹன்சிகாவை சந்தானத்திடம் அறிமுகம் செய்யும் போது….)
சந்தானம்: பசங்க பாக்கனுன்னே பால்கனியில சுத்துராளுகளே
சந்தானம்: வாவ்
உதயநிதி: டேய் என்னடா உன் சிஸ்டர இப்படி பாக்கிற?
சந்தானம்:???????? .. இட்ஸ் ஓகே மச்சான்.. கேரி ஆன்
 ——————————————————————————–
 உதயநிதி: மனிதனாகப பிறந்தால் ஏதாவது ஒரு தீயப் பழக்கம் இருக்க வேண்டும்.அப்போதுதான் அவனது வாழ்க்கை முழுமையடையும்
சந்தானம்: இந்தப் பொன்மொழியை காலையில காலேண்டர் கிழிக்கும் போதுதான படிச்ச..?
———————————————————————————–
சந்தானம்:  டேய்மோந்து பாத்தாலே போதையாயிடுவாங்கனு கலாச்சிதாண்டா  பார்த்திருக்கேன்.ஆனா கண்ணெதிரே இப்பதாண்டா பாக்குறேன்.தமிழ் நாட்டுல பீர் தட்டுபாடு வந்தப்ப மொத பஸ்ஸ புடிச்சி பாண்டிச்சேரி போயி பீர் வாங்கி குடிச்சது யாரு?. நம்ம பயலுகதான். அப்படியாப்பட்ட மண்ணுல பொறந்துட்டு மோந்து பாத்து போதையாவிறியேடா..
 ——————————————————————————–
சந்தானம்:  ஏண்டா, சரக்குல ஆ.’.ப் போட முடியலுனு பேசுறதுல ஆ.’.ப் போட்டு பேசுறியா..
———————————————————————————–
 சந்தானம்: திட்டுறதுக்கு வார்த்தையில்லாம திட்டுற வார்த்தையையே திருப்பி திருப்பித் திட்டிகிட்டு இருக்கிற..
———————————————————————————–
சந்தானம்:  மச்சான்செட்டாகாத பிகரு பின்னால சேவிங் பண்ணிட்டு பிரண்டு ஒருத்தன் சுத்துறானா,கூட இருக்கிற பிரண்டு  தாண்டா உள்ள போயி கெடுக்கணும்.இதெல்லாம் பெருமையில்ல..கடமை..!.
————————————————————————————-
 ஹலோ ..அஞ்சி ஈ (5E) பஸ் வருமா..?.
சந்தானம்:  அழுகிப்போன பழம் மாதிரி மூஞ்ச வச்சிருந்தா,அஞ்சி ஈ இல்ல பத்து ஈ ,பதினஞ்சு கொசு, இருபது வண்டு கூட வரும்.
————————————————————————————-
உதயநிதி: உனக்கு விரலு சூப்புற பழக்கம் இருக்குனு உங்க அம்மா உன் விரலுல வேப்பெண்ணையை தடவி விடுவாங்க ,அப்ப நீ என் விரலதான சப்பின..
————————————————————————————–
 அய்யோ…. பார்த்தா(பார்த்தசாரதி) ஏன் இந்த காவி டிரஸ்?
சந்தானம்: காதல்ல தோத்தவன் காவி டிரஸ் போடாம, பின்ன நேவி டிரஸ்ஸா  போடுவான்?
—————————————————————————————
சாமிநாதன் : சீடா..
சந்தானம்:     இருடாஐயோ குருஜி
சாமிநாதன் : மீண்டும்  லவ்கீக வாழ்க்கை என்னும் குழியில் விழத்தான் போகிறீர்களா
சந்தானம்:   ஆமாம் குருஜி.
சாமிநாதன் : முதலில் அவள் உன்னை மெட்டி போட வைப்பாள் ..பிறகு முட்டி போட வைப்பாள்
சந்தானம்:  அவ என்னை  ஜட்டி போட வச்சாலும் பரவா இல்ல குருஜி!
—————————————————————————————–
சந்தானம் கேர்ள் பிரன்ட்:அந்த குருஜி ஒரிஜினல் இல்ல
சந்தானம்:அவரு ஒரிஜினலு இல்லாம அசெம்பல் செட்டா
——————————————————————————————
உதயநிதி: என் ஆளு மீரா ஏர் ஹோஸ்டஸ் டிரைனிங்க்காக சென்னை டு மும்பை போறாங்க..
சந்தானம்: அதுக்கு..முதல் முதல்ல பிளைட்ல போறதால பிளைட் டயருல எலுமிச்சப்பழம் வைக்கச் சொல்றீங்களா.. இல்ல மொட்ட மாடியிலிருந்து டாட்டா காட்ட சொல்றீங்களா?

———————————————————————————————–
உதயநிதி: டேய் புன்னகை அரசிடா…!
சந்தானம்: நான் என்ன புழுங்கல் அரிசின்னா சொன்னேன்.
 ———————————————————————————————-
சந்தானம்: DC சார் எதுக்கு.. நாட்டு கோழி முட்டையை நல்ல பாம்பு பாக்கிற மாதிரி அப்படி பாக்குறீங்க..
———————————————————————————————–
சந்தானம்: டேய்மொட்டையப்பாத்து இது வெய்யிலுக்கு அடிச்ச மொட்டையா வேளாங்கண்ணிக்கு அடிச்ச மொட்டையானு சொல்ற ஆளு நானு.உன் முழிய பாத்தாலே தெரியுது நல்ல மூடுல இருக்க.பிரண்ட்சிப் பத்தியெல்லாம் பேசி ரியாக்சன கெடுத்துக்காத.
———————————————————————————————-
ஹைலைட்டான பிளைட் காமெடி.
(ஏர்போர்டில் )
சந்தானம்:எக்ஸ்கியுஸ்மி.. நீங்க கிங் பிசர்ல ஒர்க் பண்ணுறீங்களா..
                   எஸ்…….
சந்தானம்: எந்த ஒயின் ஷாப்பிலும்  உங்க கம்பெனி பீர் கூலிங்காகவே  கிடைக்க மாட்டேங்குது.இது விசயமா உங்க எம் டி கிட்ட நான் கொஞ்சம் பேசமுடியுமா?
 (பிளைட்டில்….)
ஏர் ஹோஸ்: ஹலோ இங்க என்ன பிரச்சனை.
உதயநிதி:    வாழ்க்கையே பிரச்சனைதாங்க.நான் நினைச்சது எதுவுமே கிடைக்க  மாட்டேங்குது.லவ்வும் செட்டாகுல..அட்லீஸ்ட் இந்த ஜன்னல் சீட்டாவது எனக்கு குடுங்க.
ஏர் ஹோஸ்: நீங்களாவது கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாமே.
சந்தானம்:  என்னது.. டிபன் சாப்றது ஒருத்தன்.டிப்ஸ் வக்கிறது ஒருத்தனா. அதுலாம் முடியாது.
உதயநிதி:  அப்ப.. இதெல்லாம் ஒத்துவராது. நான் .’.புட்போர்ட் அடிச்சசிகிறேன்.
ஏர் ஹோஸ்: என்னது  பிளைட்ல புட் போர்டா ? அது மாதிரி எல்லாம் பண்ண முடியாது.
உதயநிதி:  என்னங்க நீங்க..ஜன்னல் சீட்டும் இல்லங்கிறீங்க..’.புட்போர்டும் முடியாதுங்குறீங்க.பின்ன என்ன டிரைவர் சீட்லயா ஒக்காருறது?
ஏர் ஹோஸ்: என்னது டிரைவர் சீட்டா?
சந்தானம்: அப்ப.. உங்க சீட்ல ஒக்கார வச்சுகிங்க
(ஒரு வழியா சமாதானம் ஆகி… )
உதயநிதி: எப்படியும் சாப்டறதுக்கு வழியில கேண்டீன்ல நிப்பாட்டுவீங்களே….  அப்ப மாறி ஒக்காந்துக்கலாம்.
ஏர் ஹோஸ்: என்னது கேண்டீனாசார்.. நாங்க கேண்டீன்ல எல்லாம்  நிப்பாட்டுரதில்ல.
சந்தானம்: ஓ..அப்ப பாய்ன்ட் டு  பாய்ண்டா
ஏர் ஹோஸ்: இல்ல சார் எல்லாமே இங்கேயே கிடைக்கும்.
——————
ஏர் ஹோஸ்:  சார்.. இட்ஸ் டைம் டு  டேக் ஆ.’.ப் .கேன் யு பிளீஸ் பாஸ்டன் யுவர் பெல்ட் .
உதயநிதி: பெல்டாநான் ஆல்ரெடி வீட்லே  போட்டுட்டு வந்துட்டேனே.
ஏர் ஹோஸ்:  நான் அந்த பெல்ட்ட சொல்லல ..சீட் பெல்ட்ட சொன்னேன்.
உதயநிதி: அய்யய்யோ நான் சீட் பெல்ட் எல்லாம் எடுத்துட்டு வரலியே
——————————-
உதயநிதி: ஹலோ மேடம். என் பெல்ட்ட அவுத்து விடுங்க.நான் டிரைவர பாக்கானும்.எனக்கு அவரு மேல டவுட்டா இருக்கு.
ஏர் ஹோஸ்: என்னது டிரைவரா ?
சந்தானம்: அப்ப கிளீனர வர சொல்லுங்க
——————————-
ஏர் ஹோஸ்: உங்களுக்கு எதுவும் ஆகாது.பயப்படாதிங்க.அப்படியே எதுவும் ஆனா நாங்க உங்களுக்கு பாராசூட் தருவோம்.
சந்தானம்: ஏங்க.. உயிர் போற நேரத்தில தேங்கண்ணெய வச்சி நாங்க என்ன பன்றது?

சந்தானத்தின் தத்துவங்கள்
  • தண்ணியடிக்கிற  பழக்கம் என்பது தலையில வர்ற வெள்ள முடி மாதிரி.. ஒன்னு வந்துட்டா போதும். ஜாஸ்தியா ஆகுமேத் தவிர கம்மி ஆகவே ஆகாது.
  • நீ கரக்ட் பண்ற பொண்ண விட உன்ன கரக்ட் பண்ணுற பொண்ணுதான் ஒர்க் அவுட் ஆகும் .
  • ஏரி உடைஞ்சா மீனு ஏரியாவுக்கு வந்துதானே ஆகணும்.
  • கேக்கிறவன் கேனையனா.. கேரம்போர்ட கண்டு பிடிச்சது கே.எஸ்.ரவிக்குமாரு சொல்வியா?
  •  FACT..FACT..FACT..இந்தப் பொண்ணுங்க ஒருநாளைக்கு பத்து பேருக்கு ஓகே சொன்னா.. பத்தாயிரம் பேரை கழட்டி விடுறாங்க.
  • டேய் ஆணவத்தில ஆடாதடா. ராணுவத்தில அழிஞ்சவங்கள விட ஆணவத்தில அழிஞ்சவங்கத்தான் அதிகம்.
  • அயன்  பன்றவங்க அழக் கூடாது.
  • பொண்ணுங்களோட ரத்தமும் சிவப்பு.பையன்களோட ரத்தமும் சிவப்பு.அப்பறம் ஏன் பொண்ணுங்களோட எண்ணம் மட்டும் கருப்பா இருக்கு.?
  • டேய்நான் மொடாக் குடிகாரனுவ கூட சேர்ந்துக் குடிப்பேன். ஆனா மோந்துப் பாக்குறவன் கூடெல்லாம் குடிக்க மாட்டேன்.

Thursday, April 5, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி: படம் உருவான வராலாறு (ப்ரோமோஷன் போஸ்ட்:2)

போன  பதிவுல ஆரம்பித்த ஒரு கல் ஒரு கண்ணாடி ப்ரோமோஷன் போஸ்ட்ஸ் சீரிஸின் ரெண்டாவது பதிவு இது.

தமிழ் சினிமாவுல எத்தனையோ இயக்குனர்கள் இருந்தாலும் நம்ம தலைவரோட முழு திறமைய வெளிக்கொண்டுவரும் ஆற்றல் ராஜேஷ் ஒருத்தருக்குத்தான் இருக்கு.  உதயநிதி ஸ்டாலின் ஹீரோவா அறிமுகமாகிற படம் இதுன்னு உங்க எல்லோருக்கும் தெரியும். இந்த பிண்ணனியில இன்னிக்கு ஓகே ஓகே படம் உருவான வராலாறு பத்தி நமக்கு தெரிஞ்ச கொஞ்சத்த சொல்றோம்...



குருவி படத்துல இருந்து ஏழாம் அறிவு வரை பல படங்கள தயாரித்த நம்ம ரெட் ஜெயன்ட் உதயநிதிக்கு ரொம்ப நாளாவே ஹீரோவா நடிக்கனும்னு சின்னதா ஒரு ஆசை. சரியான சந்தர்ப்பம் வர்ற வரைக்கும் காத்துகிட்டே இருந்தாரு. அதுவரைக்கும் கிடைக்குற கேப்ல ஆதவன் போன்ற தான் தயாரிக்கும் படங்கள்ல  தலய காட்டிகிட்டு இருந்தாரு. இவரு வேற தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்/விநியோகஸ்தர். இவரு விநியோகித்த படங்கள் எல்லாமே ஹிட்டு, தயாரித்த படங்கள் கூட பெரிய ஹீரோக்கள் நடித்த பெரிய படங்கள். ஆள் வேற பார்க்குறதுக்கு சுமாரா இருப்பாரு. இவரு ஹீரோவா நடிக்கிறதுக்கு ட்ரை பண்ணுறாருன்னு தெரிஞ்சிகிட்டு மிஸ்கின் தொடங்கி பல பேர் இவருக்கு கதை சொல்லி இருகாகாங்க. அதுல பல கதைகள் ஹீரோவ ரொம்பவும் ஓவர் எக்ஸ்போஸ் பண்ணுற வழமையான தமிழ்பட கதைகளாவே இருந்துருக்கு. முதல் படத்துலேயே ஓவரா பண்ணி திட்டு வாங்கிட கூடாதுங்குறதுல ஆள் கொஞ்சம் சூதானமாவே இருந்தாரு. ஆனா எப்புடியோ மிஸ்கின் சொன்ன யுத்தம் செய் கதை பிடிச்சு போய் நடிக்கிறேன்னு ஒத்துக்கிட்டு இருக்காரு. போட்டோ ஷூட் வேற நடந்துருக்கு. ஆனா போட்டோ ஷூட் முடிஞ்சப்புறம் இந்த படத்துக்கு நாம ஒத்து வருவோமா? ன்னு இவருகுள்ளயே ஒரு டவுட்டு. அது சம்பந்தமா மிஸ்கின் கிட்ட பேசிட்டு படத்துல இருந்து விலகிட்டாரு. X கட் பண்ணுறோம்..


அதுபோக சிவா மனசுல சக்தி உதய்யின் ஃபேவரிட் படம். படம் பார்த்துட்டு ஜீவாவ கான்டக்ட் பண்ணி "படம் ரொம்பவும் லைவ்லியா இருக்கு பாஸ், ஒரு படம் மாதிரியே தோணல, எதோ நெஜமா நடந்த நிகழ்ச்சிகள ஓரமா காமெரா வச்சி எடுத்த மாதிரி இருக்கு, ஹீரோக்கும் பிரண்டுக்கும் ஆனா கெமிஸ்ட்ரி செமயா வொர்க்அவுட் ஆகி இருக்கு"ன்னு வேற சொல்லி இருக்காரு.  நாம ஏன் இந்த மாதிரி ஒரு படத்துல லாஞ்ச் ஆகா கூடாதுன்னு அவருக்கு ஒரு ஐடியா!!.. X கட் பண்ணுறோம்..

இந்த சமயத்துலதான் ஆர்யா நடித்த மதராஸபட்டணம் படத்த வாங்கி வெளியிட்டாரு. அது மூலமா ஆர்யாவோடயும் நல்ல பழக்கம். அதுக்கப்புறம் ஆர்யா நடிச்ச படம் "பாஸ் எங்கிற பாஸ்கரன்" , அந்த படம் ரொம்பவும் சூப்பரா இருக்க போய், ஆர்யாவே அந்த படத்த தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசனிடம் இருந்து விலைக்கு வாங்கி வச்சிகிட்டாரு. அப்புறம் அந்த படத்த ஆர்யா உதயநிதிக்கு போட்டு காட்ட போக அந்த படத்துல ரொம்பவே இம்ப்ரெஸ் ஆன உதயநிதி. "மச்சான் இந்த படத்த எனக்கு தாயேன்" ன்னு உரிமையா கேட்க போக, "தோ புடிச்சிக்கோ மச்சான்"ன்னு ஆர்யாவும் கொஞ்சம் லாபத்த வச்சி உதயநிதிக்கு கொடுத்துட்டாரு. படமும் எந்திரன் வர்றதுக்கு பதினஞ்சு நாள் முன்னாடி ரிலீஸ் ஆகி, சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி, எந்திரன் வந்தப்புறம் அடுத்த ஒரு மாசத்துக்கு வேற எந்த படமும் ரிலீஸ் ஆகாததால் எந்திரனுடன் பாக்ஸ் ஆபிசில் அடுத்த இடத்தை தக்க வைத்துக்கொண்டு மெகா ஹிட் ஆகிருச்சு. அந்த படத்த பல பேர் ரிபீட் ஆடியன்ஸா பல தடவ பார்த்து இருகாங்க (நாங்க பத்து பதினஞ்சு வாட்டி தியேட்டர்ல மட்டுமே பார்த்தோம், அப்புறம் டி.வி.டில ஒரு நூறுதடவ). எஸ்.எம்.எஸ்., பாஸ் ரெண்டு படத்துலயும்  இருக்குற ஒரு முக்கியமான விசயம் எனன்னனா திரைகதை ஒரு இடத்துல கூட அலுப்புதட்டாது. பாஸ் படம் நம்ம ராஜேஷ்க்கு திரைகதை அமைப்பதில் புதிய தலைமுறையின் பாக்யராஜ் என்னும் பட்டப்பெயரையும் பெற்றுகொடுத்துச்சு. X கட் பண்ணுறோம்..


உதயநிதிக்கும் அடடே நாம தேடிகிட்டு இருந்த ஆளு இவருதான்யான்னு தோணபோக, ராஜேஷ்கிட்டயே தன் ஹீரோ ஆசையை சொல்லி, எனக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க பாஸ்ன்னு கேட்டிருக்காரு. ராஜேஷும் ஓகே ஓகே பண்ணலாம் பாஸ்ன்னு அவரு மனசுல அப்போ தோணுன ஒரு வன்லைன் ஸ்டோரிய சும்மா டென்ட்டேடிவா சொல்லி, "இது உங்களுக்கு பிடிக்கலைன்னா இன்னும் கொஞ்ச நாள் டைம் தாங்க பாஸ், வேற ஒன்னு ரெடி பண்ணி சொல்றே"ன்னும் சொல்லிருக்காரு. ஆனா உதயநிதியோ "வேணாம் மச்சான் வேணாம், இந்த ஒன்லைனே நல்லா இருக்கு அதயே நீங்க டெவெலோப் பண்ணுங்க"ன்னு கேட்டுருக்காரு. சரின்னு ராஜேஷும்  வேலைல இறங்கிட்டாரு.

அதுக்கு பிறகு ஃபுல் ஸ்க்ரிப்ட் ரெடி ஆனதும் வழமைபோலவே சந்தானதையும் சேர்த்துகிட்டு ஹீரோயின் வேட்டைக்கு இறங்குனாங்க. அதுல த்ரிஷால இருந்து ஸ்ருதிஹாசன் வரைக்கும் எல்லார் பெயரும் அடிபட்டது. ஆனா கடைசில  த்ரிஷா இல்லைனா திவ்யான்னு அப்போதைக்கு எங்கேயும் காதல், மாப்பிள்ளை படங்கள்ல புதுமுகமா அறிமுகமான ஹன்ஷிகாவ கிருத்திகா உதயநிதியின் (ஃவைப்) ரெகமண்டேஷனின் பேரில் சேர்த்துகிட்டு, அம்மா கேரக்டருக்கு நேஷனல் அவார்ட் வின்னிங் சரண்யா மேடம், அப்பா கேரக்டருக்கு அழகம்பெருமாள் சார்,  இன்ன பிற நடிகர்களையும் பைனலைஸ் பண்ணிருக்காங்க. அப்புறம் ஏற்கனவே "உங்க முதல் படத்துக்கு நான்தான் மியூசிக் பண்ணுவேன்"ன்னு உறுதிமொழி குடுத்த ஹாரிஸ் ஜெயராஜ், பிதாமகன், அழகிய தமிழ்மகன் புகழ் பாலசுப்ரமணியம்ன்னு மத்த மத்த தொழில்நுட்ப கலைஞர்களையும் சேர்த்துகிட்டு 2011 பிப்ரவரில முதலாவது போட்டோ ஷூட் பண்ணாங்க. போட்டோ ஷூட் படங்கள் ஒவ்வொன்னும் ரொம்பவும் கலர்புல்லா, அட்ராக்டிவ்வா இருந்துச்சு. எப்படா இந்த படம் வரும், சந்தானம் கெட்டப் செமையா இருக்கேன்னு தோண வச்சுச்சு. அப்புறம் மார்ச் மாசம் படபிடிப்பு தொடங்கி சென்னைல சத்தியம் தியேட்டர், டைடல் பார்க்,கே.கே நகர் அப்புறம் மும்பைன்னு பல இடங்கள்ளையும் ஷூட்டிங் நடந்துச்சு, பாடல் காட்சிகளுக்காக ஜோர்டான், துபாய்ன்னு போனாங்க. இறுதி கட்ட படபிடிப்பா ராமேஸ்வரத்துல "வேணாம் மச்சான் வேணாம் " பாட்ட ஷூட் பண்ணி சூட்டிங்க 2012 பிப்ரவரில முடிச்சாங்க. 

படத்தோட  ரஃப் வேர்ஷன் பார்த்த எல்லாருக்குமே படம் ரொம்பவே புடிச்சிருக்கு.  சந்தானம்+உதய், ஹன்ஷிகா+உதய் கெமிஸ்ட்ரி நல்லா வந்துருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க. ஹாரிஸ் இப்ப இறுதிகட்ட ரீரெகார்டிங்  பண்ணிக்கிட்டு இருக்காரு. ரீரெகார்டிங்கின் போது ஹாரிஸ் "காமெடி, ரொமான்ஸ் எல்லாம் ஓகே , ஆனா டான்ஸ்ல உதய் கொஞ்சம் இம்ப்ரூவைஸ் பண்ணனும்"ன்னு சொல்லிருக்காரு. முதல் படம்தானே, "நேருக்கு நேர்"ல சூர்யா ஆடுனத விடவா மோசமா ஆடிற போறாரு உதய்? படம் வரட்டும் பார்போம்.


இறுதிகட்ட வேலைகள் எல்லாம் இன்னும் ரெண்டு மூணு நாள்ல முடிஞ்சுரும்(செகண்ட் ஹாஃப் மிக்சிங் இதோ இப்ப போர் பிரேம்ஸ்ல போயிகிட்டு இருக்கு[5/4/2010 10.30p.m]). தமிழ்நாட்டுல மட்டும் 450-500 பிரிண்டுகள் போடப்பட்ட உள்ளது(அது 3 படம் தூக்கபடுறத பொறுத்து கூடலாம்). உலகம் பூரா ஐங்கரன் வெளியிடுறாங்க. ஃபுல் என்டர்டேய்ன்மென் காரன்டி.

டிஸ்கி: ஓகே ஓகே படம் வெளிவரும் வரை அதை ஒட்டி இது போன்ற ப்ரோமோஷன் பதிவுகள் தொடர்ச்சியா வெளிவரும்.
முதல் பதிவு:   
ஒரு கல் ஒரு கண்ணாடி: முன்னோட்டம் (ப்ரோமோஷன் போஸ்ட்:1)

Wednesday, April 4, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி: முன்னோட்டம் (ப்ரோமோஷன் போஸ்ட்:1)

டும் டும் டும் டும்..... ஒங்க எல்லாருக்கும் ஒரு நல்ல செய்தி சொல்ல போறோம்... அதாவது கடந்த ஒன்னர வருஷமா.. நாங்க (ஆல் வேர்ல்ட் சந்தானம் ரசிகர்கள்) எல்லாம் ரொம்ப ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ஒரு கல் ஒரு கண்ணாடி ( Oru Kal Oru Kannadi ) திரைப்படம் ஏப்ரல்13 ரிலீஸ் ஆக போகுதுன்னு ஆபீசியலா அறிவிச்சிட்டாங்க.. அறிவிச்சிட்டாங்க..

இது வரைக்கும் இந்த அகாதுகா அப்பாடக்கர்ஸ் (REAL SANTHANAM FANZ) பிளாக்ல மங்காத்தா, வேலாயுதம், ஏழாம் அறிவு... ன்னு பல படங்களுக்கு முன்னோட்டம், விமர்சனம், பின்னோட்டம்,ஜெயிக்க போவது எது? ன்னு ஏகப்பட்ட பதிவுகள்  எழுதி இருக்கோம். அந்த எல்லா படங்களை விடவும் OK OK எங்களுக்கு கொஞ்சம் ஸ்பெஷல். அதுக்கு மெயின் காரணம் சந்தானம். அவரோட அதி தீவிர ரசிகர்கள் நாங்கன்னு இந்த பிளாக்க ரெகுலரா பார்க்குற எல்லாருக்கும் தெரியும். அது போக இயக்குனர் M.ராஜேஷின் மேக்கிங் ஸ்டைல் எப்பவுமே நம்ம ஃபேவரிட். இது போதாதா நமக்கு. சும்மா  நாலஞ்சு காட்சிகள்ல சந்தானம் வர்ற மொக்க படங்கள் வந்தாலே ஊரை கூட்டி அதகளம் பண்ணுவோம். இது படம் பூரா சந்தானம் வர்ற நம்ம ராஜேஷ் படம். இதுக்கு சும்மா இருப்போமா? இன்னில இருந்து ஆரம்பிக்கிறோம் சார் புரோமோஷன்ஸ்....

நம்ம போனவருட எதிர்பார்புள்ள தமிழ் படங்களும் சில கமெண்ட்களும் பதிவுல, 2011இன் மெகா ஹிட் படமா வரபோவது  ஓகே ஓகே தான் அப்பிடின்னு சொல்லியிருந்தோம். அது ஏன்னா சந்தானம்-ராஜேஷ் காம்பினேஷன் அப்புடி. அவுங்க கெமிஸ்ட்ரி அப்புடி. தமிழ்த்திரை உலகத்துலேயே இப்போதைக்கு செம சின்க்ல இருக்குற கூட்டணி இவுங்க ரெண்டு பேரும்தான். தொட்டதெல்லாம் பொன். படம்னுமட்டுமில்ல டிவி நிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழாக்கள்ன்னு இவுங்க ரெண்டு பேரும் சேர்ந்து எங்க வந்தாலும் அந்த இடமே காமெடி ஸோன் ஆகிடும். இவுங்க ரெண்டு பேரும் ஒன்னா வர்ற விஜய் TV அவார்ட் பங்க்ஷன் நிகழ்ச்சி கிளிப்ஸ் கூட யூட்யூப்ல ஹிட்டோ ஹிட்டு.

சென்ற வருட கடைசியில வெளியாகி இருக்க வேண்டிய படம், ஆனா சில பல காரணங்களால கொஞ்சம் தாமதமாகி இப்போ வெளிவருது.  வேலாயுதம்,ஏழாம் அறிவு படங்கள் கூட ஓகே ஓகே படத்து டீசரும் வெளியாகி அந்த படங்கள விட அதிகப்படியான கைதட்டல்கள அள்ளிக்கிட்டு போனது எல்லாருக்குமே தெரியும். சமீபத்துலவ் வெளியான படத்தோட ட்ரைலர், இளைஞர்கள் மத்தியில செம பாப்புலர் ஆச்சு. அதுல இருக்கற தலைவர் பஞ்ச் டயலாகுகள்
  • "இப்புடியே  இந்தியால இருக்குற ஒவ்வொரு பொண்ணும் குமாரு, ராஜேஷ், பாபு, டேவிட்ன்னு ஒவ்வொருத்தனா கழட்டிவிட்டாஅப்புறம் எப்புடி இந்தியா வல்லரசாகுறது? டல்லரசாதான் ஆகும்"
  • "வாட் த ஹெல் ஒஃப்  த, ஸ்டுபிட் ஒஃப்  த, நான்சென்ஸ் ஒஃப்  த, இடியட் ஒஃப்  த , கன்றி ப்ரூட் ஒஃப்  த, டெபுடி கமிஷ்னர் ஒஃப்  த டாட்டர்..."(உதய் டு சந்தானம்)
  • "நா நல்லா பண்ணுறேனோ இல்லையோ, நீ நல்லா.... பண்ணுரடா"
  • "கேக்குறவன் கேணன்னா கேரம் போர்ட கண்டு பிடிச்சது கே.எஸ் ரவிக்குமார்ன்னு சொல்லுவியே நீயி"
  • "உன் ஆள் என்னடான்னா என்ன பார்த்தாலே காமெடியா இருக்குன்னு சொல்றா, நா என்னா மிக்கி மவுசா டொனால்ட் டக்கா?"
  • "காதலியால் கழட்டி விடப்பட்ட காளையர் சங்கம்னு ஒன்னு ஆரம்பிக்கிறோம், நீ தலைவரு, நா பொது செயலாளரு, மெரீனா பீச்ல கூட்டம் போட்டோம்னு வச்சிகயேன், சும்மா மாநாடு மாதிரி கூட்டம் அள்ளும்"
  • "Fact-U..Fact-U..Fact-U..Fact-U.."
 எல்லாமே இப்ப சோஷியல் நெட்வர்க் தளங்கள் எல்லாத்துலயும் செமயா ஒரு கலக்கு கலக்கிக்கிட்டு இருக்கின்ற. அந்த ட்ரெய்லர இதுவரைக்கும் பார்க்காதவுங்க இப்போ பார்த்துக்குங்க.


ட்ரெய்லரே செம தூக்கலா இருக்கே, படம் எப்புடி இருக்குன்னு தானே யோசிக்கிறீங்க. டவுட்டே வேணாங்க. 100% என்டர்டெய்ன்மென்ட்க்கு நாங்க காரன்டி. என்னத்தான் ஓடி ஜெயிக்க போற குதிரையா இருந்தாலும் அதுக்கு தேவையான மேட்டர்ஸ அரேன்ஜ் பண்ணி கொடுக்கவேண்டியது ஒரு ஜாக்கியோட கடமை. அது போல என்னதான் ஜெயிக்கபோற படமா இருந்தாலும் அதுக்கு தேவையான ப்ரோமோஷன்ஸ் செய்ய வேண்டியது ரசிகர்களாகிய எங்களது கடமை. அதுனால இன்னில இருந்து தொடர்ந்து படம் வெளிவரும் வரும் வரை/ வெளிவந்த பின்னும் ஒரு கல் ஒரு கண்ணாடி ப்ரோமஷன்ஸ் பதிவுகள் போட போறோம். படம் ஆரம்பமான கதை,நடிகர்கள் ஒரு பார்வை, பாடல்கள் ஒரு பார்வை,ப்ரொஸ் அண்ட் கொன்ஸ்,  எக்ஸ்க்ளுசிவ் பேட்டிகள்ன்னு தொடர்ச்சியா வர இருக்கின்றன . ஆல் ரியல் சந்தானம் பேன்ஸ் கம் , ரீட் அண்ட் ஹேவ் ஃபன்.

முதற்கட்டமா காஸ்ட் அண்ட் க்ருவ் டீடெய்ல்ஸ்
  • நடச்சத்திரங்கள்: உதய், சந்தானம், ஹன்ஷிகா, சரண்யா பொன்வண்ணன், சுவாமிநாதன், மகாநதி சங்கர் அப்புறம் ஆர்யா, சிநேகா, ஆண்ட்ரியா நட்புக்காக. 
  • இயக்கம்: ராஜேஷ்.M 
  • ஒளிப்பதிவு: பாலசுப்ரமணியம் 
  • எடிட்டிங்: விவேக் ஹர்ஷன் 
  • இசை: ஹாரிஸ் ஜெயராஜ் 
  • பாடல்வரிகள்: நா.முத்துகுமார்,சந்தானம்(வேணாம் மச்சான் வேணாம், பல வரிகள்)
  • கோரியோகிராபி:  தினேஷ் மாஸ்டர்
  • தயாரிப்பு: உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் பேனர்
  • ஜோனர்: ரொம்-காம்(ரொமான்ஸ்-காமெடி) 
  • ரிலீஸ்: 13 ஏப்ரல் 2012

தொடரும்......

டிஸ்கி: படம் தொடர்ப்பான உடனடி அப்டேட்ஸ்க்கு டிவிட்டரில் பின்தொடர..... https://twitter.com/#!/Santhanam_Fanz

Friday, March 23, 2012

ஒரு கோடி உங்களுக்கே - ஆரியாவும் சந்தானமும்


நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி அப்புடின்னு ஒரு ப்ரோக்ராம் ஆரம்பிச்சிருக்காங்க, நம்ம சூர்யா மொக்க மொக்கையா கேள்வி கேக்குறாரு. அந்த ப்ரோக்ராமோட எல்லா மொழி வேர்சனையும் பார்த்ததுனால நமக்கு உண்டான விபரீத சிந்தனைதான் இந்த பதிவு. இது வெறும் கற்பனை மட்டுமே. இதுல ஹோஸ்ட் பண்ணுரவரு நம்ம தலைவர் சந்தானம் அண்ட் கன்டெஸ்டன்ட் ஆர்யா. இப்ப நிகழ்ச்சிக்கு போவோமா?

சந்தானம்: இப்போ அடுத்ததா ஹாட் சீட்டுக்கு வர போறது யாருன்னு பார்போம்.  உங்கள் மின்னல் விரல்களுக்கான கேள்வி:

பின்வரும்  நடிகைகளை அவர்களின் $^%&^@#$ சைஸின் அடிப்படையில் சரியாக வரிசை படுத்தவும்:
A)    இலியானா                                                                     B)ஷகீலா
C)     நமிதா                                                                              D) திரிஷா


.......... டைம்ஸ் அப்....  சரியான வரிசை இது : நமிதா, இலியானா, திரிஷா, ஷகீலா.

எத்தன பேர் சரியா வரிசை படுத்தி இருக்காங்கன்னு பார்போம்? அடடா ஒரே ஒருத்தன்தான் வந்துருக்கான். சரி அவன் எப்புடி வரிசை படுத்தி இருக்கான்னு பார்போம்? இதோ அவருடைய வரிசை:   
                                       ஷகீலா, நமிதா, திரிஷா ,இலியானா  

டேய்.. இது என்னடா புது வரிசை, அவுங்க காலுக்கு போடுற செருப்பு சைஸ் அடிப்படையில் சரியாக வரிசை படுத்த சொன்னா, நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு எதையோ வரிசை படுத்தி இருக்க... உன்ன எல்லாம் போட்டில சேர்த்துக்க முடியாது, நடைய கட்டு.

ஆர்யா: ஹ்ஹேய் ஹோய்.. நீங்க சொன்னது எனக்கு சரியா காதுல விழல பிரதர். நா வேற எதையோ யோசிச்சிகிட்டு வரிசை படுத்திட்டேன். இப்ப வேற கன்டெஸ்டன்ட்சும் இல்ல, நீங்க என்னைய போட்டில சேர்த்துகிட்டுதான் ஆகனும்.

சந்தானம்: நீ என்ன கருமாந்திரத்த நெனச்சி தொலச்சியோ.. அதெல்லாம் வேலைக்கு ஆகாது. நீ நடைய கட்டு.

 ஆர்யா: வாட் தின்க் யூ? இடியட், ஸ்டுபிட், நான்சென்ஸ், யூ கன்றிப்ரூட்.... கேம் ஷோ நோ, மனி நோ, மேரேஜ் நோ,  மேட்டர் நோ, சில்ட்ரன் நோ. ஐ கம்பெலெய்ன் டிரெக்டர். வாட் நேம், டெல் நேம், டெல் டெல் டெல். கமான்..

 சந்தானம்: ஐயோ, ராமா.. என்ன ஏன் இந்த மாதிரி கழிசர பசங்களோட எல்லாம் கூட்டு சேர வக்கிர. அடச்சே, இவன்கூட சேர்ந்து நமக்கே ட்ராக் மாறுதே. இவன சேர்துக்கலன்னா இந்த மாதிரி இங்கிலீஸ்ல பேசியே கொல்வானே. சரி வந்து தொல..

சந்தானம்: வாங்க Mr. ஆர்யா. ஒங்க கூட யாரு வந்துருக்காங்க?

ஆர்யா: அதோ அங்க ஓரமா ஒக்காந்து இருக்காரே. அவரு என்னோட பிரண்டு... அரியர் பிரண்டு  சுவாமிநாதன்.

சந்தானம்: யாரு? அந்த முட்டபோண்டாக்கு டை கட்டுன மாதிரி ஒருத்தன் அவனா? ஓகே. Mr. சுவாமிநாதன். ஒங்க அரியர் பிரண்டு ஆர்யாக்கு போட்டிக்கு போறதுக்கு முன்னாடி, நீங்க என்னா சொல்லிக்க விரும்புறீங்க.

சுவாமிநாதன்: ஜெயிச்சி மட்டும் தொலச்சிடாதீங்க பாஸ். அப்புறம் நா தனிமரம் ஆகிடுவேன். கடவுளே இவர எப்புடியாவது தோக்க வச்சிரு.

ஆர்யா: அடிங்...

சந்தானம்: "முகநக நட்பது நட்பல்ல.." குறளுக்கு எடுத்துக்காட்டா இருக்காங்க இவுங்க ரெண்டு பேரும். ஓகே. இப்ப Mr.ஆர்யாவ பத்தி சின்னதா ஒரு வீடியோ கிளிப்.

வீடியோ ஸ்டார்ட்:
இதோ இந்த வீடியோ க்ளிப்ள நீங்க பார்க்குறீங்களே.. இவருதான் Mr.ஆர்யா. இவர பத்தி திருக்குறள் மாதிரி ரெண்டே வரில சொல்லனும்னா.. இருபத்தி நாலு மணித்தியாலமும் பிசியாவே இருப்பாரு, ஆனா எந்த வேலையும் செய்ய மாட்டாரு. அதாவது வேல வெட்டி எதுவும் இல்ல, டிகிரி கூட இல்ல. ஆனா எதோ டோக்கோமோ கம்பேனி ஓனர் மாதிரி எப்ப பாரு கூலிங் கிளாஸ் போட்டுகிட்டுதான் இருப்பாரு. நம்ம பில்லா தல மாதிரி நைட்ல கூட சன் கிளாஸ் போடுவாரு. இவரோட ஸ்பெஷாலிட்டி என்னான்னு பார்த்தீங்கன்னா, அது இவரோட விடாமுயற்சிதான். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.
வீடியோ என்டு.

சந்தானம்: ஓகே Mr.ஆர்யா... சொல்லுங்க.... Mr. ஆர்யா சார்... ஆர்யா சார்...ஆர்யா.. டேய் ஆர்யா... அடடே தூங்கிட்டான்.. டேய் ஆர்யா ஏந்திரிடா...

ஆர்யா:(தூக்கத்துல இருந்து அலறிகிட்டு) எங்க என் காரு, எங்க என் பங்களா, எங்க என் பொண்டாட்டி நயன்தாரா!, எங்க என் டிரைவர் நல்லதம்பி.

சந்தானம்: டேய் இன்னும் ஷோ ஆரம்பிக்கவே இல்ல. அதுக்குள்ள கனவுலையே காசு ஜெயிச்சி, குடும்பம் நடத்திட்டியா? அடசே கூலிங் கிளாச கழட்டுடா.. இப்ப சொல்லுங்க Mr.ஆர்யா நீங்க எதுக்கு இந்த ஒரு கோடி உங்களுக்கேல பங்குபற்றனும்ன்னு ஆசைப்பட்டீங்க? இதுல கெடைக்கிற பணத்துல நீங்க என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?

ஆர்யா: என்ன பிரதர் இப்புடி கேக்குறீங்க, நானும் பாஸ் என்கிற பாஸ்கரனுக்கு அப்புறம் ஒரு மூணு படம் நடிச்சிட்டேன், எதுவுமே பெருசா ஹிட் ஆகல, அதனால இந்த நிகழ்ச்சில பங்குபற்றி கெடைக்கிற காசுல சொந்தமா ஒரு படம் எடுக்கலாம்ன்னு வந்திருக்கேன்.

சந்தானம்: என்னது நீ சொந்த படம் எடுக்கப்போறியா? அதுக்கு பணம் வேணும்னா இந்த கடை திறப்பு விழா அப்புறம் கல்யாணத்துல டான்ஸ் ஆடுறது, இல்லன்னா டிவில ஏதாவது ப்ரோக்ராம் பண்றது இப்புடி ஏதாவது ட்ரை பண்ணலாமே, இங்க எதுக்கு வந்த  நீ? நீ என்னா அவ்வோளவு பெரிய அப்பாடக்கரா?

ஆர்யா: என்னப்பா தெரியாத மாதிரியே கேக்குற, நம்ம தமிழ் சினிமாவுல எப்பவுமே பாக் அப் பிளான்னா அது சந்தானம் தானே, என்னோட மூணு படம் சரியா போகாததுக்கு காரணம் அந்த படத்துல நீ இல்லாதுதான்னு ஒரு பேச்சு இருக்கு, அதுதான் என்னோட பாக் அப் ப்ளான் ஒன்கிட்டயே வந்துட்டேன். யப்பா கமரா மென், இத எடிட்டுல தூக்கிடுங்கப்பா..

சந்தானம்: Fact-u...Fact-u...Fact-u.. (அப்பாடா நம்ம படத்துக்கு பப்ளிசிட்டி பண்ணியாச்சு). இனியும் வெட்டியா நேரம் செலவழிக்காம நேரடியா நிகழ்ச்சிக்கு போவோம், மனி அண்ணே நீங்க ரெடியா? ரசிக மகா ஜனங்களே நம்ம ஆர்யாக்கு ஜோரா ரெண்டாவது வாட்டி கை தட்டுங்க..

சந்தானம்: ஓகே, நம்ம போட்டிக்கு போகலாம். உங்களுக்கான முதல் கேள்வி,

ஆங்கில அரிச்சுவடியில் முதல் எழுத்து எது?

A) C                                                                                                                  B) I
 C) A                                                                                                                 D) G

ரொம்ப யோசிக்காத, சட்டுன்னு சரியான ஆப்சன சொல்லு.
ஆர்யா: இது எனக்கு தெரியும்பா, A

சந்தானம்: யோவ், இந்த சின்ன கேள்விக்கு கூட உனக்கு பதில் தெரியல நீயெல்லாம்... 

ஆர்யா: சரியான பதில்தானே சொன்னேன், இவன் எதுக்கு டென்சன் ஆகுறான்? சரி எதுக்கும் ஆடியன்ஸ் போலுக்கு போவோம்.

சந்தானம்: ஆடியன்ஸ் போல், ஆடியன்ஸ் எல்லாம் சரியான ஆப்சன், ஆப்சன் C அப்புடின்னு சொல்லியிருக்காங்க, ஆர்யா அதே லாக் பண்ணிடலாமா?

ஆர்யா: ஓ, பதில சொல்லகூடாதா? ஆப்சன தான் சொல்லனுமா? நல்லா நடத்துரீங்கய்யா போட்டிய, அதயே லாக் பண்ணி தொலை..

சந்தானம்: சரியான பதில், நீங்க ஆயிரம் ரூபா ஜெயிச்சிருக்கீங்க ஆர்யா? இத வச்சுக்கிட்டு நீங்க என்ன பண்ண போறீங்க?

ஆர்யா: மைசூர் பாலஸ்ஸ வெலைக்கு வாங்கலாம்ன்னு இருக்கேன்.

சந்தானம்: ஆயிரம் ரூவாக்கு மைசூர் பாகு வேணும்னா வாங்கலாம், சாப்ட நான் ரெடி. ஹ்ஹ்ஹங்ங்..... முதல்ல நீ அந்த கூளிங்க்லாச களட்டுடா. இப்போ இரண்டாயிரம் ரூபாவுக்கான ரெண்டாவது கேள்வி,

ஆர்யா: என்னய்யா இது, இப்போதானே ரெண்டாயிரம் ரூபாவுக்கான முதலாவது கேள்விய கேக்குற, அப்புறம் என்ன ரெண்டாயிரம் ரூபாவுக்கான ரெண்டாவது கேள்வி?

சந்தானம்: ஓன் லாஜிக்குல வெளக்கெண்ணய வச்சு தேய்க்க, சூர்யா கூட இப்புடித்தான் சொல்றாரு, எல்லாம் ஒரு ப்லோவுல வந்திடிச்சு.  இதெயெல்லாம் டீல்ல விடுவியா.. உனக்கான ரெண்டாவது கேள்வி,

......கீங்...

சந்தானம்: ஐயோ, இன்னிக்கான நேரம் முடிவடைந்தது, நாம மறுபடியும் அடுத்தவாரம் சந்திக்கலாம், இன்னும் சுவையான கேள்விகளோடும் சுவாரஷ்யமான சமாச்சாரங்களோடும். பிரேக்குக்கு அப்புறம் தீயா வேல செய்யனும் பாஸ்.



டிஸ்கி: இது சூர்யாவை கலாய்க்கும் பதிவு அல்ல.கடந்த  வார எபிசோட்களில் சூர்யாவிடம் நல்ல முனேற்றம் தெரியுது. சினிமாவை போலவே,சிறிது காலத்தின் பின்  தக்க பயிற்சியுடன் சூர்யா இன்னும் மெருகேருவார்ன்னு தோணுது. அப்புறம் கோஹ்ன் பனேகா குரோர்பதி(கோடிஸ்வரன்) நிகழ்ச்சி வந்த சமயத்துல சந்தானம் மற்றும் மனோகர் செய்த ஸ்பூப் நிகழ்ச்சியும் செமயா இருக்கும், நீங்க யூட்யூப்ல தேடி பார்க்கலாம்.

டிஸ்கி 2: இந்த பதிவு நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்ட பதிவு. இத ஒரு கம்பேக் பதிவா பதியுறோம். அடுத்தடுத்து ஓகே ஓகே ப்ரோமோஷன் பதிவுகள்.

Saturday, March 17, 2012

வழி காட்டிய நோக்கியா பொண்ணும் கவிஞர் ஆகிவிட்ட சந்தானமும் - கும்பளிங் கும்பளிங்

எல்லாருக்கும் வணக்கமுங்க, 

மறுபடியும் பதிவு எழுத ஆரம்பிக்காலமுன்னு பார்த்தா உருப்படியா ஒரு மேட்டரும் சிக்க மாட்டேங்குது. அப்புடி எதாச்சு சிக்கினாலும் நாம பதிவு ரெடி பண்ணரதுக்குள்ள அது ஒவுட் டேட்டட் ஆகிடுது. இப்புடியே போனா பதிவுலகமே நம்மள மறந்திடுமேன்னு யோசிக்கிட்டு இருந்தப்போதான் ரொம்ப நாளா ட்ராப்டுல இருந்த சில பதிவுகள் கண்ணுல பட்டது,  கொஞ்சமா தூசு தட்டி டின்கேரிங் பண்ணி பப்ளிஷ் பண்ணலாம்ன்னு ஒரு ஐடியா, இருந்தாலும் அது வெளியில தெரியாம இருக்கறதுக்காக அப்பப்போ மானே தேனே எல்லாம் போட்டு பக்காவா ரெடி பண்ணனும்ன்னு ராசு மாமா கண்டிஷன் போட்டுட்டாரு, எவ்வளவோ பண்ணிட்டோம், இதையும்தான் பண்ணிப்பார்போமே...
இனிமே பதிவுக்கு போகலாமா...

பழைய கள்ளு...

அது என்னமோ தெரியலைங்க ஆணி ஜாஸ்த்தியானாலே எதுலயுமே சரியான கான்சென்ற்றேசன் வர மாட்டேங்குது. ஏற்கனவே மெமோவ சரியா படிக்காம ஒரு மீட்டிங்குக்கு போயி பல்பு வாங்கினோம், அதே போலதான் இதுவும். டவர் ஹெயஸ்ட்ன்னு ஒரு படம், ஒரு வழியா படம் பாக்கலாமேன்னு ரெண்டு நண்பர்கள் கூட தேடருக்கு கெளம்பினோம். நமக்கு புது இடம், அதனால எங்க போனாலும் நேவிகேசன் போட்டுட்டுதான் போறது, நாம நேவிகேசன் போடுறது நோக்கியா போன்ல, அந்த நோக்கியா பொண்ணும் எப்பவுமே நமக்கு சரியான வழிதான் காட்டும். அன்னைக்கும் அப்புடியேதான் காட்டிச்சு, (அது டேர்ன் லேப்ட்ன்னு சொன்னதும் நம்ம நண்பர் வலதுபக்கமா கைய காட்டிக்கிட்டே டேர்ன் லேப்ட்ன்னு சொல்லி நாங்க ரோடு மிஸ் பண்ணினதெல்லாம் தனி கதை). இப்போ ஏன் இதப்பத்தி சொல்றேன்னா சம்பவ நாள் தேட்டேருக்கு போய் சேர்ந்ததும் நான் GPS ஆப் பண்ண மறந்துட்டு போன பாக்கேட்ல போட்டுட்டு போய்ட்டேன். நேரா டாய்லெட் போனோம். அங்க ஆசுவாசமா போய்க்கிட்டு இருக்கறப்போ திடீர்ன்னு அந்த நோக்கிய பொண்ணு "டேர்ன் ரைட் அண்ட் என்ட்டர் த ஹை வே" அப்புடின்னு சொல்லிச்சே பார்க்கணும், டாய்லெட்டே சிரிச்சது, நமக்கு ஒரே ஷேமா போச்சி. 


21 ஜம்ப் ஸ்ட்ரீட்

ரொம்ப நாளாவே சிரிச்சபடியே பாக்கக்கூடியதா ஒரு படமும் தேறல, ரொம்பவும் எதிர்பார்த்த தலைவர் படங்கள் ஓகே ஓகே, சகுனி, மசாலா கபே ரிலீசான பாடும் இல்ல, என்னடா பண்றதுன்னு யோசிக்கிட்டு இருந்தப்போதான் 21 Jump Street படத்தோட ஞாபகம் வந்தது, ரொம்பநாளா எதிர்பார்த்திருந்த படம், பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ போய் பார்த்தோம், செம காமெடி மாமா செம காமெடி. படம் ஆரம்பிச்சதுல இருந்து முடியற வரைக்கும் சிரிச்சு சிரிச்சே உசிரு போயிடிச்சு, அதுவும் அந்த ரெண்டு போலீஸ் பசங்களும் போதை மருந்து சாப்பிட்டிட்டு அடிக்கற கூத்து செம சீன். சில காட்சிகள்ல அமெரிக்கன் பை  டீன் மூவீஸ் சாயல் அடிச்சாலும் ஒன்றரை மணி நேரம் கவலய மறந்து வாய் விட்டு சிரிக்கறதுக்கு சொல்லி வச்ச படம். இதே படத்த கொஞ்சம் தமிழ் படுத்தி ஆர்யா சந்தானம் காம்பினேஷன்ல ராஜேஷ் இயக்கினார்ன்னா செமையா இருக்கும். பட் இங்க்லீஸ் படத்த காப்பி அடிக்கறதுக்கு அவரு என்ன AL விஜயா? அதனால சிவா-சந்தானம் காம்பினேஷன்ல வெங்கட் பிரபு இயக்கினார்னா கண்டிப்பா கலெக்சன அள்ளும் படம்.  காமெடி ரசிகர்களுக்கு செம விருந்து.


சதம் அடித்த சச்சின்

நம்ம சச்சின் ஒரு வழியா நூறாவது சதம் அடிச்சுட்டாரு, இன்னும் கொஞ்சநாள் தாமதிச்சிருந்தாரு, பெரிய கலவரமே பண்ணியிருப்பாங்க நம்ம பசங்க. ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் சச்சினின் 99 ஆவது சதத்துக்கு ஆண்டு நிறைவு விழா கொண்டாடினாங்க, நல்ல வேளை மனுஷன் தப்பிச்சிட்டாரு. என்ன ஒரு கொற, நூறாவது சதம் கூட தோல்வியில்தான் முடிஞ்சது, சச்சின் சதம் அடிச்சா இந்தியா தோர்க்கும்கர செண்டிமென்ட என்னைக்குதான் அண்ணன் முறியடிக்கபோராரோ. ஊரே கூடி சச்சினோட நூறாவது சதத்துக்கு வாழ்த்து சொல்லுது, இந்த நேரத்துல நம்ம CS அமுதன் (தமிழ் படம் இயக்குனர்) என்ன சொல்றாருன்னா, சச்சின் மயில் கல்லான நூற்றி ஓராவது சதத்துக்கு ஒருசதம் சமீபத்துல வந்துட்டாராம், ஏன்னா கொழுப்பு இந்தாளுக்கு, அது கெடக்குது கழுத, நாம தனுஷோட சச்சின் சாங் கேட்டு என்ஜாய் பண்ணுவோமா?

சச்சின் சாங் லிங்க் 

சந்தானத்தின் முதல் பாடல் வரிகள்


இப்போதான் முக்கியமான மேட்டரே, தலைவர் ஒரு பாடலுக்கு முதல் முதலா வரிகள் எழுதி கவிஞர் ஆகிட்டாரு, அதுதாங்க லேடஸ்ட் சென்சேசன் வேணாம் மச்சான் பாடலுக்கு கோரஸ் வரிகள் எழுதினது நம்ம தலைவர்தான். கோரஸ் வரிகல்ன்னா ஆ ஆ ..... ஊ ஊ ..... லா லா லா அப்புடின்னு நெனச்சிராதீங்க செம ஹைலயிட்டான தத்துவ வரிகள். "கண்ண கலங்கவைக்கும் பிகரு வேணாம்டா நமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டும் நண்பன் போதும்டா" செம கிக்கானா பாடல், அதவிட அந்த பாடல் படமாக்கப்பட்ட விதம் பற்றி அண்ணன் விவரிக்கராறு பாருங்க அதோட சுவையோ தனி, ஆடமுடியாதுங்கரதுக்காக த்ரோட் இன்பெக்சன்னு சொன்ன மொத ஆளு நம்ம தலைவர்தான்.


டிஸ்கி: யாராச்சும் இந்த பதிவ கொஞ்சம் இந்த திரட்டிகள்ள இணைச்சு விட்டீங்கன்னா கோடி புண்ணியமா போகும்.