Wednesday, April 4, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி: முன்னோட்டம் (ப்ரோமோஷன் போஸ்ட்:1)

டும் டும் டும் டும்..... ஒங்க எல்லாருக்கும் ஒரு நல்ல செய்தி சொல்ல போறோம்... அதாவது கடந்த ஒன்னர வருஷமா.. நாங்க (ஆல் வேர்ல்ட் சந்தானம் ரசிகர்கள்) எல்லாம் ரொம்ப ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ஒரு கல் ஒரு கண்ணாடி ( Oru Kal Oru Kannadi ) திரைப்படம் ஏப்ரல்13 ரிலீஸ் ஆக போகுதுன்னு ஆபீசியலா அறிவிச்சிட்டாங்க.. அறிவிச்சிட்டாங்க..

இது வரைக்கும் இந்த அகாதுகா அப்பாடக்கர்ஸ் (REAL SANTHANAM FANZ) பிளாக்ல மங்காத்தா, வேலாயுதம், ஏழாம் அறிவு... ன்னு பல படங்களுக்கு முன்னோட்டம், விமர்சனம், பின்னோட்டம்,ஜெயிக்க போவது எது? ன்னு ஏகப்பட்ட பதிவுகள்  எழுதி இருக்கோம். அந்த எல்லா படங்களை விடவும் OK OK எங்களுக்கு கொஞ்சம் ஸ்பெஷல். அதுக்கு மெயின் காரணம் சந்தானம். அவரோட அதி தீவிர ரசிகர்கள் நாங்கன்னு இந்த பிளாக்க ரெகுலரா பார்க்குற எல்லாருக்கும் தெரியும். அது போக இயக்குனர் M.ராஜேஷின் மேக்கிங் ஸ்டைல் எப்பவுமே நம்ம ஃபேவரிட். இது போதாதா நமக்கு. சும்மா  நாலஞ்சு காட்சிகள்ல சந்தானம் வர்ற மொக்க படங்கள் வந்தாலே ஊரை கூட்டி அதகளம் பண்ணுவோம். இது படம் பூரா சந்தானம் வர்ற நம்ம ராஜேஷ் படம். இதுக்கு சும்மா இருப்போமா? இன்னில இருந்து ஆரம்பிக்கிறோம் சார் புரோமோஷன்ஸ்....

நம்ம போனவருட எதிர்பார்புள்ள தமிழ் படங்களும் சில கமெண்ட்களும் பதிவுல, 2011இன் மெகா ஹிட் படமா வரபோவது  ஓகே ஓகே தான் அப்பிடின்னு சொல்லியிருந்தோம். அது ஏன்னா சந்தானம்-ராஜேஷ் காம்பினேஷன் அப்புடி. அவுங்க கெமிஸ்ட்ரி அப்புடி. தமிழ்த்திரை உலகத்துலேயே இப்போதைக்கு செம சின்க்ல இருக்குற கூட்டணி இவுங்க ரெண்டு பேரும்தான். தொட்டதெல்லாம் பொன். படம்னுமட்டுமில்ல டிவி நிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழாக்கள்ன்னு இவுங்க ரெண்டு பேரும் சேர்ந்து எங்க வந்தாலும் அந்த இடமே காமெடி ஸோன் ஆகிடும். இவுங்க ரெண்டு பேரும் ஒன்னா வர்ற விஜய் TV அவார்ட் பங்க்ஷன் நிகழ்ச்சி கிளிப்ஸ் கூட யூட்யூப்ல ஹிட்டோ ஹிட்டு.

சென்ற வருட கடைசியில வெளியாகி இருக்க வேண்டிய படம், ஆனா சில பல காரணங்களால கொஞ்சம் தாமதமாகி இப்போ வெளிவருது.  வேலாயுதம்,ஏழாம் அறிவு படங்கள் கூட ஓகே ஓகே படத்து டீசரும் வெளியாகி அந்த படங்கள விட அதிகப்படியான கைதட்டல்கள அள்ளிக்கிட்டு போனது எல்லாருக்குமே தெரியும். சமீபத்துலவ் வெளியான படத்தோட ட்ரைலர், இளைஞர்கள் மத்தியில செம பாப்புலர் ஆச்சு. அதுல இருக்கற தலைவர் பஞ்ச் டயலாகுகள்
 • "இப்புடியே  இந்தியால இருக்குற ஒவ்வொரு பொண்ணும் குமாரு, ராஜேஷ், பாபு, டேவிட்ன்னு ஒவ்வொருத்தனா கழட்டிவிட்டாஅப்புறம் எப்புடி இந்தியா வல்லரசாகுறது? டல்லரசாதான் ஆகும்"
 • "வாட் த ஹெல் ஒஃப்  த, ஸ்டுபிட் ஒஃப்  த, நான்சென்ஸ் ஒஃப்  த, இடியட் ஒஃப்  த , கன்றி ப்ரூட் ஒஃப்  த, டெபுடி கமிஷ்னர் ஒஃப்  த டாட்டர்..."(உதய் டு சந்தானம்)
 • "நா நல்லா பண்ணுறேனோ இல்லையோ, நீ நல்லா.... பண்ணுரடா"
 • "கேக்குறவன் கேணன்னா கேரம் போர்ட கண்டு பிடிச்சது கே.எஸ் ரவிக்குமார்ன்னு சொல்லுவியே நீயி"
 • "உன் ஆள் என்னடான்னா என்ன பார்த்தாலே காமெடியா இருக்குன்னு சொல்றா, நா என்னா மிக்கி மவுசா டொனால்ட் டக்கா?"
 • "காதலியால் கழட்டி விடப்பட்ட காளையர் சங்கம்னு ஒன்னு ஆரம்பிக்கிறோம், நீ தலைவரு, நா பொது செயலாளரு, மெரீனா பீச்ல கூட்டம் போட்டோம்னு வச்சிகயேன், சும்மா மாநாடு மாதிரி கூட்டம் அள்ளும்"
 • "Fact-U..Fact-U..Fact-U..Fact-U.."
 எல்லாமே இப்ப சோஷியல் நெட்வர்க் தளங்கள் எல்லாத்துலயும் செமயா ஒரு கலக்கு கலக்கிக்கிட்டு இருக்கின்ற. அந்த ட்ரெய்லர இதுவரைக்கும் பார்க்காதவுங்க இப்போ பார்த்துக்குங்க.


ட்ரெய்லரே செம தூக்கலா இருக்கே, படம் எப்புடி இருக்குன்னு தானே யோசிக்கிறீங்க. டவுட்டே வேணாங்க. 100% என்டர்டெய்ன்மென்ட்க்கு நாங்க காரன்டி. என்னத்தான் ஓடி ஜெயிக்க போற குதிரையா இருந்தாலும் அதுக்கு தேவையான மேட்டர்ஸ அரேன்ஜ் பண்ணி கொடுக்கவேண்டியது ஒரு ஜாக்கியோட கடமை. அது போல என்னதான் ஜெயிக்கபோற படமா இருந்தாலும் அதுக்கு தேவையான ப்ரோமோஷன்ஸ் செய்ய வேண்டியது ரசிகர்களாகிய எங்களது கடமை. அதுனால இன்னில இருந்து தொடர்ந்து படம் வெளிவரும் வரும் வரை/ வெளிவந்த பின்னும் ஒரு கல் ஒரு கண்ணாடி ப்ரோமஷன்ஸ் பதிவுகள் போட போறோம். படம் ஆரம்பமான கதை,நடிகர்கள் ஒரு பார்வை, பாடல்கள் ஒரு பார்வை,ப்ரொஸ் அண்ட் கொன்ஸ்,  எக்ஸ்க்ளுசிவ் பேட்டிகள்ன்னு தொடர்ச்சியா வர இருக்கின்றன . ஆல் ரியல் சந்தானம் பேன்ஸ் கம் , ரீட் அண்ட் ஹேவ் ஃபன்.

முதற்கட்டமா காஸ்ட் அண்ட் க்ருவ் டீடெய்ல்ஸ்
 • நடச்சத்திரங்கள்: உதய், சந்தானம், ஹன்ஷிகா, சரண்யா பொன்வண்ணன், சுவாமிநாதன், மகாநதி சங்கர் அப்புறம் ஆர்யா, சிநேகா, ஆண்ட்ரியா நட்புக்காக. 
 • இயக்கம்: ராஜேஷ்.M 
 • ஒளிப்பதிவு: பாலசுப்ரமணியம் 
 • எடிட்டிங்: விவேக் ஹர்ஷன் 
 • இசை: ஹாரிஸ் ஜெயராஜ் 
 • பாடல்வரிகள்: நா.முத்துகுமார்,சந்தானம்(வேணாம் மச்சான் வேணாம், பல வரிகள்)
 • கோரியோகிராபி:  தினேஷ் மாஸ்டர்
 • தயாரிப்பு: உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் பேனர்
 • ஜோனர்: ரொம்-காம்(ரொமான்ஸ்-காமெடி) 
 • ரிலீஸ்: 13 ஏப்ரல் 2012

தொடரும்......

டிஸ்கி: படம் தொடர்ப்பான உடனடி அப்டேட்ஸ்க்கு டிவிட்டரில் பின்தொடர..... https://twitter.com/#!/Santhanam_Fanz

8 comments:

 1. வணக்கம் டாக்டர்!சூப்பரு!டெம்பிளேட் கலக்கல்!!!!படமும் கலக்க சந்தானக் கடவுளை வேண்டிக்கிறேன்,ஹி!ஹி!ஹி!(செங்கோவி சிரிப்பு போலிஸ் கலியாணத்துக்கு அவர்(ரமேஷ்) போஸ்ட்டில வாழ்த்து சொன்னாரு.நீங்க கேட்டதா சொன்னேன்,சீக்கிரம் வர்றதா சொன்னாரு!)

  ReplyDelete
 2. பாஸ் டெம்ப்ளேட் சூப்பரு. படமும் சூப்பரா வரும்-னு எதிர்பார்க்கிறோம்

  இன்றைய பதிவு நான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில்

  ReplyDelete
 3. வணக்கம் யோகா ஐயா.. ஆமா ஆமா செங்கோவி அண்ணே ரெண்டு நாளைக்கு முன்னால நம்ம ப்ளாக்கும் வந்து கமெண்டிருந்தாரு... நன்றியோ நன்றி...

  ReplyDelete
 4. //Sathish said...

  பாஸ் டெம்ப்ளேட் சூப்பரு. படமும் சூப்பரா வரும்-னு எதிர்பார்க்கிறோம்/////

  நன்றி பாஸ்..

  ReplyDelete
 5. படத்தின் ட்ரைலர் மிகவும் அருமை. பகிர்வுக்கு நன்றி பாஸ்.

  ReplyDelete
 6. புரமோட் பண்றது தான் பண்றீங்க..நம்ம தலைவியையும் சேர்த்து நல்லா தூக்கி புரமோட் பண்ணுங்கய்யா.........!

  ReplyDelete
 7. //N.H.பிரசாத் said...

  படத்தின் ட்ரைலர் மிகவும் அருமை. பகிர்வுக்கு நன்றி பாஸ்.////
  நன்றி பாஸ் அடுத்த போஸ்டும் ரெடி...

  ReplyDelete
 8. //செங்கோவி said...

  புரமோட் பண்றது தான் பண்றீங்க..நம்ம தலைவியையும் சேர்த்து நல்லா தூக்கி புரமோட் பண்ணுங்கய்யா.........!/////

  ஹீ ஹீ.. தலைவிய கூட்டத்தோட கூட்டமா இல்லாம , தலைவிய தூக்கவே தனி போஸ்ட் போடுவோம்ல்லே...

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்!!