Thursday, April 5, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி: படம் உருவான வராலாறு (ப்ரோமோஷன் போஸ்ட்:2)

போன  பதிவுல ஆரம்பித்த ஒரு கல் ஒரு கண்ணாடி ப்ரோமோஷன் போஸ்ட்ஸ் சீரிஸின் ரெண்டாவது பதிவு இது.

தமிழ் சினிமாவுல எத்தனையோ இயக்குனர்கள் இருந்தாலும் நம்ம தலைவரோட முழு திறமைய வெளிக்கொண்டுவரும் ஆற்றல் ராஜேஷ் ஒருத்தருக்குத்தான் இருக்கு.  உதயநிதி ஸ்டாலின் ஹீரோவா அறிமுகமாகிற படம் இதுன்னு உங்க எல்லோருக்கும் தெரியும். இந்த பிண்ணனியில இன்னிக்கு ஓகே ஓகே படம் உருவான வராலாறு பத்தி நமக்கு தெரிஞ்ச கொஞ்சத்த சொல்றோம்...குருவி படத்துல இருந்து ஏழாம் அறிவு வரை பல படங்கள தயாரித்த நம்ம ரெட் ஜெயன்ட் உதயநிதிக்கு ரொம்ப நாளாவே ஹீரோவா நடிக்கனும்னு சின்னதா ஒரு ஆசை. சரியான சந்தர்ப்பம் வர்ற வரைக்கும் காத்துகிட்டே இருந்தாரு. அதுவரைக்கும் கிடைக்குற கேப்ல ஆதவன் போன்ற தான் தயாரிக்கும் படங்கள்ல  தலய காட்டிகிட்டு இருந்தாரு. இவரு வேற தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்/விநியோகஸ்தர். இவரு விநியோகித்த படங்கள் எல்லாமே ஹிட்டு, தயாரித்த படங்கள் கூட பெரிய ஹீரோக்கள் நடித்த பெரிய படங்கள். ஆள் வேற பார்க்குறதுக்கு சுமாரா இருப்பாரு. இவரு ஹீரோவா நடிக்கிறதுக்கு ட்ரை பண்ணுறாருன்னு தெரிஞ்சிகிட்டு மிஸ்கின் தொடங்கி பல பேர் இவருக்கு கதை சொல்லி இருகாகாங்க. அதுல பல கதைகள் ஹீரோவ ரொம்பவும் ஓவர் எக்ஸ்போஸ் பண்ணுற வழமையான தமிழ்பட கதைகளாவே இருந்துருக்கு. முதல் படத்துலேயே ஓவரா பண்ணி திட்டு வாங்கிட கூடாதுங்குறதுல ஆள் கொஞ்சம் சூதானமாவே இருந்தாரு. ஆனா எப்புடியோ மிஸ்கின் சொன்ன யுத்தம் செய் கதை பிடிச்சு போய் நடிக்கிறேன்னு ஒத்துக்கிட்டு இருக்காரு. போட்டோ ஷூட் வேற நடந்துருக்கு. ஆனா போட்டோ ஷூட் முடிஞ்சப்புறம் இந்த படத்துக்கு நாம ஒத்து வருவோமா? ன்னு இவருகுள்ளயே ஒரு டவுட்டு. அது சம்பந்தமா மிஸ்கின் கிட்ட பேசிட்டு படத்துல இருந்து விலகிட்டாரு. X கட் பண்ணுறோம்..


அதுபோக சிவா மனசுல சக்தி உதய்யின் ஃபேவரிட் படம். படம் பார்த்துட்டு ஜீவாவ கான்டக்ட் பண்ணி "படம் ரொம்பவும் லைவ்லியா இருக்கு பாஸ், ஒரு படம் மாதிரியே தோணல, எதோ நெஜமா நடந்த நிகழ்ச்சிகள ஓரமா காமெரா வச்சி எடுத்த மாதிரி இருக்கு, ஹீரோக்கும் பிரண்டுக்கும் ஆனா கெமிஸ்ட்ரி செமயா வொர்க்அவுட் ஆகி இருக்கு"ன்னு வேற சொல்லி இருக்காரு.  நாம ஏன் இந்த மாதிரி ஒரு படத்துல லாஞ்ச் ஆகா கூடாதுன்னு அவருக்கு ஒரு ஐடியா!!.. X கட் பண்ணுறோம்..

இந்த சமயத்துலதான் ஆர்யா நடித்த மதராஸபட்டணம் படத்த வாங்கி வெளியிட்டாரு. அது மூலமா ஆர்யாவோடயும் நல்ல பழக்கம். அதுக்கப்புறம் ஆர்யா நடிச்ச படம் "பாஸ் எங்கிற பாஸ்கரன்" , அந்த படம் ரொம்பவும் சூப்பரா இருக்க போய், ஆர்யாவே அந்த படத்த தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசனிடம் இருந்து விலைக்கு வாங்கி வச்சிகிட்டாரு. அப்புறம் அந்த படத்த ஆர்யா உதயநிதிக்கு போட்டு காட்ட போக அந்த படத்துல ரொம்பவே இம்ப்ரெஸ் ஆன உதயநிதி. "மச்சான் இந்த படத்த எனக்கு தாயேன்" ன்னு உரிமையா கேட்க போக, "தோ புடிச்சிக்கோ மச்சான்"ன்னு ஆர்யாவும் கொஞ்சம் லாபத்த வச்சி உதயநிதிக்கு கொடுத்துட்டாரு. படமும் எந்திரன் வர்றதுக்கு பதினஞ்சு நாள் முன்னாடி ரிலீஸ் ஆகி, சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி, எந்திரன் வந்தப்புறம் அடுத்த ஒரு மாசத்துக்கு வேற எந்த படமும் ரிலீஸ் ஆகாததால் எந்திரனுடன் பாக்ஸ் ஆபிசில் அடுத்த இடத்தை தக்க வைத்துக்கொண்டு மெகா ஹிட் ஆகிருச்சு. அந்த படத்த பல பேர் ரிபீட் ஆடியன்ஸா பல தடவ பார்த்து இருகாங்க (நாங்க பத்து பதினஞ்சு வாட்டி தியேட்டர்ல மட்டுமே பார்த்தோம், அப்புறம் டி.வி.டில ஒரு நூறுதடவ). எஸ்.எம்.எஸ்., பாஸ் ரெண்டு படத்துலயும்  இருக்குற ஒரு முக்கியமான விசயம் எனன்னனா திரைகதை ஒரு இடத்துல கூட அலுப்புதட்டாது. பாஸ் படம் நம்ம ராஜேஷ்க்கு திரைகதை அமைப்பதில் புதிய தலைமுறையின் பாக்யராஜ் என்னும் பட்டப்பெயரையும் பெற்றுகொடுத்துச்சு. X கட் பண்ணுறோம்..


உதயநிதிக்கும் அடடே நாம தேடிகிட்டு இருந்த ஆளு இவருதான்யான்னு தோணபோக, ராஜேஷ்கிட்டயே தன் ஹீரோ ஆசையை சொல்லி, எனக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க பாஸ்ன்னு கேட்டிருக்காரு. ராஜேஷும் ஓகே ஓகே பண்ணலாம் பாஸ்ன்னு அவரு மனசுல அப்போ தோணுன ஒரு வன்லைன் ஸ்டோரிய சும்மா டென்ட்டேடிவா சொல்லி, "இது உங்களுக்கு பிடிக்கலைன்னா இன்னும் கொஞ்ச நாள் டைம் தாங்க பாஸ், வேற ஒன்னு ரெடி பண்ணி சொல்றே"ன்னும் சொல்லிருக்காரு. ஆனா உதயநிதியோ "வேணாம் மச்சான் வேணாம், இந்த ஒன்லைனே நல்லா இருக்கு அதயே நீங்க டெவெலோப் பண்ணுங்க"ன்னு கேட்டுருக்காரு. சரின்னு ராஜேஷும்  வேலைல இறங்கிட்டாரு.

அதுக்கு பிறகு ஃபுல் ஸ்க்ரிப்ட் ரெடி ஆனதும் வழமைபோலவே சந்தானதையும் சேர்த்துகிட்டு ஹீரோயின் வேட்டைக்கு இறங்குனாங்க. அதுல த்ரிஷால இருந்து ஸ்ருதிஹாசன் வரைக்கும் எல்லார் பெயரும் அடிபட்டது. ஆனா கடைசில  த்ரிஷா இல்லைனா திவ்யான்னு அப்போதைக்கு எங்கேயும் காதல், மாப்பிள்ளை படங்கள்ல புதுமுகமா அறிமுகமான ஹன்ஷிகாவ கிருத்திகா உதயநிதியின் (ஃவைப்) ரெகமண்டேஷனின் பேரில் சேர்த்துகிட்டு, அம்மா கேரக்டருக்கு நேஷனல் அவார்ட் வின்னிங் சரண்யா மேடம், அப்பா கேரக்டருக்கு அழகம்பெருமாள் சார்,  இன்ன பிற நடிகர்களையும் பைனலைஸ் பண்ணிருக்காங்க. அப்புறம் ஏற்கனவே "உங்க முதல் படத்துக்கு நான்தான் மியூசிக் பண்ணுவேன்"ன்னு உறுதிமொழி குடுத்த ஹாரிஸ் ஜெயராஜ், பிதாமகன், அழகிய தமிழ்மகன் புகழ் பாலசுப்ரமணியம்ன்னு மத்த மத்த தொழில்நுட்ப கலைஞர்களையும் சேர்த்துகிட்டு 2011 பிப்ரவரில முதலாவது போட்டோ ஷூட் பண்ணாங்க. போட்டோ ஷூட் படங்கள் ஒவ்வொன்னும் ரொம்பவும் கலர்புல்லா, அட்ராக்டிவ்வா இருந்துச்சு. எப்படா இந்த படம் வரும், சந்தானம் கெட்டப் செமையா இருக்கேன்னு தோண வச்சுச்சு. அப்புறம் மார்ச் மாசம் படபிடிப்பு தொடங்கி சென்னைல சத்தியம் தியேட்டர், டைடல் பார்க்,கே.கே நகர் அப்புறம் மும்பைன்னு பல இடங்கள்ளையும் ஷூட்டிங் நடந்துச்சு, பாடல் காட்சிகளுக்காக ஜோர்டான், துபாய்ன்னு போனாங்க. இறுதி கட்ட படபிடிப்பா ராமேஸ்வரத்துல "வேணாம் மச்சான் வேணாம் " பாட்ட ஷூட் பண்ணி சூட்டிங்க 2012 பிப்ரவரில முடிச்சாங்க. 

படத்தோட  ரஃப் வேர்ஷன் பார்த்த எல்லாருக்குமே படம் ரொம்பவே புடிச்சிருக்கு.  சந்தானம்+உதய், ஹன்ஷிகா+உதய் கெமிஸ்ட்ரி நல்லா வந்துருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க. ஹாரிஸ் இப்ப இறுதிகட்ட ரீரெகார்டிங்  பண்ணிக்கிட்டு இருக்காரு. ரீரெகார்டிங்கின் போது ஹாரிஸ் "காமெடி, ரொமான்ஸ் எல்லாம் ஓகே , ஆனா டான்ஸ்ல உதய் கொஞ்சம் இம்ப்ரூவைஸ் பண்ணனும்"ன்னு சொல்லிருக்காரு. முதல் படம்தானே, "நேருக்கு நேர்"ல சூர்யா ஆடுனத விடவா மோசமா ஆடிற போறாரு உதய்? படம் வரட்டும் பார்போம்.


இறுதிகட்ட வேலைகள் எல்லாம் இன்னும் ரெண்டு மூணு நாள்ல முடிஞ்சுரும்(செகண்ட் ஹாஃப் மிக்சிங் இதோ இப்ப போர் பிரேம்ஸ்ல போயிகிட்டு இருக்கு[5/4/2010 10.30p.m]). தமிழ்நாட்டுல மட்டும் 450-500 பிரிண்டுகள் போடப்பட்ட உள்ளது(அது 3 படம் தூக்கபடுறத பொறுத்து கூடலாம்). உலகம் பூரா ஐங்கரன் வெளியிடுறாங்க. ஃபுல் என்டர்டேய்ன்மென் காரன்டி.

டிஸ்கி: ஓகே ஓகே படம் வெளிவரும் வரை அதை ஒட்டி இது போன்ற ப்ரோமோஷன் பதிவுகள் தொடர்ச்சியா வெளிவரும்.
முதல் பதிவு:   
ஒரு கல் ஒரு கண்ணாடி: முன்னோட்டம் (ப்ரோமோஷன் போஸ்ட்:1)

8 comments:

 1. வணக்கம் மொ.ரா.மாமா!ஆரம்பமே அமர்க்களமா இருக்கே?பாத்துடுவோம்.

  ReplyDelete
 2. ///Yoga.S.FR said...

  வணக்கம் மொ.ரா.மாமா!ஆரம்பமே அமர்க்களமா இருக்கே?பாத்துடுவோம்.////

  தேங்க் யூ.. தேங்க் யூ.. யோகா ஐயா.. கண்டிப்பா பிரான்ஸ்ல ரிலீஸா இல்லியான்னு கெட்டு சொல்றோம்..

  ReplyDelete
 3. மொக்கராசு மாமா said...

  ///Yoga.S.FR said...

  வணக்கம் மொ.ரா.மாமா!ஆரம்பமே அமர்க்களமா இருக்கே?பாத்துடுவோம்.////

  தேங்க் யூ.. தேங்க் யூ.. யோகா ஐயா.. கண்டிப்பா பிரான்ஸ்ல ரிலீஸா இல்லியான்னு கெட்டு சொல்றோம்..
  ///பிரான்சில ரிலீஸ் ஆகாமையா?ரிலீஸ் ஆவுது,டைமும் வேணுமில்ல?

  ReplyDelete
 4. எல்லோருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்களும்,காலை வணக்கமும்!

  ReplyDelete
 5. சென்னையில் ok ok படத்திற்கான ரிசர்வேசன் ஆரம்பித்து விட்டது.

  ReplyDelete
 6. //Yoga.S.FR said...

  எல்லோருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்களும்,காலை வணக்கமும்!////

  நன்றி ஐயா,, உங்களுக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 7. //! சிவகுமார் ! said...

  சென்னையில் ok ok படத்திற்கான ரிசர்வேசன் ஆரம்பித்து விட்டது.////

  ஆமா பாஸ், கமலா, சங்கம், சத்யம், எஸ்கேப்,ராக்கி, ஏஜிஎஸ், தேவி, அபிராமி எல்லாத்துலயும் ஆரம்பிச்சிடுச்சு...

  ReplyDelete
 8. ஓகே ஓகே முன்னோட்டம் மிகவும் அருமை பாஸ். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்!!