Friday, June 20, 2014

ஃபிட்னஸ் அவசியம் தானா? - தமிழில் ஒரு ஃபிட்னஸ் தொடர் 2

மனித உடல் உலகில் உள்ள மிகவும் சிறந்த அடாப்டிவ் இயந்திரம். சுற்றுப் புறச் சூழலில் இருந்து, நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து, வேலைப்பளு, தூக்கமின்மை அனைத்துக்கும் தன்னை தயார் படுத்தி, சந்தர்பத்துக்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக்கொள்ளக் கூடிய ஒரு இயந்திரம். இந்த மாற்றங்கள் எப்போதும் ஆப்டிமல் ஆக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. நமது உடல்தான் தேவைக்கு ஏற்றாற்போல் வளைந்து குடுக்கிறதே, அதை எப்படி வேண்டுமானாலும் துஷ்பிரயோகம் செய்யலாம் என எண்ணிக்கொண்டால் காலப் போக்கில் அதன் விளைவுகளையும் சமாளிக்க வேண்டி வரும். நம் உடலில் ஏற்படும் பல பிரச்சினைகள் ஒரே நாளில் ஏற்படுவதில்லை. அப்படி ஏற்பட்டால் அதற்க்கு நாம் உடனடி நிவாரணங்கள் தேடிக் கொள்ளலாம். ஆனால் சிறிது சிறிதாக நீண்ட காலத்தில் ஏற்படும் மாற்றங்கள் முப்பது, நாப்பது வயதுகளை தாண்டியதும் திடீரென நமக்கு பெரிய விளைவுகளை கொடுக்கின்றன.


"முன்பெல்லாம், எவ்வளவு சுறுசுறுப்பாய் இருப்பேன் தெரியுமா, இப்ப ஒண்ணுமே பண்ண முடியல", "வயசாகிடுச்சில்ல, இப்பெல்லாம் ஒரே முதுகுவலி", "முன்பு போல இப்ப எனக்கு சாப்பிட முடியறதில்ல, கொஞ்சமா சாப்பிடதுமே ஒரே வாய்வு, சில நேரம் மூச்சே எடுக்க முடியறதில்ல" இந்தமாதிரியான முறைப்பாடுகள் நாம் எப்போதும் முன்வைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். திடீரென ஒருநாள் கண்ணாடியில் பார்க்கும்போது முன்னால் துருத்திக் கொண்டிருக்கும் தொப்பை நம்மை பார்த்து பல்லிளிக்கும். ஏற்கனவே பல வேலைப்பளுக்களுக்கும், அன்றாட வாழ்வின் இதர பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க முடியாமல் திணறும் நமக்கு இப்போ புதுசா ரெண்டு பிரச்சினை, ஒன்னு, நம்ம உடல் முன்பு மாதிரி ஒத்துளைக்க மாட்டுதேங்கறது, ரெண்டாவது நானா இது, குண்டாகி பார்க்கவே இவ்வளவு கேவலமா இருக்கேனேங்கற தாழ்வுச் சிக்கல். இதுல மேனேஜர் கூட ப்ராப்ளம், கல்யாணம் ஆகாத பிராப்ளம், இல்ல கல்யாணம் ஆன ப்ராப்ளம், வேலையில ஒரு முன்னேற்றம் இல்லாத ப்ராப்ளம் இப்படி எல்லாம் சேர்ந்துக்கிட்டிச்சின்னா நம்ம பாடு அவ்வளவுதான்.

இந்த ரெண்டு கட்டேகேரிலையும் இல்லாதவரா இருந்தா, அதிகம் ஒல்லியானவரா இருக்கலாம். அப்படி இருந்தா நமக்கே தெரியாமல் நம்முடன் பல கெட்ட பழக்கங்கள் ஒட்டிக்கிட்டு இருக்கும். எதற்கெடுத்தாலும் சோம்பல், அந்த சோம்பலே ஒரு கட்டத்தில் அயர்ச்சியாக மாறி, எந்த ஒரு விடயத்துலயும் பிடிப்பின்மையை ஏற்படுத்தியிருக்கலாம். "இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது", "அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்", "அதுமேல எல்லாம் எனக்கு பெருசா இஷ்டம் இல்ல" இந்தமாதிரியான டயலாக் அடிக்கடி சொல்றவரா இருந்தா அதற்க்கு முதல் முக்கிய காரணம் உடம்பில் போதியளவு ஊட்டச்சத்தின்மை அல்லது ஊட்டச்சத்துக்களை பயன்படுத்த முடியாமல் உடல் குழம்பிப் போயிருப்பது காரணமாயிருக்கலாம். ஒல்லியானவரும் இல்ல, மேல சொன்ன பிரச்சினைகளும் இல்லையின்னா, இன்னும் கொஞ்சம் வயசு பாக்கியிருக்குன்னு அர்த்தம். இன்னும் கொஞ்சநாள் இப்படியே தொடர்ந்தா சீக்கிரமே நமக்கும் இந்த பிரச்சினைகள் எல்லாம் வரலாம்.

இதயெல்லாம் எப்படி சமாளிக்கறது? இந்த ப்ராப்ளம் எல்லாத்தையும் எப்படி தாண்டி மறுபடியும் நம்ம வாழ்கையை வாழ்றது? எனக்கு வேணும்கற மாதிரி எப்படி என் வாழ்கையை அமைச்சுக்கறது? வாழ்கையில எப்படி ஒரு முன்னேற்றத்த கொண்டுவாறது? இதற்கெல்லாம் முதல்படி நம்மள நாம தயார் படுத்திக்கறது. நம்ம உடல் மேலேயே நமக்கு நம்பிக்கை இல்லாத போது, நம்ம உடலே நம்ம கட்டுப்பாட்டுல இல்லாதபோது நம்மளால எப்படி வாழ்கையின் இன்ன பிற பிரச்சனைகளை சமாளிக்க முடியும்? நம்ம வாழ்கையில நமக்கு ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு காரணமே உடம்பில் சுரக்கும் ஹார்மோன்களில் ஏற்படும் இம்பாலன்ஸ். விரக்தி நிலையில இருந்து, சோர்வு, அயர்ச்சி, ஸ்ட்ரெஸ் எல்லாத்துக்கும் ஒவ்வொரு ஹார்மோன் இருக்கு, இத சீர்படுத்திக்கிட்டோம்னா பல பிரச்சினைகள் தானா சரியாகிடும். அதற்க்கு முதல் வழி, நாம் உட்கொள்ளும் உணவினை சீர்படுத்திக் கொள்வது, போதுமானளவு உடற்பயிற்சி செய்வது.


நமது வாழ்க்கை நமது கையில். அதை நல்லபடி அமைத்துக் கொள்வதும், வாழ்வின் ஓட்டத்தில் நம்மையே தொலைத்து விடுவதும் நாம் எடுக்கும் முயர்ச்சியிலும், நமது செயல்பாட்டிலும்தான் இருக்கிறது. என்னடா வாழ்க இது, ஒண்ணுமே சரியா நடக்குதில்லன்னு அலுத்துக்கறதால எதுவுமே சரியா நடந்துடாது, எதிர்த்து நில், துரத்திய துன்பம் ஓட்டம் பிடிக்கும். நம்ம வாழ்கையில நமது இலக்கு என்னங்கறதுல நாம தெளிவா இருக்கணும், அதை அடையறதுக்கு நம்மளாலான எல்லா முயற்சியையும் செய்யணும். இது ஏன் நடக்கல, என்னால ஏன் இத செய்யமுடியலன்னு காரணம் சொல்லிக்கிட்டே இருந்தா காரணம் மட்டும்தான் மிஞ்சும். மாற்றம் வேண்டுமென்றால்  அதற்கான உழைப்பும் வேண்டும், பொறுமையும் வேண்டும். ஓவர் நைட்டுல யாரும் ஒபாமாவாகிட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாதான் அது நடக்கும். அதே போல 10 கிலோ உடல் எடையை குறைக்கனும்னா ஒரே நாள்லையோ, ஒரே வாரத்திலையோ அது நடக்காது. அதற்கான முயர்சியும், அதே நேரம் பொறுமையும் இருந்தா கண்டிப்பாக வெல்லாலாம்.

உடல் கொழுப்பு வகைகள் என்ன, அவற்றின் நன்மை தீமை என்ன, உடல் கொழுப்பு சதவீதம், BMI, BMR  என்றால் என்ன, உடம்பில் கொழுப்பு சேமிக்கப் பட என்ன காரணம், கொழுப்பு சேமிப்பதில் இருந்து எப்படி கொழுப்பு உபயோகப்படுத்தும் நிலைக்கு நம் உடலை தயார் படுத்துவது, நம்மோட வாழ்க்கை முறைக்கு பொருந்தக்கூடிய உணவுக் கட்டுப்பாட்டை உருவாக்கிக் கொள்வது எப்படி என்பது போன்ற பலதரப்பட்ட விடயங்களையும் அடுத்த வாரம் முழுவதும் பார்க்கலாம்.

                           இத்தொடரின் ஏனைய பதிவுகள்:

14 comments:

 1. பேஸ்மெண்ட்டை ஸ்ட்ராங்கா போட்டுட்டீங்க. ’பில்டிங்’-க்காக வெயிட்டிங்.

  ReplyDelete
  Replies
  1. பில்டிங் வீக்காகிடுமோ, இப்போ பயம் வரக்கூடாதே, ஆனா வருதே..

   Delete
 2. Replies
  1. நன்றிங்க, சீக்கிரமே வரும்.

   Delete
 3. //கல்யாணம் ஆகாத பிராப்ளம், இல்ல கல்யாணம் ஆன ப்ராப்ளம்//
  கல்யாணம் பண்ணலாங்கறீங்களா இல்ல வேண்டாங்கறீங்களா.
  வெளக்கம் ப்ளீஸ்.

  ReplyDelete
  Replies
  1. அது உங்க டைம் சோணைப் பொறுத்தது. உங்களுக்கு இப்போ, ராத்திரியா இருந்தா பண்ணிக்கலாம், பகலா இருந்தா வேணாம்.

   Delete
 4. //திடீரென ஒருநாள் கண்ணாடியில் பார்க்கும்போது//
  அதுவும் சைடுவாக்குல பாக்கும் போது. அது "கானல்பிம்பம்" னு மனச தேத்திக்க வேண்டியதா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. கானல் பிம்பம் ஒருநாள் நிஜ விம்பமா மாறும்போது தெரியும் அதன் கொடுமை.

   Delete
 5. கொழுப்பெடுத்து அலயுற கொழுப்பை கட்டுபடுத்தும் வழிகளுக்காக வெயிட்டிங்.

  ReplyDelete
 6. தல டாக்டர் புட்டிபால் முன்முன்னோட்டம் கொடுத்தீங்க ஓகே.. முன்னோட்டம் கொடுத்தீங்க தாங்கிக்கிட்டொம். இது என்ன பின் முன்னூட்டமா :-)

  சட்டுபுட்டுன்னு ஆரம்பிச்சா தான உங்க பிட்னெஸ் தொடர் படிச்சு பிட்னெஸ் ஆன வெற்றிக்கதையில மொ.ரா என்ன பத்தி எழுதுவாரு.. ம்ம்ம் ஆகட்டும் ட்டும்

  பை தி வே.. வே ஆப் டெல்லிங் இஸ் நைஸ் :-)

  ( மொபைல்ல படிச்சதால அப்போ கமெண்ட்ட முடியல.. அதான் இப்போ :-)

  ReplyDelete
  Replies
  1. சாரி நண்பா, பிட்னஸ் என்பது ஒரு வாழ்க்கை முறை, நம்ம ஊருல, அது "வெறும் சாப்பாட்டுல பூண்டு சேர்த்துக்கங்க, அருகம்புல் ஜூஸ் குடிங்க தொப்பை நாளே நாள்ல காணமல் போயிடும்" நிலைமையில்தான் இருக்கு. எல்லாருமே பிட்னச ஒரு டெஸ்டிநேஷனா பார்காறாங்க, ஆனா அந்த ஜெர்னிதான் பிட்னஸ்ங்கறத மறந்துடறாங்க, அதுதான் கொஞ்சம் நேரம் எடுத்துக்க வேண்டியதா போயிரிச்சி,சீக்கிரமே ஆரம்பிச்சுடுறோம்

   Delete
 7. ரைட்டு... அடுத்து உடற்பயிற்சி செய்ய சொல்விங்களா?

  ReplyDelete
  Replies
  1. அதுவும் சொல்லுவோம்ன்னே, அதுக்கு மேலயும் சொல்லுவோம்.

   Delete

உங்கள் கருத்துக்கள்!!