Friday, June 13, 2014

தமிழில் ஒரு ஃபிட்னஸ் தொடர்: முன்னோட்டம்

கொஞ்ச நாளாவே திருவள்ளுவர் கனவுல வந்து தமிழ் கூறும் நல்லுலகுக்கு நீ ஆற்றிய சேவை என்னன்னு கேள்வி மேல கேள்வியா கேக்குறாரு. எதுவுமே பண்ணாம இருக்கறதுதான் நான் ஆற்றும் மிகப்பெரிய சேவைன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன், ஒத்துக்கற மாதிரி இல்ல, கடைசியில அவரே, நீ ஏன் தமிழ்ல அதிகமா எழுதப்படாத ஒரு விசயத்த தொடர் பதிவா எழுதக்கூடாதுன்னு கேட்டாரு. நமக்கு அப்படி எழுதுறதுக்கு என்ன தெரியும்ன்னு யோசிச்சுப் பார்த்தா, நாமதான் பெரிய அறிவாளி ஆச்சே, அதனால எதுவுமே சிக்கல. சரி, இந்த கொஞ்சநாளா நாம பண்ணிக்கிட்டு இருக்கறத பத்தி எழுதலாம்னா, இப்போ நடப்புல இருக்கறது ஹெல்த் ஆண்ட் ஃபிட்னஸ். ஓகே, அதப்பத்தியே எழுதிடலாம்ன்னு ஒரு விபரீத முடிவுல இறங்கியிருக்கோம்.


ஃபிட்னஸ் என்பது ஒரு வாழ்க்கை முறை. அன்றாட வாழ்கையில நாம பண்ணுற அத்தனை விஷயத்திலயும் மாற்றம் கொண்டுவரக்கூடிய ஒரு விஷயம்தான் இது. நாலு நாள் உணவுக்கட்டுப்பாடோ, ஒரு வார தீவிர ஒர்கவுட்டோ நம்மள மாத்திடாது. சின்ன சின்ன விஷயங்கள்ல இருந்து ஒவ்வொன்னுலையும் கவனம் செலுத்தனும், கொஞ்சம் கொஞ்சமா நம்மள மாத்திக்கணும். உடல் வலிமையை விட, மன வலிமை ரொம்ப முக்கியம். கான்சிஸ்டன்சி(Consistency) ரொம்ப முக்கியம். நம்ம உடம்பை பற்றி நம்ம எவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்கோம்கறதும் ரொம்ப முக்கியம்.

மனுஷ உடம்புங்கறது இந்த உலகத்துல உள்ளதுலையே மிகவும் பிரமிப்பூட்டக்கூடிய ஒரு இயந்திரம். எல்லா இயந்திரம் போலவும் அதுக்கும் தேவையான பராமரிப்பு அவசியம். ஒரு பெட்ரோல் வண்டிக்கு டீசல் ஊத்தக்கூடாதுன்னு தெரிஞ்ச நாம, நம்ம உடம்புக்கு மட்டும் எல்லா கண்றாவியையும் கொட்டுறோம், அப்புறம் அது கட்டுக்கோப்பா இருக்கணும்ன்னு எதிர்பார்கரதுல என்ன நியாயம்? மாசா மாசம், காத்து செக் பண்ணி, ஆயில் ஊத்தி, சின்ன சின்னதா வர்ற எல்லா ரிப்பேரையும் பார்த்து வாகனங்கள டாப் கண்டிஷன்ல வச்சுக்கறோம். ஒரு நீண்ட தூரப் பயணம் போகப்போறோம்னா கூலன்ல இருந்து எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்கறோம், ஆனா பொறந்ததுல இருந்து சாகப்போற வரைக்கும் நம்மகூடவே இருக்கப்போற இந்த ஒடம்ப பார்த்துக்கறதுக்கு நாம எவ்வளவு அக்கறை எடுத்துக்கறோம்?  ஒவ்வொரு நாளும் கொஞ்ச நேரம் உங்கள பார்த்துக்க செலவளிச்சிக்கீங்கன்னா, நீண்ட காலத்துல நிறைய நேரமும் பணமும் மிச்சமாகும். எதுக்கும் நேரமில்ல, நேரமில்லன்னு ஓடிக்கிட்டே இருந்தா ஒரு காலத்துல நேரம் மட்டும்தான் மிச்சம் இருக்கும், அந்த நேரத்த அனுபவிக்க நம்மக்கிட்ட ஆரோக்கியமோ, இளமையோ, பணமோ எதுவுமே இருக்காது.


இந்த தொடர் மூலம், ஹெல்த் ஆண்ட் ஃபிட்னஸ் சம்பந்தமா பல விடயங்கள தொகுக்கலாம்ன்னு இருக்கோம். தொப்பையை குறைக்கறது, 20 நிமிஷம் மூச்சு வாங்காம நடக்குறது, இல்ல நம்ம முரண்பாடுகள் பதிவுல சொன்னது மாதிரி, ஒரு விரக்தியான நிலமையில இருந்து மீண்டு வாறது, எப்பவுமே இப்படி ஒல்லியாவே இருக்கோமே, கொஞ்சமாவது சதைப் பிடிப்பா ஆகலாம்ன்னு நினைக்கறது, இல்ல சிக்ஸ் பேக்ஸ் வச்சிக்கறதுன்னு... உங்க இலக்கு எதுவாக இருந்தாலும், நாம பயணிக்கப்போற பாதை பெருமளவு ஒன்றாகத்தான் இருக்கும். நம்ம வாழ்கையில ஒரு மாற்றம் வேணும்னா, யாரோ வந்து நமக்கு அதை பண்ணித்தரப் போறதில்லை, நாமளாத்தான் தேடிக்கணும். நம்ம சந்தோஷத்த நாமளாத்தான் உருவாக்கிக்கணும்.

இந்த பதிவ ரெண்டு மாதிரியா கொண்டு போகலாம்ன்னு இருக்கோம். ஒன்னு இன்னில இருந்து நான் ஃபிட்டாகப் போறேன்னு பிட்டு போடும் எல்லாருக்கும், ஒரு பதினஞ்சு வாரத்துக்குள்ள எப்படி ஒரு ஃபிட்னஸ் வாழ்க்கை முறைக்கு நம்மள தயார் படுத்திக்கறது, இன்றைய நிலமையில இருந்து நம்மள எப்படி மாத்தி நம்ம இலக்கை நோக்கி முன்னேறுவதுன்னு படிமுறையா வாரா வாரம் தகவல்கள் தரப்போறோம். இதுல உணவு, உடற்பயிற்சி இரண்டும் அடங்கலாக தகல்கள் வரும். அதன் முதல் படியா நீங்க இன்றைக்கு இருக்கற நிலை என்ன, நீங்க எங்க போகணும்ன்னு கொஞ்சம் நேரம் ஒதுக்கி யோசிச்சு வச்சுக்கங்க.


இரண்டாவது, தொடர்ச்சியாக ஃபிட்னசுடன் தொடர்புடைய பல தகல்வகளை தனிப் பதிவுகளாக தருவது. இதுல கொஞ்சம் சயின்ஸும் கலந்து இருக்கும். உணவுக் கூறுகள், பயனுள்ள உணவு வகைகள், மோட்டிவேஷன், உடல் பயிற்ச்சி, ஹுமன் அனடாமி, சப்ளிமேண்டேஷன், உடல் பயிற்சி உபகரணங்கள், ஆடைகள், மேலதிக விபரங்கள் என பல தரப்பட்ட தலைப்புகளும் அடங்கும். 

இது என்னடா உங்களுக்கு தேவையில்லாத வேலைன்னு யாருமே நினைச்சிடக் கூடாதுங்கறதுக்காக ஒரு மேட்டர் சொல்லிக்கறேன். நான் அறிஞ்ச வரையில் ஃபிட்னஸ் என்பதற்கு "தமிழ் சூழலில்" பெரியளவு முக்கியத்துவம் இருப்பதா தெரியல. அதையும் தாண்டி அங்க இங்க ஏதாவது இருந்தாலும் அதுலயும் பலது தவறான தகல்களாகவே இருக்கு. அதனால, எங்களுக்கு தெரிஞ்ச அளவுல, விஞ்ஞான பூர்வமா எழுதலாம்ன்னு இருக்கோம். அதவிட முக்கியமானது, தலைவர் சந்தானமே  ஜிம்முக்கு போயி உடம்பெல்லாம் குறச்சி ஃபிட் ஆகிட்டு வராரு, தலைவர் எவ்வழியோ, தொண்டர்களும் அவ்வழியே. என்ன நான் சொல்றது. சரி, இம்புட்டு மேட்டரையும் நான் மட்டுமேதானா எழுதப் போறேன்னா அது இல்ல. இந்த தொடர்ல  என்கூட மொக்கராசு மாமாவும் தொடர்ச்சியா எழுதுவாரு. அதே போல, முடிஞ்சா அப்பப்போ சில எக்ஸ்பேர்ட்ஸும் எழுதுவாங்க. இதுதான் சாமியோவ் முன்னோட்டம். இனி மெயின் பிக்சர் பார்க்க ரெடி ஆகுங்க.

21 comments:

 1. Replies
  1. நன்றி, கண்டிப்பா தொடருவோம்

   Delete
 2. டிரெயிலரே களை கட்டுதே!! ஆகட்டும்.! டும்..!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா. மெயின் பிக்சரும் பாருங்க, அதுவும் செம்மையா இருக்கும்.

   Delete
 3. பின்னீட்டீங்க..நல்ல ஆரம்பம்.

  ReplyDelete
  Replies
  1. நன்றிண்ணே! எல்லாம் உங்க ஆசீர்வாதம்.

   Delete
  2. மொதலாவது ஸ்டில்லா இல்ல ரெண்டாவதா,மிஸ்டர்.செங்?

   Delete
 4. வணக்கம்
  மிக விரிவான அலசல்.. மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்.
   மிகவும் பயனுள்ள பின்னூட்டம், மிக மிக நன்றி.

   -அன்புடன்
   -டாக்டர் புட்டி பால்.

   Delete
  2. ஹா ஹா ஹா யோவ் புட்டிபால் உமக்கு செம குசும்புயா

   Delete
 5. //பெட்ரோல் வண்டிக்கு டீசல் ஊத்தக்கூடாதுன்னு தெரிஞ்ச நாம, நம்ம உடம்புக்கு மட்டும் எல்லா கண்றாவியையும் கொட்டுறோம், // தல திருவள்ளுவர் செம புத்திசாலி தல சரியான ஆளத்தான் புடிச்சிருக்காரு

  //சாயின்சும் கலந்து// இது நீங்க கண்டுபிடிச்ச சயின்ஸ் ஆ தல

  ReplyDelete
 6. வணக்கம்,டாக்டர்!நலமா?///அருமையான விஷயம்.எனக்கு உதவலேன்னாலும் என் பையனுக்கு உதவும்!இந்த வயசில நான் சிக்ஸ் பேக் ஆகி என்ன பண்ணப் போறேன்,ஹ!ஹ!!ஹா!!!

  ReplyDelete
  Replies
  1. ஐயா, 70வயசுல சிக்ஸ் பேக் வச்ச எத்தனையோ பேர் இருக்காங்க! நாம இப்புடி சொல்லலி சொல்லியே!

   Delete
 7. திருவள்ளுவர் ஆசய நெறவேத்துன பெறவு கம்பர் கனவுல வருவாருல்ல.

  ReplyDelete
  Replies
  1. அவர உங்க பக்கம் அனுப்பிடுவோம்ல

   Delete
 8. அப்படியே முடிந்தால் இடையிடையெ பிட்னஸ் செய்து கைவிட்டு நொந்து பொன நம்ம ஹொலிவுட் நட்சத்திரங்கள் படங்களும் பொடுங்க சகோ அவ்.. அவ்......

  ReplyDelete
 9. புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்.

  ஒவ்வொரு இடுகைக்கும் நீண்ட இடைவெளி விட வேண்டாம்.. படிப்பவர்களுக்கு ஆர்வம் குறைந்து விடும். குறைந்தது வாரம் ஒன்று வெளியாவது போல வைத்துக்கொண்டால் சரியாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா... அடுத்த வாரம் இருந்து ரெண்டே போடுறோம்! நன்றி!

   Delete
 10. ஆரம்பம் படு ஸ்ட்ராங்கா இருக்கு...

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்!!