Monday, June 23, 2014

அம்பானியாய் வாழ்வது எப்படி? தமிழில் ஃபிட்னஸ் மோடிவேஷன் கதைகள் 1

நம்ம நாட்டுல மூலைக்கு மூலை இருக்கும் அத்தனை சிறு-பெரு புத்தக கடைகளிலும் எல்லா மொழிகளிலும் ஆல்-டைம் பெஸ்ட் செல்லராக இருக்கும்  ஒரே புத்தகம் "அம்பது நாளில் அம்பானி ஆவது எப்புடி?" தான். பதினெட்டு நாளில் சிவப்பழகை பெறுவதில் பெண்கள் காட்டும்  அதே ஆர்வத்தை, அவசர அவசரமாக அம்பானி ஆவதில் நம்ம ஆண்களும் காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சரி, எப்புடியோ அம்பானி ஆயிட்டோம்னு வைங்க!!(??), அதுக்கபுறம், இப்போ அம்பானியா இருக்குற நாம, "அம்பானியாய் வாழ்வது எப்படி?"ன்னு சொல்லி இதுவரைக்கும் எந்த புத்தகமும் வந்ததில்லை. ஸாரி, அதை விலாவாரியா எழுதுறது என் ஜாப் கெடையாது, ஏன்னா அது நம்மோட டாப்பிக்கும் கெடையாது. நம்ம ஃபிட்னஸ் தொடரில் முன்னே சொன்னது போல பதிவர் புட்டிபால் எழுதும் கட்டுரைகளுடன் சேர்த்து இடைசேர்க்கையாக ஃபிட்னஸ் மோடிவேஷன் கதைகள் எனும் பிரிவில் சில நிஜ வாழ்கை கதைகளை எழுத உள்ளேன். அந்த வகையில் இன்று அனில் அம்பானியை பற்றி பார்ப்போம்.திருபாய் அம்பானி கட்டியெழுப்பிய கார்பரேட் சாம்ராஜ்யம் தற்பொழுது அவரின் மகன்கள் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி இருவரால் வெவ்வேறாக நிருவகிக்கபடுகிறது என்பது நாமெல்லாம் அறிந்ததே. இந்திய பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் முதலிடத்திலும் அனில் சற்றே கீழும் உள்ளனர். ஆனால், பர்சனலாக இவர்கள் இருவரது பர்சனாலிட்டியையும் ஒப்பிடும்போது, முகேஷ் என்னதான் முதலிடத்தில் இருந்தாலும் முகத்தில் ஒரு "திருப்தியின்மை" அல்லது வேறு ஏதோ ஒரு நெகடிவ் ஃபீல் இருப்பதாகவே எனக்கு தோணும், அதுவே அனிலின்  உடல்மொழியோ ஒரு பாசிடிவ்,  டிட்டர்மைன்ட் தோற்றமாகவே நான் எப்பொழுதும் காண்கிறேன். என்னடா இது, பண பெறுமதியை வைத்து பார்த்தால் இது தலைகீழாக  அல்லவா இருக்கனும். ஏன் இப்புடி இருக்குதுன்னு சில நாட்களாகவே எனக்குள்ள ஒரே  கன்ஃப்யூஷன். சரி, இருவரது லைப் ஸ்டைலை தேடி பார்ப்போமே என கூகிள் பண்ணினேன். ஆமா, நான் நினைத்தது சரிதான். முகேஷ் உடல் உழைப்பில் ஒரு சோம்பேறி. ஆனால் அனில் ஒரு ஃபிட்னஸ் ஃப்ரீக். அனில் அம்பானியால் இது எப்படி சாத்தியபட்டது. அவரது இந்த பிட்னஸ் ஈடுபாட்டிற்கு என்ன காரணம் என மீண்டும் தேட தொடங்கினேன். சில வருடங்களுக்கு முன் ஒரு  பேட்டியில் அவரே இதைப்பற்றி கூறிய  கதை ஒரு ஆங்கில இணையதளத்தில்  காணக்கிடைத்தது. அதன் தமிழாக்கம் கீழே.

பல வருடங்களுக்கு முன், நியூ யோர்க் நகரில் ரிலையன்சில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ள முதலீட்டாளர்களுடன் ஒரு மாநாடு. தனது கம்பனி குறித்தும் தனது எதிர்கால வியாபார திட்டங்கள் குறித்தும்  விலாவரியாக விளக்கிய அனில், முதலீட்டாளர்களிடம் கேள்விகளை முன்வைக்க கோருகிறரர். ரிலையன்ஸ் தொடர்பாக கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் சிறப்பான பதில்களை அளித்த அனில் வந்திருந்த முதலீட்டாளர்களுக்கு ரிலையன்ஸ் குறித்து சிறந்த நம்பிக்கையையூட்டுகிறார். இடையே ஒரு முதலீட்டாளர் அனிலை நோக்கி, "மிஸ்டர் அனில், நீங்கள் உங்கள் கம்பனியை பற்றி கூறியவை அனைத்தும் சிறப்பாக உள்ளன. உங்கள் கம்பனி மிகச்சிறப்பான வடிவத்தில் உள்ளது. ஆனால், என்றைக்காவது நீங்கள் உங்கள் உடல் வடிவத்தை கண்ணாடியில் பார்த்துள்ளீர்களா?". அனில் இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்கவில்லை. சுதாகரித்துகொண்டு "மன்னிக்கவும், இது ஒரு பர்சனல் கேள்வி, இதை நீங்கள்  வெளியில் வைத்து பர்சனலாக கேட்கலாமே" என்கிறார். விடாகண்டனான முதலீடாளர் "இல்லை மிஸ்டர் அனில், இந்த முதலீட்டாளர் கூட்டத்தில் இருக்கும் மற்றையவர்கள் இந்த கேள்வியை கேட்க்க மாட்டார்கள், ஆனால் எனக்கு இது ஒரு முக்கியாமான கேள்வி" என்கிறார். "புரியல"ங்கிறார்  அனில். "ஏன்னா, நாங்கள் உங்கள் கம்பனியில் முதலீடு செய்ய உள்ளோம், கம்பனிக்கு பொறுப்பான நபர் அதற்குரிய தகுதியுடனும் ஆளுமையுடனும் உள்ள பொருத்தமான நபரா என அறிந்துகொள்வது நம் கடமை. உங்கள் ஃபிஸிகல் மற்றும் மெண்டல் ஃபிட்னஸ் எமக்கு முக்கியாமாக படுகிறது" என விளக்குகிறார் முதலீட்டாளர். 


வீடு வந்த அனில் கண்ணாடியின் முன் நின்று தனது உருவத்தை பார்க்கிறார். 105 கிலோ எடையுடன் தொப்பையும் ஊளை சதையுமாக பார்க்கவே சகிக்காமல் ஒரு உருவம். தன்னை, தனது லைப்ஸ்டைலை மாற்ற முடிவெடுக்கிறார். தனக்கென பிரத்தியேக பிட்னஸ் ட்ரெய்னர், டயடீசியன் நியமித்துக்கொள்கிறார். தினம் அதிகாலை 5.30 மணிக்கு ஏந்திரிக்கும் அனில், ஒன்னரை மணித்தியாலம் மும்பை வீதிகளில் ஜாகிங் ஓடுகிறார். ஒவ்வொரு வாரமும் சுமார் 100 கிலோ மீற்றருக்கும் அதிகமாக ஓடுகிறார். சிம்பிளான அதேசமயம் ஆரோக்கியமான சைவ உணவு உண்ணும் அனில் மது, சிகரட் தொடுவதில்லை(பெரும் பிசினெஸ்மேன், சாதா சோசியல் ட்ரிங்கராக கூட இல்லாமல் இருப்பது உண்மையிலேயே சாதனைதான்). சில மாதங்களிலேயே தனது எடையை 70 கிலோவுக்குள் கொண்டு வருகிறார். அதனை பல வருடங்களாக மெயின்டெயின் செய்கிறார். மும்பையில் நடைபெறும் மாரத்தான் போட்டிகளில் ஆர்வமுடன் கலந்துகொள்கிறார் (மேலே கருப்பு உடையுடன் இருப்பது இந்த வருடம்,2014, தனது 55வது வயதில் மும்பையில் ஸ்டேண்டர்ட் சார்டட் மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்ட பொழுது எடுத்த போட்டோ). இங்கு சிலருக்கு முப்பது வயதிலேயே மூச்சு வாங்கும்போது இந்த வயதில் மாரத்தான் ஓடுவதும் சாதனைதான். மேலும், போலோ, நீச்சல் போன்ற இன்ன பிற விளையாட்டுகளிலும் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்.

55 வயதிலும் செமஃபிட்டாக உள்ள இந்த பிஸ்னெஸ் மேக்னட்  தனது இந்த ஃபிட்னஸ் வாழ்கை முறை தனக்கு உயர் ஸெல்ப் செடிஸ்ஃபெக்ஷனை தருவதாகவும், தனது ஆளுமைகளை கட்டமைத்துகொள்ள உதவுதாகவும், சிறப்பான மெண்டல் ஃபிட்னஸ்ஸை தருவதாகவும், தனது முதலீட்டாளர்கள், பணியாட்கள், மற்றும் குடும்பத்தினர் மத்தியில்  தன்னை பற்றிய சிறப்பான கண்ணோட்டம் உண்டாகுவதற்கு உதவுதாகவும் கூறுகிறார்.


 பின்குறிப்பு: இப்போ தலைப்பு "அம்பானியாய் வாழ்வது எப்படி?க்கு வருவோம். உங்களுக்கும் அம்பானி போல வாழனும்னு ஆசை, ஆனா பணம் இல்லை! அட, மணி கம்ஸ் டுடே கோஸ் டுமாரோவ். மனசு இருந்தா போதுங்க! நமக்குன்னு பிட்னஸ் ட்ரெய்னர், டயடீசியன் வச்சிக்க முடியலைன்னாலும் பரவாயில்லை. இணையம் முழுக்க பல கட்டுரைகள் இருக்கின்றன. அவற்றில் சரியானவற்றை தேடி பிடிங்க, முடியலையா, இந்த தொடரிலும் பதிவர் புட்டிபால் டிப்ஸ் தந்துதவுவாரு. அவற்றை பாலோவ் பண்ண முயற்சி செய்ங்க. கண்டிப்பா, நீங்களும் அம்பானி போன்று சிறந்த ஆளுமையாக வரலாம். வாழலாம்!

இந்த மோடிவேஷன் கதை பிரிவில் அடுத்து வருவது:
 • சூர்யா: ஃபிளாப் ஹீரோ டூ டாப் ஹீரோ
 • சமையல் சக்கரவர்த்தியும் பின்னே நானும்
இத்தொடரின் ஏனைய பதிவுகள்:

22 comments:

 1. ம்..இவங்க என்னையைவே மாத்திடுவாங்க போலிருக்கே!

  ReplyDelete
  Replies
  1. நீங்க இன்னுமா ஜிம்முக்கு கெளம்பல...

   Delete
 2. அம்பானி ஓடுற போட்டோவை விட உங்க எழுத்து நம்மை ஓட வச்சிரும் போலருக்கே.... (தப்பிச்சு ஓட அல்ல)... தொப்பையைக் குறைக்கணும்....

  ReplyDelete
  Replies
  1. ஆகா இதுல ஏதும் உள்குத்து இல்லையே.. ஓடுங்க ஸ்பை ஓடுங்க..

   Delete
 3. நல்லா எழுதி இருக்கீங்க மொ.ரா.. சிலர் பதிவுகளில் தான் பதிவெழுதுவதன் அர்ப்பணிப்பு இருக்கும்... தேடல் இருக்கும்... அவ்வகையில் ஆரம்பமே இது ஒரு சிறந்த (கிளைத்) தொடராகத்தான் தெரிகிறது.. சூப்பர்..


  என்ன தலைப்புதான் நம்மா வரலாற்றுச் சுவடுகளுக்குப் போட்டியா இருக்கு :-)

  ReplyDelete
  Replies
  1. நன்றி சீனு..ஆங்கிலத்தில் வாசித்த சில விடயங்களை தமிழ்படுத்தி எழுதும்போது ரொம்ப ராவா வெறும் ட்ரான்ஸ்லேஷனா இருந்துடகூடாதுன்னு கொஞ்சம் மெனகெடலுடன் எழுதினேன்..நல்லா இருந்தா சந்தோஷமே..

   Delete
  2. அப்புறம் தலைப்பில் இந்த பதிவுக்கு ஒரு தலைப்பும் வேணும், நம்ம ஃபிட்னஸ் தொடரும் வரணும், அப்புறம் மோடிவேஷனையும் சேர்த்துக்கனும்.. அதா, வரலாற்று சுவடுகள்ள பாதி வந்துருச்சு.. ஹீ ஹீ..

   Delete
 4. அட்டகாசமான ஆரம்பம்.. அம்பானியைப்பற்றி வேற ஒரு கோணத்தில் பார்க்கிறோம்... வாழ்த்துக்கள் ... தொடருங்கள் நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. நன்றி பாஸ்! தொடரலாம்!

   Delete
 5. இது இந்த தொடரின் முன்னோட்டதுக்கு முந்தைய பதிவில் நானிட்ட கமெண்ட் தான்,இதையே இத்தொடர் முழுமைக்கும் டெம்ப்ளேட் கமெண்ட்டாக அங்கீகரித்து விடலாம் போலிருக்கு,ஒரே ஒரு விதியை சேர்த்து -பதிவு முழுமையாக படித்து மட்டுமே அந்த கமெண்டை பயன்படுத்த வேண்டும்

  நல்லாருப்போம்,நல்லாருப்போம் எல்லாரும் நல்லாருப்போம்:)

  ReplyDelete
  Replies
  1. நீங்க தோதிகா ஃபேனா! :-)

   Delete
 6. தலைப்பையே ரெல்லிங் mistake ஆ படிச்சிட்டேன் (தமிழிலில் ஒரு பிஸ்னெஸ் தொடர் ) ... முழுப் பதிவையும் படித்து முடித்து கடைசி டிப்ஸ் படிச்சதும் தான் விளங்குச்சி தமிழில் ஒரு பிட்னெஸ் தொடர் எண்டு .....

  பதிவு அருமை ....சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. அடீங்...............!

   Delete
  2. எப்புடியோ, மேட்டர் புரியுதுதானே! அப்ப ஓகே!

   Delete
 7. அருமை!இதைப் பாத்தாச்சும்..........................!(நான் வெறும் 55 K .G .தான்)

  ReplyDelete
  Replies
  1. "மூணு "(இ)லக்கத்த தாண்டிட்டு என்ன செய்யன்னு தெரியாம இருக்கறவுங்க மத்தியில "LKG","UKG "மாதிரி "55KG" ன்னு ரொம்ப கொறவா வந்து வெறுப்பேத்தாத(தீங்க). கடிச்சு வைக்கறதுக்குள்ள ஓடிப் போயிரு(ங்க).

   Delete
  2. ம்.........................என்ன பண்ணலாம்?பேசாம,மொ.ரா. மாமா சொன்னத மெயிண்டைன் பண்ணுங்க,வாழ்க்க நல்லாருக்கும்!ஹ!ஹ!!ஹா!!!ஹி!ஹி!!ஹீ!!!

   Delete
  3. வாங்க ஐயா! வணக்கம்! நலமா! உடற்பயிற்சி செய்றீங்களா?

   Delete
 8. கடந்த பாகங்களை வாசிக்காம விட்டுட்டேன்.. இதோ இந்த கதை மூலமா பிரஷ் ஆயிட்டேன்.. பிட்னஸ் தொடரை வாசிக்க போறேன்..

  ReplyDelete
  Replies
  1. நீங்க கண்டிப்பா படிக்க வேண்டிய தொடர் இது தமிழ்வாசி! உங்க சமீப போட்டோஸ் பார்த்ததன் பின் தோன்றியது!

   Delete

உங்கள் கருத்துக்கள்!!