Sunday, August 7, 2011

வேலாயுதம் சுட்ட படமா? சுடாத படமா?

இன்னிக்கு டேட்டுக்கு தமிழ் நாட்டுல இருக்குற அத்தன பேருக்கும் இருக்கும் பெரிய கேள்வி இதுதான். அதாவது வேலாயுதம் சுட்ட படமா? இல்ல  சுடாத படமா?னு(எவன்டா சொன்னது, எங்களுக்கு எல்லாம் வேற வேல இல்லன்னு நெனச்சியா? அப்புடின்னு கேக்காதீங்க). ஒவ்வொரு பத்திரிகையாளர்களும்  ஒவ்வொரு மாதிரி எழுதிகிட்டு இருக்காங்க. சிலர் ஆசாத் படத்தோட ரீமேக் அப்புடிங்குறாங்க. இன்னும் சிலர்  இல்ல இல்ல இது Assassin's Creed வீடியோ கேம்மின் அப்பட்டமான காபினு சொல்றாங்க. என்னடா நடக்குது இங்கன்னு யோசிச்சி யோசிச்சே மண்ட காஞ்சி போயி ஒக்காந்து இருக்குறப்போதான் நேத்து குமுதம் கண்ணுல பட்டுச்சு. அதுல டைரக்டர் ராஜாவோட ஒரு பெரிய பேட்டி. அந்த பேட்டிய அப்புடியே காபி பண்ணி போடுறதுக்கு பதிவு ஒலகத்துல நிறைய பேர் இருக்காங்க, நமக்கு எதுக்கு வேண்டாத வேல? ஆனா அதுல ஒரு  முக்கியமான பதில மட்டும் இங்க தர்றோம்.

ஆசாத் என்கிற தெலுங்குப் படத்தின் ரீமேக்தான் இது என்கிற சர்ச்சை பரவுதே...

‘‘நேர்மையா சொல்லணும்னா அந்தப் படத்தின் கதையை பணம் கொடுத்து வாங்கிவிட்டோம். மையப்புள்ளியை வெச்சுக்கிட்டு புதுசா சீன்களை எழுதி விஜய்க்காக இன்னும்  அழகா மெருகேற்றியி ருக்கோமே தவிர அந்த படத்தை அப்படியே எடுக்கலை. 15 வருஷத்துக்கு முன்னால வந்த அந்தப் படத்தை இப்ப பார்க்க முடியாது. திரு ப்பதிசாமியின் மூலக்கதை என்பதை மறுக்கல. நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்னு விஜய் சார் என்னைக் கூப்பிட்டு பேசினப்ப ரெண்டு பேருக்கும் பொதுவான ஒரு  கதையாயிருந்தால் ஈஸியா இருக்குமேன்னுதான் இந்த ஐடியா பண்ணினோம். ஆறு படம் எடுத்த எனக்கு ஏழாவதா ஒரு படம் எடுக்கத் தெரியாதா?’’


வர்றே  வா.. இதுதாண்டா பதில். என்னா ஒரு பதில்?அதாவது அந்த படத்த தழுவிதான் நா படம் எடுக்க்குறேன்னு நேர்மையா ஒத்துக்கிட்டு இருக்காரு , ராஜா M. 


இங்கிலிஸ் படத்த சீன் பை சீன் காப்பி பண்ணிட்டு ஒம்போது வருசமா நா ஒக்காந்து யோசிச்சு எழுதுனேன்னு ஒரு டைரக்டர் சொல்றாரு, அந்த இங்கிலீஸ் படத்துல நடிச்ச நடிகர பார்த்து அப்புடியே காபி அடிச்சிட்டு  எனக்கு இந்த படத்துக்கு தேசிய விருது கெடச்சா சந்தோசம்னு ஒரு நடிகர் சொல்றாரு. இவிங்க எல்லாம் நேர்மையே இல்லாம அலையுற இதே கோடம்பாக்கத்தில் இப்புடி ரெண்டு நல்லவுங்களா? னு நாம அப்புடியே  அதிர்ச்சி அடஞ்சிட்டோம் (நம்ம தளபதியும் ராஜா M உம் தானுங்க.).

பட் விஜய் & ராஜா M. ஒங்க நேர்ம எங்களுக்கு புடிச்சிருக்கு!!!

டிஸ்கி: Santhanam fanz எதுக்கு ஒங்களுக்கு இதுன்னு நீங்க கேக்குறீங்க. இதுக்கும்  நமக்கு  சம்பந்தம் இருக்கு. அந்த படத்துல சந்தானம் ஒரு முக்கிய ரோல்ல நடிச்சிருக்காரு (அது அப்புடியே ப்ரெஷ் ஸ்கிரிப்ட்) அதுக்கும் மேல நம்ம பழைய பதிவுகள பார்த்துட்டு நாங்க எதோ விஜய்க்கு எதிரானவர்கள்னு நெறய பேர் நெனசிட்டாங்க( அடேய் அடேய் ஏன்டா புளுகுற, இது ஓவர் ) சோ நாங்க அப்புடி இல்ல நடுநிலையாளர்கள்னு ஜஸ்டிபை பண்றதுக்கும் சேர்த்துதான் இந்த போஸ்ட்.

2 comments:

  1. ராஜாவோட நேர்மை எனக்கும் பிடிச்சிருக்கு.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்!!