ஒரு வாரமா எஸ்கேப் ஆகிட்டு இருந்த நான் போன வெள்ளிக்கிழமை நண்பர் ஒருவரின் வற்புறுத்தல் காரணமாக மாற்றான் படம் பார்க்கவேண்டிய துர்பாக்கிய நிலைமைக்கு ஆளானேன். நான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம் என்னும் நல் எண்ணத்தில் கொஞ்சம் லேட்டா மாற்றான் பற்றிய எனது பார்வை இதோ உங்களுக்காக (சாவுடா...)
மாற்றான் படம் பற்றி ஒரு வரியில் சொல்லனும்னா.....
முதல் பாதி முற்று முழுதாக சூர்யா ரசிகர்களுக்கான விருந்து. இன்டர்வலுக்கு 10 நிமிடம் முதல் இருந்து இண்டர்வலுக்கு அப்புறம் வரும் 10 நிமிடங்கள் பேமிலி ஆடியன்சுக்காக. அதுக்கப்புறம் வருவது எல்லாம், இனிமேலும் இதுமாதிரியெல்லாம் படம் பார்க்க வருவீங்காளான்னு, வந்த எல்லாருக்கும் சேர்த்து எலிக்கடி ட்ரீட்மென்ட்.
சூர்யா நல்லா நடிக்கறாரு, எந்த ரோல் குடுத்தாலும் நடிக்கரான்டான்னு தெரியாமா அசால்டா நடிக்கறாரு. ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக பாடல் காட்சி, சண்டை காட்ச்சி அவுங்களுக்குள்ளேயே கட்டிப் புரண்டு சண்ட போடுறதுன்னு எதைக் குடுத்தாலும் கான்வின்சிங்கா பண்னறாரு, ஆனா அந்த ஒரே காரணுத்துக்காக அவர வச்சு இந்த இயக்குனர்கள் பண்ணற பரிசோதனையில செத்த எலி மாதிரி ஆகுறது அவரு மட்டுமில்ல, படம் பார்க்க போற நாமளும்தான்.
ஜெனெடிக் இன்ஜினியரிங், GM foods, விளையாட்டு வீரர்கள் ஊக்கமருந்து பாவிக்கறது, முடிக்கப்படாத விஞ்ஞான ஆராய்ச்சிகள பணம் சம்பாதிக்கரதுக்காக பாவிக்கறது, ரெட்டை சகோதரர்கள் போட்டி, பாசம் அது இது என ஒரு ஆயிரம் விசயத்த படத்துல சேர்த்து "என்னங்கடா உங்க கத?" ன்னு நம்மள மண்ணடைய பிச்சுக்க விட்டிருக்காரு இயக்குனர். எப்பவுமே இந்த "சராசரிகளுக்கான சராசரி சினிமாவுல" (உபயம் பிலாசபி) லாஜிக்கோ, விவாத கருவோ, கொள்கையோ பார்க்காத நமக்கு இந்த மசாலாவ எப்படி பரிமாறி இருக்காங்கன்னு பார்த்தா, கொஞ்சம் குழப்பம்தான் மிஞ்சுது. எது பிரதான கதைங்கற குழப்பம் நம்மள விட ஆனந்துக்கு அதிகமா இருந்திருக்கும்ன்னு தோணுது. ரெண்டாம் பாதி எனக்கு என்னமோ அயன் படத்த மறுபடியும் (ரீவைண்ட் காட்சிகள் இல்லாம) பார்குற பீலிங் தான். என்ன ஒரு வித்தியாசம் அது போர் அடிக்க முதல் முடிஞ்சிடுது, இது போர் அடிச்சு, போதை ஏறி, அப்புறம் அது தெளிஞ்சதுக்கப்புரமும் ஓடிக்கிட்டு இருக்கு.
விசுவல் எபெக்ட், கிராபிக்ஸ் டிப்பார்ட்மென்ட் நல்லாவே வேலை செஞ்சி இருக்காங்க, ஒரு ரெண்டு காட்சிகள் தவிர ஒட்டு வேலைப்பாடு வெளியில தெரியல. (தசாவதாரம் க்ளைமாக்ஸ் சண்டை காட்சி எடுத்தவங்க கிட்ட கொஞ்சம் அட்வைஸ் கேட்டிருக்கலாம்). கஷ்டமான முதல் பாதி பாஸ் மார்க் வாங்குறதுக்கு முழுக்காரணமும் இந்த டீமும் சூர்யாவும்தான். ஹாரிஸ் ஜெயராஜ் கொஞ்சம் மெருகேறி இருக்காரு, வேகத்தடையா பாட்டுக்கள் இல்லை, பின்னணி இசை ஓகே. அந்த க்ளைமாக்ஸ் டங்கு டப்பா மியூசிக் தவிர. (அண்ணே ரஹ்மான் சிவாஜி படத்துக்கு அந்த இன்கம் டாக்ஸ் சீனுக்கு அந்த ம்யூசிக் போட்டாருன்னு நீங்க அயன்ல போட்டீங்க ஓகே, இன்னும் விடாம கண்டினியு பண்றீங்களே ஏன்?). மற்றும் படி ஹாரிஸ் படத்துக்கு ஒரு பிளஸ் தான். ஒளிப்பதிவாளர் திறமையானவர்தான், இரட்டையர் காட்சிகள், தீயே தீயே பாடல் இன்னும் பல கஷ்டமான இடங்களில் லைட் மாட்ச்சிங், கலர் மாட்சிங், இன்னும் இதர விதரங்கள் எல்லாம் பக்காவா இருக்கு, அவரால முடிந்த அளவு கேரி பண்ணி இருக்காரு, ஆனா பல இடங்களில் குருவி தலையில பனங்காய வச்சது தெளிவா தெரியுது. கஷ்டமான இடங்களில் ஸ்கோர் பண்ணறவரு லேசான இடங்களில், குறிப்பாக ஒத்த சூர்யா வரும் லாங் ஷாட்களில் (கால் முளைத்த பூவே பாடல்) கோட்டை விட்டிருக்கார். எல்லாமே அவுட் ஆப் போகஸ்.
இயக்குனர் பல இடங்களில் ப்ரீ பிளானிங்ல அசத்தி இருக்காரு, நிறைய கஷ்டமான ஷாட் எல்லாம் யோசிச்சது மட்டுமில்லாம அத எப்படி திரையில கொண்டுவரலாம்ன்னு ரொம்பவே மெனக்கெட்டு இருக்காரு. அதுக்கு கண்டிப்பா பாராட்டுக்கள். ஆனா போஸ்ட் ப்ரோடக்ஷன்ல கோட்டை விட்டுட்டாரு. படம் ரப்பர் மாதிரி இழுவையா இருக்கறது கொஞ்சம் கூடவா உங்க கண்ணுக்கு படல சார்? (படம் திரைக்கு வரும் முன் ஒரு முழு படமா தேவையான காட்சி எது தேவையில்லாத காட்சி எதுன்னு பார்க்காம படம் ரிலீஸ் பண்ணி விமர்சனம் பார்த்துட்டு ட்ரிம் பண்றதுன்னா நீங்க எதுக்கு, எடிட்டர் ஒருத்தரே போதுமே). சூர்யா இல்லாம படத்துல வரும் காட்சிகளில் சச்சின் கடேக்கார் காட்சிகள் தவிர வேறு எதுவுமே கான்வின்சிங்கா இல்லை, எல்லாமே ரெண்டாம்பு பசங்க ஸ்டேஜ் டிராமா போட்ட கணக்கா செயற்கையா ஒட்டாம இருக்கு. இதனால்தான் சூர்யா நோ சொல்லியிருந்தா இந்த படத்த பண்ணி இருக்கமாட்டேன்னு சொன்னீங்களா? (நானும் எதோ இப்போ அதுதான் பாஷன், அதனாலதான் சொல்றீங்கன்னு நினைச்சேன்).
காஜல் அகர்வால், ரொம்ப குண்டாகி, வயசாகி ஆன்டி மாதிரி இருக்கா. டிரெஸ்ஸிங் சென்ஸ் கொஞ்சம் கூட சரி இல்ல, இன்னும் ஸ்டாண்டர்ட் எக்ஸ்பிரஷன்ஸ் எதையுமே மாத்தல. செம பிகரா இருக்கப்போ தெலுங்கு படமா நடிச்சிட்டு மொக்க ஆன்டியா ஆனதுக்கப்புறம் மட்டும் ஏந்தான் தமிழ் படம் நடிக்க வாராங்கன்னு தெரியல. (இந்த பொண்ணுக்காக நான் டார்லிங், பிருந்தாவனம், சாந்தமாமா, ஆர்யா 2 ன்னு பல தெலுங்குப்படம் பார்த்தேன்னு வெளியில சொன்னா என்ன கேவலமா பார்க்க மாட்டாங்களா?)
காஜல் அகர்வால், ரொம்ப குண்டாகி, வயசாகி ஆன்டி மாதிரி இருக்கா. டிரெஸ்ஸிங் சென்ஸ் கொஞ்சம் கூட சரி இல்ல, இன்னும் ஸ்டாண்டர்ட் எக்ஸ்பிரஷன்ஸ் எதையுமே மாத்தல. செம பிகரா இருக்கப்போ தெலுங்கு படமா நடிச்சிட்டு மொக்க ஆன்டியா ஆனதுக்கப்புறம் மட்டும் ஏந்தான் தமிழ் படம் நடிக்க வாராங்கன்னு தெரியல. (இந்த பொண்ணுக்காக நான் டார்லிங், பிருந்தாவனம், சாந்தமாமா, ஆர்யா 2 ன்னு பல தெலுங்குப்படம் பார்த்தேன்னு வெளியில சொன்னா என்ன கேவலமா பார்க்க மாட்டாங்களா?)
சூர்யா, எத்தன நாளைக்குத்தான் இவரு நல்லா நடிகாராருன்னு மட்டுமே சொல்லிக்கிட்டு இருக்கறது. அகிலன் கரெக்டர் செம, முன்பாதியில ரொம்ப கான்வின்சிங்கா அகிலன், விமலன்னு வித்தியாசம் காட்டின நீங்க ஏன் ரெண்டாவது பாதியில கோட்ட விட்டுட்டீங்க? அகிலன் மட்டும் உசிரோட இருந்தா படம் முழுக்க நீங்க அகிலன தானே கொன்டினியு பண்ணியிருக்கணும் அது ஏன் பாதியில விமலனா மாறி, அப்புறம் சூர்யாவா மாறிடுது? ஒரே ஆள்தான் மிச்சமிருக்கான் எப்படி பண்ணினாலும் ஒண்ணுதான்னு நினைச்சிட்டீங்களா?
திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி, படத்துல இருக்கற படு மொக்க காட்சிகள் இல்லாம பண்ணியிருந்தா ஒரு ஜாலியான சினிமா கெடச்சிருக்கும். படத்தோட மெயின் கதை என்னாதுங்குற குழப்பத்துனால பல நல்ல காட்சிகள் இருந்தும் வீரியம் இல்லாம இருக்கு. தேவையே இல்லாத பல மொக்க காட்சிகளுக்கு அதிக நேரம் செலவழிக்கப்பட்டு இருக்கு. அதெல்லாம் தவிர்த்து விட்டு பார்பதா இருந்தா படம் ஓகே. (ஒரு வேளை அந்த 23 நிமிஷம் ட்ரிம் பண்ணின புதிய படம் ஓகே வா இருக்கலாம்).
மற்றும் படி மொக்க படம் கெடயாது, சூப்பர் படமும் கெடயாது.
நம்ம ரேட்டிங்: 6/10.
டிஸ்கி: மெயின் ஸ்ட்ரீம் படங்கள்ல கதை என்கிற வஸ்துவ தேடுற கெட்ட பழக்கம் இல்லாததனால அத பத்தி எதுவும் பேச தேவையில்லைன்னு நினைக்கிறேன். படம் ரொம்ப நீளமா இருக்கறது எடிட்டர் தவறா, இயக்குனர் தவறான்னு தெரியல அதனால எடிட்டிங் பத்தியும் பேசல.
டிஸ்கி: கொடுத்த காசுக்கு படம் நஷ்டமில்ல. சூர்யா, டெக்னாலஜி, விசுவலைஷேஷனுக்காக ஒரு வாட்டி பார்க்க வேண்டிய படம், DVDல பார்க்குறது பெட்டர், போர்வார்ட் பட்டன் கைல இருக்கும்ல.
தொடர்புடைய பதிவுகள்
சூர்யா என்கிற சரவணன்: பிறந்தநாள் ஸ்பெஷல் பதிவு
குள்ளப்பயலும் அவனது குள்ள நரித்தனமும்: ஒரு குட்டி கதை
சூர்யாவின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி: ஒரு பார்வை
////காஜல் அகர்வால், ரொம்ப குண்டாகி, வயசாகி ஆன்டி மாதிரி இருக்கா. டிரெஸ்ஸிங் சென்ஸ் கொஞ்சம் கூட சரி இல்ல, இன்னும் ஸ்டாண்டர்ட் எக்ஸ்பிரஷன்ஸ் எதையுமே மாத்தல. செம பிகரா இருக்கப்போ தெலுங்கு படமா நடிச்சிட்டு மொக்க ஆன்டியா ஆனதுக்கப்புறம் மட்டும் ஏந்தான் தமிழ் படம் நடிக்க வாராங்கன்னு தெரியல. (இந்த பொண்ணுக்காக நான் டார்லிங், பிருந்தாவனம், சாந்தமாமா, ஆர்யா 2 ன்னு பல தெலுங்குப்படம் பார்த்தேன்னு வெளியில சொன்னா என்ன கேவலமா பார்க்க மாட்டாங்களா?)////ஹி.ஹி.ஹி.ஹி......
ReplyDeleteஹி.ஹி.ஹி.ஹி...........என் இனம் பாஸ் நீங்க
ஓ.. நல்லா தெரியுமே... காஜலுக்கு கொலு வச்சவராச்சே நீங்க...
Deleteசூர்யா தன் மார்க்கெட்டை தானே காலிபண்ணிடுவார் போல
ReplyDeleteஅவரு பன்றாரோ இல்லையோ, இந்த ரவி குமார், முருகதாஸ், கே வீ ஆனந்த் எல்லாருமே சேர்ந்து பண்ணிடுவாங்க போல இருக்கு.
Delete//DVDல பார்க்குறது பெட்டர், போர்வார்ட் பட்டன் கைல இருக்கும்ல.//
ReplyDeleteஎன் மைண்ட் வாய்ஸ கேட்ச் பண்ணிட்டீங்க டாக்டர். தண்டமா 300ரூவா அழமுடியாது. பேசாம 50ரூவாயோட மேட்டர முடிச்சிக்க வேண்டியது தான். :)
குடுக்கற காசுக்கு நஷ்டமில்ல படம், பட் நீங்க தேட்டர் போயி செலவளிக்கற நேரத்துக்கு படம் வோர்தான்னு தெரியல.
Deleteநேர்மையான விமர்சனம். நான் படித்ததில் உங்க விமர்சனம் மட்டும் தான் உண்மையாக இருக்கு. இரண்டாம் பாதி பல காட்சிகள் தவிர்த்து படம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. நிறைய பேர் சொல்லுவது போல் பார்க்க கூடாதா படம் இல்லை இது..
ReplyDeleteஎனக்கும் படம் பிடிச்சிருந்தது, ஆனா உண்மைய சொல்லி ஆகணும்ல...
Deleteஅதிகமான எதிர் பார்ப்புகள் சில சமயம் படத்தின் நியாயமான வெற்றியை பறித்து விடுகிறது.
ReplyDeleteTamil Advertisements
நீங்க சொல்றதும் சரிதான்,
Delete