வாழ்க்கைல எப்பவுமே நாங்க நினைக்கிற விடயங்களுக்கும், ஆனா உண்மையா நமக்கு நடக்குற விடயங்களுக்கும் இடையில் பாரியளவிலான வித்தியாசங்கள் இருக்கும் . அது போன்ற சில விடயங்களின் தொகுப்பே இப்பதிவு.....
1. நாங்க யாருன்னா: யாரவது ஒரு பிரபல நடிகரின் அதி தீவிர ரசிகர்கள்.
மேட்டர் என்னன்னா: நம்ம தலீவர் சமீபத்துல நடிச்ச எல்லா படங்களும் படு-மொக்கை படு-தோல்வி படங்கள். நம்ம தலீவர் அடுத்த தீபாவளிக்கோ, பொங்கலுக்கோ ஒரு படத்துல தீவிரமா(!!) நடிச்சிகிட்டு
இருப்பாரு. ஒலக மகா டைரக்டர் அந்த படத்த எடுத்துகிட்டு இருப்பாரு. அந்த படத்தோட புரோட்யூசர்
படத்துக்கு செமையா பில்டப் குடுத்து ப்ரோமோஷன் பண்ணிக்கிட்டு இருப்பாரு.
நாங்க நினைப்பது என்னன்னா: இந்த படம் மட்டும் வரட்டும், நம்ம தலீவர் ரேஞ்ஜே மாறபோகுது. கோலிவுட்ல நம்ம தலீவர்க்கு இருக்குற அத்தன போட்டி நடிகர்களும் ஒட்டுமொத்தமா ஒம்போது நாளைக்கு கக்கூஸே கதின்னு கழிச்சிகிட்டு இருக்க போறங்கெ. எந்திரன், 3-இடியட்ஸ்ன்னு அத்தன பட கலெக்ஷன் ரெக்கார்ட்ஸையும் நம்ம தலீவர் படம் ஒரே வாரத்துல பீட் பண்ணிரும். இந்த படத்துக்கு பிறகு தலிவர்க்கும் அரசியல்ல ஒரு நிலையான இடம் கெடைச்சிடும். நாங்களும் பொண்டாட்டி கொழந்த குட்டின்னு அப்புடியே செட்டில் ஆயிடலாம்.
ஆனா நடப்பது என்னன்னா: இதுக்கு முன்னாடி நம்ம தலிவர் நடிச்ச அந்த நாலு படு-மொக்கை படு-தோல்வி படங்களும் எவ்வளவோ மேல். இந்த புது படம் அந்த நாலத்தயும் விட படு மொக்கையா, படு கேவலமா, நாறத்தனமா இருக்கும்.
*************************************************
2. நாங்க யாருன்னா: சாப்ட்டுவேரு புடுங்குற கம்பேனிலயோ இல்ல அது மாதிரி வேற எதாவது ஒக்காந்துகிட்டே வேலை செய்ற 27,28+ வயசு இளைஞர்கள்.
மேட்டர் என்னன்னா: நாம ஒக்கந்துகிட்டே வேல செய்றோமா, அப்புறம் தினம் நாலு வேளை புல் மீல்சும் , இடையிடையில ஸ்னேக்ஸும் திங்கிறோமா, இப்ப நமக்கு லேசா இள-தொந்தி(தொப்பை) வந்துருக்கு.
நாங்க நினைப்பது என்னன்னா: இந்த தொந்திய குறைக்கிறதுக்காக (மறைக்கிறதுக்காக) ஒலகத்துல இருக்குற அத்தன தில்லாலங்கடி வேலையையும் செய்வோம். காத்தாலயே ஜாகிங், வாக்கிங் போக ட்ரை பண்ணுவோம். கம்பெனில ஜிம் இருந்தா அதுக்கு போகயும் ட்ரை பண்ணுவோம். பக்கத்து தெருல இருக்குற சூப்பர் மார்க்கட்டுக்கு நடந்தே போவோம். அப்புடி நடந்து போனா, நம்ம தொந்தி அடுத்த நாளே கரைஞ்சிடும்னு நெனச்சுப்போம். பிரபல சேனல்கள்ள மிட் நைட்ல போடுற டெலி-பை புரோகிராம்ஸ எல்லாம் ஒன்னு விடாம பார்த்து அதுல சொல்ற நம்ம பட்ஜெட்டுக்கு ஏத்த எக்ஸர்ஸைஸ் ஈக்விப்மென்ட எல்லாம் வாங்கிருவோம். அப்புடி அதுல எக்ஸேர்ஸைஸ் செஞ்சா ஒரே மாசத்துல சல்மான்கானுக்கு போட்டியா சிக்ஸ் பேக்ஸ்கோ, இல்ல அமீர்கானுக்கு போட்டியா எயிட் பேக்ஸ்கோ கொண்டுவந்துரலாம்ன்னு நெனச்சிக்கிட்டு இருப்போம். எக்ஸேர்ஸைஸ் செஞ்சி முடிச்சிட்டு யாரும் இல்லாதப்போ, கண்ணாடி முன்னாடி ஷர்ட்ட தூக்கி தொந்திய அளந்து பார்போம். 2mm கொரஞ்சிருக்குன்னு நெனச்சுப்போம்.
ஆனா நடப்பது என்னன்னா: மேல சொன்ன ட்ரை பண்ணுற சமாச்சாரங்க எல்லாம் ட்ரை பண்ற லெவல்ல தாண்டியே இருக்காது. வாங்கிபோட்ட எக்ஸேர்ஸைஸ் ஈக்விப்மென்ட்ஸ நம்ம வீட்டு பொம்மனாட்டிக துணி காய போடுறதுக்கு யூஸ் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. நாங்க 35+ வயசுல "ஜி" படத்துல வர்ற தல-ய மாதிரி ஆகுறதையும் , 45+ வயசுல தமிழ்நாட்டு போலீஸ்ல சேர்றதுக்கான தகுதிகள உருவாக்கிக்கிறதயும் யாராலுமே தடுக்க முடியாது.
*************************************************
3. நாங்க யாருன்னா: தொழில் செய்துகொண்டே பதிவெழுதும் பதிவர்கள்
மேட்டர் என்னன்னா: நம்ம ஆபிஸ்ல நமக்கு மேல இருக்குற மேனேஜர்/சூப்பர்வைசர்/ஹெட்னுன்னு யாராவது ஒரு மேலதிகாரி இந்த வாரத்துக்குள்ள முடிக்க சொல்லி நமக்கு பல ப்ராஜக்ட்ஸ் கொடுத்துருப்பாரு. எல்லா ப்ராஜக்ட்ஸ்க்கும் இன்னும் ரெண்டு நாள் டெட்லைனே இருக்கும். எப்புடிடா இத்தினி வேலையையும் ரெண்டே நாள்ல முடிக்கிறதுன்னு செம டென்ஷன்ல இருப்போம்.
நாங்க நினைப்பது என்னன்னா: இந்த டென்ஷன எல்லாம் குறைக்கிரதுக்கு ஒரு செம காமெடி பதிவு எழுதுனா மனசு ரிலாக்ஸ் ஆகிடும்னு நெனச்சிப்போம். தமிழில் சமகாலத்தில் பதிவெழுதும் தலைச்சிறந்த பின்நவீனத்துவவாதியான நம்மளோட பதிவுகள் ஏதும் சமீபத்துல வரலையேன்னு நமது வாசககோடிகள் பீல் பணிகிட்டு இருப்பாங்களே, அவங்கள திருப்தி படுத்துறதுக்காகயேனும் ஒரு செம காமெடி பதிவு போடனும்னு நினைப்போம். ஏற்கனவே பிரபல பதிவரா இருக்குற நாங்க, இந்த பதிவ மட்டும் பப்ளிஷ் பண்ணிட்டா, விக்ரமன் பட ஹீரோ மாதிரி ஒரே நைட்ல பத்து லட்சம் ஹிட்ஸ்ங்குற நம்ம டார்கெட்ட அச்சீவ் பண்ணி, கேபிள்,சி.பி,உ.த அண்ணாச்சிகள் எல்லாரையும் தாண்டி டாப் டென் தமிழ் பதிவர்கள்ள இடம்பிடிச்சிடலாம்ன்னு கன்போர்மா நெனச்சிப்போம்.
ஆனா நடப்பது என்னன்னா: நாங்க செம காமெடின்னு நெனச்சிட்டு எழுதுன போஸ்ட் வழக்கம் போலவே செம மொக்கையா இருக்கும். பதிவுலகத்துல நமக்கு தெரிஞ்ச , நம்ம மேல பரிதாப பட்டு வர்ற ஒன்னு ரெண்டு நண்பர்கள்ல தவிர வேற யாருமே நம்ம பிளாக் பக்கம் வந்துருக்க மாட்டாங்க. வழக்கம்போலவே இந்த போஸ்ட்டுக்கும் 200 ஹிட்ஸ்க்கு மேல வராது. ஏற்கனவே இருக்குற வேல டென்ஷன்+இந்த டென்ஷன்னு செம காண்டாகி கம்ப்யூடர் முன்னாடி உட்காந்து ஸ்க்ரீனையே வெறித்து பார்த்துகிட்டு இருப்போம். நாளைக்கு ஆபிஸ் போய் மேலதிகாரிக்கு என்னெல்லாம் பொய் சொல்லலாம்னு சீரியா ஒக்காந்து யோசிச்சிட்டு இருப்போம்.

தொடரலாம்....
காலை?வணக்கம்,மொ.ரா மாமா!விநாயகர் சதுர்த்தியும்,அதுவுமா செம "மொக்கைப்"பதிவு,ஹி!ஹி!ஹீ!!!!////டிஸ்கி: எங்குலச்சாமி பாடிகாட் முனூஸ்ரன் சத்தியமா இது அனுபவ பதிவு இல்லீங்.....................
ReplyDeleteதொடரலாம்./////க!!!!!!!!
வணக்கம் ஐயா.. நீங்க கமெண்ட் போட்டப்போ எனக்கு காலை வணக்கம், புட்டி பாலுக்கு இரவு வணக்கம்.. இப்பொ நானு ரிப்ளை போடுறப்போ எனக்கு இரவு வணக்கம், புட்டி பாலுக்கு காலை வணக்கம்... ஆமா உங்களுக்கு இப்போ எப்புடி?
Deleteஎனக்கு இப்ப இங்க காலை வணக்கம்!!!!!ஹ!ஹ!ஹா!!!!எப்பூடீ???????????????
Deleteமொத கமெண்டு காண்டாப் போட்டிருக்கேன்!ஒரு "மோதகம்"(முழுசா)கெடைக்குமா?????
ReplyDeleteமொதோ கமெண்ட்டு போட்டதுக்காக விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலா யோகா ஐயாவுக்கு ஒரு டசின் மோதகம் ப்பார்ஸ்ஸ்சேல்...
Deleteஉங்கள் பகிர்வுக்கு நன்றி..
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
அடபோங்க சார்...
DeleteROFL
ReplyDeletety
Deleteஇதனால் தாங்கள் சமூகத்துக்கு சொல்லவரும் நீதிதான் என்னவோ?
ReplyDeleteமொழி, கலை, பண்பாட்டு விழுமியங்களுடன் கூடிய ஒரு மாறுபட்ட சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது சாத்தியமா? என்பதை ஒரு நகை-குறியீட்டின் மூலம் வெளிபடுத்தியுள்ளோம்..
Deleteவெளங்கிரும்!
Deleteபின்ன? போன பதிவுல எங்க ரேஞ்சுக்கு எதோ ஒரு கருத்தோ சொல்ல ட்ரை பண்ணோம் .. யாருமே எதுமே கேட்க்கல..இப்ப, இது மொக்க பதிவ்வுன்னு சொல்லிட்டே போடுறோம், இங்க வந்து சண்முகத்துக்கு என்ன நீதி, கருத்து, மண்ணாங்கட்டின்னு?
Deleteஆனா , நீங்க எப்படி
ReplyDeleteநாங்க? இவ்வளவு வாசிச்சிட்டும் இந்த கேள்விய கேட்குறீங்களே, அந்த நேர்மை ரொம்ப புடிச்சிருக்கு...
Deleteநீங்க ஆக்ஷன் கிங் அர்ஜுன் விசிறியா?
ReplyDeleteHypothetical Question..
Delete