Friday, December 23, 2011

ஒரு விளக்கம், ஒரு வேண்டுகோள், ஒரு அறிவிப்பு:


ஒரு விளக்கம், ஒரு வேண்டுகோள், ஒரு அறிவிப்பு.........................

மொதல்ல உங்க எல்லாருகிட்டயும் மன்னிப்பு கேட்டுகுறோங்க. அதாவது முன்ன மாதிரி பிளாக்கிங்க்கு பெரிய அளவுல நேரம் ஒதுக்க முடியுதுல்லங்க. என்னடா எவன பார்த்தாலும் இதையே சொல்லிக்கிட்டு இருக்காங்க, ஒரு வேல இதையே ஒரு பிளாக்கிங் ட்ரென்டா  ஆக்க பார்க்குறாங்களோன்னு யோசிக்காதீங்க சத்தியமா உண்மைங்க. வருஷ  கடைசி நம்ம ரெண்டு பேருக்கும்  ஒரே கெடுபுடியான காலம், முன்ன மாதிரி வேளைக்கு பதிவு போட முடியறதும் இல்ல, பதிவுகள படிக்க முடியறதும் இல்ல. ஒவ்வொருநாளும்  ப்லோக்கருக்கு போயி டாஷ்போர்டுல வழமையா தொடர்ச்சியா  பதிவு போடுற  பதிவர்களின்(சி.பி, விக்கி, நாஞ்சில்,தமிழ்வாசி,நிருபன், மற்றும் பல நண்பர்கள்)  புதுசா வார பதிவுகள ஓபன் பண்ணி வச்சிட்டு, படிச்சு ஒட்டு கமெண்ட்டு போடலாம்னு பார்த்தா ஏதாச்சும் வேல வந்து தொலைக்கும். அப்புடியே ஒரு மாதிரியா பதிவுகள படிச்சு முடிச்சிட்டு கமெண்ட்டு போட ரிப்ரெஷ் பண்ணினா அங்க புதுசா ஒரு பதிவே ஒக்காந்து இருக்கும். அப்புறம் முடிஞ்சு போன கல்யாணத்துக்கு எதுக்கு மேளம் அடிக்கனும்ன்னு கமெண்டு போடாம வந்திடுவோம், அப்புறம் செங்கோவி அண்ணனோட ப்ளாகுக்கு போனா அவரு பதிவுகள காணவும் இல்ல,யாரு பதிவுலயும்  அவரு காமேண்டையும் காணவுமில்ல, தொடராத பதிவுகள்ன்னு ஒரு பதிவ போட்டுட்டு அவரும் வேலைல பிசியாகிட்டாரு போல.   பன்னிக்குட்டி அண்ணன ரெண்டு மாசமா இந்த ஏரியா பக்கமே காணல.இப்பத்தான் ஒரு வாரமா ஆக்டிவ்வா இருக்காரு போல,  அவரு கடைசி பதிவ கூட வாசிசாச்சு ஆனா இன்னும் மொய் வைக்கல.  கொஞ்ச நாளா இதேதான் நடக்குது, இதுக்கு எதாச்சு தீர்வு இருந்தா சொல்லுங்கப்பா. நம்ம ரெண்டு பேர்(புட்டிபால் அண்ட் மொக்கராசு மாமா) மேட்டர் என்னனா....புட்டிபாலுக்கு ஜனவரி எண்டுல அப்புடின்னு சொல்லியிருந்த ஒரு ப்ரோஜெக்டோட டெட்லயின திடீர்ன்னு ஜனவரி அஞ்சுன்னு மாத்திட்டாங்க, அதுக்காக மாஞ்சு மாஞ்சு வேல பார்த்துகிட்டு இருக்காரு. அப்புறம் மொக்கராசுக்கும் ஒரு வருசமா இழுத்தடிச்சிக்கிட்டு இருந்த ஒரு வேலைய முடிச்சே ஆக வேண்டிய கட்டாயம். கெளம்பிட்டாரு. அதனால இனிமே ஒரு ரெண்டு மூணு வாரத்துக்காவது  பதிவுலக பக்கம் நம்ம நடமாட்டம் சுத்தமா இல்லாம போனாலும் போயிடும். ஆனாலும் யாரும் நம்மள மறந்துட கூடாதேன்னுட்டு, முன்னொரு காலத்துல எழுதி கடைசி கட்ட திருத்தங்களுக்காக ட்ராப்டுல வச்சிருந்த ஒரு ரெண்டு பதிவுகள இந்த வருஷ கடைசிகுள்ள வலையேத்த முயற்சி பண்ணுறோம். அங்கங்க நெறைய தப்புகள் இருக்கும், தமிழ் பொறுக்குமா இல்ல தெரு பொறுக்குமான்னு தெரியல. குத்தம் குறைகளை மன்னிக்கவேண்டி மீண்டும்  கேட்டுக்கறோம்.


டிஸ்கி: யாருமே இல்லாத கிளாஸ்ல யாருக்குடா பாடம் நடத்துறீங்க? உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?ன்னு கேட்குறீங்களா? இல்லீங்க, ரெண்டு வாரமா பதிவே போடாட்டியும், எப்புடியும் ஒரு நாளைக்கு ஆவரேஜா 100 பேஜ் விவ்ஸாவது வருது. கண்டிப்பா அவுங்க என்ன எதிர் பார்த்து இங்க வர்றான்களோ அத கொடுக்க வேண்டியது நம்ம கடமை. வருஷ கடைசிகுள்ள அந்த டிராப்ட்ல இருக்குற ரெண்டு பதிவயும் போட்டுட்டு, 2012ல இருந்து புதுசா வர முயற்சி பண்ணுறோம்.

Friday, December 9, 2011

Transformers: Dark side of moon ஒரு தமிழ் சினிமாவாக இருந்திருந்தால்!

இந்த வருடம் ஜூன் மாதம் வெளிவந்த Tranformers 3 படம் பற்றி அறிந்திருப்பீர்கள். உலக அரங்கில் அதிக வசூல் பெற்ற படங்கள் வரிசையில் நான்காவது இடத்தில் இருக்கும் படம். முதல் மூன்று இடங்களில் இருப்பது அவதார், டைடானிக் மற்றும் ஹர்ரி போட்டர். படத்தின் நீளம் காரணமாகவும் இன்னும் சில குறைகள் காரணமாகவும் விமர்சன ரீதியாக வெற்றி பெறாத ஒரு படம். இந்த திரைப்படம் ஒரு தமிழ் படமாக இருந்திருந்தால் நமது விமர்சனம் எவ்வாறு இருந்திருக்கும் என ஒரு சிறு கற்பனை.


Transformers: அரை வேக்காடு. 

கோடி கோடியா பணத்த எப்படி குப்பையில கொட்டுறதுங்கறதுக்கு ஒரு சிறந்த உதாரணம் இந்த படம். சாதரணமான கார், ரேடியோ, லேப்டாப் போன்றவை ஜயன்ட் ரோபோட்ஸாக மாறினால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையை தவிர்த்து படத்தில் எதுவுமே ரசிக்கும்படியாக இல்லை. அதுவும் ஆடோபாட்சின் ஒரு தொழில்நுட்பத்தை கண்டறியவே மனிதனின் நிலாவுக்கான பயணம் நடந்தேறியது என்பது வரலாற்றை திரிப்பது. மனிதன் உண்மையில் நிலாவில் கால் வைத்தானா என்பதே விவாதத்துக்குரிய விடயமாக இருக்கும் போது கொஞ்சமும் அக்கறை அற்று இவ்வாறு சித்தரித்திருப்பது முட்டாள் தனத்தின் உச்சகட்டம். "ஸ்பேஸ் பிரிட்ஜ்" அப்பிடின்னு ஒன்னு, சார்பியல் தத்துவத்தின் வோர்ம்-ஹோல்ஸ்ல இருந்து அப்புடியே உருவியிருக்காங்க, இத பார்த்தப்போ சிரிக்கறதா இல்ல அழுறதான்னு தோனல. ஒரு விஞ்ஞான மாணவனா அது எவ்வளவு மொக்கைன்னு எனக்கு நல்லாவே தெரியும். இதுக்கு, முதல்பாகத்துல பென்டகனோட செக்யூரிட்டி பயர் வால்ல அஞ்சி நிமிசத்துல ஹாக் பண்றதா காட்டுறது எவ்வளவோ தேவல. ஒரு காட்சில லிங்கன் சிலைய உடைக்கிற மாதிரி காட்டியிருக்கறது தேசிய தலைவர்களுக்கு மிகப்பெரிய அவமதிப்பு. (இத கறுப்பின அமெரிக்கர்கள் மேல இயக்குனர் வச்சிருக்கற காழ்புணர்ச்சி, அரசியல் அவமதிப்பு அது இதுன்னு இன்னும் நிறைய விசயங்கள கோர்த்து போராட்ட லெவெலுக்கு கொண்டு போகனும்). நாலு பில்லர வச்சிக்கிட்டு, சென்டினல் ப்ரயிம் அவங்க நாகரீகத்துல ஐன்ஸ்டைன்னு சொல்றதுக்கு பதிலா பேசாம ஐன்ஸ்டைன தூக்குல போட்டிருக்கலாம்.


படம் முழுதும் அமெரிக்க மயம், அமெரிக்கர்கள்தான் உலகத்தையே காக்க பொறந்தவங்க மாதிரி பில்டப். தாங்கல. அதுலயும் மகா கொடும ஒரு காலேஜ் முடிச்ச பையன்  உலகத்தையே காப்பாத்துறது. ஏலியன் இனங்களுக்கு இடையில நடக்குற பிரபஞ்ச யுத்தத்த அசால்டா இவரு சமாளிக்கறதா சொல்றது பார்வையாளன முட்டாளாவே பாக்குற இயக்குனர்களின் மனப்பாங்கு. அவரு பண்றதா காட்ற ஆக்ஷன் காட்சிகள் லாஜிக் மீறலின் உச்சகட்டம். இன்னும் எத்தன நாளுக்கு இதையே பாக்க போறோம்? படத்தோட க்ளைமாக்ஸ்ல ஷாக் வேவ் வந்து ஒரு நகரத்தையே நாசப்படுத்துது, எவ்வளவு ரண களம் நடந்தாலும் அதுல எந்த கன ரக ஆயுதங்களும் இல்லாம சும்மா மாட்டிக்கிட்ட ஹீரோவுக்கோ, அவரோட கூட்டத்துக்கோ ஒண்ணுமே ஆகலியே அது எப்புடி? ஸ்பேஸ் ப்ரிட்ஜுக்கான கண்ட்ரோல் பில்லர சென்டினல் ப்ரயிம் ஒருவரால்தான் இயக்க முடியும்னு சொல்லிட்டு, க்ளைமாக்ஸ்ல வேறொருத்தர் இயக்குறாரு, இப்படி லாஜிக் மீரல்கள சொன்னா அதுவே தனி பதிவு போடுற அளவுக்கு வரும். ஒரு போலியான வரலாறா இருந்தாலும் எதோ பெரிசா சொல்லி தொடங்கின படம் க்ளைமாக்ஸ் அப்புடியே யூகிக்க கூடியதா இருக்குறது படத்துல உள்ள பெரிய்ய்ய குறை. படம் தொடங்கும்போதே தெரியும் அந்த சின்ன பையன் உலகத்தையே காப்பாத்த போறான்னு. அதுக்காக மூணு மணிநேரம் செலவழிச்சு படத்த பார்க்கணுமா?

அந்த சின்னப்பையன் நடிப்பு சகிக்கல, அவனுக்கெல்லாம் எவன்யா இந்த படத்துல நடிக்க சான்ஸ் கொடுத்தது? மேகன் பாக்ஸ தூக்கிட்டு ஒரு பிகர போட்டிருக்காங்க, சாயல்ல அப்புடியே காமரூன் டயஸ பாக்குறது மாதிரியே இருக்கு, கவர்ச்சி காட்றதா நெனச்சு அவ பண்ற கூத்துல நமக்கு வாந்திதான் வருது. மேகன் பாக்ஸ் எடத்துல வச்சு பார்த்தா கொமட்டிக்கிட்டு வருது. இயக்குனருக்கு என்ன ரசனையோ. படத்துல இருக்கற ஒரே ஒரு ஆறுதல் 3-D எபெக்ட் தான், ஆனா அதுக்காகவெல்லாம் தேட்டருக்கு போயி படம் பார்க்க முடியாது, திருட்டு VCD லதான் இந்த படம் பார்க்கணும். (3D எபெக்ட திருட்டு VCD ல எப்புடி பார்க்குறதுன்னு நீங்க கேள்வி கேக்க கூடாது, இவனுங்க படத்த எல்லாம் அப்புடி பார்க்குறதுதான் பொருத்தம்ன்னு கமெண்டு போடணும்) 

இவரு மூஞ்சிக்கு அவரைவிட ஒசரமான பிகரு கேக்குது.சிங்கம்டா நீ ...

மொத்தமா இது ஒரு சுத்த வேஸ்ட்டு படம், இத எடுத்தவன்தான் முட்டாள்னா இத பார்க்க போனவன் எல்லாரும் வடிகட்டின முட்டாள், அந்த படத்த பார்த்துட்டு அதுக்கு விமர்சனம் எழுதின புட்டிபால் உலக மகா முட்டாள். அப்புறம் அதஉட்காந்து இவ்வளவு நேரம் வாசிக்கிற நீங்க எல்லாம் ...............

அமெரிக்கர்கள் யாரும் இந்த படத்துக்கு ஏன் இப்புடி ஒரு விமர்சனம் இதுவரைக்கும் எழுதல்லன்னு யோசிச்சிட்டே இருந்தேன், திடீர்னுதான் தோணிச்சு, இந்த படத்த எடுத்தவங்க யாரும் நாங்க ஒரு மறைக்கப்பட்ட உண்மைய உலகுக்கு எடுத்து சொல்லியிருக்கோம்னோ, இந்த படத்த பார்த்தா உங்களுக்கு அமெரிக்கான்னு ஒரு திமிரு வரும்னு டிவில மணிக்கொருதரம் வந்து கூவல, இன்னொன்னு அமெரிக்க விமர்சகர்கள் விளம்பரத்த பார்த்துட்டு படத்துக்கு விமர்சனம் எழுதுறதும் இல்ல.

டிஸ்கி: சினிமா விமர்சனம் எழுதுறதுல நாலு வகை இருக்கு. ஒன்னு ஒரு படத்த பார்த்ததும் நம்ம மனசுக்கு பட்டத எழுதுறது. ரெண்டு நடுநிலையாகவே குறை நிறைகள சொல்றது, மூணு சினிமா இயக்குனர்கள் நடிகர்கள் எல்லாரும் முட்டாள்ன்னு நினைச்சு எழுதறது, நாலு தமிழ் சினிமா பாக்க போற ரசிகர்கள் எல்லாரும் முட்டாள்கள்ன்னு நினைச்சு எழுதறது. இது அஞ்சாவது வகை. 

ஆறுதல் பரிசு

இன்ஸ்பிரேசன்: இன்செப்சன் படம் பத்தி நம்ம நண்பர் ஒருத்தர் கூட பேசிக்கிட்டு இருந்தப்போ, படத்துல உள்ள திரைக்கதை ஒட்டைகள்ன்னு அவரு ஒரு பெரிய பட்டியலே போட்டாரு, அது முதல் இன்ஸ்பிரேசன். ரெண்டாவது, செங்கோவி அண்ணன், பழைய முதல் மரியாதைக்கு சமீபத்தில் விமர்சனம் எழுதியவர்.

Tuesday, November 29, 2011

காதலில் சொதப்புவது எப்புடி?

இந்த காதல் இருக்கே காதல், அது ஒரு வீணா போனதுங்க, காதல் இல்லாத ஒரு தமிழ் சினிமாவ பாக்க முடியாது, ஏன் இந்திய சினிமாவே கெடயாதுன்னு சொல்லலாம். இந்த உலகத்துல பிறந்த எல்லா ஜீவராசிகளும் பண்ணுற ஒன்றுதான் இந்த பாழாப்போன காதல். காதல்ன்னா என்னாங்குற டவுட்டே நமக்கு இன்னும் தீரல, ஆனா நெறைய காதல் பஞ்சாயத்து மட்டும் நம்ம கோர்ட்டுக்கு அடிக்கடி வருது. இதுல பஞ்சாயத்து பண்ணி மூக்க ஓடச்சுக்கரதுக்கு நாம என்ன விமலகாசனா, அதனால நம்ம நண்பர்கள் எல்லாருக்கும் சேர்த்து காதல்ல எப்புடி சொதப்புரதுன்னு ஒரு பதிவு போட்டு அவுங்க வாழ்க்கைல ஒளி ஏத்தி வைக்கலாம்ன்னு முடிவு பண்ணி எறங்குனதுதான் இந்த பதிவு.


காதல்ல சொதப்புறதுக்கான வழிகள் நெறயவே இருக்கு, ஒவ்வொன்னா சொல்றோம், நல்லா கேட்டுக்குங்க மக்களே...

பேமானியா இருந்துக்கிட்டு அம்பானி பொண்ணுக்கு ரூட் விடுறது: நம்ம தகுதிக்கு மீறி ஆசைப்பட கூடாது. காதல்ங்குறது இயல்பா வரணும், ஒரு பொண்ணோட அழகையோ அந்தஸ்த்தையோ பார்த்து நாமாக வலிந்து ஏற்படுத்திக்க கூடாது, அப்புடி ஏற்படுத்திக்கிட்டோம்னா அது நிலைக்காது. பண்ணையார் பொண்ணுங்கள சினிமாவுல வேணும்னா வேலகாரன் காதலிக்கலாம் நிஜத்துல அது செட் ஆகாது. ஒததான் விழும்...

மொக்க பிகருக்கு நூல் விடுறது (சப்ப பிகருக்கு இல்லீங்க மொக்க பிகருக்கு): நானும் எப்படியாச்சு லவ் பண்ணனும்ன்னு அடம்புடிச்சி நெறயப்பேர் மொக்க பிகருங்களுக்கு நூல் விடுவாங்க, அப்புறம் லேட்டா புரிஞ்சுக்கிட்டு குத்துதே குடையுதேன்னு அலறுவாங்க, நம்ம சிம்பு சொல்ற மாதிரி காதல நாம தேடி போகக்கூடாது, அதுவா நடக்கணும், நம்மள தலைகீழா போட்டு திருப்பனும். உச்சந்தலைல நச்சுன்னு கொட்டனும்.

மொக்கயா நாலு பிரண்ட்ஸ கூட வச்சிகிட்டு லவ் பண்றது: கூட இருக்கறவன் எப்படிப்பட்டவன்னு தெரிஞ்சுக்காம லவ் பண்ண கூடாது. காதல்னாலே மேட்டர முடிக்கறதுன்னு சில பேர் நெனச்சிட்டு இருப்பாங்க, அது வேலை வெட்டி இல்லாதவன் பண்றதுன்னு சில பேர் நெனப்பாங்க, காதலே ஆப்புதான்னு சிலபேர் நினைப்பாங்க, இப்படி நினைக்கரவங்கள கூட வச்சிட்டு லவ் பண்ணினா நமக்கு எந்த ஆபத்தும் இல்ல, ஆனா நாம லவ் பண்ணின பொண்ணு நடு தெருவுலதான் நிக்கும்.


நாட்டாமைக்கு ஆள் சேர்க்குறது: லவ்வுல என்ன பிரச்சின வந்தாலும் அத நாம தனியாளாதான் ஹான்டில் பண்ணனும் நாட்டாமைக்கு ஆள் புடிக்க கூடாது, இதுக்கு பல காரணம் இருக்கு. ஒன்னு மின்சார கனவு மாதிரி ஆகிடலாம், இல்லனா அந்த பொண்ணு லவ்வ கூட சொல்ல தைரியம் இல்லாதவன் நம்மள எப்புடி வாழ் நாள் முழுவதும் வச்சு காப்பாத்த போறான்னு யோசிக்கலாம், நாளைக்கு ஒரு பிரச்சின வந்தா நாட்டாம தலையும் சேர்ந்து உருளும்,அப்புறம் அவன் வீணா நம்மள முறைப்பான்.

தெய்வீக காதல்னு பீலா விடுறது: ஒரு காதலுக்கு அடிப்படையே காமம்தான், அப்புறம் என்ன தெய்வீக காதல்? எந்த விடயத்தையும் உண்மையோட பார்த்தாதான் அது நிலைச்சு இருக்கும், சும்மா தெய்வீகம் அது இதுன்னு பீலா விட்டா அது சீக்கிரமா புட்டுக்கும். காதல் பண்ணிட்டு அந்த பொண்ண என்ன மியுசியத்துல இருக்கற பொம்ம கணக்கா பாத்துக்கிட்டு இருக்கவா போறீங்க, அப்புறம் என்ன தெய்வீக காதல், மண்ணாங்கட்டி காதல்?

வெட்டி பந்தா காட்டுறது: லவ்வர இம்ப்ரெஸ் பண்றதா நெனச்சு வெட்டியா பந்தா காட்டுறது, அப்புறம் லவ் பண்ண ஆரம்பிச்சதும் அத கண்டின்யூ பண்ண முடியாம விட்டிடுறது, பந்தாவ நம்பி வந்தவனா ரிலேஷன்ஷிப் அங்கேயே கட், இல்லன்னா இவன் ஒரு ஏமாத்து பித்தலாட்டக்காரனோன்னு ஒரு சந்தேகம் வரும், அது நீண்ட காலத்துல பெரிய பிரச்சினையா வெடிக்கலாம். ரஜினிதான் சிகரெட்ட மேல தூக்கி போட்டு பிடிக்கணும், மைக் மோகனுக்கு அது தேவையில்லாத வேல.


முனியம்மாவ லவ் பண்ணிட்டு எமி ஜாக்சன் லெவலுக்கு வர்ணிக்கறது: சுமாரான ஒரு பிகர லவ் பண்ண வேண்டியது, அவள இம்ப்ரெஸ் பண்ணறேன் பேர்வழின்னு கிளியோபேட்ரா ரேஞ்சுக்கு கவிதயாலையே வர்ணிக்க வேண்டியது, இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி அவளுக்கும் நாமதான் உலக அழகியோன்னு ஒரு நெனப்ப வரவைக்க வேண்டியது. அப்புறமா அவ பந்தா தாங்க முடியலடான்னு பிரெண்ஸ்க்கிட்ட புலம்ப வேண்டியது, இல்லனா அவளே நாம எதுக்கு இந்த சப்ப பையன் கூட இருக்கனும்ன்னு நெனச்சு ஒரு அலெக்சாண்டர தேடிப்போனா சட்டி சுட்டதடான்னு பாட வேண்டியது, தேவையா இந்த மானங்கெட்ட பொழப்பு

ரெண்டு மூணு பொண்ணுக்கு ஒரே நேரத்துல நூல் விட்டுகிட்டு, மாறி மாறி உளர்றது: நெறைய அப்பாவிங்க, அப்புறம் சில அடப்பாவிங்க பண்ணுற தப்புதான் இது. சீரியஸா பண்றோமா விளையாட்டா பண்ரோமான்னே தெரியாம மூணு நாலு பொண்ணுக்கு மாறி மாறி நூல்விட்டுட்டு, இங்க அனுப்ப வேண்டிய மெச்செஜ அங்க அனுப்புறது, அங்க சொல்ல வேண்டியது இங்க சொல்றதுன்னு சொதப்பிக்கறது. சுள்ளானுக்கு எதுக்கு மன்மதன் வேல..

லவ்வர கூட வச்சுக்கிட்டு கேத்ரீனா கைப் பத்தி பேசுறது: இந்த பொண்ணுங்க இருக்காளுங்களே ரொம்பவே எக்கோ புடிச்ச கழுதைங்க(அது எக்கோவா ஈகோவா, #டவுட்டு). தப்பி தவறியும் இன்னொரு பொண்ணு ரொம்ப அழகுன்னு சொல்லி வீண் வம்ப விலைக்கு வாங்கிடாதீங்க, ரொம்பவே உஷாரா இருக்கணும். ஒருத்திய கூட வச்சுக்கிட்டு இன்னொருத்திய அறிவுன்னு சொன்னாலும் தாங்கிக்குவாளுங்க ஆனா அழகுன்னு சொன்னீங்கன்னு வைங்க, உடனே இல்லாட்டியும் ரெண்டு நாள் கழிச்சின்னாலும் ரிவீட்டு கன்பர்ம். 

பட்டினில இருந்தவன் பிரியாணி பொட்டலத்த பார்க்குற மாதிரி பொண்ண வெறிக்க வெறிக்க பார்க்குறது: காதலுக்கு அடிப்படையே காமம்தான்னு சொல்லிட்டோம், ஆனா அதுக்காக மட்டுமேதான் பண்றதுன்னா அதுக்குன்னே வேற நெறைய விஷயங்கள் இருக்கு. பொண்ணுனா பூப்போல பாத்துக்கணும், அத விட்டுட்டு விழுங்குறாப்போல பாத்தா எந்த பொண்ணுக்குதான் கூச்சம் வராது, கூச்சம் எரிச்சலா மாற நெறைய நாள் இல்லிங்க, அதனால பாக்குறப்போ கூட கொஞ்சம் ஜாக்கிரதையாவே பாருங்க.


நான் வெஜ் சாப்பிட்டிட்டு அத பிரெண்ட்சுங்க கிட்ட சொல்றது: லவ் பண்றப்போ அப்பப்போ சின்னதா நான் வெஜ் சாப்ட்ரதெல்லாம் சகஜம்தானே, அதுக்காக அத போயி பிரெண்ட்சுங்க கிட்ட சொல்லி ஒங்க வீரதீரத்த காட்டமுற்பட்டீங்கன்னு வைங்க, ரெண்டு சிக்கல் இருக்கு. ஒன்னு அந்த பொண்ண பத்தி அவங்க பார்வையே ரொம்ப தப்பா இருக்கும். அப்புறம் எப்புடி அந்த பொண்ண கட்டிக்கிட்டு பிரெண்ட்சுங்க முன்னாடி தைரியமா நிக்கறது? சீரியஸா தான் நீங்க லவ் பண்ணினாலும் ஆட்டோமெட்டிக்கா அது மேட்டர முடிச்சிட்டு கழட்டி விடுற லவ்வா மாறிடும். இல்ல நீங்க சொன்னது எல்லாமே அந்த பொண்ணுக்கு தெரிய வந்திச்சின்னு வைங்க அதவிட பெரிய ஒரு துரோகத்த அந்த பொண்ணுக்கு நீங்க பண்ணிட முடியாது. அப்புறம் உங்க காதல் பெப்பே தான். 

சொந்தப் பேருல ப்ளாக் எழுதறது: இதுல பெருசா சொல்றதுக்கு என்னங்க இருக்கு, நாங்க சொந்த பேருல ப்ளாக் எழுதினா இப்புடி ஒரு பதிவு போட முடியுமா இல்ல போட்டுட்டுதான் ஒரு பொண்ண லவ் பண்ண முடியுமா?

சொல்றத சொல்லிட்டேம், இதுக்கும் மேல காதலிச்சு சொதப்பிக்கிட்டு தாடி வளர்க்கனும்ங்குறது உங்க தலையெழுத்துன்னா விமலகாசன் என்ன கமலகாசனால கூட உங்கள காப்பாத்த முடியாது 


டிஸ்கி 1: டைட்டில் "காதலில் சொதப்புவது எப்புடி?" என்னும் குறும்படத்தில் இருந்து சுட்டோம்,ஆனா அதுக்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல,, ஆனாலும் அந்த பட இயக்குனரு பாலாஜிக்கு நன்றியையும், அவரோட முதல் பட முயற்சிக்கு வாழ்த்துகளையும் தெரிவிச்சிகிறோம்.

டிஸ்கி 2: உடனுக்குடன் பல பாயிண்டுகள் எடுத்துக்குடுத்த அனுபவசாலி மொக்கராசு மாமாவுக்கு எப்புடி நன்றி சொல்றதுன்னே தெரியல, ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி. 

டிஸ்கி 3: போனஸா லவ் புரபோஸ் பண்றது எப்புடின்னு ரெண்டு வீடியோ தர்றோம், பார்த்துட்டு உங்களுக்கு எது செட் ஆகும்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க...

Saturday, November 19, 2011

ஆணி ஜாஸ்தியானா - (சுய புராணம் I)

என்னன்னே தெரியலப்பா, ஹாலிடே சீசன் ஆபர்ன்னு ஒவ்வொரு நாளும் ஏழெட்டு ஈமெயில் மட்டும் வருது, ஆனா அந்த ஹாலிடேஸ் எப்பன்னே தெரியல, ஆபிஸ்ல வேல மட்டும் கொறஞ்ச பாடில்ல. ஊருக்குள்ள அவன் அவன் ஒரே ஒரு பாஸ வச்சிக்கிட்டே சங்க அத்துக்கிட்டு திரியறானுக, நாலு பாஸ் இருக்கற நான் படுற அவஸ்த இருக்கே..... 


கொலாபரேசன் வோர்க்குன்னுட்டு நாலு காம்பெனில இருந்து நாலு பாசு நமக்கு, அதுல ஒருத்தரு நம்ம மேல பிரியப்பட்டு ஒரு பார்டிக்கு கூப்பிட்டாரு, பார்ட்டின்னா அந்த பார்ட்டி இல்லங்க, வேல விசயமா எதோ ஒரு டிஸ்கஷனாம், அது முடிஞ்சதும் பார்டியாம்னு சொல்லியிருந்தாரு, மறந்துடாம இருக்கனும்ன்னு ஒரு மெமோ வேற அடிச்சு குடுத்திருந்தாரு. நமக்குதான் எந்த எடத்துக்கும் நேரத்துக்கு போற பழக்கம் இல்லையே, ஆனா பார்டிக்கு நேரத்துக்கு போயிரனும்ன்னு கூட வேல பாக்குற நம்ம நண்பருக்கிட்டையும் சொல்லி வச்சிருந்தேன். பார்ட்டி சரியா ராத்திரி எட்டு மணிக்கு ஆரம்பிக்குது, நாம போற எடம் ஒரு மணி நேர வண்டி ஓட்டம், சரி அப்போ ஆறு மணிக்கெல்லாம் புறப்படனும்னு சரியா நேரத்துக்கே வண்டில ஏறிட்டோம், எல்லாம் ஒரு முன்ஜாக்கிரததான்.

வண்டில ஏறி நம்ம நண்பருக்கிட்ட மெமோவ பாத்து GPS ல அட்ரெஸ போடுப்பான்னு சொல்லிட்டு, வண்டிய கெளப்பிட்டேன். அவரும் நவிகேசன் எல்லாம் போட்டு வச்சாரா சரியா ஆறு நாப்பதுக்கெல்லாம் லோகேசன் போயிட்டோம். அது நம்ம பாஸோட ஆபிஸ், அங்க பார்த்தா பார்டிக்கான அடையாளம் எதுவுமே இல்ல. என்ன வம்பாபோச்சே நம்ம நேரத்துக்கே வந்துட்டம் போலிருக்கே, இப்போ என்ன செய்யலாம்னுட்டு சரி ஆபிஸ சுத்திப்பார்போம்ன்னு கொஞ்ச நேரம் சுத்தினோம், ஆபீஸ்ல செக்கியூரிட்டிய தவிர ஒரு ஈ காக்கா கூட இல்ல, அப்பத்தான் திடீர்ன்னு ஒரு ஞானம் வந்து அந்த மெமோவ எடுத்து பார்த்தேன். மெமோ ஸ்லிப்புல மேலே ஹெட்டர்ல இருக்கற அட்ரசுக்கு நம்ம மாப்ள நவிகேசன் போட்டிருக்கறது அப்பத்தான் தெரிஞ்சிச்சு, கீழே லோகேசன் அப்புடின்னு வேற ஒரு ஹோட்டல் பெயர் போட்டிருக்கு, மறுபடியும் அதுக்கு நேவிகசன் போட்டோம், ஒரு மணிநேர தூரம்ன்னு வந்திச்சு, நல்ல வேளை நேரத்துக்கே வந்ததுன்னு நெனச்சிக்கிட்டு, மறுபடியும் கெளம்பினோம்.



எப்படியும் எட்டு மணிக்கு கரெக்டா போயி சேந்திடனும்ன்னு , வேகமாவே வண்டி ஓட்டினேன், டான்னு எட்டு மணிக்கு ஹோடெல்ல, நாங்க போறப்போ எல்லாரும் சாப்பிட்டுட்டு இருக்காங்க, நம்ம பாஸூ நம்மள கேவலமா ஒரு லுக்கு விட்டுட்டு, வந்ததுதான் வந்துட்டீங்க சாப்பிடுங்கன்னு சொன்னாரு, என்னாடா இது நாம கரெக்டா நேரத்துக்கு வந்தும் இந்தாளு இப்படி சொல்றாரேன்னு யோசிச்சிக்கிட்டே சாப்டோம். அப்போதான் நம்ம நண்பர் சொன்னாரு, நாம லேட் ஆனதுல டிஸ்கசன சாப்பாட்டு அப்புறம் ஷிபிட் பண்ணிட்டாங்க போல அதுதான் பாஸ் கடுப்பா இருக்காருன்னு, அதுவும் சரிதான்னு நினச்சிக்கிட்டு, சாப்பிடவும் முடியாம விடவும் முடியாம இருந்த ஐட்டங்கள் ஒன்னொன்னா டேஸ்ட் பார்த்திட்டு வந்திட்டோம், அப்புறம் ஒம்பது மணி, பத்து மணி ஆகுது பார்ட்டில தான் இருக்காங்களே தவிர டிஸ்கஷன் பத்தி ஒரு தகவலும் இல்ல, அப்புறம் பதினோரு மணியும் தாண்டிரிச்சு, ஆளாளுக்கு கெளம்பி போய்க்கிட்டே இருக்காங்க, நடுவுல நம்ம பாஸும் கெளம்பிட்டாரு, சரி டிஸ்கசன் காலின்னு நெனச்சிட்டு நாங்களும் வண்டி ஏறிட்டோம். அப்போதான் நம்ம நண்பர் மறுபடியும் மெமோ எடுத்துப் பார்த்தாரு. அதுல

 Project Presentation             6.00 - 7.00
 Discussion on presentation  7.00 - 8.00
Dinner                                8.00-11.00

அப்புடின்னு போட்டிருந்திச்சு, அப்புறம்தான்யா வெளங்கிச்சு பாசு ஏன் நம்மள அப்படி மொறச்சு பார்த்தார்ன்னு. மெமோ நம்ம கையிலேயே ஒரு வாரமா இருந்திருக்கு, ஆனா தலையில இருந்தது எல்லாமே சாப்பாட்டு நேரம் மட்டும்தான், நாங்களும் கரெக்டா அந்த நேரத்துக்கே போய் சேர்ந்திருக்கோம். அப்புறம் உண்மைய எடுத்துச்சொல்லி நம்ம பாஸ சமாளிக்க நாங்க பட்ட பாடு இருக்கே..

 ஈ லோகத்தில் உள்ள பாஸூ எல்லாரும் பொறம்போக்கு பாஸு ஆயி.....  

டிஸ்கி: இந்த கொடுமைய மறக்க படம் பார்க்க போயி பட்ட கொடும அடுத்த வாரம்.  

சமந்தா பின்னாடி நிக்கறது நான்தான்னு சொன்னா நம்பவா போறீங்க...  

Sunday, November 6, 2011

நிர்வாண மிருக நேயமும் இளைய தளபதி பிளாட் ஜெனேரேட்டரும் -: கும்ப்ளிங் கும்ப்ளிங் 6/11/2011


PeTA, PeTA ன்னு ஒரு அமைப்பு இருக்கு. "பீபில் பார் எதிக்கள் ட்ரீட்மென்ட் ஆப் அனிமல்ஸ்" என்பதுதான் அதன் விரிவாக்கம். கொஞ்ச நாளுக்கு முன்னாடி நாய்களை தத்து எடுங்கள்ன்னு நம்ம திரிஷாவ வச்சு இந்தியாவுல ஒரு பெரிய காம்பைன் பண்ணினாங்க. அந்தம்மா மிருக நேயம் நெறஞ்சவங்க, அவங்க வளர்க்குற நாய் கூட தத்து எடுத்ததுதான்-பின்ன அவுங்க நாய பெத்தா எடுக்க முடியும்- அதனால அவங்கதான் இதுக்கு மிகப்பொருத்தமாக இருப்பாங்கன்னு சொன்னாங்க, த்ரிஷா பத்தி கிசு கிசு மட்டுமே எழுதற பலபேர் கூட அந்தம்மாவோட மிருக நேயத்த பாராட்டி கட்டுரயெல்லாம் எழுதினாங்க. என்னடா இது புதுசா இருக்கேன்னு யோசிச்சிட்டே இருந்தேம். அப்புறமாதான் நமக்கு  அவுங்க மிருக வதைக்கு எதிராக எல்லோரையும் வெஜிடேரியன் ஆகும்படி ஒரு காம்பைன் நடத்தின சில படங்கள பார்க்க கிடைச்சுது, அதுக்கப்புறமாதான் அவங்க காம்பைன் திட்டங்கள வாசிச்சா, பாதிக்கு மேல நிர்வாணத்த மையப்படுத்தியது. அது ஏன்னு ஒரு அழகான விளக்கம் குடுத்திருக்காங்க, "இலாப நோக்கமற்ற நிறுவனமான எங்களுக்கு விளம்பரம் செய்வதற்கு கோடி கோடியா பணம் கிடைக்கிறது கஷ்டம், ஆனா இவ்வாறான ஒரு காம்பைன் பண்ணினா இலவச விளம்பரம் கிடைக்கும், நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவுமே தப்பில்ல" அப்புடின்னு இருக்கு அந்த விளக்கம். இப்ப புரியுதா அவங்க எதுக்கு த்ரிஷாவ தெரிவு செஞ்சாங்கன்னு?

ஒஸ்தி படத்துல நடிக்கிற பொண்ணு..எவன்யா டைரக்டர்?
ஒஸ்தி படம் ரிலீஸ் மறுபடியும் தள்ளி போச்சாம், 11/11/11 க்கு வரும்ன்னு எதிர்பார்க்கப்பட்ட படம், அதேபோல  மயக்கம் என்னவும் 18/11/11தான் ரிலீஸ்ன்னு செல்வா சொல்லிட்டாரு. சித்தார்த்தோட தெலுங்கு படமான ஓ மை ப்ரெண்டு மட்டும்தான் இந்த டேட்டுக்கு வரும் போலிருக்கு. சிதார்த்தோட படம் பத்தி ஏன் சொல்றோம்னா அதுல ரெண்டு ஹீரோயின், ஒன்னு ஸ்ருதி, மத்தது ஹன்சிகா. வேலாயுதம் வெற்றிக்கு அப்புறமா ஹன்சிகா நமக்குதான்னு பதிவுலகத்துல ஒரு பெரிய நம்பிக்க துளிர் விட்டு இருந்தாலும் இந்த படம் ஜெயிச்சா மறுபடியும் தெலுங்கு வாலாக்கள் கொத்திக்கிட்டு போயிட வாய்ப்பு இருக்கு. ஏன்னா ஹன்சிகாவோட ஆகஸ்ட் வெளியீடு தெலுங்கு படம் kandireega பெரிய வெற்றி, அதே போல வேலாயுதமும் வெற்றி, அதனால ஒ மை பிரெண்ட் படத்துக்கு லக்கி சார்ம் ஹன்சிகாதான்னு சித்தார்த் சொல்றாரு.  அதுதான் எதுக்கும்னு சொல்லி வச்சுக்கறோம். என்னென்ன பூஜையெல்லாம் பண்ண இருக்கோ இப்பவே ரெடியாகுங்கப்பா.

எனக்கே எனக்கா?
வேலாயுதமும் ஏழாம் அறிவும் அசாசின் கிரீட் அப்புடின்குற ஒரு வீடியோ கேமோட காப்பின்னு ரெண்டு படமும் ரிலீஸ் ஆக முதல்லையே பெரிய கலவரமே நடந்திச்சு. இது என்னடா அநியாயமா இருக்குன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தோம், ஹாலிவூட் காரங்க மட்டும் நம்ம தமிழ் படங்கள காப்பி பண்ணலாம் நம்மாளுக பண்ண கூடாதா? ஏற்கனவே குருவி படத்த காப்பி பண்ணி வந்த ரெண்டு ஹாலிவூட் படங்கள பத்தி நாங்க பதிவு போட்டது எல்லாருக்குமே தெரியும், இப்போ புதுசா இன்னுமொன்னு, அதுதாங்க அந்த ஜானி இங்க்லீஷ் படத்துல நம்ம தளபதியோட சிவகாசி இன்ட்ரோடக்ஸன் சீன அப்புடியே காப்பி அடிச்சிருக்காங்க, தளபதி வெல்டிங் பீம் வச்சு கதவ அவரு ஷேப்புக்கே வெட்டி எடுத்து வெளிய வருவாரே, அதே தான் அங்க ஒரு கார் லேசர் பீம் வச்சு காரோட ஷேப்புக்கே கதவ வெட்டி வெளிய வரும். யாருக்கிட்ட, நாங்கெல்லாம் தளபதி படத்த இம வெட்டாம பாக்குறவங்களாச்சே, நம்மள ஏமாத்த முடியுமா, சூரியா படத்த பாலிவூட்ல ரீமேக் பண்றாங்கன்னா தளபதி படத்த ஹாலிவூட் காரங்க சுடுறாங்க, தளபதி மாஸ சொல்ல வேற எதனாச்சு வேணுமா? நிலைமை இப்புடி இருக்க இந்த அநியாயத்த கொஞ்சம் பாருங்க, இளைய தளபதி பிலாட் ஜெனேரேட்டர், இதுல படத்துல தளபதியோட பெயர், கூட நடிக்கற காமெடியன், தங்கச்சி பெயர் அப்புடி கொஞ்சம் விசயங்கள குடுத்தா படத்தோட கதை வர்ற மாதிரி பண்ணி வச்சிருக்காங்க. என்னா ஒரு எகத்தாளம்.அப்புறம் எதுக்கு ஜெயம் ராஜா,பாபு சிவன், பிரபு தேவா எல்லாம் இருக்காங்க?


கார்த்தி கார்த்தின்னு ஒரு மார்கட்டே இல்லாத தமிழ் சினிமா நடிகர் இருக்காராமே, அவரு எதோ சகுனின்னு ஒரு படம் நடிக்கராராமாம். அந்த படத்துல ஹீரோயின்னா ப்ரனிதா பொண்ணு நடிக்குதுன்னும், காமெடிக்கு தலைவர் சந்தானம் இருக்காருன்னும் உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும், இப்போ என்னடான்னா அந்த படத்துல புதுசா அனுஷ்கா வேற ஒரு முக்கியமான காரெக்டர் பண்றாங்களாம், ஏற்கனவே ராதிகா சரத்குமார், ரோஜா, மும்தாஜ்ன்னு ஒரு பட்டாளமே இருக்கு, போதும் போதாததுக்கு ஸ்ரேயா வேற நடிக்கறதா அரசல் புரசலா ஒரு கத இருக்கு. எதுக்குடா இம்புட்டு பெரிய பட்டாளத்த வச்சு நடிக்க வக்கிராங்கன்னு யோசிச்சிட்டே இருந்தோமா, நேத்துத்தான் அது எதுக்குன்னு வெளங்கிச்சு, ஒன்னுமில்லைங்க, இந்த கார்த்தி பய அவரோட மார்கெட் நிலவரம் தெரியாம தளபதியோட காவலன் படத்துக்கூட சிறுத்தைன்னு எதோ ஒரு படம் ரிலீஸ் பண்ணி அட்ரசே தெரியாம போச்சாமே, இப்பவும் சகுனி பொங்கலுக்குதான் வரும் போல இருக்காம், ஏற்கனவே நண்பன் பொங்கல் ரிலீஸ்னால ரொம்பவே பயந்து போயிதான் இப்படி நட்ச்சத்திர பட்டாளமா போட்டு நிரப்புறதா கோடம்பாக்கத்துல ஒரு பேச்சு இருக்கு. ஆனானப்பட்ட ரஜனிகாந்தே நண்பனுக்கு பயந்து ராணாவ தள்ளிப்போட்டப்போ, கார்த்தி என்ன கார்த்தி... (இத நீங்க நம்பினா முட்டாள், இல்லன்னா சைக்கோ எப்புடி வசதி?)


அழகே உன்பெயர்தான் சமந்தாவோ...