Wednesday, February 12, 2014

இசையும் நானும் எனது நண்பனும்......

சின்ன வயசு முதலே இசையின்னா எனக்கு ரொம்ப ஆர்வம். ரேடியோ பெட்டியில இருந்து, சோனி வாக்மேன், சீ டி பிளேயர், MP3 பிளேயர் என பல பரிமாணங்களை(!) கண்ட இசை உலகில், எம் எஸ் வி, இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான்,  மைக்கல் ஜாக்சன், ஷகீரா என கிராமியம் முதல் மேற்கத்தியம் வரையும் இசை கேட்கவும் அதன் நுணுக்கங்களை தெளிவாக அறியவும் என நான் மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம். அதையும் தாண்டி, இசை கருவிகளின் மீது எனக்கு இருந்த நாட்டமும் அவற்றை கற்றுக்கொள்ள நான் செய்த முயற்சிகளும் ஏராளம். எனது இசை ஆர்வத்தின் வெளிப்பாடே இந்த பதிவு.

எனது இசை அறிவு, ஞானம் பற்றி சொல்ல முன், எனது நண்பனது இசை ஞானம் பற்றி சொல்கிறேன். ஏன் என்றால் ஒருவரது நண்பர்கள் என்பவர்கள் அவரது விம்பமே. "எவனோ ஒருவன் வாசிக்கிறான்..." பாடல் கேட்ட நாளில் இருந்து எனது நண்பன் ஒருவனுக்கு புல்லாங்குழல் இசை மீது தீராக் காதல். சாலை ஓரத்தில் யாராவது புல்லாங்குழல் வாசித்தால் கூட மணிக்கணக்கில் அவர்கள் அருகில் இருந்து ரசித்துக் கொண்டிருப்பான். அந்த இசைக் கருவியை கற்பதில் அவனுக்கு அப்படி ஒரு ஆர்வம். எப்பப் பார்த்தாலும் "என்னைக்காவது ஒரு நாள், ஒரு புல்லாங்குழல் வாங்கிடனும் மச்சான், அதுதான் என் வாழ்க்கை லட்சியம்" ன்னு சொல்லிக்கிட்டே இருப்பான். இவ்வாறாக பல நாட்களாக தீராத முயற்சி எடுத்து கற்றுக் கொண்ட அவன் ஒருநாள் திடீர் என என்னிடம் வந்து, "மச்சான், இப்போ நான் செம்மையா புல்லாங்குழல் வாசிப்பேன், இனிமேல் அடுத்த கட்டத்துக்கு போகவேண்டியதுதான், நீ எனக்கு ஒரு புல்லாங்குழல் வாங்கித்தா" ன்னான்.


நானும் அவனுமா சேர்ந்து புல்லாங்குழல் வாங்கறதுக்காக டவுனுக்கு கடைக்குப் போனேம். நாங்க போன தெருவுல வரிசையா பல இசைக் கருவிகள் விற்கும் கடைகள் இருந்தாலும் நம்மாளு குறிப்பா ஒரு கடைக்குத்தான் போகணும்ன்னு விடாப் பிடியா இருந்தான். அந்த கடை, சிவாஜி படத்துல வார்ர கடை செட்டப்ன்னு வச்சுக்கங்களேன், அங்கேயும் தமிழ் செல்வி மாதிரி ஒரு செம பிகரு இருந்திச்சி. நம்மாளு அந்த பிகருக்கிட்ட போயி புல்லாங்குழல் குடுங்கன்னு கேட்டான், அந்த பிகரும் என்னன்ன பெயர் எல்லாமோ சொல்லி அது வேணுமா, இது வேணுமான்னு ஏராளமா கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிட்டே இருந்திச்சு, நம்மாளும் சலிக்காம என்னெல்லாமோ பேசினான், அவனோட ஞானத்த கண்டு நான் மெய் சிலிர்க்க நின்னிட்டு இருந்தேன். கடைசியா அந்த பொண்ணும் போயி எதோ ஒரு புல்லாங்குழல் கொண்டு வந்திச்சு, நம்ம மாப்ள அத கையில வாங்கிட்டு, அப்படியே எங்கிட்ட வந்தான், கிட்ட வந்தவன் புல்லங்குழல ஒரு வாட்டி உத்துப் பார்த்தான், அப்புறம் என்னப் பார்த்து "என்ன மச்சான் இந்த குழல்ல இத்தன ஓட்டை இருக்கு, இதுல நான் எதுல வாய் வச்சு ஊதுரது" ன்னு கேட்டான், நான் செம டென்ஷன் ஆகிட்டேன், காண்டுல அவன்கிட்ட கேட்டேன், மச்சான் நெசமா சொல்லு, உன்னோட ஆர்வம் புல்லங்குழல் மேலயா இல்ல அந்த தமிழ் செல்வி மேலயான்னு, அதுக்கு நம்ம நண்பன் என்னைப் பார்த்து திமிராக் கேட்டானே ஒரு கேள்வி,

"இன்னுமாடா உனக்கு இது புரியல?"


இதற்கும் எனது இசை ஞானத்துக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேக்கிறீங்களா? சொல்றேன், கொஞ்ச நாளாவே இந்த சுப்பர் சிங்கர் நிகழ்ச்சிய பார்த்துக்கிட்டு இருக்கேன், அதுல யாராவது "ரெண்டாவது சரணத்துல மூணாவது வரியில அந்த "ச ரி த ம, க த ப நி" ல ஸ்ருதி கொஞ்சம் விலகிறிச்சின்னு சொல்றப்போ எனக்கு மேல உள்ள படம்தான் ஞாபகம் வரும். ஏன்னா நம்ம இசை ஞானம் அப்படி. 

படிப்பினை: ஆர்வத்துக்கும் அறிவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும், ஆர்வம் எதனால வேணும்னாலும் வரலாம், அறிவு வரணும்னா ஆர்வம் மட்டும் இருந்து பத்தாது, தேடல், புரிதல், முயற்சி, கற்றல் என பல விடயமும் இருக்கணும், இல்லையின்னா எப்பவும் என்னையும் என் நண்பனைப் போலவும் ஆர்வக் கோளாறுதான்.

டிஸ்கி: இந்த பதிவு எழுதினதே, கொஞ்ச நாளாவே மனசக் கொடஞ்சிக்கிட்டு இருக்கற ஒரு விஷயத்த உங்க கூட பகிர்ந்துக்கத்தான். அது என்னன்னு கேக்கறீங்களா, கீழே பாருங்க. எதுவுமே புரியலன்னா பெருசு படுத்தி பாருங்கய்யா, நான் படத்தைச் சொன்னேன்.

குழந்தைகள், இருதய நோயாளிகளுக்கு உகந்ததல்ல. 



9 comments:

  1. சீரியஸ் பதிவோன்னு நினைச்சு பயந்துட்டேன்..பதிவை விட ஸ்டில்ஸ், ம்ம்!

    ReplyDelete
    Replies
    1. என்னைக்கு நான் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டேன்னு சொன்னீங்களோ, அன்னக்கே முடிவு பண்ணிட்டேண்ணே, இனிமே ஸ்டில்ஸ் போடறதுதான்னு.

      Delete
  2. வணக்கம்,டாக்டர்!நலமா?///நல்ல சீரியஸ் பகிர்வு.'எதை'யும் கத்துக்க முன்னாடி "அதப்" பத்தி பூரண(!) அறிவு வேணும்,ஹ!ஹ!!ஹா!!!///கிளிக் பண்ணிப் பாத்ததுல ஒண்ணும் பிரயோஜனமில்ல,ஹி!ஹி!!ஹீ!!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐய்யா, நலம். சீரியஸ் பதிவுக்கும் நமக்கும் தான் ரொம்ப தூரம் ஆயிற்றே!

      Delete
  3. "ஸ்ருதி கொஞ்சம் விலகிறிச்சின்னு சொல்றப்போ எனக்கு மேல உள்ள படம்தான் ஞாபகம் வரும் "

    அப்போ ஸ்ருதியோடு ஐக்கியமாகடீங்கனு சொல்றப்ப உங்களுக்கு என்ன படம் ஞாபகத்துக்கு வரும்?


    "இந்த பதிவு எழுதினதே, கொஞ்ச நாளாவே மனசக் கொடஞ்சிக்கிட்டு இருக்கற ஒரு விஷயத்த உங்க கூட பகிர்ந்துக்கத்தான். அது என்னன்னு கேக்கறீங்களா, கீழே பாருங்க. எதுவுமே புரியலன்னா பெருசு படுத்தி பாருங்கய்யா, நான் படத்தைச் சொன்னேன்"

    இப்ப என்ன ஆடாம புடிச்சிகுனும் அவ்ளோ தானே ., வாங்க ஆளுகொரு கை ...

    ஐயையோ 18+ போடலையா , அப்போ இந்த கமண்ட டெலிட் பண்ணிடுங்க.

    ReplyDelete
    Replies
    1. //இப்ப என்ன ஆடாம புடிச்சிகுனும் அவ்ளோ தானே ., வாங்க ஆளுகொரு கை ...//

      ஐயையோ, இந்த ஆட்டத்த்துக்கு நான் வரல.

      Delete
  4. ஆஹா என்னமோ நினைச்சி நமக்கு தெரிந்த கீபோர்ட் பற்றி கொஞ்சம் சொல்லலாம்னு வந்தா அவ்வ்வ்வ்வ்....

    ஸ்டில் செம கலக்கல் !

    ReplyDelete
    Replies
    1. இது மாதிரி துயர் சம்பவங்கள் நடந்துராக் கூடாதுன்னுதான் "இது ஒரு மொக்கை பதிவு" அப்பிடின்னு பதிவு ஆரம்புத்துலயே ஒரு டிஸ்கி போட்டு வச்சிருந்தேன், எடிட்டிங்ல நம்ம ராசு மாமா தூக்கிட்டாப்போல. நம்ம கடைக்கு யாரு சீரியஸ் பதிவு தேடி வரப்போறான்னு நினைச்சிருப்பாரு.

      Delete
    2. ஹீ ஹீ..அதானே, நாம எழுதுறது பூராவுமே மொக்கதானே.. ஆனா அது மட்டுமல்ல, இது இந்த ஜோனர் படம்னு சொல்லி படம் எடுக்குறது பழைய ஸ்டைல், ரசிகர்களே பார்த்து புரிந்துகொள்ளட்டும்னு விடுறதுதான் விஜய் சேதுபதி காலத்து ஸ்டைல்.. அதான்..

      Delete

உங்கள் கருத்துக்கள்!!