Monday, January 13, 2014

ஜில்லா - திரை விமர்சனம்

நம்ம கடை திறக்கனும்னா, ஒரு தமிழ்படம் நம்ம ஏரியாவுல ரிலீஸ் ஆகனும். அதாவது ஒரு நல்ல நாள், பண்டிகைன்னு ஏதாவது வரனும். அந்த சட்டத்துக்கு அமைய, பொங்கல் நாள் வர்றதால, நம்ம கடை சார்பாக இந்தமுறை ஜில்லா விமர்சனம்.


துப்பாக்கி எனும் மெகா ஹிட்டுக்கும், தலைவா எனும் ஏமாற்றத்துக்கும் பின்னர் இளைய தளபதி நடிப்பில், காஜல் அகர்வால், மோகன்லால் உட்பட பல நட்சத்திர கூட்டணியில், தலையின் வீரத்துடன் போட்டியிட, RB சவுத்ரியின் தயாரிப்பில் களமிறங்கியிருக்கும் மாஸ் ஆக்ஷன் மசாலா இந்த ஜில்லா. தப்பு பண்ணினதுக்காக அடிக்கல, அந்த தப்ப நாங்க மட்டுமே பண்ணணும், அதுதான் அடிச்சேன், என்கிற அழகிய கொள்கையோடு, குடும்பமாக வுடியிஸம் பண்ணும் ஒருவன், எதிர் முனையில் இருந்து தன்கூட்டத்தார் செய்யும் தப்புக்களை காண நேர்ந்தால்... எனும் கற்பனையே ஜில்லா. இது ஒரு நல்ல இயக்குனர் கையில் நாயகன் இரண்டாம் பாகமாகவோ, அல்லது ஒரு ஆர்வக்கோளாறு இயக்குனர் கையில் தலைவா இரண்டாம் பாகமாகவோ ஆக சாத்தியமுள்ள கற்பனைதான். நல்ல வேளையாக ஜில்லா டீமுக்கு உலகப்படம் எடுக்கும் விபரீத ஆசை இல்லாததால், இது ஒரு ஆக்ஷன் என்டர்டைனர் வரிசையில் சேர்க்கிறது.  இந்த மசாலாவை எப்படிப் பறிமாறி இருக்கிறார்கள், அதில் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதை இனி பார்க்கலாம்.

விஜய், மகேஷ் பாபு, சல்மான் கான் இந்த மூவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அதாகப்பட்டது, கதையோ, திரைக்கதையோ எப்படி இருந்தாலும் இவர்கள் புல் ஃபோர்மில் இருந்தால் படம் தப்பிக்கும். இங்கும் அப்படித்தான். படம் முழுவதும் விஜய் ஆட்சி. ரொம்ப நாளைக்கு அப்புறமா விஜய் புல் ப்ரீயா நடிச்சிருக்காரு. வழக்கமான சேட்டைகள், டைமிங், சின்னச் சின்ன ரியாக்ஷன், முக்கியமா அந்த விஜய் ஸ்மையில் எல்லாமே முழு வீச்சுல இருக்கு. படம் முதல் பாதி பார்க்கும் போது, மறுபடியும் விஜய்க்கே மாறிடலாமான்னு ஒரு கணம் தோணினாலும், இரண்டாம் பாதி அந்த விபரீத முடிவுல இருந்து நம்மள காப்பாத்துது. ரொம்பவே ஸ்ட்றாங்கா இருந்திருக்கக் கூடிய, அல்லது குறைந்த பட்சம் சிவகாசி மாதிரி வந்திருக்க வேண்டிய இரண்டாம் பாதி, அது யாரு தப்புன்னு தெரியல, மறுபடியும் ஒரு வில்லு ரேஞ்சுல, ஒரு பைட் சீன், அப்புறமா மொக்கையா ஒரு பாட்டு, அப்புறம் மொக்கையா ஒரு கமெடி சீன், மறுபடியும் ஒரு மொக்கையா அக்ஷன் ப்ளாக்ன்னு, ஒரு நேர் கோட்டுல ரொம்ப மொக்கையா போய்க்கிட்டே இருக்கு. விஜய் எவ்வளவு ட்ரை பண்ணியும் காப்பாத்த முடியாத கட்டத்துல இருக்கு இரண்டாம் பாதி படம். இதுல சோகம் என்னன்னா ரெண்டாம் பாதி முடியறப்போ, ஒரு செம ஜாலியான முதல் பாதி படத்துல இருந்ததே நமக்கு மறந்திடுது.


பிளாஸ் அண்ட் மைனஸ்

1.    விஜய் விஜய் விஜய். முதல் பாதி முழுவதும் செம அட்டகாசம், அந்த அறிமுக காட்ச்சியில இருந்து போலீஸ் ஆகும் வரைக்கும் மனுஷன் பிச்சி வாங்கி இருக்காரு. அப்புறமும் ரெண்டாம் பாதியிலதான் என்ன பண்றது, எப்படி பண்றதுன்னு குழம்பிப் போனாலும், ஃபயிட், டான்ஸ் என தனது ஏரியாவுல செமையா ஸ்கோர் பண்ணிட்டதால ஹார்ட்கோர் விஜய் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி.2.  மோகன்லால் எதுக்கு இந்தப் படத்துக்குங்கற கேள்விக்கு கடைசிவரை எனக்கு விடை கிடைக்கவே இல்லை. மோகன்லால் அவரு பணிய சரியாவே செஞ்சிருக்காரு, அதுல எந்த குறையும் இல்ல, குறிப்பா, ஒபெனிங்க் சாங்க்ல விஜய் முன்னாடி, தனது ப்ரசன்சை மெயிண்டயின் பண்ணும் போதே ஒரு நடிகராக நம்ம மனசுல நின்னுடறார். போதுமான ஸ்டையில், அளவான எமோசன்ஸ் என கச்சிதமான நடிப்பு. பட் மோகன் லால் இருப்பதாலோ என்னவோ, இரண்டாம் பாதி படம் கொஞ்சம் டல் அடிக்கிறது. விஜயின் ப்ரீ ஃபாலுக்கு இணையாக சத்தியராஜ் போன்ற ஒரு லொள்ளுப் பார்ட்டி கூட இருந்திருந்தால் படம் இன்னும் அட்டகாசமாக இருந்திருக்குமோ என்னவோ. படத்தை ஒரு மசாலா படமாவே கொண்டு செல்வாதா இல்லை ஒரு உலகப் படமாக எடுப்பாதா என்ற இயக்குனரின் குழப்பத்துக்கு ஒரு வேளை இதுவே காரணாமாக இருந்திருக்கலாம்.


3.     காஜல் அகர்வால் கொஞ்சமும் மாற்றமே இல்லாம அப்பிடியே இருக்காங்க, இது ஒரு பிளாஸ் போன்று தோன்றினாலும், 2007ல இருந்து இன்னிக்கி வரைக்கும் தொடர்ந்து பார்த்து வந்ததுல, எந்த ஒரு சீன் வரும்போது சீனோட அட்மாஸ்பியர் பார்த்தே காஜல், ரியாக்ஷன் நம்பார் 12 குடுப்பாங்களா இல்ல, 17 குடுப்பாங்களான்னு சொல்லிடக் கூடியதா இருக்கறது பெரியவே மைனஸ். என்ன ஒரே ஆறுதல், இப்போவெல்லாம் இந்தப் பொண்ணு சேலை கட்டி வந்தா அது இடுப்புல நிக்கவே மாட்டேங்குது, சோ நாமெல்லாம் ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி.

5.    செகண்ட் ஆப் ஆரம்பித்ததும் விஜயின் மன மாற்றத்துக்கு காரணமாக வரும் காட்சி வலு இல்லாமல் இருப்பது ரொம்பவே சொதப்பல். ரொம்பவும் உருக்கமான காட்சிதான் அது, அதில் சந்தேகம் இல்லை, ஆனா விஜய் போலீஸ் ஆக முதல் நல்லம நாயக்கர் போன்றிருக்கும் சிவன்,  விஜய் போலீஸ் ஆன மறு கணமே, சிங்கம் மயில் வாகனம் ரேஞ்சுக்கு தெரிவது கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியாததாக ஆகிறது. ஒரு மாஸ் படமாகவே இருந்த போதும் இந்த மன மாற்றம் இன்னும் கொஞ்சம் கவனமாக கையாளப்படிருக்க வேண்டுமோ என்னமோ.

6.  தம்பி செண்டிமென்ட், தங்கச்சி செண்டிமெண்ட், அம்மா செண்டிமெண்ட், அப்பா செண்டிமெண்ட் ன்னு ஒரே குடும்ப பாச மழை. நட்புக்கு சூரியும், ஊறுகாய்க்கு காஜலும், வில்லனாக சம்பத்தும், என ஒரே நடச்சத்திரப் பட்டளமாகவும், விஸ்தாரனமகாவும் இருக்கும் படம், சில நேரங்களில் எதுக்கு இம்ம்புட்டு பேர், ஒரு மூணு காரக்டர தூக்கி இருந்தா இன்னும் முப்பது நிமிசத்த மிச்சம் புடிச்சிருக்கலாமேன்னு யோசிக்க வைக்குது. போதாக் குறைக்கு ரெண்டே சீனுக்காக தலைவர் சந்தானத்துக்கே ஜோடியா நடிச்ச ரெண்டு ஹீரோயின்கள தேவையே இல்லாம வேஸ்ட் பண்ணி, நம்ம கடுப்ப வேற கெளப்பி, இதெல்லாம் தேவையா?

7.  செம என்டேர்டைனிங்கான முதல் பாதிக்காக இந்தப் படம் கண்டிப்பாக பார்க்கலாம். விஜய் புல் ஸ்விங்குல இருக்கார், ரொம்ப நாளைக்கு அப்புறம், கில்லி, சச்சின்ல பார்த்த அதே இளமைத் துள்ளல், அட்டகாசம், செமயா இருக்காரு மனுஷன். கொஞ்சம் தொப்பை எட்டிப் பார்க்கிறது, அடுத்த படத்துல அதையும் கவனிச்சிட்டா, இன்றைய சினிமாவின் மார்கண்டேயனா வருவதற்கான எல்லா தகுதியும் இந்த ஆளுக்கிட்டதான் இருக்கு.

8.  இசை, ஒளிப்பதிவு இதர விதரங்கள் சொல்லிக்கொள்ளும் படி எதுவும் இல்லை. குறையும் இல்லை, நிறையும் இல்லை.


விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். மற்றயவர்கள் ஒரு முறை பார்க்கலாம், அல்லது குறைந்த பட்சம்,  டிவிலயாவது ஃபர்ஸ்ட் ஆப் கண்டிப்பாக பார்க்கணும்.

நம்ம ரேட்டிங் 6.5/10. (ஃபர்ஸ்ட் ஆப் 9/10, செகண்ட் ஆப் 4/10)

எல்லோருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள். 

டிஸ்கி: ஒன்ஸ் மோர் படத்துல அப்பன தத்தெடுத்த நம்ம இளைய தளபதி, இந்தப் படத்துல தாத்தாவையே தத்தெடுத்து சாதனை படைச்சிருக்காரு. அதுக்காகவேனும் பாருங்கள்.

டிஸ்கி:  ஏற்கனவே, சிவன்-சக்தி சண்டைய வச்சி, ஒரு பிரபு-சத்யராஜ் படம், ராஜேஷ் படம்,   அப்புறம்    இந்த படம், அதுல டாப்பு "ஒரு குவார்ட்டர் சொல்லேன் மச்சி" தான்!

டிஸ்கி: இங்கு நாம படம் பார்க்கப் போன காம்ப்ளெக்ஸ்ல எதிர் எதிரே ரெண்டு ஸ்க்ரீன்ஸ், ஒன்னுல ஜில்லா, மத்ததுல வீரம். ஜில்லா பார்த்துட்டு வீரம் பார்கலாம்ன்னுதான் இருந்தோம், பட், ஜில்லா முடியும் போது அந்த எண்ணம் சுத்தமா போயிட்டதால, வீரம் பார்க்க முடியல. என்ன ஒரு கவலை, தலைவர் காமெடி செமையா இருக்குன்னு எல்லாருமே, சொல்லும்போது, ஜில்லாவ விட, வீரம் பார்த்திருக்கலாமோன்னு ஒரு எண்ணம் வருது.

**********************************************

பதிவுக் குறிப்பு: 

ஆரம்பத்துலையே சொன்னது போன்று, ஒரே செயல்பாட்டினை இரு வேறு கோணங்களில் இருந்து பார்க்கவும், விவாதிக்கவும், தன்னையும், தன்சார்ந்தவர்களையும் பற்றி சுய பரீசீலனை செய்யவும் என பல வாய்ப்புக்களை கொண்டது படத்தின் கரு. ஒரு நல்ல இயக்குனர் கையில் நாயகன் இரண்டாம் பாகமாக அல்லது நாயகன் படத்தின் மறுபக்கமாக அமைந்திருக்கக் கூடியது. அது ஒரு பொருட்டன்று. அந்த படத்தை ஒரு மாஸ் ஆக்ஷன் படமாக கொடுக்க நினைக்கும் போது, அந்த எல்லைகளுக்குள் மட்டுமே பூரணமாக பயனித்திருந்தால், ஒரு சிவகாசி போன்றோ, அல்லது, ஒரு சிறுத்தை போன்றோ செம ஜாலியான ஒரு இரண்டாம் பாதியை கொடுத்திருந்தால், விஜயின் பாக்ஸ் ஆபீஸ் சரித்திரத்தில் முக்கிய இடம் பிடித்திருக்கக் கூடிய ஒரு படம். இரண்டாம் பாதியில் ஏற்பட்ட சில குறைகளும், இயக்குனரின் அனுபவம் இன்மையும், படத்தை சற்றே பாதித்து விட்டது. 



3 comments:

  1. கரெக்டாச் சொல்லிட்டீங்கய்யா..நல்ல கதை, நாசமாப் போச்சு..மோகன்லாலுக்கும்விஜய்க்கும் மோதல்-ன்னு மட்டும் படத்தை கொன்டு போயிருந்தாலே போதும்.சம்பத்தை நுழைக்கவுமே, படம் படுத்திடுச்சு.

    ReplyDelete
  2. என்னது டைரக்டரு ஒலகப்படம் எடுக்க முயற்சி பண்ணாரா.... அதுவும் டாகுடர வெச்சிக்கிட்டு........?

    ReplyDelete
  3. கொஞ்சம் வித்தியாசமான விமர்சனம்,நன்று!

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்!!