Tuesday, November 1, 2011

நாம் சுதந்திரம் பெற்றோமா அடிமைப் படுத்தப்பட்டோமா? - ஏழாம் அறிவு என்னுள் எழுப்பிய கேள்வி

பதிவுக்குறிப்பு: இது ஒரு ஒழுங்கு படுத்தப்பட்ட பதிவு அல்ல. நீண்ட நாளாகவே மனதிற்குள் விடை தெரியாது இருந்த சில கேள்விகள். ஏழாம் அறிவு படத்தினை பார்த்தபின்பு அவை மீண்டும் நினைவுக்கு வந்தன. உங்கள் முன் வைக்கிறேன். யாராவது பதில் தெரிந்தவர்கள், ஆர்வம் உள்ளவர்கள், அல்லது என்போன்றே கேள்விகள் உள்ளவர்கள் உங்கள் பதிவுகளில் இதை தொடர்ந்து, எனக்கும், என்னைபோன்ற பலருக்கும் தெளிவு ஏற்பட உதவும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


அமேரிக்கா வந்த புதிதில் அமெரிக்க நண்பர் ஒருவருடன் நடந்த உரையாடல். அவர் என்னிடம் இந்தியாவின் சிறப்புகளையும் பெருமைகளையும் கேட்ட போது நமது கலாசாரத்தையும் குடும்ப உறவுகளையும் தவிர கூறுவதற்கு என்னிடம் எதுவும் இருக்கவில்லை. அதன் பின்னர் இந்தியாவில் இருக்கும் கனியங்களைப் பற்றி நண்பர் கேட்டார், என்ன சொல்வது, வாசனை திரவியங்கள், பட்டு என ஏதேதோ சொன்னேன். கேட்டுக்கொண்டிருந்தார். கடைசியாக என்னிடம் ஒரு கேள்வி கேட்டார், நாங்கள் வாசனை திரவியங்களோ பட்டோ பாவிப்பதில்லை, ஆங்கிலேயர் பாவிப்பதாக தெரியவும் இல்லை, பின்னர் கொலம்பஸ் எதுக்காக இந்தியாவை தேடி பயணம் புறப்பட்டு இங்கே வந்தார்? இந்த கேள்விக்கு அவரை திருப்திப்படுத்தும் எந்த பதிலும் என்னிடம் இல்லை. கூடவே ஒரு விடயம் கூறினார், இந்தியாவை தேடி அவர் ஒரு நீண்ட பயணம் புறப்பட்டாரியின் நிச்சயம் அங்கு எதோ ஒரு சிறப்பம்சம் இருந்திருக்க வேண்டும், ஆனாலும் அது என்ன என்பது இங்குள்ள யாருக்கும் தெரியாது. "India must have played a big role in something those days, but we seems to have lost that" இது கடைசியாக அவர் எனக்கு கூறியது. இந்த கேள்விக்கு இன்று வரை என்னிடம் பதில் இல்லை. 

தொலைத் தொடர்புகள் எதுவும் அற்ற, நாடு தாண்டிய பயணங்கள் அற்றிருந்த ஒரு காலத்தில் இந்தியாவை தேடி ஒருவர் பயணிக்கிறார் என்றால், இந்தியாவின் பெருமைகள் நிறையவே இருந்திருக்க வேண்டும் என்பது அவரது எண்ணம். இதுபற்றி சிந்தித்துக்கொண்டிருந்த போதுதான் ஒரு சந்தேகம் வந்தது. ராவணனிடம் இருந்ததாக கூறும் புட்பக விமானம், ஒரு வேளை நாம் கவனிக்க தவறிய ஒன்றா? ஒருவேளை நமது மூதாதையர்கள் பறக்கும் சக்தி கொண்ட வாகனங்களை உருவாக்கக் கூடியவர்களாக இருந்தார்களா? அது மூலமாக இந்தியாவில் இருந்து இங்கிலாந்து போயிருப்பார்களோ? அல்லது கற்பனையில் தோய்ந்துபோன ஒரு விடயமா அது? பத்து தலைநகரங்களை ஆண்டதாலே பத்துத்தலை ராவணன் என பெயர்வந்தது என்றும் ஒரு கருத்து இருக்கிறதே. இது எப்போதோ நடந்த ஒரு சம்பவத்தின் அடிப்படையில் தோன்றியது. 


சுமார் ஒரு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் காலடி எடுத்துவைத்த முதல் வாரம், சயின்ஸ் எஜுகேசன் என்றொரு பாடம் படிக்க நேர்ந்தது, அதில் நமது ஆசிரியர் கீழைதேய  விஞ்ஞானம் பற்றி கூறியது ரொம்பவும் பிரமிக்க வைத்தது. சித்த வைத்தியம், நாட்டு மருத்துவம், நமது கட்டடக்கலை, நீர்பாசனத் திட்டங்கள் அது இது என பல விடயங்கள் கூறினார். ஆங்கிலேய மருத்துவம் பற்றியும் கூறினார்.  நமது கலைகள் அதன் பெருமைகள், நம்மவர்கள் உணவு பதபடுத்தும் வித்தைகள் பற்றியும் கூறினார். கீழைத்தேய விஞ்ஞானம் என பொதுப்படையாக இருந்ததால் இந்தியா தவிர்த்தும் சில விடயங்கள் கூறினார். சீனாவில் ஒன்பது கற்களை  ஒரு வரிசையில் அடுக்கிய ஒரு எந்திரம் இருந்ததாம், அதில் கற்கள் விழுவதை வைத்து பூமி அதிர்வு ஏற்படுவதை முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியுமாம். புட்பக விமானம் பற்றிய நமது சந்தேகத்தை தூண்டிவிட்டதும் அவரே. அவர் கூறிய பல விடயங்கள் பிரமிப்பூட்டுவதாக இருந்தது. இவை எல்லாம் ஏன் இன்று நம்மிடையே இல்லை என்பது அப்போது வியப்பாகவும் அதே நேரம் கவலையாகவும் இருந்தது. 

கீழைத்தேய விஞ்ஞானம், மருத்துவம், கலைகள் என்பன எவ்வாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டு அவற்றிற்கு  மாற்றாக மேலைத்தேய மருத்துவம், விஞ்ஞானம் என வந்தது, நாம் எப்படி ஒரு சந்தையாக மட்டும் ஆக்கப்பட்டோம், நம்மிடம் இருந்து எது எதை எல்லாம் அவர்கள் எடுத்துச்சென்றார்கள் என்று அவர் விவரித்தபோது கொட்டாவிதான் வந்தது. அந்த பாடத்துக்கு பரீட்சை இல்லை, எனவே அப்போதே  அதை மறந்துவிட்டேன். இன்று அது பற்றி சிந்திக்கும் போது எனது அலட்ச்சியத்தை நினைத்து எதோ ஒரு குற்ற உணர்வு என்னுள் இருக்கிறது. 

தமிழர் வரலாற்றில் "நீண்ட இரவு" என்று ஒன்று இருக்கிறது. இது ஐரோப்பிய நாடுகள் இந்தியாவை ஆழ முன்பே உள்ள ஒரு காலகட்டம் (போதிதர்மன் வாழ்ந்ததாக கூறும் காலகட்டம்), அந்த காலகட்டத்தில் உள்ள எதுவும் நமக்கு தெரியவில்லை, என்ன நடந்தது என்பதை அறிய எந்தவொரு சான்றுகளும் நம்மிடையே இல்லை. (கஜினி படத்துல சூரியாவோட உடம்புல குத்தியிருந்த பச்சையை அழிப்பது போல யாரோ அளித்திருக்கிறார்கள், அல்லது அவை தாமாகவே அழிந்து போயிருக்கின்றன)


நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளுள் மூவர் தமிழர். Sir C V  ராமன் (பௌதீகவியலாளர்), சுப்பிரமணியம் சந்திரசேகர் (அஸ்ட்ரோ பிசிக்ஸ், CV ராமனின் உறவினர்), வெங்கடராமன் ராமகிருஷ்ணன் (Structural biologist). C V ராமனை தெரிந்த அளவுக்கு நமக்கு ஏனைய இருவரையும் தெரியாது, இவர்கள் இருவரும் முறையே 1983 மற்றும் 2009 களில் நோபெல் பரிசு பெற்றவர்கள். அவர்கள் பரிசுகள் பெற்ற போது நாம் அவர்களை கொண்டாடினோம், ஆனால் அவர்களுக்கு உரிய மரியாதையை நாம் வளங்கியிருக்கியிருக்குறோமா அல்லது அவர்கள் முயற்சிகளயாவது நாம் தொடர்ந்திருக்கிரோமா? (கஜினி சூர்யா போல ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ்ல தான் நாம இருக்கோமா?)

முன்னைய காலங்கள் போன்று இப்போது நேரடி யுத்தங்கள் நடப்பதில்லை,  ஆனால் பொருளாதார யுத்தம் நடக்கிறது. வளர்ச்சியடைந்த நாடுகள் எனப்படுபவை தமக்கென எதோ ஒரு துறையில் முன்னேறி அதனை சந்தைப்படுத்துவன் மூலம் மூன்றாம் உலக நாடுகளை அடிமை படுத்தி வைத்திருக்கின்றன. காகேநெட் ஆயிலில் காலஸ்ற்றால் இல்லை என்றும் அமெரிக்காவிலும் மேலை நாடுகளிலும் தயாரிக்கப்படும் சண் ப்லவேர் ஆயிலை பிரபலப்படுத்தவே இவ்வாறு ஒன்று கொண்டுவரப்பட்டது என்றும் ஒரு கருத்து இருக்கிறது. இவ்வாறே விஞ்ஞானம் எனும் பெயரால் நாமது ஏற்றுமதிப் பொருள்கள் பல முடக்கப்படுகிறது. கணணி சந்தை முழுதும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில், இப்போது இரண்டாவது பெரிய சந்தையான தொலைபேசிகளும் முழுதும் அவர்களின் கட்டுப்பாட்டில். எஜுகேசன் என்பது எப்போதோ அமரிகாவினதும் பிருத்தானினதும் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது என்பதை நாம் இன்னும் உணர்து கொள்ளாமலே இருக்கிறோம்.

பிருத்தானிய காலனிகளில் இருந்து அவர்கள் விட்டுச்சென்ற போது, சிவில் யுத்தங்களையும் சேர்த்தே விட்டுச்சென்றார்கள் என்றொரு குற்றச்சாட்டும் இருக்கிறது. இந்தியா, இலங்கை, அமேரிக்கா என்பவை இவற்றிற்கு சிறந்த உதாரணங்கள். பல சிறு மாநிலங்களை ஒரே நாடாக இணைத்து அங்கு பிரச்சனைகளை விட்டுச் சென்றார்கள் என்பது அந்த குற்றச்சாட்டு. சிவில் யுத்தத்தை முடித்து வெற்றிகண்ட ஒரே நாடு அமெரிக்காதான், அவர்களும் அவர்கள் பங்குக்கு ஏனைய நாடுகளில் சிவில் யுத்தங்களை தூண்டிக்கொண்டே இருக்கிறார்கள். நாம் மீண்டும் அடிமைப் படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறோம்.

இன்று நம்மை எடுத்துப்பாருங்கள், நம்மை சுற்றி உள்ள எத்தனையோ பொருட்கள் மேலைத்தேய நாடுகளின் பெயர்களைத்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றன. நமது பாடத்திட்டம், ஜனநாயக அரசியல், முகாமைத்துவம், தொலைதொடர்பு சாதனங்கள், மருத்துவம், கணணி அறிவு, போதாக்குறைக்கு உணவு வகைகளில் இருந்து ஆடைகள் வரை எதுவுமே நமக்கு சொந்தமானது இல்லை. "நமது" என பெருமைப்பட்டுக்கொள்ள நம்மிடம் எதுவும் இல்லை. மேற்கத்தைய கலாசாரம் சிறந்ததா இந்திய கலாசாரம் சிறந்ததா என சேலையையும் குட்டைப்பாவடயையும் வைத்து பட்டிமன்றம் நடத்தும் நிலையில்தான் நாம் இருக்கிறோம். இவற்றுக்கு நடுவே தொக்கி நிற்கும் ஒரு கேள்வி. வெள்ளைக்காரன் மட்டுமல்ல, ஐரோப்பாவில் இருந்து எத்தனையோ நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு ஏன் இங்கு வந்தன, அவை நம்மிடம் எதை விட்டுச் சென்றன? உண்மையில் நாம் சுதந்திரம் பெற்றோமா அல்லது அடிமைப்படுத்தப்பட்டோமா?

இந்த பதிவினை தொடருமாறு  பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணன், செங்கோவி அண்ணன், ரெவெரி, ஜீ மற்றும் நிரூபன் அண்ணனை அழைக்கிறேன்.  

45 comments:

  1. 'ஏழாம் அறிவு' - இந்தப்படத்தால் நிறையப் பேருக்கு நிறையக் கேள்விகள் மனதில் தோன்றியிருக்கும்!

    அப்படியே எனக்கும்! 'ஏழாம் அறிவு என்னுள் எழுப்பிய கேள்வி' - இதை சப் டைட்டிலாகக் கொண்டு நிச்சயமா எழுதுகிறேன் பாஸ்!

    ReplyDelete
  2. ஜீ... said...
    ///'ஏழாம் அறிவு' - இந்தப்படத்தால் நிறையப் பேருக்கு நிறையக் கேள்விகள் மனதில் தோன்றியிருக்கும்!

    அப்படியே எனக்கும்! 'ஏழாம் அறிவு என்னுள் எழுப்பிய கேள்வி' - இதை சப் டைட்டிலாகக் கொண்டு நிச்சயமா எழுதுகிறேன் பாஸ்!///

    அழைப்பினை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி பாஸ்.. உங்களுக்கு எழுந்த கேள்விகளையும் தெரிந்து கொள்ள ஆர்வமாய் உள்ளோம்..

    ReplyDelete
  3. நிறைய கேள்விகளை எழுப்பி இருக்கீங்க... கொஞ்சம் வரலாற்றைத் திருப்பி பார்க்கனும்......

    ReplyDelete
  4. தற்போதைய உலகமயமாக்கலும் முற்காலத்தில் நடந்த நாடு பிடிக்கும் சம்பவங்களும் பல கேள்விகளை எழுப்பத்தான் செய்கின்றன.

    ReplyDelete
  5. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //தற்போதைய உலகமயமாக்கலும் முற்காலத்தில் நடந்த நாடு பிடிக்கும் சம்பவங்களும் பல கேள்விகளை எழுப்பத்தான் செய்கின்றன.//

    கண்டிப்பா அண்ணே, நாம வரலாறுல ரொம்ப வீக்கு, அதுதான் பதில்கள எதிர்பார்த்து கேள்விகள முன்வைச்சிருக்கோம், தெளிவு கிடைக்கும்ங்கற நம்பிக்கையில். அழைப்பினை ஏற்றமைக்கு நன்றிகள் அண்ணே..

    ReplyDelete
  6. மிகவும் அர்த்தமுள்ள/ஆழமான கேள்வியைத்தான் கேட்டு இருக்கிறீர்கள் ஆனால் இவற்றுக்கு பதில் சொல்லுமளவுக்கு என்னிடம் வரலாற்று ஞானமும் விஷய ஞானமும் இல்லை.. இருந்தாலும் ஏன் என்று யோசித்து கொண்டே இருக்கிறேன்..

    இப்படி மண்டைய பிச்சுகிட்டு யோசிக்க வைச்சுட்டீங்களே பாஸ்...

    ReplyDelete
  7. இந்த பதிவினை தொடருமாறு பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணன், செங்கோவி அண்ணன், ரெவெரி, ஜீ மற்றும் நிரூபன் அண்ணனை அழைக்கிறேன்.//

    ஏன்யா இம்புட்டு வெறி... பாவம்யா அவங்க... அவங்களும் எத்தன கேள்வி கேட்க்கப் போறாங்களோ?

    ReplyDelete
  8. வணக்கம் மாப்பிள
    உங்களின் இந்த பதிவை நான் முழுதும் ஆதரிக்கிறேன்.. ஏழாம் அறிவு பட விமர்சனங்களில் எல்லாம் நான் குறிப்பிடுவது இதுதான் அந்த படம் எங்களின் கடந்தகாலத்தை நம் வருங்கால சமூகம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.. நான் படத்தை முழுவதும் ஆதரிக்காவிட்டாலும் உண்மை இதுவே..

    ReplyDelete
  9. நன்றி நண்பரே...

    உங்கள் கேள்விகள் நம்மைப்போன்ற பலரின் மனதில் உள்ள கேள்விகளே...நீங்களே சரியாக தொடங்கி உள்ளீர்கள்...நீங்களே தொடரலாமே...எங்கள் முழு ஆதரவோடு...

    அடுததவர்களைப்பற்றி நிறைய படிக்கிறோம்...நம் நாட்டினைப்பற்றி நமக்கு எதுவுமே தெரியவில்லையே என்ற ஆதங்கம் எனக்கும் எப்பவுமே உண்டு நண்பரே...

    என் உறவினர் ஒருவர் 'இந்தியா ஒரு பிச்சைக்கார நாடு' என்று என்னிடமே சொன்ன போது தான் கூடுதலாய் வலித்தது...உணர்ச்சிவசப்பட்டு அவருடன் சண்டை போட்டாலும் அவருக்கு உடனடி பதில் என்னிடம் இல்லை...தவறு நம் மேல் தான்...

    நம்மைப்பற்றி...நம் கலாச்சாரங்கள் பற்றி...நம் பாரம்பரியம் பற்றி...நம் முன்னோர்கள் பற்றி ஓரளவு அறியாத வயதில் மனப்பாடம் செய்ததோடு சரி...

    விளைவு என் நாடு...என் தாய் நாடு...என்ற தொடரை எழுதலாமென்று ஆரம்பித்தேன்...

    சகோதரி சாகம்பரி தான் ஏற்கனவே அந்த முயற்சியில் இருப்பதாய் சொன்னார்..
    http://annaiboomi.blogspot.com/2011/09/1.html

    அதனால் என் முயற்சி தற்சமயம் வெறும் ஆழ்ந்த வாசிப்போடு நிற்கிறது...சற்றே சுவாரஸ்யமாக எழுதப்படித்த பின்...வேலைப்பளு குறைந்த பின் அந்த தொடரை வேறு கோணத்தில் எழுதலாமென்று இருந்தேன்...

    சமீபத்தில் தொலைக்காட்சியில் உங்கள் கேள்விகளுக்கு விடை தரும் ஒரு பொக்கிஷம் கண்டேன்...முடிந்தால் நீங்களும் பாருங்கள்...

    Youtube இல் கண்டிப்பாக இருக்கும்....

    சில வருடங்களுக்கு முன் வந்த BBC TV documentary series

    http://www.pbs.org/thestoryofindia/

    http://en.wikipedia.org/wiki/The_Story_of_India

    மறுபடியும் நன்றி நண்பரே உங்கள் அழைப்புக்கு...

    ReplyDelete
  10. ஐரோப்பியர்கள் வரலாறு படிக்கையில் கொலம்பஸ் நம் கண்டத்துக்கு வந்ததுக்கு இந்த இரண்டை மட்டும்தான் காரணம் என்று புரிந்து கொள்கிறார்கள்.

    பட்டு ... spices ...அந்த கால கட்டத்தில் சிறு அளவு கூட வர்த்தக ரீதியாக பெரும் லாபத்தை தந்ததும் ஒரு காரணம்...
    நம் கண்டத்தில் கிடைத்த போதைப்பொருட்களும் மற்றுமோர் காரணம்...

    இது எத்தனை சதவீதம் என்பது பெரிய கேள்விக்குறி ?

    ReplyDelete
  11. நீங்கள் எழுப்பியுள்ள கேள்விகளும், உங்கள் யோசனையும் பாராட்டத்தக்கன.

    ReplyDelete
  12. அதுசரி, ஏன்யா என்னையும் இழுத்து விட்ருக்கீங்க? இப்போ நான் என்ன செய்யணும்?
    ஏழாம் அறிவு எழுப்பிய கேள்விகள்-னு பதிவு போடணுமா? கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்கய்யா..

    ReplyDelete
  13. Heart Rider said...
    ///மிகவும் அர்த்தமுள்ள/ஆழமான கேள்வியைத்தான் கேட்டு இருக்கிறீர்கள் ஆனால் இவற்றுக்கு பதில் சொல்லுமளவுக்கு என்னிடம் வரலாற்று ஞானமும் விஷய ஞானமும் இல்லை.. இருந்தாலும் ஏன் என்று யோசித்து கொண்டே இருக்கிறேன்..

    இப்படி மண்டைய பிச்சுகிட்டு யோசிக்க வைச்சுட்டீங்களே பாஸ்...///

    அது எப்புடிங்க நாங்க மட்டும் மண்டைய பிச்சுக்கறது, நீங்களும் பிச்சுக்கோங்கோ.. கருத்துக்களுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  14. தமிழ்வாசி - Prakash said...
    //இந்த பதிவினை தொடருமாறு பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணன், செங்கோவி அண்ணன், ரெவெரி, ஜீ மற்றும் நிரூபன் அண்ணனை அழைக்கிறேன்.//

    ஏன்யா இம்புட்டு வெறி... பாவம்யா அவங்க... அவங்களும் எத்தன கேள்வி கேட்க்கப் போறாங்களோ?//

    இவரு இம்புட்டு டென்சன் ஆகுறாரே, இவரையும் இழுத்து விட்டிருக்கலாமோ?

    ReplyDelete
  15. காட்டான் said...
    ///வணக்கம் மாப்பிள
    உங்களின் இந்த பதிவை நான் முழுதும் ஆதரிக்கிறேன்.. ஏழாம் அறிவு பட விமர்சனங்களில் எல்லாம் நான் குறிப்பிடுவது இதுதான் அந்த படம் எங்களின் கடந்தகாலத்தை நம் வருங்கால சமூகம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.. நான் படத்தை முழுவதும் ஆதரிக்காவிட்டாலும் உண்மை இதுவே..///

    வணக்கம் மாம்ஸ், உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கு நன்றி மாம்ஸ், ஒரு படைப்பாக ஏழாம் அறிவு மீது பல விமர்சனகள் முன்வைக்கலாம், செங்கோவி அவர்கள் முன்வைத்தது அதில் ஒன்று, ஆனால் ஒரு காமேர்சியல் சினிமாவாக, ஒரு பரிசோதனை முயற்சியாக நாலு பேரை நாலு விடயங்களை சிந்திக்க விவாதிக்க தூண்டியது என்கிற வகையில் அந்த முயற்சி பாராட்டப்படக்கூடியது, அதுவும் வியாபர நோக்கத்துக்காக நடத்தப்படும் மிகைப்படுத்தப்பட்ட பிரசாரங்களை தவிர்த்து விட்டு நோக்கும் போது..

    ReplyDelete
  16. ரெவெரி said...
    ///ஐரோப்பியர்கள் வரலாறு படிக்கையில் கொலம்பஸ் நம் கண்டத்துக்கு வந்ததுக்கு இந்த இரண்டை மட்டும்தான் காரணம் என்று புரிந்து கொள்கிறார்கள்.

    பட்டு ... spices ...அந்த கால கட்டத்தில் சிறு அளவு கூட வர்த்தக ரீதியாக பெரும் லாபத்தை தந்ததும் ஒரு காரணம்...
    நம் கண்டத்தில் கிடைத்த போதைப்பொருட்களும் மற்றுமோர் காரணம்...

    இது எத்தனை சதவீதம் என்பது பெரிய கேள்விக்குறி ?///

    நன்றி நண்பரே, நீங்கள் வழங்கிய இணைப்புகளை நிச்சயம் பார்கிறேன், வராலாறு தெரியாததால் நானும் முருகதாஸ் போன்று தவறு செய்ய விரும்பவில்லை, அதனாலேயே உங்கள் போன்றவர்களை தொடருமாறு கேட்கிறேன், தீவிர வாசிப்புடன் ஏதும் தெளிவு கிடைக்கும் போது நிச்சயம் நானும் தொடர வாய்ப்பு உண்டு.

    ReplyDelete
  17. செங்கோவி said...
    //நீங்கள் எழுப்பியுள்ள கேள்விகளும், உங்கள் யோசனையும் பாராட்டத்தக்கன.//

    நன்றிண்ணே, எத்தன நாளைக்குதான் நாங்களும் வெறும் காமெடி பீசாவே இருக்கறது...

    ReplyDelete
  18. செங்கோவி said...
    ///அதுசரி, ஏன்யா என்னையும் இழுத்து விட்ருக்கீங்க? இப்போ நான் என்ன செய்யணும்?
    ஏழாம் அறிவு எழுப்பிய கேள்விகள்-னு பதிவு போடணுமா? கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்கய்யா..///

    ஏழாம் அறிவு பத்தி எழுதி நாம அந்த படத்துக்கு ப்ரோமோசனா பண்ண போறம்? உங்க தெளிந்த சிந்தனையும் நேர்கொண்ட பார்வையும் எங்களுக்கும் ஏதாச்சும் ஞான ஒளியை ஏற்படுத்தாதா என்கிற நப்பாசையில் தான் உங்களையும் இழுத்து விட்டிருக்கோம், கேள்விகளுக்கு பதில் சொல்லுவதோ, இன்னும் கேள்வி எழுப்புவதோ, அது உங்க இஷ்டம்ண்ணே...

    ReplyDelete
  19. //// நாங்கள் வாசனை திரவியங்களோ பட்டோ பாவிப்பதில்லை, ஆங்கிலேயர் பாவிப்பதாக தெரியவும் இல்லை, பின்னர் கொலம்பஸ் எதுக்காக இந்தியாவை தேடி பயணம் புறப்பட்டு இங்கே வந்தார்? இந்த கேள்விக்கு அவரை திருப்திப்படுத்தும் எந்த பதிலும் என்னிடம் இல்லை. கூடவே ஒரு விடயம் கூறினார், இந்தியாவை தேடி அவர் ஒரு நீண்ட பயணம் புறப்பட்டாரியின் நிச்சயம் அங்கு எதோ ஒரு சிறப்பம்சம் இருந்திருக்க வேண்டும், ஆனாலும் அது என்ன என்பது இங்குள்ள யாருக்கும் தெரியாது.////

    வணக்கம் பாஸ் அற்புதமான பல கேள்விகளை கேட்டுள்ளீர்கள்...

    கொலம்பஸ் அமேரிக்க கண்டத்தை கண்டு பிடித்தவர் என்றுதான் நான் அறிந்திருக்கின்றேன்...அவர் இந்தியா வந்தது பற்றி நான் அறியவில்லை.எனவே அது பற்றி எனக்குத்தெரியாது.

    இந்தியா போன்ற கீழத்தேய நாடுகளை வஸ்கொடகாமா என்ற கடலோடி.தான் முதலில் கீழத்தேய நாடுகளுக்கு வந்தாகவும் ஓரு தகவல்..இருக்கு...ஓல்லாந்தர் காலத்துக்குப்பிறகு தான் போர்த்து கீசர்,ஆங்கிலேயர்கள் வந்தார்கள்..இங்கிருந்த மன்னர்களின் ஆட்சிமுறைகளையும் நாட்டின் வளங்களையும்....அபகரித்து அடிமைப்படுத்தும் நோக்கில்தான் மேலத்தேய நாட்டவர்கள் நிச்சயம் வந்திருப்பார்கள்....

    வாசனைத்திரவியங்களை,பட்டு போன்றவற்றை மேலத்தேய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததாக எங்கள் பாடப்புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது...

    எது எப்படியோ நாம் எம் தனித்துவமான பலவற்றை இழந்துவிட்டோம் என்பது மாத்திரம் உண்மை இந்த வரலாற்று தவறுக்கு யார் காரணம்...நம் முன்னோர்கள் தான் நாமும் இனிவரும் எம் சந்ததிக்கு இந்தத்தவறை செய்யாமல் எம் பாரம்பரியங்களை காப்போம்

    ReplyDelete
  20. ////வெள்ளைக்காரன் மட்டுமல்ல, ஐரோப்பாவில் இருந்து எத்தனையோ நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு ஏன் இங்கு வந்தன, அவை நம்மிடம் எதை விட்டுச் சென்றன? உண்மையில் நாம் சுதந்திரம் பெற்றோமா அல்லது அடிமைப்படுத்தப்பட்டோமா?////

    கொஞ்சம் சிந்திக்க வேண்டிய கேள்வி.....

    ReplyDelete
  21. நண்பா உங்களுடைய வருத்தம் எனக்கும் உண்டு. நமது அந்த இருண்ட கால வரலாறு என்பது உண்மை. சிந்திக்க வைக்கும் பதிவு.

    ReplyDelete
  22. வணக்கம் டாக்டர்~அருமை,கேள்வியும் நியாயமானதே.இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நாங்களும் வெறும் காமெடி பீசாவே இருக்கறது.?

    ReplyDelete
  23. மச்சான், நீ இந்த பதிவ போட போறன்னு தெரியும், பட் இவ்வளவு மேட்டர் இருக்குன்னு தெரியாது.. ஓகே.. கன்டின்யூ பண்ணுவோம்..

    ReplyDelete
  24. அப்புறம் நம்ம சயன்ஸ் எஜுகேஷன் கிளாஸ்ல அந்த வாத்தி இதையா சொல்லிக்கிட்டு இருந்தாரு..எனக்கு அப்பவும் வெளங்கல இப்பவும் வெளங்கல.... (காலைல எட்டு மணிக்கு லெக்சர வச்சி தொலைச்சி புட்டானுங்களே,

    ReplyDelete
  25. அப்புறம் நீயே ரா ஒன் பதிவுல சொல்லிட்ட ///மனதளவில் குழந்தைகளாகவும் செயல்பாடுகளில் முத்தல்களாகவும் இருக்கும் நம்ம மொக்கராசு மாமா////ன்னு .... அதுனால சத்தியமா இதுக்கு கருத்து சொல்ற அளவுக்கு எனக்கு அறிவு இல்ல..

    ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன் மச்சான்... சரித்திரத்த கொஞ்சம் திருப்பி பார்த்தோம்னா, அது நமக்கு கத்து குடுத்துருக்குறது ஒண்ணே ஒண்ணுதான் "நாம வாழனும்னா யார வேணும்னாலும் எத்தன பேர வேணும்னாலும் கொல்லலாம்"

    ReplyDelete
  26. K.s.s.Rajh said...

    //கொலம்பஸ் அமேரிக்க கண்டத்தை கண்டு பிடித்தவர் என்றுதான் நான் அறிந்திருக்கின்றேன்...அவர் இந்தியா வந்தது பற்றி நான் அறியவில்லை.எனவே அது பற்றி எனக்குத்தெரியாது.//

    ஆம் நண்பரே, அவர் இந்தியா வரவில்லை, ஆனால் இந்தியாவை தேடி புறப்பட்ட அவர் பயணமே அவரை அமெரிக்காவுக்கு இட்டு சென்றது என்பது வரலாறு.. அதனால் தான் அமெரிக்க பூர்வ குடி மக்கள் செவ் இந்தியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இந்த கடல் தாண்டிய பயணங்கள் எதேர்ச்சையானது அல்ல என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது. "சில்க் வே" என்பது அடைபட்டு விட புதிய வழி தேடி புறப்பட்ட பயணங்களே இந்த கடல் வழி பயணங்கள் என்றே நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் அது அந்த கடல் தாண்டிய பயணத்துக்கு போதுமான காரணி அல்ல என்பது எனது அமெரிக்க நண்பரின் கருத்து. அவரும் என்னைபோன்றே, பெரிதாக வரலாறு அறியாதவர் என்பதையும் கவனத்தில் கொள்வோம்.

    //ஓல்லாந்தர் காலத்துக்குப்பிறகு தான் போர்த்து கீசர்,ஆங்கிலேயர்கள் வந்தார்கள்..இங்கிருந்த மன்னர்களின் ஆட்சிமுறைகளையும் நாட்டின் வளங்களையும்....அபகரித்து அடிமைப்படுத்தும் நோக்கில்தான் மேலத்தேய நாட்டவர்கள் நிச்சயம் வந்திருப்பார்கள்....//

    காலனி காலத்துக்கு முன்பே பல ஆக்கிரமிப்புக்கள் நடந்திருக்கின்றன...

    //எது எப்படியோ நாம் எம் தனித்துவமான பலவற்றை இழந்துவிட்டோம் என்பது மாத்திரம் உண்மை இந்த வரலாற்று தவறுக்கு யார் காரணம்...நம் முன்னோர்கள் தான் நாமும் இனிவரும் எம் சந்ததிக்கு இந்தத்தவறை செய்யாமல் எம் பாரம்பரியங்களை காப்போம்//

    அலட்ச்சியம் ஒரு காரணமாக இருக்கலாம், திட்டமிடப்பட்ட செயல்பாடுகள் ஒரு காரணமாக இருக்கலாம். கேள்விகளை முன்வைத்துள்ளோம், தெளிவுகள் பிறக்குமென நம்புவோம்

    ReplyDelete
  27. பாலா said...
    //நண்பா உங்களுடைய வருத்தம் எனக்கும் உண்டு. நமது அந்த இருண்ட கால வரலாறு என்பது உண்மை. சிந்திக்க வைக்கும் பதிவு//

    நன்றி நண்பரே... சிந்திப்போம்... உலகமயமாக்கல் என்பது என்ன, அது எவ்வாறு வளர்ச்சியடையும் நாடுகளை பாதிக்கிறது என்பதே அடிப்படை கேள்வி.

    ReplyDelete
  28. Yoga.S.FR said...
    //வணக்கம் டாக்டர்~அருமை,கேள்வியும் நியாயமானதே.இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நாங்களும் வெறும் காமெடி பீசாவே இருக்கறது.?//

    நன்றி ஐயா. இப்புடியெல்லாம் பதிவு போடாட்டி ஊருக்குள்ள ஒரு பயலும் மதிக்க மாட்டேங்குறாங்க... அதான்.. ஆங்..

    ReplyDelete
  29. மொக்கராசு மாமா said...
    //மச்சான், நீ இந்த பதிவ போட போறன்னு தெரியும், பட் இவ்வளவு மேட்டர் இருக்குன்னு தெரியாது.. ஓகே.. கன்டின்யூ பண்ணுவோம்..//

    அடடே.. நம்ம மாம்ஸ்ஸே குஷி ஆகிட்டாரே..

    // அப்புறம் நம்ம சயன்ஸ் எஜுகேஷன் கிளாஸ்ல அந்த வாத்தி இதையா சொல்லிக்கிட்டு இருந்தாரு..எனக்கு அப்பவும் வெளங்கல இப்பவும் வெளங்கல.... (காலைல எட்டு மணிக்கு லெக்சர வச்சி தொலைச்சி புட்டானுங்களே)//

    பேசாம தூங்குங்க மாம்ஸ்..பாதி தூக்கத்துல காமெண்டு போட்டா இப்புடித்தான்..

    ReplyDelete
  30. எனக்கும் இந்த மாதிரி புதையுண்ட (!?)வரலாறு படிக்கிறது, தெரிஞ்சிகிறது ரொம்ப பிடிக்கும் .எனக்காகவே இந்த தொடர ஸ்டார்ட் பண்ணுன மாதிரி இருக்கு .ரொம்ப நன்றி நண்பா
    அப்புறம் நம்ம சங்கத்துல இருக்கிற நிறைய பெரியவங்க முக்கியமா நம்ம ராமசாமி அண்ணன், தலைவர் ஜீ, அண்ணன் ரெவெரி STD-ல(STDna வரலாறு தான ) ரொம்ப பெரிய்ய படிப்பு படிசிருக்கங்கனு கேள்வி பட்டேன். நம்ம நம்பிக்கைய காப்பாத்துவாங்க.....அண்ணே சொல்லிடுங்கன்னே

    ReplyDelete
  31. //காகேநெட் ஆயிலில் காலஸ்ற்றால் இல்லை என்றும் அமெரிக்காவிலும் மேலை நாடுகளிலும் தயாரிக்கப்படும் சண் ப்லவேர் ஆயிலை பிரபலப்படுத்தவே இவ்வாறு ஒன்று கொண்டுவரப்பட்டது என்றும் ஒரு கருத்து இருக்கிறது//
    enakku therindhu coconut oil la 90% iruppadu saturated fats..adhu than LDL enappadum koodadha cholesterol ai uruvaakkum. matha vegetable oil kalil( sunflower, soybean, virgin olive oil,gingelly (nallennai))unsaturated fats nirave irukku..ivai HDL engira nalla cholesterolai undaakum..so nenga solra madhiri sunflower oil verum businesskaha panna mattrnu thonala..

    ReplyDelete
  32. இனிய காலை வணக்கம் பாஸ்,
    உங்களின் இப் பதிவிற்கு முதலில் ஒரு சல்யூட்.
    சூப்பரான பதிவு,
    இதுவரை பலருக்குத் தெரியாத விடயங்களைப் பற்றிய தேடலைத் தொடங்குமாறு தூண்டுகின்றது இப் பதிவு.

    கண்டிப்பாக இப் பதிவு தொடர்பாக நானும் சில ஆராய்ச்சிக் கட்டுரைகளை வரைகின்றேன்.


    உடல் நலக் குறைவினால் உடனுக்குடன் வர முடியலை பாஸ்..

    ReplyDelete
  33. எமது கடந்த காலம் பற்றிய பல விடயங்கள் வெளித் தெரிய வரும் போது தான் எமது சமூகத்தில் உள்ளோருக்கு
    நாமூம் முன்னேற வேண்டும் எனும் ஆவல் வரும் என்பது என் கருத்து.

    உங்கள் அழைப்பை ஏற்று நானும் தொடர்கிறேன் பாஸ்..

    ReplyDelete
  34. அருமை !...எத்தனை கேள்விக்குறிகள் அத்தனையும் வியப்பூட்டும்
    தகவல். படிக்கப் படிக்க மென்மேலும் இத் தொடரை தொடரவேண்டும்
    என்ற ஆவல் மனதில் எழும்வண்ணம் தங்கள் படைப்பு உள்ளது .
    வாழ்த்துக்கள் சகோ மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  35. The problem was India ruled in small areas by many kings .Nobody united as India.British peoples only united total peoples and Gandhi followed to get freedom to all nation.Every body know 4 cows 1 lion story same like that British guys captured all areas .
    On ancient period every body taken science and geography as a secret.They not mention or told to any body for their next genration. Sitha treatment,varma treatment cure all dieases except road accident.Nowadays nobody ( sitha& varma doctors) know
    full secret whatever they known they giving treatment and earning money.Many duplicates using this and earning money ( like Salem doctor)

    ReplyDelete
  36. உதவாக்கரை said...
    ///எனக்கும் இந்த மாதிரி புதையுண்ட (!?)வரலாறு படிக்கிறது, தெரிஞ்சிகிறது ரொம்ப பிடிக்கும் .எனக்காகவே இந்த தொடர ஸ்டார்ட் பண்ணுன மாதிரி இருக்கு .ரொம்ப நன்றி நண்பா
    அப்புறம் நம்ம சங்கத்துல இருக்கிற நிறைய பெரியவங்க முக்கியமா நம்ம ராமசாமி அண்ணன், தலைவர் ஜீ, அண்ணன் ரெவெரி STD-ல(STDna வரலாறு தான ) ரொம்ப பெரிய்ய படிப்பு படிசிருக்கங்கனு கேள்வி பட்டேன். நம்ம நம்பிக்கைய காப்பாத்துவாங்க.....அண்ணே சொல்லிடுங்கன்னே///

    ஆமாண்ணே, ஆமாண்ணே, நாமளும் STDல வீக்குத்தான்..

    ReplyDelete
  37. VITHYAN'S said...
    //காகேநெட் ஆயிலில் காலஸ்ற்றால் இல்லை என்றும் அமெரிக்காவிலும் மேலை நாடுகளிலும் தயாரிக்கப்படும் சண் ப்லவேர் ஆயிலை பிரபலப்படுத்தவே இவ்வாறு ஒன்று கொண்டுவரப்பட்டது என்றும் ஒரு கருத்து இருக்கிறது//
    enakku therindhu coconut oil la 90% iruppadu saturated fats..adhu than LDL enappadum koodadha cholesterol ai uruvaakkum. matha vegetable oil kalil( sunflower, soybean, virgin olive oil,gingelly (nallennai))unsaturated fats nirave irukku..ivai HDL engira nalla cholesterolai undaakum..so nenga solra madhiri sunflower oil verum businesskaha panna mattrnu thonala..////

    இருக்கலாம்ன்னே, நீங்க சொல்றத நானும் கேள்விப்பட்டிருக்கேன், ஆனா இப்படியும் ஒரு கருத்து இருக்குன்னு சொல்லத்தான். நான் இங்க வந்த புதுசுல ஜப்பான் வாகனங்கள் எதுவுமே ப்ரேக் பிடிக்கலன்னு பெரிய அடம் பண்ணினாங்க, அந்த வாகனங்கள எல்லாம் தடை செய்யற அளவுக்கு போச்சி.. அப்புறமா அந்த வாகனகளுக்கு ப்ரேக் தயாரிச்சது அமெரிக்க கம்பெனின்னு தெரிஞ்சதும் மறுபடியும் ப்ரேக் பிடிக்க ஆரம்பிச்சிட்டுது... இதெல்லாம் இங்க நடக்குறது சகஜம். அதுதான் சொன்னேன்.

    ReplyDelete
  38. நிரூபன் said...
    ///இனிய காலை வணக்கம் பாஸ்,
    உங்களின் இப் பதிவிற்கு முதலில் ஒரு சல்யூட்.
    சூப்பரான பதிவு,
    இதுவரை பலருக்குத் தெரியாத விடயங்களைப் பற்றிய தேடலைத் தொடங்குமாறு தூண்டுகின்றது இப் பதிவு.

    கண்டிப்பாக இப் பதிவு தொடர்பாக நானும் சில ஆராய்ச்சிக் கட்டுரைகளை வரைகின்றேன்.///

    நன்றி பாஸ், எனக்கு வரலாறோ விஞ்ஞானமோ பெரிதாக தெரியாது. சந்தேகம் மட்டும் இருந்தது, உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாய் உள்ளேன்.

    //உடல் நலக் குறைவினால் உடனுக்குடன் வர முடியலை பாஸ்..//

    சீக்கிரம் குணமாக வாழ்த்துக்கள்ண்ணே, உடல் நல குறைவுன்னா கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாமே..

    ReplyDelete
  39. நிரூபன் said...
    //எமது கடந்த காலம் பற்றிய பல விடயங்கள் வெளித் தெரிய வரும் போது தான் எமது சமூகத்தில் உள்ளோருக்கு
    நாமூம் முன்னேற வேண்டும் எனும் ஆவல் வரும் என்பது என் கருத்து.

    உங்கள் அழைப்பை ஏற்று நானும் தொடர்கிறேன் பாஸ்..//

    நன்றி பாஸ், நாமும் தலை நிமிர்ந்து நிற்க வேண்டாமா? எத்தனை நாளைக்குதான் அடிமை மனப்பான்மையிலேயே இருப்பது..

    ReplyDelete
  40. அம்பாளடியாள் said...
    //அருமை !...எத்தனை கேள்விக்குறிகள் அத்தனையும் வியப்பூட்டும்
    தகவல். படிக்கப் படிக்க மென்மேலும் இத் தொடரை தொடரவேண்டும்
    என்ற ஆவல் மனதில் எழும்வண்ணம் தங்கள் படைப்பு உள்ளது .
    வாழ்த்துக்கள் சகோ மிக்க நன்றி பகிர்வுக்கு//

    மிக்க நன்றி சகோ.. நீங்களும் தொடர முயற்சிக்கலாமே...

    ReplyDelete
  41. Tirupurvalu said...
    //The problem was India ruled in small areas by many kings .Nobody united as India.British peoples only united total peoples and Gandhi followed to get freedom to all nation.Every body know 4 cows 1 lion story same like that British guys captured all areas .
    On ancient period every body taken science and geography as a secret.They not mention or told to any body for their next genration. Sitha treatment,varma treatment cure all dieases except road accident.Nowadays nobody ( sitha& varma doctors) know
    full secret whatever they known they giving treatment and earning money.Many duplicates using this and earning money ( like Salem doctor)//

    உண்மை, சில விடயங்களை தொலைத்து விட்டோம், சிலவற்றை பார்க்க மறுக்கிறோம், தொடர்பவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பாப்போம்.

    ReplyDelete
  42. It is true that 7am arivu has mooted an intellecutal debate/thinking/research among many tamils. Looking forward to nice articles from you and others.

    ReplyDelete
  43. ////கஜினி படத்துல சூரியாவோட உடம்புல குத்தியிருந்த பச்சையை அழிப்பது போல யாரோ அளித்திருக்கிறார்கள், அல்லது அவை தாமாகவே அழிந்து போயிருக்கின்றன///

    கண்முன்னேயே எத்தனை வரலாற்றை அழிக்கிறாங்க.. அது போல தானோ தெரியல..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    இலங்கைப் பதிவர்களின் முதல் குறும்படம் - ஒரு பழைய முயற்சி

    ReplyDelete
  44. “அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
    இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
    கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
    வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.

    ReplyDelete
  45. இந்தியா ஒரு யானை போல. அதாவது யானையால் தனக்கு இவ்வளவு பெரிய உடம்பு இருக்கிறதென்பதே தெரியாது. அது தன் உடம்பைப் பார்க்க நேரிட்டாலும், அதனின் பெரிய காதுகளை மீறி அதனால் பார்க்கமுடியாது . அதனால் மற்ற யானைகளைப் பார்த்து 'இது நம்மை விட பலசாலியானது' என்று நினைத்துக் கொள்ளுமாம். அதுபோலத்தான் நம் நாடும். அதனுடைய பெருமைகள் அதற்கே தெரியாது. நம்முடைய பெருமைகள் எனச் சொல்லும் அனைத்தையும் நம்மை ஆண்ட நாடுகளும், நம்மை சிறை பிடிக்க நினைத்த நாடுகளும் 'எக்காரணம் கொண்டும் இந்த நாடு வளர்ந்து விடக் கூடாது' என்று நம் முன்னோர்கள் விட்டுச் சென்று பல நல்ல விஷயங்களை வேண்டுமென்றே அவர்கள் அழித்துவிட்டார்கள். மிச்சம் மீதியை 'நாகரீக மாற்றம்' என்ற பெயரில் நம்மவர்களே அழித்து விட்டார்கள்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்!!