Tuesday, July 31, 2012

THE DARK KNIGHT RISES : Nolen's BATMAN FRANCHISE - ஒரு பார்வை


சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட THE DARK KNIGHT RISES படம் பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். Christopher Nolen னின் BATMAN பட வரிசையின் மூன்றாவது படம் இது. முதல் இரு படங்கள் தந்த எதிர்பார்ப்பும் இங்கு படத்துக்கு இருந்த அளவு கடந்த எதிர்பார்ப்பும் என்னுள்ளும் தொற்றிக்கொண்டிருந்தது. படம் வெளியாகிய முதல் நாள் நள்ளிரவுக் காட்ச்சிக்கு முதல் ஆளாக வரிசையில் நின்று படம் பார்த்த போதும் இந்த படத்துக்கு விமர்சனம் எழுதுவதா, இல்லையா, எழுதினால் எவ்வாறான விமர்சனம் எழுதுவது போன்ற பல குழப்பங்கள் காரணமாக கால தாமதமாகி இந்த பதிவு வருகிறது.

சூப்பர் ஹீரோ படங்கள் மீது எனக்கு அதிக நாட்டம் இருந்ததில்லை என்பதை முன்பே ஒரு பதிவில் கூறியிருந்தேன். அதற்க்கு மிக முக்கிய காரணங்களுள் ஒன்று 1997 இல் வெளியான BATMAN & ROBIN தந்த அனுபவம். George Clooney, Arnold Schwarzenegger போன்ற பெரிய ஸ்டார் காஸ்ட் இருந்தும் வழக்கமான மசாலா கதையினால் பெரும் தோல்வியை தழுவிய படம். அத்துடன் BATMAN Franchise முற்றிலுமாக கைவிடப்பட்டது. இந்த பின்னணியிலேயே 2005 ஆம் ஆண்டு BATMAN BEGINS வெளியானது, நோலெனின் திரைக்கதை காரணமாக மட்டுமில்லாமல், சூப்பர் ஹீரோ படங்கள் மீதான அவரது மிகவும் வேறுபட்ட ஒரு பார்வை காரணமாகவும் அதிக அளவில் பிரபலமானது அந்த படம். 2008 இல் வெளியான THE DARK KNIGHT படம் ஹீத் லெட்ஜெரின் அட்டகாசமான ஜோகர் கதபாத்திரத்தினாலும், படம் வெளிவர முன்னர் நிகழ்ந்த அவரது மரணத்தினாலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்ப்பு பெற்று மூன்றாவதும் இறுதியுமான THE DARK NIGHT RISES படத்துக்கு வரலாறு காணாத ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 


இந்த மூன்று படங்களையும் பற்றி மிகச்சுருக்கமாக சொல்லப்போனால், சிறு வயதில் தன் கண்ணெதிரே தாய் தந்தையார் கொல்லப்படுவதை நேரில் பார்க்கும் பணக்கார சிறுவன் Bruce Wayne பிற்காலத்தில் குற்றங்களை எதிர்க்கும் BATMAN ஆக மாறுவது முதல் பாகமாகவும், ஜோகர் மற்றும் two-face எனும் இரு வில்லன்களிடம் இருந்து கோதம் சிட்டி மக்களை காப்பது இரண்டாம் பாகமாகவும்  அமைந்திருக்கும். இரண்டாம் பாக முடிவில் ஹாவி டென்ட் எனும் டிஸ்டிரிக்ட் அட்டர்னி யை கொன்ற பழியை ஏற்றுக்கொண்டு BATMAN காணாமல் போய் விடுகிறார். ஹாவி டென்ட் தான் two-face என்பது மக்களிடம் இருந்து மறைக்கப்படுகிறது. இந்த பின்னணியிலேயே மூன்றாம் பாகம் உருவாகிறது. DARK KNIGHT RISES படம் அமைதியான கோதம் சிட்டியில் ஆரம்பிக்கிறது. BANE எனும் கொடூர வில்லனிடம் இருந்து மறுபடியும் நகரத்தை காக்க வரும் BATMAN எவ்வாறு மக்களை காப்பாற்றினார் என்பதை சொல்வதே இந்த மூன்றாம் பாகம். BATMAN & ROBIN னுக்கான சிறிய லீடுடன் படம் முடிகிறது. இதற்க்கு மேல் நோலன் இந்த படத்தினை எடுக்கபோவதில்லை என்ற போதிலும் கண்டிப்பாக வேறு யாரையாவது வைத்து அதை எடுப்பார்கள் என்பதே என் கணிப்பு. ஒரு இறந்துவிட்ட franchise ஐ மறுபடியும் தொடங்கி அதை இவ்வளவு பெரிய மக்கள் வரவேற்ப்பு பெற்ற ஒன்றாக ஆக்கி முடித்து வைத்திருக்கிறார் நோலன். BATMAN பற்றிய நோலனின் பார்வை என்ன என்பதை இனி பார்ப்போம்.

குற்றங்களை எதிர்க்கும் ஒரு சாதாரண மனிதனாகாவே நோலன் BATMANஐ பார்க்கிறார். ஒழுங்கு படுத்தப்பட்ட குற்றங்களை எதிர்பதற்காக தன்னை தயார் படுத்திக்கொள்ளும் Bruce Wayne அதற்கான ஒரு கேடயமாக பயன்படுத்துவதே இந்த BATMAN வேஷம். BATMAN என்பது ஒரு சூப்பர் ஹீரோ அல்ல, குற்றங்களை எதிர்பதற்கான ஒரு சின்னம். அது மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்பதே BATMAN னின் எண்ணம். BATMAN எனும் சுப்பர் ஹீரோவை விட தனது பணத்தினாலும், விஞ்ஞான அறிவினாலும், தான் கற்றுக்கொண்ட கலைகளினாலும் பல அற்புதங்களை நிகழ்த்தும் Bruce Wayen எனும் மனிதரின் வாழ்கையே நோலன் படம் எடுத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. அவரது வாழ்கையில் உள்ள தனிமை, ஏமாற்றம், தோல்வி, இழப்பு என்பவற்றை விவாதிப்பதாகவே படம் நகர்த்தப்பட்டிருக்கும். சிறுவயதில் தன் கண்ணெதிரே பெற்றோரை பலிகொடுக்கும் சிறுவன், தன் பெற்றோர் சாவுக்கு தானே காரணம் எனும் குற்ற உணர்விலும், தன் பெற்றோரை கொன்றவனை பழிவாங்கும் வெறியுடனும், சிறுவயதில் நடந்த ஒரு விபத்து காரணமாக வவ்வால்களில் உள்ள பயத்துடனும் வாழும் Bruce தன்னை தேடி ஆரம்பிக்கும் பயணமும், குற்றங்களை, குற்றவாளிகளின் மனநிலையை அறிய எடுக்கும் முயற்சிகளும் என முதல்பாகத்தில் Bruce Wayne இன் ஆரம்ப கால வாழ்க்கை படம் பிடிக்கப்பட்டிருக்கும். 


இரண்டாம் பாகமான DARK KNIGHT, BATMANனுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கும் அதே நேரம் ஜோகரின் நடிப்பு அந்த கதாபாத்திரத்தின் வலிமை காரணமாக அது ஒரு பிரமாண்டமான ஆக்ஷன் படமாக இருக்கும். குற்றங்கள் புரிபவர்கள் பணத்துக்காக மட்டுமே அதை செய்வதில்லை, சிலர் கிக்குக்காகவும் செய்கிறார்கள் என்பதே ஜோகர் பாத்திரத்தின் மூலம் சொல்லப்படுவது. எவ்வளவு பெரிய உத்தமராக இருந்த போதும் நேச உறவுகளின் இழப்பும் அதன் மூலம் ஏற்படும் பழிவாங்கும் உணர்வும் மிகைக்குமிடத்து எவர் வேண்டுமானாலும் மிருகமாய் மாறலாம், குற்றம் இழைக்கலாம் என்பதே Two-Face மூலம் சொல்லப்படுவது. ஒவ்வொரு கதாபாத்திரத்தினதும் பின்னணி, இயல்புகள், நடத்தை கோலங்கள் என அனைத்தும் ஒவ்வொரு காட்சி மூலமாக சிறப்பாக கூறப்பட்டிருக்கும். ஒரு ஆக்ஷன் படத்துக்கு இத்தனை பரிமாணங்கள்  குடுக்க முடியுமா என வாயடைத்துப்போன படம். ஜோகர் முன்னுக்கு பின் முரணாக ஒரே விடயத்துக்கு பல விளக்கங்கள் குடுப்பதும், BATMANக்கு பெரும் தலைவலி குடுப்பதும் எல்லாமுமாக சேர்ந்து அக்ஷன் படத்துக்கு ஒரு வரைவிலக்கணமாக இருக்கும் THE DARK KNIGHT. 


TDK படத்தைப் போன்ற எதிர்பார்ப்புடன் செல்லும் ஒரு ரசிகனுக்கு மூன்றாம் பாகமான THE DARK KNIGHT RISES சிறிது ஏமாற்றத்தை குடுக்கலாம். ஜோகருடன் ஒப்பிடும் பொது BANE சற்று சுவாரஷ்யம் குறைந்த பாத்திரமே. BANE கதாபாத்திரத்தின் அடிப்படை சற்று நாடகத்தன்மை அதிகமானது. VANOM எனும் ஒரு நச்சு பதார்த்தத்தை செலுத்தி நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியே BANEக்கு அதீத உடல் வலிமையை கொடுக்கும், ஆயினும் அந்த பதார்த்தம் தொடர்ந்தும் செலுத்தப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும், அதற்காகவே BANE ஒரு முகமூடி அணிந்திருப்பார். இந்த நாடகத்தன்மையான பகுதி TDKR படத்தில் இடம்பெறாது. ஆயினும் BANE இன் அடையாளமான அந்த முகமூடி இருக்கும். BANE ஒருவனே BATMAN உடன் சண்டையிட்டு BATMAN இன் முள்ளந்தண்டினை உடைத்தவன், உடல் பலத்தால் BATMAN க்கு சவாலாக இருந்த ஒரே வில்லன், எனவே இவனை விட இறுதிப் பாகத்துக்கு யார்தான் பொருத்தமான வில்லனாக இருக்க முடியும்?  TDKR படம் TDK படத்தையும் BATMAN ENDS எனும் பெயரில் வரவேண்டிய ஒருபடத்தயும்  சேர்த்த ஒரு கலவையாக இருக்கிறது. BRUCE WAYNE தனித்துவாழ ஆரம்பிக்கிறார், தன் வழியில் குற்றங்களை எதிர்க்க இன்னொருவரை தெரிவு செய்கிறார், தனது சொத்துக்கள் அனைத்தையும் அநாதை சிறுவர்களுக்கும் ஊர் நலனுக்கும் கொடுத்து விடுகிறார், BATMAN இறந்துவிட்டதாக மக்களை நம்ப வைக்கிறார். போகிற போக்கில் படம் பல விடயங்களையும் தொட்டு செல்கிறது. ஒரு சுப்பர் ஹீரோ படம் இப்படியும் எடுக்கலாம் என்பதை நோலன் செய்தது காட்டி இருக்கிறார். நோலனிடம் இருந்து வரும் ஒரு சுப்பர் ஹீரோ படம் இதை விட சிறப்பாக முடிந்திருக்க முடியாது என்பது எனது கருத்து. 

ஒரு பிரமாண்டமான முடிவு, ஆயினும் நோலனிடம் இன்னும் ஒரு BATMAN படம் எஞ்சியிருப்பதாகவே எனக்கு படுகிறது. சூப்பர் ஹீரோக்கள் செய்யும் சாகசங்களின் வரிசையில் இது சூப்பர் ஹீரோ வேசத்துக்கு பின்னால் இருக்கும் ஒரு சாதாரண மனிதனது கதை. DARK KNIGHT  series, a supper hero movie couldn't get better than this!

டிஸ்கி: எங்க எங்க இருந்து நோலன் இந்த படத்த சுட்டாரு, இந்த படத்த எங்க எங்க சுட்டாங்கன்னு இன்னொரு பதிவுல பார்க்கலாம்.

5 comments:

  1. நல்லா விமர்சனம் பண்ணியிருக்கீங்க டாக்டர்.

    //எங்க எங்க இருந்து நோலன் இந்த படத்த சுட்டாரு, இந்த படத்த எங்க எங்க சுட்டாங்கன்னு இன்னொரு பதிவுல பார்க்கலாம்.//

    கேப்டன் படமா? :) :)

    ReplyDelete
  2. நல்ல முழுமையான பதிவு



    நன்றி,
    http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  3. பாஸ்,
    இப்ப தான் உங்க பதிவுக்கு வரேன்...TDKR படத்தையும் பேட்மேன் சீரீசையும் ரொம்பவே அருமையாக சொல்லி இருக்கேங்க...
    எனக்கு ரொம்பவே பிடிச்ச சீரீஸ் பேட்மேன் சீரீஸ். முனு பாகமும் வேறவேற தளத்துல பயணம் செய்யும்..
    என்னை கேட்டல் நோலன் கண்டிப்பா இதுக்கு அப்புறம் ஒரு பேட்மேன் படம் கண்டிப்பா எடுக்க மாட்டார் என்றே தோனுகிறது. WB வேற டைரக்டரை வச்சு தான் இந்த சூப்பர் ஹீரோவுக்கு ரீபூட் செய்வாங்க.

    ReplyDelete
  4. ஹாலிவுட்ரசிகன்
    நல்லா விமர்சனம் பண்ணியிருக்கீங்க டாக்டர்.

    //எங்க எங்க இருந்து நோலன் இந்த படத்த சுட்டாரு, இந்த படத்த எங்க எங்க சுட்டாங்கன்னு இன்னொரு பதிவுல பார்க்கலாம்.//

    கேப்டன் படமா? :) :)///

    தளபதி படம். அப்புறம் நம்ம ஜோகர் காரெக்டர நாக சைதன்யா, காஜல் அகர்வால் நடிச்ச ஒரு தெலுங்கு படத்துல காப்பி அடிச்சிருப்பாங்க.

    ReplyDelete
  5. ராஜ்
    //
    பாஸ்,
    இப்ப தான் உங்க பதிவுக்கு வரேன்...TDKR படத்தையும் பேட்மேன் சீரீசையும் ரொம்பவே அருமையாக சொல்லி இருக்கேங்க...
    எனக்கு ரொம்பவே பிடிச்ச சீரீஸ் பேட்மேன் சீரீஸ். முனு பாகமும் வேறவேற தளத்துல பயணம் செய்யும்..
    என்னை கேட்டல் நோலன் கண்டிப்பா இதுக்கு அப்புறம் ஒரு பேட்மேன் படம் கண்டிப்பா எடுக்க மாட்டார் என்றே தோனுகிறது. WB வேற டைரக்டரை வச்சு தான் இந்த சூப்பர் ஹீரோவுக்கு ரீபூட் செய்வாங்க.//

    நன்றி ராஜ். ரீ பூட் செய்வாங்களா தெரியல ஆனா இன்னுமொரு batman படம் கண்டிப்பா எடுப்பாங்க. நான் சொன்னது, நோலன் இன்னுமொரு படம் எடுத்தா நல்லாயிருக்கும் என்பதே. உங்கள் வலைத்தளத்துக்கு வந்தேன். நிறைய பதிவுகள்ள கருத்து ஒற்றுமை இருக்கு. உங்க TDKR விமர்சனம், கமல் பதிவு எல்லாம்...

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்!!